Friday, September 08, 2006

அன்னையே! ஆரோக்கிய அன்னையே!

Photobucket - Video and Image Hosting

அன்னையே!
ஆரோக்கிய அன்னையே!
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே!

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் உன் கருணையை கூறும்
மடல் விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தை தந்தோம்
கண்ணென எம்மை காத்தருள்வாயே!
கர்த்தரின் தாயே! துணையென்றும் நீயே!

பாடல் ஒலிவடிவம்

கருணை மழையே மேரி மாதா பாடல் -ஒலிவடிவம்

(செப்டம்பர் 8 -அன்னை மரி பிறந்தநாள் பெருவிழா)

20 comments:

Sivabalan said...

பதிவுக்கு நன்றி.

மகிழ்ச்சியளிக்கிறது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...
இன்றோ ஆரோக்கிய அன்னையின் அவதார தினம்?
அலைகள் தாலாட்டும் வேளாங்கண்ணியில், மக்கள் அலைகள் தாலாட்ட, திருத்தேரில் பவனி வரும் நாள் இன்று தானே?

சின்ன வயதில் படித்த ஏசு காவியம் பாடல் ஒன்று தான் ஞாபகம் வருகிறது!

"நிலவெனும் வதனம் நெற்றி
நெடுமழை அனைய கூந்தல்
மலரெனும் கண்கள் கைகள்
மரியம்மை அழகின் தெய்வம்!"

வாழ்க வாழ்க வாழ்க மரியே!

கோவி.கண்ணன் [GK] said...

அருள்நிறைந்த மரியே வாழ்க !

என்று ஓதிக் கொண்டு .. நாகையில் இருந்து வேளாங்கன்னிக்கு ... எங்கள் புனித அந்தோனியார் பள்ளி அருள்தந்தையுடன் நடந்து சென்றது இன்றும் நினைவுக்கு வந்துவிட்டது !

பதிவிட்டதற்கு நன்றி ஜோ!

துளசி கோபால் said...

காலையில் தினக்கேலண்டரில் தாளைக் கிழிச்சப்பவே பார்த்தேன்.
தேவமாதா பிறந்த நாள்னு போட்டுருந்துச்சு.
'ஹேப்பி பர்த்டே மேரி'ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்.

பதிவு அருமையாப் போட்டுருக்கீங்க.

பிடிச்சிருக்கு.

வாழ்த்து(க்)கள் மாதாவுக்கு.

'அருள் தாரும் தேவ மாதாவே.......

ஆதியே இன்ப ஜோதி.........'

ரவி said...

பாடலை கேட்க முடியவில்லை, தனிமடலில் அனுப்பி விட்டு விடுங்கள்பாடலை கேட்க முடியவில்லை, தனிமடலில் அனுப்பி விட்டு விடுங்கள்

Thirumozhian said...

கடற்புறத்தான் அவர்களே,

அன்னை மேரியின் பிறந்த தின மகிழ்ச்சியினில் நானும் கலந்து கொள்ளுகிறேன்.
அது "அழகுள்ள வேலையில்" என்று நினைக்கிறேன். அந்த வார்த்தைகளை நீங்கள் 'போல்டு' பண்ணியிருப்பதிலேயே உங்களது சந்தேகம் புரிகிறது.
வேலை என்றால் கடல் என்றொரு பொருளும் உண்டு.

திருமொழியான்.

ஜோ/Joe said...

திருமொழியான்,
//அது "அழகுள்ள வேலையில்" என்று நினைக்கிறேன். //

அல்ல. வேளாங்கண்ணியை சுருக்கமாக 'வேளை' அல்லது 'வேளை' நகர் என்று குறிப்பிடுவார்கள் .எனவே 'அழகான வேளை நகரில் ஆலயம் கொண்ட அன்னை' என்பது தான் அதன் பொருள் .'வேளை' என்பதை 'நேரம்' என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது என்று தான் 'போல்டு' செய்தேன்.நன்றி!

மணியன் said...

அன்னை மேரியை நானும் இன்று நினைவு கூர்ந்து வணங்குகிறேன்.தேவமாதா அமைதி எங்கும் நிலவிட அருள் பாலிக்கட்டும்!!

டிபிஆர்.ஜோசப் said...

வேளை நகர் அன்னையின் படமும் ஒங்க பாட்டும் ரொம்பவும் பொருத்தமா, அம்ச்மா இருந்ததுங்க..

உடனே டெஸ்க் டாப்ல சேவ் பண்ணிட்டேன்.. நன்றி..

அன்னை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும்..

Muse (# 01429798200730556938) said...

எனக்கு பிடித்த ஸினிமா பாடல்களில் "கருணை கடலே, மேரி மாதா, கண்கள் திறவாயோ" பாடலும் ஒன்று. அந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அன்னையிடம் என் இதயம் என்னையும் கண்கொண்டு காணும்படி வேண்ட ஆரம்பிக்கும். அந்தப்பாடலை தங்களின் இந்த ப்ளாக்கில் இணைக்க முடியுமா?

அன்னையை எல்லாரும் வணங்கட்டும். அவள் அருளை பெறட்டும்.

ஜோ/Joe said...

Muse,
தங்கள் வேண்டுகோளுக்கிணங்க அந்த பாடலை பதிவில் இணைத்துள்ளேன் .மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

ஜோ. சிறுவயதில் ஒருமுறை பெற்றோருடனும் தம்பியுடனும் சுற்றுலா சென்றிருந்த போது வேளாங்கண்ணிக்கும் நாகை தர்காவிற்கும் சென்று வந்த நினைவு மிகப் பசுமையாக இருக்கிறது. நாங்கள் சென்ற போது தேவாலயம் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். ஆரோக்கிய மாதாவையும் அவர் கையில் இருக்கும் பாலகனையும் தரிசித்தது இன்றும் கண் முன்னால் நிற்கிறது.

வெற்றி said...

ஜோ,
படம் மிக அருமை.
அனைவர்க்கும் அன்னையாம் ஆரோக்கிய அன்னையின் திருநாளான இந் நன்னாளில், எல்லோரும் சுபீட்சமுடன் வாழ கருணை புரிய வேண்டுமென அன்னையை வணங்கி நிற்கிறேன்.

ஜோ/Joe said...

சிவ பாலன்,கண்ணபிரான்,ரவி சங்கர்,கோவி.கண்ணன் ,துளசியக்கா,ரவி,திருமொழியான்,மணியன்,ஜோசப் சார்,Muse,குமரன்,வெற்றி ,பாஸ்டன் பாலா...உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அன்னை தன் அருள் மழையால் நனைவிக்க அவளை பிராத்திக்கிறேன்.

G.Ragavan said...

அன்னையின் அன்பு மழையில் உலகம் தழைக்க என்னுடைய வாழ்த்துகள்.

இந்தியப் பிறப்பு மதங்களைத் தொடர்ந்து அடுத்ததாக என்னை ஈர்ப்பது கத்தோலிக்க மதம்தான். பிறந்த ஊரும் அருணகிரி கற்றுத் தந்த வழியும் காரணமாக இருக்கலாம்.

நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா நின்ற காவியமாம்
காலத் திரையில் எழில் கொஞ்சும் கனகக் கருணை ஓவியமாம் - டீ.எம்.எஸ் குரலில் இந்தப் பாடலைக் கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி.

ஜோ, இந்தப் பாட்டு கிடைக்குமா? குறைந்த பட்சம் கேட்கும் இணைப்பு!

ஜோ/Joe said...

ராகவன்,
பாட்டு கிடைக்குமாவா? உங்களுக்கு இல்லாததா .இதோ சுட்டி..

http://www.manavai.com/songs/m1_8.ram

கானா பிரபா said...

அன்னை மேரியின் கருணையில் உலகம் நிரந்தர சமாதானத்தை நாடட்டும்.

Muse (# 01429798200730556938) said...

ஜோ,

ரொம்ப ரொம்ப நன்றி. இப்போது அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அன்னையே, பாரதியர்கள் அன்பும், ஸந்தோஷமும் கொண்ட வாழ்வைப் பெறட்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

2004ல் அன்னை வேளாங்கன்னியைத் தரிசித்தேன். பிரான்சின் லூட்ஸ் மாதா கோவிலுக்கு நிகரான பராமரிக்கப் படுவது மிக மகிழ்வைத் தந்தது. உலகம் பூராகவும் இத்திருநாளைக் கொண்டாடுகிறார்கள். போற்றுவோம் அன்னையை!
யோகன் பாரிஸ்

மதுமிதா said...

அருமை ஜோ

இரண்டு பாடல்கள்
ஆறு வருடங்கள் முன்பு எழுதியது

நினைவு படுத்தி விட்டீர்கள்
தேடி எடுத்துப் போடுகிறேன்

நன்றி ஜோ

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives