சமீபத்தில் ஆளும் முன்னணியால் வேகமாக முன்னெடுக்கப்பட்ட மகளிருக்கான 33.3 % சதவீத இட ஒதுக்கீடு மசோதா பல விவாதங்களை கிளப்பியுள்ளது .ஒரு தரப்பினரால் முன் வைக்கப்படும் உள் ஒத்துக்கீடு ,அதன் கூறுகள் கொஞ்சம் உள்நோக்கி ஆராய்பவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடியது .ஆனால் 33.3 % மகளிர் ஒதுக்கீடு குறித்து ஆரம்ப அளவில் நடைபெறும் விவாதங்களில் கூட அடிப்படை புரிதல் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள் .ஆனால் உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள். இன்று வரை மகளிரும் ஆடவரும் எங்கேயும் போட்டியிட தங்கள் பாலினம் தடையில்லை .ஆனால் இந்த மசோதா வந்தால் , ஆடவர் 66.3 % இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் . 33.3 % இடங்களில் மகளிர் மட்டுமே போட்டியிட முடியும் .ஆனால் ஆடவருக்கு அனுமதிக்கப்பட்ட 66.3% இடங்கள் ஆடவருக்கு மட்டுமல்ல ,மகளிரும் போட்டியிட தடை இல்லை ..ஆக இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 33.3 % பிரதிநிதித்துவம் என்பது மகளிருக்கான குறைந்த பட்ச வரம்பே தவிர அதிக பட்ச வரம்பு 100% .ஆனால் ஆடவருக்கு அதிகபட்ச வரம்பு 66.3 %.
சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கருத்துக்களம்’ என்னும் நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது . பொதுவாக இதை தொகுத்து வழங்குபவரும் கலந்து கொண்டு பேசுபவர்களும் பேசுகின்ற விடயம் குறித்து எந்தவித அடிப்படை அறிவும் இன்றி உளறிக் கொட்டுவது வழக்கம் . இந்த விவாதமும் அதற்கு தப்பவில்லை . தமிழச்சி தங்கபாண்டியன் விருந்தினரில் ஒருவராக வந்திருந்ததால் அவர் கொஞ்சம் உருப்படியாக பேசுவார் என்பதால் கவனிக்க ஆரம்பித்தேன்.
இன்னொரு விருந்தினராக வந்திருந்த சற்று முதிர்ந்த அம்மையார் மெத்தப்படித்தவராக தெரிந்தார் .அவரும் ‘பெண்களுக்கு ஏன் வெறும் 33.3 % மட்டும் . 50% சதவீதமல்லவா கொடுத்திருக்க வேண்டும்?” என்று வழக்கமான பல்லவியை பாடினார் .இவர் போன்றவர்களின் புரிதலே ‘பெண்ணுக்கு 33.3% ஆணுக்கு 66.3%” என்ற அடிப்படையற்ற பார்வைக்குட்பட்டதாக இருந்தால் சாதாரண பாரம மக்கள் எப்படி நினைப்பார்கள் ?
இன்றைக்கும் பெண்கள் 100% சதவீதம் வரை வருவதற்கு சட்டப்படி எந்த தடையிமில்லை . தர்மப்படி 50% வந்திருக்க வேண்டும் . ஆனால் 50% அல்லது 10% ஒதுக்கவே அரசியல் கட்சிகள் தயாராக இல்லை .எனவே தார்மீக அடிப்படையில் அரசியல் கட்சிகள் செய்ய முன்வராத ஒன்றை சட்டத்தின் மூலமாகவாவது நிர்பந்தப் படுத்தி குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களையாவது பெண்களை நிறுத்தியாக வேண்டும் என கொண்டு வருவது தானே இந்த சட்டம் .. ஆக 33.3 % சதவீதம் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே அல்லாமல் அதிகபட்ச வரைமுறை எதுவும் இல்லை . இந்நிலையில் ஏன் வெறும் 33.3% என்பது மிகவும் மேம்போக்கான பார்வை என்பதில் சந்தேகம் இல்லை .அங்கிருந்த தமிழச்சி தங்க பாண்டியன் கூட இது குறித்து விளக்கவில்லை.
ஒருசாரார் ஏன் 50% இல்லை என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருக்க ,இதை எதிர்த்தாக வேண்டும் என முடிவோடு என்ன பேசலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்ட இன்னொரு சாரார் பேசியது அதை விட காமெடி . ஒரு இளம் வயது பெண் ஒரே கேள்வியில் எல்லோரையும் வாயடைக்கச் செய்கிறேன் பார் என உத்தேசித்துக்கொண்டு கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி “பெண்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு போய் விட்டால் ,அவர்கள் பிள்ளைகளை இங்கே வீட்டில் யார் கவனித்துக் கொள்வார்கள் ? அரசாங்கமா கவனித்துக் கொள்ளும்?” என ஆவேசப் பட ..இதுக்கு மேல் தாங்காது என தொலைக்காட்சியை அணைத்தேன்.
16 comments:
:)
அனானி ஏன் சிரிக்குறாரு?
உலகத்தை நெனச்சாரு சிரிச்சாரு..
:)
அனானி ஏன் சிரிக்குறாரு?
:) :) :) :) :) :)
:) :) :) :) :)
:) :) :) :)
:) :) :)
:) :)
:)
:) :) :) :) :) :)
:) :) :) :) :)
:) :) :) :)
:) :)
:) :)
:)
உலகத்தை நெனச்சாரு சிரிச்சாரு..
:)
:) :)
:) :) :)
:) :) :) :)
:) :) :) :) :)
:) :) :) :) :) :)
can't control laughter after reading this post
:)
:) :)
:) :) :)
மாயவரத்தான்,
நீங்களுமா ? எதாவது சொல்லிட்டு சிரிங்கப்பா:)
"முதலில் மகளிருக்கு 33.3% ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம் ? பலரும் பேசுவதைப் பார்த்தால் 33.3% மகளிருக்கு , மீதி 66.3% ஆடவருக்கு என முடிவு கட்டி விடுகிறார்கள்"
உண்மையில் நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன் :-) நன்றி ஜோ ...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பஸ்சில் இட ஒதுக்கீடு மாதிரி நினைத்துக்கொண்டிருப்பாங்க.
பாதி சீட்டு (அதாவது ஒரு சைடு) ரிசர்வ்ட் . மீதி எல்லாருக்கும்.
இல்லையா? அது தான் 50 % மூலமாக உத்தேசிப்பது :-)
அகில உலக புத்திசாலி ஞானியே தப்பாக தான் விஜய் tv நீயா நானா-வில் பேசி கொண்டிருந்தார்.
ஆண்களை பார்த்து "இவ்வளவு நாளும் 100% சதவீதத்தையும் நீங்கள் தானே வைத்து கொண்டிருந்தீர்கள்" என்று..........
பேருந்துகளில் கவனித்திருக்கிறீர்களா? மகளிர் மட்டும் என்று சில இருக்கைகளில் இருக்கும். அதாவது அந்த இருக்கையில் மட்டும்தான் மகளிர் அமர வேண்டும் என்று இல்லை. அந்த குறிப்பிட்ட இருக்கைகளில் ஆண்கள் அமரலாகாது என்றுதான் பொருள். அதுபோல்தான் இந்த மகளிர் ஒதுக்கீடும். குறிப்பிட்ட தொகுதிகளில் ஆண்கள் போட்டியிடலாகாது என்பதைத்தான் ஒதுக்கீடு என்கிறார்கள்! தொலைக்காட்சிகளில் எந்த ஒரு விஷயமானாலும் நிகழ்ச்சியை நடத்துபவரிலிருந்து கலந்துக்கொள்கிற அனைவருமே பெரும்பாலும் ஞானசூன்யங்களாகவே இருப்பதை பார்த்திருக்கிறேன். நீயா நானா, கருத்து யுத்தம், கேளிக்கணைகள் என பல பெயரில் பல தொலைக்காட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு நடத்துகின்றன. எல்லாமே சொதப்பல்தான். கவலையை மறந்து சில நிமிடங்கள் சிரிப்பதற்கு வேண்டுமானால் இத்தகைய நிகழ்ச்சிகளை காணலாம்.
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
//உண்மையில் மகளிருக்கு 100% , ஆடவருக்கு 66.3 % சதவீதம் என்பது தானே இதன் பொருள் //
அட ..ஆமா ...
நல்லதொரு விவாதத்தை உண்டுபண்ணும் பதிவு தோழர் ...
மாதம் ஒரு பதிவாவது போடுங்க தோழர் !
நல்ல பகிர்வு, அருமையான சிந்தனை :-).
நன்றி.
:)
:):)
Post a Comment