Monday, January 16, 2006

வியட்நாமில் மதுரை வீரன்-பாகம் 2

சென்ற முறை வியட்நாமில் மதுரை வீரன் பதிவு போட்டிருந்த போது ,நண்பர் அன்பு அவர்கள் ஹோசிமின் சிட்டியில் இட்லி,தோசை,வடை கிடைக்குமா? என கேட்டிருந்தார் .அதற்கான தேடலில் கடைசியில் இட்லி,தோசை,வடையோடு தமிழர் ஒருவர் நடத்தும் 'ஊர்வசி' என்ற உணவகத்தின் முகவரி கிடைக்க ,நேற்று அங்கு சென்றிருந்தேன் .

தொலைக்காட்சியில் ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே நம்மூர் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு ,வெளியில் இறங்கி நடந்தால் ,முந்தைய மாரியம்மன் கோவிலைவிட பெரிய இந்து கோவில் ஒன்று கண்ணில் பட்டது.இம்முறை 'ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்'.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மாரியம்மன் கோவில் மாதிரியே இங்கேயும்,உள்ளே நுழைந்ததும் அமுதத் தமிழ் செவியில் நுழைந்தது .'காக்க காக்க ..கனகவேல் காக்க' -என்ற மயக்கும் பாடல் ,கொஞ்ச நேரம் அப்படியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன் .பின்னர் மிதியடிகளை அவிழ்த்து விட்டு பிரகாரம் அருகில் நுழைந்தால் ,உள்ளிருந்து இந்தியரா ,வியட்நாமியரா என்று குழப்பம் தருகிற தோற்றத்தோடு ஒருவர் வெளியே வந்து என்னைக் கண்டு கைகூப்பி வரவேற்றார் .பதில் வணக்கம் தெரிவித்து ,அவரிடம் பின்னர் பேசலாம் என்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.

Image hosted by Photobucket.com

மிகவும் விசாலமான இடவசதி இருந்தது கோவிலில் ,பிரகாரத்தை சுற்றி நிறைய சாமிப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன .'காக்க காக்க " பாடலை கேட்டுக்கொண்டே ஒரு முறை சுற்றி வந்தது இனிமையாக இருந்தது .மதிய நேரம் என்பதால் எண்ணைய் ,பூக்கள் விற்றுக்கொண்டிருந்த இரு வியட்நாம் பெண்கள் தவிர யாருமில்லை .முதலில் பார்த்த நபரை பேசலாமே என்று தேடினால் ,ஆளை காணவில்லை .

Image hosted by Photobucket.com

சரி கிளம்பலாம் என்று நினைக்கும் போது கோவிலின் உள்ளே சுவர்களில் மாட்டப்பட்டிருந்த சில இந்திய தலைவர்கள் ,அறிஞர்களின் பெரிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.அதில் ஆச்சரியமும் ,மகிழ்ச்சியும் தந்தது ,இளம் விவேகானந்தருக்கு அருகில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் படம்.

Image hosted by Photobucket.com

ஒரு இந்துக் கோவிலுக்குள் ,ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு ,ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?

24 comments:

Anonymous said...

Hi Milton,
Congrats . great work man . its really amazing to know out heritage and culture is protected and supported in vietnam.
Keep it up your good work.if you know please write about history of temple(who build this temple, and who is practising hinduisam over there whehere they are indians or vietamese.is any time vietnam was ruled by any indian king)

Thanks,
Paul.

ஜோ/Joe said...

Thanks paul.

surely,I will collect those details and will post here.

குமரன் (Kumaran) said...

நிச்சயமா ஜோ. இந்து கோவில், முஸ்லிம் தலைவர், கிறிஸ்தவ நண்பர் - நல்ல காம்பினேசன். :-)

புகைப் படங்கள் நன்றாய் இருக்கின்றன.

நட்சத்திர வாரத்துக்கு பிறகு மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

ஜோ/Joe said...

குமரன்,
நன்றி!..ஊருக்கு போயிருந்ததால் கொஞ்சம் இடைவெளி..இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

இராம.கி said...

அந்தத் தண்டாயுதபாணி கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் எழுப்பிய கோயிலாய் இருக்க வேண்டும். நீங்கள் தந்துள்ள ஒளிப்படங்கள் வழியாக அது உறுதிப் படுகிறது. பினாங்குத் தண்ணீர்மலைத் தண்டாயுத பாணி , கோலாலம்பூர் தண்டாயுதபாணி, சிங்கப்பூர் தண்டாயுத பாணி கோயில்களும் அதைப் போலவே இருக்கும்.

கொண்டு விற்கப் போன நகரத்தார் வள்ளி தெய்வானையோடு சேர்ந்த முருகனுக்குக் கோயில் எழுப்பியதில்லை. பழனி முருகனைக் கும்பிடும் வகையால் எங்கு போனாலும் தண்டாயுத பாணி தான்.

ஒரு 150/200 ஆண்டு கால வரலாறு இந்தக் கோயில்களுக்கு நிறைய இருக்கிறது. அதையெல்லாம் தெரிந்து கொள்ள யார் விரும்புகிறார்கள்?

அன்புடன்,
இராம.கி.

டிபிஆர்.ஜோசப் said...

ஒரு இந்துக் கோவிலுக்குள் ,ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு ,ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?//

சூப்பர் டச், ஜோ.

வாழ்த்துக்கள். இந்த பதிவும் விகடனில் வர வேண்டும். கச்சிதமாய் இருக்கிறது.

தருமி said...

copy-paste பண்றதுக்கு அந்தக் கடைசி வாக்கியத்தோடு இங்க வந்தா, நம்ம ஜோசஃப் முந்திக்கிட்டார். அப்படியே வழிமொழிகிறேன். அந்த வாக்கியம் மனச தொட்டது உண்மை.

ஜோ/Joe said...

வருகை தந்து கருத்துரைத்த இராம.கி ஐயா அவர்களுக்கு நன்றி!

ஜோசப் சார்..மிக்க நன்றி!

ஜோ/Joe said...

நன்றி தருமி!

Anonymous said...

Joe,
Nice find.

Unknown said...

Joe buddy,

Nice post. So Congrajulations on ur completion of 1 year blogging and also for aval vikatan recognition.

துளசி கோபால் said...

ஜோ,

இராம்.கி. அவர்கள் சொன்னதுபோல இந்தக் கோயில்களின் சரித்திரத்தை ஆராய்ஞ்சால் இன்னும்
சரித்திரசம்பந்த விஷயங்கள் எல்லாம் வரும்போல இருக்கு.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் எல்லாம் அடிப்படையிலே மனுஷர்தானேப்பா. முக்கியமா முக்கால்வாசி இந்துக்கள்
எம்மதமும் சம்மதம்னு இருக்கறவங்கதானே.

முந்தியெல்லாம் அப்படித்தான் இருந்துச்சு. 'மதம் ஏதாயாலும் மனுஷன் நன்னாகணும்'னு.
இப்பத்தான் மதத்தின் பேராலே அழிவுகள் வர ஆரம்பிச்சிருச்சு (-:

போகட்டும். ஊர்வசியிலே என்ன சாப்பாடு? நல்லா இருந்துச்சா?

ஜோ/Joe said...

Dev,
வருகைக்கு நன்றி! எனக்கே தெரியாமல் ஒரு வருடமாகிறதை நினைவு படுத்தியதற்கும் நன்றி!

துளசியக்கா,
//முக்கியமா முக்கால்வாசி இந்துக்கள்
எம்மதமும் சம்மதம்னு இருக்கறவங்கதானே. //

உண்மை..உண்மை.

//இப்பத்தான் மதத்தின் பேராலே அழிவுகள் வர ஆரம்பிச்சிருச்சு //
பலருக்கு மதம்-ன்னா யானையா மாறிடுவாங்க போல.

//ஊர்வசியிலே என்ன சாப்பாடு? நல்லா இருந்துச்சா? //

அதுக்கென்ன .செட் லஞ்ச்..சாப்பிட்டுட்டு இரவுக்கு தோசை ஹோட்டலுக்கு கொண்டுவர ஆர்டர் பண்ணிட்டும் வந்துட்டேன்ல!

Anonymous said...

Good Post!expecting more..

senthil

ஜோ/Joe said...

Thanks Senthi!

Deiva said...

This Temple was built by Nattukottai Nagarathars as said by Rama.Ki. Since I am from that community, I have heard of this temple. This was built about a century ago and still mananged by Nattukottai Nagarathars (very few people) in Ho chi Minh City

Deiva said...

This temple was built by Nattukottai Chettiars about 100 years ago. Still this temple is managed by Nattukottai chettiars in Ho Chi Minh City. This is built in the same time as Singaport/KL temples were built.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்துக்கள் ஜோ! நட்சத்திர வாரத்திற்காக மட்டுமல்லாமல், தொடர்ந்து நட்சத்திரமாய் ஒளிர வாழ்துக்கள்.

சிங். செயகுமார். said...

எனக்கு தெரிந்து ஒரு கிருஷ்த்துவன் இந்து கலாச்சாரத்தை மதித்து போற்றி எழுதுவதை இங்கேதான் பர்க்கிறேன். சந்தோஷம் நானும் பைபிள் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுகின்றது! நண்பரே எழுதுங்கள் நிறைய!

ஜோ/Joe said...

Deiva,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி! மேலதிக விபரங்களை திரட்டிச் சொல்ல முயல்கிறேன்.

சிறில் அலெக்ஸ்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..நேற்று தான் உங்களுக்கு மின்மடல் அனுப்பியிருந்தேன் .கிடைத்ததா?

சிங்.செயக்குமார்,
நன்றி!
//எனக்கு தெரிந்து ஒரு கிருஷ்த்துவன் இந்து கலாச்சாரத்தை மதித்து போற்றி எழுதுவதை இங்கேதான் பர்க்கிறேன்.//
அக்கரையாக முதல் பின்னூட்டம் கொடுத்த நம்ம நண்பர் பால் கூட கிறிஸ்தவர் தானே..துளசி அக்கா சொன்ன மாதிரி ,என்னங்க பெரிய வித்தியாசம்.?

ஜோ/Joe said...

Ammu,
Thanks!sure,I will visit your blog.

G.Ragavan said...

ஜோ. மிகவும் அருமையான பதிவு. மதச்சார்பின்மை என்பது உண்மையிலேயே இதுதான்.

இராமகி. அந்தத் திருக்கோயில்களின் வரலாறுகளைத் தொகுத்து ஒரு தொடராக நீங்கள் தரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

ஜோ/Joe said...

நன்றி ராகவன்.

நீங்கள் குறிப்பிட்டது போல இராம.கி ஐயா அவர்கள் இவற்றை தொகுக்கலாம் .என்னால் முடிந்த அளவு மேல் விபரங்கள் கொடுக்க முயல்வேன்

thiru said...

//ஒரு இந்துக் கோவிலுக்குள் ,ஒரு இஸ்லாமியரின் படத்தைக் கண்டு ,ஒரு கிறிஸ்தவன் மகிழ்வது தான் நமது தனிச்சிறப்போ?//

மதநல்லிணக்கத்திற்கு இவை அரிய உதாரணங்கள். இப்படிப்பட்ட உதாரணங்கள் மதவெறியின் விலங்கை உடைக்கட்டும்...தொடருங்கள் ஜோ

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives