Monday, January 15, 2007

வியட்நாமில் மதுரை வீரன் - 3

வியட்நாமின் வர்த்தக நகரான ஹோசிமின் சிட்டி -யில் பரவலாக காணப்படும் ,குறிப்பாக தமிழர்களால் கட்டப்பட்ட இந்துக் கோவில்களைப் பற்றி முன்னர் பாகம் -1 , பாகம் -2 -ல் குறிப்பிட்டிருந்தேன் .

இம்முறை அவ்விரு கோவில்களுக்கு மிக அருகிலேயே ,நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கே உரிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை காண முடிந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கோவில் திறந்திருந்தாலும் ,தேடித் தேடிப் பார்த்தும் யாரும் கோவிலுக்குள் இல்லை .ஆனால் தமிழில் அச்சிடப்பட்டுள்ள நாட்காட்டி, தொடர்ந்து யாரோ சில தமிழர்களே கோவிலை பராமரித்து வருவதைக் காட்டியது.

Photobucket - Video and Image Hosting

தமிழிலேயே ஒரு கல்வெட்டும் காணக்கிடைத்தது .அதன் படி பாதரக்குடி மகாஸ்ரீஸ்ரீ பாபுராஜா பி.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை- யின் குமாரன் கடம்பவன சுந்தரம் பிள்ளை 1928 - ல் உபயம் செய்தது என அறிய முடிகிறது .பாதரக்குடி என்பது ஊரின் பெயரா ? தமிழகத்தில் அவ்வூர் எங்குள்ளது ?

Photobucket - Video and Image Hosting

(கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களின் தரத்துக்கு பொறுத்தருளுக!)

15 comments:

கானா பிரபா said...

வணக்கம் ஜோ

அதிசயமாக இருக்கிறது, தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.

ஜோ/Joe said...

வாங்க! வணக்கம் கானா பிரபா!

எனக்கும் முதல்ல அதிசயமா தான் இருந்தது .ஆனா குறுகிய பரப்பளவிலேயே நான் நிறைய கோவில்களை பார்த்து விட்டேன் .நான் பார்த்தது எல்லாம் ஒரே மாவட்டத்தில் .இது போல நகரில் 8 மாவட்டங்கள் உள்ளது .அங்கெல்லாம் எத்தனை கோவில்கள் இருக்கிறதோ தெரியவில்லை.

Anonymous said...

Interesting Info.

இராம.கி said...

ஜோ,

செய்கோன் என்று சொன்னால், அது தண்டாயுத பாணி கோயிலாக இருந்தால், பிறகு அவற்றை நிறுவியது காரைக்குடிப் பக்கத்து ஆட்களாகத் தான் இருக்க வேண்டும். கோயிலின் ஒளிப்படங்களைப் பார்த்தால், பினாங், கோலாலம்பூர், சிங்கப்பூர் தண்டாயுதபாணிக் கோயில்கள் போலேயே தோற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு விற்கப் (கொண்டுவிற்றல் = trade) போன எல்லா இடங்களிலும் தண்டாயுத பாணி கோயிலும் (பழனியின் உருவம்), மாரியம்மன் கோயிலும் தான் ஏற்படுத்துவார்கள். வேறு கோயில்கள் இருப்பின் அவை அண்மைக் காலத்தவையாக இருக்கும்.

இந்த இரு வகைக் கோயில்களும் பண்டாரங்களே பூசை செய்யும் கோயில்களாகவே இருந்தன. They were not brahminized until recent times. நீங்கள் பார்த்த கோயிலிலும் பண்டாரம் (இப்பொழுது அவர் குடிவழி வியட்நாமியராய்க் கூட இருக்கலாம்.) தான் இருப்பார்.

இவ்வளவு ஆண்டுகள் கழித்தும், 100க்கு 99.9 தமிழர் வெளியேறிய பிறகும்,காப்பாற்றுகிறார்களே, ஊர்மக்களைக் பாராட்ட வேண்டும்.

நம் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோசு, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தொனேசியா ஆகியவற்றிற்கும் நூற்றாண்டுக் கணக்காய்ப் பேச்சு, பழக்க வழக்கம், வழிபாடு, பண்பாடு, வரலாறு எனத் தொடர்புகள் உண்டு. இந்த நாடுகளில் பல தலைமுறைகளாய் இருக்கும் தமிழர்களின் பேச்சும் மேலே சொன்ன தமிழ்நாட்டு வட்டாரங்களின் பேச்சாய்த் தான் இருக்கும்.

பாதரக்குடி என்பது காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக மதுரை போகும் சாலையில், கோவிலூருக்கு அடுத்த ஊர். பாதரக்குடிக்கு அடுத்தது குன்றக்குடி.

பாதரக்குடியில் உள்ள சிவமடத்தில் தான் நகரத்தார் ஆண்கள் சிவ தீக்கை வாங்கிக் கொள்ளுவார்கள். அந்த்ஜ ஊருக்கு அருகில் இருக்கும் துளாவூர் மடத்தில் தான் நகரத்தார் பெண்கள் சிவ தீக்கை வாங்கிக் கொள்ளுவார்கள்.

பால் பொங்கியாச்சா? பொங்கலோ, பொங்கல்

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

There is a restaurant in District 1 near the bank of Saigon river run by Kumbakonam Iyer. (The name of the restaurant may be Bama – can’t recall now – He cooks ‘good’ fish curry). He has lots of story to tell about the past and present presence of Tamils in Vietnam.

ஜோ/Joe said...

இராமகி ஐயா,
வருகைக்கும் ,விளக்கத்துக்கும் மிக்க நன்றி!

பொங்கலோ பொங்கல்!

ஜோ/Joe said...

//There is a restaurant in District 1 near the bank of Saigon river run by Kumbakonam Iyer. (The name of the restaurant may be Bama //

You are right .But the resturant name is 'Urvasi' .I just had lunch there .surprisingly I asked the same to him today,and he shared some info.

Anonymous said...

அங்கே இந்துக்கள் இருக்கிறார்களா?

Anonymous said...

மனுசங்க இருக்காங்க

Anonymous said...

பயன் தரும் விவரங்களடங்கிய பதிவு.
இராமகி அய்யாவின் விளக்கமான விவரங்களுக்கும் நன்றி.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜோ/Joe said...

கொட்டாங்கச்சி ,மஞ்சூர் ராஜா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அருண்மொழி said...

விரைவில் இப்படி ஒரு பதிவு வரும் :-)

மகர சங்கராந்தியை கிருத்துவ பண்டிகையாக மாற்ற முயற்சி செய்த ஒரு கிருத்துவர் வியட்னாமில் நம் முன்னோர் கட்டிய கோவில்களை சர்சுகளாக்க மாற்ற முயற்சி செய்து வருகின்றார்.

வெற்றி said...

ஜோ,
அடடா, நல்ல ஒரு பதிவு இந்த நிமிடம் வரை என் கண்ணில் படவில்லையே. ஜோ, பிரமாதம்.
நன்றி.

sarvy said...

pathridikudi is small village near karikudi in tamilnadu - india

Anonymous said...

Thanks for sharing your thoughts. Awesome!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives