Tuesday, June 19, 2007

நடிகர்திலகம் 'சிவாஜி 'யும் ரஜினியின் 'சிவாஜி' யும்

திசைகள் அ.வெற்றிவேல்
(ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை)

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகர்திலகம் காலமாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.நடிகர்திலகம் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டமும்,அவர் ஒரு நடிகரே அல்ல என்று சில இலக்கியவாதிகளும்,அவர் ஒரு 'நடிப்புக் குற்றாலம் ' என்று அறிவு ஜீவி 'மதன் ' போன்றவர்களும், அவர் ஒரு 'மகாகலைஞன் 'என்று நம்மிடையே வாழும் கலைஞானி கமல்ஹாசனும்,தமிழக கலையுலகின் 'ஞானகுரு ' என்று தமிழக திரையுலகக் கலைஞர்களும் கொண்டாடும் விதமாக,அவரைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் உண்டு.

நான் அவர் படம் பார்த்து, அவர் ரசிகன் என்ற பெருமையில் வளர்ந்தவன்.அது பெருமையா அல்லது சிறுமையா என்பது அறுபது-எழுபதுகளின் சினிமா ரசிகர்களைக் கேட்டால் தெரியும்.தமிழ் திரைப்படக் கலைஞன் என்பதாலும்,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் தகுதிக்கு கிடைக்கவேண்டிய புகழ், மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் நம்பும் பல கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.வாழ்க்கையில் நடிக்கத் தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நடிகன் என்பவன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, நடிப்பில் வித்தியாசம் (வெரைட்டி) கொடுக்கவேண்டும்.அதைத் தமிழ்த்திரையுலகில் முதன்முதலாக திறம்படச் செய்தவர் நடிகர் திலகம்.அவர் நடித்து தமிழ்த் திரையுலகில் உலவவிட்ட பாத்திரங்கள் ஏராளம்.நடிப்பில் மட்டுமின்றி, நடை, உடை, தோற்றம், வசன உச்சரிப்பு,பாவனை,ஸ்டைல் என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியவர்.பராசக்தி முதல் சவாலே சமாளி வரை (முதல் 150 படங்கள்) உள்ள படங்களில் அவர் சிகரங்களைத் தொட்ட படங்கள் நிறைய உண்டு.பல இலக்கியவாதிகள் அவரை 'மிகு உணர்ச்சிக் கலைஞன் ' (overacting) என்று ஒரங்கட்டியது உண்டு..overacting என்று இவர்கள் சுட்டிக்காட்டும் 'பாசமலர் ' படத்தில் கூட வசனம் பேசாமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் காட்சிகள் உண்டு.

எது எப்படியோ, சிவாஜி தமிழ் திரை உலகத்திற்கு செய்துள்ள பங்களிப்பையும் யாராலும் புறக்கணிக்க இயலாது.தமிழ் திரை உலக வரலாற்றை எழுதுபவர்கள் சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின் என்று தான் எழுதமுடியும்.

'அன்பேசிவம் ' வெளிவந்த சமயம்.கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி.வாரப்பத்திரிக்கைலோ அல்லது தொலைகாட்சியிலோ வந்தது. பேட்டியாளர் கமலை நோக்கி ' தற்பொழுது சிவாஜியின் நாற்காலி காலியாக உள்ளது.அதில் உட்கார தகுதி வந்து விட்டதா ? என்ற கேள்விக்கு கமல் சொன்ன பதிலை இப்பொழுது இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன்.கமல் சொன்ன பதில் இது தான். 'அவர் இருந்த நாற்காலியில் உட்காரவேண்டும் என்பதுதான் நடிக்க வந்துள்ள எங்கள் அனைவரது லட்சியமுமே.இத்தனை படங்கள் நடித்த பிறகு கூட நாற்காலியின் ஒரமாகத்தான் உட்கார முடியுமே ஒழிய, முழுமையாக உட்கார முடியாது.ஏனென்றால் அவர் சாதித்துப் போனது அவ்வளவு. நாற்காலியில் உட்காருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நாற்காலியில் வேறு யாரும் தகுதியில்லாதவர்கள் அமரவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும்தான்.அதைத் தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டு இருக்கிறோம். ' ஒரு தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக மட்டுமின்றி, சிவாஜி ரசிகனாகவும் இருந்து அவர் வெளியிட்ட கருத்து இது என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசன் கடைசியாகக் குறிப்பிட்டபடி அவர் விட்டுச்சென்ற இருக்கைக்கு தற்பொழுது வந்துள்ள ஆபத்து குறித்துத்தான் சிவாஜி ரசிகனாக எனக்கு கவலை.தமிழ்கூறும் நல்லுலகம் முழுதும் சிவாஜி என்றால் இன்றுவரை அது சிவாஜிகணேசன் அவர்களை மட்டுமே குறிக்கும்.தமிழ்ப் புத்தாண்டுக்குப்பிறகு ஏ.வி.எம்மின் 'சிவாஜி ' வந்தபிறகு படையப்பா ரஜினி மாதிரி சிவாஜி ரஜினி ஆவதுதான், ரஜினிக்கு குறிக்கோளாக இருக்குமோ..தெரியாது.ஆனால் அவரது ரசிகர்கள் அப்படிக் கூப்பிடுவதை யாராலும் தடுக்க இயலாது.மேலும் ஏ.வி.எம்.தரும் விளம்பர வெளிச்சத்தில் நடிகர்திலகம் மறைந்து,அவர் சாதனைகள் மறக்கடிக்கப்பட்டு, சிவாஜி என்றால் ரஜினி நடித்த ஒரு தமிழ்ப்படம் என்று தான் வரும் தலைமுறை நினைக்கக் கூடும்.

