Thursday, December 15, 2005

விகடனுக்கு நன்றி!

"ஒதுக்கப்பட்ட கல்லே மூலைக்கல்லானது" என்பது போன்ற ஒரு வாசகம் பைபிளில் உண்டு .சமீபத்தில் நட்சத்திர வாரத்தில் தினம் ஒரு பதிவு எழுதுவதே பெரிய சவாலாக இருந்தது.ஒரு நாள் எழுத நினைத்திருந்த பதிவு நேரமின்மையால் எழுத முடியாமையால் போக ,அதை ஈடு கட்ட வியட்நாமின் ஹோசிமின் சிட்டி-யில் இருந்த மாரியம்மன் கோவிலையும் ,அதிலிருந்த மதுரை வீரன் சாமியையும் என் கைத்தொலைபேசியில் படம் பிடித்து ,அவரசமாக போட்ட பதிவு
வியட்நாமில் மதுரை வீரன்.

அன்றே அவள் விகடன் ஆசிரியர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ,தகவல் சுவாரஸ்யமாயிருப்பதாகவும் ,நான் அனுமதித்தால் இதை அவள் விகடனில் பிரசுரிக்க இருப்பதாகவும் கேட்டிருந்தார் .அதன் படி தற்போதைய அவள் விகடனில் பிரசுரமாகியுள்ளது.

பதிவு செய்திருப்பவர்களுக்கு சுட்டி இங்கே.

விகடனில் பிரசுரமாயிருக்கிறது என்பதை விட ,விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ்மணத்தையும் ,தமிழ் வலைப்பதிவுகளையும் வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

40 comments:

துளசி கோபால் said...

ஜோ,

எங்கியோ போய்க்கிட்டு இருக்கீங்க.

வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்குங்க.

அன்பு said...

பாராட்டுக்கள் ஜோ. தகவலுக்கு நன்றி.

வலைப்பதிவுகள் என்ற ஊடகத்தில் பயனுள்ள தகவல்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே எழுதும் பல நண்பர்களுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும். அதற்கு வழியமைத்துக்கு உங்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள். மென்மேலும் நல்லன பல தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் ஜோ. சந்தோசமா இருக்கு. (லேசான பொறாமையுடன்) :-)

நல்லா இருங்க.

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் 'ஜோ' அவள்விகடன் பதிவிறங்க மிக தாமதமாகின்றது, மாலை பார்க்கலாம் என உள்ளேன்...

Boston Bala said...

நல்ல செய்தி. தொடர்ந்து வலைப்பதிவிலும் பிற பத்திரிகைகளிலும் வெளிவர வாழ்த்துக்கள்.

ஜோ / Joe said...

துளசியக்கா,அன்பு,குமரன்,குழலி,பாஸ்டன் பாலா..அனைவருக்கும் நன்றி!

முத்து(தமிழினி) said...

ஜோ கலக்குங்க தலைவா

அதுக்குத்தான் உங்களை நிறைய வலைப்பதிக்க சொன்னேன். வாழ்த்துக்கள்.

ramachandranusha said...

வாழ்த்துக்கள் ஜோ, சக நண்பன் என்ற முறையில் சந்தோஷமாய் இருக்கு.

G.Ragavan said...

வாழ்த்துகள் ஜோ. பாராட்டுகள்.

வியட்நாம் மாரியம்மனு அரோகரா!
வியட்நாம் மதுரை வீரனுக்கு அரோகரா!
(ஹி ஹி லைட்ட்ட்டா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்.)

பரஞ்சோதி said...

பாராட்டுகள் ஜோ,

மகிழ்ச்சியாக இருக்குது. இன்னும் உங்கள் பெயர் புகழ் பெற வாழ்த்துகள்.

அப்படியே அங்கே வேப்பிலை எடுத்து ஆடும் இராகவனை கொஞ்சம் பிடித்து வைத்திருங்க, பூசாரி வந்ததும் விபூதி அடிக்கலாம். :)

மூர்த்தி said...

அன்பின் ஜோ,

வாழ்த்துக்கள் ஜோ! இன்னும் நிறைய எழுத அன்பு வாழ்த்துக்கள்!

தாணு said...

தமிழ்மணத் தளம் எத்தைகைய ஆக்கபூர்வமான விஷயங்களுக்கும் வழிவகுக்கும் என்பது இதுபோன்ற பாராட்டுதல்கள் புரியவைக்கட்டும்

தாணு said...

ஜோ,
சுட்டியில் தலைப்புகள் மட்டும் தமிழில் வருது, மற்ற டெக்ஸ்ட் எல்லாம் ஜிலேபி மாதிரி அன்கோடெட் ஆக வருதே! நான் புக் வாங்கியே பார்த்துவிடுகிறேன்.

Voice on Wings said...

வாழ்த்துக்கள் ஜோ. உங்கள் நட்சத்திரப் பதிவுகளில் எனக்குப் பிடித்த ஒரு பதிவாகும் அந்த புகைப்பட மற்றும் தகவல் பதிவு. அதிக முயற்சியெடுக்க வில்லையென்றாலும் உங்களது unique positionஐ (i.e. யாரும் அதிகம் சென்றிடாத நாடுகளுக்குப் பயணம்) சாதகமாக்கிக் கொண்டு, ஒரு சுவாரசியமான படைப்பை அளித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். "நிலைமையைச் சாதகமாக்கிக் கொள்ளும் திறனிருந்தால், கடின முயற்சிகள் இல்லாமலேயே விரும்பிய பலன்களை ஈட்ட முடியும்" என்ற எனது இரண்டு அணாக்களையும் சந்தடி சாக்கில் வழங்கி விடுகிறேன் :)

tbr.joseph said...

Fantastic Joe! Congrats!

நீங்க ஒரு தரமான எழுத்தாளர்னு நிரூபணம் ஆயிருச்சி பார்த்தீங்களா?

தமிழ்மணத்துக்கும் பெருமை சேர்த்திட்டீங்க! வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் ஜோ..

Anonymous said...

ஜோ சார் அய்யய்யோ நல்லாதானே எழுதிருக்கீங்க. பின்னே எதுக்கு விகடனுக்கு கண்ணுபட்டுடுச்சாம்

ஜோ / Joe said...

//எங்கியோ போய்க்கிட்டு இருக்கீங்க.//
துளசியக்கா,இன்னிக்கு இந்தியாக்கு தான் போயிட்டிருக்கேன்..ஹி.ஹி.

முத்து,உஷா,ராகவன்,பரஞ்சோதி,மூர்த்தி,தாணு,Voice Of wings,ஜோசப் சார்,முத்துகுமரன் நன்றி!

ராகவன்,வியட்நாம்ல வேப்பிலை ஆட்டம் நடக்குற மாதிரி தெரியல்லை..நீங்க ஒரு நடை வந்து ஆரம்பிச்சு வச்சா நல்லாயிருக்கும்.

நண்பன் said...

வாழ்த்துகள் ஜோ.

வலைப்பூக்களைப் பத்திரிக்கைகள் படிக்கின்றன என்று தெளிவுபடுத்திய பின்னராவது, வலைப்பூ பதிவாளார்கள், தங்கள் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள், இல்லையா?

சிங். செயகுமார். said...

வாழ்துக்கள் ஜோ!. கலக்கிடீங்க போங்க! தமிழ் மணத்துக்கு ஒங்க மூலமாவது பேரு வரட்டுமே

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஜோ,
நல்ல செய்தி.
வாழ்த்துக்கள்.சந்தோசமாக உள்ளது.

Srikanth said...

ஜோ, கலக்குங்க சார்! வாழ்த்துக்கள்!

உலகம் எங்கியோ போய்கிட்டிருக்கு! :-)

இளவஞ்சி said...

அப்படி போடுங்க அருவாள!

சந்தோசமா இருக்கு! :)

kirukan said...

Congrats to Joe and THAMIZHMANAM

மதுமிதா said...

ஜோ வாழ்த்துகள்
பறங்க.பறந்துட்டே இருங்க
பணிகளுக்கிடையே பறந்தா தான் இப்படி பதிவுகள் போட முடியும்

பத்மா அர்விந்த் said...

ஜோ
பாராட்டுக்கள்.

-L-L-D-a-s-u said...

ஹை அப்படியா.. பாராட்டுக்கள்.

neo said...

நண்பர் ஜோவுக்கு!


மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :)

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஜோ,
நீங்கள் மதத்தால் கிறிஸ்துவராக இருந்தாலும் மனத்தால் உணர்வால் தமிழராக தமிழர் விழாவை கொண்டாடுவது சிறந்த விசயம். பொங்கல் என்றால் எதோ இந்துக்களின் பண்டிகை என்று கூறி அதை முடக்கப் பார்க்கும் இந்தக் காலத்தில் உங்களைப் போல் அனைத்து தமிழர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விகடனில் வந்தமைக்கும் பொங்கலுக்கும் சேர்த்து....

அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

சிவா said...

நண்பர் ஜோவுக்கு! வாழ்த்துக்கள் உங்கள் சாதனைக்கும் பொங்கலுக்கும் சேர்த்து. அப்படியே நிக்குது. எப்போ அடுத்த பதிவு.

ஜோ / Joe said...

சகோதரர் கல்வெட்டு,

என்னுடைய பழைய பதிவு தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்கள் குடும்பத்திற்கும் பிரத்யேகமாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் ஒரு மதத்தோடு சம்பந்தப்பட்டதல்ல .அது அறுவடைத் திருநாள் .தமிழர் திருநாள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

நண்பர் சிவா,
நன்றி! உங்களுக்கும் உளம்கனிந்த பொங்கல் வாழ்த்து!
விரைவில ஆரம்பிச்சுடுவோம்! இப்போ கொஞ்ச நேர நெருக்கடி.

Anonymous said...

மில்டன் சார்,

நான் கடந்த முறை வியட்நாம் வந்தப்போ நம்ம மாரியம்மன் கோவில்
போனேன். அப்போ போட்டோ எடுத்தேன்.
ஆனால் அந்த கோவிலில் இருந்த நம்ம இந்தியர் ஒருவர்
"உள்ப்ரகாரத்தை தவிர மற்ற இடங்களை போட்டோ எடுத்துக்கங்கன்னு" சொல்லிட்டார். நானும் ஏமாற்றத்தோட திரும்பிட்டேன்.
லேசான ஏமாற்றத்தோட திரும்பிட்டேன். நீங்க ஆஜ்தக் ரிப்போர்டர் ரேஞ்சுல கொண்டு வந்துட்டீங்க.
அசத்தல்...!

வாழ்த்துக்கள்...!

மாரன்

ஜோ / Joe said...

மாரன்,
நன்றி!
//நீங்க ஆஜ்தக் ரிப்போர்டர் ரேஞ்சுல கொண்டு வந்துட்டீங்க.//
தொழில் ரகசியம் .கண்டுக்காதீங்க!

ஞானவெட்டியான் said...

அன்பு ஜோ,

தங்களின் இடுகை தமிழ் ஏட்டில் வந்திருப்பது மகிழ்ச்சியான விதயம்.

வலைப்பதிவளர்களின் படைப்புகள் மற்றவைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவுபடாதது என நிரூபணம் செய்து விட்டீர்.

அதற்குத் துணை புரிந்த தமிழ்மணத்திற்கும், தங்களுக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்கள்.

ENNAR said...

கைதொலைபேசியில் இவ்வளவு தெளிவாக கிடைக்கிறதா?
நன்றாக உள்ளதே

பினாத்தல் சுரேஷ் said...

Jo,

Congrats (very late though!)..

BTW, did Vikatan ask you before publishing? They didnt for me:-((

ஜோ / Joe said...

நன்றி ஞானவெட்டியான் ஐயா,என்னார் ஐயா!

//கைதொலைபேசியில் இவ்வளவு தெளிவாக கிடைக்கிறதா?//
இது 1.3 மெகா பிக்சல்.இப்போது இதைவிட தெளிவான கைத்தொலைபேசிகள் வந்து விட்டன.

சுரேஷ்,
நன்றி! உங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

என்னிடம் அவள் விகடன் ஆசிரியர் மின்னஞ்சல் மூலம் அனுமதி கேட்டிருந்தார் .உங்களிடம் அதுபோல செய்யவில்லையா? ஒருவேளை என்னுடைய புகைப்படத்தையும் பயன்படுத்தியதால் இருக்குமோ?

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
ரெம்ப நாள் கழிச்சு உங்க வலைப்பக்கம் மீண்டும் வந்தேன்.

அப்பத்தான் தெரிஞ்சுது உங்கள பாராட்டாம விட்டுட்டேன்னு.
வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

ஆழி சூழ் உலகின் திறனாய்வை எதிர்பார்க்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள்.

இனி நேரா விகடனில் எழுத ஆரம்பித்து நம்மளை எல்லாம் கை விட்டுடாதீங்கோவ்.

M Ganesan NCC said...

வாழ்த்துக்கள்
பாராட்டுகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives