Monday, April 28, 2008
பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!
சமீபத்தில் நடைபெற்ற கலைஞானி கமல்ஹாசனின் தசாதாவரம் பட பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழாவில் தன்னுடைய எதார்த்த நடவடிக்கைகளின் மூலம் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் உலக நட்சத்திரம் ஜாக்கிசான்.
குறுந்தட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார் .அப்போது குறுந்தகட்டை சுற்றியிருந்த கவரையும் , நாடாவையும் வழக்கம் போல கீழே போட்டுவிட ,கொஞ்சம் கூட தாமதியாமல் அதை குனிந்து பொறுக்கிக் கொண்டு மேடையின் ஓரத்தில் குப்பைத் தொட்டி இருந்தால் அதை போட வேண்டும் என்ற எண்ணத்தில் குடு குடுவென்று ஓடிய ஜாக்கிசானை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .பாதி வழியில் இடை மறித்த கமல் அதை வாங்கி கைமாற்றி விட்டு ,ஜாக்கிசானை மீண்டும் இருக்கையில் அமருமாறு பணிக்க ,சின்ன குழந்தையின் குதூகலத்தோடு ஓடி வந்து ஜாக்கிசான் இருக்கையில் அமர்ந்தது கண்கொள்ளா காட்சி .
இங்கிருக்கும் வீடியோ காட்சியைப் பார்த்தால் ஜாக்கிசான் எந்த வித உள்ளுணர்வும் இல்லாமல் மிகவும் அனிச்சை செயல் போல இதைச் செய்ததை காணலாம் .அகில உலக பெரு நட்சத்திரமாக இருந்தாலும் ,ஒரு பணியை மற்றவர் செய்வார்கள் என எதிர்பார்க்காமல் ,அல்லது மற்றவரை செய்ய பணிக்காமல் ,பாராட்டு பெறும் எந்த நோக்கமும் இல்லாமல் ஜாக்கிசான் செய்த இந்த செயல் சிறியதாக இருந்தாலும் ,நமக்கு (குறிப்பாக குப்பையை கண்ட இடத்தில் தூக்கியெறியும் நம்மூர் பொதுஜனத்துக்கு) ஒரு பாடம் .
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
நேற்று நிகழ்ச்சிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது ஜாக்கிசானின் சிரித்த முகம் தான். வெகு இயல்பான நடவடிக்கை.
புரியாவிட்டாலும் அமைதி காத்த பண்பு.
எல்லாமே. வாழ்த்துகள்.
ஒரு சாதரண நிகழ்வு நம்மை நெகிழ வைக்கிறது என்றால் நம் நிலை வெட்ககேடாகத் தான் இருக்கிறது என்று அர்த்தம். :(
//ஒரு சாதரண நிகழ்வு நம்மை நெகிழ வைக்கிறது என்றால் நம் நிலை வெட்ககேடாகத் தான் இருக்கிறது என்று அர்த்தம். :(
//
ஐயா,
நெகிழ்கிறேன் ,உருகுகிறேன் -னு எங்கேயாவது சொல்லியிருக்கேனா என்ன?
ஜாக்கிசான் மாதிரி உலகப்புகழ் பெற்றவராக நம்மவர்கள் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியாதா ?
ஆம்! நம் நிலை வெட்கக்கேடாகத் தான் இருக்கிறது ..வெத்து வேட்டுகளெல்லாம் பொது இடத்தில் பொது இடத்தில் நடந்து கொள்ளும் லட்சணத்தைப் பார்த்தால் ,ஜாக்கிசானின் முன்னால் நாம் வெட்கித் தான் நிற்க வேண்டும்.
TBCD,
உங்க ரேஞ்சே வேற .விட்டுடுங்க!
அட ஒரு பதிவு போட தூண்டியது என்பதை நான் நெகிழ்ச்சி என்கிறேன். தப்பா இருந்தால் சொல்லுங்கய்யா, ஜகா வாங்கிக்கிறேன்.. :P
//
ஜோ / Joe said...
ஐயா,
நெகிழ்கிறேன் ,உருகுகிறேன் -னு எங்கேயாவது சொல்லியிருக்கேனா என்ன?
//
எளிமை என்பது எட்டாக்கனியாக இருக்க காரணம் தூக்கி மேலே வைப்பவர்கள் தான். நம்ம நாட்டிலே, எல்லாத்துக்கும் வேலையாள் வைச்சி பழகிட்டோம். மற்ற நாடுகளில் அவ்வாறு இருக்காது என்று நினைக்கிறேன்.
என் வீட்டின் உரிமையாளர், எனது கழிவறையின் பிரச்சனைகளை அவரே வந்து சரி செய்கிறார். (சீனர்). என் வீட்டு கழிவறையயை நானே குழாய் சரி செய்ய தயங்குவேன்.(இப்போ இல்லை). அவர் செய்ததைக் கண்டவுடன், எனக்கு வெட்கமாகத் தான் இருந்தது.
பெரும்பாலான வெள்ளையர்களும் தத்தம் வேலைகளை தாமே செய்து பழகுகிறார்கள்.
துணிகளை தோய்க்க ஒரு ஆள், தேய்க்க ஒரு ஆள் என்று சோம்பேறியாக வளர்ந்துவிட்டோம் என்றுத் தோன்றுகிறது.
//
ஜாக்கிசான் மாதிரி உலகப்புகழ் பெற்றவராக நம்மவர்கள் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியாதா ?
ஆம்! நம் நிலை வெட்கக்கேடாகத் தான் இருக்கிறது ..வெத்து வேட்டுகளெல்லாம் பொது இடத்தில் பொது இடத்தில் நடந்து கொள்ளும் லட்சணத்தைப் பார்த்தால் ,ஜாக்கிசானின் முன்னால் நாம் வெட்கித் தான் நிற்க வேண்டும்
//
புதசெவி
//TBCD,
உங்க ரேஞ்சே வேற .விட்டுடுங்க
//
குப்பையை குப்பைத்தொட்டியில்
போட வேண்டும் என்று உண்ர்த்தியது
நமக்கு பாடமல்ல...நெத்தியடி.
ஆனால் இதைத் தெரிந்து கொள்ள
செலவழித்தது...பல கோடி!!!
//ஆனால் இதைத் தெரிந்து கொள்ள
செலவழித்தது...பல கோடி!!!//
சார்! நீங்க எத்தனை லட்சம் செலவழிச்சீங்க?
கலைஞானி ஐயா அப்பவும் ஜாக்கிகிட்ட இருந்து அந்தத் தாளை வாங்கிக் கீழே தான் போடறாப்பல இருக்கே? 'இதை எல்லாம் நாம என்னத்துக்கு எடுத்துக்கிட்டு?' என்பது போல் அவர் ஜாக்கிக்கிட்ட இருந்து தாளை வாங்கிக் கீழே போட்டுட்டாரே?! :-))
செலவழித்தது நானில்லை. அவரை இங்கு வரவழைக்க படத்தயாரிப்பாளர்
செலவழித்தது பலகோடிகள் என்று பத்திரிகைகளில் படித்தேன்.
//செலவழித்தது நானில்லை. அவரை இங்கு வரவழைக்க படத்தயாரிப்பாளர்
செலவழித்தது பலகோடிகள் என்று பத்திரிகைகளில் படித்தேன்.//
அப்புறம் நீங்க ஏன் ரொம்ப சலிச்சுகிறீங்க ? நான் என்னவோ நீங்க தான் கோடி கொடுத்தீங்களோண்ணு நினைச்சேன்
//அகில உலக பெரு நட்சத்திரமாக இருந்தாலும் ,ஒரு பணியை மற்றவர் செய்வார்கள் என எதிர்பார்க்காமல் ,அல்லது மற்றவரை செய்ய பணிக்காமல் ,பாராட்டு பெறும் எந்த நோக்கமும் இல்லாமல் ஜாக்கிசான் செய்த இந்த செயல் சிறியதாக இருந்தாலும் ,நமக்கு (குறிப்பாக குப்பையை கண்ட இடத்தில் தூக்கியெறியும் நம்மூர் பொதுஜனத்துக்கு) ஒரு பாடம் .
//
100% சரி ! இம்மாதிரி பழக்க வழக்கங்கள் சிறு வயதிலிருந்தே (உருவாகி) வர வேண்டும் என்பது என் எண்ணம்.
குமரன் கூறுவது போல, ஜாக்கியின் கையிலிருந்து குப்பையைப் பிடுங்கி கமல் மீண்டும் தரையில் வீசுவது உறுத்தலாகத் தெரிகிறது :(
ஜோ, இப்பதான் "இந்த" வீடியோவ பார்த்தேன்.
/இங்கிருக்கும் வீடியோ காட்சியைப் பார்த்தால் ஜாக்கிசான் எந்த வித உள்ளுணர்வும் இல்லாமல் மிகவும் அனிச்சை செயல் போல.../
அது...!!
இந்த செய்தியையும் பார்த்திருப்பீங்கதான..!
http://www.jackiechan.com/message_view?cid=1048
~~
The movie, Dasavatharam, is truly a sight to behold. The story, directing, acting, camera work, special effects, everything about it is amazing. It really opened my eyes to modern Indian cinema. Of course I had seen Indian films before; I admire many of the actors, and really like the music and dancing. But this movie is really something else. Every element was amazing to me; and all the elements together just made a perfect and incredible movie! I won’t spoil anyone’s surprise by revealing the story now, since I think everyone should watch this movie. But I will say two things: watch for the environmental message, and all you directors in Hong Kong and China, watch this movie and start working harder than ever, because very soon now, Indian cinema will overtake us in the eyes of the international audience!
~~
I dont know when we indians will come out of inferior mentalities of degrading ourselves..
i have seen several saints who wouldnt dare kill a fly and care for everything including the environement.
i dont if joe could write about them. i understand why he could not. because they do not have fame nor they are white skinned foreigner.
Params
Your blogs are very thought provoking. It is interesting that in some cultures humility is not cool. It is a good observation and ofcourse a good lesson to everyone.
நம்ம ஊரிலயும் இப்படி எல்லாவற்றையும் பொறுப்பாக செய்பவர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் ஏனோ தானோவென்று செய்பவர்கள் இருக்கிறார்கள்.
ஜோ, நீங்க தான் உலகம் சுற்றும் வாலிபராச்சே.. இதே ஜாக்கி சானோட ஹாங்காங்கில டி.எஸ்.டி. ஏரியாவிலே பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளே எப்படி நாறி கிடக்கு தெரியுமா?
இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் அடிப்படையா கொண்டது என்பது என்னோட கருத்து.
என்னா சொல்றீங்க?
//இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் அடிப்படையா கொண்டது என்பது என்னோட கருத்து.//
உங்க கருத்து முற்றிலும் சரி மாயவரத்தான் அவர்களே!
This is re: paramapitha's comment- forgive me joe i couldn't hold myself
Hey first of all it seems that u haven't read joe's blogs very much
secondly what's wrong in appreciating a good deed despite the color of ones skin.
I leave the rest to joe coz i know he can give you apt reply
ஜோ ,
என்ன இன்னும் தசவதாரம் பார்க்கவில்லையா? .. இன்னும் உங்களிடமிருந்து விமர்சனம் வரவில்லை ;)
LLdasu,
விமர்சனம் படிச்சிட்டு என்னை கும்முறதுக்கு ரெடியா இருக்கீங்க போல :))
படம் பார்த்தாச்சு ..இங்கே ஏகப்பட்ட பேர் விமர்சனம் துவச்சு திங்க போட்டுட்டாங்க ..இனிமேல என்ன எழுதிண்ணு தோணுச்சு..அதான் எழுதல்ல..
இப்போதைக்கு விமர்சனமா ஒரே ஒரு வரி மட்ட்டும் சொல்லிடுறேன்.
தசாவதாரம் கமல் ரசிகர்களை விட கமல் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு தான் பிடிச்சிருக்கு.
என் பின்னூட்டத்துக்குப் பதிலே காணோமே:))
உங்கள் பின்னூட்டம் அண்ணாச்சி பதிவில் பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்தேன். நடு நிலமையே என்றும் நன்மை பயக்கும்.
//என் பின்னூட்டத்துக்குப் பதிலே காணோமே:))//
வல்லிசிம்ஹன்,
நீங்கள் கேட்டு நான் பதில் சொல்லாமலிருக்கிறதா என தேடிப்பார்த்தேன் .பிடிபடவில்லை ..விளக்கவும் .எதற்கு பதில் எதிர்பார்க்கீறீர்கள்?
அடடா. நம்ம இணையத்தில
இதெல்லாம் வழக்கமில்லையோ.நாம கருத்து சொல்வோம். பின்னூட்டம் வரும். அப்புறம் அதுக்குப் பதில சொல்வோம்.:)
இந்தத் தடவை வாழ்த்துகள் தானே சொல்லி இருக்கிறேன். அதனால பதில் பின்னூட்டம் அவசியமில்லை:)
Post a Comment