Monday, March 26, 2007

தருமி கண்டுபிடித்த 1- ம் நம்பர் கிறுக்கன்

நான் ஒரு 1-ம் நம்பர் கிறுக்கன் -னு கண்டுபிடிச்சிருக்கார் தருமி .ஒரே ஒரு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை வைத்தே சரியா கணிச்சிருக்கார் .என்ன இருந்தாலும் வாத்தியார் அல்லவா.

1.சின்ன வயசுல நான் கிறுக்குத்தனமா இருந்தது 'பட்டம்' விடுறதுல .பட்டம்-ன்னா சென்னைல சின்னதா ஒரு பட்டம் விடுவாங்களே அது மாதிரி இல்ல .எங்க ஊருல கதவு அளவு பட்டமெல்லாம் விட்டிருக்காங்க .நான் விட்ட பட்டமெல்லாம் அரைக் கதவு அளவுக்கு .அதாவது மூங்கிலை வெட்டி 3 அடி ,1.5 அடி யாக தலா 3 கம்புகள் எடுத்து நீள் சதுரமாக கட்டி அதில் இரண்டு மூன்று அடுக்கு செய்தித் தாள்களை வைத்து ஒட்டி பட்டம் செய்து அதற்கு சரடி இட்டு ,வாலுக்குக்காக மீன்பிடிக்க பயன் படும் பெரிய கயிறை கட்டி ,நூலுக்கு பதிலாக மீன்பிடிக்க பயன்படும் நைலான் ரோல் வைத்து பட்டம் விடுவது தான் எங்க ஊருல வழக்கம் .சின்ன பட்டம் ,நூல் வைத்து விடுவதெல்லாம் எங்கள் ஊரில் கடற்கரையில் வீசுகிற காற்றுக்கு பஞ்சாக பறந்து விடும் .மே மாத கோடை விடுமுறையில் எனக்கு முழு நேர தொழிலே இது தான் .எனக்கு 2 உதவியாளர்கள் வேறு .எங்கள் வீட்டில் யாரும் மீன் பிடிப்பவர்கள் இல்லையாததால் உதவியாளர்கள் வீட்டிலிருந்து நைலான் ரோல் எடுத்து வருவார்கள் .தூண்டில் மீன் பிடிக்க பயன் படும் இந்த நைலான் ரோல் விறைப்பாக இருக்க வேண்டியது அவசியம் .அதனால் சில நேரம் மீன் பிடிக்க செல்லும் முன் 200 மீட்டர் நீளத்தில் இரண்டு பேர் பிடித்துக்கொண்டு இழுப்பார்கள் .பட்டம் விட இதே நைலான் ரோலை உபயோகித்தால் தானாகவே விறைப்பாக ஆகிவிடும் என்பதால் உதவியாளர்கள் வீட்டில் அதை நாங்கள் எடுத்து பட்டம் விடுவதில் சிக்கல் எதுவுமில்லை. காலை 9 மணியளவில் பட்டத்தை எடுத்து பாரமான வாலை கட்டி ,முதலில் ஒரு 50 அடி தூரம் கொண்டு சென்று பட்டத்தை விட்டால் விர்ரென்று 45 டிகிரியில் போய் ஆடாமல் அசையாமல் போய் நிற்கும் .பின்னர் மெதுவாக மீதமுள்ள ரோலை இரண்டு பேர் சேர்ந்து விடுவிக்க வேண்டும் .கொஞ்சம் அசந்தால் கையை அறுத்து விடும் .முழுவதுமாக ரோலை விடுவித்து பின்னர் ரோல் இருக்கும் கட்டையை ஏதாவது ஒரு மரத்தில் அல்லது கட்டுமரத்தில் கட்டிவைத்து விடுவோம் .பொதுவாக எங்கள் ஊரில் விடப்படும் பட்டத்தில் உச்சியில் நடு கம்பு நீளமாக இருக்கும் .அதில் சில நேரம் தேசியக் கொடி அல்லது அதிமுக ,திமுக கட்சிக் கொடி பறக்கும் .பெரும்பாலான பட்டத்தில் பெரிய எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்படிருக்கும் .நம்ம பட்டத்தில் மட்டும் சிவாஜி படம்.45 டிகிரில் விறைப்பாக நிற்கும் ரோல்.திருப்பி இழுக்க வேண்டுமென்றால் துணியை கையில் சுற்றி தான் இழுக்க வேண்டும் .இல்லையென்றால் கையை வெட்டி விடும் .தென்னை ஓலையை கிழித்து ரோலை சுற்றி சொருகி விட்டால் காற்றடிப்பதால் சல்லென்று மேலே சென்று பட்டத்தோடு ஒட்டிக்கொள்ளும் .எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் இங்கிருந்து தந்தி அனுப்புகிறோமாம்..இப்படி வேகாத வெயில்ல பட்டம் விட்டே கறுத்து கருவாடு ஆனேன் நான்.

2.பொதுவா நடந்து ஒரு இடத்துக்கு போறோம்னா ஏதோ கோட்டையை பிடிக்க போறது மாதிரி இண்டு இடுக்குல புகுந்து ,விறு விறுண்ணு நடந்து போகிற பழக்கம் எனக்கு .எதிரே யார் வர்றாங்கண்ணு கூட கவனிக்க மாட்டேன் .பல முறை தூரத்திலேயே என்னை பார்த்து விட்ட நமக்கு தெரிந்தவர் பக்கத்தில் வரும் போது நம்மை பார்ப்பான் என்றெண்ணி குறுக்கே நிற்க ,கிட்டத்தட்ட மோதிய பிறகு நிமிர்ந்து பார்த்து அசடு வழிந்திருக்கிறேன் .ரொம்ப அவசரமான வேலையாக போகும் போது இப்படி போனா பரவாயில்ல .சும்மா நேரப்போக்குக்கு போகும் போதும் இப்படித் தான்.

திருச்சியில் படிக்கும் போது கல்லூரிக்கு எதிரே தெப்பகுளம் முதல் மலைக்கோட்டை வரையிலாக திருச்சியில் மிக பிரபலமான பரபரப்பான ரோட்டில் நண்பர்களோடு மாலை வேளையில் நடந்து செல்வது வழக்கம் .போவதே சும்மா நேரப்போகுக்கு .சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பெண்கள் கூட்டம் ,ஏகப்பட்ட துணிக்கடை ,ஆற அமர ரசித்துக்கொண்டு நடந்து வருவது தான் நண்பர்கள் வழக்கம் .நான் ஏதோ புகுந்து புறப்பட்டு வளைந்து நெளிந்து நடந்து கொஞ்ச நேரத்தில் திரும்பிப் பார்த்தால் நண்பர்கள் ஒரு 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருப்பார்கள் .அவர்கள் வந்து "டேய் ! என்னடா மலைக்கோட்டையை போய் வாங்கப் போகிறாயா என்ன ? எதுக்கு இப்படி ஓடுற" என்பார்கள் .எனக்கும் 'அதானே! ஏன் இப்படி பறக்குறேன்" -ன்னு தோணும் .ஆனால் அடுத்த 5-வது நிமிடத்தில் அதுவே மீண்டும் நடக்கும் .நான் மாறவே இல்ல.

3.காபி குடிக்குறது .ஒரு காபி-யை வாங்கி வைத்து ஆற அமர குடித்து முடிப்பதற்கு குறைந்தது 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுவோரை பார்த்திருக்கிறேன் .ஆனால் நமக்கு 1 நிமிடத்துக்கு மேல் தேறாது .பல முறை முயற்சி செய்திருக்கிறேன் .ஆனாலும் குடிக்க ஆரம்பித்தால் குடித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல குடிப்பது என் வழக்கம் .எனக்கே இது ஓவராக தெரிந்தாலும் இன்னும் மாற்ற முடியவில்லை.

4.திருச்சியில் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த போது ,வார இறுதி நாட்களில் நண்பர்களெல்லாம் ரஜினி,கமல் படம் பார்க்க பறந்து கொண்டிருக்க ,நானோ திருச்சியின் சந்து பொந்துகளில் இருக்கும் ஓட்டை ஒடிசல் பழைய தியேட்டர்களை கண்டு பிடித்து தாய்மார்கள் பெரியோர்கள் நடுவில் அமர்ந்து பழைய சிவாஜி படங்களை விரட்டி விரட்டிப் பார்த்தது .'உத்தம புத்திரன்' படம் பார்த்து வெளியே வந்து விட்டு ,அடுத்த காட்சிக்கு நின்ற வரிசையில் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தது .நண்பர்கள் என்னை ஒரு தினுசாக பார்த்ததை சொல்லவும் வேண்டுமா!

5.எனக்கு விவரம் தெரியுமுன்னரே நடந்த ஒரு நிகழ்ச்சியை என் மாமா (எனக்கு பெயரிட்டவர் .பேராசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்) சொல்லிச் சொல்லி சிரிப்பதுண்டு .எனக்கு இரண்டரை வயதிருக்கும் போது அம்மா எனக்கு சோறூட்டியிருக்கிறார்கள் .முதல் சுற்று முடிந்து ,இரண்டாவது சுற்று .அதையும் முடித்து விட்டு மேலும் சோறு எனபது போல அம்மாவை பார்த்திருக்கிறேன் .பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.."

27 comments:

கோவி.கண்ணன் said...

ஜோ,

நீங்க சொல்லி இருக்கிற 2, 3 ரகம் தான் நானும்.

கிறுக்குத்தனம் தான் எல்லோருக்கும் தனித்தன்மை போலும் !
:)

கானா பிரபா said...

.பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.." :-)))

மனதின் ஓசை said...

finishing touch சூப்பர் :-)

தருமி said...

ஜோ,

அப்படியெல்லாம் இல்ல ஜோ.
எல்லாம் பாம்பின கால் பாம்பறியும் அப்டிம்பாங்களே அது மாதிரின்னு வச்சுக்கங்களேன்.

அது சரி ...
1. இன்னும் உங்க ஊர்ல சின்னப் பசங்க பட்டம் உடுறாங்களா .. இல்ல அவங்களும் கிரி-கெட்டுப் போய்ட்டாங்களா?

3.காப்பிகூட ஒரே "கல்ப்"தானா? அல்லது காப்பிமட்டும் அப்படியா?

5.
தருமி: ஜோ, இந்த weird round முடிஞ்சி இன்னொண்ணும் வந்திருக்கு; அதில மாட்டி உடட்டா?

ஜோ:" நீ சும்மா கெடல.."

ஜோ/Joe said...

//இன்னும் உங்க ஊர்ல சின்னப் பசங்க பட்டம் உடுறாங்களா .. இல்ல அவங்களும் கிரி-கெட்டுப் போய்ட்டாங்களா?//
அது எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க .நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கிரிக்கெட் தவிர கிட்டத்தட்ட 50 வகையான விளையாட்டுக்கள் உண்டு .இப்போ 10 வருடமா கிரிக்கெட் தவிர ஏதுமில்லை .இதுக்காகவாவது கிரிக்கெட் ஒழிஞ்சா சந்தொஷம்.

//காப்பிகூட ஒரே "கல்ப்"தானா? அல்லது காப்பிமட்டும் அப்படியா?//
சூடா ஆவி பறக்குற எல்லாமே அப்படி தான் . நல்ல வேளை சூடு பீர் இல்லை.

//தருமி: ஜோ, இந்த weird round முடிஞ்சி இன்னொண்ணும் வந்திருக்கு; அதில மாட்டி உடட்டா?

ஜோ:" நீ சும்மா கெடல.."//
:-)))))))

தருமி said...

தருமி: அந்த மாமா ஏன் ப்ளாக் எழுதுறதில்லன்னு கேட்டு சொல்லுங்களேன்.

* * *
ஜோவின் மாமா: வயசானவங்கன்னா கொஞ்சம் ஒதுங்கிருந்து சின்னப் பசங்க பண்றதை பாத்துக்கிட்டு இருக்கிறத உட்டுட்டு, (அந்த தருமி மாதிரி) நானும் உனக்கு சரிசமம்னு போய் அவங்ககூட உக்காந்துட்டு ... அதெல்லாம் நல்லா இருக்காதுப்பா..!!
:)))

ஜோ/Joe said...

தருமி,
நீங்க எனக்கு வலையுலக வாத்தியார்ன்னா அவர் நகைச்சுவைக்கு வாத்தியார் .வலைப்பதிவுக்கு வந்தா பின்னி எடுப்பார் .ஆனா கம்யூட்டர் முன்னால உக்கார்ற அளவுக்கு பொறுமை கிடையாது.

ஒரு முறை சித்தி பையன் ஸ்டைலா கையில் ஒர் செம்பு வளையம் போட்டுகிட்டு வந்தான் .மாமா அவன் கையை பிடிச்சு பார்த்துட்டு கேட்டது " இது போட்டதுக்கு அப்புறம் இப்போ பரவாயில்லயாடே"
:))))

தருமி said...

அந்த மாதிரி ஆளுகல்லாம் வராம, வேற சிலதுக வந்து கழுத்தறுக்கிறதப் பார்க்கிறப்போ ... எல்லாம் தலைவிதி, இல்ல ஜோ

லக்கிலுக் said...

சூப்பர் பதிவு!

ஆதி said...

கிறிஸ்துவரும் கிறிஸ்துவரும் நண்பராக இருந்து ஒருத்தருக்குக்கொருத்தர் போன் பேசி, பின் கிறுக்கர் பதிவு போடுறீங்கன்னு நெனைக்கிறேன்.

இருவரும் ஒரே மதம் என்பதால் ரெண்டுபேருமே முழுக்கிறுக்குதான்.

இந்துக்களை மதம் மாத்தாமல் இருந்தால் சரிதான்.

ஜோ/Joe said...

நண்பர்களே,
இந்த அல்சேஷன் சாரி.. ஆதிசேஷனின் குரைப்பை எல்லோரும் கேட்க வேண்டுமென்றே அந்த பின்னூட்டம் வெளியிடப்படுகிறது.

சாணான் said...

//கிறிஸ்துவரும் கிறிஸ்துவரும் நண்பராக இருந்து ஒருத்தருக்குக்கொருத்தர் போன் பேசி, பின் கிறுக்கர் பதிவு போடுறீங்கன்னு நெனைக்கிறேன்.//

அவர்கள் பரவாயில்லை. (போனில்)பேசி வைத்து அவர்களுக்குள்ளேயே கிறுக்கனாக்கிக் கொள்கின்றார்கள்.

ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லையே?

உங்களுக்குள்ளே பேசி வைத்து அல்சேசனிலிருந்து சாரி ஆதிசேசனிலிருந்து அரை டவுசர் கண்டர்கள் வரை அனைவரும் அவாள்கள் அல்லாதவர்களை கருவறுத்துக் கொண்டல்லவா அலைகின்றீர்கள்.

தங்களுக்குள்ளே மாமா, மச்சான், மாப்ளே என்றழைத்து மாறி மாறி கிறுக்கனாக்கி மகிழ்வதில் உள்ள சந்தோஷங்களை குறித்து மனிதத்தை மதிக்கத் தெரியாத அல்சேச, அரைடவுசர் வெறியர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

சாணான்.

Unknown said...

நல்ல விறுவிறுப்பான பதிவு.

தருமி said...

நண்பர்களே,
குரைப்பைக் கேட்டிருப்பீர்கள்; போதும். குரைப்பதை அங்கேயே விட்டு விட்டு பதிவுக்குள் வாருங்கள். நல்ல பதிவொன்று இப்படி திசை திருப்பப் படுவதை கண்டுகொள்ள வேண்டாம்.

அப்புறம் சொல்லுங்க ஜோ... வேறென்ன .. :)

இலவசக்கொத்தனார் said...

நான் கூட சின்ன வயசில் பட்டம் விட்டு இருக்கேன். ஆனால் உங்கள் அளவு இல்லை. இந்த சம்மர் பையனுக்கு ஒண்ணு வாங்கித் தரணும்.

இன்னிக்கு ரெண்டாவது முறை இந்த வேக நடை பத்திப் படிக்கறேன். நானும் என் நண்பனும் நடந்தால் எங்களை விட வேறு யாரும் வேகமா நடக்கக்கூடாது என்பது போலத்தான் நடப்போம். சைக்கிளில் சென்றாலும் அப்படியே. பைக் கார் என வந்த பின் ரொம்பவே கஷ்டப்பட்டு அதை அடக்க வேண்டியாதா இருக்கு.

நல்ல பதிவு.

-L-L-D-a-s-u said...

ஐயோ!!இந்த சேஷன் பற்றிதான் எழுத நினைத்தேன். தருமி அவர்களின் பின்னூட்டம் கண்டு .. சரி.. சரி.. சாணான் சொன்னதுபோல கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை .

உங்கள் 'பட்டம் சார்ந்த அனுபவம் எனக்குப் புதுசு .. ஆனால் அது நெஇர்ட் (நன்றி: சிறில்) அளவு குறைவுதான் ;)

ஓட்ட நடை, சிவாஜி படம் .. ம்..ம் .. அளவு கூடுது .. ஆனால் இன்னும் சிலபேர் மாதிரி, கணிணியை கட்டிப்பிடிக்கிறது (யாருன்னு தெரியல, இந்தத் தொடர்லதான் வாசித்து சிரித்தேன்) , பூனைக்கிட்ட நாவல் வாசிக்கிறது(துளசி அக்கான்னு நினைக்கிறேன்!!) அளவுக்கு முத்திப்போகலை !!! ;) ;)

ஜோ/Joe said...

கோவியார்,கானா பிரபா,மனதின் ஓசை, லக்கிலுக் , டெல்பின்,சாணான் ,சுல்தான் ,இலவச கொத்தனார் ,எல்.எல்.தாசு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

Final punch super :))

ஆதி said...

//இந்த அல்சேஷன் சாரி.. ஆதிசேஷனின் குரைப்பை எல்லோரும் கேட்க வேண்டுமென்றே அந்த பின்னூட்டம் வெளியிடப்படுகிறது.
//

ஒரு கிறிஸ்துவரும் இஸ்லாமியரும் நண்பர் என்றால் பாராட்டி இருக்கலாம். ஒரே மதத்தைச் சேர்ந்த நீங்கள் இருவரும் நண்பர் ஆனதில் என்ன வியப்பு இருக்கிறது நண்பர் ஓநாய் அவர்களே?

ஜோ/Joe said...

அல்சேஷன் அவர்களே,
உங்களை யாரையா வியக்கச் சொன்னது அல்லது இங்கு வந்து குரைக்கச் சொன்னது ? வேறு எங்காவது போய் குரையுமையா!

Anonymous said...

இது என்ன கூத்து

ஜோ/Joe said...

அனானி,
இது தொடர் கூத்து.

thiru said...

ஜோ,

அல்சேசன் பேரு பொருத்தமா? இல்லை தற்செயலாக அமைந்ததா? எப்படியிருப்பினும் இது நமது மண்ணின் கலாச்சாரத்தின் வழி வந்ததல்ல. ஆதிக்கசாதி காலை நக்கும் 'உயர்த்திக்கொண்ட' இதை பரிதாபமாக தான் பார்க்க முடிகிறது. 'உயர்ந்த' என்னும் மனநிலை பாதிப்பில் மற்றவர்களை பார்த்து குரைப்பதும், இழிப்பதுமாக காலம் தள்ளுவதை தவிர வாழும் காலத்தில் அல்சேசனுக்கு விடுதலை இல்லை.

'அதை விட்டுத்தள்ளுங்க. அறிவில்லாத ஜீவன்!' இது நமது மண்ணின் மக்கள் சொலவடை.

thiru said...

//எனக்கு விவரம் தெரியுமுன்னரே நடந்த ஒரு நிகழ்ச்சியை என் மாமா (எனக்கு பெயரிட்டவர் .பேராசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்) சொல்லிச் சொல்லி சிரிப்பதுண்டு .எனக்கு இரண்டரை வயதிருக்கும் போது அம்மா எனக்கு சோறூட்டியிருக்கிறார்கள் .முதல் சுற்று முடிந்து ,இரண்டாவது சுற்று .அதையும் முடித்து விட்டு மேலும் சோறு எனபது போல அம்மாவை பார்த்திருக்கிறேன் .பக்கத்திலிருந்த மாமா "ம்..போதும்..போதும் " என்று சொல்ல நான் சொன்னது " நீ சும்மா கெடல.."//

:))

டிபிஆர்.ஜோசப் said...

இந்த அவசர அவசரமா காப்பி குடிக்கிறது, சாப்பிடறது அப்புறம் எங்கயோ ப்ளேன புடிக்கறமாதிரி வேக வேகமா நடக்கறது எனக்கும் உண்டு..

அதுமாதிரிதான் பேசறதும். நிறைய நண்பர்கள் நீ என்ன சொல்ல வரேன்னே புரிய மாட்டேங்குதேடா என்பார்கள்.. இது இப்பவும் இருக்கு.

இதுக்கெல்லாம் ஏதாச்சும் ட்ரீட்மெண்ட் இருக்கா?:)

தென்றல் said...

இந்த பதிவையும் 'வழக்கம் போல்' தாமதமாகதான் கவனித்தேன்.

/ காலை 9 மணியளவில் பட்டத்தை எடுத்து பாரமான வாலை கட்டி ,முதலில் ஒரு 50 அடி தூரம் கொண்டு சென்று பட்டத்தை விட்டால் விர்ரென்று 45 டிகிரியில் போய் ஆடாமல் அசையாமல் போய் நிற்கும் /

அம்மாடியோவ்... இதயே நீங்க ஒரு தனிபதிவா போடலாம்போல? இந்த weirdஅ சொல்லலைங்க... பட்டம் விட்டதை... ;)

/புகுந்து ,விறு விறுண்ணு நடந்து போகிற ... திருச்சியில் படிக்கும் போது கல்லூரிக்கு எதிரே தெப்பகுளம் முதல் மலைக்கோட்டை வரையிலாக திருச்சியில் மிக பிரபலமான பரபரப்பான ரோட்டில் நண்பர்களோடு /

ரொம்ப நல்ல பையனா இருந்திருக்கீற்கள்...

ஜோ/Joe said...

தென்றல்,
வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி1
//அம்மாடியோவ்... இதயே நீங்க ஒரு தனிபதிவா போடலாம்போல? இந்த weirdஅ சொல்லலைங்க... பட்டம் விட்டதை... ;)//
உண்மை தான் .இப்போ தான் நானும் யோசிக்குறேன் .கொஞ்சம் விரிவா இதை தனிப்பதிவாவே போட்டிருக்கலாம் என்று.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives