Thursday, August 07, 2008

ரஜினி செய்தது தவறா?

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் போது ரஜினியை மட்டும் குறை சொல்வதேன்?" என்றெல்லாம் இறங்கி வந்திருக்கிறார்கள் ..இந்த அளவுக்காவது ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் காற்று இறங்கி வருவது நல்லது தான்.

ரஜினிகாந்த் நல்ல நடிகர் ..நல்ல மனிதரும் கூட .இருக்கட்டுமே ..யார் இல்லையென்று சொன்னது ? நான் ஒரு நடிகன் .என்னை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு போயிருந்தால் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை உண்மையிலேயே அவரின் நடிப்புக்கு ,ஸ்டைலுக்கு திரண்ட கூட்டம் என்று எடுத்துக்கொண்டு போயிருந்திருக்கலாம் .ஆனால் ஊகங்கள் மூலம் அரசியல் சாயங்கள் விழுந்த போது அதனால் ஏற்படும் லாபங்களை மிக லாவகமாக வியாபாரமாக்கிக் கொண்ட போது தானே அவர் வெறும் நடிகர் என்பதையும் தாண்டி வெளியில் வந்து விழுகிறார் .

திரையில் அவர் பேசும் வசனங்கள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் என்ற எல்லையை தாண்டி ரஜினிகாந்த் என்ற தனிமனிதன் பேசும் வசனங்களாக கருத்தில் எடுக்கப்பட்டதை (இப்போது அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மட்டுமே என்று மறுத்தாலும் ) கொஞ்சமாவது மண்டையில் மசாலா உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியுமே ?எம்.ஜி.ஆரும் இப்படி அரசியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார் , பாடுவார் ..ஆனால் அவை படத்திலுள்ள இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசுவது போல மறைமுகமாக இருக்கும் .ஆனால் ரஜினி சம்பந்தம் இல்லாமல் கையை பார்வையாளரைப் பார்த்து நீட்டி நேரடியாகவே பேச ஆரம்பித்தார் . அவை வெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் ,பாடல்கள் என்றால் ..வீட்டு வேலைக்காரராக இருக்கும் ஒருவர் அதிலும் காதல் காட்சியில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." என்று பாடினால் கேட்பவன் என்ன கேனயனா ? அதற்கு வேலைக்காரனின் காதலி வேறு " என்னமோ திட்டமிருக்கு " என்று பில்டப் வேறு ...ஆமாங்க இதெல்லாம் அவருக்கு தெரியாம இயக்குநரும் பாடலாசிரியரும் திணித்தது ..அல்லது ..இதைக்கூட அவர் பலமுறை தடுத்தும் கேட்காமல் சேர்த்து விட்டார்கள் ..என்று சொல்பவர்களை என்ன சொல்வது ..வடிவேலு பாணியில் ரொம்ப நல்லவன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தான் .

தன்னை நடுரோட்டில் காக்க வைத்து விட்டார் என்ற காரணத்துக்காக ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தது .."மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ..ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது " என குரல் கொடுத்தது ..ஊடகங்களும் ஏதோ ரஜினி வாய்சினால் தான் திமுக வெற்றி பெற்றது ..இல்லையென்றால் ஜெயலலிதா வென்றிருப்பார் என காமெடி பண்ணியது ..அந்த பில்டெப்புகளெல்லாம் அடுத்த முறை கொடுத்த வாய்சிலேயே பணால் ஆனது ..மீண்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ம.க -வை எதிர்த்தது .. சும்மா விட்டிருந்தா குறைந்தது ரெண்டு இடத்துலயாவது தோற்க வாய்ப்பிருந்த பா.ம.கா-வை மறைமுகமாக ரசிகர்களை தூண்டிவிட்டு தோற்கடிக்கிறேன் பேர்வழின்னு எல்லா இடத்திலும் பா.ம.கா-வை வெற்றி பெற வைத்தது ..இதுக்கு பிறகாவது "பேர கேட்டாலே..அதிருதுல்ல ..ஒதறுதுல்ல"-ன்னு சொல்லாம இருந்திருக்கணும் .

வரமாட்டேன் ..வந்தாலும் வருவேன் ..வருவேண்ணு யார் சொன்னது ..நீங்களா நினைச்சுகிட்டா நான் என்ன செய்வது ..நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன் .. நாளை என்ன நடக்கும்-ன்னு சொல்ல முடியாது .. எல்லாம் (கைய மேலே தூக்குறது) என்றெல்லாம் மாறி மாறி சொல்லி வருவது எதனால் ? வேறு ஒன்றுமில்லை ..இத்தகைய ஊகங்கள் , எதிர்பார்ப்புகள் ,சந்தேகங்கள் ,விவாதங்கள் தன்னுடைய படங்களின் வியாபாரத்துக்கு மிகப்பெரிய பலமாய் இருக்கும் என்ற எண்ணம் தான் .

ரஜினிகாந்துக்கு எந்த சமூக பிரச்சனையிலும் ஆழமான அறிவோ ,தனக்கென ஒரு கருத்தோ இருந்ததில்லை ..அல்லது அரசியலுக்கு வந்து நிலைக்கும் அளவுக்கு அவருக்கு தலைமைப் பண்போ ,நிர்வாக திறனோ ,பக்குவமோ ,பொறுமையோ கிடையாது ..இவை அவருக்கு நன்றாக தெரிந்ததாலும் ..தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்று போட்டுடைக்க விரும்பவில்லை ..காரணம் ? வரமாட்டோம் -ன்னு தெரியும் ..அதற்காக வருவோம் ,வரமாட்டோம் என ஊகத்தின் அடிப்படையில் நம் திரைப்படங்களுக்கும் ,ஊடகங்களில் நடக்கு கிடைத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்கும் கிடைத்து வரும் லாபத்தை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டும் ? போற வரைக்கும் போகட்டுமே என்பது தான் அவரது எண்ணமாக இருக்க முடியும்.

இதில் என்ன தவறு ? என்னைக் கேட்டால் தவறே இல்லை ..அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .

இப்போது கூட ரஜினி கணக்கை கொஞ்சம் வித்தியாசமாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம் ..உண்ணாவிரத பேச்சுக்கு பிறகு வந்த மிரட்டலுக்கு பிறகு கூட "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்று பேசியவர் இப்போது 2 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நட்டம் வந்து விடக்கூடாதே என்பதால் வருத்தம் தெரிவித்து நட்டத்தை போக்கியிருக்கிறார் ..ஆனால் நடந்தது என்ன ? கர்நாடகாவில் 2 கோடி லாபம் .தமிழகத்தில் 20 கோடி நட்டம் ..கொஞ்சம் வேறு மாதிரியாக யோசித்து ..லாபத்திற்காகவேனும் "கர்நாடகாவில் என் படம் வரா விட்டால் எனக்கு நட்டம் ஏதுமில்லை" என்பதை மறு உறுதிப்படுத்தியிருந்தால் ,2 கோடி நட்டத்துக்கு பதில் தமிழகத்தில் கூடுதலாக 10 கோடி பார்த்திருக்கலாம் ..தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!

38 comments:

விஜய் ஆனந்த் said...

மீ த பஷ்ட்ட்டூ!!!

விஜய் ஆனந்த் said...

அப்படியே வழிமொழிகிறேன்!!!!!

Anonymous said...

பாத்து ஜோ. குசேலனைப் கருத்துச் சொல்பவர்களெல்லாம் கமல் ரசிகர்கள் என முத்திரை குத்த நிறையப் பேர் இணையத்தில கொலவெறியோடா இருக்காங்க. உங்க கமல் ரசிகர் லேபிள் ஊர் உலகத்துக்கே தெரியுமே?

ஜோ / Joe said...

//உங்க கமல் ரசிகர் லேபிள் ஊர் உலகத்துக்கே தெரியுமே? //

ஆம். நான் கமல் ரசிகன் தான் ..ஆனால் நேற்று வரை ரஜினி படத்தை தியேட்டரில் தவற விட்டதில்லை.

Anonymous said...

Well said.

வெண்ணை said...

உங்க வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை ..........நன்னா சொன்னேல் போங்கோ ,,,,,,,,,,,,!!!!!!!!!!

Anonymous said...

இந்த வார "ஒ" பக்கங்களில் ஞானி இவ்வாறு எழுதி இருக்கிறார்.

"சூப்பர் ஸ்டார் இமேஜ் ஹோகனேக்கல் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. " எவ்வளவு சத்தியமான வரிகள்.

"அரசியலில் செயல்பட தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறர் ஏற்க செய்வதற்கான திறமை" தேவை என்று கூறியிருக்கிறார் . ஆனால் இன்றைய அரசியல்வாதி எவருக்குமே முதல் மூன்றும் பூஜ்யம்.

ஆனால் இவை எல்லாவற்றையும்விட மிகவும் அவசியமான, தேவையான கொள்கையானது "பல்டி".

இதற்கான தேர்வில் சூப்பர் ஸ்டார் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டார். "தெளிவான கருத்து; கொள்கையில் உறுதி" இவை இரண்டுமே அவருக்கு இல்லை. அப்படியானால் ஒரு அரசியல்வாதி ஆவதற்கு உண்டான தகுதியை அவர் பெற்றுவிட்டார் என்றுதானே கூறவேண்டும். என்ன சொல்கிறீர்கள்.

Syam said...

//தமிழக மக்களும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வடிவேலு போல நல்லவனாக நீடித்திருப்பார்கள் ..பாவம் ரஜினி ! நல்ல மனிதன் !!//

எத்தனை நாளைக்கு இன்னும் ஒரு ஆறு மாசத்துல நம்ம மக்கள் மறுபடியும் நல்லவங்களா ஆகிடுவாங்க...

முகமூடி said...

// நல்ல மனிதரும் கூட //

இதையே ஏகப்பட்ட பேர் சொல்கிறார்கள். முதலில் நல்ல மனிதர் என்பதற்கான அளவுகோல் என்ன? நல்ல மனிதன் என்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பமே எல்லாவற்றிற்குமான - எங்களை ஆளுங்கள், வழிநடத்துங்கள் என்று சரண்டர் ஆகும் அளவு - தகுதியை தந்துவிடுமா? அப்படியென்றால் ஒரு படத்துக்கு 25 கோடி வாங்கும், நதிநீர் இணைப்புக்கென ஒரு கோடி தாராள நன்கொடை தரும் ஒரு நடிகனை விட ஊருக்கு ஊர் சுலாப் இண்டர்நேஷனல் என்ற பெயரில் கக்கூஸ் கட்டி ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு விடுபவன் முதல்வர் பதவிக்கு அதிக நல்லவனாக தெரிகிறானே?

அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலையில் எப்பொழுதும் ஊசலாடும் தமிழகத்தை உண்மையிலேயே ஆண்டவன் காப்பாற்றியது, ரஜினி வாய்ஸ் ஊத்திக்கொண்டபொழுதுதான். ரஜினி பற்றி அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் வியாபாரத்தில் படுகெட்டி என்பது ரஜினி 25 நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நுழைவு சீட்டு வசூலத்ததில் ஆரம்பித்து இன்று வரை ரஜினி இமேஜால் சம்பாதித்த ஏகப்பட்ட நிகழ்வுகளில் உணர்ந்து கொள்ளலாம். (அது ஒன்றும் தப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்)

ஆக, நல்ல மனிதன் என்ற பிம்பத்தை மட்டும் வைத்து ரஜினி ஜுரம் அடித்த சந்தர்ப்பத்தில் ரஜினியை முதல்வராக்கியிருந்தால் தமிழக ஆட்சி அதிகார வியாபாரம் என்பது அங்கிருந்து இங்கே என்று குடும்பம் மாறியிருக்குமே தவிர கேனை தமிழன் வாழ்வில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.

**

இந்த வார ஜு.வி ரஜினியை விமர்சித்திருப்பது செம காமெடி. ரஜினி தனியறையில் குசு விட்டால் கூட அதற்கும் ஒரு யூகம் வைத்து எதையாவது எழுதி சாமான்ய ரஜினியை தெய்வ மச்சான் ஆக்கியதில் விகடனின் பங்கு மிக அதிகம். ரஜினிக்கு மதன் அடிக்கும் ஜால்ரா ஊர் பிரசித்த அசிங்கம். இன்று என்னவோ மான ரோசம் வந்து எழுதிய மாதிரி எழுதியதின் பிண்ணனி என்ன கருமமோ.

ஜோசப் பால்ராஜ் said...

நானும் மீ த பர்ஸ்ட்டு

ஜெகதீசன் said...

ரஜினி ரெம்ப நல்லவர்.
:)
இப்படிக்கு,
கமல் ரசிகன் என முத்திரை குத்தப்பட்டவன்.

கோவி.கண்ணன் said...

ஜோ,

குசேலன் படம் ஊத்தல் தான், அவர் கன்னடக்காரர்களிடம் வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் படம் ஓடும் அளவுக்குத்தான் ஓடும்.

:)

ஜெவுக்கு எதிர்பானார், ஆதரவானர் என்று சொல்வதெல்லாம் கொள்கை நிலைப்பாட்டின் அளவுகோள் அல்ல. அப்படிப் பார்த்தால் ஒருவர் தவறு செய்தாலும் தொடர்ந்து ஆதரிக்கவேண்டும், எதிர்த்தால் தொடர்ந்து எதிர்க்கவேண்டும் என்பது போல் சொல்கிறீர்கள். தெளிவான முடிவெடுக்கும் தனிமனிதன் கூட ஒரே அரசியல் வாதியையே பிடித்து இருக்கு என்று ஆதரிக்கமாட்டான்.

//"கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு ..காலத்தின் கையில் அது இருக்கு .." //

திரையில் வசனம் பேசினார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இப்போது அவருக்கு தெளிவாக புரிந்து இருக்கும், திரையில் பேசுவது போலவே சொடக்குப் போட்டு வெளியிலும் பேசமுடியாது என்றே. அவரை மலைபோல் நம்பி இருந்த ரசிகர்கள் தான் மாபெரும் தவறு செய்ததாக மனசொடிந்து போனார்கள்.

அது போலவே ரஜினி ஒரு பைத்தியம் என்று புறம் தள்ளியவர்களெல்லாம் இதுதான் சமயம் என்று அவரை தமிழன துரோகியாக சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஜோ / Joe said...

முகமூடி,
நீண்டகாலத்துக்குப் பின் உங்கள் வருகைக்கு நன்றி!

விடுபட்டு போன கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் .ஊடகங்களும் ரஜினியை வைத்து குளிர்காய்ந்ததை மறுக்க முடியாது ..அதுவும் நீங்கள் சொன்னது போல விகடனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை .உடன்படுகிறேன்.

ஜோ / Joe said...

கோவியாரே,
//ஜெவுக்கு எதிர்பானார், ஆதரவானர் என்று சொல்வதெல்லாம் கொள்கை நிலைப்பாட்டின் அளவுகோள் அல்ல.//

இதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லையே .அவர் மாற்றி சொன்னதை பற்றி நான் இங்கு பேசவேயில்லை ..அவர் தான் கொள்கை அளவில் எதையும் பேசவில்லை என்கிறேனே ? அப்புறம் கொள்கை நிலைப்பாட்டின் அளவு கோல் எங்கு வந்தது ?

//அது போலவே ரஜினி ஒரு பைத்தியம் என்று புறம் தள்ளியவர்களெல்லாம் இதுதான் சமயம் என்று அவரை தமிழன துரோகியாக சித்தரிக்க முயல்கிறார்கள்//

ரஜினி தான் தமிழ் மக்களை காப்பாற்ற போகிறார் என்று சித்தரிக்க முனைந்தவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லையோ ?

கோவி.கண்ணன் said...

//ரஜினி தான் தமிழ் மக்களை காப்பாற்ற போகிறார் என்று சித்தரிக்க முனைந்தவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லையோ ?

1:42 PM, August 07, 2008
//

நான் இன்றைய இடுகையை எழுதியதே அதற்குத்தான், ஜூவியில் ரஜினி ரசிகர் ஒருவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ரஜினியை மிக உயரிய இடத்தில் வைத்திருந்ததாகவும் இப்போது ரஜினியில் அவமானப்படுவதாகவும் எழுதி இருந்தார்.

தமிழகத்தின், தமிழர்களின் மானத்தைத் தீர்மானிப்பது ரஜினியின் பேச்சு அல்ல என்று தெளிவாக என்பதிவில் எழுதி இருக்கிறேன்.

ஜோ / Joe said...

விஜய் ஆனந்த் ,வெண்ணை ,
முதல் வருகைக்கு நன்றி!

தென்றல் said...

kumudam.comல் வந்த "குசேலன் திரைப்படம் பற்றி ஞாநி - வழக்கறிஞர் சுமதி சிறப்பு விவாதம்"
பார்த்தீங்களா....? அதை பார்த்தபிறகுதான் தெரியும் ரஜினியோட கொ.ப.செ. வழக்கறிஞர் சுமதினு...!

பி.கு: 'ஒரு' சுப்பிரமணியபுரத்துக்கோ, பருத்தி வீரனுக்கோ இப்படி சுட சுட வந்து சிறப்பான விவாதம் பண்ணாங்களானனுலாம் கேக்ககூடாது!

Pisasu said...

கோவி முதல் பின்னூட்டத்துல துரோகியாக சித்தரிக்கிறாங்க.. அப்படீங்குறார். அடுத்ததுல தமிழர் மானம் அவர் கைல இல்ல அப்படீன்னு சொல்லி அவர் தலைவன் மாதிரியே அந்தர் பல்டி அடிச்சுட்டாரே.

ஜோ / Joe said...

pisasu,
கோவியார் ரஜினியை தலைவன் என்று சொல்லக்கூடியவர் அல்ல.

வெண்தாடிதாசன் said...

//தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .
//

100% சரியான கருத்து. அவர் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருக்கின்றார். திருந்த வேண்டியது அவரின் விசில் அடிச்சான் குஞ்சுகள் & அல்லக்கைகளே.

முரளிகண்ணன் said...

\\ஒரு யூகம் வைத்து எதையாவது எழுதி சாமான்ய ரஜினியை தெய்வ மச்சான் ஆக்கியதில் விகடனின் பங்கு மிக அதிகம்\\

அப்பட்டமான உண்மை

ஜோ / Joe said...

syam,
வாங்க! நன்றி!

ஜெகதீசன்,
நல்லாத் தான் குழப்புறீங்க :))

பால்ராஜ்,
வெறும் அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டு எதுவும் சொல்லாம போனா எப்படி ?

Edwin said...

//ஜோ / Joe said...
pisasu,
கோவியார் ரஜினியை தலைவன் என்று சொல்லக்கூடியவர் அல்ல//

NO Joe. Kovii wrote last year or 2006 'MGR , Rajini Enga chaathi (caste)'. Please try to read that 'kuppai'.

Koovi is not a Tamil. You must identify his anti - tamil welfare

ஜோ / Joe said...

ஞானியின் பார்வையில்
http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6684.html

ஜோசப் பால்ராஜ் said...

அலுவலகத்துல நிறைய ஆணி, அதான் வெறும் வருகைப்பதிவோட போயிட்டேன்.

ரொம்ப நச்சுனு சொல்லியிருக்கீங்க. ஆனா நாம எல்லாம் ஒரு விசயத்துக்கு அவருக்கு நன்றி சொல்லனும் ஜோ.
1996 தேர்தலுக்கு முன்னாடி ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலின் போது, அவரை அரசியலுக்கு வரச்சொல்லி எல்லாத்தரப்பினரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பது போன்ற தோற்ற நிலை அப்போது இருந்தது. நல்ல வேளை அந்த நேரத்தில் கட்சி ஆரம்பிக்காமல் விட்டுவிட்டார். அப்போது அரசியலுக்கு வந்திருந்தால் கட்டாயம் ஆட்சியையே பிடித்திருப்பார். இனி அவர் கட்சி ஆரம்பித்தால் கார்திக் கூட அவரோடு கூட்டணி வைக்கமாட்டார்.

தமிழர்கள் இனியாவது நடிகர்களை திரையரங்குகளில் மட்டும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். போகின்ற போக்கில் நடிகர்களைத்தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பிக்க முடியாது எனும் நிலை வந்துவிடும் என நினைக்கிறேன்.

Edwin said...

//கோவி.கண்ணன் said...
//ரஜினி தான் தமிழ் மக்களை காப்பாற்ற போகிறார் என்று சித்தரிக்க முனைந்தவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லையோ ?//


Joe Please read this. You will know about Koovi.

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_02.html

கோவி.கண்ணன் said...

// Edwin said...
//ஜோ / Joe said...
pisasu,
கோவியார் ரஜினியை தலைவன் என்று சொல்லக்கூடியவர் அல்ல//

NO Joe. Kovii wrote last year or 2006 'MGR , Rajini Enga chaathi (caste)'. Please try to read that 'kuppai'.

Koovi is not a Tamil. You must identify his anti - tamil welfare

5:26 PM, August 07, 2008
//தோ...வந்துட்டாரு, ஐயையோ இப்பவே போய் அந்த பதிவை அழிச்சுடுறேன் :)))))

பூதக் கண்ணாடியில் கண்டதை தனிப்பதிவாக எழுதிப் போட்டால், என்னைய பத்தி நல்லா தெரிஞ்சுப்பாங்க. முயற்சிப்பண்ணலாமே.

:)

ஜோ / Joe said...

ராஜ்குமார்,
பதிவுக்கு சம்பந்தமில்லாத உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படாது.

Anonymous said...

//அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் .தன்னுடைய தொழில் ,அதில் வருகின்ற லாபம் , அதற்காக போடப்படும் கணக்குகள் எல்லாவற்றிலும் அவர் தெளிவாகத் தான் இருக்கிறார் ..அவரோடு சேர்ந்த திரைப்படத் துறையினரும் தெளிவாத்தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. தெளிவாக வேண்டியவர் அவரல்ல ..தமிழக மக்கள் தான் .//
மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

ஜோ / Joe said...

வாங்க தென்றல்!
//kumudam.comல் வந்த "குசேலன் திரைப்படம் பற்றி ஞாநி - வழக்கறிஞர் சுமதி சிறப்பு விவாதம்"
பார்த்தீங்களா....? அதை பார்த்தபிறகுதான் தெரியும் ரஜினியோட கொ.ப.செ. வழக்கறிஞர் சுமதினு...! //

பார்த்தேன் ..ஏதோ படத்தை promote பண்ணுவதற்காக நியமிக்கப் பட்டவர் போல பேசினார்.

Satya said...

சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

ஜோ / Joe said...

முரளி கண்ணன் ,சத்யா..வருகைக்கு நன்றி!

Anonymous said...

well said .media also play a part

வசந்த் said...

ரஜினி (மற்றும் சில நடிகர்களும்) கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் குடும்பத்திற்கு கொடுப்பதாக சொல்லிய தொகையை ஒரு வருடம் கழித்தும் கொடுக்காமல் இருந்ததாக ஏதோ பத்திரிக்கையில் படித்ததாக நினைவு..

வசந்த்

Anonymous said...

agreed

Anonymous said...

Well said....Rajni is the brand/product being sold to us, we need to differentiate the man shivaji Rao from the brand/product "Rajni". I am not sure if Shivaji Rao has actually spoken his mind about any issue. Whatever has been said may be what is good to promote the brand/product... as it was rightly identified in this blog. So i agree wid u in saying that it is people who need to actually change their view and not him. He (both the man and the product) are clear in what they are doing.

Anonymous said...

Rajini is an opportunist.

katie said...

YES

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives