அனிதா ராதாகிருஷ்ணன் என்பவர் அதிமுக சார்பாக வெற்றி பெறுவாராம் .பின்னர் அவர் சொந்த பிரச்சனை காரணமாக அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைவாராம் .உடனே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாராம் .அதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து தேர்தல் கமிஷன் இடைத் தேர்தல் நடத்துமாம் .தன் சொந்த பிரச்சனைக்காக அவர் ராஜினாமா செய்ததால் வரும் இடைத் தேர்தலில் அவரே மீண்டும் திமுக சார்பாக போட்டியிடுவாராம் .ஆளுங்கட்சி அமைச்சர்களெல்லாம் அமைச்சரவை பணிகளை விட்டு விட்டு அவர் தொகுதியில் முகாமடித்து மீண்டும் அவரை வெற்றி பெற செய்வார்களாம்.
இது போல ஒரு கேலிக்கூத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என தெரியவில்லை .ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , ஒரு தனிபட்டவரின் சொந்த விருப்பு வெறுப்பால் இழப்பு மக்கள் வரிப்பணம் ,அமைச்சர்கள் தேர்தல் வேலையால் அரசு பணிகளில் இழப்பு , இன்ன பிற..
ஒருவரை மக்கள் 5 வருட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த பிறகு ,அவரே முன் வந்து ராஜினாமா செய்வாரென்றால் ,ஒன்று குறைந்தபட்சம் அவர் எடுத்த முடிவால் வரும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது .இல்லை நான் போட்டியிடுவேன் என்றால் இவரின் சொந்த குழப்பத்தால் வரும் தேர்தலுக்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்பது தானே குறைந்த பட்ச நியாயம் என்ற முறையிலும் சரியாக இருக்கும் ? இதைக் கூட அமல் படுத்த முடியாத தேர்தல் விதிமுறை சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
இது ஒன்றும் புதிதல்ல ..ஏற்கனவே பலர் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் வருமானால் , இதுவரை நடந்தவையும் தவறு தான் என்பதில் சந்தேகம் இல்லை .எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் வேண்டும் .இப்படிப்பட்ட குறைந்த பட்ச நெறிமுறைகளை கடைபிடிக்காத தேர்தல் நெறிமுறைகளை வைத்துக்கோண்டு தேர்தல் கமிஷன் மார்தட்டிக்கொள்வது கேலிக்கூத்து.
Wednesday, December 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
100 விழுக்காடு வழிமொழிகிறேன்.
அனித இராதாகிருஷ்ணனுக்கு எஸ்விசேகர் பரவாயில்லை, அதிமுக எம் எல் ஏ பதவியை விட்டு தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். மயிலாப்பூர் இடைத்தேர்தால் செலவு மிச்சம்.
ஒரு இரு தொகுதிகளில் போட்டியிடும் சலுகைகளையும் நீக்க வேண்டும். காங்கிரஸ் கூத்து தேர்தல் தோறும் நடக்கிறது
ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் இதுதானே நடந்தது. ஏற்கெனவே இருந்த தவறை இவர்கள் அட்வான்டேஜாக எடுத்துக் கொள்கிறார்களே தவிர, யாரும் சுட்டிக் காட்டவோ, திருத்தவோ முன்வருவதில்லை.
வர ஆத்திரத்திற்கு.........
எனது கருத்தும் இதேதான்!
.ஒரு வேளை அனிதா ராதாகிருஷ்ணனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம் .கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வராத இந்த முடிவால் (அவர் தான் எம்.எல்.ஏ ..சிறிது இடைவெளி ..மீண்டும் அவரே எம்.எல்.ஏ) , //
ஆளும் கட்சி என்பதால் அமைச்சராகி சேவை செய்யும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறதே!
அதிமுகவில் இருந்தபோது அவருக்கு அந்த வாய்ப்பு இல்லையே!?
என்.கே.கே.பி.இராசா,துரைமுருகன்,கோ.சி.மணி இவர்களது பதவியெல்லாம் வேறயாருக்காவது கொடுத்துத்தானே ஆகனும். துரைமுருகனார் அண்ட் கோ.சி.மணியார் போன்ற மூத்தவர்களுக்கு(கலைஞர் என்றும் இளைஞர்) ஓய்வு கொடுத்தால் தானே இளையவர்களைத் திணிக்க ஏதுவாக அமையும்.
//ஒரு இரு தொகுதிகளில் போட்டியிடும் சலுகைகளையும் நீக்க வேண்டும்//
ஆம்!
//அனித இராதாகிருஷ்ணனுக்கு எஸ்விசேகர் பரவாயில்லை, அதிமுக எம் எல் ஏ பதவியை விட்டு தரமாட்டேன்//
விட்டுத்தரவேண்டும் என்றால் அவர் சார்ந்த ஜாதிக்கு இட ஒதுக்கீடு 7 சதவீதம் கேட்கின்றார். அதனால் அந்த ஜாதி மக்களின் ஒட்டுக்கள் மொத்தத்தையும் பெற்றுத்தருவாராம் பரவாயில்லையா?
இதற்கு எவ்வளவு பணம் கை மாறியதோ அவருக்கு.
மொத்தத்தில் அவர் வாழ்கை வசதியாகவே இருக்கும்.
வாழ்க ஜனநாயகம் :-)
ராஜினாமா செய்தவர்கள் அடுத்த 5 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றொரு சட்டம் வந்தால் சின்ன மாற்றம் ஏற்படலாம்.
Post a Comment