Monday, February 14, 2005

தேச பக்தர்

சிங்கப்பூர் வந்த புதிதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.

பிரபலமான செந்தோசா தீவுக்கு கம்பிவட ஊர்தியில் செல்வதற்காக நண்பர்களோடு அனுமதி சீட்டு பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயதுக் காரர் ஏதோ விசாரிக்கும் முகமாக என்னை நோக்கி வந்தார்.நேரடியாக இந்தியில் ஏதோ கேட்டார்..நான் அவரிடம் "மன்னிக்கவும்.எனக்கு இந்தி தெரியாது.உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா?" என்று பொருள்பட ஆங்கிலத்தில் வினவினேன் .மனிதர் உடனே முகத்தை கேலி செய்யும் விதமாக வைத்துக் கொண்டு "இந்தி தெரியாதா?" என்று கேட்டார் .நான் 'தெரியாது' என்று மறுபடியும் சொன்னேன் .மனிதர் அதோடு விட்டுவிட்டு கேட்க நினைத்ததை கேட்டிருக்கலாம் ..இன்னும் கேலி செய்யும் தொனியோடு "இந்தியராக இருக்கிறீர்கள்..எப்படி இந்தி தெரியாமலிருக்கலாம்?"..அது வரை பொறுமையாக இருந்த நான் உண்மையிலேயே வெடித்து விட்டேன் .."இதோ பாருங்கள்..நீங்கள் இப்போது உத்தர பிரதேசத்திலோ அல்லது பீகாரிலோ இல்லை..இது சிங்கப்பூர் ..இங்கே தமிழ் தான் ஆட்சி மொழிகளில் ஒன்று ..இந்தி அல்ல..முடிந்தால் ஆங்கிலத்தில் பேசுங்கள்..அல்லது தமிழ் கற்று கொள்ளுங்கள்..உங்கள் அறியாமையை இங்கு வந்து காட்டாதீர்கள்" என்று பொருள் பட கத்தி தீர்த்து விட்டேன்.
இந்த மனிதரின் மனப்போக்கில் எனக்கு பல கேள்விகள் எழும்பின..

1. தோற்றத்தின் மூலம் நான் இந்திய இனத்தவன் என்று அவர் புரிந்து கொண்டது சரியே..ஆனால் நான் இந்திய தேசத்தவனா அல்லது சிங்கப்பூர் இந்தியனா என்று கூட அவருக்கு தெரியாது .இந்தியாவில் பிறந்தவனென்றால் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கூமுட்டை தனத்தை கூட சகித்து கொள்ளலாம்..ஒரு வேளை சிங்கப்பூர் தமிழனாக இருந்தாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்று நினைக்கிற அளவுக்கா மாங்காய் மடையனாக இருக்க முடியும்?

2.இவர் வட நாட்டினர் என்று தெரிந்ததும் ,சிங்கப்பூரே ஆனாலும் கூட நான் அவர் தமிழ் பேச வேண்டுமென்று எதிர் பார்க்கவில்லை..ஆனால் சம்பந்தமே இல்லாமல் நான் இந்தி பேச வேண்டும் என்று எப்படி இவர் எதிர் பார்க்கிறார்?

3.'இந்தி தெரிந்தால் தான் இந்தியன்' என்ற மனநிலை இவர்களுக்கு ஏற்பட என்ன காரணம்?..

இந்தி படிக்குறவங்க படிச்சிட்டு போங்கப்பா..நமக்கு அதில் ஒண்ணும் பிரச்சினை இல்லை..ஆனா இந்தி அறிந்திருக்கிறவன் கூடுதல் தேச பக்தனாய் காணப்படுவது எதனால் .? நம்ம ஆளுங்களோட தேசபக்தி அளவுகோல்களை நினைத்தாலே புல்லரிக்குது.

குப்பை தொட்டி வரை குப்பையை கொண்டு வந்து சுதந்திர திமிர்ல வேண்டுமென்றே குப்பை தொட்டிக்கு வெளியே கொட்டி விட்டு போகிற ,பொது இடங்களில் மற்றவர் உரிமையை மதிக்க தெரியாத ,சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கரை இல்லாத ஒருவர் தேச பக்திமானாய் ஆவதற்கு சுலப வழி உண்டு..ஒன்றுமில்லை ..இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது கூட்டத்தோட TV முன்னால உட்கார்ந்துகிட்டு.. இந்தியா காரன் எப்படி மோசமா விளையாடினாலும் குருட்டாம் போக்கிலயாவது ஜெயிக்கணும் ...பாகிஸ்தான் காரன் நல்லா விளையாடினாலும் அவுட் கொடுக்காத அம்பயர திட்டணும் ... தப்பி தவறி பக்கத்தில யாரவது "அவனுங்க நல்லா ஆடுராங்கப்பா" -ன்னு சொன்னா "தேச பக்தி கொஞ்சமாவது இருக்காடா?"-ன்னு கண்ட படி திட்டணும்..உடனே இவர் பெரிய தேச பக்தர் ஆயிடுவார்.

3 comments:

Moorthi said...

வாங்க ஜோ! தங்கள் வரவு நல்வரவாகுக! அப்படியே நம்ம சிங்கை பதிவர்கள் கூட்டணியில் ஐக்கியமாகிடுங்க!

அப்புறம் இந்தி.. இந்தி தெரியாதவர்கள் இந்தியரல்ல என்ற வாதத்தை நானும் பல இடங்களில் எதிர்கொள்ள நேர்ந்தது. பல இடங்களில் நானும் உங்களைவிட சவுண்டு விட்டு இருக்கிறேன்.

அல்வாசிட்டி.விஜய் said...

நாங்களும் நல்லவே பட்டுருக்கோம்ல...

newsintamil said...

வட இந்தியாவில் மலையாளிகள் சகஜமாக இந்தியில் பேசி அவர்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள். டில்லியில் சில மலையாளிகள் நாங்கள் தமிழரென்று தெரிந்தும் அவர்கள் மலையாளிகள் என்று எங்களுக்குப் புரிந்தும் இந்தியில் பேசி வெறுப்பேத்தி விட்டார்கள். அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கூட இருக்கும் இந்திவாலாக்கள் முன்னிலையில் மலையாளிகள் என்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பதை.

அந்த மலையாள நண்ப, நண்பிகள் பிறகு இந்திவாலாக்கள் இல்லாத சூழ்நிலையில் மலையாளத்தில் கூறியது இது.

சரி ஜோ உங்கள் mail id ஐ sanuragc at yahoo.com க்கு அனுப்புங்க.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives