Thursday, July 12, 2007
இவனா தமிழன் ?
எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.
கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?
சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?
நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....
-தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.
நன்றி : செம்பருத்தி
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ரொம்ப நல்ல கவிதை... பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி...
ஆனால் இதை சரி என்றோ தவறு என்றோ கூற தோன்றவில்லை எனக்கு.
ஏன் தெரியுமா? இத்தகைய முரண்பாடுகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன.
ஒருமுறை நான் என்னுடைய சேர்மனை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துக்கொண்டு திரும்பும்போது வடபழனி கமலா தியேட்டரில் போக்கிரி படம் ரிலீசாயிருந்தது. சாலையை அடைத்துக்கொண்டு ரசிகர்கள் கூட்டம். விஜய் கட் அவுட்டின் மீது இதேபோல் ஒரு பால் பாக்கட்டை ப்ரித்து பீச்சிக் கொண்டிருந்தார் ஒரு ரசிகர். நான் எரிச்சலுடன் இந்த மாதிரி ஆளுங்களாலதான் தமிழாளுங்க பேரே ரிப்பேராயிருக்கு சார்னு சொன்னேன். அப்போ சேர்மன் - அவர் மலையாளியென்றாலும் நன்றாக தமிழ் பேசுவார் - சிரித்துக்கொண்டே we need this kind of people also TBR. Otherwise life would be boring..' என்றார்...
¿ñÀ§Ã,
¾¢Ã¢ÝÄõ À¼õ Åó¾ §À¡Ð ÁШÃÄ º¢Å¡ƒ¢ìÌõ Àñ½¡í¸§Ä. «ô§À¡Ð ¿£í¸ À¢È츧Å¢ø¨Ä§Â¡?
¾¨ÄÅÕ측¸ ¾£ìÌÇ¢ìÌõ ¾Ú¾¨Ä¸û ¾¢Â¡¸¢Â¡¸Ä¡õ. À¡æò¾ÃÅý À羺¢Â¡?
À¢.Ì: ¸ð¼×ðÎìÌ À¡æðÎõ ¦ºÂ¨Ä Åý¨Á¡¸ ¸ñÊ츢§Èý.¬É¡ø âɢ ¸ð¼×ðÊüÌ °ò¾¢Âо¡ý ¯í¸¨Ç ±Ø¾ò àñÊÂÐ ±ýÀÐ ±ý «ÛÁ¡Éõ
//நண்பரே,
திரிசூலம் படம் வந்த போது மதுரைல சிவாஜிக்கும் பண்ணாங்கலே. அப்போது நீங்க பிறக்கவேயில்லையோ?
தலைவருக்காக தீக்குளிக்கும் தறுதலைகள் தியாகியாகலாம். பாலூத்தரவன் பரதேசியா?
பி.கு: கட்டவுட்டுக்கு பாலூட்டும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.ஆனால் ரஜினி கட்டவுட்டிற்கு ஊத்தியதுதான் உங்களை எழுதத் தூண்டியது என்பது என் அனுமானம் //
நண்பரே,
முதலில் எழுதியது நானல்ல .எழுதபட்டதும் 2005-ல் என தெரிகிறது .அதற்கான படம் தேடிய போது எளிதாக கிடைத்தது இது தான்.
சிவாஜிக்கு பண்ணியிருந்தாலும்,எம்.ஜி.ஆருக்கு பண்ணியிருந்தாலும் முட்டாள் தனம் தான் முட்டாள்தனம் தான் .தனி மனித வழிபாடு யாருக்கென்றாலும் தவறு தான். அதிலென்ன சந்தேகம்.
தலைவருக்காக தீக்குளிக்கும் தறுதலைகள் தறுதலைகளே ,தியாகியல்ல எனக்கு.
//
நான் எரிச்சலுடன் இந்த மாதிரி ஆளுங்களாலதான் தமிழாளுங்க பேரே ரிப்பேராயிருக்கு சார்னு சொன்னேன். அப்போ சேர்மன் - அவர் மலையாளியென்றாலும் நன்றாக தமிழ் பேசுவார் - சிரித்துக்கொண்டே we need this kind of people also TBR. Otherwise life would be boring..' என்றார்...
//
இதுக்கு இன்னோரு பக்கமும் இருக்கு இப்படி கட்டவுட்டுக்கு பாலுத்தறவங்க இருக்கறதால தான் ஏமாத்தி பிழைப்பவர்கள் மேல மேல ஏமாத்த முடியுது
ஜோ, "அடி பொலி!"
அந்த(profileல்) சிவாஜி புகைப்படம் அருமை! பராசக்தி படத்தில் இருந்தா?
ஆமாம் தென்றல் .அது பராசக்தி தான்.
//கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை//
ஜோ அய்யா,
இந்த மாதிரி அல்ப்ப காரியங்களையெல்லாம் தமிழர்கள் "சாதனை"ன்னு உளறுவதால் தான் "தமிழன்" என்று சொன்னாலே, அருவருப்பா பாக்கறாங்க.
அனானி ஐயா,
உங்கள் கருத்தை கண்டு எழுதியவர் திருந்தினால் சரி!
இல்லைன்னா பரிகாரமா அடுத்த படத்துக்கு பாலூத்த சொல்லிடலாம்.
It's fantastic!!!. Congrats to T. Soosai Michel.
நீங்கள் இவ்வளவு அருமையாக கவிதை எழுதுகிறீர்களே... என்று படித்தால், இறுதியில் தோபியாஸ் மைக்கேல் பெயர் உள்ளது -:)) தோபியாஸ் உங்களுக்கு உறவா? தோபியாசும் நானும் எங்கள் கவிதைகளால் நண்பர்களாகியவர்கள். நட்பு வளர்கிறது...
சிவாஜி பற்றிய எனது விமர்சனக் கவிதையைப் படித்துப்பாருங்கள். நன்றி.
பெனடிக்ட்,
தொ.சூசைமிக்கேலும் நானும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கூரையில் நெருப்பெரிய, வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கும்பிடும் காலமிது; மனிதனையே மனிதன் கும்பிடுகின்றான், தெய்வமெனத்தம்மைக்காட்டிக்கொள்பவர்களை; குறைசொல்லவில்லை, ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழனும் ஏமாந்துகொண்டிருக்கின்றான். மனது வேதனையிற் துடிக்கின்றது.
நம் பெயர் சொல்லியே நம்மிடம் உழைக்கின்றான். கற்றவனாக இருந்தும் படத்திற்கு ஊற்றும் பாலினைக் குடத்தினில் ஊற்றி ஒரு ஏழையின் வயிற்றினை நிரப்பிட உதவிடார். பிச்சை கேட்டால் கொடுக்கமாட்டார்கள் ஏசுவார்கள், ஆனால் 1000ரூபா கள்ளச்சந்தையில் நுழைவுச்சீட்டு எடுத்து உள் நுழைவர். அதில் 10 ஏழைகளின் வயிற்றினையாவது நிரப்ப உதவுவரா? தமிழன் நாம் அல்ல பிச்சைக்காரர், நம்மை ஏமாற்றி திரைப்படம் என்று பல்வேறுவழியில் நம் பணத்தை சுரண்டும் கள்ளப்பேர்வழிகள்(நடிகர்கள், இயக்குநர்கள், திரைத்துறை சார்ந்தோர் அல்ல)திருட்டு நுழைவுச்சீட்டினை விற்றுப்பணமாக்கும் சமூகச் சீரவுவாதிகள் தான் நம் இனத்தின் பிச்சைக்காரர்கள். உலகில் பசி பட்டினி தலைவிரித்தாடும் இப்பூமியிலே பசி போக்கிடுவீர்.
Post a Comment