சிவாஜி என்றால் தமிழகமெங்கும் தந்தை பெரியாரால் பட்டம் வழங்கப்பட்டு,பாரட்டப்பட்ட சிவாஜி கணேசன் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கும் விதமாகவும் சிவாஜி ரஜினி என்று வரும் தலைமுறை தன்னை அழைக்கச் செய்யும் ஒரு சூழ்ச்சி மாதிரித் தான் தெரிகிறது.அதற்கான முதல் விதை சந்தரமுகி வெற்றிவிழாவில் பிரபு வாயால் தன்னை 'அடுத்த சிவாஜி ' என்று அழைக்க வைத்து, படம் வருவதற்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. ஒரு வகையில் சிவாஜியின் பெருமையையைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியா இது என்று சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

இது எப்படி இருக்கு ? என்றால் திருவிளையாடல் படத்தின் ஆரம்பக் காட்சி தான் நினைவுக்கு
வருகிறது.தமிழ்க் கடவுள் முருகன் மயிலைத் துணை கொண்டு உலகைச் சுற்றிவரப் புறப்படுவதும், விநாயகர் அப்பா அம்மாவைச் சுற்றி ஞானக்கனியைப் பறித்துக் கொள்வது மாதிரியான திருட்டு விளையாட்டாகத்தான் தெரிகிறது.

உண்மையான தமிழ்க் கலைஞனான கமல்ஹாசன் வயதினிலே, நாயகன், தேவர்மகன், மகாநதி,குணா,அன்பேசிவம் என்று படிப்படியாக 'சிவாஜி இருக்கை ' என்ற இலக்கை நோக்கி தமிழ்க் கடவுள் முருகன் மாதிரி முன்னேறி வருகையில்,தடாலடியாக 'சிவாஜி ' என்ற படத்தில் நடித்து அந்தப் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் கொண்டுவருவதும் தன்னை 'அடுத்த சிவாஜி ' என்று மற்றவர்கள் அழைப்பதில் ஒருவித ஆனந்தம் அடைவதும் ஒருவகையில் குரூரமாகப் படுகிறது.

ரஜினிக்கு இன்றுள்ள மார்க்கெட்டுக்கு,அவர் படம் ஒடுவதற்கு,அவர் படப்பெயர் என்றுமே காரணமாக இருந்தது இல்லை.ஆகவே அவர் தன்னுடைய இயற்பெயரான 'சிவாஜி ராவ் ' என்று இப்படத்தின் பெயரை மாற்றிக் கொள்வதால் இப்படத்தின் வெற்றி வாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை.


திசைகள் அ.வெற்றிவேல்

ஜித்தா-சவூதி அரேபியா
vetrivel@nsc-ksa.com

-----------------

பின் குறிப்பு: இந்த படத்தில் நடிகர் திலகத்தை கவுரவிக்கும் விதமாக தொடக்கத்தில் இந்த படம் நடிகர் திலகத்துக்கு அர்ப்பணிப்பதாக காட்டுவார்கள் என எதிர்பார்த்தேன் .நன்றி கெட்ட AVM அதை நினைத்துக்கூட பார்க்கவில்லை .மாறாக ,வெறும் சிவாஜி பெயரை சொன்னால் எம்.ஜி.ஆர் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது என்பதால் ,மொட்டை ரஜினிக்கு எம்.ஜி.ஆர் என பெயர் வைத்து "சிவாஜி-யும் நான் தான் .எம்.ஜி.ஆர்-ம் நான் தான்" என டயலாக் வேறு .காலக் கொடுமை ..கேட்டால் "சிவாஜி" ரஜினியின் பெயர் என்பார்கள்.

28 comments:

G.Ragavan said...

யோசிக்க வைக்கும் கட்டுரை. எனக்கும் சிவாஜி என்ற பெயரை இந்தப் படத்திற்கு வைத்தது பிடிக்கவில்லை. முன்பெல்லாம் சிவாஜி என்று கூகிளில் தேடினால் நடிதர் திலகம் பற்றிய செய்தித் தொடுப்புகள் வரும். இப்பொழுது? இதில் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி வேறு கேட்டார்களாம். நாடகமோ நாடகம்.

ஜோ/Joe said...

ஜி.ரா,
இந்த உள்ளக்குமுறல் எனக்கு ரொம்ப நாளாக இருக்கிறது .பார்க்க பின் குறிப்பு.

rajkumar said...

உங்களுடைய ஆதங்கம் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இப்படத்தை சிவாஜிக்கு அர்ப்பணிப்பதன் மூலமாக சிவாஜியை எப்படி கவுரவப்படுத்தியிருக்க முடியும்? எப்படி ரஜினி ரசிகர்கள் படத்தை படமாக பார்க்காமல் இருக்கிறார்களோ அதே தவறைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்?ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை எனக்கு.

கொஞ்ச காலம் முன்பு ஜூனியர் சிவாஜி என்று உருப்படியில்லாத நடிகரை சிவாஜி குடும்பத்திலேயிருந்தே அறிமுகப்படுத்தினார்கள். அது கேவலமான செயல் இல்லையா? அதைக் கண்டுகொள்ளாத நீங்கள் இதற்கு வரிந்து கட்டுவது ஏன்?

ரஜினி என்ற நடிகன் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகனை மதிக்க தவறியதேயில்லை. சிவாஜியின் குடும்பத்திற்கும் ரஜினியிடம் நல்ல மதிப்பிருக்கிறது. சந்திரமுகி-க்கு பின்னால் அவர்களது பொருளாதார நிலையும் மேம்பட்டுள்ளது ஊரறிந்த சங்கதி.

இதை விடுத்து ரஜினி தவறிழைத்ததாக நீங்கள் கருதினால் உங்களுக்கும் சாதாரண ரஜினி ரசிகனுக்கும் வித்தியாசமேயில்லை.

துளசி கோபால் said...

// 'சிவாஜி ராவ் ' என்று இப்படத்தின் பெயரை மாற்றிக் கொள்வதால் ...//

'ராவ்' ன்னு சொன்னவுடன் ஜாதிப்பெயர் வந்துருச்சுன்னு யாராவது
சண்டை மூட்டிட்டால்....................?

ஏன் வேற பெயரே கிடைக்கலையாம்?

சிவா என்றதுதான் பெயர். 'ஜி' ஒரு மரியாதைக்குரிய விகுதி இல்லையோ?
ஒண்ணும் புரியலை(-:

ஜோ/Joe said...

ராஜ்குமார்,
ஜூனியர் சிவாஜி -என்று அறிமுகப்படுத்தப்பட்டதும் கேவலமானது தான் .அதை நான் ஆதரிக்கவில்லை .ஆனால் ரஜினி படத்துக்கு 'சிவாஜி' பெயர் வைப்பதால் ஏற்படும் தாக்கத்தை அதோடு ஒப்பிட வேண்டாம்.

சில நாட்களுக்கு முன் ஒரு விவாத களத்தில் சிவாஜி படத்தை பற்றி ரஜினி ரசிகர்கள் விவாதிக்கும் போது 'சிவாஜி ரசிகர்கள்' என்ற பதத்தை பயன் படுத்தினார்கள் .இது வரை 'சிவாஜி ரசிகர்கள்' என்றால் என் போன்ற நடிகர் திலகம் ரசிகர்கள் தான் என புரிந்து வைத்திருக்கும் நான் அது யாரைக் குறிப்பதாக கேட்டேன் .எனக்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா... அது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு .நீ வெறும் 'கணேசன் ரசிகர்' தான் .இனிமேல் சிவாஜி ரசிகன் என்றால் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான் .ஏனென்றால் 'சிவாஜி' என்பது சூப்பர் ஸ்டாரின் நிஜப் பெயர் .உங்காளு பெயர் வெறும் கணேசன் தான் ..

எங்களோட ஆதங்கத்தை சொல்லக்கூட எங்களுக்கு உரிமையில்லியா ? அதுக்காக 'அபீஸ் ரூம்'-க்கு கூட்டிப் போய் அடிக்காதீங்க.

ஜோ/Joe said...

//சிவா என்றதுதான் பெயர். 'ஜி' ஒரு மரியாதைக்குரிய விகுதி இல்லையோ? //

துளசியக்கா,
உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லியா? வாரியார் சுவாமிகள் ஜோக்-க்கை சொல்லுறீங்களே!

Anonymous said...

சிவாஜி படத்துக்கான இணைப்பு
http://download.yousendit.com/855EB33608FA68B9

தருமி said...

மக்களே,
ஒண்ணும் கவலைப் படாதீங்க. எங்க காலத்தில சிவாஜி - எம்.ஜி.ஆர். போட்டியில் இரண்டாமவரின் கையே ஓங்கி நின்றது. காசும் அவருக்குத்தான் நிறைய. படமும் அவர் பட்ங்கள்தான் "பேய்" ஓட்டம் ஓடின. ஆனால் இன்றைக்கு நடிகன் என்ற முறையில் யாராவது எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுகிறார்களா? தமிழ் சினிமா, நடிப்பு, தரம் என்றால் சிவாஜிதான் ஒரு ரெபரன்ஸ் பாய்ண்டாக இருக்கிறார். யாராவது எம்.ஜி.ஆரை தீண்டுகிறார்களா .. இல்லையே. நாளைக்கு கமல்- ரஜனி என்று ஒப்பீடு ஒன்றுவரும்போது முன்னுக்கு நிற்பது யாராக இருக்கும் என்பது வெள்ளிடை மலை. காற்றடித்தால் எதுவோ எங்கேயோ இருக்குமாம். காத்து அடிக்குது .. எப்பவும் இப்படியிருக்காது. காலத்தை வென்று நிற்பது என்பார்களே அது தரமானதாகத்தான் இருக்கும். கவலையற்க........

வீ. எம் said...

ஜோ, வித்தியாசமான அலசல்.. இருந்தாலும் அதிகம் கவலைப்பட தேவையில்லை..ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வீ எம்

பொன்ஸ்~~Poorna said...

நல்ல கட்டுரை ஜோ.. உங்க முந்தைய இடுகையைப் பார்த்த போது சில பகுதிகள் ஆபிஸ் ரூம் பயத்தில் ரசிகர்களைத் திருப்திப்படுத்த எழுதியது போல் தோன்றியது.. இந்தக் கட்டுரை ஆறுதல்..

Anonymous said...

தருமிக்கு வயதாகிவிட்டதே தவிற வளர வேண்டிய மூளை எனும் வஸ்து வளரவே இல்லை போலிருக்கிறது.

தனது வயிற்றெரிச்சலை இப்படியா கொட்ட வேண்டும்?

திருந்துமய்யா

ரெபரன்ஸ் பாயிண்ட்டா? இப்போதைக்கு தமிழ் நாடு மட்டுமல்ல எங்கே போய் கேட்டாலும் 'சிவாஜி'ன்னா கணேசன் கிடையாது. பேரச் சொன்னா ச்ச்ச்ச்சும்மா அதிருதுல்ல?!

ஜெலூசில் வேணுமா தருமி?!

ஜோ/Joe said...

ராஜ்குமார் போன்றவர்களுக்கு ரஜினி ரசிகர்களின் லட்சணம் தெரிய வேண்டும் என்பதற்காகவே மேலேயுள்ள மேல் மாடி காலியான அனானியின் பின்னூட்டம் வெளியிடப்படுகிறது

மனதின் ஓசை said...

ஜோ,
உங்கள் ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன். எனக்கும் அதே ஆதங்கம் உண்டு. சிவாஜியை பெருமை படுத்தும் காட்சிகள் சில வைத்து இருக்கலாம்.. இருப்பார்கள் என நினைத்தேன். இல்லாதது வருத்தம் + ஏமாற்றமே..

அதே நேரத்தில் கட்டுரை சிறிது உணர்ச்சி வசப்பட்டு எழுதப்பட்டது போல தோன்றுகிறது. ரஜினி திட்டமிட்டு செய்தார்.. கூப்பிடச்சொல்லி ஆனந்தப்படுகிறார்/கூரூரம் என்பதெல்லாம் அளவுக்கதிகமான கற்பனை என்பது என் கருத்து.:-).

அதே போல் தருமி ஐயாவின் கருத்தும் தேவையற்றது என நினைக்கிறேன்.. சிவாஜியையும் சிவாஜி ராவையும் பற்றி பேசும் பதிவில்/ஆதங்கத்தில் ரஜினி கமல் யார் பெரியவர் என்பது போல பேசுவது தேவையில்லாதது/பதிவை திசைதிறுப்புவது/ரஜினியின் வெற்றியை கண்டு பொறுக்கமுடியாமல் முதுகில் குத்த சந்தர்ப்பம் தேடுவது எனவே படுகிறது. (ஒரு சிறு குறிப்பு : எம்.ஜி.ஆர் படங்கள் சமீபத்தில் ரீரிலீஸ் செய்தபோதும் சக்கை போடு பொட்டது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்.)

Anonymous said...

Did you get a chance to read Thatstamil news about Balachander's comment.
Rajni is both Shivaji and MGR of current Tamil cinema.

What do you think abt it. I was annoyed by his comment. Its an absolute Jalra!!!
Dont know why these people (especially people like Balachander) need to lick Rajini's feet?????????????
hmmmm.....vv

Boston Bala said...

கட்டுரையின் அடிநாதத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால், அதன் சந்தேகத் திணிப்புக்கும், ஒவ்வாத (ஆனால் வாசகானாக என்னை ஈர்க்கக்கூடிய) உவமானங்களிடையேயும் ஒப்புதல் கிடையாது
-----------------------

---அவர் விட்டுச்சென்ற இருக்கைக்கு தற்பொழுது வந்துள்ள ஆபத்து குறித்துத்தான் சிவாஜி ரசிகனாக எனக்கு கவலை---

இது தமிழகத்துக்குரிய சிறப்பு சாபக்கேடு.

பெரியார் இறந்தவுடன் அதிகாரபூர்வமாக அவர் இடத்தில் உட்கார வீரமணி உதிப்பார். அண்ணா இடத்தில் எம்ஜியார் இருப்பார். ம.கோ.ரா. இறந்தவுடன், பிணவூர்தியிலேயே அடிதடி செய்வார் ஜெயலலிதா.

இவர்களை அந்த வாரிசாக ஏற்றுகொள்கிறார் 'தமிழர்'. முறையே இராஜாராம்(?!), நெடுஞ்செழியன், ஜானகி போன்றோர் ஒத்துக்கொள்ளப்படவில்லை.

பெரியரின் சுயசிந்தனை == வீரமணி;
அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை == ம.கோ.ரா;
ம.கோ.ரா.வின் தயாளகுணம் == ஜெஜெ என்று பிம்பத்துக்குள் விழவைக்கிறார்கள்.

வீரமணியின் ஆளுங்கட்சியை அண்டிப்பிழைத்தல் ≠ பெரியார்;
ம.கோ.ரா.வின் தன்னலம் ≠ அண்ணா;
ஜெஜெ-வின் அதிகாரதுஷ்ப்ரயோகம் ≠ ம.கோ.ரா. என்று அறிந்தவர்கள் எதிரணியில் இருக்கிறார்கள்.

இந்த வாழையடி வாழை வம்சாவளியை ஏன் எதிர்பார்க்கிறோம்?

எதற்காக இப்படி அந்த சீட் அவருக்குத்தான் சரி என்னும் ரசிகக்குஞ்சு மனப்பான்மை?

என் சீட் தனி சீட் என்று சொந்த சிம்மாசனம் போட்டுக் கொள்ளலாமே (கட்டுரை ஸ்டைலில் சம்பந்தமில்லாமல் 'விஜயகாந்த் மாதிரி' என்று இடைச்செருகலாம் ;)


---சிவாஜி கணேசன் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கும் விதமாகவும் சிவாஜி ரஜினி என்று வரும் தலைமுறை தன்னை அழைக்கச் செய்யும் ஒரு சூழ்ச்சி மாதிரித் தான் தெரிகிறது---

இதே மாதிரி யோசித்தால் 'பெரியார்' என்றால் சத்யராஜ்; 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்றால் சிவாஜி; காந்தி என்றால் 'அட்டன்பரோ';

டிஷ்யூம் படத்தில் அமிதாப் என்று உயரங்குறைந்த நடிகர் தோன்றியது ஹிந்தி பச்சான் புகழைக் குலைக்கும் & பேரை பறிக்கும் சதிதான் என்றும் எண்ணலாம் :))

பாரதி என்று நிறைய பேர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுத்தானந்த பாரதி, சுப்ரபாரதிமணியன் என்று பலர்... அவர்களெல்லாம், பாரதியாருக்கு (க்வாலிஃபை செய்யத் தேவையில்லை அல்லவா?) இழுக்கு கற்பிக்கத்தான் பாரதியை தங்களிடம் வைத்திருக்கிறார்களா? அல்லது கொண்டாடவா??


---ஆனால் அவரது ரசிகர்கள் அப்படிக் கூப்பிடுவதை யாராலும் தடுக்க இயலாது---

அன்னை மேரியாக, கருமாரியாக இன்ன பிறவாக ஜெஜெ தோன்றுகிறார். நடிகனையொத்த தலைச்சாயம் பூசிய இளையத் தோற்றத்துடனும் இன்ன பிற அடைமொழிகளுடனும் நூறடி பேனர் வைத்து தாத்தா ஸ்டாலின்களும் இன்ன பிற தேர்தல் திருவிழா நாயகர்களும், மன்றச் செயலாளர்களும், சொந்த செலவில் சுவரொட்டியெங்கும் மகிழ்கின்றனர். அதே வழியில் சினிமா ரசிகர் ஒரு துரும்பு கிள்ளியெடுத்திருக்கிறார்.

---அவர் தன்னுடைய இயற்பெயரான 'சிவாஜி ராவ் ' என்று இப்படத்தின் பெயரை மாற்றிக் கொள்வதால்---

'இருவர்' படத்துக்கு ஒப்புதல் வாங்கி வெளியிடுவது மாதிரி எல்லாவற்றுக்கும் சென்சார், வாக்குமூலம், நோ அப்ஜக்சன் சர்டிஃபிகேட், ட்ரேட்மார்க், காபிரைட், பத்திரிகைகளின் ஆசீர்வாதம், யார் யார் என்ன கதாபத்திரம் ஏற்கலாம் எல்லாம் ஒப்புதல் கம் ஆசீர்வாதம் பெற்று சுபயோக நன்னாளில் படத்திற்கு பூசை பொடாவும் செய்யலாம் :P

ஜோ/Joe said...

பாஸ்டன் பாலா,
கருத்துக்கு நன்றி !

சத்தியராஜ் 'பெரியார்' படத்தில் நடித்ததால் அவர் ரசிகர்கள் 'பெரியார்' என்ற பெயரே சத்தியராஜ்-க்கு சொந்தம் என்றழைக்கப்போவதில்லை ..இதில் ரஜினியையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு நீங்கள் வாதம் செய்வது மற்றவர் வாயை அடைக்க உதவும் என்றாலும் ,உங்கள் மனசாட்சியை தொட்டுப்பார்த்தால் ரஜினி 'சிவாஜி' என்ற படத்தில் நடித்தால் ஏற்பட்ட தாக்கத்தை உணராமல் இருக்க மாட்டீர்கள் .

ஜி.ரா சொன்னது போல இனி இணையத்தில் 'சிவாஜி' என்று தேடினால் ஒரு திரைப்படம் பற்றிய செய்தி கிடைக்குமே தவிர ,தமிழ் திரையுலகின் ஒப்ப்ற்ற நடிகனைப் பற்றிய செய்தி கிடைக்காது ..அதற்கு நாங்கள் என்ன செய்வது ..அது தான் எங்கள் தலைவரின் power என்று நீங்கள் சொல்லலாம் ..உங்களை குறை சொல்லவில்லை ..மகத்தான ஒரு கலைஞன் மீது குறைந்த பட்ச பரிவும் மதிப்பும் உங்களைப் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான்.

மனதின் ஓசை said...

//ராஜ்குமார் போன்றவர்களுக்கு ரஜினி ரசிகர்களின் லட்சணம் தெரிய வேண்டும் என்பதற்காகவே மேலேயுள்ள மேல் மாடி காலியான அனானியின் பின்னூட்டம் வெளியிடப்படுகிறது //

யூ டூ ஜோ?

ஜோ/Joe said...

//ரஜினி ரசிகர்களின் லட்சணம் //
//யூ டூ ஜோ? //

மன்னிக்கவும் மனதின் ஓசை ..அது 'சில ரஜினி ரசிகர்களின் லட்சணம்' என்றிருக்க வேண்டும்.உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் .

ஆனால் அந்த ரஜினி ரசிகரின் பின்னூட்டம் தான் இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறை ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன் .

உங்கள் தலைவரைப் போல எங்கள் ஆதர்ச நடிகர் 'சூப்பர் ஸ்டார்' இல்லை தான் .யார் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கேட்க நாதியில்லை தான் .விட்டு விடுங்கள்.

வேதனையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. யாரை எங்கே வைப்பது என்றே யாருக்கும் தெரியல்லே ..குறிப்பா தமிழர்களுக்கு.. :(((((((((((((

மனதின் ஓசை said...

//உங்கள் தலைவரைப் போல எங்கள் ஆதர்ச நடிகர் 'சூப்பர் ஸ்டார்' இல்லை தான் .யார் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் கேட்க நாதியில்லை தான் .//

ஜோ.. அளவுக்கதிகமான உணர்ச்சிவசப்படுதல்தான் தெரிகிறது..உங்கள் வாதத்தில் ஒப்புதல் இல்லையென்றாலும் மேற்கொண்டு எதும் பேசவில்லை. நன்றி.

//விட்டு விடுங்கள்.//
சரி..

SurveySan said...

நல்லா யோசிக்கிறீங்க. ஆனா தேவையில்லாத கவலைகள்.

சிவாஜி கணேசன் ஒரு கடல். வத்தாது.

Google issue is a good point that G.Ra raised. ஆனாலும், 'சிவாஜி கனேசன்' என்று தேடினால், வேண்டிய விவரங்கள் கூகிள் ஆண்டவர் உடனே சொல்றாரு.

கர்ணன் வந்த சில நாட்கள், என்.டி.ஆரை க்ருஷ்ணர் படத்துக்கு பதிலா வச்சு கும்பிடுவாங்களாம். எவ்ளவு நாளைக்கு நீடிச்சது அது.
மூணு மாசம் கூட தாங்காதுங்க இந்த அனத்தலெல்லாம்..:)

ஜோ/Joe said...

//ஜோ.. அளவுக்கதிகமான உணர்ச்சிவசப்படுதல்தான் தெரிகிறது//

உண்மை தான் மனதின் ஓசை! நான் மறைக்க விரும்பவில்லை .நான் நடிகர் திலகத்தின் ரசிக தலைமுறைய சார்ந்தவன் அல்ல. என்னுடைய வயதுக்கு நான் கமல்/ரஜினி ரசிகனாக இருக்க வேண்டியவன் .ஆனால் அவர்களை விட பன்மடங்கு நடிகர் திலகத்தை ரசிப்பவன்.

இந்த கட்டுரை வெற்றி வேல் எழுதியது (சில மாதங்களுக்கு முன்னரே திண்னையில் பிரசுரமானது) .ஆனால் அப்போது அதை நான் உணர்ந்ததை விட இப்போது அதை உனர்கிறேன் .எனவே தான் அவரின் அனுமதியோடு இங்கே மீள்பிரசுரம் செய்திருக்கிறேன்.

திரு.ரஜினி காந்த் அவர்கள் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் (அவருடைய இளைய தலை முறை ரசிகர்களைப்போலன்றி) என்று எனக்கு தெரியும் .அதனால் இங்கே நான் ஏ.வி.எம்- யும் ,சங்கரையுமே வெறுக்கிறேன் .தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் அனைவரும் 'சிவாஜி' என்னும் இமாலய கலைஞனின் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள் .வர்த்தக நோக்கத்திற்காக வேண்டுமென்றே ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு எம்,ஜி,ஆர் என்று பெயரிருக்கிறார்கள் .தெரிந்தோ தெரியாமலோ ரஜினியிம் இதற்கு உடன்பட்டிருக்கிறார் என்பதுவே என் வருத்தம்.

ரஜினி போல தியேட்டரில் குலவையிட்டு ,பாலபிஷேகம் செய்து தங்கள் அபிமானத்தை பறைசாற்றும் ரசிகர் கூட்டம் சிவாஜி கணேசனுக்கு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் என்ன தான் இருட்டடிப்பு செய்தாலும் ,தலை முறைகளைத் தாண்டி நிலைத்து நிற்கும் தகுதியும் ,கலை வெளிப்பாடும் வேறு எவரையும் விட நடிகர் திலகத்துக்கு உண்டு.

உணர்ச்சிவசப்படுவதற்கு மீண்டும் மன்னிக்கவும்.

Anonymous said...

நான் வீர சிவாஜியின் பரம ரசிகன். நாட்டிற்காக போராடி உயிரைவிட்ட அந்த மராட்டிய வீரனின் பெயரை, பிழைப்பிற்காக வேடம் கட்டி நடித்த ஒருவனுக்கு யாரோ ஒரு கிழவன் சூட்ட அதற்கு உங்களைப் போன்றவர்கள் இன்று வக்காலத்து வாங்குகிறீர்கள். மராட்டிய வீரனின் பெயரை கண்ட கண்டவர்களை கட்டிப்பிடித்து நடிக்கும் ஒரு மனிதனுக்கு சூட்டியதன் மூலம் அவருக்கு தமிழர்கள் செய்தது மாபெரும் துரோகம், அவர் பெயருக்கு களங்கம்.

சிவாஜி, கணேசனின் பெயர் அல்ல. ஆனால் ரஜினியின் பெயர் சிவாஜி. தன் பெயரை தானே வைத்துக் கொள்ள, யாரோ கொடுத்த பட்டப் பெயரைக் கொண்டு புகழ் சேர்த்த, இன்றில்லாத ரசிகக் குஞ்சுகளின் அனுமதி தேவையில்லை. அப்படி ஒரு பெயர் மாற்றத்தினால் உங்களின் கணேசனின் புகழ் மங்குமேயானால், அது தானாக ஏற்பட்டதில்லை; பிறரால் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் கணேசனின் ரசிகனென்று கூறிக்கொண்டு இந்தப் பதிவின் மூலம் அவரையும் கேவலப் படுத்துயுள்ளீர்கள்.

G.Ragavan said...

// Anonymous said...
நான் வீர சிவாஜியின் பரம ரசிகன். நாட்டிற்காக போராடி உயிரைவிட்ட அந்த மராட்டிய வீரனின் பெயரை, பிழைப்பிற்காக வேடம் கட்டி நடித்த ஒருவனுக்கு யாரோ ஒரு கிழவன் சூட்ட அதற்கு உங்களைப் போன்றவர்கள் இன்று வக்காலத்து வாங்குகிறீர்கள். மராட்டிய வீரனின் பெயரை கண்ட கண்டவர்களை கட்டிப்பிடித்து நடிக்கும் ஒரு மனிதனுக்கு சூட்டியதன் மூலம் அவருக்கு தமிழர்கள் செய்தது மாபெரும் துரோகம், அவர் பெயருக்கு களங்கம்.

சிவாஜி, கணேசனின் பெயர் அல்ல. ஆனால் ரஜினியின் பெயர் சிவாஜி. தன் பெயரை தானே வைத்துக் கொள்ள, யாரோ கொடுத்த பட்டப் பெயரைக் கொண்டு புகழ் சேர்த்த, இன்றில்லாத ரசிகக் குஞ்சுகளின் அனுமதி தேவையில்லை. அப்படி ஒரு பெயர் மாற்றத்தினால் உங்களின் கணேசனின் புகழ் மங்குமேயானால், அது தானாக ஏற்பட்டதில்லை; பிறரால் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் கணேசனின் ரசிகனென்று கூறிக்கொண்டு இந்தப் பதிவின் மூலம் அவரையும் கேவலப் படுத்துயுள்ளீர்கள். //

அதெல்லாம் சரிதாங்க. ரஜினிகாந்துன்னு பேருல நடிக்காம சிவாஜிராவ் கெய்க்குவாடுங்குற தன்பெயரைச் சொந்தப் பெயரை உண்மையான பெயரை போட்டு நடிக்க வேண்டியதுதானய்யா. ரஜினிக்காந்துங்குற பேரும் யாரோ வெச்சதுதான்.

அட...அது போகட்டும்..படம் எடுக்கனும்னு முடிவு செஞ்சப்போ..சிவாஜி என்னோட பேரு. அத வெச்சி நடிக்கப் போறேன்னு சொல்லீருக்கலாம்ல. அப்ப ஏன் சவுத் போக் ரோடு போய் அனுமதி வாங்கனும். போட்டோவுக்கு முன்னாடி நின்னு போஸ் குடுக்கனும்!!!!

கண்டிப்பா இதுனால நடிகர்திலகத்தோட புகழ் மங்காது. நீங்க சொன்னீங்களே...அது உண்மை.

Boston Bala said...

---சிவாஜி என்று கூகிளில் தேடினால் நடிதர் திலகம் பற்றிய செய்தி---

கிட்டத்தட்ட (ஆனால் கொஞ்சம் சிறிய அளவில், வெறும் சுட்டிகளால் மட்டும்) இப்படி செய்வதை... Google bomb என்று சொல்வதை அறிந்திருப்பீர்கள்.

nayanan said...

இந்தக் கவலைக்காகப் பாராட்டுகள்.
ஆயினும் கவலைப் படத் தேவையேயில்லை.

ஆனால், நண்பர்கள் சிலர் சொன்னது போல, சிவாசிகணேசனின் கலை
கடல்போன்றது.

சிவாசிகணேசனின் புகழால் மற்றவர்களுக்கும் ஒளி கிடைக்குமே
தவிர யாராலும் நடிகர்திலகத்தின் மேல்
இருள் விழ வாய்ப்பே இல்லை.

"இந்தச் சிறு சிறு ஆரவாரங்களினாலேயே,
சிவாசிகணேசனின் புகழுக்கு இழுக்கு
வருமானால், சிவாசிகணேசன்
எடுத்தது புகழாகவே இருக்கமுடியாது."

திருவிளையாடல் ஆரம்பம் என்று ஒரு படம் வந்து திருவிளையாடல் படத்தை
எதுவும் செய்ய முடிந்ததா? மாமனார் படமும் அதே இரகம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Unknown said...

நீங்கள் நடிகர் திலகத்திடம் கொண்டுள்ள மதிப்பு மற்றும் பக்தி இதில் வெளிப்பட்டுள்ளது. மற்றபடி சிவாஜியின் புகழை யாராலும் மறைக்க முடியாது.
அவர் நாற்காலியில் உட்காரும் தகுதி யாருக்கும் கிடையாது. சிவாஜி பற்றி ஹாலிவூட் நடிகர் "மர்லின் பிராண்டோ" கூறியது " சிவாஜி கணேசனால் என்னைபோல் நடிக்க முடியும் ஆனால் என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது "

சீனு said...

ரொம்ப childish-ஆக இருக்கிறது உங்களின் இந்த பதிவு.

sarath said...

I have read the post. I have also read all the comments. As one of the comments said that the name 'SIVAJI" is given by some "kilavan"(Periyar) I would like to comment on it. We never saw "Veera Sivaji" to feel his bravity. But we realised only when Ganesan played that "role". Because of the Periyar kilavan only we(more than 50 percent of tamilians) came out of caste chavanists.

I request all of you at any moment do not thro mud on the great peoples by just calling them so badly.

Gandhi is not a person's name. But the name got the value just because the person who had the character.

When ever I search for sivaji in the internet anywhere(not only google) I get results only for SIVAJI movie.

Just for money all these people work. Best to ignore them.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives