Wednesday, August 12, 2009

கலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்!



50 -வருடங்களுக்கு முன் அந்த சுட்டி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாட்டுக்கு கொடுத்த முக அசைவைப் பார்த்தவர்கள் கணித்திருப்பார்களோ என்னவோ ,இந்த புள்ளையாண்டான் தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைக்கப் போகிறான் என்று .ஆனா இப்போ அதை பார்க்கும் போது 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது உண்மை என கண்டிப்பாக நினைப்பார்கள் . முதல் படத்திலேயே நடிகையர் திலகம் கைகளில் தவழ்ந்த குழந்தை ,மிக விரைவிலேயே நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்தது ..'நீ ஒருவனை நம்பி வந்தாயோ ,இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ' என கைகளில் கிடத்தி நடிகர் திலகம் கேட்ட கேள்விக்கு 'இல்லை ..நான் என்னையே நம்பி வந்திருக்கிறேன்' என்று அந்த பயல் பதில் சொல்லியிருப்பானோ ? .பின்னர் ஆனந்த ஜோதியில் மக்கள் திலகம் 'நீ பெரிய ஆளா வருவ' -ன்னு சொன்னது பலிக்காம இருக்குமா !




இன்று கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் சாதனைகளை இங்கு பட்டியலிட்டுத் தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .சினிமா உலகில் சிலர் சில திறமைகளில் மிகச் சிறப்பானவராக இருக்கலாம் .சிலர் ஒரு சில திறமைகளை ஒருங்கே பெற்றிருக்கலாம் ..ஆனால் சினிமாவின் முழுத் திறமைகளையும் முயன்று வளர்த்துக்கொண்டு முத்திரை பதித்தவர்கள் கமல்ஹாசனைப் போல யாருமில்லை.

வணிக ரீதியிலும் ,தொழில் நுட்ப ரீதியில் இரண்டிலும் தேவையான அளவுக்கு தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ,இன்னும் ..இன்னும் என முன்னேற்றத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் கலைஞன் .நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்.

50 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12-தேதி 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது .தமிழ் சினிமாவுக்கு புதிய விழி வந்தது.

கலையுலக பொன் விழா காணும் நம்மவருக்கு வாழ்த்துகள்!

13 comments:

வந்தியத்தேவன் said...

மிகவும் இரத்தின சுருக்கமான கட்டுரை. உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்.

Rakesh Kumar said...

What a day! What an artist!

Reposting my wordings from the forum here:

Kamal Haasan
breathes cinema
Bled for cinema
Cried for cinema
Consumed cinema
Pounded his ego for cinema
Broken his bones for cinema
Sacrificed his ties for cinema
Wounded his pride for cinema
Clashed with his faith for cinema
Self-immolated his soul for cinema
Exploited his mind brutally for cinema
Dragged his heart through the murky waters for cinema

Kamal Haasan is Cinema

மனதின் ஓசை said...

நாயகனுக்கு இனிய வாழ்த்துக்கள்..

Raju said...

பரமக்குடி பெருமையடைகிறது.
:)

உண்மைத்தமிழன் said...

அண்ணனை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..!

Anonymous said...

Best wishes to KaMal

கானா பிரபா said...

உலக நாயகனை வாழ்த்துக்கின்றேன்

ஜோ/Joe said...

யூத் விகடனில் வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுப்பது இப்போது தான் தெரியும்.

இந்த பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
http://youthful.vikatan.com/youth/index.asp

முரளிகண்ணன் said...

நம்மவரை இங்கே வாழ்த்திக்கொள்கிறேன்.

பதிவிற்கு நன்றிகள்

அருண்மொழிவர்மன் said...

நீ ஒரு கலைஞன் நிரந்தர இளைஞன்

வாழ்த்துக்கள்

TBR. JOSPEH said...

நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்...//

இதுதான் கமலின் சிறப்பம்சம்.

ஆனால் சமீபகாலமாக எல்லா படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான பாத்திரத்தை அளிக்க வேண்டும் என்ற அவருடைய போக்கை மாற்றி யதார்த்தமாக நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்.

ஒரு நம்மவர், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களை அவர் மீண்டும் தரவேண்டும்.

ஜெறின் said...

அருமையாய் நடிக்கும் கமலுக்கு..............
மிகவும் அழகாக வாழ்த்து தெரிவித்த நண்பருக்கு,அடியானின் வாழ்த்துக்கள்.

கிரி said...

கமல் அவர்கள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ... இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும். புதிய முயற்சிகளில் அதிகம் ஈடுபட வேண்டும்..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives