
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன்.
இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை .ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ,ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை .இன்று ஒரு தயாரிப்பாளராக ,இயக்குநராக ,கதை வசன கர்த்தாவாக ,பாடலாசிரியராக ,பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன் ,தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல ,வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.
நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!
80 comments:
நெசமாவா சொல்லுரீங்க?
----
கமலை பற்றிய சூடானவாதம் ஒன்றை லிங்கில் இணைதுள்ளேன்.
பார்க்கவும்.
இது உண்மையாக இருக்க விரும்பிகிறேன்..அதுவும் விசாரிச்சு சொல்லுங்க...
காலங்களை கடந்து மக்கள் மனதில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நடிகர் திலகத்தை ஒரு முத்த நடிகனோடு ஒப்பிடுவது சிறுமை. சாக்ரடீஸ் தொடங்கி சிதம்பரனார் வரை அவர்களது பிம்பமாகவே மக்கள் மனதில் நிலைத்துவிட்டவர் நடிகர் திலகம். இரண்டாமவரோ, நினைத்தால் நினைவுக்கு வருவது, ஏனோ முத்தக்காட்சிதான். வசனம், வீரம், நெகிழ்ச்சி, குழைவு, கதாபாத்திர பொருத்தம் என நடிப்பின் எந்த அங்கமானாலும் பின்னி பினைந்தவர் எங்கள் நடிகர்திலகம். ஆனால் முத்தக்காட்சி என்றவுடன் இரண்டாமவர் தான். அந்த காலத்திலே நடிப்பில் புது பரிமாணத்தை காட்டியது நடிகர்திலகத்தின் வரவு. கடைசிவரை பெரியாராக நடிக்கமுடியாமல் ஆற்றாமையுடன் மறைந்த நிலவு நடிகர் திலகம். "மரணம் நடிப்பின் கடவுளுக்குமா ?" என்ற நக்கீரனின் தலையங்கம் இன்னும் என் முன் நிழலாடுகிறது. எத்துணை திறமைகளை பெற்றிருந்தாலும் தன் நிலையுணர்ந்து நடிப்பிலே கொடி நாட்டியவர் நடிகர்திலகம், இவரோ தடுமாறுகிறார். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்,இருவருக்கும்.
அனானி,
நடிகர் திலகத்தை நான் யாருடனும் ஒப்பிடவில்லை .ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளவர் நடிகர் திலகம் .
மற்றபடி கமலை வெறும் 'முத்த நடிகன்' என்று குறுக்குவத்தில் எனக்கு உடன்பாடில்லை (முத்தம் கொடுப்பது ஒன்றும் அப்படி ஆபாசம் இல்லை என்பது வேறு விடயம்).எனினும் உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒருவருக்கு கிடைத்த பெருமை மற்றவருக்கும் கிடைத்தால் முதலில் கிடைத்தவருக்கு இழுக்கு என்று ஒப்பிட்டுப் பார்த்து சிலர் கமல்ஹாசனின் நடிப்பு திறமையை குறைவாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கமலும் மிகச் சிறந்த நடிகர் தான்.
நடிகர் திலகத்தின் வாரிசாக கமல்ஹாசன் திகழ என் வாழ்த்துக்கள். அனானிக்கு முத்த நடிகன் என்றதற்கு என் கண்டனம். ஆனாலும் நடிப்பு, இயக்கம் என தடுமாறுகிறாரோ என்று சந்தேகம்? இந்த செய்தியை வலைக்கு தந்தமைக்காக ஜோவிற்கு வாழ்த்துக்கள்.
//ஒருவருக்கு கிடைத்த பெருமை மற்றவருக்கும் கிடைத்தால் முதலில் கிடைத்தவருக்கு இழுக்கு என்று ஒப்பிட்டுப் பார்த்து சிலர் கமல்ஹாசனின் நடிப்பு திறமையை குறைவாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.//
கோவியாரே! சரியாக சொன்னீர்கள் .என்னைப் பொறுத்தவரை நான் கமலை விட சிவாஜிக்கு தான் ரசிகன் .நான் அப்படி நினைக்கவில்லை.
நல்ல சேதி சொன்னீர்கள் ஜோ. நன்றி....
கலைஞானிக்கு தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம். எப்போது தொடங்கலாம்?
கேள்விப்பட்ட விஷயம் உறுதியானால் "இந்தியன்/தமிழன்" என்ற நிலையில் சந்தோஷமே.
அனானி சொன்ன கருத்தில் இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன்.நடிப்பு என்பது ஒரு கலை அதை சினிமா என்ற மீடியா மூலமாக காட்டிய போது சிவாஜி பிரம்மாண்டமாக தெரிந்தார்.சிவாஜிக்கு முன்பு நடிகரே இல்லையா?ஏன் அவர்கள் வெளியில் தெரியவில்லை?அவர்கள் வட்டம் சிறிதாக இருந்ததால்.
அதே போல் "சிப்பிக்குள் முத்து & சலங்கை ஒலி" போன்ற படங்கள் சிவாஜி நடித்திருந்தால் இப்போது ஓடியதைவிட குறைவான நாட்களே ஓடியிருக்கும்.அவரவர் நேரம்,இடம் & காலம் எல்லாம் சேர்ந்து தான் ஒருவனை தூக்குகிறது / இறக்குகிறது.
கமலுக்கே சிவாஜி அப்பா மாதிரி என்கிறபோது தந்தை பெற்ற பரிசை மகன் மாதிரி இருந்த கமல் பெறுவதில் எந்த தவறும் இல்லை.அதுவும் அவரின் நடிப்புத்திறமைக்காக.கமலில் நடிப்பு அவரிடம் இருந்து வேறுபட்டது.
அன்னிக்கு சிவாஜிக்கு என்றால் இன்னிக்கு கமலுக்கு,அப்படித்தான் பார்க்கவேண்டும்.நாளை யாருக்கோ?
அதற்காக முத்த நடிகர் என்ற பட்டம் எல்லாம் அவரவர் "கண்ணோட்டத்தை" பொருத்தது.
//கலைஞானிக்கு தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்//
லக்கி,
ஹி..ஹி..என்னையும் கலாய்க்க ஆரம்பிச்சுடீங்களா? நான் எப்பய்யா உம்ம கிட்ட சொன்னேன்? வேறு யாராவது சொல்லியிருப்பார்கள்.
ஷெவாலியே சொல்லுக்கான பின்புலன் எல்லாம் நான் கூறினேனே. அவற்றையும் பதிவில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சுவாரசியமாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/*செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!*/
உண்மை!
நீங்கள் கேள்விப்பட்ட சேதி உண்மையாகவே இருக்க விரும்பும்,
ஒரு ரஜினி ரசிகன் :)
Chevalier & Chevalie இரண்டும் ஒன்றா என டோண்டு சாரிடம் கேட்ட போது அவர் கொடுத்த விளக்கம்..
இரண்டும் ஒன்றுதான். ஸ்பெல்லிங் chevalier, ஆனால் உச்சரிப்பு ஷெவாலியே. இது பிரெஞ்சு உச்சரிப்பு விதிகளின்படி.
ஷெவாலியே என்றால் ஆங்கிலதில் சர் பட்டம் கொடுப்பதுபோல. Middle Ages-l இங்கிலாந்து அரசன் ஆர்தரது சபையில் Knight's roundtable என்று இருந்திருக்கிறது. அதன் உறுப்பினர்கள் chevalier or knight ஆவார்கள்.
இன்னொரு சரித்திர உண்மை, ஷெவாலியேதான் ஒரிஜினல் சொல், ஏனெனில் அரசர் ஆர்தர் காலத்தில் அரசவை மொழி பிரெஞ்சே. Knight அதன் மொழிபெயர்ப்பே.
இந்தச் சேதி உண்மையாக இருக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகின்றேன், காரணம் வெறும் செல்வாக்கால் வரும் ப்ட்டங்களை விடத் தன் உழைப்பால் பட்டங்களைத் தக்கவைப்பவர் கலைஞானி கமல்
//இது உண்மையாக இருக்க விரும்பிகிறேன்//
நானும் விரும்புகிறேன்.
அன்றைக்கு சிவாஜி, இன்றைக்கு கமல் என்ற கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை... என்றைக்கும் சிவாஜிதான்( ரஜினி இல்லை ஹிஹிஹி)...
மன்னனாக வந்தால் வீரம் கொப்பளிக்கும் முகம்,
விடுதலை வீரராக வந்தால் வேட்கை நிறைந்த முகம்,
காதலனாக வந்தால் காதல் தழும்பும் முகம்,
தந்தையாக வந்தால் பாசம் நிறைந்த முகம்,
காவலனாக வந்தால் கடமை தெறிக்கும் முகம்,
கடமை வீரனாக வந்தால் அவன் சிம்மக்குரல் ரகம்,
அத்தனையிலும் வெற்றி முகம்,
எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை மாறாக வாழ்ந்து மட்டுமே இருக்கிறான்.
கமல் நடித்த கதாபாத்திரங்களை பிற நடிகர்களோடு ஒப்பிட்டு கூடுதல் குறைவுகள் மதிப்பிடலாம்.
யாராலும் பொருத்திப்பார்க்க முடியாதவர் நடிகர்திலகம்.
இன்னொரு கெளரவம், வீரப்பதக்கம் எங்காவது காட்டுங்கள் பார்ப்போம்.
ஆம் அவன் நடிகனில்லை மாபெரும் சகாப்த்தம்.
அனானி,
என்றைக்கும் சிவாஜி தான் நடிகர் திலகம் .அதில் மாற்றுக் கருத்து இல்லை.நடிகர் திலகம் பற்றி என்னுடைய பழைய பதிவை பார்க்கவும்
http://cdjm.blogspot.com/2005/09/blog-post.html
//மற்றபடி கமலை வெறும் 'முத்த நடிகன்' என்று குறுக்குவத்தில் எனக்கு உடன்பாடில்லை //
உண்மை!
மாவட்டத்துக்காரன் என்பதில் எனக்கும் இது மகிழ்ச்சியான செய்தியே! தகவலுக்கு நன்றி ஜோ!
கமலுக்கு செவாலியே... !
கேக்கவே சந்தோஷமா இருக்கு...
அப்படியே நடந்தாலும்... அது செவாலியே விருதுக்கு (ம்) பெருமைதானே... !
என்ன சொல்றீங்க... ?
அருமையான தகவல்...!!!!
// இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.//
மற்றொறு திறமைமிக்க நடிகராக நாசரை கூறலாம். அனைத்து வித கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடிய கலைஞர்களில் அவர் முக்கியமானவர். சமீபத்தில் "எம்-மகன்" படம் பார்த்தேன். சிவாஜி கணேசனையும் மிஞ்சி இருந்தார். அந்த வேடத்தில் நாசரை தவிர வேறு எந்த நடிகறையும் நினைத்து கூட பார்க்க முடியாத அலவுக்கு அவ்வளவு ஒன்றி செயல்பட்டிருந்தார்.
நாசரும் ஒரு தலைசிறந்த நடிகர். கலை, திரை உலகம் இவரைப்போன்றவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுத்து
திறமையை வெளிக்கொணர வேண்டும். சிறப்பிக்கவும் வேண்டும்.
மாசிலா,
நாசரும் என் மனம் கவர்ந்த நடிகர் .'எம் மகந் -ல் சிறப்பாக நடித்திருந்தார் .ஆனால் நடிகர் திலகத்தை மிஞ்சி விட்டார் என்பது கொஞ்சம் ..இல்லை..அதிகமாகவே அதிகப்படி.
//நாசரும் ஒரு தலைசிறந்த நடிகர். கலை, திரை உலகம் இவரைப்போன்றவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுத்து
திறமையை வெளிக்கொணர வேண்டும். //
இதை தொடர்ந்து செய்தவர் கமல் தான்.
பினாத்தல் சுரேஷ் அனுப்பிய பின்னூட்டம்...
உங்கள் காதுக்கு வந்த வதந்தி பலிக்க வேண்டுகிறேன்.
காது புளித்தே போய்விட்டது - கமலஹாசனை முத்த நடிகன் போன்ற வசைகளைக் கேட்டு. நிஜமாகவே புரியாமல்தான் பேசுகிறார்களா, மனோகராவோடு படங்கள் பார்ப்பதை நிப்பாட்டிவிட்டு பேசுகிறார்களா என்று தெரியவில்லை. போற்றிப்பாடடி பெண்ணே என்று ஒரு பதிவு போட்டேன், அதற்கு வந்த பின்னூட்டங்களை முழுமையாகப் படித்தாலே புரியும், எவ்வளவு திறமையும், தொழிலார்வமும் கொண்ட ஒரு கலைஞனைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று. (பதிவில் திரைக்கதை புரிந்துகொள்ளப்பட்ட விதத்தை மட்டும்தான் குறை கூறினேனே ஒழிய, கமல் மேல் எனக்கும் பெரிய மதிப்பு உண்டு).
சிவாஜி அவர் காலத்தில், அவருக்குக் கிடைத்த பாத்திரங்களில் எவ்வளவு முடியுமோ அதற்கு மேல் சாதித்துக்காட்டினார், அதையே கமல் இன்று செய்கிறார். சிவாஜிக்கும் சந்திப்பு, சங்கிலி, லாரி டிரைவர் ராஜாக்கண்ணுகள் உண்டு, கமலுக்கும் சங்கர்லால், குரு போன்ற குப்பைகள் உண்டு. ஆனால் நாயகனுக்குப் பின் கமல் தன் பெரும்பான்மைப் படங்களில் நடிப்புக்கும் மேலே பொறுப்பேற்றுக்கொள்வதால், எனக்கு கமல் ஒரு படி மேலே என்றுதான் தோன்றுகிறது.
சுரேஷ்,
உங்களோடு நிறைய உடன் படுகிறேன்.
என்னைப்பொறுத்தவரை ஒரு நடிகராக நடிகர் திலகத்தை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.ஆனால் கமல் வெறும் நடிகரல்ல .சினிமாவின் சகலதுறைகளையும் தன்வயப்படுத்திக் கொண்ட முழுமையான சினிமா கலைஞன் .அந்த வகையில் கமலுக்கு இணையாக யாருமில்லை.
நடிகர் திலகத்திற்கு இணை அவர்தான். அவர் மிகப் பெரிய விருதுகளுக்குப் பொருத்தமானவர். நல்ல விருதுகள் அவரைத் தேடி வந்தன. அரசியல் விருதுகள் காலந்தாழ்ந்து வந்த விருந்துகள்.
ஷெவாலியே விருது கமலுக்கு வழங்கப்படுவதும் சரியே. கமலுக்குக் குடுப்பதால் நடிகர் திலகத்திற்குக் குறைவு வந்திடாது. திரையுலகில் நடிகர் திலகத்திற்குப் பிறகு பன்முனை நடிப்பைக் காட்டியவர் அவர். கவனம் அங்கிங்கு சிதறியிருந்தாலும் விருதுக்கு அவர் பொருப்பானவரே. அவருக்குக் கொடுப்பதும் மகிழ்ச்சியே. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் என்றே விரும்புகிறேன்.
நடக்குமென்றே நம்புவோம் ஜோ.
கமல் நடிப்பில் யாருக்கும் குறைந்தவர் இல்லை...
அவருக்கு தருவது எந்த விதத்திலும் நடிகர் திலகத்தை கலங்கம் செய்துவிடாது.
இந்தச் சேதி உண்மையாக இருக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகின்றேன். தனி மனிதரால் முதுகு சொரிந்துவிடும் 'கலைஞானி' என்ற பட்டத்தையும், தனக்குத்தானே சொரிந்துகொள்ளும் 'உலகநாயகன்' போன்ற பட்டங்களை வெறுத்தாலும் , recognized அமைப்புகள் வழங்கும் , 'தனி ஒருவனுக்கு மட்டும் சொந்தமில்லாத' பத்மஷிரி போன்ற பட்டத்தை வாங்கிய கமல், செவாலியே வாங்கவும் ஆசைப்படுகிறேன்..
//என்னைப்பொறுத்தவரை ஒரு நடிகராக நடிகர் திலகத்தை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.ஆனால் கமல் வெறும் நடிகரல்ல .சினிமாவின் சகலதுறைகளையும் தன்வயப்படுத்திக் கொண்ட முழுமையான சினிமா கலைஞன் .அந்த வகையில் கமலுக்கு இணையாக யாருமில்லை.//
ஜோ,
வழக்கம்போல்வே இந்த முறையும் நீங்கள் சொன்னதற்கு ஒரு - "டிட்டோ"
//ஆனால் நாயகனுக்குப் பின் கமல் தன் பெரும்பான்மைப் படங்களில் நடிப்புக்கும் மேலே பொறுப்பேற்றுக்கொள்வதால், எனக்கு கமல் ஒரு படி மேலே என்றுதான் தோன்றுகிறது //
// சினிமாவின் சகலதுறைகளையும் தன்வயப்படுத்திக் கொண்ட முழுமையான சினிமா கலைஞன் .அந்த வகையில் கமலுக்கு இணையாக யாருமில்லை//
டிட்டோ, டிட்டோ
இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பதிவுக்கு நன்றி ஜோ
ஜோ
செய்தி உண்மையாகட்டும். முன்கூட்டிய வாழ்த்துகள்.
//இரண்டாமவரோ, நினைத்தால் நினைவுக்கு வருவது, ஏனோ முத்தக்காட்சிதான். //
ஏங்க அனானி. முத்தம் கொடுக்கறதுன்னா வாந்தி எடுக்கறமாதிரி அருவருப்பான விஷயமா? அடக் கடவுளே! ஒழுங்கா முத்தம் கொடுக்கவும் ஒரு திறமை வேணுங்க :)
கமல் பற்றி எனக்கு ஒரு மாற்று கருத்து இருக்கிறது, பிறகு வேறொரு பதிவில் எழுதுகிறேன்!
சிவாஜி நடிகன்;
கமல் கலைஞன்.
இருவருமே தங்களுக்குள்கூட ஒப்புநோக்கவேண்டிய தேவையற்ற ஆளுமைகள்.
இந்தப் பட்டத்துக்கு இப்பப் பெருமையா இருக்கும்.
கமலுக்கு வாழ்த்து(க்)கள்.
He deserves it and no doubt! But, Kamal's some what stereotypical mentally retarted charecters (Guna, Aalavandhaan) and his not-so-well-thought experiments (mumbai express, v.v) pulls his intellectual exposure down a bit. His messages, most of the times, are not clear for the intended audience, vis.a.vis TAMILs
//His messages, most of the times, are not clear //
ஆமாம்!
"கடவுள் சொல்றான், கமல் செய்யிறான்"
"அஞ்சுக்குள்ள நால வை ஆழம்பாத்துக் கால வை"
போன்ற அரிய கருத்துக்களைச் சொல்லியிருந்தால் தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பீர்கள்.
அதைக்கூடச் செய்தார் கமல்.
வசூல்ராஜாவில கல்லூரியில் அறை பார்க்கும்போது "அஞ்சும் அஞ்சும் பத்து. பத்தில மூணு போனா ஏழு" அப்பிடீன்னு மெசேஜ் சொன்னார். ஏன் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கலை?
ஒழுங்கா முத்தம் கொடுக்கத் தெரியாதவனையெல்லாம் பெசுசா தலையில தூக்கி வைச்சு ஆடுவீங்க, அந்த முத்தத்தைக் கலாபூர்வமா செய்யத் தெரிஞ்சதாலயே வயித்தெரிச்சலில புகையிறீங்க.
போங்கடா.... நீங்களும் உங்க கமல் விமர்சனமும்.
அன்பரே! ஒரு முறை என் நண்பன் வீட்டிலே, டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு சிவாஜி மீது அதுவரை பெரிய பற்றில்லை. அந்த படம் "கல்தூண்", கடைசியில் ஒரு வசனம், இறுதிக்காட்சி என நினைக்கிறேன்.
"நான் கல்தூண், இடிஞ்சி விழுந்தாலும் விழுவேனே தவிர, வளஞ்சி குடுக்க மாட்டேன்" என்ற வசனம்- அந்த படத்தின் கருவையும் கதாபாத்திரத்தையும் ஒரே வார்த்தையில் முழுமையடையச் செய்தார். என்னையும் அறியாமல் கல்தூணாய் என் மனதில் இறங்கிவிட்டார். நானோ, இன்று வரை கஷ்டப்பட்டு பொய் சொல்கிறேன், நான் எம்.ஜி.ஆர் ரசிகனென்று......
என்னதான் சிவாஜி,சிவாஜின்னு கூவினாலும், ஒரு நாயகன், ஒரு அன்பே சிவம், ஒரு மூன்றாம் பிறை, ஒரு குருதிபுனல், ஒரு வாழ்வே மாயம், ஒரு 16 வயதினிலே எங்காவது காட்டுங்கள் . சிவாஜியை எப்பவோ தூக்கி முழுங்கிட்டார் கமல்.
//என்னதான் சிவாஜி,சிவாஜின்னு கூவினாலும், ஒரு நாயகன், ஒரு அன்பே சிவம், ஒரு மூன்றாம் பிறை, ஒரு குருதிபுனல், ஒரு வாழ்வே மாயம், ஒரு 16 வயதினிலே எங்காவது காட்டுங்கள் . சிவாஜியை எப்பவோ தூக்கி முழுங்கிட்டார் கமல்.//
ஒரு நவராத்திரி ,ஒரு கப்பலோட்டிய தமிழன் ,ஒரு அந்த நாள் ,ஒரு தெய்வமகன் ,ஒரு வியட்நாம் வீடு ,ஒரு வீர பாண்டிய கட்டபொம்மன் ,ஒரு தில்லானா மோகனாம்பாள் ,ஒரு முதல் மரியாதை ,ஒரு தேவர் மகன் ...இப்படியே சொல்லிட்டே போனா பக்கம் தாங்காது ..இதை ஒரு தடவை பார்த்துட்டு வந்து சொல்லுங்க ..சிவாஜி இமயம் .அவரை விழுங்குறதாவது?
ஹலோ ஜோ, நாயகனின் ஒரு அழுகைக்கு முன், ஆயுள் முழுவதும் சிவாஜி அழுதாலும் ஈடாகாது.
16 வயதினிலே சப்பாணியை தோற்கடிக்க எந்த சிவாஜி வருவார்?
அன்பே சிவத்தில், நல்லசிவமாக வாழ்ந்ததை யார் மறப்பார்?
விருமாண்டியின் இயக்கம் சினிமாவில் புது பரிணாமம் இல்லையா?
இந்தியன் சேனாபதிக்கு மரணம் இல்லையே?
அவ்வைசண்முகி மாமி இன்னும் சவால்தான்.
குருதிபுனல் ஆதிநாராயணன் காவல்துறை அதிகாரிக்கு தனி முத்திரையல்லவா?
கிருஷ்ணசாமி இன்னும் மகாநதியாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறான்.
ஆயிரம் சிவாஜிகள் வரட்டும் ஒரு குணாவைக் காட்டுங்கள்.
திலீபனாக சிவப்பு ரோஜா தந்தானே!
தமிழ் சினிமாவின் தரம் உயர்த்தியது கமல் என்பதை மறக்காதீர்கள்.
இவன் தமிழ் சினிமாவை ஆளவந்தவன்.
"In 1962, Ganesan toured the U.S.A, where he was given the honour of being the mayor of Niagara City for one day"
"Marlon Brando is supposed to have told Sivaji Ganesan that Ganesan can act like him (Brando) but he can never act like Sivaji Ganesan"
இனி ஒரு பாகப்பிரிவினை பார்க்க முடியுமா? கமல் ஒரு நடிகர் மறுப்பதற்கில்லை. சிவாஜி ஒரு சகாப்தம் மறந்துவிடாதீர்.
கொஞ்சம் சிந்தியுங்கள்
"The Greatest Merit of Sivaji Ganesan is that no other actor either in Tamil Cinema or Indian Film Industry or in the whole
World has done such a great number of roles and acted in such a great varieties of roles depicting real life- like characters on screen and no other actor's acting carreer is so much saturated with such a great number of milestones in terms of unimaginable achievements as in that of sivaji Ganesan."
அனானி,
நீங்கள் சொன்ன எல்லா கதாபாத்திரங்களும் கமல் என்ற கலைஞனின் மகுடங்கள் தான் .மறுக்க முடியாது .அதனால் தான் அவருக்கு செவாலியே கொடுப்பதில் நான் மகிழ்கிறேன் .ஆனால் இவையெல்லாம் சிவாஜி செய்ததை மிஞ்சியவை என்று நீங்கள் நிறுவ முனைவது ,நீங்கள் கமல் படங்கள் பார்த்த அளவு சிவாஜி படங்கள் பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது.
நீங்கள் சொன்ன ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் மிஞ்சிய சிவாஜியின் கதாபாத்திரங்களை என்னால் பட்டியலிட முடியும்..ஆனால் இந்த பதிவு சிவாஜி சிறந்தவரா ? கமல் சிறந்தவரா என்பதற்காக இடப்பட்ட பதிவு அல்ல.
இன்னும் சொல்லப்போனால் கமலை வாழ்த்தி ஒரு சிவாஜி ரசிகன் இட்ட பதிவு.
கமல் செய்த சாதனைகளுக்கு பாதையாகவும் ,உரமாகவும் ,குருவாகவும் இருந்தவர் பிறவி நடிகர் எங்கள் நடிகர் திலகம் .கமலிடம் கேட்டாலும் இதையே சொல்லுவார் (அது அவர் பெருந்தன்மையால் அல்ல .கமல் உண்மையை உணர்ந்த கலைஞன் என்பதால்)
When it comes to acting, Kamal rates Sivaji Ganeshan head and shoulders above the rest, and at every opportunity acknowledges the senior star's influence on his acting. Kamal says no Tamil actor is free of Sivaji's influence. So great is his respect and admiration for Sivaji, that once, at a function where Sivaji and his son Prabhu were both present, Kamal addressed Sivaji as 'Appa', 'father'.
//இன்னும் சொல்லப்போனால் கமலை வாழ்த்தி ஒரு சிவாஜி ரசிகன் இட்ட பதிவு//
அருமை நண்பரே!
கொஞ்சம் விட்டால் ரஜினி-கமல் போல சிவாஜி-கமல் ரசிகர்கள் சண்டை வரும், போலிருக்கு.
என்னமோ தெரியலைங்க, சிவாஜியின் கம்பீரம் யார் முகத்திலும் எனக்கு தெரியவில்லை....
சிவாஜி ஒரு வானம், கமல் அதில் ஒரு நட்சத்திரம். என்னைக் கேட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. கமல் தந்த சில திரைப்படங்கள் உச்சாணிக் கொம்புதான். ஆனால், சிவாஜி ஒரு ஆலமரம். சிவாஜியை மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்பது தவறு, அடுத்த தலைமுறை மக்களுக்கு கமல் நடிப்பு அவ்வாறு தெரியலாம். இத்தனை விதமான வேடங்களில் முத்திரை பதித்தது நிச்சயம் சிவாஜி தான். கமல் சிவாஜியின் கலைவாரிசு என்பது நிதர்சன உண்மை.
//சிவாஜி ஒரு வானம், கமல் அதில் ஒரு நட்சத்திரம். என்னைக் கேட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. கமல் தந்த சில திரைப்படங்கள் உச்சாணிக் கொம்புதான். ஆனால், சிவாஜி ஒரு ஆலமரம். சிவாஜியை மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்பது தவறு, அடுத்த தலைமுறை மக்களுக்கு கமல் நடிப்பு அவ்வாறு தெரியலாம். இத்தனை விதமான வேடங்களில் முத்திரை பதித்தது நிச்சயம் சிவாஜி தான். கமல் சிவாஜியின் கலைவாரிசு என்பது நிதர்சன உண்மை.
//
அருமையா சொன்னீங்க! என்ன ஒண்ணு எல்லோரும் அனானியா தான் வந்து சொல்லுறீங்க.
சிவாஜி ரசிகர்களுக்கு சில கேள்விகள்.
எனக்கு ஒன்னு தெரியனும், ப்ளீஸ் சொல்லுங்க
டைம் பத்திரிக்கையில் உலகின் பிரசித்திபெற்ற 100 படங்களின் வரிசையில் கமல் படமா? சிவாஜி படமா?.
ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யபட்டவை கமல் படங்களா? சிவாஜி படங்களா?
ஆசிய பட விழாக்களில் தேர்ந்தெடுக்க பட்டவை கமல் படங்களா? சிவாஜி படங்களா?
தேசிய விருதுகளை அள்ளிக்குவித்தது கமலா? சிவாஜியா?
சவால் பாத்திரங்களுக்கு பேர் போனது கமலா? சிவாஜியா?
பிரமாண்ட இயக்குனர்களால் இந்தியாவின் தலைசிறந்த நடிகன் என புகழாரம் பெற்றது கமலா? சிவாஜியா?
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
ஒரு தலைசார்பு வேண்டாம் ஜோ!
//டைம் பத்திரிக்கையில் உலகின் பிரசித்திபெற்ற 100 படங்களின் வரிசையில் கமல் படமா? சிவாஜி படமா?.//
கமல் படம்
//ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யபட்டவை கமல் படங்களா? சிவாஜி படங்களா?//
இரண்டுமே தான் .கமல் படங்கள் அனுப்பப்படுவதற்கு முன்பே ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படம் 'தெய்வமகன்'.
//ஆசிய பட விழாக்களில் தேர்ந்தெடுக்க பட்டவை கமல் படங்களா? சிவாஜி படங்களா?//
60 களிலேயே கெய்ரோ பட விழாவில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் இசை உட்பட மூன்று விருதுகளைப் பெற்றது .நடிகர் திலகம் 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர்' -ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
//தேசிய விருதுகளை அள்ளிக்குவித்தது கமலா? சிவாஜியா?//
கமல் தான் . ரிக்சா காரனுக்காக நம்ம எம்.ஜி.ஆர் கூட விருது பெற்றார் .எப்படி பெற்றார் என கேட்காதீர்கள்.
//சவால் பாத்திரங்களுக்கு பேர் போனது கமலா? சிவாஜியா?//
என்றென்னும் பெயர் போனது சிவாஜி .இன்று கமல்.
//பிரமாண்ட இயக்குனர்களால் இந்தியாவின் தலைசிறந்த நடிகன் என புகழாரம் பெற்றது கமலா? சிவாஜியா?//
சத்யஜித்ரே-வால் இந்தியாவின் சிறந்த நடிகன் என்று புகழாரம் பெற்றது நடிகர் திலகம் தான்.
//ஒரு தலைசார்பு வேண்டாம் ஜோ!//
எல்லாம் நேரம் தான் ! ஒரு தலை சார்பு என்றால் கமலை புகழ்ந்து இந்த பதிவு போட வேண்டிய அவசியம் என்ன? ஐயா! நானும் கமல் ரசிகன் தான்.
ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
சிவாஜியின் பெருமைக்கு இந்த சான்று போதும் என நினைக்கிறேன். இந்த காலம், தொழில்நுட்பம் மிகுந்த காலம். கேமரா டெக்னிக்குகள், மேக்கப்பின் கைங்கர்யம் மிகுந்த காலம்.ஆனால் எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அத்தனை கதாபாத்திர உணர்ச்சிகளையும் ஒரு முகத்தில் எத்தனை பாவணைகளால் செய்து காட்டினான். இன்னுமா நீங்கள் மறுக்கிறீர்கள்? அத்தனை நடிகர்களாகவும் பரிணமிக்க அவனால் முடியும். எந்த ஒரு நடிகனாவது அவனை மிஞ்ச முடியுமா? நெஞ்சை தொட்டு நீங்கள் சொல்லுங்கள்.
சிவாஜிக்கு ஜல்லி அடிக்கவில்லை, சிவாஜி செய்ததை சொல்லி அடிக்கிறீர், சபாஷ் ஜோ.
நண்பர் ஜோவுக்கு ஒரு வேண்டுகோள், சிவாஜியும் கமலும் என்று ஓரு பதிவு போட்டு யுத்தத்தை நிறுத்துங்கள். அதில் இதிலுள்ள விசயங்களை தொகுத்து அளியுங்கள்.
அப்பாடி, அப்பதான் இதுக்கு தீர்வு கிடைக்கும்.
//நண்பர் ஜோவுக்கு ஒரு வேண்டுகோள், சிவாஜியும் கமலும் என்று ஓரு பதிவு போட்டு யுத்தத்தை நிறுத்துங்கள். அதில் இதிலுள்ள விசயங்களை தொகுத்து அளியுங்கள்.
அப்பாடி, அப்பதான் இதுக்கு தீர்வு கிடைக்கும்.
//
வேண்டுகோளுக்கு நன்றி .ஆனால் சிவாஜி ரசிகன் கமலை சிறுமைப்படுத்துவதும் ,கமல் ரசிகன் சிவாஜியை சிறுமைப்படுத்துவதும் மிகவும் துரதிருஷ்ட வசமானது .நானே இரண்டுமாக இருந்து கொண்டு எப்படி அந்த ஊக்குவிக்க முடியும் ?
மன்னிக்கவும் .தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
//"ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
சிவாஜியின் பெருமைக்கு இந்த சான்று போதும் என நினைக்கிறேன். இந்த காலம், தொழில்நுட்பம் மிகுந்த காலம். கேமரா டெக்னிக்குகள், மேக்கப்பின் கைங்கர்யம் மிகுந்த காலம்.ஆனால் எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அத்தனை கதாபாத்திர உணர்ச்சிகளையும் ஒரு முகத்தில் எத்தனை பாவணைகளால் செய்து காட்டினான். இன்னுமா நீங்கள் மறுக்கிறீர்கள்? அத்தனை நடிகர்களாகவும் பரிணமிக்க அவனால் முடியும். எந்த ஒரு நடிகனாவது அவனை மிஞ்ச முடியுமா? நெஞ்சை தொட்டு நீங்கள் சொல்லுங்கள்."//
யப்பா,நிச்சயம் இது நட்சத்திர பின்னூட்டம். காதுல விழுதா?
அய்யோ குழப்பிட்டானுங்களே, யோவ் யாருய்யா சிறந்த நடிகன்?
ஜோ தீர்ப்ப சொல்லுய்யா?
அதுக்கு பின்னாடி யாராவது "தீர்ப்ப மாத்தி சொல்லு" ன்னு சொன்னா அவரு சரத்குமார் ரசிகர்னு சொல்லி ஆட்டத்த முடிச்சிரலாம். எப்டி அய்டியா?
ஜோபாய், ஜோபாய் அந்த நெஞ்க்குள்ளிருக்குற தீர்ப்ப எடுத்து இந்த அனானிங்க மூஞ்சில வீசி எறி
-மைக்கல் மதன சிரிப்பு ராஜன்.
//யோவ் யாருய்யா சிறந்த நடிகன்?
ஜோ தீர்ப்ப சொல்லுய்யா?//
ஒரு நடிகன் என்று பார்த்தால் 'நடிகர் திலகம்' தான் திலகம்.
முழு சினிமா கலைஞன் என்று பார்த்தால் 'கலைஞானி' தான் சிறந்தவர்.
போதுமா?
தீர்ப்பின் முதல் வரி சரின்னா, ஒரு கேள்விப்பா, நம்ம நம்ம நாயகரு நடிப்பு, டைரக்ஷன்னு தடுமாறுரார்னு சொல்றங்கப்பா? நடிப்புல இன்னும் கவனஞ் செலுத்துனுமா? எந்த அளவுக்கு இது உண்மப்பா? அதுனால அவரு ஏரியா தாண்டி வெளாடுறாரா?
//தீர்ப்பின் முதல் வரி சரின்னா, ஒரு கேள்விப்பா, நம்ம நம்ம நாயகரு நடிப்பு, டைரக்ஷன்னு தடுமாறுரார்னு சொல்றங்கப்பா? நடிப்புல இன்னும் கவனஞ் செலுத்துனுமா? எந்த அளவுக்கு இது உண்மப்பா? அதுனால அவரு ஏரியா தாண்டி வெளாடுறாரா?//
நான் அப்படி நினைக்கவில்லை.
நீங்க எந்த சிவாஜி பற்றி கதைக்கிறியள் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமோ..?
//நீங்க எந்த சிவாஜி பற்றி கதைக்கிறியள் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமோ..?//
ம்ம்ம்..மராட்டிய சிவாஜி பற்றி..நீங்க வேற!
அதுதானே பாத்தன்.. ஒருவேளை இது மட்டும் நம்ப சூப்பர் ஸ்டாராக இருந்திச்சின்னா.. அப்புறம் நடக்கிறதே வேறை..
அது சரி..பேருக்கேத்த மாதிரி நல்லா தான் கொழுவி விடுறீங்க.
//சவால் பாத்திரங்களுக்கு பேர் போனது கமலா? சிவாஜியா?//
என்றென்னும் பெயர் போனது சிவாஜி .இன்று கமல்.
அட்றா சக்கை......
அட்றா சக்கை......
ப்ளாக்கர் பீட்டாவிற்கு மாறினாலும் மாறினேன். பதிவுதான் தமிழ்மணத்தில் வரவில்லை. பின்னூட்டமாவது உங்களுக்குக் கிடைக்கறதே என்று தெரியவில்லையே ஜோ. இதற்கு முன்பு ஒரு பின்னூட்டம் இட்டேன். அது கூகுளுக்குச் சென்று வேறு எங்கெங்கே சென்றுவிட்டது. அது கிடைத்திருந்தால் இந்தப் பின்னூட்டத்தைக் கழித்துக்கட்டவும்.
நன்றி.
சுந்தர்,
வேறு பின்னூட்டம் எதுவும் கிடைக்கவில்லையே!
ஜோ சார், மருதநாயகம் வருமா? வராதா? ஆனா ஒன்னு சார், என்னதான் கமல் மாஞ்சிமாஞ்சி நடிச்சாலும் ரஜினிக்கு கிடைக்கும் புகழுக்கு முன் காற்றிலகப்பட்ட துரும்பாகி விடுகிறார் கமல். ஒன்னு நிச்சயம் சார், கலைஞானி அங்கீகரிக்க பட நிறைய காலமாகும். ஏன்னா எம்.ஜி.ஆர் காலத்தில் சிவாஜி அப்டித்தானிருந்தார். இப்ப நடிப்புன்னா சிவாஜின்னு மக்கள் சொல்றாங்க, எம்.ஜி.ஆர் அரசியல் வானத்தில் அடைக்கலம் புகுந்துவிட்டார். நடிப்பு வானில் ஒரே சூரியன் சிவாஜிதான். அது போல கமல் ஹாசனுடைய உண்மையான புகழும், பெருமையும் வெளிப்பட நீண்ட காலமெடுக்கும்.
நல்ல பதிவு, சிவாஜியின் அல்லது கமலின் நடிப்பில் மயங்கி ரசிப்பவர்கள், நாளடைவில் நடிகர்களுக்கு ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களாகிவிடுவது தான் சிறுமை. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் என்றாலும் முந்தி நிற்பவர் என்றும் நடிகர் திலகம் தான். தெனாலியில் ஒரு காட்சியில் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளிப்பார் கமல், நாமெல்லாம் சிரிப்புடன் பார்க்க ஆரம்பிப்போம், காட்சி முடியும் தான் பட்டதுயரங்களை யதார்த்தமாக விவரிப்பார் கமல்,அப்போது நம்மையும் அறியாமல் உதடு துடித்து, கண்கள் பணித்துவிடும். பார்ப்பவர் சிரிப்பில் ஆரம்பித்து அழுகையில் முடிப்பது கலைஞானியின் கைவண்ணம். சிவாஜியை சொன்னால் விரல் வலித்துவிடும். சிவாஜியின் கலைவாரிசாக கமல் கிடைத்திருப்பது தமிழகம் பெற்ற வரம்.
//மருதநாயகம் வருமா? வராதா?//
கமலஹாசனே பதில் சொல்ல யோசிக்கும் கேள்வியை என் கிட்ட கேக்குறீங்க!
//ஆனா ஒன்னு சார், என்னதான் கமல் மாஞ்சிமாஞ்சி நடிச்சாலும் ரஜினிக்கு கிடைக்கும் புகழுக்கு முன் காற்றிலகப்பட்ட துரும்பாகி விடுகிறார் கமல்.//
அப்படியா ? நம்ம நாட்டுல (இந்தியா முழுக்க) ரஜினியை விட கமல் தான் புகழ்வாய்ந்தவர்-ன்னு தான் நான் நினைக்குறேன்.
//ஒன்னு நிச்சயம் சார், கலைஞானி அங்கீகரிக்க பட நிறைய காலமாகும்.//
கமல்ஹாசன் அங்கீகரிக்கப்படல்லியா ? கமல் மகா நடிகன்னு பெரும்பாலான பேர் (ரஜினி ரசிகர்கள் உட்பட) ஒப்புக்கொண்டு தான் இருக்கிறார்கள்
//ஏன்னா எம்.ஜி.ஆர் காலத்தில் சிவாஜி அப்டித்தானிருந்தார்.//
இது ரொம்ப தப்பு .மக்கள் திலகத்துக்கு இணையாக ,இன்னும் ஒருபடி மேலே ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் நடிகர் திலகம் ..ஒரே வித்தியாசம் .நடிகர் திலகத்துக்கு ரசிகர்கள் அதிகம் .மக்கள் திலகத்துக்கு பக்தர்கள் அதிகம்.
//இப்ப நடிப்புன்னா சிவாஜின்னு மக்கள் சொல்றாங்க//
மக்கள் எப்பவுமே அப்படித் தான் சொன்னாங்க.
மருதநாயகம் வரும்
ஜோ சார், The Ultimate அப்டின்னு சிவாஜியை சொல்லலாம், ஆனா கமலை சொல்ல முடியாது. ஏனென்றால் சிவாஜி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தனக்குறிய இடத்தை கவர்ந்துவிட்டார். கமலோ நடிப்பு,இயக்கம் என பிறழ்கிறார். வெற்றிப்படங்கள் மிக அவசியம். கமல் போன்றோர், இயக்கி Box Office தோல்விபடங்கள் தருவது ஆரோக்கியமான ஒன்றல்ல. கமலுடைய பல நாயகன்கள் இன்னும் பாக்கியிருக்கிறது.
மருதநாயகம் அய்யாவுக்கு நன்றி.
சார் சீக்கிரமா இன்னொரு நாயகன் வேணும்.
சார் யாராவது சிவாஜி, கமலுடைய அருமைபெருமைகளையும் சறுக்கிய இடங்களையும் தெளிவாக தீர்க்கமாக நடுநிலையோடு பதிந்தால் சிறப்பு. ஒரு கோரிக்கை ரசிகர்கள் எழுதக்கூடாது.
//ஒரு கோரிக்கை ரசிகர்கள் எழுதக்கூடாது.//
அதாவது ,என்னை எழுதக்கூடாதுண்ணு சொல்லுறீங்க.
ஹா ஹா ஹா சமத்து போங்கோ...
//யோவ் யாருய்யா சிறந்த நடிகன்?
ஜோ தீர்ப்ப சொல்லுய்யா?//
ஒரு நடிகன் என்று பார்த்தால் 'நடிகர் திலகம்' தான் திலகம்.
முழு சினிமா கலைஞன் என்று பார்த்தால் 'கலைஞானி' தான் சிறந்தவர்.
So its clear from your judgement that, acting is inside and a part of "Cinema" and sivaji is inside "KAMAL", and a small part of Him.
OMG.... your words has come true....
Post a Comment