ஒரு சராசரி வாசகன் தான் மக்களே நான்.சின்ன வயசில இருந்து கையில கிடைக்கிற பிட் நோட்டீஸ் முதற்கொண்டு எதையும் விடாம படிக்கிறதுண்டு.ஆனா இத்தனை வயசாகியும் ,கதை,நாவல் படிக்குற பழக்கம் வரவே மாட்டேங்குது.அட என்னப்பா வெறும் கதைய படிக்குறதுல என்னத்த புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்.அதுக்கு பதிலா எதாவது தகவல் இருக்கிற மாதிரி கட்டுரையோ அல்லது துணுக்கு செய்திகளோ படிச்சா பிரயோஜனமா இருக்கும் அப்படின்னு தான் எண்ண ஒட்டம் போகுது..இப்போ குமுதம் ரிப்போர்ட்டர்ல ராகவன் எழுதிட்டு வர்ற 'நிலமெல்லாம் ரத்தம்' மாதிரி தகவல் சார்ந்த கட்டுரைகள் தான் நம்ம சாய்ஸ்..அது போல அரசியல்,சமூகம் சார்ந்த விவாதங்கள் எட்டி நின்று வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும்.
ஆனாலும் இந்த 'இலக்கிய விவாதம்' நமக்கு இம்மியும் பிடி படாத விசயமா இருக்கு..நம்மை போல படிக்கும் பழக்கமுள்ள நபர்களோடு இது பற்றி பேசுகிற தைரியம் எனக்கில்லை..அவங்க பாட்டுக்கு ஜெயகாந்தனோட அந்த நாவல் படிச்சிருகீங்களா? ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா?-னு எதாவது கேட்டா நான் அம்பேல்.
இப்போ நமக்கு சந்தேகம் என்னணா , 'இலக்கியம்'-னா என்ன? இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா? தகவல்,வரலாறு சார்ந்த எழுத்துககளும் இலக்கியம் தானா?
அடிக்க வராதீங்கண்ணா! எதோ அறியா சிறுவன் கேட்டுட்டேன்...கொஞ்சம் பொறுமையுள்ள அண்ணாச்சி யாராவது சொல்லி புரிய வையுங்கப்பா..
Monday, February 07, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அன்பு ஜோ,
இதே மாதிரியானதொரு கேள்வியை முன்பு திண்ணையில் நான் முன்வைக்க அதற்கு ஜெயமோகன் தாமே முன்வந்து அளித்த நீண்ட பதிலை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். நேரமிருந்தால் பின்பு அந்த குறிப்பிட்ட சுட்டியை அளிக்கிறேன்.
«ýÒûÇ Ã¡¸Åý,
¯í¸Ù¨¼Â À¢ýëð¼ò¨¾ «ÛÀÅÁ¢ý¨Á¡ø ¾Åھġ¸ ¿£ì¸¢ Å¢ð§¼ý..ÁýÉ¢Ôí¸û.
ͧÉ,
¯í¸û ÍðÊ측¸ ¸¡ò¾¢Õ츢§Èý.
பரவாயில்லை. ஆனால் என்ன எழுதினேன் என்பது இப்போது உடனடியாக நினைவுக்கு வரவில்லை. வந்தால் உடனே இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment