Friday, May 19, 2006

யார் நல்லவர்? யார் ஏழை?

பொதுவாவே புனித பிம்பங்களாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் புத்திசாலித்தனமாக பேசிக் கொள்வதாக நினைத்துக்கொண்டு சில கருத்து முத்துக்களை உதிர்த்து விடுவார்கள் "இப்போ இருக்கிற அரசியல் வாதிகளையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு ஒரு நல்லவரா ,உத்தமரா ,நாட்டுப்பற்றுள்ளவரா பார்த்து அதிகாரத்த ஓப்படைக்கணும் .அப்ப தான் நம்ம நாடு உருப்படும் " அப்படீண்ணு ஒரே வரியில பெரிய தீர்வு சொல்லிட்டதாக மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள் போல .விசுவின் அரட்டை அரங்கங்கள் போல உச்சஸ்தாயி உளறல்களில் இதை அதிகம் கேட்கலாம் .

இப்படிப்பட்டாவர்களை தனித்தனியே அழைத்து "நீங்க அற்புதமா சொன்னீங்க .சரி சொல்லுங்க .யாருங்க அந்த நல்லவர் ,உத்தமர் ?" -ன்னு கேட்டுப்பாருங்க .அநேகமா அவங்க அப்பா அல்லது சித்தப்பா அல்லது மாமா -வைச் சொல்லுவாங்க .இப்படி எல்லோரும் ஆளாளுக்கு இவர் தான் நல்லவர் ,அவர் தான் நல்லவர் -ன்னு சொல்லப்போக ,இருக்கதுல ரொம்ப நல்லவரை கண்டுபிடிக்க 'நல்லவரோமீட்டர்' கருவியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

"ஐயா ! உங்களுக்கு நல்லவரா தெரியுறவர இவரு ஒத்துக்க மாட்டேங்குறாரே ? அவர் சொல்லுறவர நீங்க ஒத்துக்க மாட்டேங்குறீங்க .இப்படியே நாட்டுல உள்ள கோடிகணக்கானவர்களும் ஒத்துக்குற நல்லவர உத்தமர எப்படி கண்டுபிடிக்குறது ?"

.."அட அப்படீண்ணா எல்லோரும் அவங்களுக்கு தோணுறவங்கள சொல்லட்டும் .யாரை அதிகம் பேரு சொல்லுறாங்களோ அவங்கள எடுத்துக்குவோம் "..

"ஐயா ! அதைத் தானே இப்போ தேர்தல்-ங்குற பேர்ல பண்ணிட்டிருக்கோம் . நீங்க என்ன தொடங்குன இடத்துக்கே வந்து நிக்குறீங்க ?

"என்னங்க சொல்லுறீங்க .அதுக்காக இப்படி அநியாயம் பண்ணுறவங்களை நிறைய பேர் தேர்ந்தெடுத்தா எப்படிங்க ஏத்துக்க முடியும் ?"

"சரி! நீங்க சொல்லுறத பார்த்தா உங்க அப்பா ,சித்தப்பா அல்லது மாமாவை தேர்ந்தெடுக்குற வரைக்கும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க போல"

"ஹி..ஹி"
---------------
"அப்புறம் பாத்தீங்கண்ணா இந்த இட ஒதுக்கீடு முறை ஒண்ணும் சரியில்லீங்க .சாதி அடிப்படையில கொடுக்காம ,பொருளாதார அடிப்படையில கொடுக்கணும் .அது தான் சரிப்பட்டு வரும்"

"நீங்க சொல்லுறது சரி தாங்க .ஆனா யாரெல்லாம் ஏழைங்க-ன்னு எப்படி கண்டுபிடிக்குறது?"

"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க .பார்த்தா தெரியாதா ? வசதி இல்லாதவங்க ,கஷ்டப்படுறவங்க இவங்கள ஏழைங்கண்னு முடிவு பண்ணனும் "

"யாரு முடிவு பண்ணனும் ? ஏழைங்கல்லாம் வரிசையில் வந்து நிற்க உண்மையிலேயே வசதியானவங்க பெருந்தன்மையா வரிசையில வந்து நிக்க மாட்டாங்கண்ணு சொல்லுறீங்களா?'

"குதர்க்கமா பேசாதீங்க! அதான் ரேசன் கார்டுல வருமானம் போட்டிருக்கில்ல"

"அடேங்கப்பா ! ரேசன் கார்டுல போட்டுட்டாலும் ...எங்கூரு பண்ணையார் 200 ஏக்கர் நிலம் வச்சிருக்காரு .அவர் ரேசன் கார்டுல மாசம் 1000 ரூபா வருமானம்-ன்னு போட்டிருக்கு .சாராயக்கடை பெரும்புள்ளி மாச வருமானம் 200 ரூபாய்ன்னு போட்டிருக்கு .பாவப்பட்ட சண்முகம் வாத்தியாருக்கு மட்டும் கரெக்டா 8000-னு போட்டிருக்கு . ரயில்வேயில வேலை பாக்குறவங்க குடும்பத்துக்கே இலவச ரயில் பயணம் .பஸ் டிரைவர் புள்ளைக்கு பஸ் பயணம் இலவசம் .ஆனா பள்ளிக்கூடத்துல வாத்தியார் புள்ளைக்கு மட்டும் தான் ஸ்காலர்ஷிப் கிடையாதாம் .அரசாங்க ஊழியராம் .ஆனா பண்ணையார் புள்ளைக்கும் ,சாராயக்கடை காரன் புள்ளைக்கும் ஸ்காலர்ஷிப் உண்டாம் .பாவம் அவங்க தான் ஏழைங்களாச்சே."

"என்ன நக்கலா !இப்போ என்ன தான் சொல்லுறீங்க ! சாதி சார்புல குடுத்து அனுபவிக்குறவனே அனுபவிக்குறான் .அதனால தான் பொருளாதார அடிப்படையில கேக்குறோம் "

"பொருளாதார அடிப்படையில மட்டும் என்ன வாழுதாம் -ன்னு இவ்வளவு சொல்லியுமா புரியல்லயா ? .ஓய்! சாதி அடிப்படையில குடுக்குறதுல ஓட்டை இருந்தா ,அத அடைக்குறதுக்கு என்ன பண்ணலாம்-ன்னு உருப்படியா எதாவது சொல்லும் .அதை விட்டுட்டு பெருசா பொருளாதார அடிப்படையில குடுத்தா பிரச்சனை தீர்ந்துடும்-ன்னு கப்ஸா உட்டுட்டு அலையாதேயும்"

"ஆளை விடுயா!"

23 comments:

கோவி.கண்ணன் said...

வேலு நாயக்கர் ரொம்ப நல்லவர், அப்புறம் தளபதி சூரியாவும் நல்லவர், சின்னக் கவுண்டர் இவங்களையெல்லாம் விட நல்லவர். இன்னும் நிறைய நல்லவர்கள் இருக்காங்க.

அருண்மொழி said...

govikannan,

ஆஹா முக்கியமான ஒருத்தரை விட்டுட்டாங்கையா விட்டுட்டாங்க.

"அதுல ஒருத்தன் இவன் ரொம்பநல்லவன்னு சொல்லிட்டாம்மா"

முத்துகுமரன் said...

இயக்கப் பணிகளைத் துவங்கிவிட்டீர்கள் போல.... வாழ்த்துகள்.

தொடரட்டும்

ilavanji said...

ஜோ,

பதிவு சும்மா 'நச்'சுன்னு இருக்கு! :))))

Muthu said...

புனித பிம்பங்கள் என்ற வார்த்தையை சரியான இடத்தில் உபயோகித்த ஜோவிற்கு நன்றி.

துளசி கோபால் said...

ஜோ,

உங்களுக்குத் தெரிஞ்சதும் எங்களுக்கும் சொல்லுங்க.

பொன்ஸ்~~Poorna said...

//"அட அப்படீண்ணா எல்லோரும் அவங்களுக்கு தோணுறவங்கள சொல்லட்டும் .யாரை அதிகம் பேரு சொல்லுறாங்களோ அவங்கள எடுத்துக்குவோம் "..

"ஐயா ! அதைத் தானே இப்போ தேர்தல்-ங்குற பேர்ல பண்ணிட்டிருக்கோம் . நீங்க என்ன தொடங்குன இடத்துக்கே வந்து நிக்குறீங்க ?//

:) 'நல்லவரோமீட்டர்' சீக்கிரம் கண்டுபிடிங்க :)

சிங். செயகுமார். said...

உள்ளேன் ஐயா:)

குமரன் (Kumaran) said...

நல்லவரோ மீட்டர் விரைவில் கண்டுபிடிக்கத் தான் வேண்டும் போல் இருக்கிறது. அப்போது தான் ராஸ்கல்களையும் புனித பிம்பங்களையும் எளிதாக இனம் காண முடியும். அது சரி ஜோ நீங்கள் ராஸ்கலா? புனித பிம்பமா? புனித பிம்பம் என்பதற்கு என்றும் மாறாத இலக்கணம் எதாவது உண்டா இல்லை நமக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அவர்கள் புனித பிம்பங்களா? அப்படியென்றால் இந்தச் சொல்லையும் மட்டையடி, ஜல்லியடி இவற்றுடன் சேர்த்துவிடலாம்.

என்னடா பதிவுக்குத் தொடர்பா ஒன்னுமே சொல்லலியேன்னு பாக்குறீங்களா? என்னத்தைச் சொல்றதுங்க. கண்ணைக் கட்டிக்கிட்டாலும் நல்லாத் தெரியுது நம்ம அரசியல்வாதிங்களைப் பத்தி; அது அந்த தனிமனிதர்களின் குணமா இல்லை அந்த அரசியல் என்பதின் பாதிப்பான்னு தெரியலை; நல்லவனா இருக்கிறவனும் அரசியல்ல இறங்கிட்டா அவ்வளவு தான் போல இருக்கு. இட ஒதுக்கீட்டில் இரு பக்கமும் நல்ல கருத்துகள் இருப்பதாகத் தான் நான் எண்ணுகிறேன். அதனால் இரு பக்கமும் சாய்வில்லை.

மாயவரத்தான் said...

//வேலு நாயக்கர் ரொம்ப நல்லவர், அப்புறம் தளபதி சூரியாவும் நல்லவர், சின்னக் கவுண்டர் இவங்களையெல்லாம் விட நல்லவர். இன்னும் நிறைய நல்லவர்கள் இருக்காங்க.//

மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, கொம்பேறி மூக்கன், இவங்க எல்லாம்?!

ஜோ/Joe said...

GOVIKANNAN ,Arunmoli,
நக்கலு? நடக்கட்டும்..நடக்கட்டும்..

நந்தன் | Nandhan said...

Excuse, English commenting.

We should slowly migrate from caste based to economy based reservation, as the second sounds more 'fair' than first. However the way it will be implemented is a big question. So let us set it aside till then

Presently, how do you think we can prevent caste based reservations being mis used (ppl who hv made full use of the reservation and have become economically far better, using caste based reservation for their next generations also).

நியோ / neo said...

நண்பர் ஜோ!

காலத்திற்கேற்ற அருமையான கருத்தோட்டம் உடைய பதிவு. வரலாற்றின் முழுமையும் அதிகாரதளத்தில் இருந்தோருக்கு இன்று அந்த 'அதிகாரத்திற்கான' அடிப்படை ஆட்டம் கொடுப்பது போலச் சிறிதளவே தோன்றியதும் - ஆடாத ஆட்டம் ஆடுகிறார்கள்!

சும்மாவேனும் Nationalism, (ஜெய் கிந்தா ஜெய் ஹிந்தா என்றெல்லாம்.. Parody யாம் கருமாந்திரம்!) என்று கதை பேசுவார்கள்.

Nation Building என்பது சமூக தளத்தின் அனைத்து மக்களையும் அதிகாரத்தில் பங்கேற்கச் செய்வதுதான் என்கிற அடிப்படையைக் கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறவர்களுக்கு எத்தனை மேட்டிமைத்தனம! அதட்டல் உருட்டல் மிரட்டல்கள்!

தொடரட்டும் உங்கள் சீரிய சமூக நீதிப் பணிகள்! :)

[உங்கள் பதிவுகள் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன்; ஆனால் - பின்னூட்டமிடாமல் இருந்தாலும் இது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் :) ]

ஜோ/Joe said...

முத்துக்குமரன்,இளவஞ்சி ,முத்து(தமிழினி),செயக்குமார் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஜோ/Joe said...

பொன்ஸ்,
//:) 'நல்லவரோமீட்டர்' சீக்கிரம் கண்டுபிடிங்க :) //
வேற யாராவது கண்டுபிடிசுட்டாங்களாண்ணு சந்தேகத்துல தான் இந்த பதிவு.

குமரன்,
கருத்துக்கு நன்றி!
//அது அந்த தனிமனிதர்களின் குணமா இல்லை அந்த அரசியல் என்பதின் பாதிப்பான்னு தெரியலை; நல்லவனா இருக்கிறவனும் அரசியல்ல இறங்கிட்டா அவ்வளவு தான் போல இருக்கு. //

அரசியல் வாதிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிப்பதில்லையே .மக்களில் ஒருவர் தான் அரசியல்வாதியாகிறார்கள் .ஒட்டு மொத்த மக்களின் பொறுப்புணர்ச்சியும் வளரும் போது அரசியல் வாதிகளின் பொறுப்புணர்ச்சியும் வளரும்.

// இட ஒதுக்கீட்டில் இரு பக்கமும் நல்ல கருத்துகள் இருப்பதாகத் தான் நான் எண்ணுகிறேன். அதனால் இரு பக்கமும் சாய்வில்லை. //
இன்னொரு பக்கம் சாய்பவர்கள் அந்த பக்கம் எந்த வகையில் நடைமுறையில் மேம்பட்டிருக்கும் என்று சொன்னால் தேவலை.

ஜோ/Joe said...

மாயவரத்தான்,
வருகைக்கு நன்றி.

துளசி அக்கா,
//உங்களுக்குத் தெரிஞ்சதும் எங்களுக்கும் சொல்லுங்க. //
same to you.

நந்தன்,
உங்கள் கருத்துக்கு நன்றி..இப்போதைய சாதி அடிப்படையில் இருக்கும் சில ஓட்டைகளை நிவர்த்தி செய்ய அரசு பல முனைகளிலும் கருத்துக்களை திரட்டி அதனடிப்படையில் நடைமுறைக்கு ஒத்து வரும் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் .பயன் பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பயன் பெறுவதை தவிர்த்து ,அந்த பயன் பயன் படாத ,இன்னும் இவற்றை பயன் படுத்த தெரியாத பலருக்கும் போய்ச்சேர வேண்டிய முறையில் திட்டம் வகுக்க வேண்டும் .ஆனால் இப்போதுள்ள குழப்பமான சூழ்நிலையில் பொருளாதார அடிப்படை என்பது மேலும் சிக்கலை உருவாக்கும் என்பதே என் கருத்து .சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒவ்வொருவரின் வருமானமும் ஓரளவு சரியாக அரசாங்கம் அறிந்திருக்கும் நிலைக்கு நமது நாடு இன்னும் வரவில்லை. வல்லரசு கனவில் இருக்கும் நமக்கு இன்னும் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையே இல்லை என்பது பரிதாபம் .

ஜோ/Joe said...

நண்பர் Neo,
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

ஜோ/Joe said...

அதானே பார்த்தேன் .மொத்தமா - குத்துறவர காணோமேண்ணு ..வருகைக்கு நன்றி!

தருமி said...

வல்லரசு கனவில் இருக்கும் நமக்கு இன்னும் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையே இல்லை என்பது பரிதாபம் .//
i fully endorse this and i think this could be 'sarva roha nivarani' for many of our country's ailments!

ஜோ/Joe said...

தருமி,
அப்பாடா! நீங்களாவது என் ஆதங்கத்தை புரிந்து கொண்டீர்களே!

Anonymous said...

நான் ரொம்ப ஏழைங்க!

aathirai said...

poruladhara adipadai odhukeedu anegama mele irukum pirivinaruku dhan adhigam payanpadum endru ninaikiren. ivargaluku yerkanave media balam, reco. balam, samoogathin pana balam payanpadum.

keezhe irupavargal anegama yemandhu viduvargal.


aprom,applicationil income thavara
kuripidupavargalai 4 perai ulle pottal matravargal seyya matargal.

அசுரன் said...

Sorry for English...

Upper caste oppressor are in the raise in the Net now a days. At this time these kind of articles favouring 'social justice' are most welcoming.

Especially these upper caste blogs are voicing hindhudva perception based on one biggest allegation that 80% Hindu population in India.

Where as issues like reservation, Caste atrocities exposes those Anti social elements and this anti social elements are the minority group in India.

I expect more articles like this.

regarding Election politics:
-----------------------------

http://tamilcircle.be/Bamini/puthiyakalacharam/2006/april_2006/01_bam.html

http://www.content-type.com/2139748028/Punchai%2C+Nanchai%2C+Puratchi+Sey.pdf.htm

http://tamilcircle.be/Bamini/puthiyakalacharam/2006/april_2006/04_bam.html

http://kaipulla.blogspot.com/2006/03/parliament-mp-are-for-sale-summer.html

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives