சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்கிய சமயத்தில் தூர்தர்ஷனில் அவர் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது .நேயர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லும் விதமாக அமைந்த அந்த பேட்டியின் முதல் கேள்வி..
"நடிகர் திலகம் சிவாஜி பற்றி உங்கள் கருத்து?"
சூப்பர் ஸ்டார் பதில் :
"என்னை பல பேர் ஸ்டைல் கிங் அப்படி இப்படின்லாம் சொல்லுறாங்க .நான் ஸ்டைல் கிங்-ன்னா சிவாஜி சார் ஸ்டைல் சக்கரவர்த்தி"
சூப்பர் ஸ்டார் என்ன சொல்லுறார்ணு புரியாதவங்க கீழேயுள்ள பாடல் காட்சியை பார்க்கவும்.
வாய் திறந்து பேசவில்லை ,பாடவில்லை ,எழுந்து நடக்கவில்லை ,உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஆனாலும் ஸ்டைல் ..இது ஸ்டைல் !
Wednesday, April 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
Excellent!
I do agree with you!
ஜோ,
அருமையான பாடல், சிவாஜி அவர்களின் இயல்பான நடிப்பு. பார்த்தேன் ரசித்தேன்.
நண்பர் ஒருவருக்கு சுட்டிக் கொடுத்தேன்... சிவாஜி பாடல் என்றேன்... ஒரு வேளை ரஜினி படம் என்று நினைத்துவிடப் போகிறார் என்று நினைத்து சிவாஜி கனேசன் என்று மறுபடியும் சொன்னேன். சிவாஜியை இனி சிவாஜி கனேசன் என்று சொன்னால் தான் அவரை சொல்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள் போல் தெரிகிறது. :(((
ஜோ,
நல்லதொரு பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
கவியரசரின் அருமையான பாடல்.
மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை. நடிகர் திலகத்தின் அபார நடிப்பு.
நடிகர் திலகத்தைப் போல் நடிக்க இனி அவர் மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. அவர் விட்டுச் சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. :-))
சிவபாலன்,கோவியார்,வெற்றி..வருகைக்கு நன்றி!
//சிவாஜியை இனி சிவாஜி கனேசன் என்று சொன்னால் தான் அவரை சொல்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள் போல் தெரிகிறது. :(((//
அதை ஏன் கேக்குறீங்க :(((
//நடிகர் திலகத்தைப் போல் நடிக்க இனி அவர் மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.//
உண்மை!
Joe,
//வாய் திறந்து பேசவில்லை ,பாடவில்லை ,எழுந்து நடக்கவில்லை ,உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை .ஆனாலும் ஸ்டைல் ..இது ஸ்டைல் !
//
Exactly!
He is da KING!
-Mathy
Joe,
I don't understand anything stylish in the song. The song is good but failing to understand the style part:(
Yet Another Anony !
Yet another Anony,
புரியல்லிண்ணா விட்டுடுங்க .புரிய வைக்குறது கஷ்டம்.
வருகைக்கு நன்றி மதி!
ஒத்துக்கிறேன். ஒத்துகிறேன். அப்படியே ஒத்துக்கிறேன். நடிகர் திலகம்னா அது ஒருத்தர்தான். அவரோட எடம் அவருக்கு மட்டுமே.
சூப்பர் ஸ்டார் ஒரு தீவிர சிவாஜி ரசிகராக்கும் :-)
வாங்க ராகவன் ! நடிகர் திலகம் பேரைக் கேட்டாலே நீங்க வருவீங்கண்ணு தெரியும்
தேவ்,சூப்பர் ஸ்டார் ,சூப்பர் ஆக்டர் எல்லாரும் நம்ம நடிகர் திலகத்தோட ரசிகர்கர்கள் தான்.
அப்பூ, ஸ்டைல் சக்கரவர்த்தியைப் பத்தி சொல்ல இன்னும் நிறைய எடுத்துக்காட்டு இருக்கேப்பூ.
இந்தப் பாட்டும் நல்ல பாட்டு. குரல் சூப்பர் குரல்.
கண்ணன் அண்ணா சொன்னது சரி தான். இப்ப எல்லாம் இணையத்துல சிவாஜின்னு தேடுனா ரஜினி படம் தான் வருது. சிவாஜி கணேசன்ன்னு தேட வேண்டியிருக்கு.
//சூப்பர் ஸ்டார் ஒரு தீவிர சிவாஜி ரசிகராக்கும் :-)//
யாரு!! கன்னட சலுவாலிலே கோஷ்டியோடு சேர்ந்து சிவாஜி கணேசன் படம் ஓடிய தியேட்டரில் கல்லெறிந்தாரே.. அவரா
தாசு,
இது என்ன புதுசா இருக்கு! ரஜினிக்கு வட்டாள் நாகராஜ் பிடிக்கும்னு தெரியும் .ஆனா சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து தான் நடிகனாகணும்னு சென்னைக்கு ஓடி வந்ததும் தெரியும் .தியேட்டர்ல கல்லெறிஞ்சதெல்லாம் தெரியாதே!
உண்ணாவிரத ;) போராட்டத்தின் சமயம் வந்த ஒரு கட்டுரையில் இந்த சம்பவம் (படத்துடன் என்று நினைக்கிறேன்) குறிப்பிடப்பட்டிருந்தது . எந்த இதழ் என்று ஞாபகம் இல்லை. (பத்திரப்படுத்தியிருந்திருக்கலாம்..) ் சிவாஜி கணேசன் பார்த்துதான் நடிக்கவந்ததாக பேட்டிகளில் கூறுவதெல்லாம் ஜல்லி வகை சார்ந்ததுதான் என்று நினைக்கிறேன்.. விஜய் மற்றும் பலர் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்வதைப்போல..;)
சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான். நடிப்பின் இமயம் அவர்.. ஒரு நடையிலேயே நடிப்பை காட்டக்கூடியவர்..
இப்ப கூட வசந்த மாளிகை பாதுகிட்டு இருக்கேன்.. (ஆஸ் - தெ.ஆ மேட்ச பாக்க முடியல..)
Thanks for you work and have a good weekend
ஒரு பின்னூட்டம் போட்டேனே, ஜோ?
தருமி,
பின்னூட்டம் வரவில்லையே :(( (சின்ன பின்னூட்டம்னா குறைந்த பட்சம் அதன் உட்கருத்தையாவது மறுபடியும் பின்னூட்டுங்கள்..நன்றி)
ஜோ,
சமீபத்தில் black படம் பார்த்து வயத்தெரிச்சலாப் போச்சு - நம்ம ஆளுக்கு இந்த மாதிரி ஒரு படம்கூட இல்லாம போச்சே... அப்படி ஒரு டைரக்டர் இல்லாம போச்சேன்னு ஒரு கவலை. சிகப்பு விக்,ஜரிகை வச்ச கோட்டுன்னு அவர எவ்வளவு மட்டமா காட்ட முடியுமோ அப்படி காட்டின படங்களுமா எடுத்து, அவர் தரத்துக்குப் படம் இல்லாமலேயே போயிரிச்சேன்னு கவலை.
எனக்கு சுத்தமா அமிதாப் பிடிக்காது; ஆனா அந்தப் படம் black ... அழகு..ஜோ! நம்ம ஆளுக்கு அப்படி ஒரு படம் கூட அமையாம போச்சே... :(
தருமி,
உண்மை தான் .ஒரு மாபெரும் கலைஞனை அப்போதைய ரசிகர்களின் கைதட்டலுக்கு கூத்தாட வைத்து விட்டோம் .நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தவில்லை .கடைசி 20 வருடங்களில் முதல் மரியாதை ,தேவர் மகன் என்று இரண்டே இரண்டு உருப்படியான படங்கள். கடைசி காலத்தில் அவர் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்திலெல்லாம் நடிப்பதை பார்த்து கடுப்பாக இருந்தது .ஆனாலும் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ.
என்ன பெரிய சீன் எடுத்துப் போட்டுட்டீங்க, ஜோ!
'யார் அந்த நிலவு..ஏனிந்தக் கனவு'ன்னு ஒரு பாட்டு.. இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது. அதில சாய்ஞ்சு உக்காந்துகிட்டு .. ஒரு சிகரெட்டு குடிச்சிக்கிட்டே .. ம்ம்..ம்ம்.. ஒரே ஒரு தடவ பார்த்ததுதான் அப்டின்னாலும் .. கண்ணுக்குள்ளேயே நிக்குது...
அது கிடைக்குமான்னு பாருங்க..படம் பெயர்கூட நினைவில் இல்லை :(
தருமி,
படம் பெயர் சாந்தி .தேடிப்பார்த்து கிடைச்சா அதையும் போட்டுடுவோம். :)
// தருமி said...
ஜோ,
சமீபத்தில் black படம் பார்த்து வயத்தெரிச்சலாப் போச்சு - நம்ம ஆளுக்கு இந்த மாதிரி ஒரு படம்கூட இல்லாம போச்சே... அப்படி ஒரு டைரக்டர் இல்லாம போச்சேன்னு ஒரு கவலை. சிகப்பு விக்,ஜரிகை வச்ச கோட்டுன்னு அவர எவ்வளவு மட்டமா காட்ட முடியுமோ அப்படி காட்டின படங்களுமா எடுத்து, அவர் தரத்துக்குப் படம் இல்லாமலேயே போயிரிச்சேன்னு கவலை.
எனக்கு சுத்தமா அமிதாப் பிடிக்காது; ஆனா அந்தப் படம் black ... அழகு..ஜோ! நம்ம ஆளுக்கு அப்படி ஒரு படம் கூட அமையாம போச்சே... :( //
எனக்கும் அந்த வருத்தந்தாங்க...அதெப்படி அப்படி ஒரு அருமையான நடிகரை வீணடிக்க மனசு வந்ததோ! முதல்மரியாதை மாதிரி பரிச்சைக்கு நேரமாச்சு படத்தையும் சொல்லலாம். பார்த்தீங்களான்னு தெரியலை. வரது..வரதுன்னு அவரு...அடடா! முடிஞ்சா அந்தப் படம் பாருங்க. ஐயங்காரா வருவாரு....மிலிட்டிரி ஓட்டல் வாசல்ல நின்னு சிக்கன் 65 வாங்குவாரு...அந்த ஒரு காட்சி போதும். அடடா! என்னதான் பெரிய ஊதாக் கூளிங்கிளாஸ்னாலும் கீழ்வானம் சிவக்கும் படத்த மறக்க முடியுமா? அவரும் சரிதாவும் போடும் போட்டி...திருவிளையாடல்...சொல்லவே வேண்டியதில்லை. அதே மாதிரி நவராத்ரியில் வரும் அந்த கூத்துக்காரர். ரூப சித்திர மாமரக்குயிலே...தங்கச் சரிகைச் சேல எங்கும் பளபளக்க...ஆகா! ஆனா ஒன்னுங்க....அவரு போயும் போயும் தமிழனாப் பொறாந்தாரே...ஒரு மலையாளியாவோ மராட்டியாவோ தெலுங்காவோ பொறந்திருந்தா...நாம தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடியிருக்க மாட்டோமா!
Nadigar thilagam's style needs a separate blog. I like the cool suaveness. I feel the old tamil film-noirs testified NT to be Humphrey bogart of Thamizh cinema. In the same vein, he can do a Brando, Fonda and a Gene kelly. Seriously one should bow down to the man!
Thanks a lot for the wonderful song, Joe!
Post a Comment