Friday, January 26, 2007
கலைஞரும் சாயி பாபாவும்
சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார் .இது தான் செய்தி.
பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் .எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர் .பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர் .இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?
பாபா ஆன்மீகவாதி .கலைஞர் ஆன்மீக மறுப்பாளர் .இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்று தான் .கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை .கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .
ஆனால் நடந்தது என்ன ?பிரதமர்களும்,கவர்னர்களும் ,முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார்.அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை .அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள் .இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை .காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும் ,அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள் .
இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது .ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே .இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே .ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை ,ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.
இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார் .கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்..ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள் .ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம் ..நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?
முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர் .
சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை..இதோ பார் .நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி ,இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து ,தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் ,கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள் .அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது ,இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு ,சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது...
"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."
"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.
மதிநுட்பத்தோடு செயல்பட்டு ,நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!
படம் :நன்றி -விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
சோதனை
நச்சுக் கேள்விகளுக்கு "நச்" பதில்கள்!
(பின்னூட்டமிடுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது :-) )
arumaiyaana pathivu joe , vazhthukkaL.
:)
//மதிநுட்பத்தோடு செயல்பட்டு ,நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!
//
ஜோ,
உங்களுடன் சேர்ந்து நானும் வணங்குகிறேன்.
ஆருயிர் நண்பரே! உடன்பிறப்பே! சிங்கக்குட்டியே! தங்கக்கட்டியே! ஜோ!! - இந்தப்பதிவெழுதிய உங்கள் கைகளுக்கு என் ஆயிரம் முத்தங்கள்!
"பழைய பகை" படையெடுத்தால் 'கத்தி' 'புத்தி' இரண்டும் கொண்டு வென்று விடுவார்கள் எமது திராவிட உடன்பிறப்புகள் என்று "பரம்பரைப் பகைவர்கள்" நன்றாகத் தெரிந்து கொள்ளட்டும்! :)
நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அவர்களுக்கும் தெரியும் ஆனால் ஒத்துக்கொள்ள மனம் வராது..
அருட்பெருங்கோ ,வரவனையான்,கோவியார் ,நண்பர் neo,dharan அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
நல்ல பதிவு ஜோ. மிகவும் தேவையானதும் கூட.
வெளிநாட்டிலிருந்து தொழிலதிபர்கள், முதலாளிகள், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்போதும், சமூக நல சேவையினர் உதவும்போதும் அவர்கள் என்ன மதம் என்றா கேட்கிறோம்? பொருளாதாரத்தையும், நாடு மக்கள் முன்னேற்றைத்தை, நலத்தையும் மட்டுமல்லவா கருத்தில் கொள்கிறோம்! கலைஞர் செய்வதும் இவ்வகையை சேர்ந்ததே!
பணம் யாருக்கு சேரனுமோ, அங்கு (மக்களுக்கு) சேர்ந்துருக்கு. அது அவர் சம்பாரித்த பணம் அல்லவே!!
//பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் //
ஜோ, நல்ல பதிவு.
இந்த வரியில் உள்ள பொருட்குற்றம் என்று தோன்றுவதைப் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன்.
உலக அளவில் பாபாவை தெய்வம் என்று நினைப்பவர்கள் பலர். போலி என்று சொல்பவர்கள் சிலர். இரண்டுமே சொல்லாமல் இருப்பவர்களே பெரும்பாலானோர்.
குமரன்,
வாங்க .நீங்க சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்
பஞ்ச்மா...
ஏதாவது சொல்லி கலைஞரை திட்டிக்கிட்டே இருக்கனும் சிலதுகளுக்கு.
அதுகள் திருந்தாத ஜந்துக்கள்.
சிநேகிதன்,
//அந்த 200 கோடியில் 100 கோடி கருனாநிதியின் அடிப்பொடிகளுக்கு போய்விடும்.//
100 கோடியாவது உருப்படியா போய் சேரும்-ன்னு சொல்லுறீங்களே .தாரள மனசு தான்.
// ஒரு கெட்டவனிடம் காசு வாங்கி நாட்டுக்கு நல்லது தானே செய்கிறார் என்று எல்லோரும் சொல்கிறீர்கள்.//
அவர் நல்லவரா ,கெட்டவரான்னு நான் எதுவும் சொல்லலீங்க! பொது காரியத்துக்கு நிதி கொடுக்கிறவங்களோட யோக்கியதையை உறுதிப்படுத்திட்டு தான் நிதி வாங்கணும்னா இதுக்கு முன்னாடி கார்கில் ,சுனாமி -க்கு நிதி கொடுதவங்க கிட்டயெல்லாம் செக் பண்ணி தான் வாங்கினாங்களா?
சித்து விளையாட்டு சுட்டிக்கு நன்றி .ஏற்கனவே பார்த்திருக்கிறேன் .எனக்கு சம்பந்தம் இல்லாதது.நோ கமெண்ட்ஸ்.
சிநேகிதன்,
மறுபடியும் சொல்லுறேன்.அவர் கெட்டவரா நல்லவரா எனக்கு தெரியாதுங்க .இது பற்றிய விவாதத்தை நீங்கள் யாராவது சாய்பாபா பக்தரிடம் வைத்துக் கொண்டால் நல்லாயிருக்கும்.
நொய்டா கொலைகாரன் ஒரு கோடி கொடுத்தால்
அவனுக்கும் நன்றி சொல்வோமா?
//நொய்டா கொலைகாரன் ஒரு கோடி கொடுத்தால்
அவனுக்கும் நன்றி சொல்வோமா?//
நொய்டா கொலைகாரன் கையும் களவுமாக இப்போது ஆதாரத்தோடு பிடிபடுவதற்கு முன்னால் கார்கில் ,சுனாமி நிதி கொடுத்து நன்றியும் வாங்கியிருக்க மாட்டார் என்று உறுதியாக உங்களுக்கு தெரியுமா?
//இது என்ன நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த சம்பாதித்த சொத்தா?. முறையாக தனிக்கை செய்யப்பட்ட சொத்தா?. ஏமாற்றி சம்பாதித்ததுதானே!?//
சிநேகிதன்,
மறுபடியும் சொல்லுறேன் .இதுபற்றி எனக்கு தெரியாது.அவர் கிட்ட ஏமாந்தவங்கள்ல நீங்க ஒரு ஆளா? அப்படீண்ணா கால்கரி சிவா மாதிரி அவரை உலக மகா உத்தமர் என்று சொல்பவர்களிடம் சென்று விளக்கம் கேளுங்களேன்.
அன்பு 'ஜோ',
சொல்ல வந்த கருத்தை சிறப்பாக சொல்வதோடு நிற்காமல், திசை திருப்ப வரும் பின்னூட்டங்களையும் பொறுப்பாகக் கவனித்து, தகுந்த மறுமொழி இட்டு வரும் கலையை உங்களின் இப்பதிவில் கண்டு மகிழ்கிறேன்.
சில தகவல்கள்.
1.பாபா மற்றவர் இல்லங்களுக்குச் சென்று சந்திப்பது பாமரன் முதல் பிரதமர் வரை நிகழ்ந்திருக்கிறது.
எனவே இதில் நான் ஒன்றும் குறை காணவில்லை.
2. நடந்தது அரசு சார்பில் எடுக்கப்பட்ட அதிகாரபூர்வமான விழா அல்ல.
சென்னை சிவிடன் சங்கம் என்ற ஒரு பொதுநல அமைப்பு, அரசின் ஆதரவோடு எடுத்த ஒரு நிகழ்ச்சி.
மறுக்காமல், மனிதாபிமானத்தோடும், தமிழனின் நன்றியுணர்வைக்காட்டும் வகையிலும், தனது 40 வருட 'சென்னைக்கு குடிநீர்' கனவு நனவானதைப் போற்றும் வகையிலும் இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் பாராட்டுக்குரியவரே!
நன்றி.
//அவர் கிட்ட ஏமாந்தவங்கள்ல நீங்க ஒரு ஆளா? //
நல்ல கேள்வி.
//ஆனால் சாய்பாபா பல காலமாக சர்ச்சைக்குள்ளான மனிதர் தான். சிலர் அவரை நல்லவர் என்கிறார்கள், சிலர் அவர் ஒரு போலி என்று ஆதாரத்துடன் கூறுகின்றனர். இப்படி சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருப்பவரிடம் ஏன் உதவி வாங்க வேண்டும்.
அந்த அளவிற்கு அரசால் தீர்க்கமுடியாத பிரச்சனையா இது. மக்களுக்கு அத்தியாவாசியமான இந்த தேவைக்காக அனாவாசிய தேவையான இலவச தொலைக்காட்சி திட்டத்தை சற்று ஒத்தி வைக்கலாமே என்பது தான் என்போன்றோரின் ஆதங்கம்.
//
சிநேகிதன்,
இது உண்மையிலேயே பரிசீலிக்கப் படவேண்டிய கருத்து.
ஆனால் தானாக வரும் உதவியை ,அதுவும் கலைஞர் ,அதுவும் ஒரு இந்து சாமியாரிடம் மறுத்திருந்தால் கலைஞரை இப்போது குறை சொல்லும் ,கலைஞர் என்ன செய்தாலும் குறை சொல்லும் ஒரு கூட்டத்தினர் (நீங்கள் இல்லாமல் இருக்கலாம்) என்ன சொல்லியிருப்பார்கள் .அவர்களின் இரட்டை நிலையை விளக்குவது தான் இந்த பதிவின் நோக்கம்.
ஜோ அய்யா,
கருணாநிதி அய்யா எது செய்தாலும்(அயோக்யத்தனம் உட்பட),ஜால்ரா போட்டு சப்பைக் கட்டு கட்டும் கூட்டத்தில் நீங்க ஒரு முக்கியமானவர் என்பதை,3500 கோடி,200 கோடி குடுத்தவருக்கு,பூஜை செய்து கருப்பு சட்டை கும்பலை கேவலப்படுத்தியதையும் பொது புத்தியா சிலாகித்து எழுதிட்டீங்க.இந்த 200 கோடியை,3500 கோடிக்கு ஏன் கொடுக்க மனம் வரவில்லை என்பதை நைஸா அமுக்கிட்டீங்க.தொடரட்டும் உங்கள் ஜால்ரா தொண்டு.
பாலா
//ஆனால் கருனாநிதி இந்த உதவியை பெறாமலேயே இந்த திட்டத்தை செய்திருந்தால் அவர் பாராட்டுக்குறியவர் ஆவார்.//
சிநேகிதன்,
உங்களின் இந்த கருத்தை நான் மதிக்கிறேன் .ஆனால் நீங்கள் சொல்லுவது போல் கலைஞர் இந்த நிதியுதவியை மறுத்திருந்தால் ,அதையே காரணமாக வைத்து அவரை 'இந்து விரோதி' என்று கும்மியடிக்க காத்திருக்கும் கூட்டத்தை நீங்கள் புரிந்து கொண்டால் அதுவே இப்பதிவின் வெற்றி.
அன்பு 'ஜோ'
இன்னுமொரு விளக்கம் தேவைப்படுகிறது.
இது ஏதோ இன்று நிகழ்ந்து, முதலமைச்சரிடம் பாபா 200 கோடி செக் வழங்கியது போன்ற ஒரு மாயை நிலவுகிறது.
ஆனால், இது 2002-ல் அறிவிக்கப்பட்டு, 2004-ல் தொடங்கி, 2005-ல் முடிவடைந்து தண்ணீர் ஏற்கெனவே வர ஆரம்பித்துவிட்ட ஒரு நிகழ்வு.
10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் தமிழகத்திற்கு வரும் பாபாவைப் பாராட்டி நன்றி தெரிவிக்க எண்ணிய ஒரு சமூக அமைப்பு நடத்திய விழாவில், சம்பந்தப்பட்ட நான்கு முதலமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.[ஆந்திரா முதலமைச்சர் கடைசி நேரத்தில் வர முடியாமல் போயிற்று]
இது அனைவருக்கும் தெரிய வேண்டும் என விரும்புகிறேன்.
இது குறித்து விரிவாக 3 பதிவுகள் எனது 'ஆத்திகம்' blog-ல் எழுதியும் இருக்கிறேன்.
நன்றி.
//10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் தமிழகத்திற்கு வரும் பாபாவைப் பாராட்டி நன்றி தெரிவிக்க எண்ணிய ஒரு சமூக அமைப்பு நடத்திய விழாவில், சம்பந்தப்பட்ட நான்கு முதலமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.//
SK ஐயா!
தகவலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி .ஆக ஒரு சமூக அமைப்பு ஏற்பாடு செய்த விழாவில் தமிழக அரசின் நன்றியை தெரிவிக்க கலைஞர் கலந்து கொண்டுள்ளார்.
//[ஆந்திரா முதலமைச்சர் கடைசி நேரத்தில் வர முடியாமல் போயிற்று]//
இதுவே கலைஞர் வரமுடியாமல் போயிருந்தால் என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே!
பாலா ஐயா!
//கருணாநிதி அய்யா எது செய்தாலும்(அயோக்யத்தனம் உட்பட),ஜால்ரா போட்டு சப்பைக் கட்டு கட்டும் கூட்டத்தில் நீங்க ஒரு முக்கியமானவர் //
உங்கள் அரிய கண்டுபிடிப்புக்கு நன்றி!
//பூஜை செய்து கருப்பு சட்டை கும்பலை கேவலப்படுத்தியதையும்//
அடடா! கருப்பு சட்டை காரங்க மேல என்ன ஒரு கரிசனம் .உங்களுக்கு வந்த கேவலம் மாதிரி துடிக்குறீங்க .விடுங்க சார் ! அவங்க பாத்துகுவாங்க ..உங்க உள்குத்தெல்லாம் தெளிவா புரிஞ்சவ்வங்க அவங்க.
//இதுவே கலைஞர் வரமுடியாமல் போயிருந்தால் என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே!//
அதற்குதான் முந்தைய பின்னூட்டத்திலேயே பாராட்டி சொல்லி இருக்கிறேனே!
//மறுக்காமல், மனிதாபிமானத்தோடும், தமிழனின் நன்றியுணர்வைக்காட்டும் வகையிலும், தனது 40 வருட 'சென்னைக்கு குடிநீர்' கனவு நனவானதைப் போற்றும் வகையிலும் இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் பாராட்டுக்குரியவரே!//
:))
சிநேகிதன்,
>> அனால் இந்த திட்டம் , உலகவங்கியிடம் கடன் வாங்கி பின் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் கட்டுப்படுவது போல ஆகாமல் இருந்தால் சரி. >>
முக்கியமான கவனத்தில் இருத்த வேண்டிய விடயம். கலைஞருக்கு கண்டிப்பாக அந்தக் கவனம் இருக்கும் என்பது தெரிந்த விடயம்தான்.
மற்றபடி இதைச் சாக்காக வைத்து தமிழ்நாட்டில் 'நாயக்கர்' அரசியலை முன்னிறுத்த மனதுக்குள் கள்ளத்தனமாக "அடடா! நல்ல வாய்ப்பு இது! ஒக சாங்கு(Song) வேஸ்கோ ரா" என்று மனப்பால் குடிப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். :)
SK ஐயா!
நீங்கள் பாராட்டியதை மறக்கவில்லை .உங்கள் வரிகளை மேற்கோள் காட்டி மற்றவர்க்கு மீண்டுமொருமுறை விளங்கச் செய்ய அவ்வாறு குறிப்பிட்டேன். நன்றி!
சாய் பாபாவும் கலைஞரும் மக்கள் நலனை முன்வைத்து(சுய எதிர்பார்ப்புகள் அல்லாமல்) இதை செய்திருப்பார்கள் எனும் நம்பிக்கையில் பாராட்டப்படவேண்டிய விஷயமே.
எனக்கு தயாளு அம்மாள் காலில் விழுவதும் துரைமுருகன் மந்திரசக்தியால் மோதிரம்பெற்றதை பெரிதாய் சொல்வதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.
பாபாவின் காலில் யாரும் விழக்கூடாதென்றோ அவர் மோசமானவர் என்றோ நான் சொல்ல வரவில்லை. கட்சித் தொண்டன் குங்குமம் வைக்கக்கூடாதென்பவர்கள் இதைமட்டும் அனுமதிப்பானேன்?
நெருடலான விஷயம்தான்.
//பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார் .பலர் அவரை போலி என்கின்றனர் .எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர் .//
ம்ம்...எனக்கும் பர்சனலாக பாபாவை பிடிக்காது. ஆனாலும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. அதனால், இந்த விஷயத்தில் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கலைஞரை சந்தித்த விஷயத்தில் பாபா சற்றே இறங்கி வந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். முதலில் அவராக கலைஞரை சந்தித்தது போன்றவை. இங்கே கலைஞரில் gesture-ம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. இரு வேறு துருவங்கள் சந்தித்த பொழுது எந்த பிசிறுக்கும் இடம் தராமல் இருவரும் பெருந்தன்மையுடன் நடந்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால், இடையில் ஆத்திகர்களும் நாத்திகர்களும் பிரச்சினையையும், கேலியையும் வெளிப்படுத்துவது வேதனையான ஒன்று. (ஆனால், அதையும் கலைஞர் சாதுர்யமாகவே கையாண்டிருக்கிறார், வழக்கம் போல).
//ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை ,ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.//
அட! ஜல்லியாக இருக்கே!!
//அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர் .//
'கீதையின் மறுபக்கம்' தானே :)
//"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?"//
இது தான் கலைஞரின் ஸ்டைல்.
//உலக அளவில் பாபாவை தெய்வம் என்று நினைப்பவர்கள் பலர். போலி என்று சொல்பவர்கள் சிலர். இரண்டுமே சொல்லாமல் இருப்பவர்களே பெரும்பாலானோர்.//
ஆம். குமரன் சொல்வதே சரி என்று நினைக்கிறேன்.
//அந்த 200 கோடியில் 100 கோடி கருனாநிதியின் அடிப்பொடிகளுக்கு போய்விடும்.//
இல்லை. இது பாபாவில் ட்ரஸ்டே நேரடியாக செய்தது என்று நினைக்கிறேன். அதனால், அவர்களுக்கு வருத்தம் ஏற்படும் என்பதென்னவோ உண்மை தான்.
//அவரிடம் ஏமாற நான் என்ன உங்களைப்போல பகுத்தறிவற்றவனா?
//
நல்ல பதில்
//கலைஞர் இந்த நிதியுதவியை மறுத்திருந்தால் ,அதையே காரணமாக வைத்து அவரை 'இந்து விரோதி' என்று கும்மியடிக்க காத்திருக்கும் கூட்டத்தை நீங்கள் புரிந்து கொண்டால் அதுவே இப்பதிவின் வெற்றி//
ஜோ அய்யா,
திரும்பவும் பசப்பல்,சப்பைக்கட்டு.நிதியை மறுத்திருக்க வேண்டியதில்லை.வீட்டிற்கு கூப்பிட்டு,மனைவியை காலில் விழச் செய்திருக்க வேண்டுமா?மோதிரம் சமாசாரம் எல்லாம் பண்ணியிருக்க வேண்டுமா?ஜால்ரா மந்திரிகள் கூட இருந்திருக்க வேண்டுமா? பகுத்தறிவு பகலவன் இதை செய்திருக்க வேண்டுமா?
சாய்பாபா பலர் போற்றும் ஆன்மீகவாதி என்பதில் சந்தேகமில்லை.நல்லவர்கள் செய்யும் காரியத்தை கருப்பு சட்டை பகுத்தறிவு செய்வதில்லையே.இப்ப என்ன வந்தது மஞ்ச துண்டுக்கு?
பாலா
//எனக்கு தயாளு அம்மாள் காலில் விழுவதும் துரைமுருகன் மந்திரசக்தியால் மோதிரம்பெற்றதை பெரிதாய் சொல்வதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.//
தயாளு அம்மாள் ஆசி பெற்றது பற்றி நான் சொல்ல ஏதுமில்லை .அவர் எந்த அமைப்பிலும் இல்லாத ஒரு தனி நபர் .தன் மனைவி என்பதால் தன் அமைப்பின் கொள்கைகளை கலைஞர் அவரிடம் திணிக்காமல் அவர் தனிபட்ட விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவில்லை என்பது ஏற்கத் தக்கதே.
ஆனால் துரைமுருகன் விடயத்தை என்னாலும் ஏற்க முடியவில்லை. பாபா அறியும் விதத்தில் வெளிப்படையாக கண்டித்து நன்றி சொல்ல வேண்டியவரை மனம் நோகச் செய்யாமல் ,தனிப்பட்ட முறையில் கலைஞர் துரை முருகனை கண்டித்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.
//கட்சித் தொண்டன் குங்குமம் வைக்கக்கூடாதென்பவர்கள் இதைமட்டும் அனுமதிப்பானேன்?//
கட்சி என்பது ஒரு அமைப்பு .அந்த அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்படாதவரை அந்த அமைப்பின் தலைவர் கண்டிக்கிறார் .அதை கண்டிக்கப்பட்டவரும் ஏற்றுக் கொள்கிறார் .இதில் மற்றவருக்கென்ன பிரச்சனை?
//கட்சி என்பது ஒரு அமைப்பு .அந்த அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்படாதவரை அந்த அமைப்பின் தலைவர் கண்டிக்கிறார் .அதை கண்டிக்கப்பட்டவரும் ஏற்றுக் கொள்கிறார் .இதில் மற்றவருக்கென்ன பிரச்சனை?//
பேரனை என்ன செய்தார் என்று சொல்லவில்லையே?
பாலா ஐயா!
//நல்லவர்கள் செய்யும் காரியத்தை கருப்பு சட்டை பகுத்தறிவு செய்வதில்லையே.இப்ப என்ன வந்தது மஞ்ச துண்டுக்கு?//
அதாவது உங்கள் பார்வையில் கலைஞர் இப்போது நல்லவராக மாறி விட்டார் .இதற்கு ஏன் இந்த அதிர்ச்சி ? மகிழ்ச்சியல்லவா பட வேண்டும் நீங்கள்!
அண்ணா! பாலா அண்ணா! உங்க பருப்பு நம்ம கிட்ட வேகாது அண்ணா!உங்கள் வழக்கமான டகால்டி வேலைக்கு வேறு இடம் பாருங்களேன்.
//பேரனை என்ன செய்தார் என்று சொல்லவில்லையே?//
பேரனை கண்டித்திருக்க வேண்டும் .கண்டிக்கவில்லையென்றால் உங்கள் சார்பாக நான் கலைஞரை கண்டிக்கிறேன் .போதுமா ஐயா!
//கண்டலேறு அணையை பலப்படுத்தியதும், கால்வாயைத் திறம்பட தங்கள் செலவில் [பக்தர்களின் நன்கொடையிலிருந்து] கட்டிக் கொடுத்ததுடன் சாயி ட்ரஸ்டின் பணி முடிந்து போனது.
அவர்களுக்கு எந்த பாத்தியதையும் இல்லை; அவர்கள் கோரவும் இல்லை.
இனிமேல் இதை மராமத்து செய்ய வேண்டியதெல்லாம், தமிழக, ஆந்திர அரசுகளே!
ஒப்புக்கொண்ட தண்ணிரைக் கொடுக்க வேண்டியது மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆன்திர அரசுகளின் கடமை.
அதனை உரிய முறையில் தேக்கி, சென்னை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை!
இதை இவர்கள் முறைப்படி செய்ய வேண்டுவோம்! //
இந்தப் பின்னூட்டத்தை இட்டது நான் தான்!
புது ப்ளாக்கருக்கு மாறியதில் ஏற்பட்ட சிறு குழப்பம்!
தயவு செய்து, இதனைப் பிரசுரித்து, முன்னதை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!
தொல்லைக்கு வருந்துகிறேன்.
நன்றி.
மாசிலா,பொட்டிக்கடை,ஆதிரை,சிறில் அலெக்ஸ் ,சீனு..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
SK ஐயா!
அவ்வாறே செய்திருக்கிறேன் .மேல் விபரங்களுக்கும் மிக்க நன்றி.
நல்ல பதிவு.
பெரியாரைச் சந்திக்கா பாபா வந்திருந்தால் கலஞரைப் போல் பெரியாரும் சந்தித்திருப்பார்.
அப்புறம் துரை முருகன் தயநிதி மாறன் பற்றி பேசுவதெல்லாம் வீண்.பாவம் பாபா தேடிவந்து கலஞரைச் சந்தித்த குதுகலத்தில் சும்மா துள்ளிக் குதிக்கிறார்கள்.
Babble,சோமி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல கேள்வி,பதிவு
நீங்கள் அனுமானிக்கும் இத்தனை நேர்மை இந்த விஷயத்தில் கருணாநிதியிடம் நிதர்சனத்தில் இருக்கிறதா?
எனது பார்வையில் இல்லை :-))
உங்களின் பதிவு அருமை மற்றும் என் வலைதளத்திற்கு வருக...வருக என அன்போட அழைக்கின்றேன் நன்றி.
அட, அருமையான பதிவா இருக்கே!
அரசியல் வாடை அடிச்சதால வராம இருந்துட்டேன்!
மிக அருமையான பாய்ண்ட்களா சொல்லி அசத்திட்டிங்க?
CM is 100 right. BaBa is 200% Right.
Your VIEW is 1000% Right.
SINEHITHAN is konjam LOOSU.
Forget him.
Black Cat
Move to new blog ..testing
joe!
nAnthAn 'neo' ezuthukiREn. intha pathivil nAn thanthiruntha 2 pinnUttangaLum "Ananymous" enRu ippOthu kAttukiRathE!
new blogger template en peyarai ozithu vittathA?! :(
please see this link to update your blog's template :
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html
மில்டா இந்த கன்டலேரு திட்டம் DMK யோட முன்னாடி (1986- 2001) ஆட்சியில் ஒலுஙகா பண்ணியிருந்தாழ் இப்ப சாய் பாபா திரும்ப பண்ணி இருக்க வேன்டியது இல்ல தெரியுமா ,DMK (1986- 2001) ஒலுஙகா பண்ணாத திட்டம் இப்ப சாய் பாபா பண்ணியிருக்காரு.
ஆக DMK பண்ணுன குப்பை வேலையா இவரு நல்லா சுத்தம் பண்ணிய்ருக்காரு.அதாவது கலைஙர் கருனானிதிக்கு சாய் பாபா ---- கலுவி விட்டுருக்காரு.
கலைஙர் கருனானிதி பன்னுரது எல்லாம் இப்போ ரொம்ப ஓவர் இலவச காஸ் அடுப்பு எல்லாம் தேவையா எப்பொ காலாவதி ஆக போரர்னு தெரியலை
இடை தேர்தல் ஒரு அப்பட்ட நாடகமா நடத்திட்டாரு இந்த இடை தேர்தல் ஒரு ஜனனாயக படுகொலை
நண்பர் நியோ,
வேறுவழியின்றி புது பிளாகருக்கு மாற்றப்போய் ஏகப்பட்ட குளறு படிகள் .நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவில் உள்ள வழிமுறைகளை செய்தும் வேறு சில பிரச்சனைகள் வந்ததால் அந்த முயற்சியை இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன் .பொறுத்தருளுக!
சபா,
வருக! தமிழில் மறுமொழியிடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
கலைஞ்ருக்கு வக்காலத்து வாங்குவதற்கோ ,அல்லது குடிநீர் பிரச்ச்னையைப் பற்றி அலசுவதற்கோ இந்த பதிவு அல்ல .கலைஞர் பாபா சந்திப்பை பயன்படுத்தி கலைஞர் என்ன செய்தாலும் குறை சொல்லும் கூறுவோருக்காக இந்த பதிவு.
naNbar Joe!
ungaLin inthap pathivu ivvAra "poongA" ithazhil idam peRRuLLathu!
vAzthukkaLai magizhchiyudan therivithukkoLkiREn!
-neo
நண்பர் neo,
மிக்க நன்றி!
வணக்கத்துடன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Post a Comment