Saturday, July 12, 2008

மானெங்கெட்ட மத்திய மாநில அரசுகள்

வல்லரசாவதெல்லாம் இருக்கட்டும் .முதலில் தன் நாட்டு மீனவர்களை தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சுண்டைக்காய் இலங்கை அரசை கண்டிக்க வக்குண்டா இந்த இந்திய வல்லரசுக்கு ..வெட்கம் .கேவலம்.

தமிழனென்றாலே பாராமுகம் தான் .அதிலும் மீனவன் என்றால் கேட்கவே வேண்டாம் .மற்றவர்களுக்காகவெல்லாம் கொதித்தெழும் அரசுகளும் அரசியல் கட்சிகளும் மீனவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பாராமுகமாகவும் அலட்சியமாகவும் இருப்பதற்கு காரணம் மீனவர்கள் கொண்டுள்ள குறைந்த பட்ச அரசியல் செல்வாக்கு தான் .

புவியல் ரீதியாக நேர்கோட்டில் வசித்து வரும் மீனவர்கள் தொகுதிவாரியாக பல தொகுதிகளுக்கு பங்கிடப்படுவது தான் இதற்கு காரணம் .உதாரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாக்குமரி முதல் கேரள எல்லையான நீரோடிவரை நீண்ட கடற்கரை பகுதியில் சுமார் 45 மீனவ கிராமங்களில் வசித்து வரும் மீனவர்கள் அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவத்தையும் பெறுவதில்லை .நீள்வாக்கில் சேர்த்தால் தனி சட்டமன்ற தொகுதி அளவுக்கு மக்கள் தொகை இருந்தாலும் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரிந்திருக்கிறார்கள் .இதனால் எந்த தொகுதியிலும் அவர்களால் முக்கியத்துவம் பெற முடிவதில்லை.

உயிரை பணயம் வைத்து அன்றாடம் அலைகளோடு அல்லாடும் மீனவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாத கேடுகெட்ட அரசாங்கம் தன்னை ஒரு வல்லரசாக பறைசாற்றிக் கொள்ள முனைவது போல கேலிக்கூத்து எதுவுமில்லை .

மற்றவிடயங்களிலெல்லாம் தேசபக்தி பொங்கி வழியும் உள்நாட்டு மக்களுக்கு கூட மீனவன் அந்நிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அது ஒரு செய்தியே இல்லை .

தன் குடிமகன்கள் இவ்வளவு சிறிய அண்டை நாட்டால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப் பட்டுக்கொண்டிருந்தாலும் அந்நாட்டிலிருந்து வரும் பிரதமருக்கு சிவப்பு கம்பளம் விரிந்து மரியாதை கொடுக்கும் கேடு கெட்ட இந்திய அரசாங்கத்தால் அதிகார பூர்வமாக ஒரு சிறிய எச்சரிக்கை கூட விடமுடியவில்லை .கொடுமையிலும் கொடுமை .

இங்கிருக்கும் கலைஞர் அரசாங்கம் வெறும் கடிதம் எழுதினோம் என்று எத்தனை நாளைக்கு பூச்சாண்டி காட்ட முடியும் ? மீனவ மக்களென்றால் அவ்வளவு இளப்பமாக போய்விட்டதா ? கலைஞர் அவர்கள் தன் மெத்தனத்தை உடனே களைய வேண்டும் ..இல்லையென்றால் அதன் பலனை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கும் .

35 comments:

ஜிம்ஷா said...

கீழ்கண்ட பதிவுகளை படியுங்கள், பதில் கிடைக்கும்.

http://tvmalaionline.blogspot.com/2008/06/blog-post_4592.htmlhttp://tvmalaionline.blogspot.com/2008/06/blog-post_28.html

ஜோ / Joe said...

ஜிம்ஷா,
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.

ஜோ / Joe said...

அனானி,
உங்கள் புலியெதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வேறு இடத்தைப் பார்க்கவும்.

அப்புறம் கொண்டை வேறு நல்லாவே தெரியுது .

முகு said...

ஜோ,

உண்மை...குருவியை சுடுவது மாதிரி
மாதம் சில தமிழனின் உயிர்களை சுடுவது
இலங்கை ராணுவத்தின் பொழுது போக்காக‌
உள்ளது.

நமது முதல்வருக்கு உளியின் ஓசை, தசாவ‌தார‌ம்
போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌வே நேர‌ம்
ச‌ரியாக‌ உள்ள‌து.

த‌மிழ‌ன் 'சுயம்' இழ‌ந்து கொண்டிருக்கிறான்.

என்ன‌ செய்ய‌,
க‌ட‌லூர் முகு

தருமி said...

உங்களின் நியாயமான கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

வாய்ச்சொல்லில் வீரரடி .. நம் தமிழ் அரசியல்வாதிகள்.

G.Ragavan said...

ஜோ, உங்கள் கருத்தையும் கடுப்பையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

மத்திய மாநில அரசுகள் முதுகெலும்பைக் கழற்றி வைத்து காலம் பலவாயிற்று. ச்சே! என்னய்யா அரசியல்வாதிங்க நீங்க. ஒரு சாதாரண மனுசனுக்கு இருக்குற அக்கறை கூட ஒங்களுக்கு இல்லாமப் போயிருச்சே!

கொழுவி said...

பெரியண்ணன் எல்லாரையும் அனுசரித்துத்தான் போகோணும் கண்டியளோ.. ? எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்.. ரொம்ப நல்லவன்

-L-L-D-a-s-u said...

உங்களின் நியாயமான கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

அந்த துப்பாக்கி குண்டுகளில் 'Made in India' என்று உள்ளது என பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான் ;(;(

ம. கோமன கிஸ்ன டமார் said...

//இங்கிருக்கும் கலைஞர் அரசாங்கம் வெறும் கடிதம் எழுதினோம் என்று எத்தனை நாளைக்கு பூச்சாண்டி காட்ட முடியும் ? மீனவ மக்களென்றால் அவ்வளவு இளப்பமாக போய்விட்டதா ? //

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டீர்கள். ஆனால் பிரச்சனை உணர்ச்சி வசப்படாமல் லாஜிக்காக அனுகவும்.இந்திய மீனவர்கள் அதிக மீன் கிடக்கும் என்பதறகாக இலங்கை கடற்பரப்புள் நுழைந்துவிடுகின்றனர். மேலும் சில மீனவர்கள் புலிகளுக்காக கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு எல்லைதாண்டியவர்களை கைது செய்வதுதான் நடைமுறை. ஆனால் புலிகள் இருக்கும் ஆபத்து காரணமாக எந்த படகையும் நம்பி இலங்கை கடற்படையினர் அருகில் செல்ல முடியாது. எனவே அத்துமீறும் படகை பார்த்ததும் சுடத்துவங்கிவிடுகின்றனர்.

பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் அபாயம் இருந்த போது சந்தேகப்படுமாறுள்ள நபர் யாரையும் தலையில் சுட்டு கொல்ல போலிஸ் உத்தரவு இருந்தது. ஏனெனில் விசாரணையின் போது தற்கொலைதாரி குண்டை வெடிக்கச்செய்யும் முன் கொல்லப் படவேண்டுமில்லையா? அதுபோலத்தான் இதுவும்!

இலங்கைப் படையினர் இந்திய எல்லைக்குள் வருவதில்லை. உடனே கச்சத்தீவு என ஆரம்பிக்காதீர்கள்.எங்கு ஆபத்தோ அங்கு செல்லாமலிருப்பவனே புத்திசாலி!

தயவுசெய்து இதில் கலைஞரை அல்லது மத்திய அரசை குத்தம் சொல்லாதீர்!

ஜோ / Joe said...

ம. கோமன கிஸ்ன டமார் ,
சரி ! நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள்ளுவோம் .இவை தான் காரணம் என்று இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ அறிவித்திருக்கின்றனவா ?

ஆகவே தமிழக மீனவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட ,அதனால் சம்பந்தம் இல்லாத மீனவர்கள் பாதிக்கபடாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

மிகக்குறுகிய இடைவெளியே உள்ள இந்திய இலங்கை கடற்பரப்பில் தவறுதலாக நுழைந்து எத்தனையோ முறை இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் .தமிழக மீனவர்களுக்கு மட்டும் சாவு மடும் தான் தீர்வு ..எப்படி உங்களால் இப்படி இதயம் இல்லாமல் எழுத முடிகிறது ?

சரி..கைது செய்யப்பட வேண்டியவர்களை தவறுதலாக சுட்டு விட்டோம் என்று இலங்கை என்றைக்காவது மன்னிப்பு கேட்டிருக்கிறதா ? அத்தகைய தவறுகளை தடுக்க இரு தரப்பிலும் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

இல்லை.. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை ..மீனவர்களாச்சு இலங்கை அரசாங்கமாச்சு என்று இந்திய அரசு அறிவிக்க தயாரா? இப்படி எதையும் பற்றி வெளிப்படையாக பேசமாட்டோம் ..நீ போன ..அவன் சுட்டான் ..செத்த ..அதுக்கு நான் என்ன பண்ண என்பது தான் ஒரு அரசாங்கத்தின் விளக்கமா ஐயா?

பாகிஸ்தானில் போய் வேவு பார்த்தான் என்று இந்தியன் ஒருவனை தூக்கு தண்டனை கொடுத்த போது மட்டும் அரசாங்கமே போய் கெஞ்சினீர்களே ..அப்போ எங்கே போச்சு உங்க சட்டம் ? அன்றாடம் காய்ச்சும் மீனவர்கள் கொத்து கொத்தாக சுட்டுக் கொன்றாலும் எதுவும் கேட்கவோ சொல்லவோ மாட்டீர்கள் ? நல்லாயிருக்கையா உங்க சட்டமும் விளக்கமும் .

கோவி.கண்ணன் said...

ஜோ,

உங்கள் வருத்ததில் நானும் பங்குகொள்கிறேன்

ஜோசப் பால்ராஜ் said...

ஜோ, நானும் இதுகுறித்து ஒரு பதிவை எழுதியுள்ளேன்.
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_1624.html

@ ம. கோமன கிஸ்ன டமார்....

எல்லை தாண்டி போகின்றார்கள், கடத்தல் செய்கின்றார்கள் என்று எல்லாம் கதை சொல்லாதீர்கள். இன்றைய சம்பவம் நடந்தது இந்திய கடல் எல்லையில் என்றுதான் சொல்லியுள்ளார்கள்.
பாகிஸ்தான் கடற்படைக்கூட எல்லை தாண்டும் நம் மீனவர்களை கைது செய்து விடுவிக்கின்றதே தவிர சுடுவதில்லை.
ஏன் எல்லைதாண்டும் இலங்கை மீனவர்களை நம்மவர்கள் சுடுகின்றார்களா?
புலி பயம் என்பதெல்லாம் சும்மா கதை. செத்துக்கொண்டு இருப்பது நம் நாட்டு மீனவர்கள். இதிலும் உங்கள் கையாலாக கொள்கைகளை காட்டாதீர்கள்.
ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கும் இந்தியாவின் போக்கைத்தான் ராஜிவ் காந்தியை கொன்றவர்களை ஒழிக்க ஆயுதம் அளிக்கின்றோம் என்றப் பெயரில் கொடுக்கின்றீர்கள். அதைக் கூட தைரியமாக வெளியில் சொல்ல முடியாமல் , ஆயுத உதவி வழங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே, ரகசியமாக கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். அதை நியாயப்படுத்துவது மாதிரியே இங்கு நம் நாட்டு மீனவர்களை கொல்வதையும் நியாயப்படுத்துவது என்ன நியாயம்? கடலில் என்ன எல்லை கோடு வரைந்து வைத்திருக்கின்றார்களா? அல்லது இந்திய பாகிஸ்தான் இடையேயான வாஹா எல்லையில் உள்ளதுபோல் வேலி போட்டு வைத்திருக்கின்றார்களா?
எல்லா மீனவர்களுமா கடத்தல்காரர்கள்? எல்லாருமா எல்லை தாண்ட வேண்டும் என்று செல்லுகின்றார்கள்? அவ‌ர்க‌ளிட‌ம் கருவியா உள்ள‌து?
வ‌யிற்றுப்பிழைப்புக்காக‌ க‌ட‌லோடும் அவ‌ர்க‌ளை இந்திய‌ர்க‌ள் கூட‌ ஆத‌ரிக்க‌விட்டால் என்ன‌ நியாய‌ம்?
விட்டால் மீன‌வ‌ர்க‌ள் எல்லோரும் தீவிர‌வாதிக‌ள் அல்லது கடத்தல்காரர்கள் என்று சொல்லுவீர்க‌ள் போல் உள்ள‌து.

ம. கோமன கிஸ்ன டமார் என்பதுதான் உங்கள் உண்மையாண பெயரா?
அல்லது அனானி என்று போடுவதற்கு பதிலாக இப்படி ஒரு விந்தையான பெயரை கொடுத்துள்ளீர்களா? ஏன் உண்மையான பெயரில் வந்து உங்கள் கருத்தை சொல்லக்கூட உங்களுக்கு வெட்கமா?

ஜோ / Joe said...

ஜோசப் பால்ராஜ்,
இணைந்து குரல் கொடுத்தமைக்கு நன்றி!

ம. கோமன கிஸ்ன டமார் said...

//நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள்ளுவோம் .இவை தான் காரணம் என்று இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ அறிவித்திருக்கின்றனவா ?//

உண்மை உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை, ஐயா!
http://www.asiantribune.com/?q=node/12114

இந்திய மற்றும் தமிழக அரசுகள் பல முறை இது குறித்து எச்சரித்துள்ளன. கடைசியாக தமிழக (திமுக) அரசின் அறிவிப்பு பாருங்கள்...
http://timesofindia.indiatimes.com/Chennai/Heavy_incursions_by_TN_fishermen_in_Lanka_waters/articleshow/3146974.cms

இவ்வறிக்கையில் இலங்கை கடற்படை மட்டுமல்லாது அவ்வப்போது LTTEயும் தமிழக மீனவருடன் விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது.

//ஆகவே தமிழக மீனவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட ,அதனால் சம்பந்தம் இல்லாத மீனவர்கள் பாதிக்கபடாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ?//

மத்திய மாநில அரசுகள் பல முறை எல்லைதாண்டி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.ஆனால் மீனவர் கேட்பதாயில்லை. தற்போது மீன்பிடிபடகுகளில் GPS பொருத்தவும் ரேடியோ தகவல் தொடர்பு வசதிகளுக்கும் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

//மிகக்குறுகிய இடைவெளியே உள்ள இந்திய இலங்கை கடற்பரப்பில் தவறுதலாக நுழைந்து எத்தனையோ முறை இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் .தமிழக மீனவர்களுக்கு மட்டும் சாவு மடும் தான் தீர்வு ..எப்படி உங்களால் இப்படி இதயம் இல்லாமல் எழுத முடிகிறது ?//


இலங்கை மீனவர் விடுவிக்கப்பட்டது போல இந்திய மீனவரும் சில சமயம் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
உ-ம் இந்த செய்தி...
http://www.hindu.com/2008/03/09/stories/2008030956590100.htm

ஆனால் நம்மாளுக இதே பொழைப்பாக இருந்தால் கஷ்டம்தான்.

இதை இதயத்தோடு உருகிஉருகி எழுதுவதை விட பிரச்சனையை எல்லாக் கோணத்திலும் அணுகுவது நல்லது.பிரச்சனைகளை தீர்க்க இதயத்தைவிட மூளை சிறந்தது என் நினைகிறேன்.

//சரி..கைது செய்யப்பட வேண்டியவர்களை தவறுதலாக சுட்டு விட்டோம் என்று இலங்கை என்றைக்காவது மன்னிப்பு கேட்டிருக்கிறதா ? அத்தகைய தவறுகளை தடுக்க இரு தரப்பிலும் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?//

அடுத்தவன் வூட்டுகுள்ள பூந்தீங்கன்னா அடிக்கத்தான் செய்வான். அவன் எதுக்கு சாமி மன்னிப்பு கேட்கனும்?

//நீ போன ..அவன் சுட்டான் ..செத்த ..அதுக்கு நான் என்ன பண்ண என்பது தான் ஒரு அரசாங்கத்தின் விளக்கமா ஐயா?//

அரசாங்கத்தின் விளக்கம்... அடுத்தவன் நாட்டு எல்லைக்குள் விசா இல்லாம போனாக்க அவன் போட்டுத் தள்ளினாலும் கேள்வி கேட்க முடியாது என்பதே!

மடிப்பாக்கம் கோமன கிஸ்ன டமார் said...

பாகிஸ்தான் கடற்படைக்கூட எல்லை தாண்டும் நம் மீனவர்களை கைது செய்து விடுவிக்கின்றதே தவிர சுடுவதில்லை.
ஏன் எல்லைதாண்டும் இலங்கை மீனவர்களை நம்மவர்கள் சுடுகின்றார்களா?

அதான் காரணத்தை ஏற்கனவே எழுதிட்டமல்ல!

//புலி பயம் என்பதெல்லாம் சும்மா கதை.//

:-)

//நம் நாட்டு மீனவர்களை கொல்வதையும் நியாயப்படுத்துவது என்ன நியாயம்? கடலில் என்ன எல்லை கோடு வரைந்து வைத்திருக்கின்றார்களா? //

உங்களுக்கு விவரம் தெரியல எனில் யாராவது மீனவ நண்பனிடம் கேட்டுப்பாருங்கள். கோடு போட்டால்தான் எல்லை தெரியுமா என்று?

//ம. கோமன கிஸ்ன டமார் என்பதுதான் உங்கள் உண்மையாண பெயரா?
அல்லது அனானி என்று போடுவதற்கு பதிலாக இப்படி ஒரு விந்தையான பெயரை கொடுத்துள்ளீர்களா? ஏன் உண்மையான பெயரில் வந்து உங்கள் கருத்தை சொல்லக்கூட உங்களுக்கு வெட்கமா?//

ஆமாங்கய்யா எங்களுக்கு ரொம்ப வெட்கம் ஜாஸ்திதான்.

ஆளைப் பார்காதீர், கருத்தை மட்டும் பாரும்.அதாவது ஆளை அடிக்காதீர்.கருத்தை மட்டும் தாக்கும்.

கொழுவி said...

கலைஞரை வையாதீர்கள்.. இறந்த குடும்பங்களுக்கு உதவித் தொகை ஒரு லட்சம் நிச்சயம் உண்டு. எதிர் காலத்தில் சுடப்பட்டு இறப்பவர்களுக்கும் இவ் உதவித் தொகை கிடைக்கும். வேறென்ன செய்ய முடியும்.. ? துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு போய் சண்டை போட்டா காப்பாற்ற முடியும்.. ?

டி.பி.ஆர் said...

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதால்தான் சுடப்பட்டார்களா என்கிற வாதம் எல்லாம் தேவையே இல்லை.

அப்படியே சென்றிருந்தாலும் சுட்டுக் கொல்வது என்று ஒவ்வொரு நாடும் தீர்மானிக்குமானால் அது அராஜகத்தில்தான் சென்று முடியும்.

இந்தியனுக்கு எப்போதுமே பொறுமை அதிகம்.

கலைஞருடைய இன்றைய நிலையில் மத்திய அரசை கடுமையாக சாடவும் முடியலையே என்ன செய்ய? நம்ம அட்டைக்கத்தி வீரர் விஜயகாந்த்தைப் போல மீனவருக்கு பதில் சொல் அணு ஒப்பந்த்தை ஆதிரிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லையே:-(

sathesh said...

கட்சதீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது.
1974 ஆண்டு ஒப்பந்தம் அதற்க்கு வழி செய்கிறது. எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.விவரம் தெரியாதவர்களிடம் பேசுவது வீண்

தஞ்சாவூரான் said...

//தன் குடிமகன்கள் இவ்வளவு சிறிய அண்டை நாட்டால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப் பட்டுக்கொண்டிருந்தாலும் அந்நாட்டிலிருந்து வரும் பிரதமருக்கு சிவப்பு கம்பளம் விரிந்து மரியாதை கொடுக்கும் கேடு கெட்ட இந்திய அரசாங்கத்தால் அதிகார பூர்வமாக ஒரு சிறிய எச்சரிக்கை கூட விடமுடியவில்லை .கொடுமையிலும் கொடுமை .//

அமெரிக்காவுக்கு அடிவருடுவதற்கே முழு நேரத்தையும் செலவு செய்யும் இந்தக் கேடுகெட்ட அரசுக்கு, இந்த மாதிரி விஷயங்களுக்கு செலவிட ஏது நேரம்?

sathesh said...

ஆண்மையற்ற சிங்களனே....
உன் துப்பாக்கித் தோட்டாக்கள் எம்மை அழித்து விடும் என்று கனவு காண்கிறாயா, கடலை நேற்றுப் பார்த்த சிங்கள வெறியனே, உலகம் முழுதும் நாகரீகம் வருவதற்கு முன்னாள் வாசனைத் திரவியங்களை எம் கொற்கைக் கடற்கரையில் கொண்டு வந்து சேர்த்தவர்களடா நாங்கள். நீயும் உன் தாத்தனும் உடைகள் இன்றிக் காடுகளில் அம்மணமாய் இருந்த போதே ரோமானிய உடைகளை உவரிக் கடற்கரையில் கொண்டு வந்து எம் காதல் கன்னியருக்குக் கொட்டிக் கொடுத்த இனத்தை அழிப்பதற்கு உன் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தைரியம் இருக்கிறதா கேட்டுச் சொல்லடா?

கடல் கடந்து வந்து நாங்கள் உருவாக்கிய மண்ணில் கலப்பினமாய்ப் பிறந்த கயவனே, உன்னை வேரறுக்க நாங்கள் நினைத்திருந்தால் ஓயாத அலைகளாய் நாங்கள் புறப்பட்ட போதே ஒழிந்து போயிருப்பாய், மனிதம் வளரக் காரணமாய் இருந்த மறவர்களடா மடையனே, உன்னை அழிக்கின்ற பாவத்தில் உன் பிள்ளைகளின் வாழ்வு எம் கண்களுக்குள் துளிர் விட்ட ஈரத்தில் தப்பித்து ஓடினாய் ஆண்மையற்ற சிங்களனே
தமிழனின் வீரம் பற்றி அறியாத சிங்களச் சிப்பாயே, புலிகள் என்னும் புரியாத புதிரையே உன்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை, புதிதாய்க் கண்ட ஆயுதத்தை பயன்படுத்திப் பார்க்கிறாயா? முறம் கொண்டு புலி துரத்திய மங்கையர் தம் வயிற்றில் பிறந்த வேங்கைகளடா நாங்கள், மரியாதை கொடுத்துக் கூறுகிறோம் விளையாடாதே எம் மீனவர் தம் படகுகளுடன், சிதறிய மரத் துகள்களில் உன் இனம் முழுவதும் புதைக்கப்படும். பதரே.....

நாங்கள் உன்னோடு போரிடத் தேவை இல்லையடா, கடலோரம் விளையாடும் எம் குலச்சிறுவர்களைக் கொண்டே உன் குலம் முழுதும் அழிக்க முடியும், முடிந்தால் வந்து இறங்கிப் பாரடா !! நாகைக் கடற்கரையில்!!!!!

சங்கநாதம் முழக்கி முறையான போருக்கு வர உன் முதுகுக்கும் இல்லையடா பொருத்தம், நாங்கள் போரிடுவதற்க்குக் கூட ஒரு பொருத்தம் வேண்டுமடா, இல்லையென்றால் மன்னித்தோம் என்று சொல்லி விரட்டி விடுவோமடா மழுங்கிப் போன மொன்னையனே.....சீண்டிப் பார்க்கிறாய், எம்மை, சிங்கம் ஓய்வெடுக்கும் பொது சுண்டெலியும் வந்து முதுகிலேறும், நாங்கள் எப்போதும் சிங்கங்கள் தான், ஆயுதமின்றி மீன் பிடிக்க வந்த நாங்கள் எப்போதும் சிங்கங்கள் தான், நீ முதுகிலேறும் சுண்டெலி தான், அதனால் தான் இதுவரையில் பிழைத்து இருக்கிறாய், ......இனி பொறுக்க முடியாது, வாழ்வதற்கு மீன் பிடிக்க வந்த எங்களை சாவிற்கு அழைத்தாயோ, சாவின் பிடியிலும், நெஞ்சில் கீறலிட்டுப் புதைக்கின்ற மறத்தமிழ் மன்னர்களின் வழியில் வந்த எம்மை அஞ்சி ஓடுகிறோம் என்று வஞ்சம் தீர்க்கிறாயோ... பொங்கி எழுந்த ஆழிப் பேரலை போல நொடிப் பொழுதில் அழிந்து போவாய்......

கடைசியாக எம் அரசியலார்க்கும், தமிழின் வழி வந்த தலைமகன் கலைஞருக்கும் கூக்குரலிட்டுக் கோருகிறோம், எம் மீனவர் தம் துயர் துடைக்க உம்மைக் கெஞ்ச வேண்டுமா? இல்லை, எமக்குத் தெரிந்த போர் முறையில் புறப்பட்டுப் போகட்டுமா?

நீங்கள் செய்வீர்களா? இல்லை நாங்களே செய்யட்டுமா? இந்திய அரசுகளின் இன்றைய தலைமுறையே, முறையிட்டு முறையிட்டு முகமிழந்து போனது போதும் நாங்கள், வரலாற்றை மறந்து விட்டோம் என்று வறண்டு போனீர்களா? நாங்கள் வரலாற்றை மாற்றி எழுதுவதற்குள் வந்து விடுங்கள்,

போர் புரிந்து எங்களுக்கும் பல நாட்கள் ஆகிறது?

சரி என்று சொல்லுங்கள், எங்கள் வீரம் என்னவென்று நாங்கள் காட்டுகிறோம், முனை மழுங்கிய எங்கள் வாட்களை, சரியாகக் கூர் தீட்ட யாரும் கற்றுக் கொடுக்கத் தேவை இல்லை எம் இனத்திற்கு!!!

நாங்கள் புறப்படும் முன்னர், நீங்கள் தீர்வு காண்கிறீர்களா?
தீர்வு கண்ட பிறகு செய்தி அனுப்ப வேண்டுமா?

உணர்வு நெருப்பான தமிழர்களின் சார்பாக
உள்ளம் கொதிக்கும் உண்மைத் தமிழன்.

கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து

Joe said...

Arivazhagan from Bangalore is an ex-soldier?
Fabulous comment!

Great said...

ஆயுதம் கடத்துவதால் தான் சுடுகிறார்களாம்.
அப்படியானால் இவர்கள் சுடும் போதெல்லாம் சாவது அப்பாவி மீனவர்களாக இருப்பது ஏன்?

muthunagaron said...

//அடுத்தவன் வூட்டுகுள்ள பூந்தீங்கன்னா அடிக்கத்தான் செய்வான். அவன் எதுக்கு சாமி மன்னிப்பு கேட்கனும்?//

ஒரு வேளை 13/07/08ல் நடந்தது போல அவன் நம்முடைய இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீனவர்களைச் சுட்டுக்கொன்றால் என்ன செய்வதாம்? இது வரை ஒரு முறை கூட சிங்கள கடற்படை இந்திய எல்லைக்குள் புகுந்து நமது மீனவர்களைத் தாக்கவில்லை என்று சொல்கிறீர்களா? அதற்கும் ஏதாவது காரணம் வைத்திருக்கிறீர்களா?


//இலங்கை மீனவர் விடுவிக்கப்பட்டது போல இந்திய மீனவரும் சில சமயம் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.//

உங்கள் கருத்துப்படி மீனவர்களை கைது செய்து கொண்டு போய் சில நாட்கள் கழித்து விடுதலை செய்வதை இரண்டு அரசுமே செய்திருக்கின்றன. இது வரை ஒரு முறையாவது இந்திய கடற்படை எல்லை தாண்டி வந்த சிங்கள மீனவர் எவனையாவது சுட்டுக்கொன்றிருக்கிறதா? அவர்கள் மட்டும் தானே சுடுகிறார்கள். உங்களுடைய கருத்துப்படி அது புலிகளின் மீதுள்ள அச்சமா அல்லது இயல்பாகவே தமிழன் மீது கொண்டிருக்கும் வெறுப்பா?ஒரு வேளை புலிகள் என்று சந்தேகப்பட்டு சுட்டிருக்கலாம் என்றால் அதையும் நம்ப முடியாது. ஏனென்றால் படகு புலிகளினுடையது என்றால் முதல் தாக்குதல் அவர்கள் தான் தொடுப்பார்கள் சரனடைவதாக கையை உயர்த்தமாட்டார்கள் என்று இலங்கை கடற்படைக்குத் தெரியும். இவர்கள் ஈழத்தமிழர்கள் மீதுள்ள வெறுப்பை அப்பாவி இந்தியத் தமிழர்கள் மீது காண்பிக்கிறார்கள்.

muthunagaron said...

//இவ்வறிக்கையில் இலங்கை கடற்படை மட்டுமல்லாது அவ்வப்போது LTTEயும் தமிழக மீனவருடன் விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது.//

நீங்கள் குறிப்பிட்டுக்காட்டிய தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் ஒரு வேளை LTTE விளையாடியிருக்கலாம் என்ற வாதம் ஏற்கனவே எழுப்பப்பட்டது தான். இந்தியா இலங்கையின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக புலிகள் அப்படிச் செய்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டது.

ஆனால்...
தமிழக கடற்கரை புலிகளுக்கு பல வகையில் உதவி வருகிறது என்பது உண்மை. வடக்குக் கடற்கரை இன்னும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. புலிகளை முடக்க தமிழகக் கடற்கரையை முடக்க வேண்டும். அதற்கு ஒரு வழி இந்தியப் படையுடன் கூட்டு ரோந்து (Joint Patrol) செய்வது. அதற்கு இதுவரை இந்திய அரசு ஒத்துக்கொள்ளவில்லை.(ஏற்கனவே India fought Srilanka's war due to the ill-conceived Indo SL Pact. Now India doesnt want to fight SLNavy's war in Bay of Bengal under the banner of Joint Patrol). ஒத்துக்கொள்ள வைக்க ஒரே வழி, இந்திய கடற்கரையில் இந்திய (தமிழக) மீனவர்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவது தான். அதைத் தான் SL Navy செய்து வருகிறது. அவ்வாறு சுடப்படும் இந்திய மீனவர்கள் தமிழர்களாய் இருப்பது SLNக்கு ஒரு கூடுதல் போனஸ்.

muthunagaron said...

இந்தியா இலங்கையுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்காமல் இருப்பதற்கு வேறு காரணமும் உண்டு.

இந்திய மீனவர்களின் மீதான தாக்குதலுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ இலங்கையைப் பகைத்துக் கொண்டால் இலங்கைக்கு உதவி செய்யவும் கட்டிப்பிடித்து கொஞ்சிக் குலாவி உறவு கொண்டாடவும் வேண்டிய ஆயுதங்கள், தளவாடங்கள் தரவும் பாகிஸ்தானும் சீனாவும் காத்துக்கொண்டிருக்கின்றன. அந்தத் திமிரில் தான் நம்முடைய மீனவர்களை கடலில் கண்டவுடன் சுடுகிறார்கள்.

ரொம்பவும் போரடித்தால் இந்திய எல்லைக்குள் வந்தும் சுட்டு விட்டுப் போகிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இந்தியா ஒன்று அவர்களை முறைக்க வேண்டும் (பாகிஸ்தான், சீனாவுடன் கை கோர்க்கலாம்) அல்லது Joint Patrol-க்கு சம்மதிக்க வேண்டும். இரண்டுமே அவர்களுக்கு வெற்றி தான். நடுவில் போவது அப்பாவி தமிழ் மீனவர்களின் உயிர் தான்.

இதற்கு ஒரே வழி தான் உள்ளது. நம்முடைய இந்திய அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராகப் பின்பற்றிய அதே Salwa Judum வழிமுறை தான்.

என்ன... இந்திய கடற்படையும் Coast Guard-ம் தமிழ்நாடு போலீஸுக்கு கொஞ்சம் Back Up கொடுத்தால் போதும். அவ்வளவு தான்.

தினமணி said...

கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் கொல்லப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல்.

தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், பலமுறை இலங்கை ராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து நமது மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து சுட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களைத் தாக்கவோ, தடுக்கவோ, அவர்களது ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தவோ இந்திய கடல்பாதுகாப்புப் படையினர் ஒரு தடவைகூட முயற்சி எடுக்காதது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது 1974ஆம் ஆண்டு. அப்போது இன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி இருந்தது. திமுகவுக்கும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் அசுரப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று களமிறங்கியதுபோல கச்சத் தீவு பிரச்னையில் தமிழக உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்ததா என்றால் இல்லை.

‘‘இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்துவரும் மீன்பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது'' என்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், கச்சத் தீவில் இந்திய உரிமையைத் தாரை வார்த்துக் கொடுக்கிறோம் என்று அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பியவர் பின்னாளில் பிரதமரான அன்றைய ஜனசங்க உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது கேள்விக்குத் தரப்பட்ட பதில்தான் மேலே குறிப்பிட்டது.

1976ஆம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களால் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மேலே குறிப்பிட்ட உரிமையும் பறிக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கையிலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்திலும், இந்திய எல்லையிலிருந்து 12 கடல் மைல்கள் தூரத்திலும் இருக்கும் சிறிய தீவு. 2 மைல்களின் வித்தியாசத்தைக் காரணம் காட்டி இலங்கை அரசு அதற்கு உரிமை கோரியபோது, நமது ஆட்சியாளர்கள் அதைத் தாரை வார்த்துக் கொடுத்தது மிகப்பெரிய தவறு.

1989லும், 1996லும், 1999லும் மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற திமுக, கச்சத் தீவு பிரச்னையையும், தமிழக மீனவர்களின் உரிமையையும் தனது ஆதரவுக்கு விலையாகக் கேட்டிருக்குமேயானால், நிச்சயமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாவிட்டாலும், இந்திய அரசின் நிர்பந்தங்கள் இலங்கை அரசின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். என்னென்னவோ துறைகளைக் கேட்டுப் பெற்றவர்கள் வெளியுறவுத் துறையைக் கேட்டுப் பெற்று இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகோர ஏன் முனையவில்லை என்பது திமுக மட்டுமல்ல, மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு அளிக்க வேண்டிய தன்னிலை விளக்கம்.

இந்தப் பிரச்னையில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கச்சத் தீவை இந்தியா ஏன் நிரந்தரக் குத்தகைக்கு எடுக்கக்கூடாது என்று யோசனை தெரிவித்திருந்தார். இப்போது முதல்வர் கருணாநிதி, கச்சத் தீவில் நமது உரிமைகளை மீட்பதற்கான தருணம் வந்துவிட்டதாகக் கருதுவதாகவும், தமிழர் ஒருவரை இலங்கை தூதராக்க வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

எங்கள் கட்சிக்காரரை வெளிவிவகாரத் துறை அமைச்சராக்குங்கள் என்றோ, கச்சத் தீவில் நமது உரிமையை மீட்போம் என்றோ சொல்ல அவருக்கு ஏன் துணிவு வரவில்லை என்று புரியவில்லை. 1974-ல் கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போதோ, 1976-ல் இந்தியா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தபோதோ மத்திய அரசுடன் முதல்வருக்கும் திமுகவுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை. உண்மை. ஆனால், இப்போது இருக்கிறதே! மத்தியில் ஆளும் கூட்டணியில் சர்வ வல்லமை படைத்த தோழமைக் கட்சியாக திமுக இருக்கிறதே! பிறகும் ஏன் சர்வதேச உடன்பாடு என்று நழுவுகிறார்கள்?

திமுகவோ, அஇஅதிமுகவோ, பாமகவோ, மதிமுகவோ, எதுவாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடிக்கும் உரிமைக்கும் கச்சத் தீவின் மீது நமக்குள்ள உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டும்தான், எந்தவொரு மத்திய அரசுக்கும் ஆதரவளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று பேசுவதெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தான்

ராஜ நடராஜன் said...

//ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டீர்கள். ஆனால் பிரச்சனை உணர்ச்சி வசப்படாமல் லாஜிக்காக அனுகவும்//

ஜோ!பதிவின் தலைப்பு கோணலாக இருந்தாலும் இந்த மாதிரி பதிவுகள் வருவதை வரவேற்கிறேன்.காரணம் இந்தியாவின் கூடவே தமிழகத்தின் தலையீடு இல்லாமல் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வில்லை.அது எந்த விதத்தில் அமைந்தாலும்.பெரியண்ணன் நாளைக்கு மூக்கை நுழைக்க நினைத்தாலும் ஆலோசனைக்கு டெல்லிதான்.

கிஸ்ன டமார் கூறுவது எழுத்துக்கு சரிப்படும்.ஆனால் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது.வலிகள் தனக்கானது அல்ல என்ற சூழலில்தான் தர்க்கமும் லாஜிக்கும் பேசும்.ஒரு பிரச்சினை அது எதுவாக இருந்தாலும் முதலில் உணர்ச்சிதான் பேசும்.அப்புறம்தான் லாஜிக் எனும் நாட்டாமை வேலைகள்.ஆனால் இந்த தவறான நாட்டாமை தீர்ப்போ அல்லது முன்பு சகுனித்தனம் கொண்ட லாஜிக் தீர்ப்போ அப்போதைய வலிக்கான மருந்தாகப் பட்டதே ஒழிய தீர்வாகிட வில்லை.

இந்தியா இலங்கைக்குள் காலடி எடுத்த கால கட்டங்களில் எத்தனை பேருக்கு அதன் பின்புலம்,விசய ஞானம் இருந்தது.நமக்கெல்லாம் போனியமும் இல்லைன்னா அன்னக்கிளி உன்னைத்தேடுதே பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்கவும் பெண்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு சிகப்பா இருக்காரு பேசவே நேரம் சரியாக இருந்தது.

சம பங்கீடு இல்லாமல் சிறிய பொறியாக உருவாகி உணர்வுப்பிரவாகமாக தமிழனுக்கும்,தேசப்பிரச்சினையாக சிங்களனுக்கும் இத்தனை வருட கால கட்டங்களில் வளர்ந்துள்ள வரலாற்று மாற்றங்கள் எத்தனை?

கிஸ்ன டமார் சொல்வது போல் மீனவர்கள் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற கூற்றின் படியே எடுத்துக் கொண்டாலும் மொழியென்ற வித்து எப்படியும் தமிழக கடற்கரைவாழ் மக்களை அடுத்த கரையுடன் இணைக்கவே செய்யும்.அதுதான் இயற்கை.பூகோளமும் அதற்கு துணை செய்கிறது.அதற்காக ஒன்று மீனவர்களை கைது செய்யலாம்.அல்லது அவர்கள் திரும்ப தங்கள் கரையை அடைய சந்தர்ப்பம் கொடுக்கலாம்.இதில் புலிகளின் பங்கும் உண்டு என்பது உண்மையானால் அந்த மாதிரி போர் தந்திரங்கள் நீண்ட நாளுக்கு அவர்களுக்குஉதவாது.அடுத்த கரை அவர்களுக்கு பலமே என்பதால் இந்தக் கூற்று வீழ்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகளே நிறைய உள்ளன.இதனை கடற்கரை மீனவர்களும் ஊடகங்களுமே நடுநிலையோடு தெளிவுபடுத்த வேண்டும்.

ராஜிவின் அகோரம் நிகழாமல் இருந்திருந்தால் அரசியல் விளையாட்டுக்களின் காய் நகர்த்தல்கள் வேறு விதமாக மாறியிருக்கும்.எப்படியோ பன்நாட்டு அரசியல் சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுப்போன இலங்கைப் பிரச்சினை அதிகார சமபங்கீடு இல்லாமல் முடிவுக்கு வராது.இதனை இலங்கை அரசாங்கம் உணரவேண்டும்.விரும்பியோ விரும்பாமலோ புலிகள் இலங்கைத் தமிழர்களின் அடையாளம் உலகளாவிய நிலையில்.

Anonymous said...

கண்துடைப்புக்கு ஒரு உண்ணாவிரதம் . ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி !!!

Anonymous said...

சாமீ, உங்கள் பதிவை படித்தேன். தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? இல்லை தனிநாடாக உள்ளதா என்பது எனக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகம்.

சிவாஜி, தசாவதாரம் பார்த்தால் போதும். தமிழனுக்கு அதை விட்டால் வேறு கவலை ஏது?

சினிமாக்களுக்கு அடிவருடியாக ஒவ்வொரு தமிழனும் இருக்கும் வரை, அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இந்த உலகிலுள்ள 600 கோடி மக்களைப் பாதுகாக்க, சுனாமி வந்து இலட்சக்கணக்கான படங்களை கொன்று போட்டது என்று தசாவதாரம் படம் கதை விடுகிறது.

நாமும் அதைப் பார்த்து, கைதட்டி ரசிக்கிறோம். அந்த மேல்தட்டுக் காரர்களின் தந்திரங்களைப் புரியாமல், கைதட்டி, விசிலடித்து ரசிக்கிறோம். காசுகளை அள்ளிக் கொட்டுகிறோம்.

தமிழர்களான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால், அந்த நபர் மீது, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.

கொஞ்சநாள் கழித்து, சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் கூட, தடா, பொடா போன்ற சட்டங்கள் பாயுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இந்தியாவுடன் இணைந்திருக்கும் வரை,தமிழர்கள் என்றுமே அடிமட்டக் குடிமக்கள்தான். அதில் சந்தேகமே இல்லை.

ஜோ / Joe said...

ம. கோமன கிஸ்ன டமார் ,
ஆம் ..உனது பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை .மீனவர்களின் உயிர் மீது கிஞ்சித்தும் மதிப்பில்லாமல் ..போனான் ..செத்தான் ரீதியில் எழுதும் உன் போன்ற இரக்கமற்ற ஜென்மங்களின் இருமாப்பான அலட்சீய அறிவு ஜீவி அரிப்பெடுத்தலுக்கு என் வலைப்பதிவில் இடமில்லை .. கருத்துச் சுதந்திரமும் மண்ணாங்கட்டியும் ..வேறு இடம் பார்க்கவும் .

ம கோமன கிஸ்ன டமார் said...

ஏன்யா ஆனா வெண்று மாதிரி எதுக்கு முதலிரண்டு பின்னூட்டத்தை வெளியிட்டாய்? அதையும் மட்டுறுத்தி இருக்க வேண்டிய்துதானே. உமக்கு மீன்வர் மீது பாசம் என ஏன் சீன் காடுகிறாய்!மீனவர் பத்தி எழுதினால் வெளியிடுவதுஆனால் புலி பத்தி எனில் மட்டுருத்தல்!உமக்கு புலிகள் மீதுள்ள கிருஸ்துவப் பாசம் புரிகிறது.

ஜோ / Joe said...

//உமக்கு மீன்வர் மீது பாசம் என ஏன் சீன் காடுகிறாய்//

என்ன கொடுமை இது கோமண கிருஸ்ன டமார் .. என் மீது எனக்கு பாசம் இருப்பதே சீன் காட்டுவதா ?

Anonymous said...

//ம. கோமன கிஸ்ன டமார் said...
உண்மை உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை, ஐயா!
http://www.asiantribune.com/?q=node/12114
//

Joe,

ம. கோமன கிஸ்ன டமார் quotes Asian Tribune Newspaper. That itself shows where that guy comes from.

Asian Tribune`s Sri Lankan Editor K.T.Rajasingham has been already exposed for his connection with Sri Lankan government as well the Karuna group. All that being published in that newspaper are anti-Tamil rubbish. Check the following link for the details:

http://www.lankanewspapers.com/news/2008/3/25989_space.html

ம. கோமன கிஸ்ன டமார் may be another reincarnation of Cho Ramasamy / N. Ram / Subramaniasamy.

ஆட்காட்டி said...

இந்தியர்களுக்கு நாட்டுப் பற்று உண்டு. எப்ப, பாகிஷ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் போது மட்டும்.

இடைவெளிகள் said...

நறுக்கென்று கேள்வி கேட்டீர்கள் ஆனால் வெட்கம்,மானம், சூடு சொரணையற்ற அரசுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள் ஒருநாள் காது கிழிந்து கேட்கும் சூழ்நிலை வரலாம்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives