Friday, February 18, 2005

வார்த்தை சித்தர்

சமீபத்திய குமுதம் இதழில் வலம்புரி ஜான் அவர்களின் தற்போதைய உடல் நிலை குறித்து வைரமுத்து எழுதியிருந்த கட்டுரையில் அவரின் தற்போதைய நிலையிலுள்ள புகைப்படத்தை கண்டதும் மனது பதறியது.

சின்னவயதில் எனக்கு ஏனோ எம்.ஜி.ஆர் என்றாலே பிடிக்காது . அதே எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது தற்செயலாக வானொலி கேட்க நேர்ந்தது..அப்போது யாரோ ஒருவர் எம்.ஜி.ஆர் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன் .என்னையறியாமலேயே கண்ணீர் வந்து எட்டிப்பார்த்தது..அன்று நான் அதிகம் விரும்பாத எம்.ஜி.ஆர்-க்காக என்னை கண்ணீர் விட வைத்தவர் 'வலம்புரி ஜான்' என்று பின்னர் அறிந்தேன்.

காலப்போக்கில் அவருடைய பேச்சுக்கு தீவிர ரசிகனாகி விட்டேன்.கடல் சங்குகளில் 'வலம்புரி' அபூர்வமானது என்பதால் ,நெய்தல் நிலத்து மைந்தனான ஜான் -க்கு 'வலம்புரி' என்று கலைஞர் சூட்டிய பெயர் முற்றிலும் பொருத்தம்.

பல்துறை அறிவும் மொழி வளமும் ஒருங்கே அமைவது அரிது. வலம்புரி ஜான் அத்தகைய அரிதான மனிதர் .நம்முடய தமிழ் சமூகத்தில் திறமைகேற்ற அங்கிகாரம் கிடைப்பது அரிது என்பதோடு அரைகுறைகள் அதீத அங்கீகாரம் பெறுவதும் வழக்கமாக இருக்கிறது.

வலம்புரி ஜான் போன்ற அற்புதமான பேச்சாளர்களை விட மூன்றாம் தர அரசியல் பேச்சாளர்கள் தாம் மக்களிடையே பிரபலம் .4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்திய ரயில் நிலயத்தில் தோளில் ஒரு பையோடு நின்று கொண்டிருந்தார். யாரும் அவரைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை . அருகில் சென்று வணக்கம் சொல்லி "நான் உங்கள் ரசிகன்" என்று சொன்னேன் .மகிழ்ந்து புன்னகைத்து விட்டு ,ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் விடை பெற்றார்.

ஆழ்ந்த சிந்தனையும்,அற்புதமான மொழி புலமையும் ,அகண்ட வாசிப்பு அனுபவமும் கொண்ட அவர் ,அரசியலில் கண்ணதாசனைப் போல் கிளை விட்டு கிளை தாவும் பறவையாகவே இருந்தார். தி.மு.க, அ.தி.மு.க ,த.ம.கா ,மறுபடியும் தி.மு.க என்று எல்லா இடத்திலும் இருந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் 'இமயங்கள்' நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் பேச வந்த போது உடல் தளர்ந்து ,பார்வை மங்கிய நிலையிலும் உணர்ச்சிகரமாக பேசியது நினைவில் நிற்கிறது.
இப்போது மிகவும் உடல் நிலை குன்றிய நிலையில் உடல் உபாதைகளோடு போராடி கொண்டிருப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது .கோடி கோடியாக கொட்டி வைத்திருக்கின்ற தி.மு.க ,அவருடைய சிகிச்சை செலவுக்கு உதவி செய்தால் குறைந்தா போய் விடும்.?

மீண்டும் அவர் எழுந்து வந்து தமிழ் பணியாற்ற மனதார வேண்டுவோம்...

12 comments:

Kangs(கங்கா) said...

வலம்புரி ஜானின் கனீர் குரலை சூரிய தொ.காவில் கேட்டிருக்கிறேன். அவருடைய உடல் நலத்திற்க்காக என்னுடைய பிரார்த்தனைகள்.

Kangs(கங்கா) said...
This comment has been removed by a blog administrator.
Moorthi said...

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வலம்புரி ஜானும் ஒருவர். அற்புதமான படைப்பாளர். சிறந்த பேச்சாளர். உடல்நலம் பெற இறைவனிடம் மன்றாடுகிறேன்.

Anonymous said...

Karunanidhi never gives anything to thondar or katchi makkal. Everything only for his family.
V.John was also the editor of 'Thaai' weekly. Suntv benefited so much with his 'indha naaL iniya naaL' - do you thing they will help ? No. They would rather help the young ladies who speak in half tamil half english with more and more of sponsored clothes with better exposure.

Muthu

-L-L-D-a-s-u said...

அந்த 30 கோடி டீ செலவுக்கு .. அதில் தலைவருக்கும் அவர்தம் மனைவியர், பிள்ளைகள் மற்றும் பேரர்களுக்குமன்றி யாருக்கும் உரிமையில்லை..

Anonymous said...

மனித நேயம் செத்து விட்டது அய்யா!
எங்கே போய் எதைத் தேடுகிறீர்..?

இது போல் ..பல பிரபலங்கள்..பல கோடி சாதாரண மனிதர்கள் உண்டு.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களின் மாநாட்டிற்கு செலவிடும் தொகயையும், நேரத்தையும் நல்ல
விசயத்திற்காக செலவிட்டால் கட்சி தானாக வளரும்

அன்புடன்,
கணேசன்

மன்னை மாதேவன் said...

அன்புமிகு வலைப்பூ நண்பர்களே!

இன்றைய அரசியல் மற்றும் வாழ்வியலில் மனிதப் பரிமாணங்கள் வலுவிழந்து
போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இயன்ற அளவு இவற்றை தூக்கி நிறுத்த முயலுவோம்.

திரு வலம்புரிஜான் குறித்த உங்கள் உணர்வுகளை நான் போற்றி மதிக்கிறேன். அந்த நல்ல உணர்வுகள் உதவிகளாக மாற வேண்டுகிறேன். (அளவு சிறிதாயினும் தவறில்லை உண்மை உணர்வு அதில் நிறைவதால்!)

என் வலைப்பூவில் (madev.blogspot.com) அவர் தொலைபேசி எண் மற்றும் முகவரியும் இது குறித்த வேண்டுகொளையும் இட்டுள்ளேன். திரு சுந்தரவடிவேல் அவர்கள் பெரும் ஒருங்கிணைப்பிற்கு முயன்று கொண்டுள்ளார். (http://sundaravadivel.blogspot.com/2005/03/blog-post_13.html )
இதில் உங்கள் இதயங்களையும் உள்ளிடுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி

அன்புடன்
மன்னை மாதேவன்

ஜோ / Joe said...

மன்னை மாதேவன்,
தகவலுக்கு நன்றி..நம்மால் முடிந்ததை செய்வோம்.
(வெளியூர் சென்றிருந்ததால் இன்று தான் கவனித்தேன்)

எம்.கே.குமார் said...

வலம்புரி ஜான் மிகவும் திறமையானவர். ஆனால் அரசியலில் பிழைக்கத்தெரியாது இப்போது அரசியல் அனாதை ஆகிவிட்டவர்.

உடல்நலத்திலும் அக்கறையே இல்லாமல் இருந்ததாக கேள்விப்பட்டேன்.

உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

எம்.கே.குமார்.

ஜோ, சிங்கப்பூரா நீங்க? என்னய்யா பண்ணுறீரும்? வந்து கூட்டங்கள்ளெ கலந்துக்குங்கய்ய்யா!

ஜோ / Joe said...

குமார் அண்ணாச்சி,
சிங்கப்பூர்-ல தான் இருக்கேன். இனிமேல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.நன்றி!

ஜோ / Joe said...

வார்த்தை சித்தரின் மறைவுக்கு இதய அஞ்சலி!

வீ. எம் said...

Well Written Jo !

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives