Tuesday, September 16, 2008

நாசமாய் போன தமிழகம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக இருக்கும் .கேட்பவர்களுக்கு கூட இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி கெட்டு குட்டிச்சுவராயிடுச்சு போல என்றொரு எண்ணம் தோன்றும்.

அப்புறம் ஒப்பீட்டுக்கு காமராஜர் ,கக்கன் இந்த இரண்டு பேரையும் சொல்வார்கள் ..மறந்தும் ராசாசி ,பக்தவச்சலம் பற்றி சொல்ல மாட்டார்கள் .ராசாசி ,பக்தவத்சலம் போன்ற உயர் அடுக்கிலிருந்து வந்தவர்களே கோலோச்சிய அதிகாரத்தில் காமராஜரும் கக்கனும் வந்ததே பெரிய மாற்றம் தான் .அதனால் தான் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார்கள் .கல்விக்கண் திறந்த தலைவனை என்றும் மறவோம் ,அது வேறு.காமராசராலும் கக்கனாலும் காங்கிரசுக்கு பெருமையே தவிர ,காங்கிரசால் அவர்களுக்கல்ல ..இன்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முழங்குபவர்களில் முக்கால்வாசி பேரின் பின்னணி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு இந்திரா பின்னால் போனது தான் .

திராவிட இயக்க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை .ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" .ஏதோ இந்தியாவில் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாலும் தேனும் ஓடுவது போலவும் , நிர்வாக சீர்கேடுகளே இல்லாதது போலவும் .

அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு .தேவையானவர்கள் படித்துக்கொள்ள வேண்டியது தானே ? சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் ..சே .நாமளும் இந்த தமிழ் நாட்டில் வந்து பிறந்தோமோ என நினைக்கும் இளைய தலைமுறைக்கு நகரம் தவிர்த்த வட இந்திய கிராமப்புறங்களின் லட்சணத்தையும் ,தமிழகத்தின் கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லிக்கொடுக்க வேண்டாமா?

சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்தியா டுடே பத்திரிகை சமீபத்தில் நாடு தழுவிய மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாநிலங்களின் தரப்பட்டியலை வெளியிட்டுள்ள்து .543 மக்களவைத் தொகுதிகள் ,20 பெரிய மாநிலங்கள் ,10 சிறிய மாநிலங்கள் ,5 யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்து சமூக பொருளாதாரம் ,உட்கட்டமைப்பு ,விவசாயம் ,தொழில் ,கல்வி ,ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் ஆய்வு செய்து சில புள்ளியல் விவரங்களை ,தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம் .

* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.

* தமிழகமும் ,கேரளமும் மட்டும் 100-ல் 46 தொகுதிகளை கொண்டிருக்கின்றன .சிறந்த 100 தொகுதிகளில் 79 தொகுதிகள் விந்திய மலைக்கு தெற்கே இருக்கின்றன .

* மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .

* விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில் .

* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.

* முதலீட்டு சூழலில் இமாச்சல பிரதேசம் ,குஜராத் ,பஞ்சாப் -க்கு அடுத்து தமிழகம் 4-வது இடத்தில்.சென்ற வருடம் 7-வது இடம்.

* ஆரம்ப கல்வியில் தமிழகம் 4-வது இடம் .சென்ற வருடம் 6-வது இடம்.

* உள்கட்டமைப்பில் பஞ்சாப் ,இமாச்சல் ,கேரளா- வுக்கு அடுத்ததாக தமிழகம் 4-வது இடத்தில்.

* நுகர்வோர் சந்தையில் தமிழகம் 7-வது இடத்தில்.

* சட்டம் ஒழுங்கில் கேரளாவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில்.

* இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.

* மிகவும் நகரமயமான மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் .

* மாநிலங்கள் தர வரிசையில் கடைசி இடங்களில் இருப்பவை பற்றி சொல்லத் தேவையில்லை . பீகார் ,ஜார்கண்ட் ,உத்திர பிரதேசம் .. இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .

* நேரு குடும்பம் 8 முறை வென்ற ரேபரேலி தொகுதி 507-வது இடத்தில்.

* ராஜீவ் ,சஞ்சய் வென்ற அமேதி தொகுதி 484-வது இடத்தில் .

* ஷிபு சோரனின் தும்கா தொகுதி 540-வது இடத்தில்.

* சோம்நாத் சாட்டர்ஜியின் போல்பூர் தொகுதி 319 -வது இடத்தில்.

67 comments:

ஆயில்யன் said...

//மாநிலங்களின் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது .முதலிடம் பஞ்சாப் .சென்ற வருடம் 4-வது இடத்திலிருந்து இந்த வருடம் 2-ம் இடத்திற்கு தமிழகம் முன்னேறியிருக்கிறது .
//


சூப்பரூ! :)

ராஜா வாயிஸ் said...

கடற்புறத்தான் சார்
அலசல் அருமை சார்

-/சுடலை மாடன்/- said...

இப்படி நறுக்குன்னு புள்ளி விவரங்களெல்லாம் கொடுத்தா, நாங்க வேற காரணமெல்லாம் கண்டுபிடிப்போமே :-)

//ஆனால் தேசிய கட்சிகள் ஆண்டிருந்தால் தமிழகம் நாசமாயிருக்காது என்று சொல்பவர்களுக்கு//

முதலில் தேசியக் கட்சிகள்னு என்னத்த சொல்றானுங்கன்னு தெரியலே. காவிரி, கிருஷ்ணா, முல்லைப் பெரியார் இப்படின்னு எந்தப் பிரச்னையிலாவது இந்த மண்ணாங்கட்டிகளுக்குன்னு ஏதாவது உருப்படியான நிலைப்பாடு ஒன்றுண்டா? தேசிய வியாதிகள் மட்டுமல்ல, சர்வதேசியவியாதிகள் பிழைப்புவாத சிபிஐ, சிபிஎம்களுக்குன்னு ஏதாவது உண்டா?

//இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம்//

கூடவே பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீசபாசையில் பத்திரிகை நடத்தி மலச்சிக்கலோட வாழ்ந்து கொண்டிருக்கும் சோ இராமசாமியையும் வடக்கே கூட்டிக் கொண்டு போய் சமஸ்கிருதத்தில் ஒரு பத்திரிகையை நடத்தச் சொல்லலாம் :-)

நன்றி - சொ.சங்கரபாண்டி

கோவை சிபி said...

நல்ல பதிவு.

தருமி said...

ஜோ,
எங்க காலத்தில எல்லாம் ...ம்ம்..ம் ..

சரி .. சரி... அத கழுதய விடுங்க. நீங்க சொன்ன உங்க காலத்து விஷயம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

ரொம்ப சந்தோஷமுங்க. ஆனாலும், எங்க காலத்தில எல்லாம் ...

பாபு said...

இந்த ஹிந்தி விஷயத்துல எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள்.
ஹிந்தி படிக்க நம் மாநிலத்தில் எந்த காலத்திலும் தடை இருந்ததில்லை.
இன்னொன்று ஹிந்தி தெரியாததால் இவர்கள் முன்னேற்றம் தடை பட்ட மாதிரி ஒரு பீலிங் .டெல்லியில் பிச்சைக்காரன் கூட ஹிந்தி தெரிந்தவன்தான் என்பதை மறந்து விடுகிறார்கள்

கோவி.கண்ணன் said...

பயனான தகவல்கள். முதல் பாகம் ஓவர் 'டோஸ்'. கோபமாக இருந்திங்களோ !

:)

அருண்மொழி said...

இந்தியா டுடே பத்திரிக்கையை கலைஞர் குடும்பம் வாங்கிவிட்டது. தமிழகம் சிறப்பான நிலையில இருக்கின்றது என்பதை போன்ற மாய தோற்றத்தை வெளியிட்டு உள்ளார் என்று சில ஜென்மங்கள் பதிவு போடும்.

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான புள்ளிவிபரம் .
(புள்ளி விவர பதிவுல , புள்ளி விவரத்துக்கே ஒட்டுமொத்த சொந்தகாரரான கேப்டனை ஒரு தட்டு தட்டீட்டிங்களே)

மற்ற எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும் போது தமிழகம் எவ்வளவோ முன்னேறிய நிலையில் இருப்பது என்பது முழுக்க முழுக்க உண்மை. அதில் ஐயம் ஒன்றும் இல்லை. மேலும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்ட நன்மைகளுள் ஒன்று தற்போது தமிழகத்தில் படித்த யாரும் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்களது சாதிப் பெயர்களைச் சேர்பதில்லை. என்னுடன் பெங்களூரில் வேலை பார்த்த பாஸ்கர் என்ற ஆந்திரா பையன், தன் கல்விச் சான்றிதழ்களில் பாஸ்கர் என்று மட்டும் இருந்த பெயரை பாஸ்கர் ரெட்டி என்று மிகச் சிரமங்களுக்கிடையே மாற்றினான். ஆந்திராவில் முதல்வர் ரெட்டி, எதிர்கட்சித்தலைவர் நாயுடு , தொலுங்கான கட்சித் தலைவர் ராவ் என எல்லோரும் தங்கள் சாதிப் பெயர்களை வெளியில் பெருமையாக சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் ஊரில் அப்படியில்லை என்பது பெருமை படத்தக்க விசயம் தான்.

டேட்டா க்வ்ஸ்ட் (Data Quest) என்ற கணிப்பொறி இதழில் இந்த மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில் மின் ஆளுமை (E- Governance)திறம்பட செயல்படுத்தப்படும் மாநிலங்களில் தர வரிசை தரப்பட்டிருந்தது அதில் முதல் இடம் டெல்லி, 2 ஆம் இடம் கோவா மூன்றாம் இடம் சட்டீஸ்கர் 4 ஆம் இடம் தமிழ்நாடு என்று இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் பெங்களூர் 9 ஆம் இடத்திலும் , சந்திரபாபு நாயுடு தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் ஆந்திரா 8 ஆம் இடத்திலும் உள்ளது.

தமிழகம் 4 ஆம் இடத்தில் இருந்தாலும் அதற்கு முன் 3 இடங்களிலும் உள்ள மாநிலங்கள் அனைத்தும் மிகச் சிறிய மாநிலங்களே. ஒரு பெரிய மாநிலமான தமிழகம் 4 ஆம் இடத்தில் இருப்பதே பெருமையான விசயம் தான்.

Anonymous said...

அருமையான அலசல் கட்டுரை!

வாழ்த்துக்கள் !

ஜோ/Joe said...

ஆயில்யன் ,ராஜா வாயிஸ் ,சங்கரபாண்டி சார் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ilavanji said...

ஜோ,

// "ஒட்டு மொத்த இந்தியாவை ஒப்பிடும் போது அப்படி தமிழகம் என்னைய்யா நாசமாய் போய்விட்டது?" //

இதை இப்பத்தான் லஞ்ச்ப்ரேக் ல அரைமணி நேரமா காய்ஞ்ச எச்சக்கையோட கலந்துரையாடல்.. அதான் சண்டையா போட்டுக்கு வர்றேன்... இங்க இந்த பதிவு... :)

The Hindu, ET readers இன்றைக்கு கேட்ட கேள்விகள்..

1. அரிசிய 1 ரூபாய்க்கு குடுத்தா அவங்களுக்கு உழைக்கத்தோணுமா?! உழைச்சு சாப்டாத்தானே ஒடம்புல ஒட்டும்?!

2. இலவச டீவி வந்ததுல இருந்து மக்கள் கூலி வயல் வேலைக்கு வரமாட்டேங்கறாங்க...

3. விவசாயிங்களுக்கு கரெண்ட்டை இலவசமா குடுத்தா நாடு தாங்குமா? இல்ல எதையாவது இலவசமா பெற்றால் அந்த அருமைதான் விவசாயிங்களுக்கு தெரியுமா?

நான் குறைஞ்சபட்சம் தினமலரையாவது படிங்கய்யான்னு கேட்டுகினேன் :)))))))))

புள்ளிவிவரங்களுக்கு நன்றி! நாளைக்கு மதியம் பட்டைய கெளப்பிடறேன்! :)

லக்கிலுக் said...

கலக்கல். சோலை போன்ற மூத்தப் பத்திரிகையாளர்களின் முதிர்வு இந்தப் பதிவின் எழுத்துக்களில் விரவிக்கிடக்கிறது!!!

லக்கிலுக் said...

//கூடவே பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீசபாசையில் பத்திரிகை நடத்தி மலச்சிக்கலோட வாழ்ந்து கொண்டிருக்கும் சோ இராமசாமியையும் வடக்கே கூட்டிக் கொண்டு போய் சமஸ்கிருதத்தில் ஒரு பத்திரிகையை நடத்தச் சொல்லலாம் :-)//

சுடலை மாடன் அண்ணே!

குடலை உருவிட்டீங்களே? :-))))

லக்கிலுக் said...

இளவஞ்சி அண்ணே!

கீழே கொஞ்சம் பாயிண்டை எடுத்து கொடுக்கறேன். அடுத்த லஞ்ச் அவர்லே யூஸ் பண்ண முடியுமான்னு பாருங்க...


//1. அரிசிய 1 ரூபாய்க்கு குடுத்தா அவங்களுக்கு உழைக்கத்தோணுமா?! உழைச்சு சாப்டாத்தானே ஒடம்புல ஒட்டும்?!//

அண்ணே ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு சம்பளம் வாரி கொடுத்தா உழைக்கத் தோணுதா? பிலாக் பண்ணவும், ஈ.டி.யை நெட்டுலே படிக்கவும் தாணே தோணுது.

//2. இலவச டீவி வந்ததுல இருந்து மக்கள் கூலி வயல் வேலைக்கு வரமாட்டேங்கறாங்க...//

கலைஞர் கிட்டே சொல்லி வயல்வெளிகளிலும் கலைஞர் தொலைக்காட்சியை ஏற்பாடு பண்ண சொல்லிடுவோம்.


//3. விவசாயிங்களுக்கு கரெண்ட்டை இலவசமா குடுத்தா நாடு தாங்குமா? இல்ல எதையாவது இலவசமா பெற்றால் அந்த அருமைதான் விவசாயிங்களுக்கு தெரியுமா? ///

24 மணி நேர கரெண்டை ஹூண்டாய், செயிண்ட் கோபென் மாதிரி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துட்டு விவசாயிகளுக்கு நாமம் போட்டாதான் நாடு தாங்கும் :-)

சாலிசம்பர் said...

அண்ணாவின் ஆட்சி பத்து ஆண்டுகள் நீடித்திருந்தால் தமிழ்கம் நம்பர்1 மாநிலமாக நிச்சயம் இருந்திருக்கும்.எட்டப்பன்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் கலைஞர் அதை நிறைவேற்றியிருப்பார்.

Anonymous said...

புள்ளிவிவரங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். பொதுவாக, தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களின் உள்கட்டமைப்பு - குறிப்பாக கிராமங்களில் எப்படி இருக்கிறது என்று நம்மவர்கள் சிந்தித்தாலே தேசியக்கட்சிகளின் லட்சணம் தெரியும். தேசியக்கட்சிகளின் ஆதரவாளர்கள் 'குஜராத்தை' எடுத்துக்காட்டாக கூறினால், நாம் ஆச்சர்யப்படக்கூடாது :-) சென்னை மற்றும் கிராமங்களில் உள்ள பேருந்து கட்டணம், சாலைகளின் தரம், 'மினி பஸ்' வசதி - இவற்றை எல்லாம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், தெளிவாக புரியும் நம்முடைய வசதி என்னவென்று.

ஹிந்தி பயிலுவதற்கு தடையேதும் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஹிந்தி பிரச்சனை, தேசிய கட்சிகளின் கீழ் தமிழகம் வரவேண்டும் என்ற ஆசை - வடக்கிலிருந்து வந்து தமிழகத்தில் உள்ள ஆட்டோகாரனுக்கு ஹிந்தி தெரியவில்லை என்று அங்கலாய்க்கும் மனிதர்களின் ஆசையாகக்கூட இருக்கலாம். தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபா இன்றும் முழு வீச்சுடன் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
யாரும் யாரையும் இங்கு தடுக்கவில்லை. திணிப்பதைத்தான் தடுத்தார்கள்.

மேலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளில் இந்தியா என்னும் அமைப்பு ஆட்டம் கண்டுவரும் வேளையில், எந்த பிரச்சனையிலும் ஒரு தெளிவு இல்லாத தேசியகட்சிகளால் எப்படி பிரச்சனைகளைத் தீர்க்க இயலும். மேலும், கர்நாடக பா.ஜ.க, மாநில கட்சியாகத்தானே செயல்படுகிறது ? தேசியக்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் இன்றும்கூட அந்த அந்த மாநிலங்களைப் பொறுத்துத்தானே செயலில் இறங்குகிறார்கள். முக்கியமான பிரச்சனைகளில், தேசிய கட்சிகளின் செயல்பாடு என்றும் திருப்தி அளிப்பதில்லை / அளிக்கப்போவதுமில்லை.

நல்ல பதிவு ஜோ. இன்னும் கூட, கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். கொஞ்சம் அவசரத்தில் எழுதியதோ ?

☀நான் ஆதவன்☀ said...

நல்ல புள்ளி விவரம்.

//1. அரிசிய 1 ரூபாய்க்கு குடுத்தா அவங்களுக்கு உழைக்கத்தோணுமா?! உழைச்சு சாப்டாத்தானே ஒடம்புல ஒட்டும்?!//

அரிசி 1 ரூபானாலும் மண்ணென்னை மற்றும் காய்கறிக்கு உழைச்சுத்தான் ஆகனும்

//2. இலவச டீவி வந்ததுல இருந்து மக்கள் கூலி வயல் வேலைக்கு வரமாட்டேங்கறாங்க...//

வேலைக்கு போறதுக்கும் டி.வி பாக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? எவனும் 24 மணி நேரமும் டி.வி பாக்கறதில்ல...

//3. விவசாயிங்களுக்கு கரெண்ட்டை இலவசமா குடுத்தா நாடு தாங்குமா? இல்ல எதையாவது இலவசமா பெற்றால் அந்த அருமைதான் விவசாயிங்களுக்கு தெரியுமா? //

விவசாயிங்களுக்கு எல்லாத்தையும் காசு வாங்கிட்டுத் தான் கொடுக்கனும்ன்னா அப்ப கவர்மென்ட் என்னத்துக்கு????
இலவசமா கொடுக்கறத கொடுத்துத்தான் ஆகனும்.

☀நான் ஆதவன்☀ said...

அட நம்ம லக்கிலுக் அண்ணன் முந்திக்கிட்டாரு.....

Anonymous said...

// 1. அரிசிய 1 ரூபாய்க்கு குடுத்தா அவங்களுக்கு உழைக்கத்தோணுமா?! உழைச்சு சாப்டாத்தானே ஒடம்புல ஒட்டும்?! //
அது சரிதான். அரிசி கொடுக்கப்படுவது பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு. மற்ற மாநிலங்களில் விவசாயம் இல்லாத நாட்களில், பிச்சை கூட எடுக்கிறார்கள். அவர்களுக்காவது போய்சேரட்டுமே.

ஜோ/Joe said...

நன்றி கோவை சிபி!

தருமி,
//ரொம்ப சந்தோஷமுங்க. ஆனாலும், எங்க காலத்தில எல்லாம் ...//

ஹி.ஹி..வாத்தியாரே நீங்க இதுல சேர்த்தி இல்ல .இந்த விஷயத்துலயும் நீங்க ஓரளவு நம்ம பக்கம் தான் --ன்னு தெரியும்.

புருனோ Bruno said...

//* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .//

இது குறித்து நான் எழுதியபோது கேலி செய்த வவ்வால் போன்றவர்கள் இப்பொழுதாவது உண்மையை தெரிந்து கொள்ளட்டும்

http://www.payanangal.in/2008/09/108.html

காத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (அமெரிக்காவில்) கிடைக்காத பொது சுகாதார மேலாண்மை கூட நாகை மக்களுக்கு சுனாமிக்கு பின் (காசு கொடுக்காமலே) கிடைத்தது. (ஒரு சொசுறு செய்தி : புயல் பாதித்த பின் அங்குள்ள மீட்பு பணிகளுக்கு ஆலோசனை வழங்க நாகப்பட்டினம் சுகாதார அலுவலர் அமெரிக்கா சென்றது பலருக்கு தெரிந்திருக்காது. ஒரு மாநில முதல்வரின் சிறுநீரக கோளாறுக்காக அமெரிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்ட இருபது ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இங்குள்ள நிபுணர் அமெரிக்க சென்று ஆலோசனை வழங்கும் அளவு நமது (தமிழக) பொது சுகாதார துறையின் பணி சிறப்பாக இருக்கிறது என்பது என் போன்ற பொது சுகாதார துறையில் வேலை பார்க்கும் அரசு மருத்துவர்கள் “பீட்டர் விடும்” (பீற்றிக்கொள்ளும்) விஷயம்)

புருனோ Bruno said...

//* ஆரம்ப சுகாதாரத்தில் தமிழகம் முதல் இடம் .முதலிடத்திலிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தில்.//

இதனால் தான் மாதம் 8000 ரூபாயில் 4 மாதம் மருத்துவரை நியமிக்கும் கட்டாய திட்டத்திற்கு தமிழகத்தின் கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் கூட எதிர்ப்பு தெரிவித்தார்கள்

தமிழகத்தை பொருத்த வரை அரசின் சுகாதார துறையிலேயே முதலாம் அடுக்கும் இரண்டாம் அடுக்கும் முழுவதும் செயல்படுகிறது. மூன்றாம் அடுக்கில் தான் (சிறப்பு மருத்துவர்கள்) பற்றாக்குறை.

உதாரணமாக மலேரியா, காச நோய் (டி.பி) போன்ற நோய்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாம்பு கடிக்கு சுமார் 50,000 ரூபாய் வரை உள்ள மருந்துக்கள் இலவசம். நாய்க்கடிக்கு தொப்புளை சுற்றி ஊசி போடுவதிலிருந்து பல மடங்கு முன்னேறி இன்று வெறும் 5 ஊசிதான். சுமார் 3000 மதிப்புள்ள மருந்துக்கள் இலவசமாகவே போடப்படுகின்றன

குடலிறக்கம் (ஹெர்னியா), விதைவீக்கம், சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை செய்வதிலும் பிரச்சனை இல்லை.

போதுமான திறமை உள்ளது. திறமை சாலிகள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆனால் இதயத்தில் ஓட்டை என்றாலோ, இல்லை மூளையில் அறுவை சிகிச்சை என்றாலோ, சிறுநீரகம் செயல் இழந்தால் செய்ய வேண்டிய டயாலிசஸ் போன்றவை செய்யதான் நீண்ட காத்திருப்பு வரிசை உள்ளது. இது மாற வேண்டுமென்றால் நாம் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு சிறப்பு வைத்தியத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்

சட்டீஸ்கர், பீகார், உத்தர பிரதேஷம் போன்ற மாநிலங்களில் முதல் அடுக்கே இன்னமும் ஒழுங்கு முறைக்கு வரவில்லை. உத்தர பிரதேஷத்தில் இன்று வரை போலியோ நோய் தாக்கி வருகிறது.

நாம் இரண்டாவது மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்கு செல்ல முயல்கிறோம்.
பீகார் இன்னமும் முதல் மாடிக்கு வரவில்லை.

அப்படி ஒரு வேறு பாடு இருக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி கட்டாய திட்டம் நெருடல் தான்.

அப்படி யென்றால் கட்டாய சேவை வேண்டுமா, வேண்டாமா
ஒருவருக்கு குடற்புண் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதை மாத்திரையாலேயே குணப்படுத்தலாம்
மற்றவருக்கு குடற்புண் முற்றிய நிலையில் குடலில் ஓட்டை விழுந்து விட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இப்படி வேறு பாடன நிலையில் இருப்பவர்களுக்கு ஒரே வைத்தியம் செய்வது எப்படி ஒருவருக்கு பலன் தந்து மற்றவரை பாதிக்குமோ, அதே போல் தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே போல் எம்.பி.பி.எஸ் படிப்பை நீடிப்பது ஒரு மாநிலத்திற்கு பலம் தந்து மற்றொரு மாநிலத்தை பாதிக்கும்

எந்த மாநிலத்திற்கு பலன், எந்த மாநிலத்திற்கு பாதிப்பு
இதற்கான விடையை நீங்கள் கூறுங்களேன் :) ;)

மேலும் விபரங்களை என் பதிவில் காணலாம்

முகவை மைந்தன் said...

நம்பிக்கை அளிக்கும் பதிவு. சில நேரங்களில் இவை அளிக்கும் புத்துணர்ச்சி அளப்பரியது. நன்றி.

(சந்திப்புக்ககு வர்றீங்கள்ல!)

புருனோ Bruno said...

//ஒரு பெரிய மாநிலமான தமிழகம் 4 ஆம் இடத்தில் இருப்பதே பெருமையான விசயம் தான்.//

மேலும் ஒரு தகவல்

http://nrega.nic.in/ict/ict3.asp தளத்தை பாருங்கள்

திற மூல மென்பொருள் மூலம் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள 108 திட்டங்களில் 40 திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன

ilavanji said...

லக்கி, ஆதவன்,

டாங்ஸ்! :)

புருனோ Bruno said...

//* நாட்டின் சிறந்த 100 மக்களவை தொகுதிகள் (மொத்தம் 543) பட்டியலில் தமிழகத்தின் 26 தொகுதிகள் இடம் பிடித்துள்ளன.

* கேரளாவின் அனைத்து 20 தொகுதிகளும் சிறந்த 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளன . காம்ரேட்கள் தான் காரணம் என நினைக்க வழியில்லை ..ஏனென்றால் மேற்கு வங்கம் அதல பாதாளத்தில் இருக்கிறது ..வெளிநாடு வாழ் மலையாளிகளின் அன்னிய செலவாணியும் ,சுற்றுலாவுமே கேரளத்துக்கு கைகொடுக்கின்றன.//

இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவானது

-கல்வி-

அப்படித்தானே
-
கல்வி உள்ளவர்களால் அரசின் திட்டங்களை அதிகம் பயன் படுத்த முடியும்
-

Kasi Arumugam said...

ஜோ...ர் :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல செய்தி. மகிழ்ச்சி.

பொய்யன் said...

ADA PAAVIGALA INDIA TODAY KARANA INNUMA NAMBIKKITTU IRUKKEENGA. VELENKIRUM.

Anonymous said...

அருமையான பதிவு. புதிய செய்திகளைத்திரட்டி அளித்தமைக்கு நன்றி. உலகப்புகழ் பெற்ற ரேபரேலி தொகுதி 507ம் இடத்திலும், அமேதி தொகுதி 484ம் இடத்திலுமா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மேலும் சில சிறப்புக்களும் தமிழகத்துக்கு உண்டு. மொத்த மக்கள் தொகையில் அடிப்படை கல்விபெற்றோர் விகிதத்திலும், பெண் பட்டதாரிகள் விகிதத்திலும் இந்திய மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்தேன். 70களில் இந்திய நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட்ட "குடும்பக்கட்டுப்பாடு" முயற்சியில், முதலிடம் தமிழகத்துக்கே. ஒரு 5 ஆண்டுகள் கலைஞர் ஆட்சியின்போது தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாநில நிர்வாக இயந்திரம் முனைந்து செயல்பட்டதில், மக்கள் தொகை பெருக்கத்தின் வேகம் தமிழகத்தில் யாரும் எதிர்பாராத அளவு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமாகச்சொல்லப்பட்டவை - 1)கலைஞரின் நிர்வாகத்திறன், 2) தமிழகத்தில் கல்வி (பெண்கல்விஉட்பட) பரவலாக இருந்தது 3)சுகாதாரத்துறையின் நிர்வாகம் மாநில அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விளைவுகளை நுணுக்கமாக புள்ளிவிவரத்துடன் கண்காணித்தது. சீனாவின் "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" திட்டம் சர்வாதிகார சட்டத்தின்மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த காம்ரேடுகள் முயற்சிக்கும்போது, ஒரு சனநாயக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் வெற்றி பெற்றது பெருமைக்குரிய ஒன்றுதான். தேசிய கட்சிகள் ஆட்சி செய்யும் கர்னாடகா ஆந்திராவிலோ, சர்வதேசிய கட்சி ஆளும் கேரளாவிலோ அண்டை மாநில நதி நீர்ப்பிரச்னைகளை தீர்ப்பதில் எந்த தேசியப்போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமது மாநிலம் "ஒரு தனி நாடு" என்ற மனப்பாக்கில்தான் நடந்து கொள்கின்றன. 67இல் இருந்து திராவிடக்கட்சிகள் ஆளும் தமிழகம் தான் இந்திய தேசியத்தை உண்மையிலேயே மதிப்பதாகத் தெரிகிறது

Thekkikattan|தெகா said...

அது போன்று ஒப்பீட்டுளவில் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு பேசுபவர்களை உத்திரபிரசேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ட்ரைன் ஜர்னி பண்ணவிட்டு விட்டு பார்த்தாலே பல கேலிகளும், கிண்டல்களும் தமிழகத்தை பொருத்தவரை இருந்தது காணமல் போய் விடும் ((உ.தா விசயகாந்த், சோ போன்றவர்களை ;).

ஏன் அவ்வளவு தொலைவு போக வேண்டும், டெல்லியிலிருந்து ஃபதே பூர் சிக்ரி செல்வது என்பது ஒரு முக்கியமான சுற்றுலா பில்க்ரிமேஜ் நடத்துவதனைப் போன்றது. அந்த சாலைகளும், சாலைகளை ஒட்டி வாழ்பவர்களின் வாழ்வுச் சூழலையும் பார்த்தால், தழிழ்நாடு ஒரு சின்ன சிங்கப்பூரைப் போல காட்சியளித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

இன்னொரு மிகப் பெரிய மாற்றம் நம்ம ஜோசப் பால்ராஜ் கூறியது, ஜாதிப் பெயரை கடைசியாக இணைப்பது... கிட்டத்தட்ட மறைந்தே போய் வருகிறது.

நல்ல பதிவு, ஜோ!

SathyaPriyan said...

//
அப்புறம் இந்தியை கட்டாயமாக படிக்க விடாமல் தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள் .இது ஒரு குற்றச்சாட்டு
//
எனக்கு ஹிந்தி தெரியாததால் தூக்கில் தொங்கி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-) ஹிந்தி தெரியாதவர்களுக்கு வாழ உரிமை இருக்கிறதா என்ன?

அட்டகாசமான பதிவு ஜோ.

நான் முதல் முதலில் புவனேஸ்வருக்கு அலுவல் நிமித்தமாக சென்ற பொழுது அந்த நகரின் ரயில் நிலையத்தை கண்டு என்னால் அது ஒரு மாநிலத்தின் தலை நகரம் என்று கருதவே இல்லை.

தமிழகத்தில் ஒரு சிற்றூரின் ரயில் நிலையம் போலவே இருந்தது.

உள் கட்டமைப்போ நான் வளர்ந்த திருச்சி/தஞ்சை பகுதிகளுக்கு அருகில் கூட வர முடியாது. திருச்சி தமிழகத்தின் ஒரு சிறிய நகரம், தஞ்சை அது கூட இல்லை. ஆனால் புவனேஸ்வரோ ஒரு மாநிலத்தின் தலை நகரம்.

அதை விட கொடுமை அங்கே உள்ளூர் பேரூந்து என்பதே கிடையாது. சும்மா சொல்ல வில்லை. நிஜமாகவே கிடையாது. சொந்த வண்டி இல்லாத வசதியானவர்கள் ஆட்டோவிலோ அல்லது ஏழைகள் ஷேர் ஆட்டோவிலோ தான் பயணம் செய்ய வேண்டும்.

ஐந்து பேர் அமரும் ஷேர் ஆட்டோவில் சுமார் 10 பேரை அமர்த்தி பயணம் நடக்கும். விபத்துக்கள் ஏராளம்.

அடிப்படை சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மக்கள்.

அங்கே வசித்த நான்கு மாதங்களில் புறிந்து கொண்டேன் தமிழக அரசின் அருமையை.

செல்வ கருப்பையா said...

சூப்பருங்க... ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பழைய ரேட்டிங்கைப் பாத்துட்டு லேட்டஸ்ட் தெரிஞ்சா நல்லா இருக்குமேன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். திராவிடக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டை அழிச்சுட்டதா சொல்லுறவங்க இதுக்கு என்ன பதில் சொல்லப் போறாங்க?

Dr. சாரதி said...

ரெம்ப நல்ல பதிவு, வாழ்த்துகள்

தமிழ் சசி | Tamil SASI said...

கூடவே பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீசபாசையில் பத்திரிகை நடத்தி மலச்சிக்கலோட வாழ்ந்து கொண்டிருக்கும் சோ இராமசாமியையும் வடக்கே கூட்டிக் கொண்டு போய் சமஸ்கிருதத்தில் ஒரு பத்திரிகையை நடத்தச் சொல்லலாம் :-)

*******

இதே சோ, நரேந்திர மோடியை சென்னை துக்ளக் விழாவிற்கு கொண்டு வந்து அவர் என்னவோ குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓட ஆட்சி செய்வது போலவும், தமிழகத்தில் உள்ளவர்கள் எல்லாம் பஞ்சத்தில் அடிபட்டு வாழ்வது போலவுமான மாயத்தோற்றத்தை கட்டமைத்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

***
விவசாயத்தில் பஞ்சாப் ,ஹரியானாவுக்கு அடுத்து தமிழகம் 3-வது இடத்தில்
***

எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்த புள்ளிவிபரம் இது தான். பஞ்சாப் எப்பொழுதுமே விவசாயத்தில் வளமான பூமி. இயற்கை வளங்கள் நிறைய உண்டு. ஆனால் ஆறுகள் வற்றிப்போன தமிழகம் மூன்றாவது இடமா ? தமிழகமே மூன்றாவது இடம் என்றால், மற்ற மாநிலங்களின் கதி ?

உண்மையிலேயே இது கவலை அளிக்கும் ஒன்று. விவசாயத்தில் எந்த அரசும் பெரிய அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதி விவசாயத்தையே சார்ந்து உள்ள நிலையில், இன்னும் விவசாயத்தை எந்தளவுக்கு பெருக்க வேண்டும் என்ற தேவையை, இது உணர்த்துகிறது.

நல்ல பதிவு, நன்றி

ரவி said...

///
The Hindu, ET readers இன்றைக்கு கேட்ட கேள்விகள்..

1. அரிசிய 1 ரூபாய்க்கு குடுத்தா அவங்களுக்கு உழைக்கத்தோணுமா?! உழைச்சு சாப்டாத்தானே ஒடம்புல ஒட்டும்?!

2. இலவச டீவி வந்ததுல இருந்து மக்கள் கூலி வயல் வேலைக்கு வரமாட்டேங்கறாங்க...

3. விவசாயிங்களுக்கு கரெண்ட்டை இலவசமா குடுத்தா நாடு தாங்குமா? இல்ல எதையாவது இலவசமா பெற்றால் அந்த அருமைதான் விவசாயிங்களுக்கு தெரியுமா?

நான் குறைஞ்சபட்சம் தினமலரையாவது படிங்கய்யான்னு கேட்டுகினேன்///

இளவஞ்சி அண்ணே ? "அவனா நீ" என்று கேட்க தோன்றுகிறது. நான் தினமும் பாத்ரூமில் ஆய் போகும்போது படிக்கும் தினத்தந்தியில் இந்தமாதிரி டீட்டெயிலா வரலையே, என்ன செய்ய ? தினமலருக்கு மாறிடலாமா ?

Anonymous said...

அடுத்த எலக்சன்ல தமிழ்நாட்டு மக்களை இலவசத்துல இருந்து ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சுவந்தாலும் காப்பாத்த முடியாது போல....

http://panaiyeri.blogspot.com/2008/09/blog-post.html

ஜோ/Joe said...

புருனோ,
மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி!

TBR. JOSPEH said...

இனிமே சொல்லலீங்க:))

நீங்கள் புள்ளி விவரத்தை வைத்து சொல்கிறீர்கள். நான் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து...

சரி, சரி. எல்லோரும் நல்லதுன்னு சொல்றத ஒருத்தன் மட்டும் தீயதுன்னு சொன்னா எப்படி?

Because of என்பதை விட In spite of ... என்றும் வைத்துக்கொள்ளலாம்...

இதுதான் தமிழர்களின் பலம். ஆட்சி யாருடையதாக இருந்தாலும் தமிழனால் உயரமுடியும் என்பதற்கு இது சான்று என்றும் கூறலாம்.

Anonymous said...

நல்ல பதிவு ஜோ.

தொகுதிவாரி பகுப்பாய்வு அருமை.

பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் இருப்பது புது செய்தி அல்ல. குறிப்பாக '90களிலிருந்து திமுக அதிமுக மாற்றி மாற்றி ஆட்சி செய்தாலும் ஒரு திட்ட தொடர்ச்சி (continuity in policy) இருந்து வருகிறது. சின்ன சின்ன ஊர்களிலும் நீர்நிலைகள், நல்ல சாலைகள் என்று நாம் மேலே நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம்.

மாநிலவாரியாக மனித வள மேம்பாட்டு குறியீடு 2002(?) ல் கணக்கிட்ட போது, தமிழகம் 3ம் இடத்தில் இருந்தது. இது பல ஆண்டுகளாக செய்த ஒரு தொடர் ஓட்டத்தின் வெற்றி. நம் முன் அப்போது இருந்த இரு மாநிலங்கள் பஞ்சாபும், கேரளமும். இரு வேறு பொருளாதார கொள்கைகள். தனியுடைமை, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் என்பது பஞ்சாப். பணப்புழக்கம் அதிகம் ஆனால் கல்வி/சுகாதாரத்தில் கேரளாவை விட சற்று பின் தங்கிய நிலை. கேரளா இவற்றில் முதல் நிலை. ஆனால் அரசாங்கம் கடனில் மூழ்கி தத்தளிக்கிறது. மேம்பாட்டுப் பணிகளுக்கு கடனுதவி கிடைப்பதில்லை. கடைநிலை ஆபத்பாந்தவனான ரிசர்வ் வங்கி கூட கைவிரிக்கும். அவ்வளவு மோசமான வரலாறு கடனை திரும்ப செலுத்துவதில் (repayment history). நமக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நேரடியாக கடன் வழங்க காத்திருக்கிறது. 1998(?)ல் இதிலிருந்து தான் நாம் பல்லாயிரம் குளங்களை தூர்வாறும் பணியைச் செய்தோம். மத்தியில் எந்த கட்சி ஆட்சி இருந்தாலும் திட்ட கமிஷனின் செல்லப்பிள்ளையாக தமிழ்நாடு எப்போதும் இருந்திருக்கிறது. இன்னும் revenue deficit-ஐ (வருவாய் பற்றாக்குறை) என்னும் பிசாசை கட்டியாள கஷ்டப்படுகிறோம். அதை குறைத்தால் கட்டமைப்புக்கு முதலீடுகள் அதிகரிக்க முடியும். சொல்லுதற் யார்க்கும் எளியவாம்....

தமிழக அரசியல் வரலாற்றில் '67 க்கு முன்/பின் என்று பேசும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்திய அரசியலில் அந்த தேர்தல் முக்கியமான ஒரு நிகழ்வு தான். மாநில அளவில் மட்டுமே செல்வாக்கு கொண்ட கட்சிளின் வெற்றியின் தொடக்கம் அது. உண்மையான ஃபெடரல் அமைப்பாக - தில்லியின் குறுநிலமாக இல்லாமல் - இந்தியாவை புரிந்துகொள்வதற்கு / செயல்படுவதற்கு அது தான் வித்து. சமீபத்தில் கருணாநிதி NDTVன் சேகர் குப்தா-வுக்கு கொடுத்த நேர்காணலில் "ஃபெடரலித்தைப் பொறுத்த வரை சுதந்திரம் முதல் நெடுந்தூரம் பயணித்திருந்தாலும், இன்னும் நாம் பயணிக்கவேண்டியது நெடுந்தொலைவு" என்று சொன்னார். முற்றிலும் உண்மை.

ஆனால் '67ஐ அதுக்காக குறிப்பிடுவதில்லை. தமிழ்நாட்டில் '67க்கு பிறகு அரசியல் "நாகரீகம்" தாழ்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி சொல்வதில் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதற்குள் இப்போதைக்கு செல்லாமல் prima-facie எடுத்துக்கொண்டாலும், ஒரு விஷயத்தை மறுக்கவேண்டும்: தரம் தாழ்ந்திருக்காலாம், ஆனால் அது திராவிட கட்சிகளின் தன்மையால் என்பது போல சொல்லப்படுவது தவறு. இது ஒரு நாடு தழுவிய(!), ஏன் உலகளாவிய மாற்றம். திமுக x அதிமுக ஒருவரை ஒருவர் மேடையில் திட்டிக் கொள்வது, அடிதடி அரசியல் போன்ற விஷயங்களில் தரம் மோசமாக இருப்பது மறுப்பதற்கில்லை. கேட்கக்கூசும் வகையில் பேசும் பேச்சாளர்களை எல்லா இப்போது கட்சிகளும் மேடையேற்றுகிறார்கள். ஆனால் இது பிற மாநிலங்களில் இல்லையா என்ன ? நமது சட்டமன்றத்தில் மோதிரக்கையால் குத்துவது போன்றவை நடப்பது நாம் கூச்சப்பட வேண்டிய ஒன்று தான். அதே சமயம் இது இங்கு மட்டும் நடப்பதல்ல - 1999ல் உ.பி சட்டமன்றத்தில் மைக் எல்லாம் விட்டெறியப்படவில்லையா ? (அதை படம்பிடித்து "Unfortunately, we don't cover all sports" என்று வரி எழுதி ESPN விளம்பரம் செய்தது :-) ). அவ்வப்போது ஜப்பான்/கொரியா என்று உலகம் முழுவதும் இவ்வாறு நடப்பது செய்தியாகிறது. அதனால் வயசாளிகள் போல பொதுவாக வேண்டுமானால் அங்கலாய்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

சமீபத்தில் படித்தேன் : அண்ணா, தனது ஆரம்ப காலத்தில் ஒரு மாநகராட்சி தேர்தலில் நின்றாராம் நிற்கும் போது அவரும், அவரை எதிர்த்து போட்டியிட்டவரும் வாக்கு சேகரிக்க செல்லும் போது சந்தித்தால், இருவரும் பரஸ்பரம் "நிலைமை எப்படி" என்று விசாரித்துக் கொள்வார்களாம். அத்தகைய இன்று இல்லை என்பது வருத்தத்துக்குரியதே. ஆனால் இது அரசியலில் மட்டும் இல்லை. எல்லா துறைகளிலும் தான். இம்ரான் கானுடன் தனக்கு இருந்த உறவை பற்றி பேசும்போது கவாஸ்கர் கூறியது: Those were the days when the rival captains used to be able to talk on the field, without umpires having to intervene :-)

Competition brings out the best in products and the worst in people என்று சொல்வார்களே அதை சார்ந்தே இதை புரிந்துகொள்ள முயலலாம். உலகமயமாக்கலின் நிழலில் தனிமனித உறவுகளில் "போட்டி மனப்பான்மை" ஏற்படுத்தும் தாக்கம் பற்றி யாராவது கட்டுரை எழுதலாம்.

btw அது என்ன காமரார் ஆனால் இராசாசி :-)

அன்புடன்
பிரபு ராம்

Unknown said...

திரு பாபு அவர்களுக்கு

//இந்த ஹிந்தி விஷயத்துல எல்லோரும் இப்படித்தான் பேசுகிறார்கள்.
ஹிந்தி படிக்க நம் மாநிலத்தில் எந்த காலத்திலும் தடை இருந்ததில்லை.
இன்னொன்று ஹிந்தி தெரியாததால் இவர்கள் முன்னேற்றம் தடை பட்ட மாதிரி ஒரு பீலிங் .டெல்லியில் பிச்சைக்காரன் கூட ஹிந்தி தெரிந்தவன்தான் என்பதை மறந்து விடுகிறார்கள்//

விட்டால் அமெரிக்க பிச்சைக்காரன் கூட ஆங்கிலத்தில் தான் பிச்சை எடுக்கிறான்....அதனால் ஆங்கிலம் கற்பதே தவறு என்று சொல்ல்வீர்கள் போல :)))
அவனவன் அவன் தாய்மொழியில் தானேயா பேச முடியும் :)))

என்னதான் சொன்னாலும் நம் மக்களை ஹிந்தி கற்க விடாமல் தடுத்து புண்ணியம் தேடிகொண்டது திராவிட ஆட்சிதான்....இங்கு மும்பையில் ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளாவிலிருந்து வரும் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள்...என்ன பேசுகிறார்கள் அன்றே புரியாமல் பேந்த பேந்த விழிப்பவன் தமிழனாகிய நாம் தான்....என் கஷ்டம் எனக்குதான் தெரியும் :(((((

ஆனால் ஒன்று இப்படி ஒரு மாநிலத்தையே ஹிந்தி படிக்க விடாமல் தடுத்த கலைஞர் தன் முன்னாள் பாசத்துக்குரிய பேரனை மட்டும் தடுக்காமல் அவரை ஹிந்தி தெரிந்ததனாலேயே மந்திரியாகினாரே....ஆகா என்ன ஒரு ராஜதந்திரம் !!!!!!!!!!

மத்தபடி திராவிட ஆட்சிக்கும் தேசிய கட்சிகளின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதே என் கருத்து...

Anonymous said...

கேவலமான சலுகைகள்

ஆகா, மத்திய அரசு உலகிலேயே மகாப் பெரிய புரட்சி சட்டத்தை இயற்றி விட்டது.
ஆமாம், கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான சலுகையை அரசுப் பெண் ஊழியர்களுக்குக் கொடுத்து, ஏழைகளின் வயித்தெரிச்சலையும் பாவத்தையும் கட்டிக் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. இனி அரசு ஊழியைகள் பணியில் சேரும் 21 வயது முதல் தாங்கள் ஓய்வு பெறும் 65 வயது வரை ஏறக்குறைய 45 ஆண்டுகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு குழந்தை வீதம் பெற்றுக் கொள்வார்கள்.
அப்படியெனில் ஒரு அரசு ஊழியை தனக்கென 15 குழந்தைகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றுப் போட்டால் போதும், ஓய்வுபெறும் வயது வரை தொடர் விடுமுறை கிடைத்து விடும்.
தனியார் நிறுவனங்களிலும், நாள்கூலி வேலை செய்யும் வேலை செய்பவர்களின் வரிப்பணத்தில், அரசு ஊழியைக்கு முழு ஊதியமும் கிடைத்து விடும்.
ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் பாலையும் வைக்கும் அரசுக்கு என்னே பெரிய கருணை.
ஜமின்தார் முறை ஒழிந்து விட்டது என எவன்டா சொன்னது? இப்போது அரசு ஊழியர்களின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
இதனால் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் அல்லவா? ஓய்வு வயதின் உச்சவரம்பையும் அரசு விரைவில் அதிகரிக்கப் போகிறது.
அப்படியெனில் பெண்ணின் தாய்மைக்கு மதிப்பில்லையா என அவர்கள் கேட்பார்கள். இருக்கிறது. அதற்கு ஒரு அளவும் இருக்கிறது.
நாட்கூலி வேலை செய்யும் அப்பாவிப் பெண்கள், பிரசவத்திற்கு முந்திய நாள் வரை உழைக்கிறார்கள். வயலில் உழைத்துக் கொண்டிருக்கும் போது பிரசவம் ஆன கூலிப் பெண்களும் உண்டு.
கூலிப் பெண்கள் பெறுவது மனிதக் குழந்தைகள்தானே?! ஆனால் அரசு ஊழியைகளுக்குப் பிறக்கப் போவது தெய்வக் குழந்தைகள் அல்லவா? அதுங்களை வளர்க்க மூன்றாண்டுகள் கூட போதாது.
இனி இப்படி கூட நம் மத்திய அரசு சட்டம் போடலாம். திருமணம் முடித்து முதலிரவு முடிந்தவுடன், குழந்தைகளை வளர்க்கும் விடுமுறையை இரட்டை மடங்கு சம்பளத்துடன் கொடுக்கத் தொடங்கி விடலாம்.
அந்தக் குழந்தை பிறந்து, வளர்ந்து, பள்ளியில் படித்து, கல்லூரியில் முடித்து, வேலை கிடைத்து, திருமணம் முடிந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை, அதாவது அந்த அரசு ஊழியைக்கு பேரன் பேத்திகள் பிறக்கும் வரை இந்த ஆயுட்கால விடுமுறையை நீட்டிக்கலாம்.
இவர்களுக்கு சம்பளமாகப் போவப் போவது, அப்பாவி கூலிக்காரர்களின் வரிப்பணம்தானே? இனி மாநில அரசுகளும் இந்த கேவலமான சட்டத்தைப் பின்பற்ற தொடங்கி விடும்.
ஏற்கெனவே அரசு ஊழியர்கள் வேலை செய்து கிழிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீண்டகால விடுமுறை வேறு.
இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? ஆமாம், அரசு ஆண் ஊழியர்கள் செயற்கையைகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.
இப்படி எழுதுவதால், நான் அரசு ஊழியர்களுக்கு எதிரி என எண்ண வேண்டாம். எனக்கும் பல அரசு ஊழியர்களில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டம் அந்த நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை.
இந்த சட்டம் இன்னும் பலரை சோம்பேறியாக்கி விடும் என அவர்களே கவலைப்பட்டார்கள்.
எப்படியோ, நாடு உருப்படாத பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அப்பாவி கூலித் தொழிலாளர்களே... தனியார் நிறுவன ஊழியர்களே... நீங்கள் அய்யோ, பாவம்.

Anonymous said...

ஒரு உருப்படியான பதிவு !! திமுகவும் அதிமுகாவும் சிறந்த ஆளுங்கட்சியாக இல்லை என்றாலும் நல்ல எதிர்கட்சிகளே இப்போ பமகவும் விஜய்காந்தும் கூட நல்ல எதிர்கட்சிகளே!!!! குற்றம் குறை சொல்லிகிட்டே இருந்தாதான் நல்லதுகளும் நடக்கும்.
முக்கியமா ஜதிய் அட்லீஸ்ட் பேர்லயாவது ஒழிச்சது பெரிய விஷயம்தான்.
வட இந்தியாவில மெத்த படிச்சவங்க பேர்ல கூட ஜாதி இருக்கு. ஏன் ஆந்திரா கேரளா ல கூட இன்னும் மறைமுகமா பேர்லயே இருக்கு . இது எப்போ ஒழியுமோ அப்போதான் இந்தியா முன்னேறும்.

புருனோ Bruno said...

//பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.//

இந்த சட்டம் என்று முதல் என்று கூற முடியுமா

ஆதாரம். விபரம் தர முடியுமா

தமிழகத்தில் தற்பொழுது உள்ள சட்டப்படி மகப்பேறு விடுப்பு என்பது 90 நாட்கள் (மூன்று மாதங்கள் அல்ல - இரண்டும் வேறு)

அதே போல் 2 குழந்தைகளுக்கு மட்டும் தான் (2 பிரசவங்களுக்கு அல்ல - இதிலும் இரண்டும் வேறு :) :))


மத்திய அரசில்

நீங்கள் கூறும் சட்டம் இயற்றப்பட்டதா

எண், சுட்டி ஆதாரம் தர முடியுமா


-
அப்படி இல்லாமல் ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தீர்கள் என்றால் அது (உங்கள் வார்த்தையிலேயே சொல்வதென்றால்) கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான செயல்
-

புருனோ Bruno said...

மேலும் 29.06.1993 நாளிட்ட அரசாணையின் படி 2 குழந்தைகளுக்கு தான் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும். எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி 15 குழந்தைகளுக்கு அல்ல
--
தமிழகத்தில் ஒரு பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு 90 நாட்கள் தான். சில மாநிலங்களில் (எ.கா - ராஜஸ்தான்) 135 நாட்கள் வரை உள்ளது. மத்திய அரசிலும் அது 135 நாட்கள் தான்
--
அதை 180 நாட்களாக தற்போது தான் அதிகரித்து உள்ளார்கள்
எனவே ஒரு பெண் ஊழியருக்கு மொத்தமாக 180 + 180 என 360 நாட்கள் மட்டும் தான் விடுப்பே தவிர எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்
-
அது தவிர மேலும் 2 வருடங்கள் குழந்தைக்காக் விடுப்பு எடுக்கலாம்
இது மொத்தமாக 2 வருடங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அல்ல
-
எனவே மொத்தமாக ஒரு பெண் ஊழியருக்கு 2 வருடம் 360 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்படுகிறதே தவிர மேலும் 29.06.1993 நாளிட்ட அரசாணையின் படி 2 குழந்தைகளுக்கு தான் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும்.
அதுவும் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் என்றால் அடுத்த பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாது
எழுத்தாளர் ஒளிர்ஞர் கூறியபடி 15 குழந்தைகளுக்கு அல்ல
-
தமிழக அரசு பென் ஊழியருக்கு மொத்த விடுப்பு 180 நாட்கள் தான். அதுவும் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் என்றால் 90 நாட்கள் தான்
-
எழுத்தாளர் ஒளிர்ஞர் குறைந்தபட்ச நாகரிகம் உடையவர் என்றால் ஒன்று அவர் எழுதிய தகவல்களுக்கு ஆதாரம் தெரிவிக்க வேண்டும் அல்லது ஆதாரம் தெரிவிக்க முடியவில்லை என்றால் இது போன்ற மொழியை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் (குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லையென்றால் ஒன்றும் செய்ய வேண்டாம் - ஆனால் அது கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான செயல்)

புருனோ Bruno said...

//இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? //

சட்டம் என்னவென்று கூட தெரியாமல் அதை தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் வாய்க்கு (அல்லது கைக்கு) வந்ததை எல்லாம் பேசும் (அல்லது தட்டச்சு ) செய்ய்ம் நபர்கள் வலையுலகில் பெருகிவிட்டது கவலைப்பட வேண்டிய விஷயம்

தற்பொழுது உள்ள சட்டப்படியே மத்திய அரசு ஆண் ஊழியருக்கு அவரது மனைவி குழந்தை பெற்றால் 15 நாட்கள் விடுப்பு உண்டு.

தமிழக அரசு ஊழியருக்கு கிடையாது

Anonymous said...

The article is posted with good nature. But the people who read it may find lot of faults with dravidian parties. When karunanidhi did not show anger against Yediyurappa(national party leader who does polytics by langauage) people were saying lot of bad about kalaignar. But he acted as a person of well thought. In future we people should not vote for BJP in tamilnadu. Then only we can say that we support Hogenakal water project.


We tamils dropped the caste name from our names. I am really happy about it. But on the other hand we stick to caste( for everything like marriage and other social gatherings). All the caste party leaders are very powerful here atleast in very local.

We totally believe in horoscope. Even the bramins do not care about horoscope much now a days..

We have to repair in many of our thoughts.

If we can then we are the number one.

boopathy perumal said...

ஆனந்த விகடனில் இந்த வாரம்
''அரசியல் லாபம் அண்ணாவின் லட்சியமல்ல'' என்ற தலைப்பிற்கு பின்னூட்டமாக உங்களின் இந்த இடுகையை வெட்டி ஒட்டியுள்ளேன். வீர'மணி' மாதிரி இழப்பீடு கேட்டுவிடாதீர்கள் அய்யா.
நான் 10-வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ''பாலிடெக்னில்''இடம் கிடைத்து பட்டயப் படிப்பு படித்து இன்று துபையில் ஜெர்மன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பத்தாம் வகுப்பில் இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனக்கு பாலிடெக்னில் 1984-ல் இடம் கிடைத்து இருக்காது, அன்று நான்(என் அப்பா) கட்டிய நுழைவுக் கட்டணம் '280' ரூபாய். இந்தி வேண்டும் என்பவர்களின் நோக்கமே என்னைபோண்ற பிற்பட்ட சமுக மக்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்பதுதான். மற்ற பாடங்களில் 90% மதிப்பெண் வாங்கிய நான் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் வாங்கியிருந்தேன்.இந்தி பாடம் ஒன்று கூடுதலாக இருந்திருந்தால் எனது மொத்த மதிப்பெண் குறைந்து இருக்கும். இந்தி பாடத்தில் 50 - 60 மதிப்பெண் வாங்கியிருப்பேன். அந்த ஆண்டு நான் படித்த அந்த கிராமப்புற அரசு மேல் நிலைப்பள்ளியில் 100% தேர்ச்சி பெற்றனர். இவ்வளவுக்கும் அப்பள்ளியில் நாந்தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். என்னாலேயே ஆங்கிலத்தில் 72 மதிப்பெண் பெறமுடிந்தது என்றால் மற்ற மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கனவில் கூட நடக்காது
பூபதி - துபை
http://www.vikatan.com/av/2008/sep/17092008/av0602.asp

ஜோ/Joe said...

வருகை புரிந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி!

கவிதா | Kavitha said...

ஜோ நல்ல பதிவு நல்ல் தொகுப்பு..தமிழகத்தை பற்றிய விவரங்களுக்கு நன்றி !!

RATHNESH said...

அருமையான அவசியமான புள்ளி விவரங்கள்!

இன்னும் முன்னேற ஊக்கமளிக்கும்.

மற்ற மாநிலங்களை விட தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் தமிழகத்தில் அதிக மதிப்பு பெற்றதன் / உயரே வந்ததன் பலன் இது என்பது வட இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும்.

க்ரீமிலேயர் அபிமானிகளே! கவனியுங்கள்!

நசரேயன் said...

அப்படி உரைக்கிற மாதிரி சொல்லுங்க..
ஹிந்தி படிகலைனா இந்தியாவுல உருபடவே முடியாதுன்னு ரெம்ப பேருக்கு நினைப்பு.

யாழ் Yazh said...

"சரி ..இப்போ இந்தி பேசுகிற மாநிலங்களின் லட்சணங்களை பார்க்கலாமே .நாலஞ்சு சல்மான் கான் ,சாருக்கான் படங்களை பார்த்து விட்டு வட இந்தியாவில் செல்வம் கொழிக்கிறதாக்கும் ,எல்லோரும் பெரிய பெரிய பங்களாவில் கூத்தும் கும்மாளமுமாக தான் இருப்பார்களாக்கும் .."

எனது மனதில் ஏற்பட்ட அதே கேள்விகள். நச் பதிவு

Darren said...

//இந்தி சொல்லித் தராமல் தான் பெரிய இந்தி மேதையாவதை தடுத்து விட்டதாக அங்கலாய்க்கு விஜயகாந்த் வீணாக தமிழகத்தில் கஷ்டப்படுவதற்கு இங்கே போய் குடியேறி விடலாம் .நமக்கும் நல்லது .//

அருமை.

suvanappiriyan said...

அருமையான அலசல் கட்டுரை!

suvanappiriyan said...

தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததில் பெரும் பங்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களையேச் சாரும் என்பதை அனைவரும் மறந்து விட்டோம். மாத சம்பளம் வாங்கி தனக்கு கொஞ்சம் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு பாக்கி அனைத்து செல்வத்தையும் தான் பிறந்த மண்ணுக்கே அனுப்பி வைக்கிறானே அவனை நாம் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும். அந்த சாமான்யன் அனுப்பும் பணம் தான் கேரளாவையும் தமிழகத்தையும் கொழிக்க வைக்கிறது. இதில் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது எனது நிலைப்பாடு.

புருனோ Bruno said...

//மாத சம்பளம் வாங்கி தனக்கு கொஞ்சம் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு பாக்கி அனைத்து செல்வத்தையும் தான் பிறந்த மண்ணுக்கே அனுப்பி வைக்கிறானே அவனை நாம் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும். //

வழிமொழிகிறேன்

கன்னியாகுமரி, இராமநாதபுறம் ஆகிய மாவட்டங்களில் வேலை பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு, என் நண்பன் ஒருவன் சொன்னது நினைவில் வருகிறது, ரயில் பிச்சை எடுக்கிறவனுக்கு பல மொழிகள் தெரியும் அதுனால அவன் அறிவாளியான்னு சொல்வான். ஒருவேளை இந்தி கட்டாயம் கற்பிக்கபட்டால் வட மாநிலங்களில் பிச்சை எடுப்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

மாயவரத்தான் said...

பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவர் 'ஜோஸப் பால்ராஜ்'. சூப்பர்!

ஜோ/Joe said...

//பெயரோடு ஜாதிப் பெயர் உள்ளதை பற்றி கருத்து கூறுபவர் 'ஜோஸப் பால்ராஜ்'. சூப்பர்!//

மாயவரத்தான்,
'ஜோசப் பால்ராஜ்' -ல எங்கே ஜாதி இருக்கு ?

Anonymous said...

//தமிழகம் இத்தனை ஊழல்களையும் தாண்டி இந்த அளவு முன்னேற்றம் அடைந்ததில் பெரும் பங்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களையேச் சாரும் என்பதை அனைவரும் மறந்து விட்டோம்.//

எப்படி சொல்கிறீர்கள் ? வெளிநாடு வாழ் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? (வலையுலகில் வேண்டுமானால் அதிகமாகத் தெரியலாம்). அவர்கள் ஈட்டி, இந்தியாவிற்கு அனுப்பும் வருவாய் எவ்வளவு ? இதில் வரி, பொருள் நுகர்வு போன்றவை தவிற தொழில்வளர்ச்சி/முதலீடு போன்றவற்றில் அவர்கள் பங்கு எவ்வளவு ? பங்கு இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பெரும்பங்கு என்பதை மறுக்கிறேன்.

தொழில்வளம் பெருக, நல்ல உள்கட்டுமானத்தை பல வருடங்களாக வளர்த்துள்ளோம். இவையும் நல்ல மனிதவளமும் பெருக பெருமளவு அரசும் மக்களும் தான்.

ஒரு சிறு உதாரணம்: குடும்பக் கட்டுப்பாடு என்பது இந்தியாவின் தென்பகுதிகள் பெரும் வெற்றி பெற்றது. இந்த தலைமுறையில் 4-5 குழந்தைகள் உள்ள குடும்பங்களைக் காண்பதரிது. உ.பி/பிஹாரில் காணலாம். பெண்களின் நிலை, குழந்தைகளின் கல்வி/சுகாதாரம் என்று எல்லா விதங்களிலும் பொது நல்வாழ்வைத் தொடும் ஒரு ஆதார விஷயம் இது. இது போன்ற பல விஷயங்களில் படிப்படியாக முன்னேறினோம்.

இதை வெளிநாடு வாழ் தமிழர்கள், தகவல்-தொழில்நுட்பம் போன்ற சிறு காரணங்களுக்குள் அடைத்துவிட முடியாது. சொல்லப்போனால் இவை எல்லாம், ஒரு வகையில் முன்னேற்றத்தின் பலன்கள் என்று கூட சொல்லலாம்.

app_engine said...

இந்தியா டுடே புள்ளிவிவரங்கள் என்பதால் மற்றவற்றை விடக்கொஞ்சம் அதிக நம்பகமானவை. தொகுத்தமைக்கு நன்றி, ஜோ!

நான் அரசியல் சார்பற்றவன் ஆதலால், இது கழகங்களாலா / கழகங்கள் இருந்துமா, அல்லது யார் ஆண்டிருந்தாலும் கேரளம் / பஞ்சாப் / ஹரியானா போல மாற்றங்கள் வந்திருக்குமா என வாதாட மனதில்லை. மேலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் என்பதால் நேர்மை அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்வதை விட திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்வதே இயலும். அவ்விதத்தில், தமிழக அரசியல்வாதிகள் சராசரித்தமிழர்களைப்போல (பொறியியல், மருத்துவம், கல்வி, கலைகள் எல்லாவற்றிலும் தமிழன் நூற்றாண்டுகளாகக்கெட்டி என்பதை மனதில் கொள்ளுங்கள்) மற்ற பல மாநிலத்தவரை விடத்திறமையாய் இருப்பதில் வியப்பில்லை.

என் கருத்து - இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கியக்காரணம், தமிழர்களின் "மாற்றம் ஏற்கும் மனநிலை" என்பது தான். (அது 60களில் தொடங்கியதல்ல, அதற்கும் வெகு காலம் முன்பே உள்ளது. நமக்குத்தெரிந்த வரலாற்றில் கிறித்தவத்தை எந்த அளவுக்கு தமிழகமும் கேரளமும் ஏற்றன என்பது ஒரு உதாரணம். அதற்கும் முன்னமே 'திரை கடல் ஒடு' வதிலும் அந்த ஆர்வம் தெரிகிறது).

நூற்றாண்டுகளாக நிலவும் இந்த உயர்மையின் காரணியாக சில பத்தாண்டுகள் உழைத்தவர்களை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல எனத்தோன்றுகிறது:-)

ஜோ/Joe said...

app_engine,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தமிழர்களின் 'மாற்றம் ஏற்கும் மனநிலை' என்ற காரணி பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.

//நூற்றாண்டுகளாக நிலவும் இந்த உயர்மையின் காரணியாக சில பத்தாண்டுகள் உழைத்தவர்களை மட்டும் குறிப்பிடுவது சரியல்ல எனத்தோன்றுகிறது:-)//

நிச்சயமாக நான் அவர்கள் தான் காரணம் என கூறவில்லை .தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் மட்டும் தான் காரணம் என நிறுவ முனைவதை விட ,திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் கெட்டு குட்டிசுவராகி விட்டது எனும் மேம்போக்கான சில கருத்துவாதிகளின் கூற்றை மறுப்பதே இந்த பதிவின் நோக்கம்.

மேலும் ஆண்டாண்டு காலமாக தமிழனின் கூறுகளை பார்ப்பதை விட ,சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும் ,தமிழகமும் இருந்த நிலையிலிருந்து அவற்றின் வளர்ச்சியை கணக்கிடுவதே நியாயமாக இருக்கும் என்பது என் கருத்து .

திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறிய போது இந்திய மாநிலங்களில் பல்வேறு காரணிகளில் தமிழகத்தின் தரவரிசை இடமும் ,இப்போது இருக்கும் இடத்தையும் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

PRABHU RAJADURAI said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

இலவச சட்ட உதவியில் இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம்.

மும்பை நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். இலவச சட்ட உதவி என்று கேள்விப்பட்டதில்லை. இங்கு பெரிய வழக்குரைஞர்கள் கூட இலவச சட்ட உதவி மையம் அல்லது நீதிமன்றங்கள் கேட்டுக் கொள்வதற்காக வாதிட முன் வருகிறார்கள்.

நான் கவனித்த மற்றொரு விடயம். சாலை வசதி, பஞ்சாயத்து நிர்வாகம்!

\\இப்படி நறுக்குன்னு புள்ளி விவரங்களெல்லாம் கொடுத்தா, நாங்க வேற காரணமெல்லாம் கண்டுபிடிப்போமே :-)//

இல்லையா பின்ன, இன்னும் கூட முன்னேறியிருப்போம்.

PRABHU RAJADURAI said...

Dr.Bruno,

This Act may be called the Maternity Benefit Act, 1961.

(2) It extends to the whole of India except the State of Jammu and Kashmir.

NOTE...it extends to the WHOLE OF INDIA

punithan said...

good post

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives