Friday, July 21, 2006
மகா கலைஞன் நினைவாக
காலத்தை வென்ற கலைஞனே !
ஞாலத்தில் உனை மிஞ்சும்
நடிகன் நானறியேன்.
தமிழரின் பெருமையே!
வாழ்க நீ தந்த கலை!
(ஜூலை 21 -நடிகர் திலகம் நினைவு நாள்)
Subscribe to:
Post Comments (Atom)
நாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை
26 comments:
காலத்தை வென்றவன்
நடிப்பிற்கு நடிப்பானவன்
மறவாத காவியப் பாத்திரங்களும்
தினந்தோறும் தொழும் தெய்வங்களும்
வரலாற்று மாமணிகளும்
உன் வடிவில்
உன் குரலில்
உன் அசைவில்
உன் நினைவில்
கண்டு கொண்டு இன்னும் இருக்கிறோம்!
நின் பெயரும் புகழும் வாழ்க!
வங்கக் கடலோரம்
தங்கப் பொலிவாகும்
உங்கள் சிலையெழுகவே!
(இந்தப் பின்னூட்டம் இடுகையில் தொலைக்காட்சியில் நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது)
ஒப்பற்ற தெய்வீக கலைஞன்.சிவாஜிக்கு சிலை வைப்பது மிகவும் பாரட்டதக்க ஒன்று.
சிம்மக்குரலோன்,
நடிகர் திலகம்,
கலைகுரிசில்
பத்மஷ்ரீ
செவாலியே
தன் நடிப்புத் திறனால்
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் ஒருசேர வேறுபாடின்றி பாராட்டப்படுபவன்
என் நெஞ்சை விட்டு நீங்ககலாது நிற்கும்
நடிப்புலகமாமேதை சிவாஜி கணேசன் அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறேன்!
வாழ்க அவர் புகழ்!
மாமேதைக்கு எனது வணக்கங்கள்.
தமிழை எப்படி உச்சரிப்பதென எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நடிகர் திலகம். வீரபாண்டிய கட்டப்பொம்னாக வந்து தமிழ் உணர்வை ஊட்டியவர்.
தமிழை, தமிழ்த்திரை உலகை அலங்கரித்த உன்னதத் தமிழன். வாழ்க அவர் புகழ் நீடூழி.
பல வேடங்களில் அவரின் புகைப்படங்கள் பார்க்கும்போது அழகாய்த்தெரிகிறது... இவருக்கு எத்தனைமுகங்கள்.. இவருள் எத்தனை மனிதர்கள்..
நம்பி,
நடிகர் திலகத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது 60-வதுகளிலேயே கொடுக்கப்பட்டது .பின்னர் பத்ம பூஷண்-ம் கொடுக்கப்பட்டது .இறுதியாக பிரான்சு அரசு 'செவாலியே' அளித்த பிறகு ,இனிமேல் சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்பதால் தாதா சாகே பால்கே விருதும் கொடுக்கப்பட்டது
எங்கள் எல்லோர் நெஞ்சங்கள் எல்லாம் எப்போதும் நிரைந்து இருக்கும் சிவாஜி,மறக்க மாட்டோம் உன்னை. மறக்க முடியாது என்பதால். யார் இருக்கிறார்கள் உன் இடத்தை நிரப்ப.
வாழ்வின் எல்லாக் கணங்களில் சிவாஜியின் சாயலோடு வலர்ந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.நன்றி கடற்புறத்தான். அவரைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு கொடுத்ததிற்கு.
ராகவன் சொல்வது போல் சிவாஜியைத் திரையில் பார்க்கும்போதெ நாங்கள் உணர்ச்சி வசப்படுவோம்.
வாழ்க சிவாஜி.
பல ஆண்டுகளுக்கு முன் சிவாஜியை பற்றி தொலைக்காட்சியில்
ஒரு நிகழ்ச்சி படைக்கப்பட்டது. வியட்நாம் வீடு சுந்தரம் தொகுத்திருந்தார். அவரின் ஒப்பில்லா நடிப்பில் இருந்து பல சிறந்த காட்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
"நவராத்திரி" - இந்த ஒரு படம் போதும் அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பதை காட்ட.
ஜோ, சிம்மக்குரலோனை பற்றி ஒரு தொடர் எழுதுங்களேன்.
அனானி ஒருவர் ஜீ.வி யில் நடிகர் திலகத்துக்கு சாதி சாயம் பூசி எழுதப்பட்டுள்ள கவர் ஸ்டோரியை குறிப்பிட்டு தமிழருக்கு சிவாஜி என்ன செய்து விட்டார் என்று கேட்டிருக்கிறார் .தமிழனை பெருமைப் படுத்துவதற்கு ஒருவர் அரசியல் வாதியாக இருந்து ,தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுக்கொரு துண்டு இலவசமாகக் கொடுத்தால் தான் உண்டு என்பதில்லை .கலையுலகில் இமயமென திகழ்ந்து பல்வேறு நாடுகளால் வியந்து போற்ற பட்டு தமிழ்ருக்கு பெருமை தேடித்தந்தவர் நம் நடிகர் திலகம் .சாதி மதங்களை கடந்த கலை அவருடையது.
சிம்மக்குரலோன் சிலை காண வாரீர் -கலைஞரின் கவிதை அழைப்பு
---------------------------------------------------
கடற்கரையில் காமராஜர் சாலை நடுவில்
காந்தியடிகள் வாழ்த்து பெற்று நிற்பது போல்
கம்பீரப் பொலிவுடன் நிற்கின்ற கலையுலகக் கதிரவனாம்-சிவாஜி
கணேசனுக்கு சிலை அமைக்கும் விழாவுக்கு வருகை தாரீர்!
நாடறிந்த கலைவேந்தன், நடிகர் திலகமென நானிலம் புகழும் மைந்தன்
ஏடு புகழ இதயம் பெற்றோர் எல்லோருமே இணைந்து புகழ
பார் புகழும் பகுத்தறிவுப் பெரியார் வழங்கிய விருது;
சீர் திகழும் சிவாஜிக்குக் கிடைத்தபோது;
வேர் பழுத்த பலாவாக இனித்ததம்மா நெஞ்சம்!
""யார் பக்கமிருந்தாலும் எக்கட்சி சேர்ந்தாலும்;
என் தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க!"", என்று
நன் மனப் பேரறிஞர் அண்ணாவும் வாழ்த்தினார், அன்று!
எம்மிருவருக்கும் தாய்; அன்னை அஞ்சுகமென்றும்; அந்த
அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நாமிருவர் என்றும்-
நட்புக்கு இலக்கணமாம் நடிகர் திலகம் சிவாஜி,
நாடறிய நினைவு மலர் ஏடொன்றில் எழுதியதை;
என்றும் மறக்காத என்னிதயம் தான்
இன்று விடுக்கிறது அழைப்பென எண்ணி வாரீர்!
ஐம்பத்தி நான்கு ஆண்டின் முன்னே
அடியேன் தீட்டிய பராசக்தியில் அறிமுகமாகி; அந்தத்
தீபாவளி நாளில் திரையுலகில் ஓர் திருப்புமுனையை
திசையெட்டும் ஒளியூட்டிக் காட்டிய தீரன்;
பட்டாக்கத்தி வீசி வசனப் பொறி பறக்க வீரபாண்டியக்
கட்டபொம்மனாக மட்டுமல்ல;
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் படுகிழமாய்ப்
பரமனடிமை அப்பர் எனும் அருள் ஞானியாகவும்-
கலையுணர் மக்கள் நெஞ்சத்தில் எல்லாம்
நிலை பெயராமல் நிற்கின்ற
சிம்மக் குரலோன் செந்தமிழ்ச் செல்வன்
சிலை வடிவாய் அமைந்து;
சிக்கல் தவிர்த்து வெளிப்படுகின்ற செவாலியரின்,
செம்மாந்த தோற்றம் காண வாரீர்! வாரீர்!
நிலை பெயராமல் நிற்கின்ற
சிம்மக் குரலோன் செந்தமிழ்ச் செல்வன்
சிலை வடிவாய் அமைந்து;
சிக்கல் தவிர்த்து வெளிப்படுகின்ற செவாலியரின்,
செம்மாந்த தோற்றம் காண வாரீர்! வாரீர்! //
எப்பவும் சிக்கல் எதிலும் சிக்கல்னு நடிகர் திலகத்துக்கு சிலை வைப்பதிலும் சிக்கல் வந்ததையும் மீறி அவருக்கு சிலை வைக்கும் மன உறுதி அவருடைய நெருங்கிய நண்பர் கலைஞருக்குத் தவிர வேறு யாருக்கு வரும்?
நட்புன்னா காலம் கடந்தும் இருக்கணுங்கறது நல்லதொரு உதாரணம் கலைஞர்-ந.தி நட்பு.
35 ஆண்டுகளுக்கு முன் இலங்கை சென்ற நடிகர் திலகம் இலங்கை வானொலிக்காக அறிவிப்பாளர் அப்துல் ஹமீது-க்கு அளித்த பேட்டியின் ஒலி வடிவம்
வரலாற்று நாயகன் சிவாஜீக்கு என் வணக்கங்கள்.
நடிகர் திலகத்தினுடனான பேட்டி நல்லாருந்தது ஜோ.
இத்தனை திறமை இருந்தும் என்ன ஒரு தன்னடக்கம்.
வாழ்க்கையிலும் நடிச்சிக்கிட்டிருக்கறவங்கதான் உண்மையான நடிகர்னு அவர் சொன்னது யாருன்னு எனக்கு புரிகிறது..
இந்த மாதிரி ஒலி ஃபைல்ஸ பளாக்ல போடறதுக்கு தனியா சாஃப்ட்வேர் வேணுமா ஜோ?
தமிழுக்கு என்ன செய்தார் என்றா கேட்கின்றீர்கள்....அட அறியாதவர்களே! தமிழை எழுதத் தெரிந்தவன் எழுதிப் புத்தகம் போடுகிறான். அவனுக்குத்தான் காசு போகிறது. அவன் தமிழுக்கு என்ன செய்தான் என்றா கேட்பீர்கள். தமிழைப் பாடத் தெரிந்தவன் பாடித்தான் பிழைக்கிறான். அவன் தமிழுக்கு என்ன செய்தான் என்றா கேட்பீர்கள். தமிழைப் பேசத் தெரிந்தவன்....நடிக்கத் தெரிந்தவன் அதைச் செய்துதான் பிழைப்பான். தமிழனாகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து உலகளவில் புகழ் பெற்ற ஒரு கலைஞனை, நடிகனை உங்கள் வறட்டு அரசியலுக்கு இதுவும் கேட்பீர்கள்...இன்னமும் கேட்பீர்கள்.
ஐயோ பாவம்...மற்ற நடிகர்களைப் போல அவனுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை...தெரிந்திருந்தால் முதல்வராகியிருப்பான். அப்பொழுது அவன் காலைத் தொட்டிருப்பீர்கள். ம்ம்ம். கப்பலோட்டிய தமிழன் பார்த்து விட்டு அப்பா எனக் கதறினாராம் வ.உ.சியின் பிள்ளை. அந்தப் பாசத்தினை உருவாக்கினானே அந்தக் கலைஞன். அது மறந்ததா. அரசியல் பிரச்சனைகளுக்காக தமிழகத்தில் இருந்தவர்கள் அன்று அவருடைய திரைப்படங்களை தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கவில்லை. ஏதோ...இன்று அவனுக்கு ஒரு சிலை. அது பொறுக்கவில்லையா...
சிவாஜி என்ற அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு என் இதய அஞ்சலிகளும், தகுந்த நேரத்தில் அவருக்கு சிலையெடுத்தவர்களுக்கு என் நன்றிகளும் உரித்தாகுக.
ராகவன்,
எவ்வளவு அழகாக சொன்னீர்கள்! மிக்க நன்றி!
சிவாஜி கணேசன், காலத்தை வென்றவர்..
இவருக்கு எத்தனை முகங்கள்.. இவருள் எத்தனை மனிதர்கள்..
ஏற்றமிறைத்தாயா, நாற்று நட்டாயா என்ற வசனத்தை பேசாத வாய்களுண்டா??
நடிப்புக் கடலுக்கு சிலை, கடலின் அருகே இன்று !!
வாழ்க சிவாஜி புகழ் !!
பிரான்சில்,எந்தப் பெருநகரங்களிலும்,கிராமங்களிலும் எத்துறையிலிருந்தும் சரித்திரத்தில் இடம் பிடித்தவர் பெயரில் வீதிக்குப் பெயர்,சிலை என்பன இருக்கும்; ஏன் வெளிநாட்டவர்களுக்குக் கூட உ+ம் avenue de Mahathma Gandi அது போல் எங்கள் சிவாஜி கணேசனுக்கு; தமிழகக் கிராமங்கள் தோறும் ஒரு வீதிக்குப் பெயர் வைத்துப் பெருமைப்படுத்துவதுடன்;பெருநகரங்களில் சிலையும் வைப்பதால் ,தமிழன் தன்னைப் பெருமைப்படுத்தலாம்.
யோகன் பாரிஸ்
யோகன் பாரிஸ்,
நல்ல கலைஞர்களை மதிக்கும் தன்மை இருந்ததால் தான் பிரான்ஸ் அரசாங்கம் தேடிப் பிடித்து நம் சிவாஜிக்கு 'செவாலியே' விருது கொடுத்தார்களோ?
வாழ்க சிவாஜி அவர்களின் புகழ். நடிகர் திலகம் நடிப்புக்கு ஆற்றிய சேவையை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
நம் வாழ்நாளில் நாம் பெற்ற பாக்கியமாய் இருந்திட்ட நல்ல ஒரு நடிகருக்கு -
- சிலை வைத்தவருக்கு நன்றி.
- சிலை வைத்த அந்த நாளில் அதற்கொரு பதிவிட்டவருக்கு நன்றி.
- அந்தப் பதிவில் அவரின் புகழ்பாடிய நல்ல கலாரசிகர்களுக்கு நன்றி.
//இவரைப்பற்றி சிலர் இவருக்கு ஏன் சிலை என அவரது ஜாதியை இழுக்கின்றனர். இவர் வந்தேறியாம் !!, கூத்தாடியாம் !!!, ஆட்டாக் காரனாம்.!!! ஆதிக்கச் சாதி வெறியனாம்.!!!!//
நடிப்பில் இமயத்தை வாழ்ந்த காலத்தில் எத்தனையே எதிர்ப்புகள் அத்தைனையும் மீண்டு முன்வந்தார். அந்த மாமனிதனுக்கு சிலை வைப்பதிலும் பிரச்சனை.
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத் தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார் இது ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு இவர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்தது.
இவரைப்பற்றி பேசினால் இந்த பதிவே போதாது. அப்பர், கட்டபொம்மன்,சிவாஜி, கப்பல் ஓட்டிய தமிழர், திருமங்கையாழ்வார், ராஜராஜனை யாரேனும் கண்டதுண்டா ராகவன் தாங்கள் சொன்னீர்களே தில்லையில் ஓலைச்சுவடி எடுத்ததை அதை கண்முன்னே காட்டியவனல்லவா?
என்மகன் பேரன் சொல்வான், 'சிவாஜி வாழ்ந்த காலத்தில் என்த ந்தை என் தாத்தா வாழ்ந்தார்கள்' என்று
சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை அடிக்கடி அனுப்பி வரும் அனானி அவர்களுக்கு!
இந்த பதிவு எம் மனம் கவர்ந்த மாபெரும் நடிகனின் நினைவு நாளை முன்னிட்டு இடப்பட்டது .அவர் பற்றிய உங்கள் குரோதங்களை வெளிப்படுத்தும் விவாதக்களம் அல்ல .அவற்றை இங்கே வெளியிட முடியாது .முடிந்தால் எனக்கு மின்னஞ்சல் (djmilton at gmail.com) அனுப்பவும் .பதிலளிக்க முயற்சிக்கிறேன்.நன்றி!
இன்று சிவாஜி பிறந்த நாள்..வாழ்க அவர் புகழ்
-செந்தில்
Post a Comment