Saturday, January 31, 2009

நான் தமிழ்ச் சாதி!



மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.

(நன்றி : ஜூனியர் விகடன்)

ஈழத்தமிழருக்காக தன் இன்னுயிரைத் தந்த இந்த சகோதரனுக்கு கைமாறாக ஈழத்தை பெற்றுத்தர நாம் கையறு நிலையிலிருந்தாலும் ,நம்மால் முடிந்த ஒன்று அவனின் கூற்றை மெய்ப்பிப்பது தான் . ஆம் ..நாம் அனைவரும் 'தமிழ்ச் சாதி' என உறுதி பூணுவோம்.

12 comments:

நாமக்கல் சிபி said...

//தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம்//


சபாஷ்! முத்துக் குமரா!


உம் வழியிலேயே நாங்களும் இனி தமிழ்ச் சாதி என்றே கூறிக் கொள்வோம்!

சாதியென்று ஒன்று உண்டு பாப்பா!
அது தமிழ்ச்சாதியென்று ஓதிடடி பாப்பா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த சிந்தனையோடு, தமிழர்களைக் கொள்வதற்கு தெற்காசிய வல்லரசு? அனுப்பும் இராணுவப்படையில் ஒரு தமிழனேனும் இருக்கக் கூடாது என்று எல்ல்லாம் வல்ல இறைவனிடம் (இருந்தால்) வேண்டிக்கொள்வோம்.

V.P.Jaiganesh said...

idhai(tharkolai) sari endrum solla mudiyavillai, thavarendrum solla iyalavillai. En Manadhai pisaigira oru nigazhchchi endru elidhil solla iyalum. Thani oruvanukkaaga jagaththai azhikkachchonnaan bhaaradhi. ivano thannai azhiththu jagaththin kaadhugalil urakka oadhi irukkindraan. Ivan saavu sariththiram padaikkumendraal ivan oru vaelvi chuLLiye!!

enRenRum-anbudan.BALA said...

அவர் தியாகத்திற்கு அஞ்சலி, அவர் எடுத்த முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும்!

முகவை மைந்தன் said...

:-(

வன்மையான எண்ணங்களால் மனம் அமைதியற்று இருக்கிறது. எதுவும் சொல்ல இயலவில்லை.

சிங். செயகுமார். said...

அவர் தியாகத்திற்கு அஞ்சலி, அவர் எடுத்த முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும்:-(

G.Ragavan said...

முத்துக்குமரனோடு ஒத்துப் போகிறேன். நானும் தமிழ்ச்சாதி.

அப்படிச் சொல்லிக் கொள்வதைக் கேள்வி கேட்கின்றவர் திருமணப் பத்திரிக்கையைக் காட்டி விட்டுப் பேசட்டும்.

தற்கொலை என்று சொல்வது எளிது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் துணிச்சலும் தியாகமும் கையறுநிலையும் மிகவும் கவனிக்கத்தப் பாடம்.

அரசியல்வாதிகளிடம் எதையும் எதிர்பார்க்கவியலாது. ஜெயலலிதாவின் ஆணவத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. எங்கே புலிகள் தன்னைக் கொன்றுவிடுவார்களோ என்று அஞ்சி அஞ்சியே அடங்காமல் போனவர் அவர். அவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வீணாய்ப் போனவர். அதிமுக என்று சொல்லிக் கொள்வது அசிங்கம்.

அரசியலாக்க வேண்டாம் என்று கருணாநிதி கெஞ்சிக் கேட்கிறார். கொலை பண்றாங்க என்று சன் டீவியில் கதறி அழுதது மறந்தது போல. அன்றைக்குச் சட்டமன்றத்திலே சொல்கிறார். "அரசாங்கம் என்று ஒன்று இருப்பதாலேயே தீர்மானமாவது போட முடிகிறது" என்று. இனிமேல் அவரது வழியைப் பற்றி எல்லா அரசாங்கங்களும் வெறும் தீர்மானத்தை மட்டும் போட்டால் போதும். அடப்போங்கய்யா... தமிழினத் தலைவராம். திமுக என்று சொல்லிக் கொள்வது வியாபாரம்.

விளாத்திகுளங்களும் தைலாபுரங்களையும் விட்டுத் தள்ளுங்கள். காங்கிரஸ்காரனை பிடியுங்கள். மானமுள்ளவன் காங்கிரசுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்பது என் கருத்து. நாம் தமிழர் என்ற உணர்வு கொஞ்சமேனும் இருந்தால்.... காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் படுதோல்வி அடைய வேண்டும். முத்துக்குமரனுக்குத் தமிழகத் தமிழான குறைந்தது இதையாவது செய்ய வேண்டும்.

முத்துக்குமரா.. உனது தியாகம் பலனளிக்கும். வெற்றி நமதே.

Thekkikattan|தெகா said...

வரிக்கு வரி ஜீரா சொன்னதுதான், எனது இன்றைய நிலையும் தமிழக அரசியல் பொருத்து.

******சாதியென்று ஒன்று உண்டு பாப்பா!
அது தமிழ்ச்சாதியென்று ஓதிடடி பாப்பா!***** நன்றி - சிபி!!

ஜோசப் பால்ராஜ் said...

கொந்தளிக்கும் மனதில் இருந்து அமிலம் போலத்தான் வார்த்தைகள் வருகின்றன.
நானும் தமிழ் சாதி என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

pls visit and give your feedback
http://www.peacetrain1.blogspot.com/

Sathiyanarayanan said...

நானும் தமிழ் சாதி

நியோ / neo said...

கனத்த இதயத்தோடு இந்தப் பதிவை இட்டிருக்கிறேன்.

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives