Tuesday, April 06, 2010

எனக்கு பிடித்த 10 தமிழ் படங்கள்

தமிழில் சிறந்த 10 படங்களை பட்டியலிடுமாறு வாத்தியார் தருமி அழைத்திருந்தார் . பய இப்படியாவது ஒரு பதிவு போட்டுகிடட்டும் என நினைத்திருப்பார் போல .நான் இங்கே பட்டியலிட்டிருப்பது தமிழின் சிறந்த 10 படங்கள் என்பதை விட எனக்கு பிடித்த 10 படங்கள் என்பதே சரியாக இருக்கும்

அந்த நாள் (1954)

இப்போது பார்த்தால் அந்த நாளிலேயே இப்படி ஒரு படமா என கேட்கத் தோன்றும் படம் .பாடல்களுக்கிடையே அவ்வப்போது கதையும் வரும் காலகட்டத்தில் பாடலே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் .முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்த நடிகர் திலகம் வில்லத்தனமான அதுவும் தேசவிரோத பாத்திரத்தில் . வீணை பாலசந்தரின் இயக்கம் . கதாநாயகன் சுட்டு வீழ்த்தப்படுவது தான் படத்தின் முதல் காட்சியே .புதுமையான திரைக்கதை ,ஒளிப்பதிவு ,வசனங்கள் என காலத்தை கடந்த கலை நுணுக்கம் .

ரத்தக்கண்ணீர் (1954)

என்னைப் பொறுத்தவரை நக்கல் ,நையாண்டிக்கு இதை மிஞ்சி எந்த படமும் வந்ததில்லை . அதில் ராதாவை மிஞ்சியவரும் எவருமில்லை . எம்.ஆர்.ராதா என்ற தன்னிகரில்லா கலைஞனின் முத்திரைப் படம் .

கர்ணன் (1964)

பிரம்மாண்டம் .64-லேயே காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் .கர்ணனாக நடிகர் திலகமும் ,கிருஷ்ணனாக என்.டி.ஆரும் சும்மா பின்னியிருப்பாங்க (ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)

தில்லானா மோகனாம்பாள்(1968)

புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகும் போது அவை வெற்றி பெறுவதில்லை என பொது விதியை நொறுக்கிய படம் .தரமான பொழுது போக்கு என்பதற்கு நிறைவான உதாரணம் இந்தப் படம் .நடிகர் திலகத்தின் மற்றுமொரு புகழ்மகுடம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விரும்பி ரசித்து பல முறை பார்த்த திரைப்படம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நாயகன் (1987)

விளக்கம் தேவையில்லை . கமல்ஹாசன் ,தமிழ் சினிமா இரண்டின் போக்கையும் மாற்றியமைத்த திரைப்படம். இப்போது அஜீத் ,விஜயின் வயதை விட நான்கைந்து வயது குறைவான வயதில் கமல் என்னும் மகாகலைஞனின் பரிமாணம் என்றும் வியப்புக்குரியது.

தேவர் மகன் (1992)

நடிகர் திலகம் என்னும் நூற்றாண்டு கலைஞன் எடுப்பார் கைப்பிள்ளையாக திறமையற்றோர் கைகளில் பந்தாடப்பட்ட போது ,கமல் என்னும் ஏகலைவன் தன் துரோணருக்கு அளித்த மகத்தான குருதட்சணை .திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞானி விசுவரூபம் எடுத்த படம்.






மகாநதி (1993)

கல்கத்தா காட்சியில் கண்ணிலிருந்து ரெண்டு சொட்டாவது வராதவருக்கு இதயம் இருக்குமிடம் வெற்றிடம் என சொல்லி விடலாம் . கமல்ஹாசனின் மற்றொரு கலைப்பிரவாகம்.




சதி லீலாவதி (1995)
சிரிப்பொலியில் தியேட்டர் குலுங்கக் குலுங்க பார்த்த படம் .என்னைப் பொறுத்தவரை மைக்கல் மதன காமராஜனை விட ஒரு படி மேல் நகைச்சுவையில்.





குருதிப்புனல் (1995)

’அன்னை வேளாங்கண்ணி’ படமெடுத்தாலும் அதில் ‘வானமெனும் வீதியிலே’ என காதல் பாடாமல் தமிழ் படமில்லை எனும் எழுதப்படாத விதியிலிருந்து விலகி, எடுத்துக்கொண்ட கருவிலிருந்து இம்மியும் விலகாத படம் .





அன்பே சிவம் (2003)

கமல் மட்டுமல்ல ,மாதவனுக்கும் இது ஒரு வாழ்வில் ஒரு முறை படம் .மிகவும் ரசித்த படம்.

குறிப்பு : குணா , நான் கடவுள் ,காதல் , பாசமலர் , கவுரவம் ,முள்ளும் மலரும் ,தில்லுமுல்லு ,அழகி என பத்து மட்டும் என்பதால் பத்தாமல் போன படங்கள் நிறைய.

குறைந்தது 2 பேரையாவது தொடருக்கு அழைக்க வாத்தியார் சொல்லிவிட்டார் . நண்பர்கள் மருத்துவர் புருனோ மற்றும் சுரேஷ் கண்ணன் இருவரையும் அழைக்கிறேன்.

22 comments:

உடன்பிறப்பு said...

ரத்தக்கண்ணீர் எனக்கும் மிகவும் பிடித்த படம்

Bruno said...

எனக்கு பிடித்த பல படங்கள் பட்டியலில் உள்ளன

இனியா said...

எனக்குப் பிடித்த 10 படங்களை நீங்களே பட்டியலிட்டுவிட்டீர்களே?

Raja said...

அருமையான தேர்வு.... கமலின் ரசிகன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சி :-)

Sunday Thoughts said...

Great List...
/*ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?*/
Absolutely correct....

Unknown said...

இந்த படங்களில் எந்த ஒரு படமாவது பிடிக்காது என்று பொதுவாக யாராலுமே சொல்ல முடியாது என நினைக்கிறேன்.

Vipasana said...

//*ஒரு அறிவிசீவி எழுத்தாளர் சமீபத்தில் ஓவர் ஆக்டிங்கின் உச்சம் சிவாஜி என திருவாய் மலந்திருக்கிறாராம் .அவருக்கு நம் பதில் ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பதை தவிர வேறென்ன?)*//

இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம் (உங்களோட ப்ளாக் ல கீழ உங்களுக்கே தெரியாம உங்களோட அனுமதி இல்லாம யாரோ ஒருத்தர் எழுதியிருக்காங்க நண்பரே ...

ஜோ/Joe said...

A,muthu,
தமிழில் அது ஒரு சொலவடை.

தருமி said...

ஜோ,
பத்து மட்டும் அப்டின்னா இந்தக் குழப்பம் வரத்தானே செய்கிறது.

சரி... யாரையாவது தொடர் போட அழைக்கலையா?

அழைங்களேன் .......

ஜோ/Joe said...

வாத்தியாரே,
அழைத்து விட்டேன்.

Anonymous said...

கமல் படங்கள் அதிகம் காணப்பட்டாலும் தேர்ந்தெடுக்க சரியான படங்கள் தான்!

Anonymous said...

பராசக்தி என்னாச்சு?

ஜோ/Joe said...

//பராசக்தி என்னாச்சு?//
பராசக்தி ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் 10 எனும் போது எதைத் தான் தேர்ந்தெடுப்பது :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான தேர்வு

ஜோ/Joe said...

உடன்பிறப்பு ,மருத்துவர் புருனோ, இனியா,ராஜா, Sunday thoughts,சுல்தான்,சதீஷ்குமார் , TVR சார் ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

என் மனதில் உள்ளவைகளைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்தது? ' அவள் அப்படித்தான்' னை மட்டும் விட்டுவிட்டீர்களே ! வாழ்த்துக்கள் !

Ravichandran Somu said...

ஜோ,

மிக அருமையான படங்கள்.....

நாம் அன்று பேசியபடி இந்த பட்டியலில் எனக்கு பிடித்த ஆறு படங்கள் உள்ளன.

அந்த நாள், குருதிப்புனல் பட்ங்கள் பார்க்கவில்லை. தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ஜோ/Joe said...

ரவிச்சந்திரன்,
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

அந்தநாள் ,குருதிப்புனல் கண்டிப்பாக பாருங்கள்.

Kalyan said...

thiru joe,

thiruviLaiyAdalai maRanthu vittErgaLE

IMHO, the song "pAttum nAne bhAvamum nAne" is the highest point in NT's career. the lines 'nAn asainthAl asaiyum akilam ellAme' still gives me goose bumps each time i hear the song :)

Kalyan said...

May be i would have replaced "sathi leelavathi" with "Salangai Oli". if you think salangai oli isnt a tamil original, other movies like sindhu bhairavi, kizhakku cheemiyilae could have been strong contenders for that slot (just my opinion)

Bruno said...

உள்ளேன் ஐயா

எனது பட்டியல்

Bruno said...

உள்ளேன் ஐயா

எனது பட்டியல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives