நடையிலே நானூறு விதம் காட்டிய நம் நடிகர் திலகம். கம்பீரம் ,நளினம் ,ஸ்டைல் என்ன வேண்டும் ,இந்த பாடல் காட்சியைப் பாருங்கள்
நம்ம தருமி வாத்தியார் வேண்டுகோளுக்கிணங்க "யார் அந்த நிலவு"
Friday, July 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
நாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை
16 comments:
சிறந்த நடிகன் ' நடிகர் திலகம் சிவாஜி". மாற்று கருத்துக்கு இடமே இல்லை.
இன்னொரு விசயம்
இந்த பாடலைப் பாடும் போது டிஎம்ஸ் வீட்டில் ஏதோ அசம் பாவிதம் நடந்ததாகவும் அந்த சோகத்தில் இப்பாடலைப் பாடியதாகவும் டிஎம்ஸ் எதோ பேட்டியில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
//இந்த பாடலைப் பாடும் போது டிஎம்ஸ் வீட்டில் ஏதோ அசம் பாவிதம் நடந்ததாகவும் அந்த சோகத்தில் இப்பாடலைப் பாடியதாகவும் டிஎம்ஸ் எதோ பேட்டியில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
//
புதிய செய்தியாக இருக்கிறதே!
நண்பரே,
மிகவும் அற்புதமான பாடல். மிகவும் அற்புதமான படம் இது.சிவாஜி அவர்களின் சிறப்பம்சம், அவரது ஒரிஜனல் நடிப்பு. பிற்மொழிப்படங்களையோ, உலகப் படங்களையோ தழுவி நடித்தவர் அவர் அல்ல.அவரது நடிப்பை சிலர் ஓவர் ஆக்டிங் என சொல்லும்போது மிகவும் எரிச்சல் வரும்.
இன்றைய தலைமுறைக்கு அவரது நடிப்பின் சிறப்பை உணர்த்த ஒரு பிலிம் பெஸ்டிவலை நடத்த வேண்டும். அதில் அவர் நடிப்பை பற்றிய கருத்தரங்கங்களும் இடம்பெற வேண்டும்.
இதை ஒரு டிவி சானலே அல்லது சிவாஜி பிலிம்சோ கூட செய்யலாம்.
சிவாஜியால் பாதிக்கப்படாத நடிகர்கள்/தழுவி நடிக்காத நடிகர்கள் யாரும் இங்கே கிடையாது
ஜோ,
//நடையிலே நானூறு விதம் ..// அதுக்கு 'அந்த நாள் ஞாபகம் வந்ததே..' பாட்டுதான் பொறுத்தமாயிருக்கும், ஜோ. பதினாலோ, பதினேழோ மாதிரில்ல நடப்பார் அதில..
சிகரெட் குடிச்சிக்கிட்டே பாடுற 'யார் அந்த நிலவு; ஏனிந்த கனவு' சீன் போடுறேன்னு சொல்லி நாளேச்சே. என்னாச்சு..ம்ம்..?
தருமி,
ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க 'யார் அந்த நிலவு" சேர்க்கப்பட்டுள்ளது :))
Nice songs
wow.sivaji great
சமீபத்தில் படித்ததில் இருந்து :)
Karaintha Nizhalgal - Asokamithiran
சும்மா ஒரு ஜாலிக்குத்தான்... தவறாக நெனக்காதீங்க :)
பாஸ்டன் பாலா,
அசோகமித்திரன் கண்ணை மூடிகொண்டால் உலகம் இருண்டுவிடாது.
தன்னை அறிவுஜீவிகள் என்று நிருப்பிக்க நடிப்புலக மன்னாதி மன்னனை குறை கண்டு பிடித்து மார்தட்டிக்கொள்ளும் வெத்துவேட்டுகளில் அசோகமித்திரனும் ஒருவர் என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி.
இதுக்கு மைனஸ் குத்து குத்துறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கா!
அப்பாடா .. எத்தனை வருஷத்துக்குப் பிறகு பார்க்கிரறேன் ...! ரொம்ப நன்றி.
இன்னுமா இந்த மைனஸ் குத்து எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க?
ரொம்ப நாள் கழிச்சி இந்தப் பாட்டப் பாக்குறேன். "தாய் மடியிலே மழலைகள் ஊமையோ" ஆகா..ஆகாகா...கொடுத்தமைக்கு நன்றி ஜோ. நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்.
என்னது இதுக்கும் -வ் குத்துறாங்களா :))))) யாரோட வயித்தெரிச்சல்னு தெரியலையே!
'யார் அந்த நிலவு' எந்த படம்ங்க?
தென்றல்,
"யார் அந்த நிலவு" இடம் பெற்ற படம் "சாந்தி" .
அதுக்கு ஒரு கதையே இருக்கு .கண்ணதாசனின் அருமையான வரிகளுக்கு மெல்லிசை மன்னர் அற்புதமா இசையமைத்து டி.எம்.எஸ் அருமையா பாடியிருந்தார் .பாடலை கேட்ட நடிகர் திலகம் இதில் தனது முத்திரையை பதிக்க வேண்டுமென்று ஒரு நாள் அவகாசம் கேட்டாராம் .யோசித்து யோசித்து கடைசியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டே நடந்து செல்லும் புதிய பாணியை செய்தாராம் .
அந்த காலத்தில் நடிகர் தொலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த பாடல் இது.
நன்றி, ஜோ!
/அந்த காலத்தில் நடிகர் தொலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த பாடல் இது.
/
இப்பொழுதும்கூட !
நல்ல பாடல்களும் நடிப்பும்.
நான் ஒரு சில பொது மேடைகளில், "தேவனே என்னைப் பாருங்கள்" பாடலைப் பாடியிருக்கிறேன்.
Post a Comment