Sunday, March 05, 2006

கலைஞர் தடுமாறுகிறார்

கடந்த 35 ஆண்டுகளாக கலைஞர் தமிழக அரசியலின் மையப்புள்ளி .வெற்றியும் தோல்வியும் அவரில்லாமல் இல்லை .'அரசியல் ராஜதந்திரி' என வர்ணிக்கப்பட்டிருக்கிறவர் .மோதுகின்ற இரு தலைகளில் எதிர் புறம் நிற்கிற போட்டியாளர் மாறியிருக்கிறாரே தவிர கலைஞர் எப்போதும் இரண்டில் ஒன்றாக நிலையாக இருந்திருக்கிறார்(காமராஜரிலிருந்து ஜெயலலிதா வரை) .ஆயிரம் விமரிசனங்கள் ,கோப தாபங்கள் ,எரிச்சல்கள் இருந்தாலும் ,அவருக்கு மனதில் நீங்கா இடத்தை கொடுத்திருக்கும் அனுதாபிகளில் நானும் ஒருவன் .ஆனால் இப்போது கலைஞரை 'ராஜதந்திரி' என்றழைப்பது கடினமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் .அரசியல் காய் நகர்த்தலில் கலைஞர் எதார்த்தத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன் .கலைஞருக்கோ அல்லது திமுக-வுக்கோ விழும் ஓட்டுக்கள் எல்லாம் நேரடியாக திமுகவை ஆதரித்து விழும் ஓட்டுக்கள் அல்ல .ஜெயலலிதாவை வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக கலைஞருக்கு ஓட்டுப்போடும் ஒரு பெரும் கூட்டம் உண்டு.ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை .ஆனால் மற்ற கட்சிகள் மட்டும் அப்படி நினைக்க வேண்டும் என நினைக்கிறார்.

மதிமுக என்ற இயக்கம் திமுக-வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி .ஆனாலும் வைகோ பெரும்பாலும் திமுக-விடம் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்.அதற்காக தனித்தன்மையை இழந்திருக்கிறார் .12 ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் நுழைய முடியாத நிலை .கணிசமான வாக்குகளை கையில் வைத்திருந்தும் அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காத நிலை .பாமக போன்று சாதுர்யமாக கூட்டணி அமைத்து சட்டமன்ற பலத்தை பெருக்கிக்கொள்ள வைகோவுக்கு தெரியவில்லை .பலன் என்ன ,கூட்டணி மூலம் கிடைத்த சட்டமன்ற எண்ணிக்கையை வைத்து பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை .கலைஞர் போன்ற 'ராஜதந்திரி'(?) கூட அப்படி நம்புகிற நிலைமை . அதைப் போக்குவதற்கு ஒரே வழி சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைப் பிடித்து உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க வைப்பது .அதிமுக 35 சீட்டுகள் கொடுக்க முன்வந்தும் ,திமுக -வில் 25 கிடைத்தால் கூட தி.மு.க வோடு தங்கிவிட வைகோ தயாராயிருந்ததாகவே தெரிகிறது .(பாமக-வுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாடறியும்) .ஆனால் கலைஞர் நடந்து கொண்ட விதம் வெறும் வீம்பாகத்தான் எனக்குத் தெரிகிறது .ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விட ,மு.க ஸ்டாலினுக்குள்ள பிடியை விட்டுவிடக்கூடாது என்பதே அவருக்கு பிரதானமாக இருக்கிறது .பாதி தமிழகத்தில் மட்டும் செல்வாக்குள்ள பாமக அவரை மிரட்ட முடிகிறது .ஆனால் மதிமுக-வை அவர் மதிக்கக்கூட இல்லை ."22 தான் கொடுக்க முடியும் .இருந்தால் இரு. இல்லையென்றால் போ" என்ற தொனியில் பேசுகிறார் .கூட்டணி மாறுவதால் வைகோ இழக்கப்போவது கொஞ்சம் மரியாதையை ,பெறப்போவது அதிகம் MLA-க்களை .ஆனால் கலைஞர் இழக்கப் போவது மீண்டும் ஜெயலலிதாவிடம் ஆட்சியை.அது அவருக்கு பெரிதாக இல்லை போலும் .ஜெயலலிதாவும் வரக்கூடாது ,வைகோவும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாக இருக்கிறது அவர் போக்கு.இது தான் வேதனையான உண்மை.

நான் விரும்புகிறேனோ இல்லையோ,வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதற்கு சில காரணங்கள்.

1."மயிரைக் கட்டி மலையை இழுப்போம் .வந்தா மலை .போனா மயிரு" என்ற ஜெயலைதாவின் அணுகுமுறை ,கலைஞர் இறங்கு முகத்திலும் ஜெயலலிதா ஏறுமுகத்திலும் இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

2.நகர்புறங்கள் திமுக கோட்டை என்ற நெடுங்கால பாரம்பர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது .

3.இளைய தலைமூறை பொதுவாக திமுக-வை ஆதரிக்கும் வழக்கம் மாறிவிட்டது .சன் டீவி போன்ற திமுக ஆதரவு ஊடகங்கள் இதற்கு பெரும்பங்காற்றியிருக்கின்றன .திமுக அனுதாபிகளுக்கே எரிச்சல் வரும் போது மற்றவர்களுக்கு சொல்லத்தேவையில்லை.

4.அதிமுக வுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்கும் தாய்க்குலத்தின் ஆதரவு இப்போது உச்சத்துக்கு போயிருப்பதாக தெரிகிறது .கருத்துக் கணிப்புகள் ,வெளிப்படையாகத் தெரியும் எழுச்சி இவையெல்லாம் மீறி பல முறை அதிமுக ஆச்சரிய வெற்றி ஈட்டியதற்கு தாய்க்குலம் ஓட்டு தான் பிரதானம் .கிராமப் பகுதிகளில் பெண்கள் ஓட்டுப்போடுவதை திருவிழாவுக்கு செல்வது போல சீவி சிங்காரித்து பெருமிதத்தோடு நிறைவேற்றுகிறார்கள் .அரசியல் கட்சி சார்ந்த ஆண்கள் தங்களுக்குள்ள கூட்ட பலத்தை வைத்து கணக்கு போட்டுக்கொண்டிருக்க ,திருநெல்வேலி அல்வாவை கிண்டிக் கொடுப்பது இவர்கள் தான்.

5.ஜெயலலிதாவின் அராஜகங்கள் பலவற்றையும் பலரும் தலைமைக்குரிய பண்பாகவும் ,துணிவின் இலக்கணமாகவும் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

6.குறைகூறல்களை மீறி சுனாமி நிவாரணத்திலும் ,மற்ற சில விடயங்களிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் .எனவே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் ,அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றிவாய்ய்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன் .கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழகத்தில் கனவு மட்டுமே காணலாம் .வச்சா குடுமி ..அடிச்சா மொட்டை தான் .யார் கண்டது மதிமுக சட்டமன்றத்தில் இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய கட்சியாக நுழைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது.

89 comments:

Muthu said...

பிள்ளைப்பாசம் என்று வந்துவிட்ட பின்னால், அதற்காய் மற்ற முடிவுகளில் சரிக்கட்ட முடிவுசெய்தபின் "ராஜதந்திரி" என்ற பட்டத்தின் அர்த்தமே கேலிக்குரியதாகிவிடும்.

வைகோ இவ்வளவு நாள் பொறுத்துப்பார்த்துவிட்டார். வெறும் 3 தொகுதிகள்தானே, கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டிருந்திருக்கலாம். கலைஞருக்கு அடுத்தபடியாக திமுக தொண்டர்கள் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக நினைத்துக்கொண்டிருந்தவர் இப்படி எதிரணிக்குப் போனால் அவர்களின் நம்பிக்கை குறைந்துவிடாதா?. ஆனால் கலைஞரைப் பொருத்தவரை இது உள்ளூர சந்தோஷம்தான், ஸ்டாலினின் எதிர்காலம் பற்றிய நோக்கில். திமுக கூட்டணி வெற்றி பெறுமா என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். முந்தைய ஜெயலலிதா ஆட்சியைப் போலல்லாமல் இந்த ஆட்சி கொஞ்சம் பரவாயில்லை என்று மக்கள் நினைக்கவேறு ஆரம்பித்திருக்கிறார்கள்.

Anonymous said...

//வைகோ இவ்வளவு நாள் பொறுத்துப்பார்த்துவிட்டார். வெறும் 3 தொகுதிகள்தானே, கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டிருந்திருக்கலாம். //

இந்த முறை இருந்திருந்தால் தொடர்ந்தும் அப்படியே பல்லைக்கடித்துக்கொண்டிருக்க விட்டிருப்பார்கள்.
வை.கோ. எடுத்தது சரியான முடிவே. எப்பாடுபட்டாவது வை.கோவை வீழ்த்தவேண்டுமென்பதில்லாமல் தி.மு.க வுக்கு வேறென்ன திட்டம் இருக்கிறது?
கலைஞர் வை.கோவுக்குச் செய்ததைவிடவா ஜெயலலிதா கொடுமை செய்துவிட்டார்?

தமிழ் சசி said...

/*
பாமாக -வை விட சிறிய கட்சியாக அறியப்படுகிற மாயை
*/

ஒரு விஷயத்தை தமிழக அரசியலில் பலர் உணர்ந்துகொள்வதேயில்லை (தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் பிரச்சாரம் காரணமாக இருக்கலாம்).

தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

பாமக, மதிமுக இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியும் ஒரே அளவாக உள்ளவையே. மதிமுகவிற்கு பாமகவை விட சற்று அதிக ஓட்டுக்கள் உள்ளன என்று வைத்துக் கொண்டால் கூட மதிமுக கூட்டணிக்கு வெற்றி தேடி தரும் கட்சி அல்ல.

எப்படி ?

இரண்டு கட்சிக்கும் சுமாராக 15லட்சம் ஓட்டுக்கள் உள்ளன.

பாமகவின் ஓட்டுகள், "சில" மாவட்டங்களில் மட்டுமே பெறப்படும் ஓட்டுகள். அதாவது சுமாராக உள்ள 80-90லட்சம் வடமாவட்ட ஓட்டுகளில் பெறப்பட்டவை. 80-90லட்சம் ஓட்டுகளில் 15லட்சம்

ஆனால் மதிமுகவின் ஓட்டுகள் தமிழகமெங்கும் பெறப்பட்டவை. சுமார் 2.5கோடி வாக்குகளில் 15லட்சம்

ஒரே இடத்தில் Concentratedஆக இருக்கும் பாமகவின் ஓட்டுகள் வடமாவட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கின்றன.

ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் தமிழகமெங்கும் சிதறி இருப்பதால் சில தொகுதிகளில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக உள்ளன

"தமிழகமெங்கும் இருக்கும் கட்சியாக" ஆனால் 15லட்சம் ஓட்டுக்களைப் பெறும் கட்சியாக மதிமுக இருப்பது அதன் பலவீனம். ஆனால் சில மாவட்டங்களில் மட்டுமே இருப்பது தான் பாமகவின் பலம்

இது தான் கூட்டணியில் பாமகவுக்கு அதிக முக்கியத்துவத்தை பெற்று கொடுக்கிறது.

3வது பெரிய கட்சி : மதிமுகவா ? பாமகவா ? என்ற என்னுடைய இந்தப் பதிவை பாருங்கள்
http://thamizhsasi.blogspot.com/2006/03/3.html

ஜோ / Joe said...

தமிழ்சசி,
உங்கள் வாதத்தை என்னால் ஏற்கமுடியவில்லை.உங்கள் அதே பதிவில் கோபாலன் ராமசுப்பு சொன்னது
//Since I come from Coimbatore dist I don't have much knowledge about PMK.As Sasi mentioned PMK has strong hold in 6 or 7 district in North Tamilnadu.All the time PMK want to contest seats among only those district.So they occupy most of their strong hold(say 70%) for them self.Though it's a 3 rd largest party ,what's the point of having PMK in alliance when they have very less to offer to their alliance partners? //

கிட்டத்தட்ட இது தான் என் கருத்தும்.விளக்கமாக பின்னர் எழுதுகிறேன் .ஆனால் உங்கள் வாதப்படியே வைத்தாலும் இந்த தேர்தலில் தமிழகம் முழுக்க அதிமுக வின் குறைந்த வாக்கு வித்தியாச வெற்றிகள் மதிமுக மூலம் நிகழ வாய்ப்பு அதிகம் .5000 ஓட்டுக்களானாலும் ,ஒரு அணியிலிருந்து மற்ற அணிக்கு செல்வது 10000 ஓட்டுக்கு சமம்.அது போக ,தி.மு.க வட மாவட்டங்களில் செல்வாக்காகவும் ,தென் மாவட்டங்களில் பின் தங்கி இருப்பதாகவும் சொல்லப்படும் போது ,மதிமுக-வை கழட்டி விடுவது தி.மு.கவுக்கு நிச்சயம் சரிவு தான்.

தமிழ் சசி said...

ஜோ,

மதிமுக விலகுவது திமுகவிற்கு பின்னடைவு தான் என்பதும், தென்மாவட்டங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

அதே சமயத்தில் பாமகவுடனான கூட்டு வடமாவட்ட தொகுதிகளை திமுக கூட்டணிக்கு உறுதிப்படுத்துகிறது என்றே நான் நினைக்கிறேன்.

-----
-----

என்னுடைய பதிவில், உங்களுடைய பின்னுட்டத்திற்கான பதிலையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாகவே இருக்கும் என்பதால் கீழே இருக்கும் மற்ற கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்
---
---

நான் இங்கு கூறியது வாக்கு வங்கிகள், சில கணக்குகளை குறித்தான அலசல்.

அவ்வாறு பார்க்கும் பொழுது பாமகவின் ஓட்டுக்கள் சில தொகுதிகளில் Concentratedஆக இருப்பதால் தான் அது மதிமுகவை விட பலம் பொருந்திய கட்சியாக தெரிகிறது.

ஆனால் மதிமுகவின் ஓட்டு தமிழகமெங்கும் Fragmented ஆக உள்ளது. அது தான் அதனுடைய பலவீனம்

இதற்கு விரிவான ஆதரங்களையும் என்னால் கொடுக்க முடியும்

/*
பாமக-வுக்கு அப்படி செய்யும் தைரியம் உண்டா?
*/


பாமகவின் நிலைப்பாடு குறித்தோ, அதன் தைரியம் குறித்தோ வாதாட நான் பாமக தொண்டன் அல்ல.

என்னுடைய பார்வையில் பாமகவின் பலம் குறித்து அலசி இருக்கிறேன். அவ்வளவே.

ஜோ / Joe said...

//ஆனால் மதிமுகவின் ஓட்டு தமிழகமெங்கும் Fragmented ஆக உள்ளது. அது தான் அதனுடைய பலவீனம்//

நான் அதைத்தான் பலமாகவும் ,கூட்டணிக்கட்சியாய் இருப்பதற்கான தகுதியாகவும் நினைக்கிறேன்.

ராம்கி said...

ஜோ மற்றும் தமிழ்சசி பரிசீலனைக்கு:

பாட்டாளி மக்கள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தனிப்பெரும் செல்வாக்கு இருக்கும் நிலையிலும் கூட 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்கள் வெற்றி பெற்றது வட மாவட்டங்களில் தான். அதற்கு உதவியது விடுதலைச் சிறுத்தைகள் தான். பாமக எதிர் முகாமில்தான் இருந்தது.

இந்த உண்மை அரசியல் தலைமைகளுக்குத் தெரியும் நிலையில்தான் பாமக, அ இ அ தி மு க ஆகிய கட்சிகள் திருமாவை இழக்க விரும்பவில்லை.

ராம்கி said...

பாமகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதி உள்ள தொகுதிகளில் பிற கட்சிகளுக்கும் கொடுத்துவிட்டு மீதி என்ன பிரதான கட்சிக்குக் கிடைக்கும் என்ற வாதத்திலும் பொருள் இருப்பதாகக் கருதுகிறேன்.

தமிழ் சசி said...

தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்பதும், தமிழகமெங்கும் ஒரு கட்சிக்கு அமைப்பு ரீதியாக பலம் இருக்கிறது என்பதை மட்டும் கொண்டு அந்தக் கட்சி பலமான கட்சி என்று முடிவு செய்து விட முடியாது. தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்று பார்த்தால் பல தேசிய கட்சிகள் தமிழகமெங்கும் உள்ளன. காங்கிரஸ், பாஜக, கம்யுனிஸ்ட்கள் போன்றவையும் தமிழகமெங்கும் உள்ள கட்சி தான்.

மதிமுக பலவீனமான கட்சி என்றும் நான் சொல்ல வில்லை. பாமகவுடன் ஒப்பிடும் பொழுது மதிமுக பலம் குறைந்த கட்சி என்பது தான் எனது வாதம்.

மதிமுகவின் ஓட்டுக்களை நீங்கள் தொகுதிவாரியாக அலசினால் பல தொகுதிகளில் 1000க்கும் குறைவான ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 2000, 5000, வெகு சில தொகுதிகளில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதாவது தமிழகமெங்கும் போட்டியிட்டு 15லட்சம் ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் பாமக பலமாக இருக்கும் பல தொகுதிகளில் 15,000 ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 30,000 ஓட்டுக்கள் சில தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பொழுது பெற்ற இரண்டாமிடம், 4 தொகுதிகளில் "ஜெ எதிர்ப்பு அலையின்" பொழுதும் கூட பெற்ற வெற்றி இதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மிக சொற்பமான தொகுதிகளில் (50-70 இருக்கும்) அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் 15லட்சம்.

ஒரு தொகுதியின் சராசரி வாக்குகளை நீங்கள் கணக்கிட்டால்
15லட்சம்/70 = சுமாராக 20ஆயிரம் ஓட்டுக்கள் வருகிறது.

மாறாக மதிமுக 15லட்சம்/200 = சுமாராக 7500 மட்டுமே

பாமக 50தொகுதிகளில் பலமாக இருக்கிறது என்று கணக்கிட்டால் கூட பாமகவிற்கு வழங்கப்படும் 25 தொகுதிகள் போக மீதம் உள்ள 25தொகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்கின்றனர்.

இதனால் தான் திமுக பாமகவை தன்னுடைய முக்கியமான கூட்டாளியாக கருதுகிறது.

G.Ragavan said...

மதிமுக வளரக்கூடாது என்பதில் ஜெயலலிதாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ...அவ்வளவு அக்கறை கருணாநிதிக்கும் உண்டு. அது அவரது குடும்பத்தின் வருங்கால வளர்ச்சியைக் கண்டிப்பாக பாதிக்கும். எனக்கு ஏனோ தசரதனின் நினைவு வருகிறது.

மதிமுக பாமக ஒப்பீடும் தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு விதமான கட்சிகள். பாமக என்பது வட மாவட்டங்களை விட்டு மற்ற இடங்களில் வளர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம் அதன் வலுவான சாதிப் பின்னணி. அதுதான் வடமாவட்டங்களில் அதற்குச் செல்வாக்கைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மதிமுக கொஞ்சம் பரவலான கட்சி. அதன் பலம் கொஞ்சம் கூடினாலும் அதன் பலன் எல்லா இடங்களிலும் தெரியும். அதுபோல கொஞ்சம் சரிந்தாலும் எல்லா இடங்களிலும் சரியாகத் தெரியும். ஆகையால் ஒரு அரசியல் கட்சியாக அது எந்த ஒரு பக்கமும் மட்டும் (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இனம்) என்று சாராத கட்சியாக இருக்கிறது. நல்ல கட்சிகளுக்கு இருக்க வேண்டிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. (இது ஒன்று மட்டுமே அடையாளம் இல்லை.) இது போன்ற பரவல்தன்மை இருப்பதால்தான் திமுகவும் அதிமுகவும்...ஏன் காங்கிரசும் கூட மறுக்க முடியாத சக்திகளாக விளங்குகின்றன.

இந்த முறை ஓரளவு நல்ல எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் மதிமுக கிடைப்பார்களானால் அது நிச்சயம் மதிமுகவை வளர்க்க உதவும். கண்டிப்பாக ஜெயலலிதா வைகோ கூட்டணி தேர்தலுக்குப் பிறகு தொடரப் போவதில்லை. ஏனென்றால் கூட்டணிக்கட்சிகளை ஜெயலலிதா நடத்திய விதங்களை உலகம் அறியும். ஆகையால் தேர்தலுக்குப் பிறகு கைவசம் ஓரளவு எம்.எல்.ஏக்கள் இருக்கும் பொழுது ஜெயலலிதாவுடனான கூட்டணி முறிவு மதிமுகவிற்கு நல்லதே செய்யும்.

ஆனால் இவை அனைத்திற்கும் இந்தத் தேர்தல் களம் நிச்சயம் முடிவு செய்யும். மே 11 வரை காத்திருக்க வேண்டியதுதான்.

நான் இப்பொழுது எதிர் நோக்கிக் கொண்டிருப்பது....வைகோ தேர்தலில் போட்டியிடுவாரா என்றுதான்....அப்படிப் போட்டியிட்டால்....அது விளாத்திகுளம் அல்லது கோயில்பட்டியாக இருக்கவே வாய்ப்பு நிறைய. சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் உள்ள தொடர்பு நாடறியும். ஜெயலலிதாவின் செல்லத் தொகுதிகளைச் சொல்ல வேண்டியதில்லை. இராமதாசின் மகளும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. எங்கென்று தெரியவில்லை.

G.Ragavan said...

// பாமக 50தொகுதிகளில் பலமாக இருக்கிறது என்று கணக்கிட்டால் கூட பாமகவிற்கு வழங்கப்படும் 25 தொகுதிகள் போக மீதம் உள்ள 25தொகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்கின்றனர்.

இதனால் தான் திமுக பாமகவை தன்னுடைய முக்கியமான கூட்டாளியாக கருதுகிறது. //

அப்படியென்றால் கருணாநிதி அமைத்திருக்கும் கூட்டணியும் சந்தர்ப்பவாதக் கூட்டணிதானா!

தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி கிடைத்தால்தான் அது ஸ்டாலினுக்கும் தொடரும் என்பது அவரின் எண்ணமாக இருக்கலாம். ஆகையால்தான் மத்தியில் பங்கு பிரித்த பொழுது இனித்தது மாநிலத்தில் கசக்கிறது.

ஜோ / Joe said...

//மதிமுகவின் ஓட்டுக்களை நீங்கள் தொகுதிவாரியாக அலசினால் பல தொகுதிகளில் 1000க்கும் குறைவான ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 2000, 5000, வெகு சில தொகுதிகளில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதாவது தமிழகமெங்கும் போட்டியிட்டு 15லட்சம் ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள்.//
பா.ம.க வுக்கு 100 ஓட்டு கூட இல்லாத தொகுதிகள் 50-க்கு மேலும் 100-500 -க்குள் இன்னொரு 50-ம் இருக்குமென நான் நினைக்கிறேன்.

//பாமக 50தொகுதிகளில் பலமாக இருக்கிறது என்று கணக்கிட்டால் கூட பாமகவிற்கு வழங்கப்படும் 25 தொகுதிகள் போக மீதம் உள்ள 25தொகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்கின்றனர்.//
இது கூட்டணிகளுக்குள் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதை பொறுத்தது .ப.ம.க எந்த சந்தர்ப்பத்திலும் 25 தொகுதிக்கு மேல் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு பங்களிக்க முடியாது .ஆனால் வெற்றி வித்தியாசம் குறைந்த தேர்தல்களில் மதிமுக 100 தொகுதிகளில் கூட வெற்றிக்கு பங்களிக்க முடியும்.

கூட்டணி என்று வரும் போது ஒரு சில இடங்களில் உள்ள அபரிமிதமான செல்வாக்கை விட குறைவான அளவிலாயினும் பரவலான செல்வாக்கே மற்ற கட்சிகளுக்கு கைகொடுக்கும் என்பது என் கருத்து.

இதற்கு மேல்,பாமக பகுதியில் பாமக கூட்டணி மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.மதிமுக தனித்து 20000-க்கு மேல் பெற்ற தொகுதிகளும் இருக்கின்றன.எங்கள் மாவட்டத்தில் குளச்சல் தொகுதியில் சென்ற தேர்தலில் தி.மு.கவை 3-ம் இடத்துக்கு தள்ளி மதிமுக இரண்டாம் இடம் பிடித்தது .இது ஒரு உதாரணம் தான்.

முகமூடி said...

// இராமதாசின் மகளும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. எங்கென்று தெரியவில்லை //

பூம்புகாராக இருக்கலாம். ரொம்ப காலமாகவே பாமக மகளிர் அணி அங்கே ஏதாவது ஒரு பெயரில் விழா எடுத்து தம் இருப்பை பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

Anonymous said...

நல்ல அலசல்.கலைஞர் இந்த தேர்தலில் தலைவலிக்கு பயந்து திருகுவலியை வாங்கியிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

//கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை //

மாறாக வைகோவை எக்காரணம் கொண்டும் வளர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள்தான் இருப்பதாக தெரிகிறது.

sivagnanamji(#16342789) said...

vaiko escaped from being criticised as a digger of his own grave.he saved his face by getting atleast 35 seats. we know how he was humiliated.can he command respect even if he had continued in
UPF?

தமிழ் சசி said...

ஜோ,

sivagnanamji அவர்கள் என்னுடைய பதிவில் கூறியிருக்கும் கருத்து என்னுடைய கருத்தை மிக எளிமையாக தெளிவுபடுத்துவதாக இருக்கிறது

in deciding results what is important is concentrated votes and not fragmented votes
a fragmented party may at best erode the winning chances of other parties but cannot get a seat
we dont have proporitional representation in legislature--only the number of seats secured is considered

/*
மதிமுக தனித்து 20000-க்கு மேல் பெற்ற தொகுதிகளும் இருக்கின்றன
*/

4 தொகுதியில் பாமக வெற்றியே பெற்றிருக்கிறது. 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 30,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறது.

ஆனால் மதிமுகவிடம் இது போன்ற புள்ளிவிபரங்களை காணமுடியவில்லையே ?

மதிமுக வளர்ச்சியடையும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் பாமகவிற்கு அது இல்லை.

ஏவி சுரேஷ் said...

எப்படி பார்த்தாலும் வைகோவின் நிலை Lose-Lose என்ற பரிதாப நிலையாகி விட்டது.

(1) திமுகவுடன் இருந்தால் கட்சியில் அதிருப்தி; கூட்டணியில் மதிப்பின்மை.

(2) அதிமுகவுடன் இணைந்தால் பொது மக்களிடையே மதிப்பிழப்பு.

(3) தனியே நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது.

(1)ம் (3)ம் நிரந்தரமாக அவரைப் பாதித்திருக்காது. (2) அவரை நிரந்தரமாக பாதித்து விடும் ... அவரும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியே என்ற களங்கத்தை மக்களிடையே உறுதிப்படுத்தி. எனவே குறுகிய காலத்தில் வைகோவின் பிரிவு கருணாநிதிக்கு நட்டம் என்றாலும், நீண்ட கால நோக்கில் இலாபமே.

Koothu said...

Joe,
I totally disagree. Here are my thoughts on this, which happen to be diametrically opposite to yours. Let's see what happens in May.

ஜோ / Joe said...

சசி,
//4 தொகுதியில் பாமக வெற்றியே பெற்றிருக்கிறது. 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 30,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறது.//
இதை நான் ஒத்துக்கொள்கிறேன் (இப்போது அதே தொகுதிகளில் தனித்து வெற்றிபெறும் நிலையில் இல்லையென்றாலும்)

//ஆனால் மதிமுகவிடம் இது போன்ற புள்ளிவிபரங்களை காணமுடியவில்லையே ?//
அப்படிப்பார்த்தால் திருநாவுக்கரசர்,தாமரைக்கனி,வெங்கடாச்ச்லம்,அப்பாபு இவர்கள் மதிமுகவை விட செல்வாக்கானவர்கள் என்று அர்த்தமா?

தமிழ் சசி said...

/*
அப்படிப்பார்த்தால் திருநாவுக்கரசர்,தாமரைக்கனி,வெங்கடாச்ச்லம்,அப்பாபு இவர்கள் மதிமுகவை விட செல்வாக்கானவர்கள் என்று அர்த்தமா?

*/

இவர்கள் 50 தொகுதிகள் செல்வாக்கு பெற்றிருந்தார்களா ?

இதற்கு மேல் என்னால் விவாதம் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

நன்றி

ஜோ / Joe said...

//இதற்கு மேல் என்னால் விவாதம் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

நன்றி//
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் .விதண்டாவாதத்துக்காக அப்படி சொல்லவில்லை .பா.ம.க சில பகுதிகளில் அபரிமிதமான செல்வாக்கு பெற்றிருப்பது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறேன் ..உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ,ஒரு குறிப்பிட்ட இடத்தில் அபரிமிதமான செல்வாக்கும் ,பெரும்பான்மையான இடத்தில் சுத்தமாக செல்வாக்கும் இருக்கும் கட்சியை விட ,குறைந்த அளவேயாயினும் பரவலாக அனைத்து இடங்களிலும் செல்வாக்கு பெற்ற கட்சியே கூட்டணிக்கு உகந்தது என்பது என் கருத்து .நீங்கள் எதிர் மாறாக கருத்து வைத்திருக்கிறீர்கள் .அதில் ஒன்றும் தவறு இல்லை .

ஜோ / Joe said...

தமிழ் சசி,
உங்கள் அருமையான கருத்துப்பரிமற்றத்துக்கு நன்றி .வேறுபட்ட கோணங்களை என்னால் உணர முடிந்தது,முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும்.

தமிழ் சசி said...

ஒரு கருத்தை மறுத்து மாற்று கருத்தை முன்வைக்கும் பொழுது தான் விவாதமே தொடங்கும்.

மாற்றுக் கருத்துக்கள் தான் வலைப்பதிவை சுவாரசியமாக வைக்கிறன. மாற்று கருத்துக்கள் வைத்துக் கொள்வதில் தவறென்றும் இல்லை. மாறாக அது ஒரு நல்ல விஷயமே

மாற்றுக் கருத்துக்களை நல்ல ஆதாரத்துடன் வைக்கும் பொழுது விவாதத்தில் இருக்கும் சுவை கூடுகிறது.
என்னுடைய திமுக குறித்த பதிவில் கூட சுமூ தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தில் இருக்கும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

அந்த வகையில் உங்கள் கருத்துக்கள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவே தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டேன்.

நீங்கள் தாமரைக்கனி, திருநாவுக்கரசு போன்ற உதாரணங்களை காட்டியது என்னுடைய ஆர்வத்தை குறைத்து விட்டது. அவ்வளவு தான்

மற்றபடி உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

ஜோ / Joe said...

//நீங்கள் தாமரைக்கனி, திருநாவுக்கரசு போன்ற உதாரணங்களை காட்டியது என்னுடைய ஆர்வத்தை குறைத்து விட்டது.//
நான் சொல்ல வந்ததை சொல்லிய விதம் சிதைத்து விட்டது என்று நினைக்கிறேன்.பின்னர் விளக்க முயல்கிறேன்.நன்றி!

இளந்திரையன் said...

2001 ¬õ ¬ñÎ ºð¼ ÁýÈò §¾÷¾ø ÓÊ׸¨Ç ¨ÅòÐô À¡÷ò¾¡ø Á.¾¢.Ó.¸ Å¢ý §¾¨Å¨ÂÔõ «Ð §º÷ó¾¢Õì¸ì ÜÊ Üð¼½¢ ¦ÅüÈ¢ ¦ÀÚžüÌÁ¡É Å¡öôÒ츨ÇÔõ À¡÷ì¸Ç¡õ.

¾¢.Ó.¸ Üð¼½¢ ¦ÅüÈ¢ ¦ÀüÈ ¦¾¡Ì¾¢¸Ç¢ø þÃñ¼¡ÅÐ Åó¾ ¸ðº¢ ¦ÀüÈ Å¡ìÌK«¨ÇÔõ Á.¾¢.Ó.¸ ±Îò¾ Å¡ì̸¨ÇÔõ §º÷òÐô À¡÷ò¾¡ø ¾¢.Ó.¸ ±Îò¾ Å¡ì̸¨ÇÔõ Å¢¼ Üξġ¸ ÅÕ¸¢ýÈÐ.

¸¨Ä»÷ ¦ÅüÈ¢ ¦ÀüÈ §ºôÀ¡ì¸ò¾¢§Ä ¾¢.Ó.¸ 29836 Å¡ì̸Ùõ þÃñ¼¡ÅÐ Åó¾ ¾¡§Á¡¾Ãý (þó.¸¡) 25002 Å¡ì̸Ùõ Á.¾¢.Ó.¸ 1395 Å¡ì̸Ùõ ±Îò¾¢Õ츢ýÈÉ.

Áü¨È ¦¾¡Ì¾¢¸Ç¢ø ¦ÀÕõÀ¡ý¨Á¡ÉÅüÈ¢ø þó¾ ÜðÎò¦¾¡¨¸ ¾¢.Ó.¸ ±Îò¾¾¢Öõ Üξġ¸§Å Åó¾¢Õ츢ýÈÐ.

þ¾É¡ø ¾¢.Ó.¸ Å¢ý ¦ÅüÈ¢ Å¡öôÒ «¾¢¸ «ÇÅ¢ø §º¾Á¨¼Â Å¡öôÒ þÕ츢ýÈÐ. §ƒ¡ Å¢ý ¸ÕòÐ «.¾.Ó.¸ ¯¼ý Á.¾¢.Ó.¸ Å¢ý Å¡ì̸Ùõ §ºÕõ ¦À¡ØÐ «ó¾ì Üð¼½¢ì¸¡É ¦ÅüÈ¢ Å¡öôÒ¸û «¾¢¸õ ±ýÀÐ. «Ð ÓüÈ¢Öõ ¯ñ¨Á.

¸¨Ä»Ã¢ý ¿¸÷Å¢ø º¡½ì¸¢Âõ þø¨Ä ±ýÀ§¾ ±ÉÐ ¸ÕòÐõ. ¨Å §¸¡ Å¢ý þó¾ ÓÊ× ¾¢.Ó.¸ ¨Å §º¾ôÀÎòОüÌõ Š¼¡Ä¢É¢ý À¢Ê¨Â ¸ðº¢Â¢ý ¦¾¡ñ¼÷¸Ç¢¼õ ¿ØÅî ¦ºöÂ×õ ¯¾×õ.

aathirai said...

naan thamiz sasiyudan udanpadukiren.

nan karunanidhi nazhuva vitta vaaipaga ninaipadhu paralu mandra therthal mudindha kaiyodu ammavai veetuku anupi irundhal elidhaga jeyithirukalam. seyya thavari vittar. no chanakyan.

மு. சுந்தரமூர்த்தி said...

Joe,
Please bear with me for writing in English.

Some of the friends who are discussing this issue here and Thamizh Sasi’s blog may not agree with me on some of the points. But in my evaluation Vaiko is a spent force and can be safely ignored with best wishes for personal well being.

It is funny that M.K. Stalin fears Vaiko and does everything to keep him away. Even funnier is that Vaiko’s dream that Stalin is the only obstacle for him to take over DMK. The fact is that there are several other ‘Vaikos’ in DMK to stop him even if Stalin fails. As long as these two men waste their energies in this mutually destructive game Jayalalitha will have fun. On the one hand DMK should ignore Vaiko and focus on Jaya as their target of campaign. On the other hand Vaiko should stop dreaming of taking over DMK someday and instead poach in ADMK to strengthen his party if he is truly capable and ambitious. That is unlikely to happen as MDMK’s growth curve has reached plateau and the only direction it can go is downward, which I guess has started. If he loses this time, some who favored continuation in DMK camp will return to the parent party and those who favored switching over to ADMK will stay back there.

Everyone seems to be harping on the issue of MK’s unwillingness to concede three more seats now (22 vs 25) and two more in 2001 (15 vs 17). Vaiko could have done the same compromise. With the limited seats available in the kitty, I consider MK’s offer was generous. For MK, who wants to form the government, three seats make a big difference but for Vaiko the difference would have been only on how many of his party men would have crossed over to ADMK if he stayed back with 22 seats in DMK. The fact is that neither DMK was too keen to keep him in the alliance nor MDMK was keen to continue for the same stupid reason—Vaiko vs. Stalin shadow boxing. MK made clever moves both times when he publicized his offer. First time Vaiko came around and second time made the final decision to move to ADMK. MK should have made this move one week earlier and pulled Thiruma and Krishnaswamy into his fold with the extra seats he would have.

All the noise Vaiko made about O positive blood group and his colleagues made about MDMK emerging as a major opposition party gave a strong indication that he was looking for an excuse to join the ADMK camp where they would be able to contest more seats. If ADMK could offer 35 it is because they had more. Why couldn’t Vaiko make the hard bargain for 45 seats which he reportedly asked? In any case, Vaiko made a big gamble. If ADMK alliance wins landslide, MDMK may emerge as the second largest party pushing DMK to the third place. If DMK wins MDMK will be a poor loser. Even in the first case scenario, which is very unlikely to happen, being a major but friendly opposition party in the assembly will not automatically guarantee a fight in 2011 between ADMK and MDMK. It will be similar to ADMK-Congress equation in 1991, which did not make Congress a major player subsequently. The fight had been and will continue to be between DMK and ADMK.

So, it is time to push aside MDMK as a determining factor of alliance’s victory leave alone emerging as a major force in the future. The real discussion should be on DMK vs. ADMK. If one thinks that they both are same, I would rather bet my money on Congress which may provide an entirely different type of alternative whereas MDMK would be another flavor of (A)DMK. Since Congress doesn’t have self-confidence it is not going to happen. I would rather prefer to talk about smaller parties, such as DPI, PMK and PT, focused on empowering and uplifting specific groups of people.

Some of the friends seem to be flirting with the idea that MDMK, DPI and PMK winning more seats will help Eelam cause. In my opinion it will have no impact what so ever. The days of Eelam issue influencing Tamil Nadu politics were long gone. In a similar vain, the idea that a friendly government in Tamil Nadu helping Eelam cause doesn’t hold true anymore. And few friendly MLAs of minor parties sitting in the opposition will have absolutely no impact. Eelam politics has move far beyond all these. In the earlier stages they needed support of a friendly government and support of the mass so that the militant groups could set up camps and move supplies freely, and large influx of refugees can find safe haven. Both MGR and Karunanidhi governments provided their shares of help when it was needed. The situation is entirely different now. The Tigers are powerful enough to run a parallel administration, talk to Sri Lankan Government as equal partners, and deal with international players. It is unlikely that there will be a major influx of refugees coming to Tamil Nadu and staying long given that the Eelam Diaspora is spread all over the world who could offer a much better help than government or people of Tamil Nadu can. All that the small parties could offer now is symbolic “moral support” and emotional rhetoric. Only thing Eelam Tamils need is some diplomatic help at New Delhi, which neither the big parties like are willing to provide nor the minor parties are able to influence.

So, guys, especially Joe, give up all the emotional reactions and calm down. Stop discussing individuals and discuss issues.

அப்டிப்போடு... said...

//அரசியல் களத்தில் இப்போது வைகோ அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்// .

அவரெங்க எடுக்கிறாரு? எல்.கணேசனும், நாஞ்சில்காரரும்தான் எடுக்கிறாங்க. நம்மாளுக 'போனாப் போகட்டும்'னு இருந்ததுதான் இந்த முடிவுக்கே காரணம். மத்தியில் மதிமுகவின் நிலையை உத்தேசித்து 'பிடி' இருக்கிரதெனவும் எனவும் நினைத்திருக்கலாம்.

இப்பப் போயிட்டார். அம்மா வென்றால்... உண்டு அரசியல் எதிர்காலம் மதிமுகவுக்கு., எவ்வுயரம் செல்லும் என்பதை கணிக்கவும் முடியவில்லை. ஆனால் போன முறை அம்மாவுடன் கூட்டணி வைத்த கட்சிகளெல்லாம் இப்ப எங்கப்பா...?. அந்த நிலை வைகோவுக்கு இருக்காது நம்பலாம். தோற்றால்........?. அடுத்த 5 வருடம் அம்மாவே 'அரசியல்' பண்ண மாட்டாங்க.... மதிமுக நிலைமைய... இப்பவும் யோசிக்க முடியலைதானே?.

ஆனால் திமுகாவின் வாக்கு வங்கியை கணிசமாகப் பிரித்து தன் கையில் வைத்திருக்கும் மதிமுக இங்கிருந்து வென்றாலும் வளர்ச்சிதான்., தோற்றாலும் அறிக்கை அரசியல் மூலமாக மக்களிடம் இருக்கலாம். தவிர கலைஞருக்குப் பின்னான அரசியலில் மதிமுக 'வைகோ' (மதிமுக இல்ல!) பம்பர் அடிச்சாலும் ஆச்சிரியப் படுறதுக்கில்ல. கட்சிக்காவோ, பெட்டிக்காகவோ தியாகம் செய்யறாரு பாவம்.

மதிமுகவையும், பாமகவையும் எடுத்துக் கொண்டால் பாமக இங்கிருப்பதே எல்லா வகையிலும் திமுகவிற்கு நல்லது.

அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு சாதகம் மகளிர் குழுக்களாலும், சலுகை அரசியலினாலும் இருப்பதாகத் தோன்றினாலும்., எனக்கென்னவோ இம்முறை திமுகதான் வெல்லும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் கூட்டணி முடிவாகி, தொகுதி பங்கீட்டின் பிந்தான் எதுவும் உறுதியாகத் தெரியும். ஆனால் கூட்டணியாட்சிய கொண்டாந்திறாதிங்க சாமிகளா என்றுதான் மக்களை நோக்கி கேட்கத் தோன்றுகிறது. கார்நாடகத்துல தேவ கவுடா மகன் படுற பாட்டப் பாருங்க. தேர்தலுக்கு முன்ன ஓடி விளையாண்டாங்கன்னா கூட தாங்கிக்க முடியும். ஏன்னா அது பழகிப் போயிருச்சு. தேர்தலுக்குப் பின்னன்னா?...

//ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை //

தமிழ் நாட்டில் திமுக இல்லையென்றாலும் வழுவான ஒரு பெரிய கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே கலைஞரின் நோக்கம். அது அதிமுகவிற்கு சாதகம் என்றாலும்., பிச்சுப் புடுங்கி சின்னக் கட்சியெல்லாம் ஒண்ணச் சேந்து கூட்டணி ஆட்சி அமைச்சா திமுக, அதிமுக இரண்டும் பெரிய கட்சியா எப்படியப்பா நிலைத்திருக்கும்?. கூட்டணி ஆட்சி மக்களுக்கு பழகிவிட்டால் ஒரு சின்ன உரசலுக்குக்கூட மாநிலத்திலும், ஏன் மத்தியிலும் கூட மாற்றம் வந்துகொண்டிருக்கும். தொகுதி பங்கீட்டில் 2 அல்லது 3 இடத்தைக் கூட விட்டுக்குடுக்க யோசிக்கிற நம்மாளுக அமைச்சரவையில பங்கேற்பதில் சமரசம் செய்துகொள்ள வேண்டி வருமே?. எனவே திரும்ப நம் மாநிலத்தில் தேசியகட்சிகளின் ஆட்சியையோ., கூட்டணி ஆட்சியையோ வரவிடாமல் இருக்க வேண்டுமென்றால் திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு பலமான கட்சி அமர வேண்டும்., இதுவே அதிமுக எதிர்ப்பு அவ்வளவு உறுதியாக 'கலைஞரிடத்தில்' இல்லாக் காரணம்.

முத்து(தமிழினி) said...

ஜோ நீங்கள் சொல்லியிருப்பதில் அந்த பெண்கள் ஓட்டு விஷயம் ஓ.கே..ஆனால் தி.மு.க கூட்டணி இப்போதும் பலமானதுதான் என்பது என் கருத்து.பார்ப்போம்.வைகோவை பற்றி தனிபதிவு போட்டுள்ளேன்.

அப்டிப்போடு... said...

//It is funny that M.K. Stalin fears Vaiko and does everything to keep him away. Even funnier is that Vaiko’s dream that Stalin is the only obstacle for him to take over DMK. The fact is that there are several other ‘Vaikos’ in DMK to stop him even if Stalin fails//

""

Krishna said...

Appadipodu... Appadipodunga!

ஜோ / Joe said...

//தமிழ் நாட்டில் திமுக இல்லையென்றாலும் வழுவான ஒரு பெரிய கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே கலைஞரின் நோக்கம்.//
கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கும் என்கிறீர்களா?

Krishna said...

One thing which I want to say is, once again this is a no issue election, unlike MGR dismissal in 1980, MGR illness & Indira death in 1984, Rajiv death in 1991, JJs corruption & atrocities in 1996, and like 1989 wherein even MGRs death was sidelined due to the quarelling of JJ and JA and 2001 wherein even MKs good governess was sidelined.

So if we check closely about what happend in 2001, it was alliance factor and also JJs repeated saying of she was not given chance to contest (creating an issue - a very clever move) which clinched victory to JJ. So, this election still waits for an issue.

Vaiko joining JJ will defintely boost JJ and it is win for her and lose for Vaiko. JJ got two mangos in one stroke. one is she broke the seemingly and proven alliance and made a suspicision about vitory of that alliance in peoples mind, second, erosion of VaiKos image in common mans view point and creating hatred in DMK cadres mind. Definitely her chances increased much compared to before scenario. Also, her future is secure even if she lost. She will be the centre stage of TN politics and thereby will get her chance defintely after 5 years

As regards MK not ofering 25, it is really too much to expect him to give much to allaince partners and contest in 125 seats. Simillar, 117 +7 contest in 1980 lead to the Kootani Atchi suspicion in peoples mind. So, even if MK compromised on that and gave 25 to MDMK, 26 to PMK (less than that PMk wouldnt have agreed as it wants at least 1 seat more - and u cant bet on Ramdas, at any time he will leave and there by double the seats will be lost - i agree with Tamil sasi on this), 35 to Congrss (last time 47 and whether they will agree for this is not known and even sonia would have objected as she gave 7 important ministers to DMK, 9 each to Communist (less than that they would have left the allaince as they have nothing to lose to align with JJ and get even 15 each, remember Tha. pandian and Sankarainah, known JJ supporters and MK haters) leaves how much to DMK 130, in which they have to give to RMV,Sethuraman, Muslim leagque and Puratchi bharatham and Kannappan (they r supporting him for so long a time and ditching them is beyond even MKs genorocity!!?). So, easily JJ would have created an issue of whether u want one party rule or Kootani atchi where they fight for power and forget and she would have won handsomly. So, we can say, JJ traded that election issue with Vaikos support!

As tamil sasi told in his post, this election all depends upon the candidates and the field work by cadres. I think, in this regard Vaikos ditching MK will make the DMK cadres fight with vengence in mind and also Mk will release more money and so the scale is slightly tilted in MKs side, I feel. Only the coming months will make things clear.

ஜோ / Joe said...

சுந்தரமூர்த்தி,கிருஷ்ணா,
உங்கள் மாறுபட்ட கருத்துக்களுக்கு நன்றி!

ஜோ / Joe said...

இதுவரை கருத்து சொன்ன முத்து,ராம்கி,ராகவன்,முகமூடி,சிவஞானம்ஜி,ஏவி சுரேஷ்,koothu,இளந்திரையன்,ஆதிரை,அப்படிப்போடு,முத்து(தமிழினி) ..உங்கள் அனைவருக்கும் நன்றி!

பழூர் கார்த்தி said...

// கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது //

மிகச் சிறப்பான நிறைவு வரிகள்.. நல்ல அலசல்..

அப்டிப்போடு... said...

//தமிழ் நாட்டில் திமுக இல்லையென்றாலும் வழுவான ஒரு பெரிய கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே கலைஞரின் நோக்கம்.//

///கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் ரகசிய உடன்பாடு இருக்கும் என்கிறீர்களா?///

ஜோ., நோக்கம் என்பதை எண்ணம் எனச் சொல்லியிருக்க வேண்டும் போல. அதாவது கூட்டணியாச்சி, தேசிய கட்சி மீண்டும் தமிழகத்தில் வருவது இது தடுக்கப்படவேண்டும். அதிமுகவை எதிர்க்கிறார்கள்., அழிக்க நினைக்கவில்லையாப்பா... அதுதான் நான் சொல்ல வந்தது.

//ஆனால் கலைஞருக்கு ஜெயலலிதாவை எக்காரணம் கொண்டும் வர விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதாக தெரியவில்லை //

என்ற உங்கள் வரிக்கு அது பதில் அது. அவ்வுணர்வை நான் எதிக்கவில்லை. எக்காலமும் எனக்கு தமிழ்நாட்டில் திராவிடம் 'சாகாமல்' இருக்க திரவிட அரசியல் பண்ணாவிட்டாலும் கலைஞர் அவசியம் ஒரு மாற்று சக்தி., திராவிடத்தை பற்றிக் கொள்ள வரும்வரை. இதை வெளிப்படையாகச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

//கலைஞர் தடுமாறுகிறார் பிள்ளைப்பாசத்தில்..வருத்தமாக இருக்கிறது//

இவ்வரி இந்த நேரத்தில் சரியானதாகத் தோன்றவில்லை., ஜோ.

ஜோ / Joe said...

அப்படிப்போடு,
உங்கள் விளக்கத்துக்கும் கருத்துக்கும் நன்றி!

Valavan said...

எனக்கென்னவோ வைகோ அவசரப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. தொண்டர்கள் அதிமுக கூட்டணியை விரும்ப பல காரணங்கள் இருக்கிறது (பலருக்கு சீட், அதிமுகவின் பண பலம் etc) ஆனால் தொலைநோக்கில் பார்த்தால் திமுகவின் எதிர்காலமாக உருவெடுப்பதே வைகோ திட்டமாக இருந்திருக்க வேன்டும், ஸ்டாலினை அனைத்து திமுகவினரும் ஏற்றுகொள்வார்களா என்பது கேள்விக்குரியாகவே இருக்க மிஸ்டர் கிளீன் இமேஜூடன் சிறிது அரசியல் சாணக்கியத்துடனும் மக்கள் செல்வாக்குடனும் எளிதாக திமுகவை ஊடுருவியிருக்க முடியும். என் போன்ற பல நடு நிலையாளர்கள் மத்தியில் வைகோ வின் இமேஜ் வீழ்ந்திருப்பது உண்மை. இதனைத்தவிற வேறு வழியில்லை என்றே வைத்துக்கொண்டாலும், முன்பே எதிர்பார்த்து (2001 தேர்தல் படிப்பினை) காய் நகர்த்தியிருக்க வேண்டும்.

கருணாநிதி ஸ்டாலினை முதல்வராக்கத்தான் வைகோவை கழற்றிவிட்டார் என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. கருணாநிதியால் ஸ்டாலினை அதிகபட்சம் திமுக தலைவராக திமுகவினரிடம் திணிக்க முடியும், முதலமைச்சராக மக்களிடத்தில் திணிக்க முடியாது.

அழகப்பன் said...

ஜோ, தடம் மாறியதும் தடுமாறியதும் வை.கோ.தான் என்பதுவே என் கருத்து.

ஒரு வேளை ஸ்டாலின் முதல்வராவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற நிலை வந்தாலும் அதை தேர்தலுக்குப் பின் எதிர்த்திருக்கலாம். எதிரி அணிக்குப் போய் அவர் படும் அவஸ்தையைப் பாருங்கள். அவருடன் கூட்டணி ஏற்பட்ட மறுநாள் வெளியான பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்தி இது...

தேர்தல் திருவிழா - வை.கோ.

tbr.joseph said...

ஜோ,

ரொம்ப பொறுமையா இதுவரைக்கும் வந்திருக்கற எல்லா பின்னூட்டங்களையும் லஞ்ச் டைம்ல படிச்சி பார்த்தேன்..

சாதாரணமா இந்த அரசியல்ல எல்லாம் நான் தலையிடறதேயில்லை..

ஆனா வை.கோவோட செயல் என்னைப் போன்ற நடுநிலை ஆட்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

அவர் ஏன் அப்படி செய்தார்?

சரி.. இப்படி செய்ய வேண்டும் என்று எத்தனை காலமாய் தன் மனதில் நினைத்திருந்தார்.

அப்படியானால் இந்த முடிவை எடுக்க இத்தனை நாள் ஏன் காத்திருந்தார்?

அவர் நினைத்த இடங்கள் (எண்ணிக்கை) கிடைக்கவில்லை என்பதால் மட்டும்தான் இந்த முடிவுக்கு வந்தாரா?

ஜெ. அணியில் சேர்ந்த அன்றும் இது தன்னுடைய தொண்டர்களின் விருப்பம் என்று பின்வாங்குகிறாரே அதற்கு என்ன அர்த்தம்?

அவர் எடுத்த முடிவால் தமிழக தேர்தலிலோ அல்லது ஆட்சியிலோ மாற்றம் வருகிறதோ இல்லையோ அது வேற விஷயம்..

ஆனால் அவருடைய இந்த முடிவு அவருடைய செல்வாக்கை சரித்துவிட வாய்ப்புள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

கலைஞரை அலுவல் நிமித்தம் நான் நேரில் சந்தித்ததிலிருந்தே எனக்கு அவர் மேல் அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.

அவரை த.நாவின் மற்றெந்த தலைவருடன் ஒப்பிடுவதே தவறு என்ற எண்ணத்தையுடையவன் நான். போயும், போயும் அடிக்கடி நிலைதடுமாறும் வை.கோவை.. நிச்சயம் மாட்டேன்..

ஸ்டாலின் வை.கோவுக்கு போட்டியா என்றால் அதுவும் சரியில்லை என்பதே என்னுடைய கருத்து.

ஸ்டாலின் சென்னை மேயராய் இருந்து தன்னுடைய திறமையை நிரூபித்தவர். வை.கோ எந்த அரசு பதவியிலாவது இருந்து தன்னுடைய நிர்வாகத் திறமையை எண்பித்திருக்கிறாரா என்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும்..


போட்டா சட்டம் மத்திய அரசுதான் கொண்டு வந்தது த.நா அரசு அதை செயல்படுத்தியது என்று தன்னை சிறையிலடைத்து அவமானப்படுத்திய ஜெ.வின் செயலை நியாயப்படுத்தும் அவரைப் பற்றி என்ன சொல்வது?

ஒரு தொல்லை விட்டது என்று கலைஞரும் அவருடைய தோழமை கட்சிகளும் மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்பதுதான் நல்லது.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
உங்களுடைய வெளிப்படையான, உறுதியான கருத்துக்கு மிக்க நன்றி.பின்னர் இது குறித்து கருத்து சொல்கிறேன்.

கொழுவி said...

ம்.
ஜெயலலிதாவுக்கும் வை.கோவுக்கும் என்ன பகை?
ஒன்றுமில்லை. வை.கோ.வின் விடுதலைப்புலி ஆதரவுதான் ஜெவுக்குப்பிரச்சினை. மற்றும்படி வை.கோவுக்கு எதிராகவோ மதிமுக வுக்கு எதிராகவோ ஜெவுக்கு தனிப்பிட எந்தப் பிரச்சினையுமில்லை.

ஆனால் கருணாநிதிக்கு?
வை.கோ என்ற தனிநபர் மீதும் மதிமுக என்ற கட்சிமீதும் வெறுப்பு. எப்படியும் வை.கோவையும் மதிமுகவையும் ஒழித்துக்கட்டவோ சிறுமைப்படுத்தவோ தான் கலைஞர் முயல்கிறார்.
இந்த நிலையில் என்ன கொள்கை வேண்டிக்கிடக்கிறது?
எப்படி கொள்கை ரீதியில் வை.கோ. திமுகவுடன் இருக்க முடியும்?

கருணாநதி வை.கோவுக்குச் செய்ததைவிடவோ செய்துகொண்டிருப்பதை விடவோ ஜெயலலிதா அதிக கொடுமையேதும் செய்துவிடவில்லை. அப்படி யாராவது சொல்ல முடியுமா?

தன்னையும் தன் கட்சியையும் அழிக்க நினைக்கும் ஒருவருடன் கூட்டணி வைத்து அவருக்காக உழைப்பதைவிட வை.கோ எடுத்த முடிவு சரியானதே.
தன்னைச் சிறையடைத்த ஜெயுடன் (தவிர்க்க முடியாமல்) வை.கோ வைத்த கூட்டால் அவரின் மதிப்புக் குறைந்தது என்று சொல்பவர்கள், இதைவிட ஒருவரால் எப்படிப் பொறுமை காக்க முடியுமென்று சொல்லுங்கள். இந்த விசயத்தில் கலைஞரை விமர்சித்து வந்த இருபதிவுகள் (தமிழ்ச் சசி, ஜோ) ஆறுதலளிக்கின்றன. ஆனால் "கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார் வை.கோ" என்று சாடுபவர்கள், திமுகவுடன் இருப்பதும் அவர்களுக்குச் சேவகம் செய்வதும்தான் மதிமுகவின் கொள்கையா என்று விளக்கினால் நன்று.

வை.கோவையும் மதிமுகவையும் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, அதே நேரம் உரிய மரியாதையோ உரிமையோ கொடுக்காமல், சீண்டும் விதத்தில் காரியமாற்றுகின்ற ஒரு தலைவருக்காகவும் அந்தக் கட்சிக்காகவும் உழைத்துத் தங்களை அழித்துக்கொள்வது தான் வை.கோவினதும் மதிமுகவினதும் கொள்கையாக இருக்க வேண்டுமென்று விரும்பிறார்கள் போலுள்ளது.

அப்படிப்போடு,
நீங்கள் திமுகவின் அனுதாபியாக இருக்கலாம்.
ஆனால் எல்.ஜி படுத்திருக்க அவரை ஜெயிக்க வைத்தது திமுக என்று போகிற போக்கில் எழுதிவிட்டுப் போகிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மைப் பேச்சாளரே வை.கோ தானே? தான் போட்டியிடாமல் எல்லா இடமும் அலைந்து வை.கோ. பிரச்சாரம் செய்தாரே? திமுகவுட்பட கூட்டணிக்கட்சிகளின் வெற்றிக்கு வை.கோவும் மதிமுகவும் முக்கிய காரணமென்பதை மறுக்கிறீர்களா? அப்போ திமுக படுத்திருக்க வை.கோ ஊரெல்லாம் திரிந்து பேசி வெல்ல வைத்தார் என்று யாராவது சொன்னால் என்ன சொல்வீர்கள்?

தங்களுக்காக பாடுபட்டவனையே தொலைக்காட்சிகளில் காட்டாமல் விடுவதுட்பட புறக்கணிப்புக்களைச் செய்துகொண்டிருந்தவர்கள், இப்போது முழுவதுமாக வை.கோவின் முதுகில் சவாரி செய்ய முற்படும்போது எந்தச் சாதாரண மனிதனும் எடுக்க வேண்டிய ஒரு முடிவைத்தான் இப்போது வை.கோ எடுத்திருக்கிறார். அப்படி என்ன கொள்கையில்தான் திமுகவும் மதிமுகவும் ஒன்றுபடுகிறது என்றாவது யாரும் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த நேரத்தில் வை.கோ இப்படியொரு முடிவெடுத்திருக்காவிட்டால் அவரால் மீண்டுவந்திருக்கவே முடியாமற்போயிருக்கும்.
களத்தில் முக்கியமான அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால்,
"எதிரி விரும்புவதைச் செய்யாதிரு"
வை.கோ அதைச்செய்யாமல் தப்பித்தது அவரின் சாதுரியமும் அதிஸ்டமும்.

aathirai said...

paralu mandra thertalil vaiko illavittalum dmk easyaga jeyithiruka mudiyum.

muka vaikovai veliyil kondu vandhadhe sattasabai therthalukkagadhan.

vaiko kidaitha vaaipai payanpaduthikondu kadaisiyil thirunelvike alwa koduthuvittar.

dmk kootanikul irundhalum mdmk thondargal sariyaga velai seithirukamatargal.

indha murai therthalukku appuramthan niraya thamaash irukiradhu endru ninaikiren.pmk congress ellam ippodhu amaidhiyaga irukirargal. ivargaludaya thamash therthaluku appuram varum.

aathirai said...

http://thatstamil.oneindia.in/news/2006/03/06/ramdoss.html

netru naan sonnadhu idhaithaan.

ஜோ / Joe said...

சோம்பேறிபையன்,வளவன்,அழகப்பன்,கொழுவி,ஆதிரை..உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

ராம்கி said...

//இந்த நேரத்தில் வை.கோ இப்படியொரு முடிவெடுத்திருக்காவிட்டால் அவரால் மீண்டுவந்திருக்கவே முடியாமற்போயிருக்கும்.
களத்தில் முக்கியமான அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால்,
"எதிரி விரும்புவதைச் செய்யாதிரு"
வை.கோ அதைச்செய்யாமல் தப்பித்தது அவரின் சாதுரியமும் அதிஸ்டமும்.//

நல்ல வரிகள் கொழுவி..

ஆனால் இங்கு எதிரி யார் என்ற கேள்வியில் தான் விவாதிக்கும் நண்பர்கள் வேறுபடுகிறார்கள்.

நமது நண்பர்கள் வைகோ திமுகவை கைப்பற்றுவது ஒன்றையே முன்னிறுத்துவதாகத் தெரிகிறது.

திமுகவில் ஸ்டாலினின் தலைமையை விரும்பாதவர்கள் எப்படி இருப்பினும் கலைஞருக்குப் பிறகு வைகோவை ஆதரிப்பார்கள்..

இல்லையென்றால் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும்.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் தமிழ் அடையாளங்களுடன் களத்திற்கு வந்தாலும் தமிழகம் முழுவதும் ஆதரவு பெறுவது கடினம்.

வைகோ ஆதரித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பொடா கொண்டுவந்தது. அதன் பின் ஆதரித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு ரத்து செய்யவில்லை. வழக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

http://www9.sbs.com.au/radio/language.php?language=Tamil
இங்கு 25 ஆவது நிமிடம் முதல் 32 ஆவது நிமிடம் வரை முடிந்தால் கேளுங்கள்..

நன்றி ஜோ..

அப்டிப்போடு... said...

ஜோ! நன்றி கூறி அனுப்பிடலாம்னு பார்த்திங்க :-))., நம்மள கொழுவி கூட்டிட்டு வந்துட்டாங்க.

கொழுவி., அது போற போக்குல எழுதுனது இல்ல. உண்மை. வைகோ போட்டியிடலன்னு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவில் யாருமே வேலை செய்யலை. (எல்.ஜி எங்கூருலதான் நின்னாரு., நேரு அவர்கள் எப்படி உழைத்தார் என்பது எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நன்றாகத் தெரியும்) நீங்க சொன்ன மாதிரி வைகோ மட்டும்தான் எல்லா மேடைகளிலும் பேசினார். அதனால்தான் அவராகப் போனால் போகட்டும் என்று இருந்தார்கள்.

//ஜெயலலிதாவுக்கும் வை.கோவுக்கும் என்ன பகை?//
ஆகா., ஒரு பகையும் இல்லாமல் தமிழக சட்டம் ஒழுங்கை மட்டும் கணக்கில் கொண்டு பகையே இல்லாத வைகோவை சிறையில் அடைத்தாரா?. அது உங்கள் நம்பிக்கை. அது நேரம் பார்த்திருந்து., வைகோ வாய் திறக்கவும் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்பது என் புரிதல்.

//ஆனால் கருணாநிதிக்கு?
வை.கோ என்ற தனிநபர் மீதும் மதிமுக என்ற கட்சிமீதும் வெறுப்பு//

இது மதிமுக உதயமான சமயத்தில் கலைஞர், வைகோ அவர்களின் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை இன்னும் குறையாது இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளும் ஊடகங்களின் பலனால் எழுப்பப்படும் வாதம்.

//எப்படி கொள்கை ரீதியில் வை.கோ. திமுகவுடன் இருக்க முடியும்?//
எப்படி இருந்தாரு இது வரை?. சன் டிவியின் இருட்டடிப்புக்கு கதறுபவர்கள்., போன முறை தனியா நின்னு 'ஓட்டைப்' பிரித்தபோது ஒண்ணும் சொல்லல?. அதை நியாயப் படுத்தினார்கள். கலைஞர் செய்தால் காழ்ப்புணர்வு அரசியல். அதையே வைகோ செய்தால் நேர்மையான அரசியல் ஆகி விடுகிறது.

//எப்படிப் பொறுமை காக்க முடியுமென்று சொல்லுங்கள். //
பொறுமை காக்க வேண்டாம். அதை தெளிவாகச் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். கடந்த இரு வாரங்களில் அவரது 'சினிமா', எரிச்சல் படுத்தாத ஆள் யாரென்று சொல்லுங்கள்.

//இப்போது முழுவதுமாக வை.கோவின் முதுகில் சவாரி செய்ய முற்படும்போது//
இது எப்படி எனச் சொல்வீர்களா?. மதிமுக போனால் மகிழ்ச்சி என்றுதான் இருந்தார்கள். சவாரி செய்ய முற்பட்டனர் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?.

//"எதிரி விரும்புவதைச் செய்யாதிரு"//
அதைச் செய்து விட்டார் வைகோ :-)). இதை விளக்கினால் இங்கு (பதிவில்) எல்லாம் திசை மாறி விடும் கொழுவி.

பெரியாருக்கு மாற்றாக அண்ணாவைத் தூக்கி வைத்துக் கொள்ளத் துடிக்கும் சிலரைப் போல., கலைஞருக்கு மாற்றாக வைகோவைத் தூக்கி வைக்கும் சக்திகளின் கதை தெரியாமல் பேசுகிறீர்கள். வைகோவின் ஈழ மக்கள் செல்வாக்கும் அவர்களுக்குத் துணை நிற்கிறது. ஈழ மக்கள் பெரும்பான்மையோரின் நம்பிக்கை பெற்றவரும், தமிழகத்தில் நேர்மையான அரசியல்வாதியாக சிலரால் நம்பப்படும் ஒருவர் ஏன் கட்சிக்காக இம்முடிவு எடுத்தலுக்கு செவிசாய்த்தார்?(அவர் எடுத்தார் என நான் சொல்லவே மாட்டேன்..) வென்றால் சரி., தோற்றால் என்னவாகும் மதிமுகவின் நிலை?. ஈழ மக்களுக்கு பரிந்து பேசி சிறையில் அடைக்கப்பட்டதனால் 'பாசிச' ஜெயலலிதா என்று அவரால் குறிப்பிடப்பட்டவர் இன்று 'பாசமிகு' ஆகிவிட்டதனால் வைகோவின் ஈழ நிலைபாடு என்ன?.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் சசி, ஜோ ஆகியோரின் பதிவுகள் எப்படி கலைஞரை ஆதங்கத்துடன் விமர்சிக்கிறதோ. அதைப் போல வைகோவின் மீதான ஆதங்கத்தை என் பின்னூட்டங்கள் அல்லது நானிட்ட அப்பதிவு (சற்று எரிச்சலுடன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்)தெரிவிக்கறது. அதிமுக., இப்போது எம்.ஜி.யார் கால அதிமுக இல்லை அதையும் இங்கு சொல்வது அவசியம் என நினைக்கிறேன்.

நான் ஏன் திமுக அனுதாபி என்பதற்கு காரணம் இப்பதிவின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். மனம் திறந்து இன்னும் நிறை, குறைகளை அலசலாம். இடையில யாரும் வந்து அதுல மீன் பிடிச்சுறக் கூடாதுங்கிறதால., இப்போதைக்கு இவ்வளவுதான்.

ஜோ / Joe said...

அப்படிப்போடு,
உங்களோடு பெரிதாக வாதிடுவதற்கு ,அடிப்படையில் உங்கள் ஆதங்கத்திலிருந்து பெருமளவில் நான் மாறுபடுபவன் அல்ல.
ஆயிரம் இருந்தாலும் ,கலைஞர் மேல் மாறாத அபிமானம் உண்டு என தெளிவாக கூறியிருக்கிறேன்.வைகோ ஜெயலலிதாவோடு சென்றது எனக்கு வருத்தமே .அது வைகோவே ஏற்படுத்திக்கொண்டது என்பது உங்கள் கருத்து .ஆனால் கலைஞர் மனது வைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.தெளிவாக சொல்வதென்றால் பாமகாவுக்கு கலைஞர் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு வைக்கோவை கொஞ்சம் அதிகமாக அரவணைத்திருக்கலாம் .ராமதாஸ் ஜெயலலிதாவோடு சென்றால் யாரும் பெரிதாக அவரை குறை கூற போவதில்லை,ஆனால் வைகோ சென்றால் குறைகூறலாம் என்ற காரணத்தை வைத்து வைகோவை கலைஞர் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்பது என் குற்றச்சாட்டு .நான் முக்கியத்துவமும் தர மாட்டேன் ,ஆனால் நீ ஜெயலலிதாவோடு சேர்ந்தால் உனக்கு தான் நஷ்டம் ,நான் உன் யோக்கியதையை பறைசாற்றுவேன் .அதனால் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பேசாமல் இரு என்ற தொனியில் தான் கலைஞரின் அணுகுமுறை இருக்கிறது .கொலைப்பழி சுமத்தி தனிக்கட்சி தொடங்க காரணமாக இருந்த என்னேடு காலகாலமாக விசுவாசமாக இருக்க வேண்டும் ,இல்லையென்றால் பொடா பற்றியெல்லாம் பேசி மானத்தை வாங்குவேன் என்பது என்ன சரியான வாதம்?

என்னைக்கேட்டால் கலைஞரைப்பொறுத்தவரை வைகோ வளர்ந்து விடக்கூடாது ,அவர் நன்மதிப்பை இழக்க வேண்டும் என நினைக்கிறார் .அதற்கு முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதுவரை அரவணைத்து பின்னர் கைவிடுகிறார் .வேண்டுமென்றே பாமகவை விட மதிமுக சிறிய கட்சி என நிறுவி வைகோவை எரிச்சல் படுத்த முனைகிறார்.மற்ற கட்சிகளின் பேரத்தை பற்றி வாய்திறக்காமல் மதிமுகவுக்கு மட்டும் 22 தான் தரமுடியும் .இருந்தால் இரு .இல்லையென்றால் நடையைக்கட்டு என்று பொதுவில் அறிவிக்கிறார் .நடையக்கட்டிய பின் ஏன் புலம்ப வேண்டும் ?மத்திய கூட்டணியில் மதிமுகவை வெளியேற்ற வேண்டும் என்கிறார் .கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்டை அவ்வாறு சொல்வாரா?

என்னுடைய ஆதங்கமெல்லாம் வைகோவை பொறுமையின் எல்லைக்கு தள்ளாமல் இன்னும் கொஞ்சம் அரவணைத்திருக்கலாம்.அவ்வளவு தான்.

Krishna said...

Joe, this is response to your last comment:
1. Since Ramdas has concentrated vote bank, MK didnt want to throw him out. Ramdas has 20 MLAs (now reduced) and he will be given treatement according to that, and samr to congress and communists.
2. About KolaiPazhi, if u want fresh insight into it read Vasanthis article in Theeranadhi.
3. MK, clearly announce why he openly tell about MDMK seat offers: while everybody else gave the list or at least informed about when they will give, no response from VaiKO, while others deny rumors reg offer of less number of searts they respond, MDMK doesnt respond and so he had to say it.
4. As clearly ponted out by other bloggers, in a mega allaince cant VaiKos ettle with 22? How much he would ahve got in such a mega alliance with J?
5. Why should MK feel that VaiKO should grow, after all he is another party person. See, MK doesnt want even PMK to grow and so only he broke the alliance of PMK and VC. He will always do which is correct for his party. VaiKos aim was the cadres of DMK afetr MK and for that he should ahve remained there itself for some more time

கொழுவி said...

///ஆகா., ஒரு பகையும் இல்லாமல் தமிழக சட்டம் ஒழுங்கை மட்டும் கணக்கில் கொண்டு பகையே இல்லாத வைகோவை சிறையில் அடைத்தாரா?. அது உங்கள் நம்பிக்கை. அது நேரம் பார்த்திருந்து., வைகோ வாய் திறக்கவும் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்பது என் புரிதல்.///


அப்படிப்போடு,
நான் கேட்டது வேறு. ஜெ.வுக்கு வை.கோ என்ற தனிநபர் மீதோ அவரின் கட்சிமீதோ தனிப்பட்ட பகையில்லை. ஈழப்பிரச்சினையில் ஜெ.யின் நிலைப்பாடும் விடுதலைப்புலிகளின் மீதான அவரின் வெறுப்பும் தான் வை.கோவைச் சிறையிலடைத்தது. ஏன் நெடுமாறன், சு.ப.வீ, தாயப்பன் உட்பட நிறையப் பேர் அடைக்கப்பட்டார்களே, அவர்களுக்கும் ஜெ.வுக்கும் என்ன விரோதம்?
நீங்கள் சொல்வதைப்போல வை.கோ இருக்க வேண்டுமானால் கட்சியைக் கலைத்துவிட்டு கலைஞரின் தொண்டனாக இருக்க வேண்டியதுதான். அல்லது பழ.நெடுமாறன் போல இயக்கம் நடத்த வேண்டியதுதான். அவர் கட்சி நடத்தவோ அரசியல் நடத்தவோ வேண்டுமானால் நிச்சயம் அவருக்குரிய மரியாதையும் கெளரவமும் உரிமையும் வழங்கப்படத்தான் வேண்டும். தனக்கும் தன் கட்சிக்குமுரிய அரசியற் பலத்தைத் தக்கவைக்கவோ மேம்படுத்தவோ முயலவேண்டுமன்றி அவற்றையெல்லாம் இன்னொருவருக்கும் தாரைவார்த்துத் தொண்டாற்ற முடியாது.

நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன், வை.கோவின் எதிரி யாரென்று.


///இது மதிமுக உதயமான சமயத்தில் கலைஞர், வைகோ அவர்களின் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை இன்னும் குறையாது இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளும் ஊடகங்களின் பலனால் எழுப்பப்படும் வாதம்.
///

ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். பழையவை அப்படியேதான் இருக்கின்றன என்பதற்கு இப்போது கருணாநதியும் தி.மு.க தலைவர்களும் வை.கோ விசயத்தில் நடந்துகொண்ட முறையை விட வேறென்ன வேண்டும்?

///பொறுமை காக்க வேண்டாம். அதை தெளிவாகச் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். கடந்த இரு வாரங்களில் அவரது 'சினிமா', எரிச்சல் படுத்தாத ஆள் யாரென்று சொல்லுங்கள்.
///

வை.கோவின் சினிமா இருக்கட்டும். தி.மு.கவின் சினிமா பற்றி என்ன சொல்கிறீர்கள்?
தான் தி.மு.க கூட்டணிதான் என்று வை.கோ. தெளிவாகச் சொன்னபின்னாவது ஒழுங்காக நடந்திருக்கலாமே? வை.கோ தன்தரப்பில் பேசப்பட்டதைக் கண்டித்து வருத்தமும் தெரிவித்தது போல ஏன் மறுதரப்பிற் செய்யப்படவில்லை? தொடக்கத்திலேயே தொகுதிகள் பற்றி ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை. கடைசிநேரத்தில் ஏன் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டது? ஒரேயொரு தொகுதிக்காக வை.கோ கெஞ்சியதாகச் சொல்வது பொய்யென்று சொல்கிறீர்களா?

வை.கோவின் சினிமா இருக்கட்டும். தி.மு.கவின் சினிமா பற்றி என்ன சொல்கிறீர்கள்?
தான் தி.மு.க கூட்டணிதான் என்று வை.கோ. தெளிவாகச் சொன்னபின்னாவது ஒழுங்காக நடந்திருக்கலாமே? வை.கோ தன்தரப்பில் பேசப்பட்டதைக் கண்டித்து வருத்தமும் தெரிவித்தது போல ஏன் மறுதரப்பிற் செய்யப்படவில்லை? தொடக்கத்திலேயே தொகுதிகள் பற்றி ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை. கடைசிநேரத்தில் ஏன் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டது? ஒரேயொரு தொகுதிக்காக வை.கோ கெஞ்சியதாகச் சொல்வது பொய்யென்று சொல்கிறீர்களா?


வை.கோ கூட்டணி மாறியதுக்கும் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கூட்டணி மாற்றத்தால் வை.கோ ஈழம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றுவார் என்று யாராவது நினைக்கிறீர்களா? வை.கோவின் ஈழ நிலைப்பாடு பற்றி எனக்குத் தீர்க்கமான நிலைப்பாடிருக்கிறது. ஜெ.வுடன் சேர்ந்ததால் அது குறையுமென்றோ, கருணாநிதியோடு இருந்திருந்தால் அது கூடுமென்றோ நினைக்கத் தேவையில்லை.

வை.கோ வோ திருமாவோ தனித்துப் போட்டியிட்டிருந்தால் அவர்கள் மேல் இவ்வளவு விமர்சனங்கள் வந்திருக்காது. மாறாக போற்றிக்கூட இருப்பார்கள். அவர்களுள் சிலருக்கு அவர்களின் அழிவுகளில் மகிழ்ச்சி.
சிலர் தியாகம் செய்ய மட்டுமே இருப்பதாகப் பலர் நினைக்கின்றனர். விடுதலைச்சிறுத்தைகள் விசயத்திலும் இதுதான் நடந்தது. ஒன்றில் தங்களுக்காகப் பாடுபட வேண்டும். அல்லது கொள்கைக்காக தனித்துப்போட்டியிட்டுத் தியாகம் செய்ய வேண்டும். தி.மு.கவின் கூட்டணியில் இடம் கிடைக்காமல், அதேநேரம் எதிரணிக்குச் செல்லாமல் கொள்கைக்காக தனித்துப் போட்டியிடும் தற்கொலை முடிவைக்கூட எடுத்தன சில கட்சிகள். இந்தமுறை போட்டியிடாமலே ஒதுங்கும் திட்டத்தைக்கூட முன்வைத்தது வி.சி. (எல்லாம் கொள்கைக்காக) அதற்கு அவர்கள் எதிர்பார்த்தது ராமதாசிடமிருந்து வெறும் அறிக்கை மட்டுமே. ஆனால் எதுவும் செய்யாமலிருந்துவிட்டு இப்போது வி.சி அவசரப்பட்டு காரியமாற்றி விட்டதென்று அறிக்கை விடுகிறார் ராமதாஸ்.

அப்டிப்போடு... said...

.//அது வைகோவே ஏற்படுத்திக்கொண்டது என்பது உங்கள் கருத்து//

??? ஜோ., என் பின்னூட்டங்களில் தெளிவாக எதனால் சென்றார் எனக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

//பாமகாவுக்கு கலைஞர் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு வைக்கோவை கொஞ்சம் அதிகமாக அரவணைத்திருக்கலாம் //

பாமக இம்முறை எங்கும் போகாது என்பது அவரது எண்ணம்., தவிர மதிமுகவின் மீது தேர்தல் பேச்சு ஆரம்பிப்பதற்கு சிறிது முன்பிருந்தே சந்தேகக் கண் பதிக்க ஆரம்பித்து விட்டது திமுக. பின்ன என்னாத்துக்கு தொகுதி பங்கீடப் பத்தி பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களுக்கு இவ்வளவுதான்னும் (வேற யாரைப் பற்றியும் பேச வில்லை), பட்டியலைக் குடுன்னும் நெருக்குனாங்க?. இரண்டாவது மத்தியில் உள்ள 'பிடி' (இப்ப அது இடி ஆயிரும் போல இருக்கு!!) மதிமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் எனவும் நினைத்தார்கள்.

//இல்லையென்றால் பொடா பற்றியெல்லாம் பேசி மானத்தை வாங்குவேன் என்பது என்ன சரியான வாதம்?//
இவ்விவகாரம் ஆரம்பித்தவுடன் அரசியலில் ஒரு பெரிய அபிப்ராயம் இல்லாத அப்ப அங்க... இந்தா இப்ப இங்கன்னு... மாத்தி குத்துர மனிதர்கள் கூட 'பொடா' பற்றி பேசியிருப்பார்கள். இவருக்காக பொடாவைத் திருப்பப் பெற வேண்டும் என போராடியிருப்பவர்கள் பேசக் கூடாதா? பேசினால் அது மானத்தை வாங்குவதா?., இன்னுமொருமுறை தனித்து நின்று இருந்திருந்தால் கூட நேர்மையான அரசியல்வாதி 'இமேஜ்' உயர்ந்திருக்கும் இக்கூட்டால் என்ன லாபம் பெட்டியைத் தவிர?.

//மத்திய கூட்டணியில் மதிமுகவை வெளியேற்ற வேண்டும் என்கிறார் //
அவர் சொல்றாரு விடுங்க. காங்கிரஸ் இந்தா உடனேயே அமைச்சரவைய விட்டு அனுப்பிறோம்னா சொல்லுவாங்க? இத வச்சு அவங்க எப்படி அரசியல் பண்ணலாம்னுதான் பார்ப்பாங்க. மத்தியில் கூட்டு ஒருவருடன்., மாநிலத்தில் கூட்டு இன்னொருவருடன் ... இது எங்கும் இல்லாததா? இருக்கிறது. ஆனால் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்ன செய்ய வேண்டும்?. எல்லா வகையிலும் வைகோவின் நேர்மையை கேலிக்குள்ளாக்கும் இக் கூட்டணியால் காளிமுத்துக்கு (வென்று வந்தால்) நிதித்துறை கிடைக்கலாம். மதிமுகவுக்கு என்ன கிடைக்கும்?. அப்போது.. ஆனானப்பட்ட பிஜேபிக்கு என்ன கிடைத்தது?.

//என்னுடைய ஆதங்கமெல்லாம் வைகோவை பொறுமையின் எல்லைக்கு தள்ளாமல் இன்னும் கொஞ்சம் அரவணைத்திருக்கலாம்.//
என்னுடைய ஆதங்கமெல்லாம் தமிழகம் தாண்டியும் தலைவராக நினைக்கப்படும் வைகோ சராசரி அரசியலுக்கு சாமரம் தூக்கக் கூடாது. அவர் நினைத்தால் நல்ல முன்னுதாரணம் அரசியலில் நிகழ்த்தலாம். மன வலிவுடன் சிறை சென்று தண்டனையை ஏற்ற அவரால் ஒரு மாறுபட்ட அரசியல் களத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும். அவ்வளவு தான் :-)).

கொழுவி said...

///ஈழ மக்கள் பெரும்பான்மையோரின் நம்பிக்கை பெற்றவரும், தமிழகத்தில் நேர்மையான அரசியல்வாதியாக சிலரால் நம்பப்படும் ஒருவர் ஏன் கட்சிக்காக இம்முடிவு எடுத்தலுக்கு செவிசாய்த்தார்?///

அதைத்தான் நானும் கேட்கிறேன்.
வை.கோ கட்சி நடத்தாமல் தி.மு.கவின் தொண்டனாகவே இருக்க வேண்டுமென்பது தானா உங்களின் அவா?
உங்கள் பதிலிலிருந்து வேறெந்தத் தொனியையும் என்னாற் கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசியற் கட்சியாக வந்துவிட்டால் அது என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாததா என்ன?
மேலும் தி.மு.கவின் கடந்த கால அரசியல் பற்றி வை.கோ ஏராளமான விசயங்களைச் சொல்கிறாரே? அரசியலில் கொள்கைக்கும் அதிகாரத்துக்கும் என்ன விகிதாசாரத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று அந்த எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு தி.மு.க செய்த அரசியலை விடவா மற்றவர்களுக்குப் பாடம் நடத்த முடியும்?

கொழுவி said...

//இன்னுமொருமுறை தனித்து நின்று இருந்திருந்தால் கூட நேர்மையான அரசியல்வாதி 'இமேஜ்' உயர்ந்திருக்கும் இக்கூட்டால் என்ன லாபம் பெட்டியைத் தவிர?.//


இதைத்தான் சில கட்சிகள் தியாகம் செய்யவே இருப்பதாகக் கருதிக்கொள்வதென்று மேலே சொல்லியிருக்கிறேன்.

சரி. திமுகவுடன் இருந்து, தி.மு.க வென்றிருந்தால் (கலைஞர் என்று சொல்லவில்லை) வை.கோவுக்கு என்ன கிடைக்கும்?.

கொழுவி said...

///என்னுடைய ஆதங்கமெல்லாம் தமிழகம் தாண்டியும் தலைவராக நினைக்கப்படும் வைகோ சராசரி அரசியலுக்கு சாமரம் தூக்கக் கூடாது. அவர் நினைத்தால் நல்ல முன்னுதாரணம் அரசியலில் நிகழ்த்தலாம். மன வலிவுடன் சிறை சென்று தண்டனையை ஏற்ற அவரால் ஒரு மாறுபட்ட அரசியல் களத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும். அவ்வளவு தான் :-)). ///


அப்படிப்போடு, இறுதியில் போட்டிருக்கும் நகைக்குறிக்கு என்ன அர்த்தம்?

Anonymous said...

இவ்விவகாரம் ஆரம்பித்தவுடன் அரசியலில் ஒரு பெரிய அபிப்ராயம் இல்லாத அப்ப அங்க... இந்தா இப்ப இங்கன்னு... மாத்தி குத்துர மனிதர்கள் கூட 'பொடா' பற்றி பேசியிருப்பார்கள். இவருக்காக பொடாவைத் திருப்பப் பெற வேண்டும் என போராடியிருப்பவர்கள் பேசக் கூடாதா? பேசினால் அது மானத்தை வாங்குவதா?., இன்னுமொருமுறை தனித்து நின்று இருந்திருந்தால் கூட நேர்மையான அரசியல்வாதி 'இமேஜ்' உயர்ந்திருக்கும் இக்கூட்டால் என்ன லாபம் பெட்டியைத் தவிர?.//

நேர்மையான அரசியல்வாதி என்ற இமேஜை ஜனதாதளம் வடிவேலு,முன்னாள் அமைச்சர் ராஜாராம்,போன்ற பலர் வைத்துள்ளனர்.அவர்கள் பட்டியலில் இடம் பெற வைகோவுக்கு விருப்பம் இருந்தாலும் அவர் கட்சிக்காரர்களுக்கு விருப்பம் இருக்க வேண்டுமல்லவா?

//எல்லா வகையிலும் வைகோவின் நேர்மையை கேலிக்குள்ளாக்கும் இக் கூட்டணியால் காளிமுத்துக்கு (வென்று வந்தால்) நிதித்துறை கிடைக்கலாம். மதிமுகவுக்கு என்ன கிடைக்கும்?. அப்போது.. ஆனானப்பட்ட பிஜேபிக்கு என்ன கிடைத்தது?.//

திமுக ஜெயித்தால் வைகோவுக்கு என்ன கிடைக்கும்?

//என்னுடைய ஆதங்கமெல்லாம் தமிழகம் தாண்டியும் தலைவராக நினைக்கப்படும் வைகோ சராசரி அரசியலுக்கு சாமரம் தூக்கக் கூடாது. அவர் நினைத்தால் நல்ல முன்னுதாரணம் அரசியலில் நிகழ்த்தலாம். மன வலிவுடன் சிறை சென்று தண்டனையை ஏற்ற அவரால் ஒரு மாறுபட்ட அரசியல் களத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும். அவ்வளவு தான் :-)). //

1996,2001 என அரசியலில் நல்ல முன்னுதாரணம் ஏற்படுத்த தான் முயன்றார்.தொகுதிக்கு 2000 முதல் 4000 ஓட்டு கிடைத்தது.கட்சியை தொடர்ந்து நடத்த வேண்டுமா,இல்லை சமூக முன்னேற்றம் விவசாயிகள் நலன் போன்றவற்றுக்கு பாடுபட வேண்டுமா?

அப்டிப்போடு... said...

//ஜெ.வுக்கு வை.கோ என்ற தனிநபர் மீதோ அவரின் கட்சிமீதோ தனிப்பட்ட பகையில்லை//

"அரசியலில் பழி வாங்கப்படும் விதமாக அநியாயமாக நான் கைது செய்யப் பட்டிருக்கிறேன்., நான் குற்றமற்றவன் என நிரூபணம் ஆகும்வரை ஜாமினில் வெளியே வர விருப்பமில்லையென்று" வைகோவே அப்போது சொல்லியிருக்கிறார். 'சிறையில் விரிந்த மடல்கள் ' கண்ணில் பட்டால் பாருங்கள்.

//நெடுமாறன், சு.ப.வீ, தாயப்பன் உட்பட நிறையப் பேர் அடைக்கப்பட்டார்களே //
இவர்கள் மட்டுமா? நக்கீரன் கோபல் கூட "தனிப்பட்ட எந்த விரோத்மும் இல்லாமல்!!!" அடைக்கப்பட்டார். இவர் மட்டுமல்ல கொழுவி., மதிமுகவின் முக்கியமானவர்கள் 8 பேரும் "தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லாமல்!!!"அடைக்கப்பட்டனர். வைகோவின் எதிரியல்லாத அவர்., "தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லாமல்!!!" மதிமுகவிற்கு சங்கு ஊதப்பார்த்தார்.

//நெடுமாறன், சு.ப.வீ, தாயப்பன் //
வைகோவை மாட்டும் தனியே அடைக்க முடியுமா., எனவே, முன்னும், பின்னும் தன் அதிகாரம் காட்ட இவர்கள். கொழுவி... எல்லாத்தையும் கேட்டு.... என்னப் போட்டுருவிங்க போல :-))).

//அரசியற் பலத்தைத் தக்கவைக்கவோ மேம்படுத்தவோ முயலவேண்டுமன்றி அவற்றையெல்லாம் இன்னொருவருக்கும் தாரைவார்த்துத் தொண்டாற்ற முடியாது//.
இக்கூட்டால்., வைகோவின் அரசியல் பலம் மேம்படுமா???. தாரை வார்க்க வேண்டாம்., எல்லா வீம்பும் திமுககிட்டதான்., அங்க போயி இனிமே எப்படி மரியாதை தக்க வைப்பார்ன்னு பாக்கத்தானே போறோம்?.

//நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன், வை.கோவின் எதிரி யாரென்று.//
பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்பின் பின்னும். அவர் வெளியே வரக்கூடாது., மதிமுக வளரக்கூடாதென்று உச்ச நீதி மன்றம் சென்றவர்கள் வைகோவின் எதிரி அல்ல. அதைக் கண்டித்து பொடாவைத் திரும்பப் பெற போராடியவர்கள் எதிரிகள். நல்ல தெளிவப்பா....!

//தான் தி.மு.க கூட்டணிதான் என்று வை.கோ. தெளிவாகச் சொன்னபின்னாவது ஒழுங்காக நடந்திருக்கலாமே//
இங்க படத்துக்கு சிரிச்சு போஸ் குடுத்து பேசறாரு. பின்னாடி சபாநயகரோடும் பேச்சு நடந்துகிட்டு இருக்கு. கட்சித் தலைகள் பெருத்த சிரிப்புடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டி குடுக்கிறார்கள். தெளிவா நாங்க இங்கதான்னு பேட்டி குடுத்துட்டு மறுநாள் அதிமுகவுடன் அதே புன்சிரிப்புடன் சூழுரை எடுக்கிறார்., அவர் செய்யறத பார்த்துகிட்டு இருந்தவங்கள வாருறிங்களே?. போனமுறையும் இப்படித்தான் கடைசி வரைக்கும் இருந்துட்டு கழுத்தருத்தார். அவர எப்படி நம்பறது?.

//வை.கோ கூட்டணி மாறியதுக்கும் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?//
இனிமேலும் தொடர்ந்து அதே 'கர்ஜனை'க் குரலில் தன் ஈழ ஆதரவை எவ்வித சமரசமும் இன்றி தொடருவாரானால் அதை கண்டு மகிழும் முதல் ஆளாக நானிருப்பேன்.

//தனித்துப் போட்டியிடும் தற்கொலை முடிவைக்கூட எடுத்தன சில கட்சிகள்//
மதிமுகவிற்கு அப்படி அல்ல. தனித்துப் போட்டியிட்டதால்தான் அக்கட்சியின் இருப்பு பெரும்பாலான கிராமங்களை சென்றடைந்தது. முதல் விளம்பரம் மதிமுகவிற்கே தனித்துப் போட்டி., இரண்டாவது விளம்பரம் வைகோ சிறைவாசம் (கட்சி வெளித் தெரிந்ததைச் சொன்னேன்., தயவுசெய்து அவர் கைதை மொட்டையாக விளம்பரம் என்று சொல்கிறேன் என எடுத்துக் கொள்ளாதீர்கள்.).

மதிமுக, விசிகளை அரவணைத்து மற்றும் பல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தால்.., தன்னாலே யாரும் சொல்லாமல் பெரிய மூன்றாவது கட்சியாகி இருக்கும் அல்லவா?. அவரும் எவ்வித சமரசமும் செய்ய வேண்டாம். சரி நீங்க இதைத்தான் தற்கொலைங்கிறிங்களே?. தொலை நோக்கு அரசியல் இன்றைய நிலையில் தற்கொலையாவதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். பனை வச்சவன் பார்த்துட்டு சாகனும்கிறதுதான் விதியா என்ன?!. ஆனால் பனை உறுதியிருந்தால் தென்னையாகும்., சமரசம் செய்து கொண்டே சென்றால் என்னவாகும்?

அப்டிப்போடு... said...

//அப்படிப்போடு, இறுதியில் போட்டிருக்கும் நகைக்குறிக்கு என்ன அர்த்தம்? //

உங்களுக்குதான் கொழுவி பின்னூட்டம் அடித்துக் கொண்டிருந்தேன். இங்கு பார்க்கவில்லை., நிறைய கேள்விகள். முதல்ல இதுக்கு சொல்லிற்றேன். அது ஜோவுக்கு போட்டது அவர் அவ்வளவுதான்னு முடிச்சுருக்கார்., அதனால் நானும் அப்படி முடித்திருந்ததால் போட்டேன். தவறாக ஒன்றுமில்லை.

அப்டிப்போடு... said...

//ஆனால் பனை உறுதியிருந்தால் தென்னையாகும்., சமரசம் செய்து கொண்டே சென்றால் என்னவாகும்? //

பனை உறுதியாக இருந்தால் விரைவில் தென்னையாகும் (பலன் கொடுக்கும்) என எழுத நினைத்தேன். கொழுவி.

அப்டிப்போடு... said...

//உங்கள் பதிலிலிருந்து வேறெந்தத் தொனியையும் என்னாற் கண்டுபிடிக்க முடியவில்லை.//

கொழுவி., உங்களால் கண்டுபிடிக்க முடியாது., ஏனென்றால் நான் திமுக அனுதாபி என்ற உங்கள் எண்ணத்தின் அடிப்படையிலல்லவா என் பின்னூட்டங்களைப் பார்க்கிறீர்கள்?. அவர் திமுகவின் தொண்டனாக இப்போது அல்லது சிறிது நாட்களுக்கு முன் இருந்ததைப் போல் பேசுகிறீர்களே?. மதிமுக உதயமாகும் முன்னரே ஸ்டாலின் திமுகவில் செல்வாக்கு பெற்ற போதே அவர் திமுகவின் தொண்டர் நிலையிலிருந்து மாறி விட்டார். அது தவறு என நான் சொல்லவில்லை.

//திமுகவுடன் இருந்து, தி.மு.க வென்றிருந்தால் (கலைஞர் என்று சொல்லவில்லை) வை.கோவுக்கு என்ன கிடைக்கும்?. //

எதுவும் கிடைகலாம்!!. கலைஞருக்குப் பின்னான அரசியலில்., கலைஞருக்கு அடுத்து திராவிடத் தலைவர் என்று சொல்லிக் கொள்ள வைகோவை விட்டால் ஆள் ஏது?. எதுவும் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் தன் கொள்கைகளில் அவர் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது. அது அவர் கட்சியை முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சென்றிருக்கும்.

அனானிமஸ்
//1996,2001 என அரசியலில் நல்ல முன்னுதாரணம் ஏற்படுத்த தான் முயன்றார்.தொகுதிக்கு 2000 முதல் 4000 ஓட்டு கிடைத்தது.//
அதுதான் முப்பது இடங்களுக்கு மேல் கேட்கும் அளவிற்கு இன்றைக்கு மதிமுகவை வளர்த்திருக்கிறது என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?.

சரி.. கொழுவி... சில விதயங்களை எழுதினால் பதிவின் நோக்கம் திசை மாறும் என்றாலும்., எழுதுகிறேன். ஜோ மன்னித்துக் கொள்ளுங்கள்.

திராவிட கொள்கைகள் இன்று இந்த அளவு தமிழகத்தில் நீர்த்துப் போயிருப்பதற்கு காரணம் தேர்தல், அரசியல்!!. உண்மையான 'சமூக நீதியை' நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப் பட்டவையெல்லாம் 'பலனை' மட்டுமே பார்த்ததன் பலன் இன்று 'சமூக நீதி' என்று எழுதினாலே கேலியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அன்று அப்படி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால்., நம் நிலையை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. இன்றைய சூழ்நிலையிலும் எங்கோ ஒரு மூலையில் பதிக்கப்பட்ட அனத்தல் குரல் இருந்துகொண்டுதானிருக்கிறது. அது சமூக நிதியின் வலியுருத்தலைக் கோரிக் கொண்டுதானிருக்கிறது. கழக அரசியலின் காதில் அது விழுந்தாலும் பலன்?. 'மாற்றம் என்பது நடிகர்களைக் கொண்டு' என பயமுருத்தி உள்ளதையும் பறிக்கப் பார்க்கிறது ஊடக அரசியல். இதற்கெல்லாம்., மாற்றான ஒரு சக்தி., எந்தச் சமரசமும் இல்லாத., சமூக நீதியை மட்டுமே பற்றிக் கொண்டுவரும் ஒன்று., அந்த ஒன்றை., இன்றைய அரசியலில் (சிறிதாவது) நேர்மையான, துணிவான (கொழுவி., இது மட்டுமே என்னால் எழுத முடிந்தது) அரசியல் வாதியின் முகத்தில் தேடினால்....அவர் நம்முகத்தில் நன்றாகப் பூசிவிட்டு., சமரச அரசியலில் விழுந்தால் ஏற்படும் எரிச்சலை எழுத்தில் கொண்டுவர முடியாது. எனவே அதற்குமுன் நாம் பெரிதாக நினைத்த ஒன்றை (இங்கு (எனக்கு) திமுக என்று வைத்துக் கொள்ளுங்கள்)., ஆதரித்துவிட்டுச் செல்ல வேண்டியதுதான். அப்படியென்றால் இப்படிப்பட்ட ஆதரவு சமரசம் இல்லையா? எனக் கேட்டீர்களேயானால்., ஆமாம்., வேறு வழியில்லாமல்., ஆனால் அது தனிப்பட்ட என்னுடன் முடிந்துவிடுவது. உங்கள் வாதங்களுக்கு நன்றி.

ஜோ / Joe said...

// 'மாற்றம் என்பது நடிகர்களைக் கொண்டு' என பயமுருத்தி உள்ளதையும் பறிக்கப் பார்க்கிறது ஊடக அரசியல். இதற்கெல்லாம்., மாற்றான ஒரு சக்தி., எந்தச் சமரசமும் இல்லாத., சமூக நீதியை மட்டுமே பற்றிக் கொண்டுவரும் ஒன்று., அந்த ஒன்றை., இன்றைய அரசியலில் (சிறிதாவது) நேர்மையான, துணிவான (கொழுவி., இது மட்டுமே என்னால் எழுத முடிந்தது) அரசியல் வாதியின் முகத்தில் தேடினால்....அவர் நம்முகத்தில் நன்றாகப் பூசிவிட்டு., சமரச அரசியலில் விழுந்தால் ஏற்படும் எரிச்சலை எழுத்தில் கொண்டுவர முடியாது. எனவே அதற்குமுன் நாம் பெரிதாக நினைத்த ஒன்றை (இங்கு (எனக்கு) திமுக என்று வைத்துக் கொள்ளுங்கள்)., ஆதரித்துவிட்டுச் செல்ல வேண்டியதுதான். அப்படியென்றால் இப்படிப்பட்ட ஆதரவு சமரசம் இல்லையா? எனக் கேட்டீர்களேயானால்., ஆமாம்., வேறு வழியில்லாமல்//

அப்படியே எனக்கும் பொருந்துகிறது.நன்றி அப்படிப்போடு!

Anonymous said...

எதுவும் கிடைகலாம்!!. கலைஞருக்குப் பின்னான அரசியலில்., கலைஞருக்கு அடுத்து திராவிடத் தலைவர் என்று சொல்லிக் கொள்ள வைகோவை விட்டால் ஆள் ஏது?. எதுவும் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் தன் கொள்கைகளில் அவர் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது. அது அவர் கட்சியை முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சென்றிருக்கும்.//

அடுத்த திராவிட இயக்க தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் தான்.இதில் என்ன சந்தேகம்?
மக்கள் திராவிட இயக்கத்தை எல்லாம் பார்த்து வாக்களிப்பதில்லை.அரிசி,தண்ணீர்,ரோடு இது தான் கேட்கிறார்கள்.கொள்கை உள்ள கட்சி என்று எதுவும் கிடையாது.ஆட்சியை பிடிப்பது தான் கொள்கை.இதில் வைகோ மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்கிறீர்கள்?


//அதுதான் முப்பது இடங்களுக்கு மேல் கேட்கும் அளவிற்கு இன்றைக்கு மதிமுகவை வளர்த்திருக்கிறது என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?//

அப்போதே பா.மாக மாதிரி கூட்டணி போட்டு நின்றிருந்தால், 20 MLA 6 MP வைத்துக்கொண்டு பேரம் பேசியிருந்தால் இன்று 60 இடம் கேட்கும் அளவுக்கு வந்திருப்பார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?

ஜோ / Joe said...

//அப்போதே பா.மாக மாதிரி கூட்டணி போட்டு நின்றிருந்தால், 20 MLA 6 MP வைத்துக்கொண்டு பேரம் பேசியிருந்தால் இன்று 60 இடம் கேட்கும் அளவுக்கு வந்திருப்பார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?//

அனானிமஸ் அண்ணே! நச்சுன்னு கேட்டீங்களே!உங்க பேரையும் சொன்னாத்தான் என்னவாம்?

Krishna said...

Appadi Podu, VEry well said. ME too feel the only option for me now is DMK, though it has come far away from our esteem.
//அப்போதே பா.மாக மாதிரி கூட்டணி போட்டு நின்றிருந்தால், 20 MLA 6 MP வைத்துக்கொண்டு பேரம் பேசியிருந்தால் இன்று 60 இடம் கேட்கும் அளவுக்கு வந்திருப்பார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?//

Appavum oru thappana mudivu, athu JJkku sadagama mudinjathu. Appa DMK Kootaniyileye irunthiruntha, Koottani arase vanthirukkalam. JJkku konjam koranju, pinnala irukkaratha vachi, PMK, MDMK, Congress + communists serntha oru arasu, kattayam nalla irunthirukkum. Ippavum oru thappana mudiva theriyuthennu oru kalakkam. Avvalavuthan. DMK or ADMK, both if given second continuos term, then TN will go back by 50 years...

முத்து(தமிழினி) said...

ஜோ,

பொறுமையா 60+ பின்னூட்டங்களை நான் படிச்சதுல எனக்கு புரிஞ்சது என்னன்னா நீங்க வைகோவை பத்தி ரொம்ப உயர்வா நினைச்சிருக்கீங்க....(நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.இன்னமும் பரிதாபம் வருகிறது அவர்மேல்.அனுதாபம் இருக்கு.ஆனா ஒரு அடிமட்ட தொண்டனுக்கு அது இருக்காது )

1. அவருக்குமுடிவெடுக்கும் தன்மை இல்லை..(decision making)

2. உணர்ச்சி வசப்படுவது மேடை பேச்சில் மட்டும் வைத்துகொள்ளவேண்டும்.இப்போது எல்லாம் நடிப்போ என்று தோன்றுகிறது.

3.தலைமை பண்பு நிரூபிக்கப்படவில்லை

4.ஈழ பிரச்சினையும் கிளீன் இமேஜும் கைகொடுக்கிறது.மற்றபடி சுத்தம்.

5.தமிழ்சசி கூறிய மாதிரி பா.ம.க அளவிற்கு இவர்களுக்கு செல்வாக்கு இல்லை.(ஓட்டு அடர்த்தி சமாச்சாரத்தில் உங்கள் பார்வையில் இருந்து மாறுபடுகிறேன். பல தொகுதிகளில் சுயேட்சைகள்கூட 1000 -4000 ஓட்டு வாங்குகிறார்கள்)

6.திமுக வை ஆதரிக்க வேண்டிய காரணங்களை அப்டிபோடு அக்கா புட்டுபுட்டு வைத்துவிட்டார்.நாம் எதுவும் சொல்வதற்கில்லை.

7. வைகோவிற்காக கண்ணீர் வடிக்கும் ஓநாய்கள் இதற்கு முன்பு இன பிரச்சினைகளில் வைகோவை துவைத்து காயபோட்டவர்கள் தான்.( உங்களை சொல்லலைங்க)

8.மெகா கூட்டணியில் வைகோ அட்ஜஸ்ட் பண்ணியிருக்கலாமே...

9. ரகசிய பேச்சுவார்த்தை அவர்செய்ய வில்லையா?

10.ஜெயில் மேட்டரை ஜீரணிக்க முடியாதுங்க...

11.ஒருவேளை தி.மு.க வென்றால் இவர் நிலை என்ன?

12.எதை நம்பி இவர் கலைஞருக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு மாற்று என்று சொல்லுவது?

கொழுவி said...

அப்படிப் போடு,
வை.கோ தனித்துப் போட்டியிட்டிருக்கலாம் அல்லது தி.மு.கவிலேயே கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்திருக்கலாமென்று சொல்லப்படும் ஆலோசனைகளை விட, பேசாமல் மதிமுக வைக் கலைத்துவிட்டு இயக்கம் நடத்தலாமென்ற ஆலோசனை சிறந்தது.
நீங்கள் சொல்வது போல் முன்னுதாரண அரசியலை எவ்வளவு காலத்துக்கு நடத்துவது? பன்னிரண்டு வருடங்களென்பது சும்மாவா?
நீங்கள் சொல்லும் எதையும் செய்ய வேண்டுமானால் வை.கோ கட்சியைக் கலைத்துவிட்டு அரசியல் துறவறம் பூண வேண்டியதுதான். அதன் மூலம் மக்களிடம் இன்னும் அதிக மதிப்பையும் நற்பெயரையும் சம்பாதிக்க முடியும். அப்போது, இப்போதிருக்கும் சமரங்கள் கூட இல்லாமல் தெளிவாக மேடையில் பேச முடியும்.

எனக்கு திமுக வோ அதிமுக வோ வெல்வது பற்றிப் பிரச்சினையில்லை. ஓர் ஈழத்தவாக இரு சக்திகளுமே எமக்கு ஒன்றுதான் என்ற தெளிவுடன் தான் இருக்கிறேன். கலைஞர் வந்தால் "ஈழம் பற்றிய அவரின் சொற்களுக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே, இப்போது பார்ப்போம்" என்று விடுப்புப் பார்க்க முடியும்.
ஆனால் தங்களை ஒறுத்துக் கொள்ளவும் தியாகம் செய்யவுமென சிலரை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டிருப்பதும், அவர்கள் அத்துமீறும் போது தூசிப்பதும்தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதுவும் இம்முறை மாட்டுப்பட்ட அந்த இருசக்திகளும் ஈழத்தவனான எனக்கு விருப்புக்குரியனவென்பதும் முக்கியமானது.

நீங்கள் சொல்லும் சமூக நீதிக்கான அரசியலின் நம்பிக்கை வை.கோவின் கூட்டணி மாற்றத்தாற் குலைந்துபோனதாக நீங்கள் நினைப்பதன் தாக்கத்தால்தான் நீங்கள் இதை எதிர்க்கிறீர்கள் என்றால் மகிழ்ச்சி. ஆனால் உங்கள் எழுத்தில் அது தெரியவில்லை. (அது எனக்கு ஏன் தெரியவில்லையென்று நீங்கள் சொன்ன காரணம் நன்று) இல்லாவிட்டால், "இனிமே இங்காலப்பக்கம் வந்திராதீங்க ராசா" என்று நையாண்டி பண்ண முடியுமா?
ஆனால் இதற்கு முன்பும் வை.கோ எதிர்த்தரப்பிலிருந்தபோது இதே மாதிரி "இனி இங்காலப் பக்கம் வந்திராதீங்க ராசா" என்று நீங்கள் சொல்லியிருந்தால், அதன்பின் வை.கோவை வெளியில் வரச்சொல்லி தமக்காக (தமது கூட்டணிக்காக என்று நாகரீகமாக எடுத்துக்கொள்ளலாம்) பிரச்சாரம் செய்ய வைத்துக் கூட்டணி ஏற்படுத்தியபோது யாராவது "இங்கே வந்திராதீங்க ராசா" என்பதைச் சுட்டிக் கேள்வி கேட்டிருக்கலாம். இனிமேல் அப்படியேதும் நடக்காதென்ற துணிவில்தான் நீங்கள் இப்படிச் சொன்னீர்களோ தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

******************
மீண்டும்,
வை.கோவை அடைப்பதற்காகத்தான் பழ.நெடுமாறன், சுபவீ, தாயப்பன், சாகுல் ஹமீது மற்றும் மதிமுகத் தலைவர்கள் உட்பட இன்ன பிறரையும் ஜெ. சிறையிலடைத்தாரென்று சொல்ல வருகிறீர்களா? அப்போ விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது ஜெ.வுக்குப் பிரச்சினையில்லையா? வை.கோ மீதான தனிப்பட்ட கோபத்தைக் கொண்டுதான் ஈழப்பிரச்சினையையோ ஈழ ஆதரவாளர்களையோ ஜெ. எதிர்கொள்கிறாரா?
கருணாநதிக்கு வை.கோ மீது இருக்கும் தனிப்பட்ட எரிச்சலும் அச்ச உணர்வும் ஜெ.வுக்கு இல்லையென்று நான் சொன்னதை மறுப்பதற்காக இப்படித் திரித்துச் சொல்லியிருக்க வேண்டாம். வை.கோ கைதுக்கு ஈழ அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகள் மீது ஜெ.வுக்கு இருக்கும் காழ்ப்புணர்வே காரணமேயன்றி வை.கோ என்ற தனிநபர் மீதானதல்ல என்றுதான் நான் சொல்கிறேன்.
ஆனாலும் உங்கள் வாதத்துக்கு அருமையான எடுத்துக்காட்டை வை.கோ வே எழுதியிருக்கிறாரென்பது உங்களுக்குச் சாதகம் தான்.

கொழுவி said...

வை.கோவின் செவ்வியிலிருந்து ஒரு பகுதி.

வை.கோவுக்கு 25 தொகுதிகள் தரலாமென்று கருணாநிதி சொல்லியிருக்கிறார்.
பின்னொருநாள் வீராசாமியை அனுப்பி வை.கோவுடன் பேசச் சொல்லியிருக்கிறார். அதில் 20 தொகுதிகள் தான் உங்களுக்கு ஒதுக்க முடியுமென வீராசாமி சொல்கிறார். வை.கோ மறுக்கிறார். கலைஞர் ஒத்துக்கொண்டதை ஏன் மாற்றுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். பின் 21 என்று சொல்கிறார் வீராசாமி.
பேச்சு சரிவராமல் சில இழுத்தடிப்புக்குப்பின் கலைஞரோடு நேரடியாகச் சந்திக்கிறார் வை.கோ. அப்போது 22 தான் தரலாமென்கிறார் கலைஞர்.
அப்போது, முன்பு 25 தருவதாக வாக்களித்தீர்களே என்று வை.கோ கேட்க, அப்படிச் சொல்லவில்லையென்று கலைஞர் மறுத்திருக்கிறார். கலைஞர் அதை ஒத்துக்கொள்ள மறுத்தபின், சரி, ஒன்றிரண்டு குறைத்துக்கொண்டு தருவதாகச் சொன்னீர்களே, அதன்படியாவது அந்த ஒன்றிரண்டைக் குறைத்துக்கொண்டு தாருங்கள் என்று வை.கோ கெஞ்சியிருக்கிறார். அதற்கும் மறுப்பு. 22 தான் என்று கலைஞர் சொல்ல, அப்படி நீங்கள் முன்பு சொல்லவில்லையே என்றிருக்கிறார் வை.கோ.
முன்பு சொன்னதன்படி ஒன்று இரண்டு மூன்று தொகுதிகள் குறைத்துக்கொண்டு 22 தருகிறேன் என்கிறார் கலைஞர். முன்பு நீங்கள் மூன்று என்ற சொல் பயன்படுத்தவில்லையே என்று கேட்க,
ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் மூன்று என்று கணக்குப்பாடம் சொல்லிக்கொடுத்தார் கலைஞர்.

இவர்தான் கலைஞர். வை.கோ மீது தீராத பற்றுக்கொண்டவர். வை.கோவுக்குக் கணக்குப்பாடம் சொல்லிக்கொடுப்பதற்காக, முதலாம் வகுப்புப் பாடம் போல ஒன்று இரண்டைக் கூட்டும் முறைபற்றிச் சொல்லிக்கொடுப்பதற்கு எவ்வளவு பொறுமை வேண்டும்? எவ்வளவு திறமை வேண்டும். குறிப்பாக வை.கோ மீது எவ்வளவு பாசம் வேண்டும்?

****************************
இந்த விசயத்தில் கருணாநிதிக்கு ஆதரவாக யாரும் கதைக்க வந்தால் அவர்களுக்கிருக்கும் ஒரே வாதம்,
"வை.கோ. பொய் சொல்கிறார்" என்று சொல்வது மட்டுமே.

கொழுவி said...

அப்படிப்போடு,
சமூக நீதியோ என்னவோ, எல்லாவற்றுக்கும் கலைஞரை உதாரணமாகக் காட்டுகிறீர்களா? (உங்கள் எழுத்திலிருந்து என்னால் சரிவர உணர முடியவில்லை)
ஆனால் கலைஞரை உதாரணப்படுத்திவிட்டு வை.கோவைச் சாடுகிறீர்கள் பாருங்கள். அங்கேதான் நிற்கிறீர்கள் நீங்கள் கலைஞர் அனுதாபியாக.
குறைந்தபட்சம், "கலைஞரிடமில்லாத நேர்மையையும், சமூக நீதியையும் வை.கோவிடமாவது எதிர்பார்த்தேன். அவரும் ஏமாற்றிவிட்டார்" என்றாவது ஒரு வசனம் எழுதியிருந்தால் நன்று. கலைஞர் அளவுக்கு மோசமில்லாத சமூக நீதியையும் அரசியல் நேர்மையையும் (அரசியல் நேர்மை - உங்கள் பார்வையில் கூட்டணி மாறுவது) வை.கோ கொண்டிருக்கிறாரென்பதை உங்களால் மறுக்க முடியுமா?

ஜோ / Joe said...

கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும்,குறிப்பாக இதை ஒரு அருமையான விவாதக்களமாக்கிய அப்படிப்போடு,கொழுவி இருவருக்கும் நன்றி!

Gopalan Ramasubbu said...

/(2) அதிமுகவுடன் இணைந்தால் பொது மக்களிடையே மதிப்பிழப்பு.

/(2) அவரை நிரந்தரமாக பாதித்து விடும் ... அவரும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியே என்ற களங்கத்தை மக்களிடையே உறுதிப்படுத்தி. எனவே குறுகிய காலத்தில் வைகோவின் பிரிவு கருணாநிதிக்கு நட்டம் என்றாலும், நீண்ட கால நோக்கில் இலாபமே./


Well,I just want to know one thing.We all know what kind of wave we had against JJ in 1996 but look what happened in 98 LS election.She won 18 seats(not sure) i guess.So, does that mean she gained her image back with in 2 years inspite of all her attrocities during (91-96).If yes, then Why can't Vaiko get his image back in 1 year after all it's just an election alliance.

Image in Tamilnadu politics is not permanent but if Vaiko gets 10 or 15 MLA's then it's permanent atleast till next Assembly election.

வெங்காயம் said...

முத்து(தமிழினி) அவர்கள் சொல்வதை அமைதியாக இருந்து சிந்தித்துப் பார்த்தேன். அவர் சொல்வது நியாயமாகத்தான் தெரிகிறது.

அப்டிப்போடு... said...

இன்று முழுநாளும் குண்டாய் சர்விஸ் சென்டரில் தொலைந்ததால் நம்ம பதில்கள் இப்ப.,

அனானிமஸ்.,

//அப்போதே பா.மாக மாதிரி கூட்டணி போட்டு நின்றிருந்தால், 20 Mளா 6 MP வைத்துக்கொண்டு பேரம் பேசியிருந்தால் இன்று 60 இடம் கேட்கும் அளவுக்கு வந்திருப்பார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?//

இவ்வாதம் சரிதான். ஆனால்., அப்போதும்., முதலில் கலைஞரிடம் பேரம் பேசினார். படியவில்லை. பின்னர் அம்மாவிடம் இன்று 40 இடம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்று 35 ல் நிற்கிறாரே.. அதே போல் அன்றும் 40 கிடக்கும் என்று சென்று பார்த்தார். அம்மா ஓரளவுதான் வளைய முடியும் என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் தனித்து நின்றார். முடிவு எடுக்கணும்ல?.,

கொழுவி
//நீங்கள் சொல்வது போல் முன்னுதாரண அரசியலை எவ்வளவு காலத்துக்கு நடத்துவது? பன்னிரண்டு வருடங்களென்பது சும்மாவா?//

பன்னிரண்டு வருடங்களாக., மத்திய மந்திரி, எம்.பிக்கள் மதிமுகவுக்கு உண்டு ஆனால் ஒரு எம்.எல்.ஏ கூட மதிமுகவின் சார்பாக இல்லையென்பதுதான் இக் கூட்டணிக்கு இருக்கும் ஒரே காரணம். கனியாகுமரியிலிருந்து கோட்டை வரை நடந்தவர் நடைபயணம் வேஸ்ட், சிறை வேஸ்ட்., முன்பே அம்மா வளையாமல் கொடுத்தை வாங்கியிருந்தால் பாமாக மாதிரி இருந்திருக்கலாம். பன்னிரண்டு வருடங்களும் மதிமுகவிற்கு எம்.எல்.ஏ இல்லாமல் வீணாகி இருக்காது. அவர் முயன்று பார்த்தார், சரியான காலத்தில் சரியான முடிவு எடுத்திருக்கவில்லை. இப்போது கூட முன்பே போயிருந்தால் 40 இடம் கிடைத்திருக்கலாம். ஆனால் இக்கூட்டணி முடிவு சரியானதல்ல. இப்போது கூட தைரியமாக இது கூட்டணி என்றா சொல்கிறார்? தேர்தல் உடன்பாடு என்றல்லவா சொல்கிறார்?. அவரது நேர்மை இமேஜ்தான் அவர் நீங்கள் சொல்வது போல் அத்து மீறும்போது துசிக்க வைக்கிறது.

இதே மாற்றம் மற்ற கட்சிகளில் இருந்தால் யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில் யாரும் நேர்மை இமேஜை காப்பற்ற துடிப்பதில்லை வைகோ போல். மதிமுகவின் வளர்ச்சி தாமதப் படுவதற்கு காரணமே அங்கு வைகோ முடிவெடுக்காமல் எல்.ஜியும் செஞ்சியும் எடுப்பதுதான்.

//இம்முறை மாட்டுப்பட்ட அந்த இருசக்திகளும் ஈழத்தவனான எனக்கு விருப்புக்குரியனவென்பதும் முக்கியமானது.//

உங்கள்ளுக்கு விருப்பு மாதிரி எங்களுக்கு அனுதாபம் இருக்கக்கூடாதா?

//இனிமே இங்காலப்பக்கம் வந்திராதீங்க ராசா" என்று நையாண்டி பண்ண முடியுமா?//
திமுகவுக்கும் மதிமுகவிற்கும் ஒத்து வாராதுங்க., பாமகவுக்கு ''காங்கிரஸ் தலைவராக'' பொறுப்பு வாங்கும் வரை உழைக்கிறார்களே ஏன்?. கூட்டணி வைத்தால் ஒழுங்காக வேலை செய்வார்கள். மதிமுக மாதிரி திமுக வெல்வதற்கு நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என நினைக்க மாட்டார்கள். மதிமுகவிற்காக மத்திய அமைச்சரவையை விட்டு வெளியே வந்த கட்சி திமுக. (முக்கியக் காரணம் பொடாதான்).

//ஜெ.வுக்கு இல்லையென்று நான் சொன்னதை மறுப்பதற்காக இப்படித் திரித்துச் சொல்லியிருக்க வேண்டாம்//
ஏன்னங்க இது., நக்கீரன் அலுவலகத்துல எதை வச்சு போட்டாங்கன்னு உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?. இல்ல திருச்சி., ம.சி ல ஆரஞ்சு பழத்தோட என்னை வந்து பார்க்கறதுக்கு பிளான் போடறிங்களா? :-))). (இது சும்மா நகைச் சுவைக்காததான்!!., எவ்வளவு நேரம் சீரியஸ்ஸாப் பேசிகிட்டு இருக்கிறது?...)

//ஜெ.வுக்கு இருக்கும் காழ்ப்புணர்வே காரணமேயன்றி வை.கோ என்ற தனிநபர் மீதானதல்ல என்றுதான் நான் சொல்கிறேன்.
ஆனாலும் உங்கள் வாதத்துக்கு அருமையான எடுத்துக்காட்டை வை.கோ வே எழுதியிருக்கிறாரென்பது உங்களுக்குச் சாதகம் தான். //
இது எடுத்துக்காட்டுன்னு இல்ல என் வாதத்துக்காக என்று எடுத்துக்கிட்டிங்கன்னா., வைகோ புத்தகமே போட்டிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து கன்னியாகுமரியிலிருந்து சென்னை கோட்டைவரை சீருடையுடன் நடந்திருக்கிறார். நான் வாததுக்காக எதையும் சொல்லவில்லை கொழுவி. நீங்கள் வென்றதாகவே இருக்கட்டும்.

//வை.கோவின் செவ்வியிலிருந்து ஒரு பகுதி//.
http://www.nakkheeranbiweekly.com/ இங்கயும் பாருங்க..,
அவரவர் வழியில் அவரவர் போக வேண்டியதுதான் கொழுவி. என்னுடைய நிலைப் பாட்டை ஆணி அறைஞ்ச மாதிரி சொல்லணும்னு நினைக்கிறிங்க. சரி.. இந்தத் தேர்தலில் கலஞரின் கூட்டணி வெற்றி பெற விரும்புகிறேன்!!. வெற்றி பெற்றால் அமைச்சரவையில் வைகோ இருக்க மாட்டார் அதற்காக வருந்துகிறேன்!!!. இவ்வரிகளால் என்னை உங்களுக்கு எவ்வளவு புரிகிறதோ., அவ்வாறே வைத்துக் கொள்ளுங்கள். நன்றி.

ஜோ / Joe said...

//இந்தத் தேர்தலில் கலஞரின் கூட்டணி வெற்றி பெற விரும்புகிறேன்!!. வெற்றி பெற்றால் அமைச்சரவையில் வைகோ இருக்க மாட்டார் அதற்காக வருந்துகிறேன்!!!. //
அப்படிப்போடு,
நானும் இதே நிலையில் தான்.

Krishna said...

//இந்தத் தேர்தலில் கலஞரின் கூட்டணி வெற்றி பெற விரும்புகிறேன்!!. வெற்றி பெற்றால் அமைச்சரவையில் வைகோ இருக்க மாட்டார் அதற்காக வருந்துகிறேன்!!!. //
Appadipodi,
I also feel the same.

A leader should be very firm at certain times. But, here always he gets pulled down by the so called, cadreless second rank leaders. I think, only in MDMK, the cadres are ready to forget his leaders 19 months jail. No other party would have done this (of belitting their leaders sufferings).

கொழுவி said...

நன்றி அப்படிப்போடு,
யோவ், என்னையும் அரசியல்வாதியாக்கிவிட்டீர்களே? (வெல்வதற்காக வாதாடியதால் ;-) ) எனக்கும் வெல்லப்போகும் கூட்டணியாக தி.மு.க பக்கம் தான் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
*************************
வை.கோ கைது தனிப்பட்ட அரசியற்பகையால் என்றே வைத்துக்கொள்வோம். மேலும் கதைக்க ஏதுமில்லையென்றாலும், அந்த வாதத்தின்படியே - தனக்குரிய போட்டியாளராகவோ, குறிப்பிடத்தக்க எதிர்ச்சக்தியாகவோ, எதிர்கால அரசியலில் பயப்படத்தகுந்தவராகவோ ஜெயலலிதாவே (ஏகாரம் முக்கியம்) கருதிச் சிறையிலிட்ட வை.கோவுக்குரிய மரியாதையும் அரசியல் அங்கீகாரமும் தி.மு.க கூட்டணியில் கொடுக்கப்படாமல் எக்ஸ்ரா லக்கேஜாக (நன்றி குழலி) அல்லவா அவமதிக்கப்பட்டார்? என்று வேறொரு பக்கத்தைத் திறக்க விரும்பவில்லை. (ஏற்கெனவே வெற்றிக்குக் கதைப்பவனாக கருதப்படுவதால். அல்லது வெற்றி பெற்றபின் எதற்கு இதெல்லாம் என்பதால்;-))))))))
***********************
மீண்டும் நன்றி. நன்றி. நன்றி.

Krishna said...

Congress given 48 (as per dinamar latest news). seems MK steadying....!!?

முத்து(தமிழினி) said...

நன்றி திரு.வெங்காயம்....வைகோவை பற்றி ஆழமான ஆராய்ச்சிகளின் பலனாக நாம் கண்டடைந்தது இது......:)))))

அப்டிப்போடு... said...

நன்றி ஜோ, ஒத்த கருத்துக்கள் கொண்ட கிருஷ்ணா, முத்து ஆகியோருக்கு நன்றி. மாற்றுக் கருத்துக் கொண்டாலும் விவாதம் சுவையாக செல்ல வைத்ததால் கொழுவி அனானிமஸ்க்கு நன்றி.

//யோவ், என்னையும் அரசியல்வாதியாக்கிவிட்டீர்களே? (வெல்வதற்காக வாதாடியதால் ;-) ) எனக்கும் வெல்லப்போகும் கூட்டணியாக தி.மு.க பக்கம் தான் தெரிகிறது.//
யோவ்...? சரியாப் போச்சு...! ம்... திமுக வெல்லும் கூட்டணி என்று தெரிந்து வைகோ அதிமுக பக்கம் சென்றதை ஆதரித்த கொழுவி!!., என்னாத்த சொல்றதப்பா....:-)).

அப்டிப்போடு... said...

அல்லது வெற்றி பெற்றபின் எதற்கு இதெல்லாம் என்பதால்;-))))))))

அதுசரித்தான்... :-))))).

Pot"tea" kadai said...

//இந்தத் தேர்தலில் கலஞரின் கூட்டணி வெற்றி பெற விரும்புகிறேன்!!.//
அப்படிப்போடு அக்கா,
நானும் இதே நிலையில் தான்.
//வெற்றி பெற்றால் அமைச்சரவையில் வைகோ இருக்க மாட்டார் அதற்காக வருந்துகிறேன்!!!. //
வருத்தப்படறதுக்கு ஒன்னும் இல்ல...

ஆனா நண்டு கொழுத்தா வலைல தங்காதாம்...மெய்யாலுமா? :-)))

அழகப்பன் said...

தி.மு.க. கூட்டணியின் இணைய தள பிரச்சார குழு தலைவி அப்படிப்போடு அவர்களே, வை.கோ. மீது பற்றிருந்தாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்பும் ஜோ அவர்களே, பாசமுள்ள சகோதரர் முத்து (தமிழினி) அவர்களே ..... (சரி, சரி நிறுத்திடறேன்)

என் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.....

அப்டிப்போடு... said...

நன்றி சத்யா., நண்டு பிறாண்டிறத விட்டா., மாட்ட இருந்தது வலையில்லன்னு தெளிவு வரும். வலை நினைஞ்சுகிட்டு தங்காம போயி வலையில மாட்டுது. தேர்தலுக்கு பின்ன வலையில (இப்ப இருக்கிற) தங்காதுன்னு சொன்னிங்கன்னா., 100% சரி. ஒரு வருடத்திற்குள் உடையும்.

//தி.மு.க. கூட்டணியின் இணைய தள பிரச்சார குழு தலைவி அப்படிப்போடு அவர்களே, வை.கோ. மீது பற்றிருந்தாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்பும் ஜோ அவர்களே, பாசமுள்ள சகோதரர் முத்து (தமிழினி) அவர்களே ..... (சரி, சரி நிறுத்திடறேன்)//

ஆகா., அழகப்பன் அவர்களே... திமுகவுல மா.செ., ஓ.செ ல எது முடியுமோ உங்களுக்குப் "பார்த்துர்றோம்" போதுமா? :-)))).

Krishna said...

Alagappan ayya avargale, Ennai ippadi othukki vaithu vitteerkale, ithu nyayama, dharmama, ithu ungalukku azhaka?? Nangal seatukkaka kootani vaithukkolbavarkal alla. Idhayathile idam koduththal pothum. Athuvum illai enral eppadi? (hope sethuraman, RMV and Poovai Jegan get seat)

மதுமிதா said...

ஜோ

எல்லா அலசல்களையும்,காரண காரியங்களையும் கடந்து அம்மா
அதிமுக வெற்றி பெறப்போவது உறுதி.(நான் அதிமுக உறுப்பினர் இல்லை)

ஏதேனும் மிராக்கிள் அற்புதம் நிகழ்ந்தாலொழிய இம்முறை திமுகவின் வெற்றிக்கான சாத்தியக்கூறு இல்லை.

எந்தக் கணக்கெடுப்பும் இல்லாது நேரடியான மக்களின் மனநிலை ஆராய்ந்து சொல்லியது இது.

வைகோவின் தேர்தல் உடன்பாடு எனும் வெளிப்படையான பேச்சு உத்தி இச்சமயத்தில் தேவையான ஒன்றே. கலைஞரின் ஒருதலைப்பட்ச
முடிவுக்கு இறுதி மணி

ஜோ / Joe said...

மதுமிதா,
வாங்க!உங்க கருத்துக்கு நன்றி!
உங்களைப்போலவே நானும் கணித்திருந்தாலும் ,இப்போது கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்குவதை பார்க்கும் போது ,அவரும் இதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது .கூட்டணிக் கட்சிகளை குஷிப்படுத்தி வெற்றிக்கனியை பறிக்க முயல்கிறார்.. பார்ப்போம் ..நீங்க சொன்னது போலவே..நான் திமுக உறுப்பினர் இல்லையென்றாலும் ,என் ஓட்டு திமுக-வுக்கு தான்.

ஜோ / Joe said...

பாண்டி,
உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்க தகுதியற்றது .மன்னிக்கவும்.

Anonymous said...

moral for kalaignar karunanidhi :"oorar pillaiyai ooty varlarthal ,athu mattumey valarum ".
oorar pillai : vaiko and others

oru kelvi : dmk il family aatchi nadakuthunnu solli solliye..namma makkal have successfully preventedStalin coming to the limelight .
Unfortunately Karunanidhi ..is not a family man who has done justice to his sons..like Ramadass, Moopanar or maybe Vaiko .
Kalaignar's sons are in the society without any directions (mu.ka muthu and
Stalin etc).
Karunanidhi is a bad father but he is blamed for running family politics .

hmmm all my congrats to these successful fathers
G.K.Moopanar -G.K.Vasan (within 2 years he was Chief)
Ramadoss : anbumani ..hmm we know his speed.

Paavam Kalaignar ..he should have concentrated on national politics ..now he has to stoop low to persons ..who were once waiting for his hand wave or glimpse ...
hmmm..if there was only a retirement age in politics!

அழகப்பன் said...

இதையும் கொஞசம் படிங்க...

தேர்தல் திருவிழா - ம.தி.மு.க.

neo said...

நண்பர் ஜோ,

ஒருமுறை கூட தேர்தல்ல் நின்று மக்களிடம் நேரடியாக ஓட்டு வாங்கித் தேர்ந்தெடுக்கப்படாத கோபால்சாமியை (அவருடைய ஈழ ஆதரவு வீர இமேஜி ஒன்றுக்காக மட்டும் வைத்துக் கொண்டு) - பலமுறை சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு (ஆனால் ஒருமுறை கூட அமைச்சராக்கப்படாத), மற்றும் இரண்டு முறை 30-35 இலட்சம் சென்னை நகர வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினை விட மேலானவர் போல நீங்கள் குறித்தெஇருப்பது உணர்ச்சி மேலீட்டால் என எடுத்துக் கொள்கிறேன்.

பழ.நெடுமாறன், சுபவீ. நக்கீரன் கோபால், போன்ற பலரும் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிறையில் வாடியது யாரும் மறக்க முடியாதது.

இத்தனை வயதில் நெடுமாறனை 52,000 கி.மீ தூரம் வழக்குகளுக்காக இழுத்தடித்த அரக்கியுடன் சமரசம் செததின் மூலம் தமிழனின் தன்மானத்தின் மீது சாணியடித்திருக்கிறார் கோபால்சாமியார்.

மற்றபடி உங்களுக்கு இருக்கும் ஆதங்கங்கள், வருத்தங்கள் எல்லாம் கொண்டிருந்தவன் தான் நானும் என்பது உங்களுக்கும் தெரிந்த சங்கதிதானே :)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives