Thursday, March 01, 2007

பருத்தி வீரன்

சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல .நல்ல நகைச்சுவையை வழங்கும் பொழுது போக்கு திரைப்படங்களும் நமக்கு தேவையே .அதே நேரத்தில் நம் நம் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை ,பழக்க வழக்கங்களை ,நாட்டின் இதயமான கிராமங்களின் நடைமுறைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமையும் திரைப்படங்களும் வரவேற்கப் படவேண்டியவை. ஒரு திரைப்படம் "பாட்டி வடை சுட்ட கதை' போன்று ஏதாவது ஒரு கதையோடு தான் அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை .சுவாரஸ்யமான சம்பவங்களில் தொகுப்புகள் கூட ஒரு ரசிக்கத் தக்க திரைப்படமாக அமையலாம் .அந்த வரிசையில் ஒரு கிராமத்து சண்டியரின் கதையை அதன் பின்புலத்தோடு ,வாழ்க்கை முறையோடு ,அதன் சோகங்களோடு சொல்லும் ஒரு படம் 'பருத்தி வீரன்'.

தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த படம் தன் கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் நடந்த பல சம்பவங்களை கண்முன் நிறுத்தும் .கிராமம் என்றால் கண்டிபாக காட்டப்படும் மரத்தடி பஞ்சாயத்து ,ஊரை அடியாள்கள் தயவில் மிரட்டி வைத்திருக்கும் வில்லன் ,கதாநாயகனை வாழ்த்திப்பாடும் போது நூற்றுக்கணக்கில் வந்து நடனமாடும் தடியர்கள் மற்ற நேரத்தில் காணாமல் போய் விட மற்ற நேரங்களில் கிழவர்கள் மட்டுமே கதாநாயகனிடம் முறையிடும் அபத்தம் ,பட்டணத்துக்கு படிக்கப் போய் 10 ஆண்டுகளுக்கு பின்னரே முதல் முறையாக கிராமத்துக்கு வரும் டூ பீஸ் உடையணிந்த வில்லன் மகளான கதாநாயகி இப்படிப் பட்ட சமாசாரங்கள் இந்த படத்தில் இல்லை .ஆனால் கிராமத்து கூத்து ,கரகாட்டம் .கிராமத்து சாதாரண பள்ளியில் படிக்கும் சுமாரான அழகுள்ள கதாநாயகி ,விஷம் குடித்த கதாநாயகிக்கு செய்யப்படும் சிகிச்சை ,கிராமத்து வெளியில் சீட்டாட்டம் ,வெட்டித்தனமாக ஒரு சண்டியரின் வாழ்க்கை, எகத்தாளம் ,அவனை வெறித்தனமாக காதலிக்கும் கதாநாயகியின் செய்கைகள் இப்படி பல விடயங்கள் கண்முன் நடப்பவை போன்று யதார்த்தமாக விரிகின்றன.

சிவகுமாரின் இளைய மகன் 'கார்த்திக்' முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் .கண்டிப்பாக நடிப்பில் நல்ல திறமையுள்ளவராக திகழ்வார் ,ஆனால் அண்ணன் போன்று இளமை துள்ளும் கதாபாத்திரத்தில் மிளிர்வாரா என்பது போகப் போகத் தான் தெரியும் .இருந்தாலும் ,தமிழ் சினிமாவுக்கும் திறமையுள்ள நடிகர் கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

கதாநாயகனின் சித்தப்பாவாக வரும் சரவணன் (பழைய ஹீரோ) ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் .இவரிடம் இத்தனை நடிப்பாற்றலா என வியக்க வைக்கிறார் .கதாநாயகி பிரியாமணி மிக நன்றாக செய்திருக்கிறார் .இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே அவரை பாராட்டலாம்.

சின்ன சின்ன காதாபாத்திரங்களில் வருபவர்கள் கூட நிறைவாக செய்திருக்கிறார்கள் .அதிலே இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது .நீண்ட நேடிய கதை சொல்வது முக்கியமல்ல .காட்சிகளின் நேர்த்தி தான் இயக்குநரின் முக்கிய வேலை .அதிலே அமீர் தனது முந்தைய படங்களை மிஞ்சியிருக்கிறார்.

2 மணி நேரங்களுக்கு மேல் கலகலப்பாக செல்லும் திரைப்படம் ,நெஞ்சை பதற வைக்கும் சோகத்தோடு முடிகிறது .மனம் கனக்கிறது .அது படமாக்கப்பட்டிருக்கும் விதம் அதீதமாக வலிந்து திணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருகின்றன .ஆனால் என்னைப் பொருத்தவரை அந்த காட்சிகள் நம் சமூகத்தின் இழிவான ஒரு பக்கத்தை ,பொறுப்பின்மையை குறித்த கோபத்தையும் ஆற்றாமையையுமே கொடுப்பதாக இருக்கிறது .அதே நேரத்தில் வாழ்க்கையை பொறுப்ற்ற விதமாக கழிப்பவர் தங்களுக்கு மட்டுமல்ல தங்களை சார்ந்தோருக்கும் கொடுக்கும் துன்பத்தை எடுத்துக்காட்டும் பாடமாக இருக்கிறது.

இத்தகைய முடிவைப்பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ,இத்தகைய திரைப்படங்கள் பெறும் வெற்றி,தமிழ் சினிமா எதார்த்தத்தை நோக்கிய பாதையில் இன்னொரு படி எடுத்து வைப்பதற்கான வழியாக இருக்கும்.

இயக்குநர் அமீருக்கு பாராட்டுக்கள்!

40 comments:

G.Ragavan said...

நீங்களும் பாத்துட்டீங்க போல. பருத்தி வீரன், மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம்னு மூணு படம் வரிசைல இருக்கு. எது பாக்கக் கெடைக்குதோ தெரியலையே! பாத்துட்டு கருத்து சொல்றேன்.

ஜோ / Joe said...

ராகவன்,
வாங்க .கண்டிப்பா பாருங்க .மொழி இதை விட நல்லாயிருக்கிறதா கேள்விப்பட்டேன் .நானும் விரைவில் பார்ப்பேன்.

கானா பிரபா said...

அமீரின் முதல் படம் "மெளனம் பேசியதே" யிலிருந்து நல்ல விதமாகப் படம் பண்ணுகிறார். சற்றே வன்முறை மசாலாவுக்குள் நுளைந்துவிட்டாரோ என்று ஆதங்கப்பட்டேன். உங்கள் பதிவு மூலம் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். நம்மளுக்கெல்லாம் இறுவட்டு மூலம் தான் பார்க்கக் கொடுப்பினை ;-)

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல்...
மொழி இந்த வார இறுதியில் பாப்பேன்.

ஒரு விமர்சனம் போட்டுறேன்.

தேவ் | Dev said...

ஜோ அருமையான விமர்சனம். அந்தக் கிளைமாக்ஸ் குறித்த உங்கள் பார்வை ஏற்று கொள்ளக் கூடியது தான் எனினும் கொஞ்சம் நெருடல் இருப்பது என்னவோ தவிர்க்க முடியவில்லை..

Vasantham said...

நல்ல பதிவு. பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.

உங்கள், வேட்டையாடு வளயடு பதிவு ஒரு தீவிர கமல் ரசிகன் பார்வையில் பதிவு என்பது என் எண்ணம். (நீங்கள் ஒரு கமல் ரசிகன் என்பது எனக்கு தெரியும்.)

PS: அப்பாடி, இத type பண்ண எனக்கு ஒரு மணி னெரம் ஆனது.

ஒப்பாரி said...

நல்ல படத்திற்க்கான நல்ல விமர்சனம்.
" வீரா நீயெல்லாம் என்னடா சண்டியர், பார்தியா உன் பாவத்தையெல்லாம் என் மேலே இரக்கி வெச்சுட்டாங்க பார்தியா". கதாநாயகி கடைசியில் பேசும் வசனம்.

சண்டியரா திரியுர எல்லோருக்கும் முடிவு ஒரு சம்மட்டி அடி. கார்த்திக் சிறப்பா பண்ணியிருந்தாலும் ப்ரியா மணி வியக்க வைத்தார், நூறு படம் வேண்டாம் இந்த ஒரு படம் போதும் ப்ரியா மணிக்கு. வாழ்த்துக்கள் அமீர் எல்லோரையும் சிறப்பாக பயன்படுத்தியிருகிறார்.

முடிவு ஏற்படுத்தும் அதிர்வு நிச்சயம் தேவை, எனினும் இன்னும் பலமுறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிச்சயமாக கடைசி 20 நிமிடங்களை இனி ஒருமுறை பார்க்க மாட்டேன்.

ஜோ / Joe said...

//உங்கள், வேட்டையாடு வளயடு பதிவு ஒரு தீவிர கமல் ரசிகன் பார்வையில் பதிவு என்பது என் எண்ணம்//

வசந்தன்,
இருக்கலாம் .சிவாஜி ,கமல் மேல் பிரியம் அதிகம் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்

SK said...

படம் பார்க்காமலே படத்தின் மேல் ஒரு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீர்கள்!

இன்னும் இங்கு வரவில்லை.
கண்டிப்பாகப் பார்த்து விடணும்!

நன்றி!

வாழ்க சிவாஜி புகழ்!
:))

சோமி said...

இறுதிக் காட்சியில் [இரியாமணி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை வலிமை நீறைந்தது.ஒரு காதலனை நோக்கிய கேள்வியாக இல்லாஅமல் அது என்னை நோக்கியதாகவும் உங்களை நோக்கியதாகவும் ஆண்களை நோக்கிய பெண்ணின் கேள்வியுமாகவே இருபதாக எனக்குத் தோன்றியது.

இந்த கனம் வட்ரை அந்த இறுதுஇ நேர உடையாடல் மனசுக்குள்ளையே நிக்குது...அப்பப்பா..நம்ம இயக்குனர் அண்ணனுங்களா,அந்த பொண்ண நல்லா பயன்படுத்துங்க.
பதிவு இன்னும் ஆழமாக இருந்திருகலாம் நணபரே.

ஜோ / Joe said...

SK ஐயா!
வாங்க.
//வாழ்க சிவாஜி புகழ்!//
இப்போது கூட நவராத்திரி பார்த்துக் கொண்டிருக்கிறேன் .நடிப்புக்கு இலக்கணம் நம்ம நடிகர் திலகம்.

ஜோ / Joe said...

சோமி,
வாங்க நண்பரே!
//பதிவு இன்னும் ஆழமாக இருந்திருகலாம் நணபரே.//

உண்மை தான் .படம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அவசரமாக எழுதியது .அது போக ,விமர்சனம் என்று கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .இதை விமர்சனம் என்பதை விட முன்னுரை என்று எடுத்துக்கொள்ளவும்.

Vasantham said...

ஜோ,

நான் தழிழ்மணத்து-க்கு புதுசு.

நீங்கள் வசந்தன் என்ற (பதிவரோடு)அன்பரோடு confuse ஆக வேண்டாம்.

/
அது போக ,விமர்சனம் என்று கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .
/

அருமை. வரவேற்கிறேன்

Vajra said...

பருத்தி வீரன், கிராமத்து ஏக் துஜே கே லியே வாக இருக்குமோ என்று தோன்றியது :D

ஜோ / Joe said...

//பருத்தி வீரன், கிராமத்து ஏக் துஜே கே லியே வாக இருக்குமோ என்று தோன்றியது :D//
ஏக் துஜே கேலியே முழுக்க முழுக்க காதல் கதை .பருத்தி வீரன் அப்படி அல்ல .ஏக் துஜே கேலியே வில் இருக்கும் அபத்தங்கள் (ஆமா! நான் கமல் ரசிகன் தான் .அதனாலென்ன) அளவுக்கு இதில் அபத்தங்கள் இல்லை.

Vajra said...

//
ஏக் துஜே கேலியே வில் இருக்கும் அபத்தங்கள் (ஆமா! நான் கமல் ரசிகன் தான் .அதனாலென்ன) அளவுக்கு இதில் அபத்தங்கள் இல்லை.
//

ஏக் துஜே கேலியே வெளி வந்த ஆண்டு 1981.

இது 2007!!

அபத்தங்களின் டெஃபணிஷன்களும் ஆக்டர், டைரக்டர் போல் மாறிக்கொண்டு தான் இருக்கிறது.

அது என்ன அதில் இருக்கும் அளவுக்கு அபத்தம் இதில் இல்லை என்கிறீர்கள். ஆக இதிலும் அபத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள், அளவு தான் வித்தியாசம் என்கிறீர்கள். சரியா ?

ஜோ / Joe said...

//அது என்ன அதில் இருக்கும் அளவுக்கு அபத்தம் இதில் இல்லை என்கிறீர்கள். ஆக இதிலும் அபத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள், அளவு தான் வித்தியாசம் என்கிறீர்கள். சரியா ?//

வஜ்ரா,
இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ .இந்த படம் குறைகளே இல்லாத 100 மதிப்பெண் பெறும் படம் என்று நான் சொன்னேனா என்ன ? எனக்கு தெரிந்து இதில் அபத்தங்கள் இல்லை .உங்களுக்கு தெரியலாம் .ஆனால் 5 அபத்தங்களும் 500 அபத்தங்களும் ஒன்று தான் என்றால் நீங்கள் இந்த படம் பார்த்து சிரமப்படுவானேன் .பேசாமல் போக்கிரி அல்லது ஆழ்வார் பார்க்கவும்.

Vajra said...

//
வஜ்ரா,
இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ
//

அது தான்...அதே தான்...

எவனும் திராவிட ஜல்லி, ஆரிய வாந்தி எடுக்கலையா...வந்துட்டேன்...! :D

பருத்திவீரன் பட்டி நம்ம ஊர் பக்கம் தான்.

Realism அதிகம் வைத்து எடுக்கப்பட்டுள்ள பாராட்டப்படவேண்டிய படம் என்றாலும் கிளைமாக்ஸை வைத்துப் பார்த்ததில் எனக்கு தோன்றியதைச் சொன்னேன்.

ஜோ / Joe said...

//Realism அதிகம் வைத்து எடுக்கப்பட்டுள்ள பாராட்டப்படவேண்டிய படம் என்றாலும் கிளைமாக்ஸை வைத்துப் பார்த்ததில் எனக்கு தோன்றியதைச் சொன்னேன்.//

ஆனந்த விகடனில் கிளைமாக்ஸை வக்கிரம் என்று சொல்லியிருக்கிறார்கள் .ஆனால் என்னை பொறுத்தவரை கொடூரமாக இருந்ததே தவிர வக்கிரமாகவோ ஆபாசமாகவோ இல்லை .மாறாக ஆத்திரம் ,ஆற்றாமை ,அனுதாபம் இவைகளை கொண்டு வந்தது. ஒரு வேளை வக்கிரம் என்பதை நான் தான் தவறாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை.

-L-L-D-a-s-u said...

ஆழ்வார் , போக்கிரிகளுக்கிடையே வெயில் , தீபாவளி, பச்சைக்கிளி , மொழி , பருத்திவீரன் (எல்லாம் விமரிசனத்தை படித்து சொல்கிறேன்) . போன்ற படங்கள் ஆறுதல் அளிக்கிறது

ஜோ / Joe said...

வாங்க தாசு!
மொழி,பருத்தி வீரன் கண்டிப்பா பார்க்கலாம் .பருத்தி வீரன் இறுதிக்காட்சி மனதை பாதிக்கலாம் .

ஜோ / Joe said...

ராகவன்,கானா பிரபா,சிறில் ,தேவ்,வசந்தம் ,ஒப்பாரி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

தருமி said...

வெயில், பருத்தி வீரன், மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம்னு வரிசையா .. என்ன ஆச்சு, ஜோ நம்ம தமிழ்ப்பட உலகிற்கு .. ஆனாலும் அங்கங்க இன்னும் மணிரத்தினம்தான் டைரடக்கர் அப்டின்னு ஒரு கோஷ்டி கானம் வேற சுதிமாறி கேட்கிறது ஓய மாட்டேங்குதே!

ஜோ / Joe said...

தருமி,
வாங்க .பச்சைக்கிளி முத்துச்சரம் இந்த வரிசையில சேருற அளவுக்கு நல்லா இருக்கான்னு தெரியல்ல .நான் இன்னும் பார்க்கல்ல.

மணிரத்னம் பற்றி என் கருத்து என்னாண்ணா ,அவர் சிறந்த தொழில்நுட்ப கலைஞர் .இசை ,ஒளிப்பதிவு மற்ற பிற தொழில்நுட்ப கலைஞர்களை உபயோகிப்பதில் வல்லவர் .பிரச்சனைகளை அலசுகிறேன் ,இவரோட கதையை சொல்கிறேன் பேர்வழி என்று எதிர்பார்ப்பை கிளப்பி நுனிப்புல் மேய்ந்து அந்த ஓட்டைகளை இசை ,தொழில்நுட்பம் கொண்டு சாமார்த்தியமாக அடைப்பவர்.

நம்ம ஊரில் ,ஆங்கிலப்படம் ஒரு வார்த்தை புரியல்லின்னாலும் மற்றவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயத்தில் ஆகா ஓகோ என்று புகழ்வது மாதிரி ,மணிரத்னம் படம் பிடிக்கல்லின்னா நம்மளை மடையனுண்ணு சொல்லிருவாங்களோண்ணு அதீதமா புகழ்ந்து தள்ளுறது தான் வழக்கம்

தம்பி said...

பாலா, அமீரின் படங்களில் வரும் ஹீரோக்கள் கொஞ்சம் இறுக்கமான புரிந்து கொள்ள முடியாத கதாபாத்திரங்களாக இருப்பார்கள் என்பது என் எண்ணம். அதே சமயம் ரசிக்கும்படியும் இருக்கும். உதாரணத்திற்கு அமீரின் மௌனம் பேசியதே, ராம். பாலாவின், சேது, நந்தா. வழக்கமான சினிமாவில் வருவது போல சண்டை, பாட்டு சோகம்னு இல்லாம சின்ன சின்ன விஷயங்களும் ரசிக்க்கிற மாதிரி இருக்கும்.

இருவருமே குருவை எதிர்த்தவர்கள். இரண்டு இயக்குனர்களையும் பிடிக்கும்.

சீக்கிரம் பார்க்கணும்.

ஒப்பாரி said...

//ஆனந்த விகடனில் கிளைமாக்ஸை வக்கிரம் என்று சொல்லியிருக்கிறார்கள் .ஆனால் என்னை பொறுத்தவரை கொடூரமாக இருந்ததே தவிர வக்கிரமாகவோ ஆபாசமாகவோ இல்லை//

ஆனந்த விகடன் வக்கிரம் என்று குறிப்பிட்டிருக்கக்கூடாது. இயக்குனரின் மனநிலையை நேரடியாக கேட்டரியாமல் வக்கிரமாக சித்தரிப்பது கண்டனத்திற்க்குரியது. தினம் பத்திரிக்கையில் கற்பழிப்பு செய்திகளை சாதரணமாக கடந்து போகும் யாரும் இனி அந்த பெண்ணிற்க்காக வருத்தப்படமல் இருக்க முடியாது. வேட்டையாடு விளையாடு , குருதிப்புணல் போன்ற படங்களில் வரும் காட்சிகளைவிடவா?

Vasantham said...

//
நம்ம ஊரில் ,ஆங்கிலப்படம் ஒரு வார்த்தை புரியல்லின்னாலும் மற்றவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயத்தில் ஆகா ஓகோ என்று புகழ்வது மாதிரி //

:)
//
மணிரத்னம் படம் பிடிக்கல்லின்னா நம்மளை மடையனுண்ணு சொல்லிருவாங்களோண்ணு அதீதமா புகழ்ந்து தள்ளுறது தான் வழக்கம்
//
அப்படியா? "குரு" பார்த்தேன். ஒன்றும் இல்லாத கதையை, intersting-ha (ofcourse with Rajvee Menon, ARR) கதை சொல்ல இந்தியாவில் ஒரு சில பேர் மட்டுமே உண்டு என்பது என் எண்ணம்.

-L-L-D-a-s-u said...

//ஆங்கிலப்படம் ஒரு வார்த்தை புரியல்லின்னாலும் மற்றவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயத்தில் ஆகா ஓகோ என்று புகழ்வது மாதிரி ,மணிரத்னம் படம் பிடிக்கல்லின்னா நம்மளை மடையனுண்ணு சொல்லிருவாங்களோண்ணு அதீதமா புகழ்ந்து தள்ளுறது தான் வழக்கம்//

;)குருவை் அரைமணி நேரம் கூட பார்க்கமுடியவில்லை. என்ன திரைக்கதை அது?

MSV Muthu said...

நல்ல அமைதியான நிறைவான விமர்சனம். வஜ்ரா சொன்னது போல : கிராமத்து ஏக்துஜேகேலியே தான் இல்லியா?

கார்த்திக் பிரபு said...

good post if u have time read my review abt ,patchai kili muthu saram '

Vasantham said...

ஜோ,
'அன்புடன்' பார்த்தீர்கள்-தானே?

கமல் interview-பத்தி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்குமே?

நன்றி!

ஜோ / Joe said...

//'அன்புடன்' பார்த்தீர்கள்-தானே?//

வசந்தம்,
கவுதமி நிகழ்ச்சியையா சொல்கிறீர்கள் ?வெளியூரில் இருப்பதால் நான் பார்க்கவில்லை .ஆனால் கவுதமி சொதப்பி விட்டார் போல .அதன் ஒரு பாகத்தை நண்பர் ஒருவர் வலையேற்றியிருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=s0Sla_rO528

சிறில் அலெக்ஸ் said...

//ஆனாலும் அங்கங்க இன்னும் மணிரத்தினம்தான் டைரடக்கர் அப்டின்னு ஒரு கோஷ்டி கானம் வேற சுதிமாறி கேட்கிறது ஓய மாட்டேங்குதே! //

அவர் தாராளம ஹிந்தி படங்கள் எடுக்கலாம்.

Vasantham said...

பார்த்தேன். ரொம்ப நன்றி.

//கவுதமி சொதப்பி விட்டார் போல
//
அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

ஆனால்,
ஆதிசங்கர்-லிருந்து பெரியார் வரை ...
சமஸ்கிருதம்-லிருந்து Spanish (!)வரை ..
கண்ணதாசன்-லிருந்து பா.விஜய் வரை ..
இலககியம், கவிதை என்று எல்லாவற்றிலும் கமல் ஒரு சகலகலா வல்லவன்(ர்) தான்.

ஜோ / Joe said...

//ஆதிசங்கர்-லிருந்து பெரியார் வரை ...
சமஸ்கிருதம்-லிருந்து Spanish (!)வரை ..
கண்ணதாசன்-லிருந்து பா.விஜய் வரை ..
இலககியம், கவிதை என்று எல்லாவற்றிலும் கமல் ஒரு சகலகலா வல்லவன்(ர்) தான். //
சந்தேகமென்ன ! அதனால் தான் கவுதமி மாதிரி வழக்கமான கேள்விகளை கேட்டு சொதப்பியிருக்க கூடாது

இரண்டாம் பாகம் இங்கே...
http://www.youtube.com/watch?v=p7nfDryuQxE

அருட்பெருங்கோ said...

ஜோ,
பருத்தி வீரனில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள் படம் நெடுக கிடக்கின்றன…ஆனால் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் தொற்றிக் கொள்ளும் சோகம் + கோபம் மற்ற எல்லாவற்றையும் ஒரு நிமிடம் மறக்கடித்து விடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியின் மீதான விமர்சனங்கள் எப்படியிருப்பினும் அது வலிந்து திணிக்கப் பட்டதாக தோன்றவில்லை…

Thillakan said...

//விமர்சனம் என்று கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .இதை விமர்சனம் என்பதை விட முன்னுரை என்று எடுத்துக்கொள்ளவும்.//

இது முன்னுரை தான் !!!

இந்த படம் உண்மை கதைய வைத்தா எடுக்கப்பட்டது??

மருதநாயகம் said...

//
ராகவன்,
வாங்க .கண்டிப்பா பாருங்க .மொழி இதை விட நல்லாயிருக்கிறதா கேள்விப்பட்டேன் .நானும் விரைவில் பார்ப்பேன்
//

மொழி நல்லதொரு படம், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை ஆனால் மொழி படத்தில் சினிமத்தனத்தை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரனில் சினிமாத் தனம் துளி கூட இல்லை. கிளைமாக்ஸ் காட்சியை அழுத்தம் என்று எடுத்துக் கொள்ளலாம் வக்கிரம் என்பது எல்லாம் சும்மா

Kovai Mani - கோவை மணி said...

//அதே நேரத்தில் வாழ்க்கையை பொறுப்ற்ற விதமாக கழிப்பவர் தங்களுக்கு மட்டுமல்ல தங்களை சார்ந்தோருக்கும் கொடுக்கும் துன்பத்தை எடுத்துக்காட்டும் பாடமாக இருக்கிறது.//

எனக்கும் இதே எண்ண ஓட்டம்தான்.
இந்தப் படம், "சண்டியர்" மாதிரியான குணத்தின் மேல் ஒரு ஈர்ப்பை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதனால் அவர்கள் வழி தவறிவிடுவார்களோ என்றும் யோசித்தேன். 2 1/2 மணி நேர படம் சண்டியர்தனத்தின் மீது ஏற்படுத்தும் மோகம், பிரியாமணி சொல்லும் ஒரிரு வசனங்களால் நீங்கிவிடுமா என்பது தெரியவில்லை.

shiva said...

hi, naan shiva from gujarat, Last time chennai poi irundhen, paruthiveeran parthen, innam ennala marakka mudiyala last klaimax, appapa ennama tamil padam creat seyranga. ungal vimarsam is good.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives