பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்றால் கொஞ்சம் மரியாதை உண்டு .தோழர் பெருமதிப்புக்குரிய நல்லக்கண்ணு போன்ற பண்பாளர்கள் அங்கம் வகிப்பதால். பெரும்பாலான தலைவர்களின் எளிமையும் ,கொள்கைப் பிடிப்பும் பாராட்டுக்குரியது .ஆனால் சமீப காலங்களில் கம்யூனிஸ்டுகள் காமெடியர்களாக மாறி வருவது ரசிக்கத்தக்கதாக இல்லை .
எதேச்சையாக சன் தொலைக்காட்சி பார்த்த போது செய்திகள் போய்க்கொண்டிருந்தது ..சிவப்பு துண்டைப் போட்டுக்கொண்டு தோழர் தா.பாண்டியன் முழங்கிக்கொண்டிருந்தார் .நான் கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் ஆவேசமாக பேசுகிறார் என நினைத்து கூர்ந்து கவனித்தால் அடடா.. 'காதலில் விழுந்தேன்' ஏன் மதுரைக் காரர்களை விழ அனுமதிக்கவில்லை என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை பற்றி வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருந்தார் .
சன் டீவியை பொறுத்தவரை 2 நாட்களாக தலைப்புச் செய்தியே 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு மக்கள் வரலாறு காணாத வரவேற்பு ..திரையரங்கமெங்கும் மக்கள் வெள்ளம் ..இத்தியாதி..இத்தியாதி ..இத்துப்போன இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க மு.க.அழகிரி தயவில் கிடைத்த வாய்ப்பை சன் டீவி நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது .இது ஏதோ உலக மகா பிரச்சனை போல "வாங்கையா..வாங்கையா" என திடீர் கருணாநிதி எதிர்ப்பாளர்களை தேடிப்பிடித்திருப்பார்கள் போல .
தோழர் தா.பாண்டியனை கேட்கவே வேண்டாம் ..நம்ம கிட்ட மைக் குடுத்துட்டாங்கப்பா -ன்ற சந்தோசத்துல பொளந்து கட்டினார் ..அந்த கொடுமை முடிந்தவுடன் அடுத்து மார்ச்சிஸ்ட் வரதராசன் ..அய்யோ ..மற்றொரு திடீர் கருணாநிதி எதிர்ப்பாளராம்.
இந்த காமெடி முடிஞ்சு இப்போ இன்னொரு காமெடி ..திடீர்ன்னு கம்யூனிஸ்டுகளுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை .உடனே புதிய நண்பர்களையெல்லாம் கூட்டி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் ..கொடுமை என்னண்ணா அதுல அ.தி.மு.க -வும் கலந்து கொள்ளும் -ன்னு அறிவிப்பு .விட்டா ராஜபக்சே ,சோ போன்றவர்களையும் கூப்பிடுவார்கள் போல .
அம்மாவும் பெரியமனது பண்ணி முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என சொல்ல ..நிகழ்ச்சி தொடங்கியும் முத்துசாமி வரவில்லை .கடைசியில் அம்மா கொடுத்தார் பெரிய அல்வா ..வழக்கம் போல கடைசி நேரத்தில் அம்மா-வின் மூடு மாற ,கொஞ்ச நஞ்சம் வந்திருந்த அ.தி.மு.கவினர் மேலிட சிக்னல் கிடைத்ததும் கமுக்கமாக கழன்று கொண்டார்கள் .அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?
பொதுவாகவே இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் கலைஞரோடு கூட்டணி வைத்திருக்கும் போது தான் கூட்டணி ஜனநாயகம் ,கொள்கை ,நியாயமான தொகுதிப் பங்கீடு ,வெங்காயம் பற்றியெல்லாம் பேசுவார்கள் . அம்மாவிடமெல்லாம் இந்த பாச்சா பலிக்காது .உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.
இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு .அவர் வெளிய தான் புலி .அம்மா கிட்ட ஈழப்பிரச்சனை ,சேது சமுத்திர திட்டம் பத்தி ..ஊகூம் ..கப்சிப் ..அடுத்த முறை அம்மா இவரைப் பிடிச்சு உள்ளே போடுறவரை ஓயமாட்டார் ..அப்புறம் "பாசிச ஜெயலலிதா" -ன்னு முழங்குவார் .பார்க்கத் தானே போறோம் .கலைஞர் கிட்ட ஒரு தொகுதிக்கு உரிமைக்குரல் கொடுக்கிற வை.கோ-வும் ,தா .பாண்டியன் வகையறாக்கள் ஜெயலலிதா பிச்சைக்காசு மாதிரி வீசுகிற தொகுதிகளை கையையும் வாயையும் பொத்திகிட்டு எப்படி வாங்குறாங்கன்ணு.
Friday, October 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
கம்யூனிஸ்டுகளின் நிலைமை பரிதாபம்தான். இன்னும் பல காமெடிகளை தேர்தலுக்குமுன் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். மரியாதையாக திமுக கூட்டணியில் இருக்காமல் தெருவுக்கு வந்துவிட்ட இவர்கள் அதிமுக பக்கம் போனால் அவமானப்படுவது உறுதி.
பரிதாபம்
:))))))))))))))))))
//உள்ளே வரும் போதே அம்மா சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது .சும்மா இந்த உதார் விடுற வேலையெல்லாம் கருணாநிதியோட வச்சுகணும் .என் கூட்டணிக்கு வந்தா ..வந்தோமா ..குடுக்கிறத வாங்கிட்டி பேயாம போயிட்டே இருக்கணும் .வெளிய போய் நீட்டி முழக்குறதெல்லாம் வச்சுக்கபுடாது -ன்னு.// படிக்க நகைச்சுவையாக இருந்தாலும் நிஜமாகவே நடந்திருக்கவும் வாய்ப்புண்டு.
டவுசர் உருவப்பட்டு அம்மணமாக அம்பலப்படுத்தப்பட்டு நிற்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். தமிழ்நாட்டில் வி.இ.லெனினை விஜயகாந்த் வடிவில் பார்க்கிறார்கள். ஆந்திராவில் மாவோவை சிரஞ்சீவி வடிவில் பார்க்கிறார்கள். இதெல்லாம் என்ன கொடுமை சார்? :-(
தோழரே தா.பாண்டியன் அவர்களின் பேச்சு உங்களுக்கு காமெடியாகத்தான் இருக்கும்.என்னைப்பொருத்தமட்டில் அவர் கொடுத்தபேட்டி சரியே.சினிமா என்றால் வெறுக்ககூடியதா என்ன?ஒரு தொலைக்காட்சியில் தோன்றினால்தான் பிரபலம் ஆகிறார்கள்.இன்னும் நம் சமுகம் மாறவில்லை.நல்லவர்களேல்லாம்,பைத்தியக்காரர்கள்தான் இந்த நாட்டில்.அதற்கு தகுந்தாற்ப்போல் கொஞ்சம் வலைந்து,பின்பு அடிப்பதில் தவறு இல்லையே.
//அட பாவிகளா! உங்கள் அரசியல் சதிராட்டத்துக்கு ஈழத்தமிழர் பிரச்சனையா கிடைத்தது?//
மிக சரியாக கூறியுள்ளீர்கள்.
80-களில் கலைஞர் போதுமான சீட் கொடுக்கவில்லை என்று உடனே எம்.ஜி.ஆரிடம் ஓடியவர்கள் தான் இந்த இந்திய கம்னியுஸ்டுகள். ஓராண்டுக்கு முன்பு இதே கம்னியூஸ்டுகள் ஆதரவில் தானே மத்திய அரசாங்கம் இருந்தது. இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன். அப்போது இந்திய ராணுவத் தளபதி இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் கொடுப்பதாக காஷ்மீரில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த போது இந்த தா. பாண்டியனும், ராசாவும் எங்கிருந்தார்கள். குறைந்த பட்சம் இலங்கை சிங்கள இனவாத கட்சியான(கம்யுனிஸ்டுகள்தான்) ஜெ.வி.பி கிட்டயாவது எடுத்துச் சொல்லலாமே? பொதுவுடைமைக் கொள்கையைப் பத்தி! தா.பாண்டியன் அய்யா சமீபத்தில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். இதற்குமுன் ஒரு சீட்டுக்காக இராஜீவ் காந்தி மற்றும் ஜெயலலிதாவிடம் தனது ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியை கூட்டணி சேர்த்து வைத்திருந்தார். இவ்வளவு விடயங்கள் இருப்பினும், இனியாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈழபிரச்ச்சனையை அரசியலுக்குப் பயன்படுத்தாமல், ஈழ மக்களுக்காக உண்மையான உணர்வுடன் ஒன்று சேர வேண்டும் என்பது எமது விருப்பம்.
அந்த பூனைக்கு மணி கட்டும் வேலையை தோழர் தா. பாண்டியன் செய்யும் பட்சத்தில் அதை நாமெல்லாம் வரவேற்பது நல்லது. முதல் முறையாக, இராஜீவ் மறைவிற்கு பிறகு ஒரு தேசிய கட்சி ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
:))
//அந்த பூனைக்கு மணி கட்டும் வேலையை தோழர் தா. பாண்டியன் செய்யும் பட்சத்தில் அதை நாமெல்லாம் வரவேற்பது நல்லது. முதல் முறையாக, இராஜீவ் மறைவிற்கு பிறகு ஒரு தேசிய கட்சி ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.//
கண்டிப்பாக வரவேற்போம் .ஆனால் உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் தி.மு.க-வையும் அழைத்திருக்க வேண்டும் ..கலைஞர் தமிழ்செல்வனுக்காக கவிதை எழுதியதற்காக வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஜெயலலிதாவை அழைப்பது வேடிக்கையாக இல்லை?
//ஜோ / Joe said...
//அந்த பூனைக்கு மணி கட்டும் வேலையை தோழர் தா. பாண்டியன் செய்யும் பட்சத்தில் அதை நாமெல்லாம் வரவேற்பது நல்லது. முதல் முறையாக, இராஜீவ் மறைவிற்கு பிறகு ஒரு தேசிய கட்சி ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.//
கண்டிப்பாக வரவேற்போம் .ஆனால் உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் தி.மு.க-வையும் அழைத்திருக்க வேண்டும் ..கலைஞர் தமிழ்செல்வனுக்காக கவிதை எழுதியதற்காக வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஜெயலலிதாவை அழைப்பது வேடிக்கையாக இல்லை?//
கண்டிப்பாக அழைத்திருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. கலைஞர் பதவியில் இருப்பதால் அவருக்கென்று சில கடமைகள் இருக்கின்றன். அதை காலம் தவறாமல் செய்வது நல்லது.காங்கிரஸ்காரர்களை அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரிச்சுவடி தெரியாத அறிவுஜீவிகள்/ அறிவி(லி)ழிகள்!
//காங்கிரஸ்காரர்களை அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரிச்சுவடி தெரியாத அறிவுஜீவிகள்/ அறிவி(லி)ழிகள்!//
உண்மை .சொல் புத்தியும் கிடையாது .சுய புத்தியும் கிடையாது .அதிலும் பெரியார் பேரை கெடுக்குறதுக்குண்ணே ஒரு பேரன் இருக்காரு பாருங்க ..ஹைய்யோ.
/இதுல வேற 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வைக்கோ இருக்காரு ./
அவரும் என்ன பண்ணுவாரு பாவம்!
சமீபத்தில் குமுதம் இணையதளத்தில் வைகோவின் நேர்காணலை பாத்தீங்களா.. (ஏதோ சொல்லவர்றாரு. என்னனுதான் ..??)
வாங்க தென்றல்.
//சமீபத்தில் குமுதம் இணையதளத்தில் வைகோவின் நேர்காணலை பாத்தீங்களா.. (ஏதோ சொல்லவர்றாரு. என்னனுதான் ..??)
//
இன்னும் அவர் மேலே இருக்கும் சின்ன பாசத்தின் காரணமாக பார்த்தேன் ..ஈழத்தமிழர் பிரச்சனையில் அதிமுக நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு என்ன மழுப்பல் பார்த்தீர்களா?
well said :)
Robin,மங்களூர் சிவா, லக்கிலுக் ,ரூபகாந்தன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Dr,Rudhran,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
உங்களைப் போன்றவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை படிக்கின்றீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.
உங்கள் வலைப்பதிவு அறிமுகமும் கிடைத்தது. மீண்டும் நன்றி!
அண்ணே, இப்ப எல்லாரும் ஓட்டு, பதவி, வெற்றி இதுக்காகத்தான் அரசியல் செய்யிறாங்க. யாரு கொள்கை கோட்பாடு எல்லாம் வைச்சுருக்கா? இதுல எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.
இதுக்கு மேல என்ன சொல்ல?
சன் டிவில காட்டலன்னு சொன்ன வைகோ, சரத்குமார் எல்லாம் இப்ப அடிக்கடி சன் டிவில வர்றாங்க. எல்லாம் சந்தர்பாவதம் தான், சன் டிவிக்கு இவங்க ஆதரவு தேவை, அவங்களுக்கு சன் டிவியோட விளம்பரம் தேவை.
ஆனாலும் மதுரையில உண்மையிலயே சன் டிவி சொல்ற மாதிரி அழகிரி அந்த படத்த ஓட விடாம செஞ்சுருந்தாருன்னா, மதுரை மக்களுக்கு அவரு செஞ்ச மிகப்பெரிய உதவி இதுவாத்தான் இருக்கும். அந்த டப்பா படத்துக்காக பெரியார் பேரன் வரைக்கும்ல காமராஜர் ஆட்சியப்பத்தி பேசுனாங்க.
கார்ல்மாக்ஸ் அருமையாத் தான் சிந்தித்திருக்கிறார். அவரது கொள்கைகளை எவரும் ஒழுங்காக பின்பற்றவில்லை. எல்லாம் சும்மா வாய்ப்பேச்சுத் தான்.
Joe... just a visit :) -
Honestraj from Hub
ஜோ நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
Post a Comment