ஏற்கனவே பலரும் கிழியும் வரை அலசியாச்சு . சினிமா மொழி ,தொழில் நுட்பம் , திரைக்கதை வடிவம் ,தமிழ் சினிமாவின் பொதுவடிவத்திலிருந்து தனித்து நிற்பது போன்றவற்றை எடுத்துக்கொண்டால் உன்னைப்போல் ஒரு தனித்துவமான படம் தான் . கமல் ரசிகன் என்ற முறையில் , கமலுக்கு எதிர்பாராமல் கிடைத்த குறைந்த கால அவகாசத்தில் ரொம்பவும் மெனக்கெடாமல் , மிகுந்த பொருட் செலவில்லாமல் ,குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டத்தை குறிவைத்து வெற்றிகரமாக எடுக்கப்பட்ட படம் என நினைக்கிறேன் .வர்த்தக ரீதியுலும் இது ஒரு வெற்றிப்படமே. கமல் , மோகன்லால் நடிப்பு குறித்தெல்லாம் தனியே சொல்லத் தேவையில்லை .அனுபவத்தால் ஊதித் தள்ளியிருக்கிறார்கள்.
கலை வடிவம் என்பதைத் தாண்டி உன்னைப்போல் ஒருவன் சொல்லும் சேதி ,வசனங்கள் குறிக்கும் கருத்துருவாக்கம் இவையெல்லாம் வலையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டதை வைத்து அந்த கதாபாத்திரம் சார்ந்த ஒன்றை ஒட்டு மொத்தமாக சொல்வதாக கட்டமைக்கப்படும் வகை விமர்சனங்கள் எனக்கு ஏற்புடையதில்லை .ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் வசனகர்த்தாவும் , இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல வரும் கருத்தா அல்லது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் கூறா என்பது அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது .
உன்னைப் போல் ஒருவனில் கூட குறை சொல்ல வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் ,ஒரு சில இடங்களில் சொல்லும் வசனங்களை மேற்கோள்காட்டி அவையே வசன கர்த்தாவின் கருத்து என நிறுவுகிறார்கள் ..அதற்கு நேரெதிராக இன்னொரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் இந்த வாதத்துக்கு ஒத்து வராததால் ,அவை ஏதோ வசன கர்த்தா எழுதாதது போலவோ ,அல்லது அது அந்த பாத்திரத்தின் கருத்து போலவோ மறைத்து விடுகிறார்கள். ஆக கதாபாத்திரத்தின் கருத்தைத் தாண்டி வசனகர்த்தாவும் ,இயக்குநரும் பார்வையாளருக்கு சொல்ல முற்படும் கருத்துக்கள் எவை என யார் முடிவு செய்வது ? அவரவர் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இந்த படத்தில் சொல்லப்படும் வசனங்கள் , குறியீடுகள் பல எனக்கு சில வருத்தங்களையும் , சந்தேகங்களையும் எழுப்பியது உண்மை . இயக்குநர் சொல்ல வரும் கருத்து ஒன்றாகவும் பெரும்பான்மை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் வேறாகவும் இருப்பதற்கு ஏதுவான பல வசனங்கள் படத்தில் இருக்கிறது .. இந்த பூடகத்தன்மை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என சந்தேகமும் வருகிறது.
கோவை குண்டு வெடிப்பு , பெஸ்ட் பேக்கரி நிகழ்வு இரண்டுக்கும் உள்ள கால முரண்பாடு போன்ற சில அலசப்பட்டவற்றை தவித்து , வேறு சிலவற்றை பார்ப்போம் .அதற்கு நண்பர்கள் சிலர் கொடுத்த வேறு அர்த்தங்களும் உள்ளது .
1. அப்துல்லா என்ற தீவிரவாதி தன் மூன்றாவது மனைவி பெஸ்ட் பேக்கரி நிகழ்வில் எரித்து கொல்லப்பட்டதை குமுறலோடு சொல்லும் போது இந்துவாக பிறந்த உடனிருக்கும் தீவிரவாதி(சந்தான பாரதி) அதான் ரெண்டு பொண்டாட்டி மீதியிருக்கில்ல என்ற ரீதியில் நக்கலாக சொல்வது காட்சியாக வருகிறது . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .. ஆனால் திரையரங்கில் பலர் சிரித்தார்கள் . தீவிரவாதியோ யாரோ ஒரு பயங்கரவாத சம்பவத்தில் தன் மனைவி கொல்லப்படதை சொல்லும் போது ,அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? ஒரு சமுதாயத்தினரின் ஒரு வழக்கத்தை நக்கல் அடிப்பது தான் வசனகர்த்தாவின் நோக்கமா ? நண்பர் ஒருவர் சொன்னார் .. இல்லை ..அந்த இடத்தில் கூட இருக்கும் அந்த இந்து தீவிரவாதியின் குரூர புத்தியை சொல்ல வருகிறார்கள் என்று ..ஆனால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு சந்தான பாரதி சொன்னவுடன் எழும் சிரிப்பலையே சாட்சி.
2. கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் என்று ஒருவர் சொல்கிறார் .. அவர் மனைவியிடம் பேசும் போது அவர் மனைவி "இன்ஷா அல்லா-வா?" என்கிறார் ..எனவே அவர் முஸ்லீம் தான் என ஒருவர் சொல்லுகிறார் ..என்னைப் பொறுத்தவரை அவர் மனைவி 'இன்ஷா அல்லா' என்று அவரே சொல்லாமல் 'இன்ஷா அல்லா-வா?" என கேட்பது இது கமல்ஹாசன் வீட்டில் அவ்வப்போது சொல்வார் என்பதை குறிக்கிறது .. முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு .எனவே எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?
4 .தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்பது கமல் சொல்லும் கருத்து . கமல் ஒரு கருவறுத்தல் சம்பவத்தை சொல்லுகிறார் .அந்த கறுவறுத்தல் சம்பவம் எங்கே யாரால் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..ஆக அந்த தீவிரவாதத்தை செய்தவருக்கு எதிராக கமல் தீவிரவாதத்தை கையிலெடுத்தால் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் ? உலகுக்கே தெரியும் .. ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????
Wednesday, September 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
உள்ளேன் ஐயா...
//அவருக்கு மூன்று மனைவி இருப்பதை வைத்து இன்னொருவர் நக்கல் அடிப்பது .. இதில் வசனகர்த்தா சொல்ல வருவதென்ன ? //
ஒருவேளை ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்தான் நல்லதுன்னு சொல்ல வர்றாரோ ??
//3. தீவிரவாதிகளை ஒன்றாக சேர்த்து ஆப்பரேஷன் ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகளிடமும் பேசும் மோகன்லால் , கடைசியாக ஒரு அதிகாரியிடம் தனியாக " ஆரிஃபை பார்த்துக்கோ" என சொல்லுகிறார். ஆரிஃப் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை நம்பமுடியாது எனவே அவர் மேல் ஒரு கண் வைத்துக்கொள் என மோகன் லால் சொல்லுவதாக சிலர் சொல்லுகிறார்கள் ..ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?//
கிர்ர்ர்ர் எல்லாரும் இதை புரிஞ்சுக்கல போல. அதாவது கடைசியில கையில ஆரிப்ப சுட்டதுக்கு இது தான் காரணம். ஏதாவது பிரச்சனை வரும் போது போலீஸ சுட்டுட்டு தப்பிக்க முயலும் போது நாங்க சுட்டுட்டோம்னு சொல்லுவாங்கல்ல அதுக்காகத்தான் :)
அப்புறம் இந்து தீவிரவாதியின் குரூர புத்தி.... நான் எதிர்பார்க்கல இந்த கோணத்துல. இப்ப என்ன ஆகுதுன்னா தியேட்டர்ல அந்த சீனுக்கு சிரிச்சவன் எல்லாம் இந்து தீவிரவாதி ஆகிடுறான் :)
:)
// அதாவது கடைசியில கையில ஆரிப்ப சுட்டதுக்கு இது தான் காரணம். ஏதாவது பிரச்சனை வரும் போது போலீஸ சுட்டுட்டு தப்பிக்க முயலும் போது நாங்க சுட்டுட்டோம்னு சொல்லுவாங்கல்ல அதுக்காகத்தான் :) //
அதெப்படி ? தீவிரவாதிகள் இறக்க நேரிட்டதும் ,அதன் பொருட்டு ஆஃர்ப்-ஐ சுட நேரிட்டதும் மோகன்லால் அலுவலகத்தில் இவர்களை வழியனுப்பும் போதே எப்படி அவருக்கு தெரிந்திருக்க முடியும்?
மோகன்லால் அப்படி சொல்லுவது இரு போலீஸ் அதிகாரிகளையும் அனுப்பும் போது என்பதை நினைவு படுத்துகிறேன்.
//மோகன்லால் அப்படி சொல்லுவது இரு போலீஸ் அதிகாரிகளையும் அனுப்பும் போது என்பதை நினைவு படுத்துகிறேன்.//
ஆம் அப்போது தான் சொல்வார். ஆனால் சேது ஆரிஃப்பை சுட்டதும் மோகன்லாலின் ஆர்டர் என்பார். இதை இந்தியில் பார்க்கும் போதே தெரிந்து கொண்டேன். அதாவது மோகன்லால் சேதுவிடம் ஆரிஃப்பை கவனி என்று சொல்வது “இம்மாதிரி நிகழ்வுகளுக்கு தயாராக இரு” எனபதே. இந்தி படத்தின் விமர்சனங்களில் இதை காணலாம்
// இதை இந்தியில் பார்க்கும் போதே தெரிந்து கொண்டேன். அதாவது மோகன்லால் சேதுவிடம் ஆரிஃப்பை கவனி என்று சொல்வது “இம்மாதிரி நிகழ்வுகளுக்கு தயாராக இரு” எனபதே. இந்தி படத்தின் விமர்சனங்களில் இதை காணலாம்//
ஆகா ! சுடுறதுக்கு ஆரிஃப் தான் கிடைச்சானா ? ஏன் ஆரிஃப் கிட்ட சொல்லி மற்றவனை சுடக் கூடாதா ? இங்கு தான் கமலின் இந்துத்துவ முகம் வெளிப்படுகிறது -ன்னு கிளம்பிடப் போறாங்க :)
கமலும் இரா.முருகனும் நினைக்காதையெல்லாம் பதிவர்கள் துருவி துருவி ஆராய்வதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.
பதிவர்கள் எல்லோருமே ஜல்லியடிப்பவர்கள்/ time killers / copy paste bloggers என்று சொன்ன சாரு இதையெல்லாம் படிப்பாரா..??
To me, UPO works as an entertainer...but as message film, its a bit muddled. Not as clear as, say, Anbe Sivam which speaks Kamal's mind more than any films he did. As for your doubt-u:
1. I thought just to elicit laugh during a tensed moment. Nothing more or less.
2.Agree with you there. Could be anyway.
3.Yeah, confused myself. He could have just said, "Remember...Ariff..."meaning they had the conversation before just two of them.
4. Fight fire with fire. Actually, when I was twisting my mind I thought the ending would find Mohanlal and Kamal together whereby Kamal is actually an instrument by Mohanlal who is doing something he couldn't do as a cop. This is Mohanlal's way of eradicating terrorists without redtape, beaurocracy...a plot I thought of from the Hollywood films I mentioned in my review.
Interesting thoughts, bro. Remba complex-ah think pannurengga. :)
என்ன செய்யுறது ஜோ, இது கமல் படமா போய்டிச்சி. இதுவே ரஜினி படமா இருந்திருந்தா இன்னும் கோபமா வார்த்தைகளை போட்டு நீங்களே ஒரு தாக்கு தாக்கியிருக்கலாம்.
வாங்க மாயவரத்தான்!
ரஜினிக்கும் எனக்கும் என்ன குடுக்கல் வாங்கல் பிரச்சனையா ?
இது வரை ரஜினி படம் ஒன்றுக்குக்கு தான் (சிவாஜி) விமர்சனம் போட்டிருக்கிறேன் ..அதுவும் எப்படி என்று நீங்களே பார்த்துகுங்க. :)
//ஒருவேளை ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்தான் நல்லதுன்னு சொல்ல வருகிறாரோ???//
இப்படியும் இருக்குமோ...
ஜெகதீசன்,
ஆஜர் ஆயிட்டு போயிடுறதா ..உங்க பங்குக்கு ஏதாவது போட்டு தாக்கலாம்ல :)
சின்ன அம்மிணி ,சென்ஷி ,சூர்யா ..வருகைக்கு நன்றி!
ஜோ,
கதையைப் பற்றிய கலந்துரையாடல் என்று வரும் பொழுது, scene sequenceகளில் வரும் சிறு சிறு பொருட்களின் மீட்சிமை தோற்றத்தினை பார்த்து, பார்த்து வைப்பதனைவிட எளிமையாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் கதையில் வரும் 'டயலாக்' எழுத்து வடிவில் வைத்து முன்னமே அறை போட்டு கலந்துரையாடி பல நாட்கள் சிலவு செய்ய நேரிடும்.
அப்படியான பட்சத்தில் இது போன்ற 'மிஸ் லீடிங்,' பூடாகமான, துடுக்குத்தனமான வார்த்தைகளின் சொருகல் எதற்கு? அதுவும் கமல் போன்ற ஆட்களின் படங்களில். இப்படியும் எடுத்துக்கலாம், அப்படியும் எடுத்துக்கலாம் என்று சந்தர்ப்பவாத வார்த்தைகளை வைத்துக் கொடுத்தால், என்ன இதனைக் கொண்டே அரசியல நடத்துவதாக படவில்லையா? இந்த நிலை எதற்கு? ஏனெனில் இவரிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது நன்கு கற்றுணர்ந்த, வளர்ச்சியுற்ற மனிதனின் பண்புநிலை.
எனக்கும் சற்றே ஏமாற்றமாக இருக்கிறது. இன்னும் தமிழ் வெர்சன் பார்க்கவில்லை. கவலை தரும் பாதையை தேர்ந்தெடுக்காமல் இருந்தால் சரி...
உங்களோட பாயிண்ட் நம்பர்.3 ஹிந்தி வெர்ஷன்லயே நல்லா புரியுமே.ஆக்சுவலா அனுபம் கெர் அப்படி சொல்லி அனுப்பும்போது ஒரு சினன சஸ்பென்ஸ் இருக்கும்.
அதே மாதிரி பெஸ்ட் பேக்கரி கிண்டலிலும் கூட அதை கதாபாத்திரத்தின் கருத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் மிகவும் சரி.
//முஸ்லீம் அல்லாத சிலர் கூட (நான் உட்பட) சில நேரம் 'இன்ஷா அல்லா' சொல்வதுண்டு//
நானும் இந்த ஆட்டைக்கு உண்டு. அப்பப்ப 'முருகா' அப்டின்னு சொல்றதும் உண்டு.
இன்னும் படம் பார்க்கவில்லை
மறந்திட்டேனே ... அப்பப்ப 'அல்லா'வும் உண்டு.
வாத்தியார் தருமி,
நீண்ட நாளுக்கு பின் வருகைக்கு நன்றி!
அதென்ன ..'அல்லா' 'முருகன்' மட்டும் ..'ஜீஸஸ்' -ஐ விட்டுட்டீங்க.
இதுக்கு தான் நான் சில நேரம் 'அகிலாண்டேஸ்வரி ..அல்லா ..ஜீசஸ்' -ன்னு சொல்லிக்கிறது.
வாத்தியாரே!
இன்னும் படம் பாக்கல்லியா? வலையுலக கமல் மன்றத்திலிருந்து நோட்டீஸ் வரும் ..பதில் சொல்ல காத்திருங்க .
ஜீசஸ் ரொம்ப சொல்றதில்லை. ஏன்னா தெரிஞ்சவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதில்ல !!1
எனக்கென்னமோ மு்ருகன் அடிக்கடி வருவார். மத்ததெல்லாம் அப்பப்பதான்.....
//நீண்ட நாளுக்கு பின் வருகைக்கு நன்றி!//- எழுதுறதே நீங்க அப்பப்பதான். இதுல எங்க அடிக்கடி கடிக்கிறது ..!
இதுவேற இருக்கா?
பாத்துர்ரேன் சீக்கிரம். மன்னாப்பு ப்ளீஸ்
//எழுதுறதே நீங்க அப்பப்பதான். இதுல எங்க அடிக்கடி கடிக்கிறது ..!//
நானே விரலை என் பக்கம் நீட்டி " இது உனக்கு தேவையா?" :))
ஜோ
இன்னும் தமிழில் பார்க்கவில்லை. மூலத்தின் மையக்கருத்தே முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும், ஓரிரு இடங்களில் இங்கு சொதப்பியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இப்படமே பார்வையாளனை மையப்படுத்துகிறது. சாமான்யன் பதிலடி கொடுக்க வல்லவன் என்று பிரகடனப்படுத்துவதல்லவா சாமான்யனின் குறிக்கோளாக இருந்திருக்கும். ஆனால், தீவிரவாதிகளைக் கொன்றது ஒரு சாமான்யன் என்று பொதுமக்களுக்கு தெரிய வருவதில்லை. காவல்துறையின் மற்றுமொரு என்கௌண்டர் என்று காண்பிக்கப் படுகிறது. இது தீவிரவாதத்தை மேலும் வளர்க்கும். சாமான்யனின் தீரம் தரும் திகில்-அதிர்ச்சி, பார்வையாளனுக்கு மட்டும் தான்.
காவல்துறை ஆணையர், சாமான்யனின் மதத்தைப் பற்றி கேட்கும் கேள்வி பார்வையாளன் அறிய நினைத்து ஆனால் கேட்காத கேள்வி. கடைசிக் காட்சியில் இருவரும் கை குலுக்கும்பொழுது (தமிழில் இது இருக்கிறதா தெரியவில்லை). "அவன் பெயரை நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. பெயரில் மக்கள் மதத்தைத் தேடிக் கண்டுபிடுத்து விடுகிறார்கள்" என்று வாய்ஸ்-ஓவரில் வரும். கடைசி படக்கட்டம் வரை சாமான்யனின் மதத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பார்வையாளனிடம் இருப்பதை இடித்துக்காட்டும் இடம்.
ஆரிஃபை 'கவனித்து'க் கொள்ளுமாறு ஆணையர் சொல்லும்பொழுது பார்வையாளன் ஒரு திகிலான குழப்பம் அடைகிறான். அது போலவே இன்னொரு இடம்: தீவிரவாதிகளில் ஒருவன் ஆரிஃபை தங்களில் ஒருவனாக இணைத்துப் பேசுவான். ஒரு அரை வினாடி மற்றொரு காவல்துறை அதிகாரியின் முகத்திலும் - பார்வையாளனின் மனத்திலும் - அதே திகில் குழப்பம். பிறகு தீவிரவாதி கிண்டல் செய்கிறான் என்று தெரியவரும், அவன் அதிர்ந்து சிரிப்பான். பார்வையாளன் தன் சலனத்துக்காக அசடு வழியும் இடம் அது.
இந்தியில் மிரட்டல்காரன் சாமான்யன் என்பது திருப்பம். அது தெரிந்தபிறகு ஒரு வசனம் "நான் சாமான்யன் என்று தெரிந்ததும் உங்கள் குரலிலேயே மிடுக்கும், 'இவனைப் பிடித்துவிடலாம்' என்ற
தன்னம்பிக்கையும் வந்துவிட்டது பாருங்கள்". திருப்பம் என்பதாலும், நசீருதின் ஷா ஒரு சூப்பர்ஸ்டார் அல்ல என்பதாலும் அந்த வசனம் பார்வையாளனின் மனநிலை மாற்றத்தையும் அந்த வசனம் இடித்துக் காட்டுகிறது.
இதனால்தான், பார்வையாளன் தன்னை உத்தமபீடத்தில் அமர்த்திக்கொண்டு பார்க்கும் சங்கர் படங்களில் இருந்து இது மாறுபடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
present joe
dagalti,
கடைசியில் பெயர் பற்றிய உரையாடல் தவிர ,கைகுலுக்குவது உட்பட நீங்கள் சொன்ன எல்லாமே தமிழிலும் உண்டு.
தெக்கிட்டான்,
கருத்துக்களுக்கு நன்றி!
//ஏனெனில் இவரிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது நன்கு கற்றுணர்ந்த, வளர்ச்சியுற்ற மனிதனின் பண்புநிலை.//
ஆம் .அதனால் தான் கமல் ரசிகன் என்ற முறையில் என் சில ஏமாற்றங்களை சொல்லியிருக்கிறேன்.
oru costin. How do you guys manage to post your comments in Tamil? When I do 'Post', it presents a text area and there is no option to select the font/unicode etc.
Sri,
Most of us using tamil typing tools like ekalappai , NHM writer ,which you can download. If you don't want to install any tool ,just open this page http://tamileditor.org and type there and copy the content .
அறிவிலி ,TVR ஐயா ..வருகைக்கு நன்றி!
(Tried to type all this in Tamil using ekalapai and tamileditor but gave up. Some of the words and characters don't come out they way they are supposed to be)
Joe, Regarding the third wife joke, as you have already noted there are contradictory dialogues spoken by different characters and as such they cannot be taken as the views of the writer (obviously due to the fact he cannot have two absolutely contradicting opinion on the same topic).
Based on the premise, that joke should be taken as view point of the Hindu opportunist.
Of all people, I don't want to think Kamal as someone with narrow focus to hurt other's religious sentiment or make fun of. It is really hard to handle a subject like this one, yet not offend any religion.
Regarding #3, as many others have pointed out that dialogues is to make sure Arif gets shot to establish the environment in which the terrorists tries to escape. Later it happened that they used the same thing to establish the reason behind killing the terrorist (for trying to escape and in the process cop gets shot)
Reg #4, As you pointed a Hindu opportunist was also part of the 4 member gang. So there is question about common man character targeting just the Muslim terrorists.
If you have watched The Wednesday, i believe the main terrorist character (Abdullah equivalent) doesn't come from Gujarat or any part of India. He is from Pakistan where his parents gets killed (may be due to sectarian violence or other reason) but definitely not by a Hindu. Here Kamal wanted to do a balancing act by also calling out the atrocities committed by Hindus as well.
Sri,
கருத்துக்களுக்கும் புதிய தகவல்களுக்கும் நன்றி.
தமிழில் தட்டச்ச தொடர்ந்து முயற்சி செய்யவும்.
4வது கேள்வி கொஞ்சம் நெருடத்தான் செய்யுது. நீங்களும் பிரிச்சு வேஞ்சிட்டீங்க. வாழ்த்துகள்.
இங்கே பக்கத்தில் நடக்கும் படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத ராஜபக்சே ஆதரவாளராக கமல் இப்படத்தில் தோன்றுகிறார்.
மற்றபடி, படத்தில் நாடகத்தனம் அதிகம். இந்தியில் இருந்தது காமன் மேன். தமிழில் இருந்தது ஹைக்ளாஸ் மேன்
//இங்கே பக்கத்தில் நடக்கும் படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத ராஜபக்சே ஆதரவாளராக கமல் இப்படத்தில் தோன்றுகிறார்.//
கிஷோர்,
பாதி ஒத்துக்கொள்கிறேன்.
மும்பையில் நடந்தால் நமக்கென்ன ,கன்னியாகுமரில் நாம் காலூன்றி நிற்க முடிகிறதே என கமல் சொல்லுவது ,போன வருடமாக இருந்தால் நம்மைப் போன்றவர்களுக்கு கொஞ்சமாக பாதித்திருக்கும் .. 1000 கி.மீ தூரத்தில் நடப்பது பற்றி நாம் கவலைப்படவில்லை என அங்கலாய்க்கும் போது , 40 கீமி தூரத்தில் நம் மொழி பேசும் நம் ரத்த உறவுகள் ஒரே நாளில் ஆயிரக்கணக்காக கொல்லப்பட்ட போது என்ன புடுங்கிக் கொண்டிருந்தோம் என கேள்வி எழுவது இயற்கையே ..அதற்கு நாமும் யாருக்காக நாம் அக்கறை பட வேண்டும் என கமல் பாத்திரம் சொல்லுகிறதோ அவர்களும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத போது ,நாம் மட்டும் அவர்களுக்காக தலை கீழாக நிற்க வேண்டுமென்பது அபத்தம் தான் ..அந்த இடத்தில் சுத்தமாக எனக்கு எந்த பரிதாபமும் வரவில்லை .
அதே நேரத்தில் உடனே கமல் ராஜபக்சே ஆதரவாளர் என சொல்லுவது எந்த அளவு சரி என தெரியவில்லை ..இந்த படத்தைப் பொறுத்தவரை இதன் பரப்பு நாடு தான் ..எனவே அதனுள்ளே அதன் வசனங்கள் அமைந்திருக்கலாம் ..ஆனால் இந்த காலகட்டத்தில் இதை விட பன்மடங்கு நாம் கவலையுறும் விடயம் அமைந்திருப்பது ,இந்த கதாபாத்திரம் சொல்ல நினைக்கும் அங்கலாய்ப்பை நகைப்புக்கிடமாக்குகிறது என்பது உண்மையே.
ராஜபக்சே ஆதரவாளர் அப்படினு சொன்னது சும்மா ஒரு காமெடிக்குத்தான். ஆனால் கமல் ஒரு பேட்டியில் ஈழ விஷயத்தை என்னால் படத்தில் காட்ட முடியாது, நான் கோழை அப்படினு சொல்லி இருக்கார். ஆனா இப்போ வர்ற பேட்டியில் எல்லாம் ஏதோ பெரிய போராளி மாதிரி காட்டிக்கொள்கிறார்.
எது எப்படியோ அவர் ஒரு நடிகர். அவரது படத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சீரியஸாக பேசுவதெல்லாம் வெட்டிதான். நடிப்பை சிறப்பாக செய்கிறாரா? சரி பாராட்டுக்கள் என்ன கருத்து படத்தில் சொல்கிறார் என்பது தியேட்டரை விட்டு வெளியில் வந்தவுடன் மறக்கவேண்டிய விஷயம்.
ஆனால் பொதுவாழ்வில்/பேட்டிகளில் படத்தை படமாக பேசாமல், ஒரு போராளி போல் காட்டிக்கொள்கிறார்(சூரியன் எஃப்.எம் பேட்டி). இந்த இடம் தான் படத்தைவிட மோசமான விஷம். எனவே கமல் என்ற ஒரு பொதுமனிதனின் தோல்விதான் இப்படம். கமல் என்ற நடிகனுக்கும், வியாபாரிக்கும் இது வெற்றி.
//எது எப்படியோ அவர் ஒரு நடிகர். அவரது படத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சீரியஸாக பேசுவதெல்லாம் வெட்டிதான். நடிப்பை சிறப்பாக செய்கிறாரா? சரி பாராட்டுக்கள் என்ன கருத்து படத்தில் சொல்கிறார் என்பது தியேட்டரை விட்டு வெளியில் வந்தவுடன் மறக்கவேண்டிய விஷயம்.//
ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் ..ஆனால் இங்கே எப்படா கமல் படம் வரும் , திட்டி தீர்க்கலாம் என முதல் ஆளாக தியேட்டருக்கு போய் குறிப்பெடுத்துக் கொண்டு பதிவுகள் எழுதிக்குவிக்கும் பிரபல பதிவர்கள் இருக்கும் வரை இது மாறப்போவதில்லை.
அப்புறம் ,கமல் போராளி தான் ..திரையுலகம் என்ற எல்லைக்குள் ,கமல் ஒரு போராளி தான்.
//அப்புறம் ,கமல் போராளி தான் ..திரையுலகம் என்ற எல்லைக்குள் ,கமல் ஒரு போராளி தான். //
உண்மைதான் ஆனால் கமல் இன்னும் கமலாகவே திரையில் தெரிகிறார். என்றைக்கு அவர் திரையில் அவரது ஆளுமை(பிதாமகன் சூர்யா போல் / லகான் பட ஆரம்பத்தில் வரும் அமீர்கான் போல்) இன்றி வருகிறாரோ அன்றுதான் கமல் என்ற நடிகனுக்கு முழு வெற்றி கிடைக்கும்.
அதேபோல் நான் ஒரு கம்யூனிஸ்ட் அது இது என்றெல்லாம் கமல் தன் பேட்டிகளில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை
//அதேபோல் நான் ஒரு கம்யூனிஸ்ட் அது இது என்றெல்லாம் கமல் தன் பேட்டிகளில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை//
அது கலைஞரோட இன்ஸ்பிரேஷனா இருக்கும் :)
//அது கலைஞரோட இன்ஸ்பிரேஷனா இருக்கும் :)//
இருக்கலாம் இருக்கலாம். :) :)
கிஷோர்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
முகவை மைந்தன்..நன்றி.
உங்ககொக்க மக்க நாற்பத்தி ரெண்டு பேரு கருத்து சொல்லிட்டங்க நான் கருத்து கந்தசாமி என்ன சொல்ல. மொத்ததுல உ போ ஒ எல்லாரையும் பைத்தியம் புடிக்க வச்சுருச்சு.
இது கமலுக்கு கிடைத்த வெற்றி.
<<<
ஒருவர் சொன்னார் ..இல்லையில்லை ..ஆரிஃப் மிகவும் துடிப்பானவர் ..ஆத்திரத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடுவார் (அப்படி ஒன்றை அவர் பின்னர் செய்வார்) எனவே தான் மோகன் லால் கவனமாக இருக்கச் சொன்னார் என்கிற கோணத்தில் சொல்லுகிறார் ..எதை எடுத்துக்கொள்ள?
>>>
ம்ம்ம்ம்....
<<<
கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????
>>>
மிகச்சரியான கேள்விகள் ஜோ!
எனக்கும் இதே கேள்விதான்.
Mastan,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/கமல் ஒரு பேட்டியில் ஈழ விஷயத்தை என்னால் படத்தில் காட்ட முடியாது, நான் கோழை அப்படினு சொல்லி இருக்கார்./
கமல் என்றில்லை. பதிவிலே உன்னைப்போல் ஒருவனைப் புடுங்கித் தள்ளும் தொண்ணூத்தொம்பது வீத புடூங்கிகளும் அப்படியேதான். விட்டா, கலை, இலக்கியம், புரட்சி, மாற்றுசினீமா மசிருன்னு உலம்புவானுங்க. விடுங்கய்யா. இவனுங்களுக்கு இதெல்லாம் டைம்பாசு.
"ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் ..ஆனால் இங்கே எப்படா கமல் படம் வரும் , திட்டி தீர்க்கலாம் என முதல் ஆளாக தியேட்டருக்கு போய் குறிப்பெடுத்துக் கொண்டு பதிவுகள் எழுதிக்குவிக்கும் பிரபல பதிவர்கள் இருக்கும் வரை இது மாறப்போவதில்லை."
உங்களுடைய பதிவு மிகவும் பிடித்து இருந்தது. குருவி ஜனா போன்ற படங்கள் எல்லாம் "பார்க்கலாம்" என்று விமர்சனம் செய்யும் இந்த கூட்டம் கமல் படம் வந்து விட்டால் போதும் உடனே நாக்கு காது எல்லாத்தையும் தீட்டிகிட்டு வந்துடுவானுங்க......
Random Thoughts,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html
நீங்கள் பதிவு செய்து சில மாதங்கள் ஆகி விட்டன என்றாலும், சமீபத்தில் தான் இந்தப்படம் பார்த்தேன்.
கமல் துப்பாக்கியால் கண்ணீர் துடைக்கும் காட்சி தான் பெரிய காமெடி:-) அதை சரியாக விமர்சித்திருக்கிறீர்கள். உண்மையில் அவர் சொல்லும் காரணப்படிபார்த்தால், போராளிகளைக்கொல்வது "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்" வேலை தானே?
அதனால் தான் தெனாலிகாட்சி போல சக உணர்வு வரவில்லை:-)
ஆனால் கமல் கொல்ல முற்படுவது கிட்டத்தட்ட அதே இடத்தில் அதே காலகட்டத்தில் அதே தீவிரவாதத்துக்கு மனைவியை பலி கொடுத்து அதனால் உந்தப்பட்டு தீவிரவாதியான ஒருவரை ..அந்த அப்துல்லாவும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க தீவிரவாதியானவர் ..கமலும் தீவிரவாதத்துக்கு பதிலடி தீவிரவாதம் என சொல்பவர் ..பின்னர் ஏன் கமல் கருவறுத்த கும்பலை குறி வைக்காமல் தீவிரவாதத்தால் தீவிரவாதியான ஒருவரை கொல்ல வேண்டும் ? ஆக இது தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதத்துக்கு பதிலான தீவிரவாதமா ? இது முடிவுறாத தொடர் போல தெரிகிறதே?.... விடை என்ன?????
....
////
சின்ன விளக்கம்
நீங்க குழப்பிகிட்டீங்க
தீவிரவாதி செய்ததுக்கு நாயகன் அவனுக்கு தண்டனை கொடுக்கிறார்
அது சரி
ஆனால் தீவிரவாதியோ யாரோ ஒருவரால் அல்லது ஒரு குறிப்பிட்ட கும்பலால் தான் பாதிக்கபட்டதால் கோபம் கொண்டு அப்பாவி மக்களி கொல்கிறான்
இதில் அப்பாவி மக்கள் அன்ன தவறு செய்தார்கள்??
எனவே தீவிரவாதி செய்தது தவறு அன ஆகிரது யுவர் ஆனார்
தண்டனை தவறு செய்பவனுக்கு மட்டுமே
நீ பாதிக்கபட்டால் சம்மந்தபட்டவனுக்கு தண்டனை கொடு அதைவிட்டு பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டுவைப்பதும் கொழுத்துவதும் என்ன நியாயம்???
புரியுதுங்களா???
Post a Comment