Thursday, February 08, 2007

டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள்

டோண்டு ராகவன் என்ற வலைப்பதிவர் மிகுந்த அனுபவமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர் என்ற வகையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் மீறி மரியாதைக்குரியவராகவே கருதி வந்தவர்களில் நானும் ஒருவன்.

போலி டோண்டு விவகாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .போலி டோண்டு-வின் ஆபாச செய்கைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை ,நிராகரிக்கத் தக்கவை ,அருவருக்கத் தக்கவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .முகம் தெரியாத (சிலருக்கு தெரியும் என்கிறார்கள்) அந்த நபரின் செய்கைகள் டோண்டுவை மட்டுமல்ல ,வலைப்பதியும் பல சகோதரிகள் உட்பட சம்பந்தம் இல்லாத பலரையும் மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மோசமானதாக உருவெடுத்தது .தமிழ் வலைப்பதிவுலகில் உருப்படியான விவாதங்களை பின்னுக்குத் தள்ளி ,தேவையில்லாத இந்த விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டது துரதிருஷ்ட வசமானது.

ஆனால் இந்த விவகாரம் அணைந்து விடாமலும் ,அதன் மூலம் தனக்கு கிடைக்கும் விளம்பரமும் அனுதாபமும் தளர்ந்து விடாமலும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்ததில் டோண்டு அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை தொடக்கத்திலிருந்து கவனித்து வரும் நடுநிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் .

இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த புதிதில் என் போன்ற சிலர் டோண்டு அவர்களிடம் பல முறை வேண்டுகோள் வைத்தோம் .தயவு செய்து இந்த புண்ணை கிளறாதீர்கள் .ஆறப்போடுங்கள் .ஏட்டிக்கு போட்டியாக மீண்டும் மீண்டும் இதை கிளறுவதால் எந்த பயனும் இல்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம் .ஆனால் டோண்டு அவர்களின் பதில் "நீ என்ன அவனுக்கு வக்காலத்தா .அவனைக் கேட்க வேண்டியது தானே!" என்ற ரீதியிலே இருந்தது .

இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார் ,யாரென்றே தெரியவில்லை ,சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த ,புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் படி வேண்ட முடியும் .ஆனால் அந்த நபரே நம்மை எதிர் தரப்பு ஆதரவாளன் என முத்திரை குத்தி அதிலும் விளம்பரம் தேடி ,அனுதாபம் பெற முயற்சிக்கும் போது எழும் எரிச்சலை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு "நீ ஒன்றில் என் பக்கம் .அல்லது அவன் பக்கம்" என்று புஷ் தனமாக டோண்டு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் கூறு போட்டு குழு மனப்பான்மையை தொடங்கி வைத்தார் .செல்லுகிற இடமெல்லாம் இதைப் பற்றியே எல்லோரும் பேசும் படி செய்து விளம்பரம் தேடிக்கொண்டார் .இதை சுட்டிக்காட்டிய அனைவரையும் போலியின் ஆதரவாளன் என வாய் கூசாமல் பழி சுமத்தினார் .புதிதாக வலைப்பதிபவர்கள் மேலோட்டமாக இதை புரிந்து கொண்டு ,டோண்டு பக்கம் தவறே இல்லாதது போல நினைக்கும் படி செய்தார்.

இவரின் சாதி சாதி என பிடித்து தொங்கும் விவகாரத்தில் நான் நுழைய விரும்பவில்லை .தொங்கிக் கொள்ளட்டும் .எனக்கு அதைப்பற்றி விவாதிக்க கூட ஆர்வமில்லை .இத்தனையும் மீறி இவரை நான் டோண்டு சார் அல்லது டோண்டு ஐயா என்று வயது ,அனுபவம் காரணமாக மரியாதையாகத் தான் அழைத்து வந்தேன். அதனால் சில மிரட்டல் கடிதங்களும் கிடைக்கப்பெற்றேன் .அதைப்பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ்- சமீபத்திய ஒலிப்பதிவில் நான் டோண்டு விவகாரத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட்ட போது அவருக்கு இந்த பின்னணி தெரியாது என குறிப்பிட்டிருந்தார் .அவரை போல இந்த விவகாரம் சூடு பிடித்த பின்னர் வலைப்பதிய வந்தவர்களுக்கும் இந்த பின்னணி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனை பதிகிறேன்.

போலி டோண்டுவோ அல்லது ஆபாசமாக எழுதும் யாரோ அவர்களை நான் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை .ஆனால் டோண்டு மிக முக்கியமான வலைப்பதிவராக அறியப்பட்டவர் .சரியான விளம்பரப் பிரியர் .போலி டோண்டு விவகாரத்தில் இந்த பிரச்சனையை முடிக்கும் ஆர்வத்தை விட இதை வைத்து தான் எப்படி சுய விளம்பரம் தேடிக்கொள்ளலாம் ,வெளிச்சத்திலேயே இருக்கலாம் என்ற ஆர்வம் தான் அவருக்கு அதிகம் இருந்ததாக என் மனசாட்சி சொல்லுகிறது .

எப்போதெல்லாம் இந்த விவகாரம் சிறிது அமுங்கி ,டோண்டு வெளிச்சத்திற்கு வெளியே போகிறாரோ ,அப்போதெல்லாம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதனை கிண்டி கிளறி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ,வெளிச்சம் மீண்டும் தன் மீது விழுவதை ரசிப்பவர் டோண்டு அவர்கள் .அதனால் தமிழ் வலையுலகில் ஏற்படும் திசை திருப்பல்கள் குறித்தோ அல்லது பாதிக்கப்படுவோர் குறித்தோ அவருக்கு கவலையில்லை .மாறாக இன்னும் எத்தனை பேரை பாதிக்க வைக்கலாம் ,அதன் மூலம் கூட்டம் சேர்க்கலாம் ,அதை வைத்து கும்மியடிக்கலாம் என்பதே அவரின் நோக்கமாக இருந்ததாக நான் நினைக்கிறேன்.

தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது ,தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயத்தை ,தனக்கு சாதகமான நேரத்தில் பொதுவில் வெளிப்படித்திவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல நடிப்பது ,எங்கு சென்றாலும் இந்த விவகாரத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அனைவருக்கும் ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் அவரின் புத்திசாலித் தனமான (அப்படி அவர் நினைத்துக்கொள்ளுகிற) உத்திகள் .

டோண்டு அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .அவரின் வயது ,அனுபவம் காரணமாக நாம் அவரை மதிக்கிறோம் என்பதற்காக ,அவரின் சிறுபிள்ளைத் தனமான வழிமுறைகளும் ,விளக்கங்களும் நமக்கு புரியாமல் இல்லை .பல நேரங்களில் இவரிடம் போய் விவாதித்து இவரின் விதண்டாவாதத்தில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமே என்பதால் தான் பலர் இவரை தவிர்த்து வருகிறார்கள் .ஆனால் அவர்களையும் இவர் விடுவதில்லை .இவருக்கு பின்னூட்டம் கொடுக்காதவர்களெல்லாம் போலிக்கு பயந்தவர்கள் ,விட்டால் போலிக்கு நண்பன் என்று ஓயாமல் சொல்லி வருவார்.

நிறைய சொல்லலாம் .இப்போதைக்கு இது போதும் .இப்போது அவர் பல முகமெடுத்து (ஆமய்யா ! ஆமா! ஆபாசமாகவெல்லாம் எழுதவில்லை) மாட்டிக்கொண்டது பற்றி அவரின் "மீசையில் மண் ஒட்டாத' விளக்கங்கள் குறித்து நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

48 comments:

Anonymous said...

எனக்கும் இது போல தான் கருத்துகள் இருக்கின்றன!! இவராவது விட்டுக்கொடுத்து போயிருக்கலாம்!! (போயிருந்தால் பிரச்சினை இவ்வளவாக வந்திராது)

குமரன் (Kumaran) said...

அப்படியே என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பதிவு இது ஜோ. நானும் பதிவெழுத வந்த நாள் முதல் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் சொன்னவையே என் எண்ணங்களும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள் ஜோ. போலிப்பின்னூட்டங்களைப்பற்றி அவர் எழுதிய ஆரம்ப இடுகையில் சொல்ல சில யோசனைகளில் ஒன்றான பதிவர் எண்ணைப் பெயருடன் சேர்த்துப் பயன்படுத்துவதைச் செய்தவருக்கு, கூகுள் நிறுவனத்துக்கு இப்பிரச்சினையைப்பற்றி விரிவாக எழுத ஏனோ விருப்பமே இருக்கவில்லை. வெறும் விதண்டாவாதங்களையே தொடர்ந்து சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருந்தார். இவருடைய விளம்பர ஆசை புரிந்ததும், நமக்கென்ன என்று திரும்பி விட்டேன். இப்போது நடந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து சப்பைக்கட்டுக் கட்டியபடி இருப்பது ஏனோ ஆச்சரியமளிக்கவில்லை.

-மதி

Anonymous said...

மதி வேறு இங்கே பின்னூட்டம் போட்டிருக்கிறார். குமரன் எண்ணம் சரியாக இருக்கிறது...

யாரொ ஒருத்தர் சொன்னமாதிரி டோண்டுவை பற்றி இன்னும் 48 மணி நேரத்தில் பதிவு போடவில்லை என்றால் தமிழ்மணத்தில் இருந்து பதிவு நீக்கப்படுமாம்...

ஓக்கே ?

செந்தழல் ரவி

ஜோ/Joe said...

செந்தழல் ரவி என்ற பெயரில் அனானி பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது .அதை செந்தழல் ரவி தான் இட்டாரா என அவர் உறுதிப்படுத்தினால் வெளியிடலாம்.

Anonymous said...

இந்த மாதிரி விளம்பரப் பிரியர்கள் சினிமாவில் தன் படத்தயே தடை செய்யுமளவிற்கு சென்ரார்கல் என்ரு படித்துல்லேன். ஒரு வேலை போலி கூட இவராகவே செய்த வேலையாகவும் இருக்கலாம் ( முழுவதும் இல்லாவிட்டாலும் ) என்பது எனது தாழ்மையான கருத்து.

மகேஸ் said...

Now this is my opinion too...

சினேகிதி said...

\\இப்போது நடந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து சப்பைக்கட்டுக் கட்டியபடி இருப்பது ஏனோ ஆச்சரியமளிக்கவில்லை.
\\

eatho nadakuthu/nadanthirukukthu endu theriuthu anal ena enduthan theriyella.

dondu(#11168674346665545885) said...

முதற்கண் நல்ல பதிவுக்கு பாராட்டுகள். உங்களிடம் நல்ல சொல்லாட்சி உள்ளது. அதையும் ரசிக்கிறேன். நான் பள்ளியில் தமிழ்க் கல்வி பற்றி பதிவு போட்ட போது முதன்முதலாக என்னுடன் முழுமையாக ஒத்துப் போவதாக நீங்கள் சொன்னதின் நயம் நினைத்து ரசித்து புன்னகைத்தேன்.

//இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார், யாரென்றே தெரியவில்லை, சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது, இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த, புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம்தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும்படி வேண்டமுடியும்.//

அருமையாகக் கூறினீர்கள் நண்பர் ஜோ அவர்களே. நான் கூறுவதை இப்போது கவனியுங்கள். நீங்கள் மேலே கூறியதை நான் வேறு ஒரு கோணத்தில் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். அதன் கருத்தை இங்கு மீண்டும் தருவேன்.

தெருவில் இருவர் சண்டையிடுகிறார்கள். அப்போது சாதாரணமாக என்ன நடக்கிறது? சற்று யோசியுங்கள். எல்லோரும் போய் ஒருவனை மட்டும் பிடிப்பார்கள், ஐயா சண்டை வேண்டாம் என்று மன்றாடுவார்கள். அவன் தன்னைக் காத்துக் கொள்ள முடியாது தடுப்பார்கள். அதற்குள் இன்னொருவன் அவனை நாலு குத்து அதிகம் விடுவான். அப்புறம் இந்த ஒருவனே தன்னை பிடிக்க வரும் நல்ல எண்ணங்கள் உடையவரிடமிருந்து கஷ்டப்பட்டு மீண்டு, தன்னைக் காத்து கொள்ள வேண்டும்.

பிறகு சாவகாசமாக ஏன் என்னை மட்டும் பிடித்து கொண்டீர்கள் என்று கேட்டால், "இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார், யாரென்றே தெரியவில்லை, சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த, புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும்படி வேண்டமுடியும்" என்ற ரேஞ்சில் பதில் வரும். அந்த ஒருவனது எதிர்வினை அதற்கப்புறம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? அதிலும் தன்னை வந்து பிடிப்பவர்களில் எதிரியின் நலன் விரும்பிகளும் இருப்பார்கள் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தால் நீங்கள் அவன் நினைப்பது குற்றம் என்பீர்களா.

ஒன்று பிடித்து கொள்வதானால் இருவரையும் பிடியுங்கள். இல்லை அந்த இன்னொருவனை பிடித்தால் தம் மூக்கில் குத்திவிடுவானோ என நினைப்பவர்கள் தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள். அனுகூல சத்ருக்களாக மாறாதீர்கள்.

"டோண்டு ராகவன் என்ற வலைப்பதிவர் மிகுந்த அனுபவமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர் என்ற வகையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் மீறி மரியாதைக்குரியவராகவே கருதி வந்தவர்களில் நானும் ஒருவன்."
ஆனால் நான் உங்களை இன்னும் மதிக்கிறேன், மரியாதைக்குரியவராகவும் கருதுகிறேன்.

நான் எடுத்த முயற்சிதான் டோண்டுவின் யோம் கிப்பூர் யுத்தம் பற்றிய பதிவு. அதன் பலன் என்ன ஆயிற்று என்பதையும் பார்த்தீர்கள்தானே? அது வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கான எதிர்ப்பதிவு அசிங்கமான வார்த்தைகளில் வந்தது.

அதன் தொடர்ச்சி பதிவில் நான் என்ன சொன்னேன். இப்பிரச்சினை பற்றி இனி பேசப்போவதில்லை என்று. ஆனால் நான் இந்தளவுக்கு பேச நேர்ந்தது குறித்து வருந்துகிறேன். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

இன்னும் சிலர் எனக்கு பின்னூட்டம் இட்டதால் தாங்களும் திட்டப்பட்டோம் என்ற ரேஞ்சில் பேசுபவர்கள். ஐயா உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. ஆனால் அதனால் திட்டப்பட்ட உங்கள் நலனுக்காக நான் சில காரியங்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். நான் கூறுவது என்னவென்றால், உங்களிடம்தான் எளிய தெரிவு உள்ளதே. எனக்கு பின்னூட்டமிடாமல் இருப்பதுதானே அது. ஆனால் என்னுடைய ஆப்ஷன்? நான் வலைப்பதிவதை நிறுத்த வேண்டும் அல்லது நீங்கள் நினைப்பது போல நான் பார்த்து பார்த்து நாலுபேர் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் பயந்து எழுத வேண்டும்.

மன்னிக்கவும் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவன் அதற்கெல்லாம் ஆளில்லை என்பதை மிக மரியாதையுடன் தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஜோ, அது நான் தான்...சும்மா காமெடியாத்தானே எழுதினேன்...வெளியிடுங்க..

பிலாகர் பீட்டா சொதப்பலால் லாகின் செய்ய முடியல...

- செந்தழல் ரவி

dondu(#11168674346665545885) said...

மதி கந்தசாமி அவர்களே,

நீங்கள் எனக்கு அக்காலத்தில் செய்த டெம்பிளேட் உதவிக்கு மிக்க கடமைப் பட்டவன். அதற்காக முதற்கண் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

கூகள் விஷயத்தில் நீங்கள் நான் அவர்களுக்கு எழுதிய புகார் சம்பந்தமான பேப்பர்களின் நகல் கேட்டீர்கள். ஆனால் அவற்றில் மற்ற பதிவாளர்களை பற்றி குறித்த விவரங்களும் இருந்தன. ஆகவே உங்களுக்கு அவற்றைத் தர நான் ஒப்பவில்லை. மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

Test

ஜோ/Joe said...

டோண்டு சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் மாற மாட்டீர்கள் என்பதற்கு உங்கள் பின்னூட்டமே சாட்சி.

நான் சொன்னது..
//அதனால் சில மிரட்டல் கடிதங்களும் கிடைக்கப்பெற்றேன் .அதைப்பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.//

நீங்கள் சொல்லுவது..
// ஐயா உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. ஆனால் அதனால் திட்டப்பட்ட உங்கள் நலனுக்காக நான் சில காரியங்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.//

நான் எதையும் எதிர்பார்க்கவில்லை ஐயா! உங்களோடு மாறு பட்ட கருத்து கொண்டோரும் மிரட்டலை எதிர் கொண்டோம் என்பதை மட்டும் சொல்லுகிறேன் .அதற்காக நான் பின்னூட்ட பயப்படுபவன் அல்ல .

//நான் வலைப்பதிவதை நிறுத்த வேண்டும் அல்லது நீங்கள் நினைப்பது போல நான் பார்த்து பார்த்து நாலுபேர் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் பயந்து எழுத வேண்டும்.//

நான் சொன்னதை நிரூபிக்கிறீர்கள் .தயவு செய்து இந்த முத்திரை குத்தும் வேலையை விடுங்கள்.நீங்கள் வலைப்பதிவதில் எனக்கு ஒன்றும் நட்டமில்லை .ஆனால் நீங்கள் இந்த விவகாரத்தில் உங்கள் அணுகுமுறையை கொஞ்சம் மாற்றியிருந்தால் தமிழ் வலைப்பதிவுவுலகுக்கே நன்மை செய்திருக்க முடியும் .

கருப்பு said...

இத்தனைபேர் வழிய வழிய காறித் துப்பியும் திருந்தாத ஜென்மத்திற்கு இனியும் எத்தனை பேர் எழுதினாலும் மண்டையில் ஏறாது.

அடுத்து அடடா என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் எழுதி தனக்குத்தானே பின்னூட்டமும் போட்டுக் கொள்ளட்டும்!

சூப்பர் பதிவு ஜோ.

Anonymous said...

//அணுகுமுறையை கொஞ்சம் மாற்றியிருந்தால் தமிழ் வலைப்பதிவுவுலகுக்கே நன்மை செய்திருக்க முடியும்//

விதி யாரை விட்டது...ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான், டோண்டு மாறியிருந்தால் தமிழ் வலைப்பதிவுலகின் மன்னனாக மதிக்கப்பட்டிருப்பார். அவரிடம் பாசிடிவ் திங்கிங் மிஸ்ஸிங்.

Anonymous said...

ஜோ,
இவ்விஷயத்தில் ஒதுங்கிப் போன பல மூத்த பதிவாளர்களின் குரலாய் உங்கள் எண்ணம் வந்துள்ளது.டோண்டு அவர்களிடம் சொல்ல நினைத்தது ஒன்றுதான். உங்களின் ஒரு பதிவை நான் பாராட்டியிருக்கிறேன். நீங்கள் அதிகமாய் பேசப் போக, உங்கள் தோழர்கள் மெல்ல கழண்டுக் கொள்ள ஆரம்பிக்க, உங்கள் தவறை உணர்ந்து நீங்கள் சில காலம் மெளனமாய் இருந்ததாய் ஒரு பழைய
சம்பவத்தை எழுதியிருந்தீர்கள். இப்பொழுது நடப்பதுப் பார்த்தால், நீங்கள் அதே முறையைக் கையாண்டால் நல்லது.
இவ்வளவு பேர்கள் சொல்லும்பொழுது, அதில் ஏதாவது உண்மை இருக்குமா என்று யோசிப்பது புத்திசாலித்தனம். இது உங்களுக்கு அறிவுரையாய் நினைக்காதீர்கள். யாருக்கும் அறிவுரைச் சொல்லும் தகுதி எனக்கு இருப்பதாய் நான் என்றும் என்னை நினைத்துக் கொண்டது இல்லை. தமிழ் மணத்தில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்து மனம் பொறுக்காமல் வேதனையை பகிர்ந்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உஷா
ஜோ, புது பிளாக்கர் அக்கவுண்ட்டில் என் பெயரில் போட்டால் போக மறுக்கிறது. அதனால் அனானிமஸ்ஸாய் போடுகிறேன்.

ஜோ/Joe said...

சுரேஷ் பாபுவிடமிருந்து தனிமடலில் வந்த பின்னூட்டம்..
---------------
என்னால் பிளாக்கர் பின்னூட்டமிட முடியாமையால் மின்னஞ்சலில்
அனுப்புகிறேன். அன்புகூர்ந்து பிரசுரிக்கவும்
----------
ஜோ,

அருமையான பதிவு. பதிவிடுகிறவர்கள் பெரும்பான்மையினரின் உள்ளத்தைப்
பிரதிபலிப்பதாக உள்ளது.

நேற்று என் பதிவை லேபிள் கட்டும்போதுதான் பார்த்தேன், டோண்டு என்ற ஒரு
குறிச்சொல்லில் மட்டும் 5 பதிவுகள் தேறுகின்றன, அவற்றை மீள்வாசிப்பு
செய்கையில், எப்படி எண்ணங்கள் மாறி வந்திருக்கின்றன என்பது
ஆச்சரியப்படுத்தியது.

எழுத எவ்வளவோ இருக்கும்போது இந்த விஷயத்துக்கு 5 பதிவே டூ மச் என்று
தோன்றியது, நான் மட்டுமின்றி பல வேறு பதிவர்களும் இந்த அளவாவது
போட்டிருப்பார்கள்! எவ்வளவு பெரிதாக்கப்பட்டிருக்கிறது ஒரு அசிங்கமான
விஷயம்?

போலிக்கு எதிர்ப்பு என்பது எல்லா பொதுவான பதிவர்களும் விதிவிலக்கின்றிச்
செய்வது. ஆதரவளிப்பவர்கள் என்று யாரேனும் இருந்தாலும் அவர்களும் அதை
வெளிப்படையாகச் செய்ய முடியாது - ஆனால் அவனை எப்படி கண்டிப்பது? ஓடும்
புகைவண்டியின் கழிப்பறையில் காவியங்கள் எழுதுபவனை தேடிக் கண்டுபிடித்து
திருத்த யாருக்கு நேரமும் அவசியமும் இருக்கிறது! அய்யோ என்னைப்பற்றி
கழிப்பறையில் எழுதிவிட்டான் அவனுக்கு எதிராக போர் தொடுக்கிறேன், ஒற்றர்
படை அமைக்கிறேன், வியூகம் அமைக்கிறேன் என்றெல்லாம் சொல்வது எவ்வளவு
வியர்த்தமானது, வீணானது என்பது சொல்லித்தெரிய வேண்டிய வயதில் அவர் இல்லை.
தெருவில் நடக்கும் சண்டை என அவர் சொல்லும் உதாரணத்தைவிட, இந்த உதாரணம்
இன்னும் பொருத்தம் என்பது எ தா அ.

ஆரம்ப காலத்தில் அனானி பின்னூட்டங்களை நிறுத்தியது, எலிக்குட்டி
புலிக்குட்டி என சாதாரண பின்னூட்டங்களில் திண்டாடியது, மட்டுறுத்தல்
போன்ற அசௌகரியத்தை (ஆம், என்னைப்பொறுத்தவரை அது அசௌகரியம்தான்)
ஏற்கவேண்டிவந்தது எல்லாம் மற்ற பதிவர்கள் இந்தப்பிரச்சினைக்காக செய்த
தியாகம்தான். (மட்டுறுத்தல் நான் விரும்பி ஏற்ற அசௌகர்யம்தான் - அதன் இதர
நல்விளைவுகளுக்காக). இப்போது, போர் யுக்தி அது இது என்று சொல்வதும்
அனானி ஆப்ஷனைத் திறந்துவிட்டேன் உங்கள் தயவு இனி தேவையில்லை என்று
சொல்வதும் கொள்கைரீதியாக ஒத்துப்போனவர்களையும் துண்டிக்கிறது என்பதை ஏன்
மறக்கிறாரோ!

சரி போகட்டும்.. இதுவும் கடந்து போம்:-)

Anonymous said...

மிக நல்ல பதிவு ஜோ. நல்ல analysis. தமிழ் மணத்தில் நல்ல சூழல் நிலவ வேண்டுமெனில் இது போன்றவர்களை விலக்கி வைப்பதன் மூலமே நடைமுறை படுத்த முடியும்.

Gurusamy Thangavel said...

பலரும் கருதுவதுமாதிரி திருவாளர். டோண்டு அவர்களின் தேவையற்ற பிடிவாதம் தமிழ்ப்பதிவுலகிற்கு ஒரு சாபக்கேடாகப் போய்க்கொண்டிருக்கிறது. நான் சில நேரங்களில் வலைப்பதிவுகளை வெறுத்து ஒதுங்கியதின் மிக முக்கியமான காரணம் டோண்டு Vs. போலி விவகாரம் எனில் அது மிகையில்லை என்பதே என் எண்ணம். பல நேரங்களில் இப்பிரச்சனை மிக்க ஆயாசம் தரும் ஒன்றாகிவிட்டிருந்தது. இப்பதிவிலும் டோண்டு அவர்களின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது இது இன்னும் தொடருமோ என்ற்ற கவலையையும் அளிக்கிறது.

தகடூர் கோபி(Gopi) said...

ஜோ,

இந்தப் பிரச்சனையில் பார்வையாளனாய் மட்டும் இருக்கும் என்னை தேவையில்லாமல் உள்ளே இழுத்துவிட சில முறை முயற்சிகள் நடந்தது.

ஒவ்வொரு முறையும் "நான் பார்வையாளன் மட்டுமே" என்று என்னை அறிந்தோருக்காக அழுத்தம் திருத்தமாய் தெரிவித்த போதும், ஒரு முறை நான் போலியிடம் "நல்ல பெயர்" வாங்கவே அவ்வாறு செய்வதாய் ஒரு ஒரு அனானி திசைதிருப்பப் பார்த்தார்.

புதியவர்களுக்காக,

எனக்குத் தெரிந்து இந்தப் பிரச்சனைக்கு அடித்தளம் அமைத்த தமிழோவியம் வலைப்பதிவு இதுதான்.

தகடூர் கோபி(Gopi) said...

//ஒன்று பிடித்து கொள்வதானால் இருவரையும் பிடியுங்கள். இல்லை அந்த இன்னொருவனை பிடித்தால் தம் மூக்கில் குத்திவிடுவானோ என நினைப்பவர்கள் தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள். அனுகூல சத்ருக்களாக மாறாதீர்கள்.//

//உங்களிடம்தான் எளிய தெரிவு உள்ளதே. எனக்கு பின்னூட்டமிடாமல் இருப்பதுதானே அது. //

தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் உங்களுக்கு பின்னூட்டமிடாமல் இருக்கும் தெரிவை செய்யவிட்டீர்களா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

பி.கு:நான் எதையும் உங்களுக்கு "நிரூபிக்கவோ" இது குறித்து மேலும் "விவாதிக்கவோ" போவதில்லை. நன்றி வணக்கம்.

dondu(#11168674346665545885) said...

//தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் உங்களுக்கு பின்னூட்டமிடாமல் இருக்கும் தெரிவை செய்யவிட்டீர்களா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.//
என்ன குழந்தைத்தனமான பேச்சு கோபி அவர்களே. நான் யார் தெரிவுகளை செய்ய விட? எல்லோரும் சுய அறிவு உள்ளவர்கள்தானே.

ஆனால் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொசு said...

நல்ல பதிவு ஜோ.

நான் நினைக்கும் எல்லாவற்றையும் நீங்களே எழுதி விட்டீர்கள்.

இதைப் படித்தபிறகும் ஒருவர் திருந்தாவிட்டால் அவர் மனிதரே இல்லை.

டிஸ்கி:- தெய்வமான்னு கேட்கிறீர்களா?

தகடூர் கோபி(Gopi) said...

//நான் யார் தெரிவுகளை செய்ய விட? எல்லோரும் சுய அறிவு உள்ளவர்கள்தானே.//

ஆமாம். ஆனால் நான் சொன்னது "யாரிடமும் உங்களுக்கு பின்னூட்டமிடச் சொல்லி நேரிலோ/தொலைபேசியிலோ/மின்னஞ்சலிலோ கேட்கவில்லையா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என்ற அர்த்தத்தில்.

பின்னூட்டமிடுவதை "படிப்பவர் தெரிவுக்கு விடுபவர்" யாரும் இவ்வாறு கேட்கமாட்டார்கள் என்பது என் எண்ணம்.

அட... நான் ஏன் இன்னும் உங்களிடம் விவாதித்து விரயம் செய்து கொண்டிருக்கிறேன்.

சரி, மீண்டும் நன்றி. வணக்கம்.

Anonymous said...

டோண்டு பத்தி வந்ததிலேயே மிக சிறந்த பதிவு இதுதான்.100% சரியான கருத்துக்கள்.இதை டோண்டு தினமும் ஒரு முறை படிக்க வேண்டும்.

G.Ragavan said...

கவனிக்காமல் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய போலி அந்த அளவிற்கு வளர்ந்ததற்கு தவறாக எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பதுதான் எனது கருத்தும். நீங்களும் அதைத்தான் விரிவாகப் பதிவாக இட்டிருக்கின்றீர்கள் ஜோ.

டோண்டு, இதற்காக நீங்கள் மனம் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறது. ஆகையால் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

ஜோ/Joe said...

நொந்த அனானி என்ற பெயரில் வந்த பின்னூட்டம்..மரியாதை குறைவான வாக்கியம் நீக்கப்பட்டிருக்கிறது
------------------------------
//ஒன்று செய்யுங்கள், நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் எடுத்து விடுங்கள். எனக்கு அவை தேவையில்லை//
http://thamizhachi.blogspot.com/2007/02/blog-post.html
இதை படிச்சீங்களா?
இதுக்கு என்ன பதில் சொல்றிங்க

ஜோ/Joe said...

ராகவன் ஐயங்கார்,
உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் .குலத்தையெல்லாம் இங்கு இழுக்க தேவையில்லை .

மனதின் ஓசை said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஜோ அய்யா,
நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை.
அதுக்காக உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிரேன்.
(உங்க கிட்ட பேர் சொல்ரதுல தப்பு இல்ல)

ஆனந்த் என்கிர நொந்த அனானி

நியோ / neo said...

>> ஆனால் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன். >>

அடச்சீ இதெல்லாம் என்ன பேச்சு. இவர் சண்டைக்கு ஊரெல்லாம் பலியிடுவாராமா? இவர் ஒவ்வொரு வலைப்பதிவாகப் போய் 'பரப்புரை' செய்து போலியை சீண்டி சீண்டி விடவில்லையா, மற்ற்வர்களையும் பயன்படுத்திக் கொண்டு?

'புணுகு பூசிய நீதிபத்திகள்' சிலரை வைத்துக் கொண்டு என்னென்ன மாதிரியெல்லாம் தேவையற்ற விளம்பரம் இவருடைய 'போலி' ஆட்டத்துக்கு தரப்பட்டது - என்ப்து பழைய பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். 6 மாதம் முன்பு 8 மாதம் முன்பு பதிய வந்தோர்க்கு இது குறித்த புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

ஜோ,

டோண்டு இந்தப் பதிவையும் தன் சுய விளம்பரத்துக்குப் பயன்படுத்துகிற அபாயம் உள்ளது, தன்னிலை விளக்கம் என்கிற பெயரில்.

இவர் 'லாவணிக் கச்சேரி' நடத்த உங்கள் பதிவும் இரையாகிவிட வேண்டாம். அவருடைய பின்னூட்டங்களை இனி இங்கு இடாமல் இரு்ப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது.

அவர் வேண்டுமானால் "என்னைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் விடைகள் (Dondu FAQ)" என்று அவர் பதிவில் ஒரு புதுப்பதிவு போட்டுக் கொண்டு அங்கேயே விடை சொல்லிக் கொள்ளட்டும்.

மற்றவர் பதிவில் வந்து - அப்படித்தான் சண்டை கிளப்புவேன் என்று இவர் கூச்சலிடுவது நாராசத்தின் உச்சம்.

எப்போதும் போல் சிறப்பாக ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு. அதற்கு மதி போன்றவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டிருப்பது சாட்சி. :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இரண்டு பேர் மோதிக் கொள்ளுகிற போது ஒருவர் வரம்பு மீறி செல்கிறார் ,யாரென்றே தெரியவில்லை ,சொன்னாலும் கேட்பார் என்ற நம்பிக்கை இல்லாத போது ,இன்னொரு பக்கம் இருக்கிற நமக்கு தெரிந்த ,புரிய வைக்க முடியும் என்று நம்பப்படுகிற ஒருவரிடம் தான் அவர் தரப்பிலிருந்து பிரச்சனையை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் படி வேண்ட முடியும் .ஆனால் அந்த நபரே நம்மை எதிர் தரப்பு ஆதரவாளன் என முத்திரை குத்தி அதிலும் விளம்பரம் தேடி ,அனுதாபம் பெற முயற்சிக்கும் போது எழும் எரிச்சலை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்//

நீங்கள் வயது குறைந்தவரானாலும்;முதிர்ந்த அனுபவத்துடன் அணுகியுள்ளீர்கள். அண்ணா !இதை ஏன் ?புரிந்து கொள்ளவில்லை எனப் புரியவில்லை.
அவருக்குப் பின்னூட்டமிட்டு;ஆபாசத் தாக்கல் எனக்கும் வந்தது.(சிரிப்பதா? அழுவதா? எனவே அந்த நபரைப் பற்றித் தெரியவில்லை); எனக்கே தெரியாத என் பாட்டியையெல்லாம் கூப்பிட்டிருந்தார்.
ஆனால் போலிக்குப் பயந்து; நான் டொண்டு அண்ணாவுக்கு பின்னூட்டமிடாமல் விடவில்லை. அவர் எழுதும் விடயம் எனக்குப் பிடிபடவில்லை.
எனினும் அனுபவசாலி என்ற ரீதியில் அவர் தமிழ்மணத்தை; ஆரோக்கியமான விவாதமேடையாக்க உதவுவார் என நம்புகிறேன்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

//ஓடும்
புகைவண்டியின் கழிப்பறையில் காவியங்கள் எழுதுபவனை தேடிக் கண்டுபிடித்து
திருத்த யாருக்கு நேரமும் அவசியமும் இருக்கிறது! அய்யோ என்னைப்பற்றி
கழிப்பறையில் எழுதிவிட்டான் அவனுக்கு எதிராக போர் தொடுக்கிறேன், ஒற்றர்
படை அமைக்கிறேன், வியூகம் அமைக்கிறேன் என்றெல்லாம் சொல்வது எவ்வளவு
வியர்த்தமானது, வீணானது என்பது சொல்லித்தெரிய வேண்டிய வயதில் அவர் இல்லை.
தெருவில் நடக்கும் சண்டை என அவர் சொல்லும் உதாரணத்தைவிட, இந்த உதாரணம்
இன்னும் பொருத்தம்//

அது!!!!

Anonymous said...

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் - அடிப்படைவாத கிறித்தவ வெறியர், போலியின் அடிவருடி என்று சமயம் பார்த்து உங்களை துவைத்துத் தொங்கவிட்டு பெண்டு நிமிர்த்தாமல் விடமாட்டார்கள் பாருங்கள். இரண்டு வருடங்களாக நடந்து வரும் கூத்து தானே இது.

Anonymous said...

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

மனித‌ன்.

ஜோ/Joe said...

மனிதன்,
இது என்ன உள்குத்தா அல்லது சீரியஸாகவா ?

இந்த பதிவு சம்பந்தமா எதாவது இருந்தா சொலுங்க.

மணியன் said...

ஜோ, எப்போதும் போல் மிக நடுநிலையோடு எழுதப்பட்ட பதிவு. நானும் ் ஆரம்பத்தில் அவரும் ஒரு காரணம் என்று சொல்லப் போக முகமூடி பதிவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
உங்களைப்போலவே, கருத்து வேறுபாடுகளுக்கப்பால், அவர்பால் எனக்கிருந்த மதிப்பு அவரது சமீப நடவடிக்கைகளால் பெருதும் அடிபட்டுள்ளது. அவர் நம்பும் மகரகுழைகாதனையும் முழுவதும் நம்பாமல் படுகுழியில் விழுந்து விட்டாரே :(

குளவி கொட்டி கொட்டி புழுவையும் குளவியாக்கி விடுமாம். அது அவருக்கு நடந்திருக்கிறது போலும்.

Anonymous said...

//ஜோ, எப்போதும் போல் மிக நடுநிலையோடு எழுதப்பட்ட பதிவு.//

correct!

Anonymous said...

தலைவலியும், வயித்து வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
ஜோ , நீங்கள் இன்னும் போலியால் பாதிக்கப்படவில்லை என்கிற தைரியத்தில் எழுதியுள்ளீர்கள்.

நிச்சயமாக் நீங்கள் போலியால் பாதிக்கப்பட மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் இந்த வலையுலகில் திமுக மற்றும் திராவிட ஆதரவு நிலையை எடுத்துள்ளதால் உங்களுக்கு அந்த பாதிப்பு இருக்காது.

ஆனால் உங்களுக்கும் ஒரு போலி வந்து உங்கள் அம்மா,அக்கா, தங்கையைப்பற்றி அசிங்கமாக எழுதும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப்பார்த்தால், டோண்டு பக்கம் உள்ள நியாயம் புரியும்.

உங்களுக்கும் ஆபாச பின்னூட்டங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அதை வெளியிடும் உரிமை உங்களிடம் உள்ளது. ஆனால் போலிகளின் ஆபாச பதிவை, தனி நபர் தாக்குதல் பதிவை தடுக்கும் உரிமை யாரிடம் உள்ளது. உங்களால் முடியுமா?

முடிந்தால் டோண்டுவின் பெயரில் வெளிவந்துள்ள அனைத்து ஆபாசப்பதிவுகளையும் நீக்கிவிட்டு இங்கு வந்து பேசுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பாதிப்புக்குள்ளான ஒரு பதிவர்.

ஓகை said...

ஜோ அவர்களே, சொல்ல நினைத்த கருத்துகளை கோர்வையாக நல்ல மொழியில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் பல பதிவுகளில் இதை கவனித்திருக்கிறேன். என் பாராட்டுகள்.

இந்தப் பதிவில் உங்கள் கருத்துகள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. டோண்டுவை விமர்சித்து பலரும் பதிவெழுதியிருக்கிறார்கள். வெளிப்படையாக. அவரும் அதற்கு அவருடைய பதிலை சொல்லுகிறார். எல்லாம் வெளிப்படையாக நடக்கிறது. நான் நம்புவது என்னவென்றால் அவருடைய செயலகள் மற்றும் பதிவுகள் யாரையும் பாதிப்பது இல்லை. இது போன்ற காரியங்கள அவர் தொடர்ந்தாலும் அது யாரையும் பாதிக்கப் போவதும் இல்லை. போலியிடமிருந்து பதில் வரவேண்டாமென்றால் அவருக்கு பின்னூட்டமிட வேண்டாம். டோண்டுவை நாம் தாராளமாக ஒதுக்கி வைக்கலாம். அவர் வேறு பெயரில் பின்னூட்டமிடுவதில் நான் எந்த தவறையும் காண முடியவில்லை. இது இணையம் தந்திருக்கும் வசதி. பலரும் இவ்வாறு செய்வார்கள் என்றே நம்புகிறேன். (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை. ஊகம் மட்டுமே.)

வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதும் அல்லது தனக்குத் தானே வேறு பெயர்களில் பின்னூட்டமிட்டுக் கொள்வதும் தொழில்நுட்ப ரீதியாக தடுக்கப் பட்டால் ஒழிய இவற்றை நிறுத்த இயலுமா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. மற்றவர்களைப் பாதிக்காத வரையில் இச்செய்கைகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்த காரணங்களால் உங்கள் பதிவின் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை.

ஓகை said...

// போலி டோண்டு விவகாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்து அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .போலி டோண்டு-வின் ஆபாச செய்கைகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை ,நிராகரிக்கத் தக்கவை ,அருவருக்கத் தக்கவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது //

யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பது முற்றிலும் தவறான கணிப்பு. இப்போது வந்த சில பதிவுகளில் டோண்டுவுக்கு போலியே மேல் என்ற கருத்து எதிரொலிப்பதைப் பார்த்தேன்.

ஆபாசப் பின்னூட்டங்கள் டோண்டுவுக்குப் பின்னூட்டமிட்டால் மட்டும் வருவதில்லை. சில கருத்துகளை நாம் பதிவுகளில் வெளியிடும்போதும் வருகின்றன. எனக்கு வந்திருக்கிறது.

சங்கரய்யா said...

ஜோ, உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன். (போலி) டோண்டு் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு, வலைபதியாமல் உள்ள ஆரம்ப கால பதிவர்கள் அதிகம்.

Anonymous said...

ஓகை, சமீபத்தில் பெண் பதிவாளர் மதுராவுக்கு அனுப்பட்ட ஆபாச பின்னுட்டம் பற்றி மா.சிவகுமார் பதிவுப் போட்டு இருக்கிறார். எனக்கு தெரிந்து மதுரா யாருக்கும் கமெண்ட் போட்டுப் படித்ததில்லை. இந்த போலி விவகாரம் பல முறை என் பதிவில் வேண்டியமட்டும் சொல்லியாகிவிட்டது என்பதால், இனி எந்த கருத்தும் சொல்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். என்னால் முடிந்தது மதுராவுக்கும், மா.சிவகுமாருக்கும் ஒரு மெயில் போட்டேன்.
சில பதிவாளர்கள் பெயரில் போலியாய் அருவருப்பு தரும் ஆபாச மெயில் அனுப்பவுதும் டோண்டு விவகாரமும் ஒன்று என்றுப் போல பேசுவது எனக்கு புரியவில்லை.
இப்படிக்கு,
உஷா

Anonymous said...

//டோண்டு அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .அவரின் வயது ,அனுபவம் காரணமாக நாம் அவரை மதிக்கிறோம் என்பதற்காக ,அவரின் சிறுபிள்ளைத் தனமான வழிமுறைகளும் ,விளக்கங்களும் நமக்கு புரியாமல் இல்லை .பல நேரங்களில் இவரிடம் போய் விவாதித்து இவரின் விதண்டாவாதத்தில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டுமே என்பதால் தான் பலர் இவரை தவிர்த்து வருகிறார்கள்//

உண்மை!

மற்றுமொரு முக்கியமான விஷயம்
வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றவர்
கூட்டம் முடிந்தவுடன் திரும்பியிருக்க வேண்டும்.

அதை விடுத்து வந்திருந்த இளைஞர்களூடன், தன் வயது அனுபவம், மரியாதை இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு 'Bar & Non-Veg Restaurantற்கு போனதும் தவறு!

குடிப்பது அவரது உரிமை. அவர் வேறெங்காவது சென்று அதைச் செய்திருக்கலாம.

அப்படிச் சென்றதால் என்ன ஆயிற்று?
இப்போது அதற்கும் சேர்த்து அவர்கள் கும்மி அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

"சேரிடம் அறிந்து சேர்" என்பார்கள்.
அந்த புத்தி இவருக்கு ஏன் இல்லாமல் போயிற்று?

ஜோ/Joe said...

//அதை விடுத்து வந்திருந்த இளைஞர்களூடன், தன் வயது அனுபவம், மரியாதை இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு 'Bar & Non-Veg Restaurantற்கு போனதும் தவறு!

குடிப்பது அவரது உரிமை. அவர் வேறெங்காவது சென்று அதைச் செய்திருக்கலாம.

//

இவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க முடியுமா ? இவையெல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயங்கள் .அவற்றில் நான் தவறு காணவில்லை

Madhu Ramanujam said...

எனக்கு இந்த விஷயத்தில் வேறு சில கருத்துக்கள் உள்ளன ஜோ. சில விஷயங்களை கருத்தில் கொள்ளலாம் ஆனால் இங்குள்ள எல்லாவற்றையும் முழுதும் ஏற்க முடியவில்லை.

Anonymous said...

டோண்டு விளம்பரப் பிரியர் என்றால், அவரைப் பற்றி எழுதி விளம்பரம் தேடும் நீங்கள் யார்?

உங்கள் புரஃபைலில் உள்ள படத்தை எடுத்து, அந்த பச்சிலங்குழந்தையைப் பற்றி ஆபாசமாக ஒரு போலி பதிவு போட்டால், அந்த பதிவிற்கும், பதிவருக்கும் ஆதரவாக உங்கள் கூட்டாளிகளான லக்கிலுக், குழலி, வரவணையான் மற்றும் நியோ போன்றவர்கள் வந்து உங்களைப் போல இப்படி ஒரு பதிவு போடுவார்கள்.

கொஞ்சம் காத்திருங்கள்...


திருந்துங்கையா...

கொசு said...

மதுசூதனன் அவர்களே,

செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.

உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.

ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.

பைதபை நானும் உம்ம ஜாதிதான்!

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.

சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives