Saturday, December 03, 2005

வியட்நாமில் மதுரை வீரன்

என்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா? என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி .இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க.வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)

ஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு .அதாங்க ஒரு மாரியம்மன் கோவில் ,அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே?).மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.

Image hosted by Photobucket.com

இதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா ?.பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள் .ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம்
.ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க .அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும் ,மதுரை வீரனுக்கும்
கும்பிடு.

Image hosted by Photobucket.com

உள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு .மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு .அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம் .பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம் .வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய
இந்தியர்கள் இருந்தாங்களாம் .போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம் .விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.

Image hosted by Photobucket.com

வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல .கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா!


(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரத்துக்கு பொறுத்துகுங்க மக்களே!)

20 comments:

சிங். செயகுமார். said...

உலகம் சுற்றும் வாலிபரே! இந்துக்கள் எங்க போனலும் கும்பிட நம்ம கடவுள் இருக்குன்னு சொல்லும்போது சந்தோழமா இருக்கு. வியடநாம் எங்கேயோ படிச்ச ஞாபகம்தாம் உங்க தயவால் ஊர் சுத்தி பாக்கிறோம்

குமரன் (Kumaran) said...

மதுரை வீரன்னு தலைப்புல பாத்தவுடனே ஓடி வந்தேன் ஜோ. ஒரு நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க. இதுவரை வியட்நாமிலும் நம்ம மக்கள் இருக்காங்கன்னு தெரியாது.

துளசி கோபால் said...

ஜோ,

நல்ல விவரம் தந்தீங்க. நம்மவீட்டு உலகம் சுற்றும் வாலிபன்/ர்(!) படகு ஓட்டிக்கிட்டு இருக்கற வியட்நாம் காரர் பொம்மையை வாங்கிக்கிட்டு வந்தாரே தவிர, இந்த 'கோவில்'பத்தி மூச்சுக்கூட விடலைன்னா பாருங்களேன்.

படத்தோட தரம் முக்கியமில்லை,
இவ்வளவாவது படம் காமிக்க முடிஞ்சதே யதேஷ்டம்.

ஜோ / Joe said...

சிங்.செயக்குமார் ,குமரன் நன்றி.

துளசியக்கா,
நன்றி..இது மட்டுமல்ல .இதைவிட பெரிய இந்து கோவில்கள் ஹோ சி மின் சிட்டில இருக்கு .மதுரை வீரன் ஸ்பெஷல்-ங்கராத இதை மட்டும் எடுத்துப்போட்டேன்.ஒரு வேளை கோபால் சார் ஹனாய் மட்டும் போயிருப்பாங்களோ?

அன்பு said...

புதிய தகவல். தமிழ்மணத்துக்காக ஹோசிமின் சிட்டியிலிருந்து நேரடி தகவல் புகைப்படத்துடன் தந்த நண்பர் ஜோ-வுக்கு ஓஓஓஓஓஓஒ....

பி.கு: இட்லி, வடா கிடைக்குதா!? (அதை கம்போடியா ஃபுட்-னு சொல்லிக்கிட்டு கொடுத்தாலும் பரவால்ல:)

ஜோ / Joe said...

அன்பு,
ஓஓஓஒ-க்கு நன்றி.
//இட்லி, வடா கிடைக்குதா!? //
தென்னிந்திய உணவகங்கள் சில இருக்கு.தாராளமா கிடைக்கும்-ன்னு சொன்னாங்க.நான் போனதில்ல.நான் இருக்கிற பகுதியில ரெண்டு வட இந்திய உணவகங்கள் இருக்கு .அப்பப்போ போறதுண்டு .விலை தான் அநியாயத்துக்கு அதிகம்.

tbr.joseph said...

ஹூம் குடுத்து வச்ச பிள்ளை ஊர் ஊரா சுத்துது. அதுதான் திரும்பிப் பார்க்கறேன்னு அது போன ஊர பத்தியெல்லாம் எழுதணும். நீ நாட்டுக்குள்ளயே நாலு ஊர்ல வேல செஞ்சிட்டு திரும்பி பாக்கறேன், திரும்பாம பாக்கறேன்னு ரீல் உடுறே' இது எங்கம்மா (82 வயசு. படிக்கறதுக்கு இப்பவும் கண்ணாடி வேணாம். என் பதிவெல்லாம் படிப்பாங்க. அந்தகாலத்து ஹைஸ்கூல் டீச்சர்) உங்க நட்சத்திர பதிவுகள படிச்சிட்டு சொன்னது. இது தேவையான்னு நொந்து போய்ட்டேன்.

வாழ்த்துக்கள் ஜோ. உங்க நட்சத்திர வாரம் இனிதே முடிந்தது. இல்ல நாளைக்கும் இருக்கா? சரின்னு எழுதறத நிறுத்திறாதீங்க ஜோ. நீங்க ஒவ்வொரு ஊருக்கும் போனதும் முதல்ல செய்ய வேண்டிய வேலை அந்த ஊரை பத்தி எழுதறதுதான். சரியா. Happy Journey!!

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
இந்த வாரத்துல நான் ஓரளவு எழுத முடிஞ்சதுக்கு உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம் .நீங்க படித்ததுமில்லாம உங்கள் தாயாரையும் படிக்க வைத்திருக்கிறீர்கள் .அவர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்.

//நீங்க ஒவ்வொரு ஊருக்கும் போனதும் முதல்ல செய்ய வேண்டிய வேலை அந்த ஊரை பத்தி எழுதறதுதான்.//
கண்டிப்பா எழுதுறேன்.
மிக்க நன்றி!

Dharumi said...
This comment has been removed by a blog administrator.
Dharumi said...

உ.சு.வாலிபா!
நல்லா இருக்கு'பா (சும்மா, ஒரு - rhyme-க்குத்தான்!)

Dharumi said...

ஜோசஃப் அம்மா சரியாத்தான் சொல்லியிருக்காங்க!
ஜோசஃப் நல்ல மனுஷன். இன்னும் சிலரைத் திட்டியிருஙப்பாங்கல்ல அதெல்லாம் சொல்லலை!

Anonymous said...

வியட்நாம் என்றதும் நம்ம கோமாளி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். முடிந்தால் அம்மக்கள் கோமாளி அண்ணாச்சியையும், அவர் செய்யும் காரியங்களைக் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய பழைய வடுக்களையும், அதனை எவ்வாறு அவர்கள் நினைவு கூர்கிறார்கள் என்பதையும் குறித்து ஒரு பதிவு இடுங்களேன்.

அன்புடன் - இறை நேசன்.

dondu(#4800161) said...

சிங்கையில் உள்ள முருகன் கோயிலில் சீனர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தாணு said...

வியட்நாம் அசப்பிலே நம்ம ஊர் மாதிரியே இருக்கே, மரத்தடியில் உட்கார்ந்திருப்பவரிலிருந்து, தலைக்குமேல் போகும் பவர் லைன் வரை!!

நண்பன் said...

ஜோ,

வியட்நாமில் மதுரை வீரன் -

பொதுவாகவே தென்கிழக்கில் அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரை இந்தியா தான் கனவு நாடாக இருந்தது. சமீப காலங்களில் தான் அந்தத் தகுதியை நாம் இழக்கத் தொடங்கியிருக்கிறோம் என்று எண்ணுகிறேன்.

பொருளாதார ரீதியாக இல்லாவிட்டாலும், கலாச்சார ரீதியாக இந்தியா இன்னும் தன்னை நன்றாக நிலை நிறுத்திக் கொள்ள வேணும்.

ஆனால் டெல்லி வர்க்கத்திற்கு அப்படி ஒரு எண்ணம் உண்டா என்று தெரியவில்லை. இலங்கைய்யில் - தவறான கொள்கை. பாக்கிஸ்தான், பங்களாதேஷுடன் நட்பின்மை. நேபாளத்திலும் உருப்படியில்லை. இரானுடன் ஒருபக்கம் உறவு வேணுமென்றும் மறுபக்கம் பெரியண்ணன் புஷ் அடிப்பாரோ என்ற பயம் -

இப்படியாக எல்லா இடங்களிலும் நாம் சொதப்பிக் கொண்டிருக்கிறோம். உருப்படியான ஒரு தலை இல்லையென்றால் இன்னும் சற்று காலத்திற்குள், உலக அளவில் இந்தையா இல்லாததாகி விடும்...

மதி கந்தசாமி (Mathy) said...

வாவ்!!!

என்னைமாதிரி ஒரு வரலாற்றுப் பைத்தியத்துக்குத் தீனி போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி ஜோ!

நட்சத்திர வாரத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வாரமொரு முறையாவது எழுதுங்கள். அதுவும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அடிக்கடி செல்லும் உங்களிடம் இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன். [புகைப்படங்களோடு].

முன்கூட்டியே திட்டமிட்டால் ஒவ்வொரு நாட்டின் வரலாறு, அரசியல், கலாசாரம், வணிகம், தொழில்முயற்சிகள் எல்லாவற்றையும் பற்றி தனித்தனியே தொடராக உங்களால் எழுத முடியும்.

அதை நான் எதிர்பார்க்கிறேன்!!!

[தமிழிணைய நண்பர்களே: நீங்களும் சொல்லுங்கப்பா..]

குமரன் (Kumaran) said...

மதி கந்தசாமி சொன்னதை வழிமொழிகிறேன்.

G.Ragavan said...

ஜோ, இன்னும் எந்தெந்த நாடெல்லாம் போயிருக்கீங்க. எவ்வளவு விஷயங்கள் சொல்லப் போறீங்களோ. சொல்லுங்க சொல்லுங்க...

மஞ்சூர் ராசா said...

தம்பி, இன்னிக்கு தான் இந்தப் பக்கமா சுத்தறதுக்கு வந்தேன். நல்லாதான் இருக்குது. சில்வஸ்டர் ஸ்டாலனோட ஒரு படத்திலெ வியட்நாமின் புறப்பகுதிக் காடுகளைப் பார்த்த ஞாபகம் (அது வியட்நாமா என்றும் சந்தேகம்!). கோயில்களும் இருக்கிறது அதில் ஒரு கோயிலைப் புகைப்படமும் எடுத்துப் போட்டிருப்பது அருமை. அன்பு சொல்வதுப் போல இட்லி வடை கிடைக்குமான்னும் அடுத்தமுறைப் போகும் போதுப் பார்க்கவும்.
அடுத்த் சுற்றல் எங்கே?
நன்றி.

Anonymous said...

சோதனை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives