Thursday, June 29, 2006

எனக்கு பிடித்த ஆறு..

ஆறு போட அழைத்த சகோதரி லிவிங் ஸ்மைல் மற்றும் விடாது கறுப்பு இருவருக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக தமிழ்மணம் பக்கமே அதிகமாக வர முடியாத நிலை .இருப்பினும் அவரச ஆறு!

பிடித்த பேச்சாளர்கள்

1.வலம்புரி ஜாண்
2.சுகி சிவம்
3.ப.சிதம்பரம்
4.அண்ணா
5.வைகோ
6.பெரியார் தாசன்

பிடித்த நடிகர்கள் / நடிகைகள்

1.நடிகர் திலகம்
2.கமல்ஹாசன்
3.நாகேஷ்
4.மம்மூட்டி
5.சாவித்திரி
6.எம்.ஆர்.ராதா

பிடித்த இசை/பாடகர்கள்

1.இசை ஞானி இளையராஜா
2.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
3.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
4.பி.சுசீலா
5.வாணி ஜெயராம்
6.டி.எம்.எஸ்

பிடித்த பாடல்கள்

1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது -வறுமையின் நிறம் சிவப்பு
2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?
3.மலர்ந்தும் மலராத -பாசமலர்
4.எங்கே என் ஜீவனே -உயர்ந்த உள்ளம்
5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை
6.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை

பிடித்த படங்கள்

1.சலங்கை ஒலி
2.குருதிப்புனல்
3.மகாநதி
4.தேவர் மகன்
5.முதல் மரியாதை
6.முள்ளும் மலரும்

படித்ததில் பிடித்தது

1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்

என்னை பாதித்தவர்கள்

1.தந்தை பெரியார்
2.பெருந்தலைவர் காமராஜர்
3.நடிகர் திலகம் சிவாஜி
4.அப்துல் கலாம்
5.கக்கன்
6.கலைஞர்

பிடித்த இடங்கள்

1.எங்கள் ஊர் பள்ளம் ,குமரி மாவட்டம்
2.கேரளா
3.அங்கோர் வாட் ,கம்போடியா
4.கோத்தா திங்கி ,மலேசியா
5.கீரிப்பாறை ,குமரி மாவட்டம்
6.முட்டம் ,குமரி மாவட்டம்

அடிக்கடி உலாவுவது

1.தமிழ்மணம்
2.forumhub
3.திண்ணை
4.தமிழ்.சிபி
5.தட்ஸ்தமிழ்
6.விகடன்.காம்

மனதிற்கு இதம்

1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்
2. அதிகாலையில் தூரத்தில் கேட்கும் சுப்பிரபாதம்
3. குழந்தையின் சிரிப்பு
4. பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்
5. மாலை நேர கடற்கரை உலாத்தல்
6. தமிழ் மொழி

நான் அழைக்கும் ஆறு பேர்

1. டி.பி.ஆர்.ஜோசப்
2. தருமி
3. பாலசந்தர் கணேசன்
4. நெல்லை சிவா
5. ரஜினி ராம்கி
6. முத்து தமிழினி

22 comments:

பாலசந்தர் கணேசன். said...

சூப்பரோ சூப்பர்.

சிறில் அலெக்ஸ் said...

பளிச்சுன்னு போட்டுட்டீங்க..
எங்க ஊர் ப்யர் போட்ட நீவிர் வாழி..

எல்லாம் நமக்கும் பிடிச்ச சமாச்சாரங்களாத்தான் இருக்கு.

:)

கோவி.கண்ணன் said...

//பிடித்த ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு வார்த்தைகள்//
இந்த ஒருவரிக்காக உங்களை எத்தனை முறைவேண்டுமானாலும் பாராட்டலாம்

Anonymous said...

எல்லாம் சரி.. அண்ணாத்தே...
அடுத்து ஆறு பேரை விளையாட கூப்பிடுங்கோ..
இல்லாட்டி விளையாட்டில் சுகமில்லை.

VSK said...

அருமையான கருத்துகள்!
நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!
நன்றி!

VSK said...

அருமையான கருத்துகள்!
காமராஜரையும், நடிகர் திலகத்தையும் சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!
நன்றி1

வசந்தன்(Vasanthan) said...

ஜோ,
எனது இறுதிப்பதிவில் உங்கள் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்துள்ளது.
இப்போதுதான் வெளியிட்டேன். அது உங்களுடையதுதானா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்துவீர்களா.
இல்லையென்றால் உடனே அழித்துவிடுகிறேன்.

ஜோ/Joe said...

வசந்தன்,
அது என்னுடையது தான் .அதை உறுதிப்படுத்த இன்னொருக்க விளக்கப் பின்னூட்டத்தையும் அளித்திருக்கிறேன்..நன்றி!

வெற்றி said...

ஜோ,
அருமையான பட்டியல். நான் உங்களையும் ஆறுப் பதிவுக்கு அழைக்கத் தீர்மானித்திருந்தேன். நீங்கள் பதிவைப் போட்டு முந்திவிட்டீர்கள். சரி, இனி என் பட்டியலை மீண்டும் ஒரு தடவை மாற்றுகிறேன்.

நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

அவரச ஆறு!//

ஜோ நீங்க அவசரமா போட்டீங்கங்கறது இதுலயே தெரியுது..

அது சரி.. ஆறு வலைப்பதிவுகள விட்டுட்டீங்களே..

சிக்கல் வேணாம்னா:)

Prince K. said...

Tamizh-la eppadi ezhudarudu?
Nice blog!

ஜோ/Joe said...

Prince,
Pls download and install e-kalappai or murasu anjal tool.

ஜோ/Joe said...

பாலசந்தர் கணேசன்,கோவி.கண்ணன்,வெற்றி..நன்றி!

சிறில்,
நம்ம ஊரை விட்டுக்கொடுக்க முடியுமா?

sk,
நீங்களும் நடிகர் திலகம் ரசிகரா ?மகிழ்ச்சி!

ஜோசப் சார்,
அப்பாடா! இப்போ 6 பேரை அழைத்து விட்டேன் .சங்கிலிப்பதிவில் நீங்கள் என்னை அழைத்ததுக்கு பழிக்கு பழியும் வாங்கியாச்சு!

ilavanji said...

ஜோ,

//1.வாடிவாசல் - சி.சு .செல்லப்பா
2.சீரங்கத்து தேவதைகள் -சுஜாதா
3.சினிமாவுக்கு போன சித்தாளு -ஜெயகாந்தன்
4.அக்னி சிறகுகள் - டாக்டர் அப்துல் கலாம்
5.ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
6.இது ராஜபாட்டை அல்ல -சிவகுமார்//


சரியான "ரசனை" பிடிச்ச ஆளைய்யா நீர்! :)))

ஜெ. ராம்கி said...

//நடிகர் திலகத்தை சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!

//காமராஜரையும், நடிகர் திலகத்தையும் சொன்னவுடனேயெ அப்படியே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு ஒரு உணர்ச்சி!

?! :-)

ஜோ/Joe said...

//சரியான "ரசனை" பிடிச்ச ஆளைய்யா நீர்! :)))//

நான் 'இளவஞ்சி' எழுத்துக்கு பரம ரசிகன் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு தானே இப்படிச்சொல்லுகிறீர்கள்..ஹி..ஹி

Muthu said...

joe,

கண்ணில் படவே இல்லையே இது? நம்முடைய தளத்திற்கு தொடுப்பு கொடுக்க வந்தா நம்ம பேரு..

ம்..அந்த பாட்டு லிஸ்ட்ல முதல் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

Anonymous said...

சகோதரரே,

பிரச்சினைகளில் அகப்படாமல் இருக்க அழகாக தொகுத்துள்ளீர்கள்.

நன்றாக உள்ளது ஆறு தொகுப்பு.

பிடித்த இடம் முட்டம், பள்ளம், கீரிப்பாறை என எனக்குப் பிடித்ததை வரிசைப் படுத்தியுள்ளீர்கள்.

நன்றி

அன்புடன்

இறை நேசன்

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
வருகைக்கு நன்றி! எங்கள் ஊர் பள்ளம் நீங்கள் வந்திருக்கிறீர்களா? அருகில் உள்ள மசூதி விழாவுக்கு வெளியூரிலிருந்து நிறைய பேர் வருவார்கள் .ஒரு வேளை நீங்களும் வந்தீர்களோ? அல்லது நாகர்கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள சமீபத்தில் பிரபலமான சொத்தவிளை கடற்கரை-யும் எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான்.

லிவிங் ஸ்மைல் said...

2.ஓ வசந்த ராஜா -நீங்கள் கேட்டவை?

5.அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை

இது இரண்டுமே எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள்

மேலும்,
1. சுசீலாவின் ஒரு குரல் பாடல்கள்

பாடல் தெரிவுக்கும், சுசீலாவிற்கு சேர்த்து நன்றி ஜோ

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
நீங்க சொன்னது மிக்க சரி..குறுஞ்சாலியன் விளை மசூதி என் வீட்டிலிருந்து கிட்ட தட்ட 300 மீட்டர் தொலைவில் இருக்குமென நினைக்கிறேன் .சொத்தவிளை கடற்கரைக்கும் சங்குத்துறை கடற்கரைக்கும் இடையிலுள்ள ஊர் தான் எங்கள் ஊர் பள்ளம் .குறுஞ்சாலியன் விளை முஸ்லிம்கள் பெரும்பாலும் எங்கள் ஊரிலுள்ள கத்தோலிக்க பள்ளியில் தான் பயில்வார்கள் .மிக்க மகிழ்ச்சி!

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
முடிந்தால் djmilton at gmail.com க்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives