Friday, September 30, 2005
நடிகர் திலகம்
உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!
குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!
பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!
சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?
விண்ணுலகில் கூட...
சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்
கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?
*************************************
(அக்டோபர் 1 - நடிகர் திலகம் பிறந்த நாள்)
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
ஜோ... கவிதை நல்லா இருக்கு... சிவாஜியின் பிறந்தநாளுக்கு முதல் பதிவு உங்களிடமிருந்து...
நன்றி
அருமை ஜோ. நடிகர் திலகம் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அவர் புகழை அறியாதார் அறியாதாரே. விட்டுத்தள்ளுங்கள்.
அவருடைய பிறந்த நாளை நினைவு வைத்திருந்து எங்களுக்கும் நினைவு படுத்தியமைக்கு நன்றி.
கவிதை வரவேற்கத்தக்கது!
ஜோ வாழ்க!
சிதம்பரனாரின் பிள்ளை கதறியழுத்தை நடிகர் திலகம் ஒரு பேட்டியில் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது.
தனக்கு மிகப் பிடித்த படைப்பென 'கப்பலோட்டிய தமிழனை' அவர் சொன்னதும் நினைவில் உள்ளது.
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இமயத்துக்கு பறங்கிமலைகளின் அங்கீகாரம் தேவையற்றது.
குழலி,ராகவன்,பாலதர்ஷன்,neo நன்றி!
ஜோவுக்கு ஒரு ஜே!!
கலைத்தாயின் மூத்தமகன்
என்னது விருதா? விருதுக்கே விருதா
நிலவுக்கு நிலவு பொம்மையா?
கட்டபொம்மனையும் கப்பல் ஓட்டிய தமிழரையும் திருவருட்செல்வரையும்
அனார்...அனார்...மாசற்ற ஜோதிமழையே...பெண்ணின் பெரும்பொருளே... பேரழகின் பிறப்பிடமே..கண்ணில் படாமல் உன்னை கல்லறைக்குள் மறைத்து விட்டனரா மாபாவிகள்.... கல்லினும் வலிவுடை மனதுடையோர்
என்னார்
உங்க வயசுக்காரங்களுக்கு கூட 'எங்க ஆளு' மேல இவ்வளவு 'இது'வா? சந்தோஷம்.
kavithai arputham..
nadigar thilagam endru elloru solvadhil enakku udanpadillai..
kaaranam avar enge nadithar
andha kadhapathiramaga
vazhavallava seidhar
maruthuvar endral maruthavaragave maarum thiramai avar rathathil irundhadhu adhu thirayil therindhadhu
nam manadhai kavarndhadhu
thamzih cinema ulla varayil ivar peyar oongi nirkum
ivar peyarai neekinal thamzih cinema poojiyam
raj
என்னார் ,ராஜேஷ் ..நன்றி!
தருமி,
என்ன இப்படி சொல்லிட்டீங்க? தலைமுறைகளை கடந்து வாழும் கலையல்லவா நம்ம நடிகர் திலகத்தின் கலை.
நான் கிராமத்தான்யா!அந்த மகா கலைஞனின் படங்கள் பார்த்து,வசனம் கேட்டு, அவர் ரசிகனாக வளர்ந்தவன்.
அவர் 'உங்க ஆளு' இல்ல .'நம்ம ஆளு'.
jo,
சரியா சொன்னீங்க!
Sivaji is great
ஜோ: ஆனந்த விகடனில் சினிமா கட்டுரைகள் கீழே சிவாஜி பற்றி பல இருக்கின்றன. ஒருமுறை த ஊதியத்தை உயர்த்த சொல்லி நண்பர்கள் சொன்ன போது தயாரிப்பாளருக்கும் பல க்ஷ்டம் இருக்கும் அவருக்கே தெரியும் என்று சொன்னதாகவும், நாகேஷ், பாலையா இடையே பிரச்சினை இருந்து இருவரும் பேசாத போதும் பொறுமையாய் இருந்து தில்லானா மோகனாம்பாள் முடித்ததாகவும் அறிந்தேன். அது தன் கடமையில் இருந்த sincerity. சிவாஜி என்பதைவிட பாத்திரங்களை வாழும் வண்ணம் நடித்த கலைஞர்.
Nalla pathivu Jo!
Thanks
நல்ல கவிதை, ஜோ. சமீபத்தில் கூட குழந்தைகளுக்கு தில்லானா மோகனாம்பாள் DVD போட்டு காட்டினேன்.
நல்ல பதிவு! நன்றி ஜோ.
செந்தில்,தேன் துளி,ரம்யா அக்கா,தங்கமணி,மதி...அனைவருக்கும் நன்றி
தேன் துளி,
ஆனந்த விகடன் கட்டுரைகளை படித்திருக்கிறேன் .நன்றி!
சிவாஜியின் திறமைக்கு சான்றாக வேறொரு சம்பவம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு முறை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது,அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் ஒரு சிவாஜி ரசிகர் .அவர் சிவாஜியிடம் "ஐயா! எந்த பாத்திரமாக இருந்தாலும் அவர்கள் செய்வதை அப்படியே செய்கிறீர்களே! இதை எப்படி கற்றீர்கள் ?" என்று கேட்டாராம் ..உடனே படுக்கையிலிருந்து எழுந்த சிவாஜி ,அந்த மருத்துவர் போல அச்சு அசலாக பேசி ,நடந்து காண்பிக்க ,மருத்துவர் மலைத்துப் போய்விட்டாராம்.
சிவாஜி சாரை வாழ்த்த அந்த "ஜோ" முன்வராவிட்டாலும் இந்த "ஜோ" வந்தது சிறப்பிற்குரியது.
சிவாஜி சாரை வாழ்த்த அந்த "ஜோ" முன்வராவிட்டாலும் இந்த "ஜோ" வந்தது சிறப்பிற்குரியது.
கணேஷ்,
யார் அந்த "ஜோ"?
நான் Tube Light ஆயிட்டேனா?
அன்பின் ஜோ,
வருத்தங்களையும் ஆதங்கங்களையும் சொல்லும் வார்த்தைகள்.
பாராட்டுகள்.
எம்.கே.
// நான் Tube Light ஆயிட்டேனா? //
என்ன "ஜோ"க்கடிக்கிறீங்க
ஜோ,
நல்ல பதிவு. தாமதமா வந்ததுக்கு ......
சரியா?
நல்ல பதிவு ஜோ!
நடிப்பைத்தவிர வேற ஒன்னுமே தெரியாம வாழ்த்தவர் அவரு.
இப்போ நடிப்புக்கூட தெரியாம சில நடிகருங்க நல்லா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க!!
குமார் ,நன்றி!
இளவஞ்சி ,நன்றி..அற்புதமா சொன்னீங்க போங்க ..திரையில நடிக்கத்தெரியாத சில பேர் திரைக்கு வெளியே அற்புதமா நடிக்கும் போது ,திரையில் நடிப்பில் வானம் தொடும் நடிகர் திலகம் ,திரைக்கு வெளியே ஒரு சொதப்பல் நடிகர் .நமக்கு தேவை திரை நடிகர் திலகம் மட்டும் தானே!
துளசியக்கா,நன்றி! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்களே!
ஜோ,
அருமையான கவிதை. என் மனக்குமுறலையும் உங்கள் கவியினூடாகப் பார்த்தேன்.
நன்றி.
//என்ன இப்படி சொல்லிட்டீங்க? தலைமுறைகளை கடந்து வாழும் கலையல்லவா நம்ம நடிகர் திலகத்தின் கலை.
//
//அந்த மகா கலைஞனின் படங்கள் பார்த்து,வசனம் கேட்டு, அவர் ரசிகனாக வளர்ந்தவன்.
அவர் 'உங்க ஆளு' இல்ல .'நம்ம ஆளு'.//
நானும் அவரின் ரசிகன் தான்..
கவிதை நல்ல இருக்கு ஜோ...
வருகிற ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று சென்னை மெரினா கடற்கரையில் சிலை திறக்க இருக்கும் கலைஞர் அவர்களுக்கு நன்றி!
///
கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?
///
நல்ல கற்பனை...
சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல சமர்ப்பணம்...
சிவாஜிக்கு மெரினாவில் சிலையா...நல்லது...கையை கீழ தொங்க விடச் சொல்லுங்கப்பா...அப்புறம் நாயம் கேக்குறாரு அது இதுன்னு........
தமிழகத்தில் உள்குத்து அரசியலில் பலியானவர் நடிகர் திலகம். அவர் அப்பொழுது காங்கிரசில் இருந்தார். ஆட்சியோ திமுக. ஆகையால் அவரது படங்களை முடிந்த வரைக்கும் தேசிய விருதுக்குப் பரிந்துரையே செய்ய மாட்டார்களாம். அவருடைய ஏதோ படத்திற்குப் பதில் ரிக்ஷாக்காரனை அனுப்பி தேசியவிருது வாங்கிக் கொண்டார்களாம்.
ராகவன்,
உங்களுக்காக நடிகர் திலகத்துக்கு அமையப்போகும் சிலையின் புகைப்படத்தை சேர்த்துள்ளேன்.
நன்றி ஜோ. அப்பாடி இப்ப லாரி மோதாது. :-)
//அப்பாடி இப்ப லாரி மோதாது. :-)//
:-)
வெற்றி ,மனதின் ஓசை ,குமரன் எண்ணம் ..நன்றி!
Dear Thiru Joe,
UngaL kavithaiyinai indruthaan padiththean. 'Imayaththirku pani mazhai parisu.
dhivakar,
(Vamsadhara aasiriyar)
ஜோ,
உங்கள் கவிதை மிகவும் அருமை
இன்றுதான் படித்தேன்
நடிகர் திலகத்தோடு சொல்லாடிய அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன.
விசாகபட்டினத்தில் வந்தபோது இரண்டு நாட்கள் பழகியதும் மறக்கமுடியாதது. நடிகர் திலகம் ஒரு அருமையான நடிகர் மட்டுமல்ல - மிக அருமையான மனிதரும் கூட. வெள்ளை உள்ளம், கள்ளமில்லாப் பேச்சு, பிடித்துவிட்டால் மடை திறக்கும் நாவன்மை... தமிழ்த்தாய் நமக்குத் தந்த மாபெரும் பரிசு. ஏனோ பரிசினை திருப்பி வாங்கிக் கொண்டு விட்டாள்.
நன்றி,
வி. திவாகர்,
வம்சதாரா புதின ஆசிரியர்.
அந்த காலத்தில் நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தபோது அவரை பெண் என்று இரவில் தூக்கிச் சென்றார்களாம்?
அவருக்கொரு வருத்தம் தான் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் நீண்ட நாட்கள் ஓட வில்லை என, ஆனால் நீண்ட காலங்கள் ஓடக்கூடிய படங்கள்.
வாழ்க வி.சி.கணேசன் மன்றாயர் அவர்களின் புகழ்
திருச்சியில் இருந்த அவர் வாங்கிக் கொடுத்த பிரபாத் தியேட்டர் இன்று இடித்து வணிக வளாகமாக ஆக்க இருக்கின்றனர்
இன்னிக்குத் தாங்க இந்தப் பதிவைப் பாக்குறேன். உங்க கவிதை அருமை. வீரபாண்டிய கட்டபொம்மன்னதும், வ.உ.சின்னதும் நம்ம கண்ணு முன்னாடி நிக்கிற உருவம் அவருடையது தான். உண்மையிலேயே சொல்லனும்னா தேசிய விருதால அவருக்குப் பெருமை இல்ல...அவரால தான் தேசிய விருதுக்குப் பெருமை. இதையெல்லாம் ஒரு நாள் உணருவாங்க.
நானும் இன்றுதான் படிக்கிறேன்.
நடிப்புலக மேதை அவர்!
பிரபாத் தியேட்டர் மட்டுமா, இன்று வந்திருக்கிறது, ஆனந்த் தியேட்டரையும் இடிக்கப் போகிறர்களாம், ஜூலை 7-ம் தெதி, சென்னையில்!
அவரது மறைவு தினம் இப்போதுதானே வரும்?
யாராவது நடிகர் திலகத்த 'ஓவர் ஆக்டர்'னு சொன்னா ரெம்ப கோபப்படுவேன். எல்லாமே நடிப்புத்தான் இதுல ஓவர் அண்டர் என்பதெல்லாம் கிடையாது. ஒருவெளை 'பெர்ஃபக்ட்' என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்களோ?
அருமையான நினவுகூறல் ஜோ.
திவாகர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
என்னார் சார்..வாங்க..பிரபாத்-ஐ இடிக்குறாங்களா? வருத்தமா தான் இருக்கு .அங்கு நிறைய நடிகர் திலகம் படங்கள் பார்த்துள்ளேன்!
கைப்புள்ள..வராதவங்க வந்திருக்கீங்க .சந்தோஷம்.
SK,
வாங்க ..என்ன விடிய விடிய ராமாயணம்... நடிகர் திலகத்தின் நினைவு நாளான ஜூலை 21 அன்னிக்கு தான் மேலே படத்தில் உள்ள சிலையை கலைஞர் திறந்து வைக்கிறார்.
சிறில்,
வாங்க ! நடிகர் திலகத்தை 'ஓவர் ஆக்டிங்' -ன்னு சொல்லுறவங்க தங்களை ஓவர் அறிவாளிகள்னு நினைத்துக் கொள்பவர்கள் ..அல்லது நடிகர் திலகத்தின் பிற்கால உருப்படாத நாலைந்து படங்களை மட்டும் ஓசியில் டி.வில் பார்த்துவிட்டு சொல்பவர்கள் ..மாதக்கணக்கில் ஆராய்ந்து 'செவாலியே' குடுத்தானே பிரெஞ்சுக் காரன் ..அவன் என்ன மாக்கானா?
Post a Comment