Tuesday, November 13, 2007
நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி
(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.
சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.
சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.
சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.
இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .
வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .
தமிழாக்கம் : முரளி ஸ்ரீனிவாஸ்
நன்றி : மலையாள மனோரமா
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
மேன் மக்கள்.
வாசிக்கும் போது இந்த விருந்தோம்பலையும், அதை ஏற்று இன்றளவும் நினைவில் வைத்திருக்கும் பண்பையும் உணர்ந்து மெய்சிலிர்த்தது.
மோகன்லால் குறிப்பிட்ட அந்த தடைப்பட்ட படப்பிடிப்பு "ஒரு யாத்ரா மொழி" முன்னர் இயக்கியவர் வேறொருவர். தடைப்பட்டு மீள ஆரம்பித்தபோது பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். படத்தை நானும் பார்த்திருந்தேன்.
super news, thanks boss
www.goldenenterprizes.com
முக்காலும் உண்மை!
Thagavalukku Nanri Prabha!
சகோதரர் ஜோ, முதல் முறையாக தங்கள் பதிவை படிக்கிறேன். தங்களின் முந்தைய பதிவுகளின் தலைப்புகள் படிக்க தூண்டியதால் ஒவ்வொன்றாக படித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.அத்தனையும் சுவை. அந்த குமரி மண்ணின் எழில் கொஞ்சும் படங்கள், ஆகா, அப்படியே கொஞ்ச நேரம் ஊர் நினைவில் நெஞ்சம் நிலைத்து விட்டது(நான் வெளி நாட்டில் இருக்கிறேன்). அதன் பின் மதங்களை பற்றி கருத்தாழமிக்க விவாதங்கள் கொண்ட பதிவுகள், அதில் நிறைந்து நின்ற சகோதரர்களின் கண்ணியம் நிறைந்த பின்னூட்டங்கள்(ஒரு சிலரை தவிர) என மனதிற்கு நிறைவான பதிவுகள். வாழ்த்துக்கள் பல.
ஜோ
படிக்கும் போதும், படித்து முடித்ததும் கண்களில் தங்கியிருந்தது நீர்த்திரை.
சிவாஜி என்ற பல்கலைக்கழகத்தில் நடிப்பைத் தவிரவும் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது மோகன்லாலின் விவரணைகள்.
தமிழனைப் பற்றி மலையாளியொருவர் சிலாகிப்பது பெருமிதத்தைத் தந்தது.
நன்றி.
ஜோ,
ரொம்ப நாளா ஆளை காணோம்?
வித்தியாசமான பேட்டி மற்றும் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!!
பதிவை படிக்கும் போது மெய்சிலிர்கிறது...பதிவுக்கு மிக்க நன்றி ஜோ ;)
நடிகர் திலகத்தின் நற்பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். அது அவருக்கே உரியது. பலரும் அதை அனுபவித்திருக்கிறார்கள்.
ஜோ,
நடிகர் திலகம் பற்றிய புதிய செய்திகள், மலையாள மைந்தன் நம் மண்ணின் மன்னனை பாராட்ட அதை கேட்க பெருமையாகத் தான் இருக்கிறது.
ஜோ,
கேட்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது !
நானும், உங்களைப் போல் மிகப்பெரிய சிவாஜி ரசிகன், இளம்பிராயத்திலிருந்தே :)
//நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும்.தானே தலை குனிந்து போகும் .
//
இது தான் நடிகர் திலகத்தின் தாக்கம் !!
பதிவின் சாரம் !
எ.அ.பாலா
ஜோ,
மேலே எ.அ.பாலா சொன்னதற்கு
"ரிப்பீட்டேய்".
என்ன இப்பல்லாம் ரொம்ப ஆணிபுடுங்கிறீங்களா?
துளசியக்கா ,பிரபா ,கோல்டன் ,நானானி ,அபு முஜாஹித் ,சுந்தர் ,தென்றல் ,கோபிநாத் ,சீனா ,கோவியார் ,பாலா ,வாத்தியார் தருமி அனைவருக்கும் நன்றி!
வாத்தியாரே! ஆமா ! கொஞ்சம் பெரிய ஆணியா போச்சு!
நண்பரே நல்லதொரு பதிவு. எனக்கு பிடித்த நடிகர் மோகன்லால். அவருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் விருந்தோம்பலை மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.
நன்றி.
நன்றி மஞ்சூர் ராசா
வெகு அருமையான நிகழ்ச்சி.
அழகாகப் பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
நல்ல செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி வல்லிசிம்ஹன் ,பாண்டியன்
Your blog mentioned in Dinamani kathir. தினமணிக் கதிரில் தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த அறிமுகம்
Congrats :)
வாழ்த்துக்கள் , ஜோ!
(நன்றி: பா. பாலா)
http://etamil.blogspot.com/2007/11/blog-post_17.html
பாஸ்டன் பாலா ,தென்றல் ..தகவலுக்கு மிக்கநன்றி!
தினமணி-க்கு நன்றி!
Happy New Year, Joe! And best wishes for a healthy and successful 2008
I stumbled on this Hub when I was looking for a particular NT movie info, which I did not get, But You can't imagine my excitement in discovering this Hub and the forum dedicated to Padhmashri Dr.Sivaji Ganeshan.
It was a proud (Goosebump) moment for me when I read a great actor like Mohanlal praising our NT.
Even though we all know his great qualities , to hear it from others again and again is like participating in the bajan of my favorite God.
It re-confirms my belief that hospitality is Tamizhar's great quality and strenth.
Thank you Joe, for the post and I am glad I found this forum.
nice to hear
நம் பண்பாடு பகன்ற ஜோவிற்கும், மோகன்லாலுக்கும் நன்றி! சிங்கத் தமிழன்
சிவாஜி அவர்கள் எங்கள் ஊருக்கும் பக்கம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
Post a Comment