Monday, March 23, 2009

சாருவின் உளறல்கள்

தமிழகத்தில் அறிவுஜீவி என காட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ? கமல்ஹாசன் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை ,சிவாஜி கணேசனுக்கு நடிக்கவே தெரியாது ,எம்.ஜி.ஆர் ஒண்ணுமே தெரியாத முட்டாள் ,கருணாநிதிக்கு தமிழே தெரியாது ,இளையராஜாவின் இசை வெறும் இரைச்சல் மட்டுமே என அடித்து பேச வேண்டும் . அப்போது தான் 'ஆஹா ..இவன் ரேஞ்சே வேற போலிருக்கு' என்று பலர் அதிர்ந்து பார்க்க ,இதற்காகவே இருக்கும் சில அறிவுஜீவி அடிபொடிகள் உங்களை அரவணைத்துக் கொண்டு வக்காலத்து வாங்க ஓடி வருவார்கள் .

சாருநிவேதிதா இப்படிப்பட்ட அறிவிஜீவிகளில் ஒருவர் ..கெட்ட வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கத்தில் நிரப்பிவிட்டால் அவர் பெரிய இலக்கிய பருப்பாக இருக்கலாம் .அதற்காக இலக்கியம் தாண்டிய எல்லா விடயங்களிலும் அவர் ஏன் தொடர்ந்து உளற வேண்டும் என தெரியவில்லை . ராக்கெட் அறிவியல் பற்றி அவர் உளறினால் கூட சாரு சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் (அதுவும் கேரளாவில் தான் அதிகமாம்) இருப்பது தான் இவரின் 'அடிச்சு விடுறா..பாத்துக்கலாம்" அள்ளிவிடல்களுக்கு காரணமாக இருக்க முடியும். இதே தமிழகத்திலிருந்து போன ஷகீலாவை இவரை விட 100 மடங்கு பேருக்கு தெரியும் .அதனால் என்ன இப்போ?

சாஸ்திரிய சங்கீதத்தில் கரை கண்ட செம்மங்குடி ,பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களே மேதை என ஒப்புக்கொள்ளும் இளையராஜாவின் இசை வெறும் இரைச்சலாம் ..ஜேசுதாசின் குரலைக் கேட்டால் இவருக்கு வாந்தி வருகிறதாம் .'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் இளையராஜா பாடியது என அடித்துச் சொன்னவர் ,இப்போது ஆஸ்கார் குறித்த கமல்ஹாசனை கலாய்க்கிறாராம் .

சாரு சொல்கிறார் "
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)


ஆஸ்காரையும் இலக்கிய நோபலையும் ஒப்பிடும் இந்த அறிவிலியை என்ன சொல்வது ? ஆஸ்கார் என்பது உலக மொழி திரைப்படங்கள் எல்லாம் போட்டி போடும் இடமல்ல . 'சிறந்த பிற மொழி படம்' பிரிவைத்தவிர ஆங்கிலப்படங்கள் மட்டுமே இங்கே போட்டி போட முடியும் .பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை ..ஒரு ஈரானியப்படம் 'சிறந்த பிற மொழி திரைப்படம்' பிரிவில் ஒரு விருது பெற முடியுமே தவிர ,அதன் இயக்குருக்கோ ,நடிகருக்கோ விருது கொடுக்க மாட்டார்கள் ..காரணம் மிகச்சுலபம் ..இது ஹாலிவுட் படங்களுக்காக விருது . ஆனால் இதைத் தாண்டி சத்யஜித்ரே போன்றவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு ,குறிப்பிட்ட படம் என்பதற்காக இல்லாமல் அவரின் ஒட்டுமொத்த கலை பங்களிப்பை கவுரவிக்க ஒரு சிறப்பு விருது கொடுத்திருகிறார்கள் ..ஆனால் ரகுமானோ ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததால் அந்த வாய்ப்பை பெற்று ,விருதை தட்டிச்சென்று நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ..இது தான் கமல்ஹாசன் சொன்னது ..ஆனால் அறிவுஜீவி சாரு அதை இலக்கிய நோபல் பரிசோடு ஒப்பிடுகிறார் ..இலக்கிய நோபல் என்ன சுவீடிஷ் இலக்கியத்துக்கு மட்டுமா வழங்குறார்கள் ? எல்லா மொழி இலக்கியங்களும் போட்டி போட்டு அதில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது ..இந்த அடிப்படை வித்தியாசம் கூடவா இவருக்கு தெரியாது ? கமல்ஹாசனை நொள்ளை கண்டுபிடித்து விட்டால் இவருடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளலாம் அவ்வளவு தான் .ஆனால் தனது மேதாவித்தனத்தை இலக்கியத்தில் மட்டும் காட்டிவிட்டு போகலாமே ,சினிமா அறிவிலும் இவர் கமல்ஹாசனை விட அறிவாளி என காட்டிக்கொண்டு அப்புறம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பல்டி அடிக்க ஏன் முயல்கிறார்?

அப்புறம் அடுத்த அறிவுஜீவி வாக்கியம்
"சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. "
..

உலகின் மிகச்சிறந்த நடிகனை இந்தி சினிமாவில் தெரிந்திருந்தால் தான் ஆச்சு என்ற அடிமைப் புத்தியை விடுவோம் .இருந்தாலும் இவரின் வழிக்கே வருவோம் .இந்த சாருவுக்கு தெரிந்த நாலு கச்சடா ஹிந்திவாலாக்களுக்கு சிவாஜி கணேசனை தெரியாது தான் .ஆனால் சிவாஜி கணேசன் இருந்த துறையில் இருந்த இருக்கிற வட இந்திய மேதைகளிடம் போய் சாரு கேட்டாரா "உனக்கு சிவாஜி கணேசனை தெரியுமா?" என்று ? வேண்டுமென்றால் அமிதாப்பச்சனிடம் போய் கேட்டுப்பார்க்கலாமே ..சிவாஜி கணேசன் யாரென்று . சிவாஜி கணேசனின் எத்தனையோ படங்கள் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட போது 'சிவாஜி அளவுக்கு எங்களால் செய்ய முடியாது ' என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டு செய்தார்களே திலீப்குமாரும் ,சஞ்சீவ் குமாரும் ..அவர்களிடம் போய் கேட்டாரா இந்த சாரு ? சிவாஜி கணேசனை தன் உடன்பிறவா சகோதரனாக நினைந்து அவர் குடும்பத்தில் ஒருவராக விளங்கும் லதா மங்கேஷ்கரை போய் கேட்டாரா சிவாஜி கணேசனை தெரியுமா என்று ..அல்லது 1960 -ல கெய்ரோ படவிழாவில் கட்டமொம்மன் படத்துக்காக 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த சிறந்த நடிகர்' விருதைக் கொடுத்து விட்டு கணேசனுக்கு தனி விருந்தளித்த எகிப்து அதிபர் நாசர் ,அடுத்த முறை இந்தியா வந்த போது தேடி வந்து கணேசனை சந்தித்தாரே ,அந்த நாசரைப் போய் கேட்டாரா ? எம்.ஜி.ஆரிலிருந்து சாய்ப் அலிகான் வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் ,அந்த விருதை ஒரு முறை கூட வாங்காத கணேசனின் படங்களை 6 மாத காலம் ஆராய்ச்சி செய்து தேடி வந்து 'செவாலியர்' கொடுத்த பிரெஞ்சு அரசாங்கத்தை கேட்டாரா இந்த சாரு ? அல்லது 'தில்லானா மோகனம்பாளி'ம் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ரஷ்யாவைப் போய் கேட்டாரா இந்த சாரு? அல்லது மராத்தி மொழியில் தூர்தர்ஷன் முதல் ஒளிபரப்பை துவங்கும் போது இதே கணேசனை மராத்திய சிவாஜியாக நடிக்க வைத்து அதை ஒளிபரப்பி துவக்கினார்களே ..அங்கே போய் கேட்டாரா இந்த சாரு?




இவரே இவரை உலகத்தர எழுத்தாளர் என பீத்திக்கொள்வாராம் . தமிழ் நாட்டுலயே இவரை மொத்தம் 34 பேருக்கு தான் தெரியும் .. கேரளாவில் இவர் சொன்னா ஆட்சி மாறிடுமாம் ரேஞ்சுக்கு நினைப்பு வேற . இவர் ஒத்துகொண்டாலும் ஒத்துக்கொள்ளா விட்டாலும் ,இவருக்குத் தெரிந்த வடநாட்டுக்காரனுக்கு கணேசனை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் கணேசன் உலகப்பெரு நடிகன் தான் .

55 comments:

Anonymous said...

:)

dagalti said...

ஜோ, அவர் எழுதுபவற்றில் ஆழ்ந்து எதிர்வினையாற்றும் அளவுக்கு எதுவும் என்றும் இருந்ததில்லை. ரசிக்கமுடிந்தவற்றை ரசித்துவிட்டு விலகிவிடுவது வழக்கம். இந்த கமல்-மனுஷ்யபுத்திரன் பத்தியை படித்து அதிர்ந்து சிரிக்க முடிந்தது.

கமலின் 'பாராட்டு' புகைச்சல் அற்ற மனம்திரந்த, மட்டற்ற மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த ஒன்று என்று
நம்புவது கடினம். அதனால் தானோ என்னவோ என்னால் சிரிக்க முடிந்தது. அதற்கு மேல் அந்த உவமையின் பொருத்தமின்மையை எல்லாம் ஆராய்வதே வீண்.

நையாண்டி நைனா said...

என்ன ஜோ... சும்மா பிச்சி பிச்சி போட்டுடீங்க.

ஜோ/Joe said...

டகால்டி ,நையாண்டி நைனா ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பேரெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு :))

வெட்டிப்பயல் said...

Sivaji Ganesan nadipai pathi oruthar solli naama therinjikanumna naama irukoam :)

Sivaji maathiri nadika innoaruthar poaranthu thaan varanum...

சிங்கை நாதன்/SingaiNathan said...

Who is Sivaji ? :)

அடிக்காதீங்க , சும்மாதான் ;)


என்ன இருந்தாலும் சாரு சாருதான் :)
விட்டுத்தள்ளுங்கப்பா

அன்புடன்
சிங்கை நாதன்

ஜோ/Joe said...

வாங்க வெட்டிபயல் :)

SathyaPriyan said...

ஜோ உண்மையாக சொல்கிறேன், சொன்னால் நம்பவே மாட்டீர்கள் அந்த கட்டுரையை படித்து விட்டு இப்படி ஒன்றை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் உடனே நீங்கள் படித்தால் இன்னும் ஆழமாக எழுதுவீர்கள் என்று அதனை விட்டு விட்டேன்.

உங்களுக்கு ஓரிரு நாட்கள் அவகாசமளித்து நீங்கள் அதனை பற்றி பதிவிடாவிட்டால் உங்களுக்கு அதன் சுட்டியை அளித்து எழுத சொல்லலாம் என்று எண்ணினேன்.

நன்றிகள் உங்களுக்கு.

இனி நான் எழுத நினைத்து நீங்கள் எழுதாமல் விட்ட ஓரிரண்டு விஷயங்களை மட்டும் சொல்கிறேன்.

ARR அவர்களுக்கு விருது கிடைத்ததும் சுமார் 10 ற்கும் மேற்பட்ட தொலைகாட்சியில்/ ஊடகங்களில் அவரை பாராட்டி பேட்டி அளித்தவர் கமல். வேண்டுமானால் கூகிளில் தேடிப் பாருங்கள்.

மேலும் நடிப்பிற்கு ஆஸ்காரின் அளவுகோல்களை எல்லாம் முன்னரே பலமுறை கடந்து விட்டவர் நம்மவர். நேரம் கிடைத்தால் Training Day படம் பாருங்கள். அதில் நடித்த Denzel Washington ஆஸ்கார் விருது பெற்றார். அவரின் நடிப்பில் என்ன இருக்கிறது என்று விருது கொடுத்தார்கள் என்பது எனக்கு புறியாத புதிர்.

மேலும் சொல்கிறார் கமல் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டி ஆனால் ஹிந்தி ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்ள வில்லையாம். முழு உளரல் இது.

அவரின் ஏக் துஜே கேலியே பெரும் வெற்றி பெற்ற படம். பாபி வெற்றிக்கு பின்னர் அதே ரிஷி கபூர் டிம்பிள் கபாடியா ஜோடி மீது நம்பிக்கை வைத்து எடுத்த சாகர் படம் கமலால் மட்டுமே ஓடியது. அதில் அவரின் நடிப்பு, வசனம், நடனம் இவற்றை பார்த்து ரசிகர்கள் முடிவை மாற்றி கமலுடன் டிம்பிள் இணையுமாறு வைக்க போராட்டமே நடத்தினார்கள். இதனால் ரிஷி கபூர் கமலின் மேல் அக்காலத்தில் கடும் கோபம் கொண்டார்.

கமலை ஒரு ஜாலியான லவ்வர் பாயாக நினைத்து கொண்டிருந்தவர்கள் அவரின் சத்மா படத்தினில் அவரின் நடிப்பை பார்த்து அதிசியத்து போனார்கள்.

கமலை ஹிந்தி திரையுலகிலிருந்து விரட்டியடிக்க பல இலைமறைவு வேலைகள் நடந்தன. கமல் பற்றி தவறான தகவல்கள் அங்கே ஊடகங்களுக்கு சொல்லப்பட்டன. கமல் சென்னையில் இருந்த காரணத்தினால் அவற்றை எதிர்க்கவோ/மறுக்கவோ இயலவில்லை. பின்னர் அவராகவே வெறுத்து ஹிந்தியிலிருந்து ஒதுங்கி விட்டார்.

கடைசியாக அவர் மீது கொண்ட மரியாதையால் பணம் வாங்காமலேயே அவரது ஹே ராம் படத்தில் நடித்த்தார் ஷாருக்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

மீண்டும் நன்றிகள்.

Anonymous said...

மிகவும் அழகாக, நெற்றியில் அடித்த மாதிரி சொல்லி இருக்கின்றீர்கள். மிகுதியான மக்களின் ரசனைகளை மறுதலித்தல் என்பதன் மூலமாக வெளிச்சம் தேடும் மனிதரின் முகத்திரை நீக்கும் முயற்சி. சாருவை ஆதரிப்பவர்களே சற்று சிந்திக்கும்படியான வாதம். வாழ்த்துக்கள்.

நல்லதந்தி said...

//தமிழ் நாட்டுலயே இவரை மொத்தம் 34 பேருக்கு தான் தெரியும் ..//

இவ்வளவு பேருக்குத் தெரியுமா?.அடேங்கப்பா பெரும் புள்ளியாய் (கவனிக்க புள்ளிராஜா அல்ல) இருப்பார் போலிருக்கிறதே! இருந்தாலும் நீங்கள் இப்படி பொய் சொல்லக்கூடாது!

சரவணகுமரன் said...

அந்த புகைப்படங்கள் அருமை. அபூர்வமானவை.

Venkatesh Kumaravel said...

Goundamani to Charu: "ayyO rAmA! enna En indha mAdhiri kazhisada pasanga kooda ellAm kootu sEra vaikuRE?!"

Anonymous said...

Yaaruppa indha Chaaru? Loosu madhiri yezhudhirukkaru. Daaru Daarunnu Kizhichu Chaara puzhinjitteenga, Joe. Thats a fitting reply to his crap post. Well done.

கோவி.கண்ணன் said...

சரியான சூடு ! அசத்தலான பதிலடி.

*****

கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பதிவு போடுவேன் என்று இருந்தீர்கள் என்றால் அதை நான் கூட செய்வேன்.
:)))))

Rakesh Kumar said...

Bro, if he didn't get what Kamal is saying, then what arivu jeevi is he? Usually, Kamal can be cryptic, but here he is straight forward and is talking about what is normal for Oscars. This Charu character purposely want to read it differently.

As for Nadigar Tilagam, enna solla, enakku sirikkirathaaa, azhugirathaa theriyila.

As I mentioned in The Hub, this dude has all the making of a pretentious intellect wannabe. He drops big name taken right out of the filmaking school text book, and then revisits popular views and twist them around.

The pix you posted on NT says a thousand words. Unlike others who urged you to ignore him, I urge you to continue criticising this Charu character. And spread the word around, some critics are meant to be silent and this dude is one of them.

Great post, bro.

Amal said...

சாட்டையடி ஜோ!!!
அவர் புளுகுமூட்டை பத்திகள் எழுதும்போதெல்லாம், என்னடா விஷயம் தெரிந்த யாருமே ஒன்னும் கண்டுக்கமாட்டேங்குறாங்களே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் வந்த அட்டகாசமான சாட்டையடிப்பதிவு!!!

Sunday Thoughts said...

Dear Joe,
Nice post. I am big fan of Nadigar Thilakam Sivaji Ganesan.There are some persons like saru or Jayamohan who are in my opinion are nuts.
Regards,
Tharanipathi.

ஜோ/Joe said...

வாங்க சத்யபிரியன்!

நீங்க சொல்லுற மாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமா எழுதியிருக்கலாம் . சாருவின் பதிவை படித்தவுடன் ஏற்பட்ட கடுப்பில் அப்போது தோன்றியதை மட்டும் எழுதி விட்டேன்.

கமல் பற்றிய உங்கள் மறுமொழிகளோடு நீங்களும் ஒரு பதிவு போடுங்கள் .சாருவுக்கு உறைக்குதோ இல்லையோ அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடும் சிலருக்காவது உறைக்கட்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதைக் கடிதமாக சாரு அவர்களுக்கு அனுப்பலாம். ஆதாரங்களுடன் இருப்பதால், அதற்கு என்ன பதில் தருகிறார் என்று பார்க்கலாம். வாய்ப்பு இருந்தால், அவருக்கு அனுப்பவும்.

ப்ரசன்னா (குறைகுடம்) said...

"When actor Marlon Brando visited India, he was shown film footage of Sivaji Ganesan. From then on Brando admired Sivaji Ganesan for his acting style. He also admitted that "Sivaji Ganesan may act like me but I cannot act like Sivaji Ganesan"

-From http://en.wikipedia.org/wiki/Sivaji_Ganesan

ஜோ/Joe said...

சிங்கை நாதன் :)

SeMa ..நன்றி!

கிஷோர் said...

அருமையான அலசல்.

இப்படி சாரு மேம்போக்காக எழுதுவது எப்படிதான் சில விசிலடிச்சான்குஞ்சுகளுக்கு பிடிக்கின்றதோ தெரியவில்லை :(

"அருமையாக உள்ளது உங்கள் ப்ளாக், நைஜீரியா பேங்க்கில் உங்களுக்கு 1மில்லியன் உள்ளது" என்று வரும் ஸ்பாம் மெயிலைக்கூட பிரசுரிக்கும் சாரு இந்த மெயிலை பிரசுரிப்பாரா?

சாரு பற்றி லிவிங்ஸ்மைல் பதிவை படித்திருக்கிறீர்கள்தானே :)

கிஷோர் said...

//இதைக் கடிதமாக சாரு அவர்களுக்கு அனுப்பலாம்//

வழிமொழிகிறேன்

கத்தார் சீனு said...

Asathalana post....
I liked it very much...
Loafer people like Charu should immediately stop writing about cinema and music.

வால்பையன் said...

ஹா ஹா ஹா

ஒரு ரவுண்டு அதிகமா போன இப்படி உளருதல் இலங்கியவாதிகளுக்கு பழக்கம் தானே!

Mohandoss said...

//பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை//

Apocalypto எந்த மொழிப் படம்,

Best Achievement in Makeup (2007) - Aldo Signoretti, Vittorio Sodano
Best Achievement in Sound Editing (2007) - Sean McCormack, Kami Asgar
Best Achievement in Sound Mixing (2007) - Kevin O'Connell, Greg P. Russell, Fernando Cámara

நாமினேஷன் தான் அவார்ட் வாங்கலைன்னாலும் அதை ஒரு குறையா சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன், அக்காதமி அவார்ட் விதிகளை இன்னுமொரு முறை படிக்க வேண்டுகிறேன். ;)

TBR. JOSPEH said...

நடிகர் திலகத்தை அகில உலகமும் சிறந்த நடிகராக ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவில் பல மாநிலங்களில் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. கேரளத்தில் சத்யன், தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஹிந்தியில் ராஜ்குமார், என அவரவருடைய சிறந்த நடிகருடன் ஒப்பிட்டு நடிகர் திலகம் ஒன்றுமேயில்லை என பீத்துவார்கள். இந்த தலைமுறையிலும் மோகன்லால்,மம்மூட்டியைவிடவும் கமல் ஒன்றும் சிறந்தவர் அல்ல என்ற வாதமும் உண்டு. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களுடன் பழகியதால் சொல்கிறேன். கமல் பத்துவேடங்களில் நடித்ததை கோமாளித்தனம் என்று இப்போதும் மலையாளிகள் எள்ளி நகையாடுவதை கேட்டிருக்கிறேன். என்ன செய்ய? இவர்களுடன் எல்லாம் வாதிடுவதிலோ அல்லது கோபப்படுவதிலோ பலனே இல்லை. சரிதான் போங்கடான்னு இருந்துற வேண்டியதுதான்.

நீங்கள் வெளியிட்ட படங்கள் இரண்டும் அருமை ஜோ. எங்கருந்து புடிச்சீங்க?

Raj said...

அந்த லூசுக்கெல்லாம் பதில் சொல்லணுமா….விடுங்க சார்.

Anonymous said...

சினிமாவுக்கு வசனம் எழுதியவனை விட, அதை விமர்சித்து எழுதிவிட்டு அதையே மீண்டும் மீண்டும் எழுதி சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு மனோவியாதிக்காரர் அந்த நபர்.

சோத்துக்கே காசில்லை என்று வாசகர்களிடம் பிச்சை எடுத்தாலும் 5-ஸ்டார் ஓட்டலில் குடிக்கும் அயோக்கியன்.

பள்ளி மாணவர்கள் கூட வீதிக்கும் வந்து இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லிப் போராடும் போது படுக்கையறை பற்றியும், விரக தாபம் பற்றியும் அல்குல் பற்றியும் எழுதிச் சிலாகிக்கும் பொறுப்பற்ற பிறவி.

விடுங்க சார்.

Mohandoss said...

//http://en.wikipedia.org/wiki/Life_Is_Beautiful//

It then went on to win the Academy Awards for Best Music, Original Dramatic Score and Best Foreign Language Film; The film was additionally nominated for Academy Awards for Directing, Film Editing, Best Picture, and Best Original Screenplay.

So, யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.

சிங். செயகுமார். said...

அருமையான அலசல்.

இப்படி சாரு மேம்போக்காக எழுதுவது எப்படிதான் சில விசிலடிச்சான்குஞ்சுகளுக்கு பிடிக்கின்றதோ தெரியவில்லை :(

Pot"tea" kadai said...

கலக்கல் சாமியோவ்!!!

சிவாஜி கணேசனின் அந்த புகைப்படங்களுக்கு நன்றி,

தல கூகிள் பண்ணீ இதுக்கு எதிர்வினை சீக்கிரம் ஆற்றுவார்...அல்லது கன்னிமரா பியூனுடன் பேசிவிட்டு பதில் போடுவார் ;)

இராம்/Raam said...

/கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பதிவு போடுவேன் என்று இருந்தீர்கள் என்றால் அதை நான் கூட செய்வேன்.//




ஹி ஹி...

Rakesh Kumar said...

Mohandas,

Apocalypto purpotedly used ancient Mayan language I believe. But its a US production (directed by Mel Gibson).

Likewise earlier Gibson movie, Passion of Christ, also non-English but is pure US production.

So, any technicians working for an American production are eligible for nomination.

But its not always the same for technicians from the nominees of Foreign Language Category. This hardly happens, but there has been exceptions: Life Is Beautiful, which got both Foreign pix, Best pix and other nominations.

Lagaan was nominated for Foreign Language, but that was all. They didn't notice ARR there.

Also, the films that has been partly financed by US are knows as US-?-? production. And usually the US company would campaign hard for the films nomination.

So, Oscar is crazy that way. I couldn't find the rules and regulation on Oscar's site.

I'd say Joe's comment is how Oscar is generally perceived and agreed about. Exceptions have been made and can be made in the future.

If Kamal makes a strong film, that is supported by, say, Miramax company and is helped to distribute there, chances are high that Miramax will campaign hard for the film and yes, Kamal and crew may get a stab at Oscar nomination. Kamal knows this, but he'd rather save his breath and ceiling high expectation by saying that Oscar is mainly for US films.

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
இது சாட்டையடி அல்ல, சேவாக் விளாசல் !

சரியான கருத்துகள்...

//யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.
//

ஜோ சொன்னதில் தகவல் பிழை இருக்கிறது தான், ஆனால், அவர் "குறை கூறியதில்" ஒரு தவறுமில்லை!

இந்த தகவல் பிழையால், அவர் சொன்ன சாராம்சம் அடிபட்டுப் போகவில்லை என்பது என் எண்ணம். உங்களுக்குக் "குறை கூறுவதாக"ப் படுவதை விளக்கினால் நல்லது.

ராஜ நடராஜன் said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை.எனது எதிர்வினையை பதிவும்,பின்னூட்டங்களும் பதிவு செய்கிறது.

ராஜ நடராஜன் said...

சொல்ல மறந்தது சாரு சொல்வதையெல்லாம் இன்னுமா மக்கள் நம்புறாங்க:)

Mohandoss said...

Rakesh Kumar,

Exactly there are two conditions and that are OR conditions, American/English. Please not that are OR condition not AND. So if it is American like you said, it is eligible for nominations. So the language part is not correct in Joe's write up.

In the same way, what ever he said about foreign language film is also not correct, if you are selected for best foreign you are eligible for all the categories, ALL.

So second point is also not correct. His post entirely depends on this two lines I guess, sorry I used to read between the paragraphs lines words etc., ;).

But the problem is these people are also does the same for Charu. You have to see the "Moto" behind that. There is something more than what you people see in Charu's comments I guess. ;)

No body is stopping you from making movies that are in different language and get nominated for Academy. But see "hardly" means talent for me. If you have talent you can make it, like what Life is Beautiful did.

If you going to say academy is not fair in selecting such American/Other films, then it is an agency, you have accept their opinion. Like what ever we do for Nobel, if you know history Nobel had lot of controversies. If you want to list them give me time ;). So dont say Academy didnt selected my movie, you say I dont have that talent. Think of Scorsese in this case. ;)

ஜோ/Joe said...

மோகன் தாஸ்,
நண்பர்கள் Rakesh மற்றும் பாலா உங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் .நண்பர் பாலா சொன்னது போல என்னுடைய தகவல் பிழையை நான் ஒத்துக்கொள்ளுகிறேன் .ஆனால் சாராம்சம் அப்படியே தான் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சில அபூர்வ விதிவிலக்குகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் .அவை கூட ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டவை ,அமெரிக்க கம்பெனிகளால் வினியோகிக்கப்பட்டவை என்ற வகையில் அமெரிக்காவை சம்பந்தப்பட்டே இருந்திருக்கின்றன.

ஆஸ்கார் என்பது எல்லா மொழிகளுக்கும் ,நாடுகளுக்கும் சமமான பங்கேற்பை கொடுக்கும் விருது என்றால் அதில் "Best Foreign Language Picture' என்று தனியாக ஒரு பிரிவு இருக்க வேண்டிய அவசியமென்ன ?

என்னுடைய வாக்கியத்தில் நீங்கள் கண்டுபிடித்த பிழைக்காக ஆஸ்கார் அகில உலகத்துக்கும் பொதுவான விருது ,ஹாலிவுட்- கானது அல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இருந்தாலும் ,அந்த விதி முறைகள் இருக்கும் சுட்டி தந்தால் நன்றாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் பக்கம் வந்தா சாருவை விட்டு ஆஸ்கர் பேரெல்லாம் அடிபடுது.ஆஸ்கர் பதிவு போட்டா பொட்டிக்கடை தூங்குது.பலாப்பழத்தை உருச்சுக் கொடுத்தாலும் விக்கிபீடியா கடைல வெச்சு வித்தாத்தான் மக்கள் வாங்குவாங்களோ:)

ராஜ நடராஜன் said...

சிவாஜியைத்தான் மதிக்கத் தெரியாம அனுப்பி விட்டோம்.வாழும் கலைஞன் கமலையாவது கவுரவப் படுத்த கற்றுக்கொள்வோம்!

Anonymous said...

சாரு எழுதியதில், அவ்வளவு பழுது இல்லை! சாருவை தூற்ற இவ்வளவு பேரா..... அட கடவுளே....!

Anonymous said...

Apart from the oscar rules, one has to consider that a movie hsa to be released in America widely to get a chance to be nominated/awarded. Oscar has a committee whose members are spread across. In their case M doesnt go to the mountain. The mountain has to come to M(edhukku vamubu initial mattum solraen). That is, the movie producers/distributors have to make efforts to make a wide release across America so that these committee members see the movie actually. Or they can personally deliver VCDs to each of the member. Aamir Khan pitched campin US to door deliver VCD's to them and got a nomination due to a) quality of his movie Lagaan
b) Hard work in distributing it in US and making it available to committee members
c) Money he could spend in doing (b)

Obviously, if it is an american production or if it is released widely in america, the foreign language movie has a good chance of nominations/awards in all categories.

So, even though, pedantically, a non-hollywood AND non-English film can be eligible, there has to be money and effort behind distribution in America.
This being the case, Slumdong afforded Rahman that opportunity. We are all lucky that it did and he got the award.
If Charu Nivedita is willing to spare 10% of the booze money he gets from his readers, maybe infact we can actually get enough money to do this distribution for a tamil movie. (Ok, just kidding, avaruku irukkaradhe 10 vaasagargal...)

So Kamal is right. Rahman got the chance because a) his movie was a hollywood production OR holly wood distribution b) His producers had enough money to lobby and spend on making the movie available to committee members.

This is what Kamal meant. If people are willing to spend 10 million dollars and do the same for a Kamal movie, venaamna solvaaru?

enRenRum-anbudan.BALA said...

//என்னுடைய வாக்கியத்தில் நீங்கள் கண்டுபிடித்த பிழைக்காக ஆஸ்கார் அகில உலகத்துக்கும் பொதுவான விருது ,ஹாலிவுட்- கானது அல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.
//

:-)

Anonymous said...

//So dont say Academy didnt selected my movie, you say I dont have that talent.//
Academy எப்பொழுதுமே அமெரிக்க படங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. மிகச்சிறந்த உலக படங்கள் ,நடிகர்கள்(சிவாஜி உள்பட) nomination வரை கூட வந்ததில்லை.அதற்காக திறமையில்லை என்று ஒத்துகொள்ள சொல்வது அறியாமை.

Anonymous said...

நீண்ட நாட்களுக்குப்பின்.....

ந்நச்!!

ஒரு + குத்திட்டேன். 10 குத்த வசதியிருந்தா 10 ம் நேரம் செலவழித்துக் குத்துவேன்.

andygarcia said...

சூப்பர் பதிவு! அதிர்ச்சி மதிப்பீடு வைத்து குப்பை கொட்டுபவர் சாரு,
கமல் இரா முருகனை வசனம் எழுத வைத்த வைதெரிச்சலாக கூட இருக்கலாம்

கைப்புள்ள said...

மத்த விஷயங்களை விடுங்க. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களையும் அந்த அரிய புகைப்படங்களையும் பார்த்ததும் மெய்சிலிர்த்தது. மிக்க நன்றி ஜோ.

Anonymous said...

சாரு சொல்வதில் உள்ள பேத்தல்கள் ஒரு இமயமலை அளவுக்கு இருக்கும்

1) இளையராஜா தன் சாதிப்பெயரை சொல்லிவிட்டாரென்ரு ஒருத்தட் மேல் கேஸ் போட்டாராம்
2) ஆந்திராவில் உள்ள ஒரு மிகப்பிரபலமான தெருப்பாடகர், வேறு சில புகழ்பெற்ற கலைஞ்சர்களின் இசையை ராஜா “குப்பை” என்று விமர்சனம் பண்ணிட்டாராம்
3) அவர் ஒரு கர்வியாம்
4) ஊரான் காசில் அதுவும் டொனேஷனில் திருவாசகம் பண்ணிவிட்டு அந்த ஆல்பம் வெற்றிபெர தன் சொந்த காசில் 40 லகரம் போட்டு தங்கநகையை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நன்கொடை தந்தாராம்

இது போல பல சில்லீ குறைகளை சொல்லி இவர் ராஜாவை பலகாலம் திட்டி வருகிறார்.

ராஜா ஒரு தலித் தாகப்பிறந்திருக்கலாம் ஆனால் அந்த சாதியை அவர் மறுப்பதர்கு அவருக்கு உரிமை உண்டு. ஒரு கமல்ஹாசன், உயர்ந்த சாதியாக கருதப்படும் தன்னுடைய பிராமண பிறப்புசாத்யை ஒதுக்கினால் அதை பாராட்டுகிறோம். ஆனால் ராஜா தன்னுடைய தலித் சாதியை விலக்கினால் மட்டும் தவறு!!!

(அவருக்கு செருக்கு இல்லை என்பது என் கருத்து, இருந்தாலும், ஒரு பேச்சுக்கு அப்படி வைத்திக்கொண்டாலும் கூட) ராஜா கர்வியக ருந்தால் என்ன, 100 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடௌய இசை தான் பேசப்படுமே தவிர யார் கர்வி யார் அடக்கமானவர் என்றெல்லாம் யாரும் கவலைப்படப்போவதில்லை. ராஜா கர்வப்பட்டு ஒரு கலைஞனை ஒதுக்கினால் மக்களும் அதை ஃபாலோ பண்ணுவார்களா என்ன???? சோ ராஜாவின் கர்வத்தால் யாருக்கு என்ன பிராப்ளம்??

இந்தாளின் சீரோ டிகிரி உளரலை படித்துவிட்டுதான் சொல்கிரேன், இந்தால் ஒரு லூஸ். அவ்ளோதான்!

- sakala

Deepa said...

செம சூடான பதிவு. சாருவின் உளறல்களுக்குச் சரியான பதில்டி.
அது சரி, அவர் என்ன பெரிய இலக்கியவாதியா? நான் அவரைப் படித்ததே இல்லை. ஆ. விகடன் (சில சம்யம்) தேவை இல்லாமல் தூக்கிப் பிடிக்கும் கோமாளிகளில் ஒருவரென்றே எண்ணி இருந்தேன். கேரளாவில் ஷகீலா அளவுக்கு ஃஃபேமஸா அவர்?

Joe said...

Excellent article, Joe!

Amazing line-up of facts.

மதிபாலா said...

நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை. ஆனாலும் நெம்ப நல்லா அலசியிருக்கீங்க.

நெம்ப லேட்டா வந்ததுக்கு ஸ்ஸாரி..

இப்பல்லாம் அதிகமா பதிவு போடறதில்லியோ ?

ஜோ/Joe said...

//நமக்கு இலக்கியமெல்லாம் சரியா வராது தலை//

தோழர் ..என்ன நக்கலா? :) எனக்கு மட்டும் இலக்கியம் தெரிஞ்ச மாதிரி :))

தீப்பெட்டி said...

அருமையான பதிவு, ஆச்சர்யமூட்டும் தகவல்கள், நன்றி திரு ஜோ அவர்களே..

Anonymous said...

எல்லோரும் வலப்புறமாக நின்றால் தான் மட்டும் இடப்புறமாக நிற்கிறேன் என்று சொல்லும் விதண்டாவாதி (வியாதி)) சாரு.

சரியான பதிலடி.

நம்க்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாரு அவரு.

தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடற பல பேர் அவர்களும் அந்த ரகம் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives