Thursday, February 23, 2006

சங்கிலி பதிவு -ஜோசப் சார் அழைப்பில்

ஜோசப் சார் நம்மளையும் ஞாபகம் வச்சு இழுத்து விட்டுட்டாரு..அவர் சொன்னா மறுக்கமுடியுமா?

பிடித்த நான்கு விடயங்கள்

1.அரசியல்,வரலாறு புத்தகங்கள் படிப்பது
-நூலகத்துக்குப் போனால் முதலில் தேடுவது இந்த புத்தகங்களைத் தான்.'அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டார்' போல அதர பழசில்லாமல் ,இந்த நூற்றாண்டு அரசியல் ,சமூகம் பற்றிய புத்தகங்கள் படிக்க மிகவும் விருப்பம்

2.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்
-எம்.ஜி.ஆர் ரசிகனில்லை என்றாலும் ,அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மீது எப்போதும் ஒரு மயக்கம்.

3.சமையல் செய்வது
-குண்டக்க மண்டக்க-னு எதயாவது ஒரு காம்பினேஷன்ல சமையல் செய்து பார்ப்பது .ஓரு தடவை இப்படி நண்பரோடு சேர்ந்து சிக்கன் வகையறா ஒன்று சமைக்க ,அது அதிகமாக வெந்து சிதறி விட்டது .அதற்கு 'சிக்கன் சிதறல்' -ன்னு புதுப் பேர் கொடுத்து சாப்பிட்டோம் .ரொம்ப நல்லாயிருக்க ,இன்னொரு தடவ பண்ணலாம்னா வரமாட்டேங்குது.

4.குழந்தையோடு விளையாடுவது
- சமீபத்தில் வாய்த்திருக்கிற சந்தோஷம்.

பிடித்த நான்கு திரைப்படத் துறையினர்

1.நடிகர் திலகம்
ஆயிரம் பேர் 'ஓவர் ஆக்டிங்'-ன்னு என்ன தான் வாரினாலும் ,அசைக்க முடியாத என் அபிமானம் அந்த ஈடில்லா கலைஞன்மீது.கிட்டத்தட்ட கிறுக்கு பிடித்த அபிமானம்.

2.இசைஞானி இளையராஜா
மெல்லிசை மன்னருக்கு ரசிகனாகி பின்னர் இசைஞானி இசைக்கு ரசிகனானேன்
3.கமல் ஹாசன்
நடிகர் திலகத்தின் வாரிசு .மனம் கவர்ந்த கலைஞன்!
4.எம்.ஆர்.ராதா
இவரைப்போல இவர் மட்டும் தான் .தனித்தன்மை மிக்க கலைஞன் .லொள்ளுக்கு மன்னன்!

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் 4

1.ரத்தக்கண்ணீர்
2.குருதிப்புனல்
3.தில்லானா மோகனாம்பாள்
4.சலங்கை ஒலி

வசித்த நான்கு இடங்கள்
1.பள்ளம்,குமரி மாவட்டம்
-பிறந்து வளர்ந்த இடம்
2.திருச்சி
-கல்லூரிப்படிப்பு
3.சென்னை-6 வருடங்கள்
4.சிங்கப்பூர் -6 வருடங்கள்

பிடித்த 4 உணவு வகைகள்

1.வெறும் குழம்பு - தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து அம்மா செய்யும் மிக சுலபமான குழம்பு .ஒப்புக்கு செய்யும் இந்த குழம்பு எனக்கு அந்த அளவுக்கு ஏன் பிடிக்கிறது என்று அம்மாவுக்கு ஆச்சரியம் .ஆனால் எனக்காக எப்போதும் செய்வார்கள் ,சும்மா சூப்பர் ஸ்டார் வேகத்துல.

2.வாளை மீன் குழம்பு - எல்லா மீன்களும் பிடிக்குமென்றாலும் ,இது கொஞ்சம் அதிகமாக..

3.கணவாய் பொரித்தது

4.ஆப்பம் - கோழி குருமா பண்டிகை நாட்களில் கண்டிப்பாக உண்டு.

Tag செய்ய விரும்பும் வலைப்பதிவர்கள்

1.குழலி
2.தருமி
3.முத்துக்குமரன்
4.சிங்.செயக்குமார்

17 comments:

முத்துகுமரன் said...

நன்றி ஜோ.

இது நான் எதிர்பார்த்த ஒன்றே:-).

கூட்டணியில் எனக்கு இடமளித்து கவுரவமளித்தற்கு நன்றி. கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபடுவேன்:-))

தாணு said...

ஜோ
இது என்ன சங்கிலிப் பதிவுன்னு தெரியலை. உங்களுடையதுதான் முதலில் பார்க்கிறேன். இதிலிருந்து பின்னோக்கி செல்கிறேன்.
அந்த அரைச்சு விட்ட குழம்பு பேரு வெள்ளைக்குழம்பு எங்க வீட்லே, அதே கதைதான் இங்கேயும்

டிபிஆர்.ஜோசப் said...

ஜோ நீங்க சரியான கடல்புறத்தாங்கறது உங்க சாப்பாடு லிஸ்ட்ட பார்த்தாலே தெரியுது..

எனக்கும் சுறா புட்டுன்னா ரொம்ப புடிக்கும்..

பத்து பதினைஞ்சி வருஷமா தனியாவே பொங்கி சாப்டதால பிரியாணி உள்பட எல்லாம் அத்துப்படி.. ஆனா என்ன செஞ்சி முடிச்சதும் தனியா உக்காந்து சாப்டறது இருக்கே.. பெஞ்சாதி பிள்ளைங்கள நினைச்சிக்கிட்டு சாப்டவே பிடிக்காது..

போன 18 மாசமா சந்தோஷமா இருக்கேன்.. டச் வுட்.. மாத்திராம இருக்கணும்..

Unknown said...

எங்கூரைப் பத்தியும்., அந்த புகழ் பெற்ற கல்லூரி பற்றியும் எழுதுங்க ஜோ.

ஜோ/Joe said...

நன்றி முத்துக்குமரன்!

தாணு,வருகைக்கு நன்றி..திருநெல்வேலில 'வெள்ளைக்குளம்பா'? நம்மூருல 'வெறும் குழம்பு' .ஆனா அம்மா வச்சா தான் விசேஷம் .அதே பார்முலால நானும் ,மனைவியும் பண்ணிப்பார்த்தோம் .அந்த அளவு இல்ல .அம்மா கையில எதோ இருக்கு.

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
சுறாபுட்டு நமக்கும் ரொம்ப பிடிக்கும் .4 மட்டும்-ன்னு சொல்லாம வரிசைப்படுத்துனா பக்கம் தாங்காது.

ஜோ/Joe said...

அப்படிப்போடு,
ஷெப்பர்ட் புரோக்ராம் , பச்சை விளக்கு இந்த 2 பதிவுலையும் கொஞ்சம் சொல்லியிருக்கேன் .விரிவாக எழுத முயற்சிப்பேன்.

தருமி said...

இப்படி சங்கிலியில் கட்டிப் போட்டுட்டீங்களே..ஆமா, ஏதாவது நாலு விஷயமா, இல்லே எல்லோரும் ஒரே நாலு விஷயமான்னே தெரியலை.

ஜோ/Joe said...

//இப்படி சங்கிலியில் கட்டிப் போட்டுட்டீங்களே..//
ஓ!திடீர்ன்னு தருமியை மனோகரா ஆக்கிட்டோமோ? பொறுத்தது போதும்!பொங்கி எழுங்கள்!

//ஆமா, ஏதாவது நாலு விஷயமா, இல்லே எல்லோரும் ஒரே நாலு விஷயமான்னே தெரியலை.//
எனக்கும் இதே சந்தேகம் தான் .அப்புறம் அதுல பாதி இதுல பாதி போட்டு சமாளிச்சேன்.

குழலி / Kuzhali said...

யெய்யா ஜோ, மாட்டிவிட்டுட்டிங்களே.... அனேகமாக உங்களுக்கு டின்னு இருக்கும்னு நினைக்கின்றேன்.

நன்றி

சிங். செயகுமார். said...

நினைவில் வைத்து
சங்கிலியால்
சிங்காரகுமரனை
சங்கத்திற்கு பலம் சேர்க்க
சந்தர்ப்பம் தந்த
உ.சு.வா வுக்கு நன்றிகள்!

G.Ragavan said...

ஜோ எனக்கும் சிவாஜி படிக்கும். மெல்லிசை மன்னர் தொடங்கி இசைஞானியையும் இசைப்புயலையும் ரசிப்பேன்.

மீன் எனக்கும் பிடிச்ச உணவு. தூத்துக்குடீல பொறந்து வளந்தாலயோ என்னவோ...கருவாடும் ரொம்பப் பிடிக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

ராகவன்,

உங்களையும் மாட்டி விட்டிருந்தேனே..

உங்க பதிவு என்னாச்சி?

ஜோவும் டோண்டுவும் போட்டாச்சி..

சோ.பையன் இன்னைக்கித்தான் கூடிய சீக்கிரம் போடறேன்னு மெய்ல் குடுத்தார்..

நீங்கதான் பாக்கி.. சீக்கிரம் போட்ருங்க..

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
ராகவன் பதுவு போட்டுட்டாரே!பாக்கல்லியா?

பழூர் கார்த்தி said...

ஜோ, உங்க பெயரை முதல்ல தமிழ்மணத்துல பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்

2 காரணங்கள்

1. என்னையும் என் நண்பர்கள்/நண்பிகள் சிலர், ஜோ என்றே கூப்பிடுவர். (என் இனிஷியல் : ஜோ)

2. சிறுவயதில், தினமலர் - சிறுவர்மலரில் ஜோ என்று முகம் மாற்றும் கதாபாத்திரம் வரும், அதற்காகவே படிப்பேன், எனக்கு பிடித்த பெயர்.

பின் உங்கள் செப்பர்டு பதிவை படித்ததும் இன்னும் ஆச்சரியம், பிரியம் கூடியது உங்களின் மேல்
காரணம், நீங்களும் நமது கல்லூரியில் படித்ததுதான்..

வாழ்த்துகள்.. நன்றாக எழுதிவருகிறீர்கள்.. தொடருங்கள்..

*****

அப்புறம் உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் பிடித்தது

எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்
கமல்ஹாசன்
குருதிப்புனல்..

குமரன் (Kumaran) said...

அன்பு நண்பரே.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives