என்னடா இது? வைரமுத்து மீது பகிரங்க குற்றசாட்டா என்று நினைக்க வேண்டாம் .நேற்று சிங்கையில் நடந்த விழாவில் வைரமுத்துவே குறிப்பிட்ட செய்தி இது.
சிங்கையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆர்வலர்களின் முயற்சியால் ஆண்டு தோறும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா கடந்த மூன்று ஆண்டுகளாக மேதினத்தன்று கொண்டாப்பட்டு வருகிறது .நேற்றைய விழாவுக்கு சிறப்புரை வழங்க கவிஞர் வைரமுத்து வைந்திருந்தார்.
சிங்கை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் அரங்கு நிறைந்து வழிந்த போதும் 7 மணியளவிலேயே துவங்கப்பட்டது .வைர முத்து பேசும் போது அரங்கத்திலிருந்த கூட்டத்தை போல 3 மடங்கு கூட்டம் திறந்த வெளியிலும் நின்று கொண்டிருந்தது .
சிறப்பு விருந்தினராக வந்திருந்து பட்டுக்கோட்டையார் பாடல்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்த சிங்கை அமைச்சர் தெக் யூ நான்கைந்து தமிழ் வாக்கியங்களை எழுதி வந்து படித்த போது சீனர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு தமிழ் வாக்கியத்துக்கும் விண்ணதிர கைதட்டல் ஒலி எழும்பியது .ஒரு கவிஞரின் புகழ் பாடும் விழாவுக்கு இத்தனை பெரிய கூட்டத்தை அமைச்சர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அமைச்சர் சிங்கையின் அரசாங்க மொழிகளில் ஒன்றான தமிழை விஞ்ஞான யுகத்தில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் ,மொழி கலாச்சார கூறுகளை பேணிக்காக்க வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டி ,தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கை அரசு கொண்டுள்ள கடப்பாட்டை உறுதிப்படுத்தினார். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர் கூட்டம் அவரது பேச்சுக்கும் வருகைக்கும் மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
விழாவின் இறுதியில் கவிஞர் வைரமுத்து உணர்ச்சிகரமான உரைநிகழ்த்தினார் .29 வயதிலேயே மறைந்து விட்ட மாபெரும் 'மக்கள் கவிஞனின்' சிறப்புக்களை பட்டியலிட்ட அவர் சில சுவாரஸ்யமான தகவல்களையும் சொன்னார் .காதல் பாடல்களில் கூட பொதுவுடமையைச் சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை என்று உதாரணத்தோடு குறிப்பிட்ட அவர் ,பட்டுக்கோட்டையின் சமுதாய கருத்துக்கள் கொண்ட பாடல்களின் வெற்றி அப்போதிருந்த மற்ற கவிஞர்கள் சமுதாய கருத்துக்களை சொன்னால் தான் நிலைக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.
படத்துக்கு படம் ஒரு சமுதாயப்பாடல் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை நினைக்க வைத்தது பட்டுக்கோட்டை தான் ,அது எம்.ஜி.ஆரை அரியணையில் கொண்டு அமர்த்தியது என்று குறிப்பிட்டார் .
பட்டுக்கோட்டையை தான் காப்பியடித்த ரகசியத்தையும் சொன்னார் .பட்டுக்கோட்டையாரின் "தவறுக்கு தவறான தவறை புரிந்து விட்டு " என்ற தனது மனதில் தங்கிய வரிகளை காப்பியடித்தே சிந்து பைரவியில் 'மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்" என்றெழுதியதாக குறிப்பிட்டார் .
பட்டுக்கோட்டையார் இறந்த போது ஒரேயொரு நடிகை மட்டுமே அவருக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தாராம் .அவர் அப்போது பட்டுக்கோட்டையார் பாட்டெழுதிக்கொண்டிருந்த ஒரு படத்தை தயாரித்துக்கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை பண்டரி பாய் .ஒரு கையில் மாலையும் இன்னொரு கையில் காசோலையும் கொண்டு வந்து ,மாலையை அணிவித்து ,தான் கொடுக்க வேண்டிய தொகைக்கான காசோலையை பட்டுக்கோட்டையார் குடும்பத்துக்கு கொடுத்தார் என்ற செய்தியை குறிப்பிட்டார்.
வைரமுத்து பேசி முடிக்கும் போது இரவு 9-ஐ தாண்டியிருந்தது .வைரமுத்து பேச்சில் 'சிங்கப்பூர் தமிழர்கள்' என்று குறிப்பிடும் போதெல்லாம் என் மனதில் தோன்றியது ...இந்த விழாவை ஏற்பாடு செய்த ,மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்ற சில சிங்கப்பூர் தமிழர்களை தவிர இந்த நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காமல் வந்திருந்த கூட்டத்தில் 90 % இந்தியாவிலிருந்து இங்கு வந்து தினக்கூலிகளாக வேலை செய்யும் கட்டுமானத்துறை தொழிலாளர்கள் .
தொழிலார்கள் தினத்தன்று தொழிலாளர் நலம் பாடிய அந்த மக்கள் கவிஞனின் விழாவுக்கு திரளாக வந்திருந்து தமிழுக்கு அழிவில்லை என நிரூபித்த அந்த தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
Wednesday, May 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
சுவராஸ்யமான சில தகவல்கள். :-)))
//அமைச்சர் சிங்கையின் அரசாங்க மொழிகளில் ஒன்றான தமிழை விஞ்ஞான யுகத்தில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் ,மொழி கலாச்சார கூறுகளை பேணிக்காக்க வேண்டிய கடமையையும் சுட்டிக்காட்டி ,தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கை அரசு கொண்டுள்ள கடப்பாட்டை உறுதிப்படுத்தினார்.//
:-)))
//சிங்கை ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் //
அது சிங்கை வள்ளல் கோவிந்தசாமி அவர்களால் எழுப்பப்பட்டது. PGP மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது.
ஜோ,
நான் நிகழ்ச்சிக்கு வரவில்லை.. எனக்கு தெரியாது..அடுத்த முறைசென்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க :)
நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.
அருண்மொழி,
தகவலுக்கு நன்றி!
கோவியாரே,
தமிழ்முரசில் பெரிய அளவுக்கு விளம்பரம் வந்திருந்ததால் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைத்தேன் .அடுத்த முறை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பரஸ்பரம் தொடர்பு கொள்வோம்.
நல்ல தகவல் & நல்ல பதிவு.
நன்றி ஜோ.
வாங்க மனதின் ஓசை! :))
துளசியக்கா,
எம்புட்டு நாளைக்கப்புறம் வந்திருக்கீக ! நன்றி!
//விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழர் கூட்டம் அவரது பேச்சுக்கும் வருகைக்கும் மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.//
:))
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் மீது பற்று கொண்டோரின் எண்ணிக்கையில் நானும் ஒருவன்.
//வைரமுத்து பேசி முடிக்கும் போது இரவு 9-ஐ தாண்டியிருந்தது .வைரமுத்து பேச்சில் 'சிங்கப்பூர் தமிழர்கள்' என்று குறிப்பிடும் போதெல்லாம் என் மனதில் தோன்றியது ...இந்த விழாவை ஏற்பாடு செய்த ,மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்ற சில சிங்கப்பூர் தமிழர்களை தவிர இந்த நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காமல் வந்திருந்த கூட்டத்தில் 90 % இந்தியாவிலிருந்து இங்கு வந்து தினக்கூலிகளாக வேலை செய்யும் கட்டுமானத்துறை தொழிலாளர்கள்.//
வைரமுத்து சிந்திக்க வேண்டிய விஷயம். அடுதத முறை எப்படிச் சொல்கிறார் என்று கேட்டு எழுதுங்கள்.
ஜோ,
நான் நிகழ்ச்சிக்கு வரவில்லை.. எனக்கு தெரியாது..அடுத்த முறைசென்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க :)
நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.
தாஸ்,
அடுத்த முறை கண்டிப்பா சொல்லுறேன் .நீங்களும் சொல்லுங்க.
ஜோ,
நான் நிகழ்ச்சிக்கு வரவில்லை.. எனக்கு தெரியாது..அடுத்த முறைசென்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க :)
இப்போதாவது வைரமுத்து காப்பியடித்ததை ஒப்புக்கொண்டாரே :-)).
நல்ல தகவல்கள்.
வைசா
ஜோ,
சுவராஸ்யமான தகவல்கள். நல்ல பதிவு!
நன்றி !!
/தொழிலார்கள் தினத்தன்று தொழிலாளர் நலம் பாடிய அந்த மக்கள் கவிஞனின் விழாவுக்கு திரளாக வந்திருந்து தமிழுக்கு அழிவில்லை என நிரூபித்த அந்த தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
/
உண்மைதான்!
Joe,
Excellent Post!
Thanks for sharing!
பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டை
i have seen one program SORKALAM 2007 in vasantham central TV recently,in which the singai tamil students are debating in tamil.in that those students are talking tamil while reading from a paper.all those are aged like 17 and above but almost they killed tamil by their pronounce (addition they added to singlish in between).for me it deserves they are absolutely killing tamil.since you quoted 90% of people from india the singai government is only giving life and support to tamil not the people in singai.bringing vairamuthu to singai is for their fashion not for tamil.if singai government not support ,tamil will suicide soon in singapore.i really thank singai government for their support to tamil from my deep heart.
ஜோ,
நான் நிகழ்ச்சிக்கு வரவில்லை.. எனக்கு தெரியாது..அடுத்த முறைசென்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்திடாங்க :)
மறக்காம இப்படி விரிவா பதிவு போட்டுடுங்க :)))
அனானி,
நீங்க சொல்லுவதில் நிறைய உண்மை இருக்கு.
பொன்ஸ்,
//அடுத்த முறைசென்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்திடாங்க :) //
:))
சுவாரஸ்யமான் தகவல்கள் ஜோ!
பட்டுக்கோட்டையார் பாடல்களை விரும்பிக்கேட்பேன்!'சின்னச்சின்ன மூக்குத்தியாம்...'மிகவும் பிடித்தது
செய்த வேலைக்கு கூலியை வாங்க
நடையாய் நடக்கும் திரையுலகத்தில்
மறைந்த பண்டரிபாயின் பண்பு.....!
நாட்டில் மழை பெய்யும் காரணம்
புரிந்தது.
ஜோ,
பதிவுக்கு நன்றி. பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
தமக்கு முந்திய காலத்துக் கவிஞர்களின் சில வரிகளையோ அல்லது கருத்துக்களையோ எடுத்துக் கையாள்வது என்பது தவறில்லை. தமிழ் இனத்தில் இந்த வழக்கம் தொல்காப்பியர் முதல் இருந்து வருகிறது.
வள்ளுவரின் பல குறள்களை கம்பர் எடுத்தாண்டிருக்கிறார்.
வள்ளுவர், பல சித்தர்கள், நாயன்மார்கள் சொன்ன பல விடயங்களைக் கவியரசர் கண்ணதாசன் எடுத்தாண்டிருக்கிறார்.
ஆக, வைரமுத்து செய்த செயல் புதுமையுமல்ல, தவறுமல்ல.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் உள்ள கவிஞர்கள் சிலர் , பல கவிஞர்களின் பாடல்களைக் "கொப்பி" அடித்தாலும் ஒப்புக்கொள்வதில்லை. அவர்களுடன் ஒப்பிடும்போது வைரமுத்துவின் பெருந்தன்மையையும் நேர்மையையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இதுபோன்ற தமிழ் நிகழ்ச்சிகள் சிறப்புறுவது, சிங்கையில் வாழும் தொழிலாளர்களால் தான். என் உறவினர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள். நானும் சிங்கையில் வசித்திருக்கிறேன்.
Post a Comment