Thursday, July 06, 2006

இந்து மதம் -சில சந்தேகங்கள்

சமீபத்திய ஐயப்பன் கோவில் குறித்த சர்ச்சைகளிலும் ,அது தொடர்பான நம்பிக்கைகளோடு இணைந்த விவாதங்களிலும் எனக்கு கருத்து இருந்தாலும் இது வரை கலந்து கொள்ளவில்லை .ஆனால் சில அடிப்படை நிலைப்பாடுகள் குறித்த நியாயமான ஐயப்பாடுகள் எனக்கு இருப்பது மறுக்க முடியாது .அவை ஒரு வேளை என் அறியாமையினாலோ அல்லது சரியான புரிந்துணர்வின்மையாலோ தோன்றியிருக்கலாம் .ஒரு கிறிஸ்தவனான நான் இது குறித்து பொதுவில் அதுவும் வலைப்பதிவுகளில் அறிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகளை முன் வைத்தால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற குழப்பம் காரணாமாக நீண்ட தயக்கம் இருந்து வந்திருக்கிறது.

450 வருடகாலமாக கிறிஸ்தவர்களாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்த நான் ,என் பிறப்பால் தான் நான் கிறிஸ்தவன் ஆனேனேயன்றி ,என் சுய தேடலின் விளைவாக நான் கிறிஸ்தவன் ஆகவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன் .அதனால் ஏற்பட்ட ஒரு சிறு தெளிவில் பிற மதங்களை மரியாதையோடும் ,திறந்த மனத்தோடும் தான் நான் அணுகி வந்திருக்கிறேன் .நண்பர்கள் பலரோடு பல முறை இந்து கோவில்களுக்கு செல்ல நேரிட்ட போது ,அங்கு விபூதி வைத்துக்கொள்வதிலோ ,அல்லது என் நண்பர்கள் அர்ச்சனை செய்யும் போது என்னுடைய பெயரையும் சேர்த்துச் சொன்ன போதும் எனக்கு சிறு நெருடலோ ஏற்பட்டதில்லை .அங்கிருக்கின்ற ஆச்சார முறைமைகளுக்கு என்னால் (என் அறியாமையால்) எந்த சங்கடமும் நேர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தால் கூடுதல் கவனம் எடுத்து மரியாதையுடன் பணிவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன். அந்த தகுதியின் அடிப்படையில் எனது இந்து சகோதரர்களிடம் சில விளக்கங்கள் கேட்கலாமென்றிருக்கிறேன்.இவை சமீபத்திய சர்ச்சைகளுக்கு சம்பந்தம் இல்லாத பொதுவான கேள்விகளாகவும் இருக்கலாம்.

(சில கேள்விகள் குமரன் அவர்கள் பதிவில் கேட்கப்பட்டு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார்)

1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்கு செல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை (எனக்கு தெரிந்து சிலர் கிறிஸ்தவ கோவில்களுக்கு கூட வந்திருக்கிறார்கள் ,ஆனால் சைவக்கோவிலுக்குள் வர மறுத்து விட்டார்கள்). இது ஏன்?

2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை .பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஒருவன் செய்த தீவினையினால் ஏற்பட்டதாக இருந்தால் நியாயம் இருக்கிறது .உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டான் .அதனால் அது 'தெய்வ குற்றம்'ஆகி அவன் மேல் இறைவன் கோபமாக இருக்கிறார் என்றால் அது புரிந்து கொள்ளக்கூடியது .ஆனால் பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை மீறுவதாலேயே ஏற்படுவது போலவும் ,தனிப்பட்ட முறையில் இறைவனை நாம் முறைத்துக் கொள்ளுவதால் அவர் கோபப்படுவது போலவும் அதனால் 'தெய்வ குற்றம்' ஆகிவிட்டதாகவும் சொல்லுவதாகவே நான் புரிந்து கொண்டிருக்கிறேன் .ஆனால் இதற்கு சில மனதளவில் இல்லாத வெளி அடையாங்கள் மூலம் சிலவற்றை செய்யும் போது கடவுள் மனம் குளிர்ந்து தெய்வ குற்றத்தை போக்கி விடுவதாகவும் நம்பப்படுகிறதே ? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை .இறைவன் அகத்தை விட புறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நிறுவுவது சரியா?

3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? மனிதர்களுக்கு அதனால் சில அசவுகர்யங்கள் இருக்கலாம் ,ஆனால் இறைவன் சன்னிதானத்தில் அது தீட்டாக பார்க்கப்படுவது எந்த விதத்தில் ?

4.மீரா ஜாஸ்மின் என்ற பெண் கிறிஸ்தவர் .அவர் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு கோவிலுக்குள் சென்று வணங்கி விடுகிறார் .ஒரு இடத்தின் புனிதத் தன்மையை பற்றிய அறிவு இல்லாமல் நடந்துகொள்ளக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பது தவறு ஒன்றும் இல்லை .கிறிஸ்தவ ஆலயத்தில் யாரும் சென்று வழிபடலாம் ,திருப்பலியில் கலந்துகொள்ளலாம் என்றாலும் ,திருவிருந்தில் கிறிஸ்தவர் அல்லாதவர் கலந்து கொள்வதை தவிர்க்க அறிவுற்த்தப்படுகிறார்கள் .காரணம் ..திருப்பலியில் திருவிருந்துப்பகுதி என்பது இயேசுவின் கடைசி ராவுணவு நிகழ்ச்சியை நினைவு கூறும் நிகழ்ச்சி .இயேசு அப்பத்தை பிட்டு அதனை தன் உடலாகவும் ,கிண்ணத்தில் இருக்கும் ரசத்தை தனது இரத்தமாகவும் உணர்ந்து உண்ணுமாறு தமது சீடர்களுக்கு பணித்தது போல ,குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக இருக்க மக்கள் சீடர்களாக இருக்க ,அதே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .எனவே அதனை உட்கொள்ளுவோர் அதன் பொருளை உணர்ந்து அதனை செய்ய வேண்டும் .அந்த சிறிய அப்பத்தில் இயேசு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு உண்ண வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் ஞானஸ்நானம் பெற்றவர் அனைவரும் இதை உண்பதற்கு தகுதிபடைத்தவராகி விடுவதில்லை .விபரம் அறிகிற வயதுக்கு வந்த பின்னர் இது குறித்த அறிவு புகட்டப்பட்டு ,தனிப்பயிற்சிகள் அளிக்கப்பட்டே இதில் கலந்துகொள்ள வேண்டும் ..அந்த அடிப்படையிலே தான் மற்றவர் இதன் பொருளுணராது ஏதோ அப்பம் கொடுக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது .ஆனால் தப்பித்தவறி ஒருவர் தெரியாமல் அதை உண்டால் அதனால் ஒன்றும் தீட்டு கிடையாது .அப்படி நடைபெறுவது தடுக்கவும் முடியாது..அந்த வகையில் மீரா ஜாஸ்மின் செய்தது தவறு தான் .அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தான் என்னை உறுத்துகிறது .10000 -ரூபாய் கட்டுவது தான் தண்டனையாம் .அதைக்கொண்டு அந்த தீட்டு நீங்க சடங்குகள் நடத்தப்படுமாம் .முதலில் 'தீட்டு' என்றால் என்ன ? 'தீட்டை களைவது' என்றால் என்ன?


(இவை எனது முதற்கட்ட சந்தேகங்கள் தான்..இதற்கு கிடைக்கும் பதில்களின் கோணம் அறிந்த பின் மற்ற கேள்விகள் கேட்கலாமென நினைக்கிறேன் ..தயவு செய்து உண்மையிலேயே நான் உளப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்பதாக கருதுவோர் பதிலிறுத்தால் மகிழ்ச்சியடைவேன் )

125 comments:

Unknown said...

அருமையான கேள்விகள் ஜோ

1.வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் நீண்டகால யுத்தம் நடந்து வருகிறது.ராமனுஜரை சைவனான குலோதுங்க சோழன் நாடுகடத்தி,அவர் சீடரான கூரத்தாழ்வான் கண்ணை பறித்து,அரங்கநாதர் சிலையை நதியில் எறிந்தான்.அன்றிலிருந்து இந்த இரு பிரிவுகளும் எதிரிகளாகிவிட்டனர்.

மேலும் முத்திரை வைத்த வைணவரும்,சைவரும் தம்தம் கடவுளை அன்றி வேறெந்த கடவுளையும் வணங்கார்.அது அவர்கள் மதத்தின் அடிப்படை கோட்பாடு."மறந்தும் புறம் தொழார்" என பெருமையாக சொல்வார்கள்

2."தெய்வ குற்றம்" என்பது எந்த வேதத்திலும்,புராணத்திலும் இல்லாத ஒரு கோட்பாடாகும்.பஞ்சமாபாதகம் என சொல்வார்கள்.அது கூட தெய்வ குற்றம் கிடையாது.பாவத்திலும் பெரும்பாவம்,மன்னிப்பே இல்லாத பாவம் என சொல்லப்படுவது பாகவத அபச்சாரம் தான்.அதாவது பக்தர்களை துன்புறுத்துவது.அதற்கு பகவானால் மனிப்பு தர முடியாதாம்.அந்த பக்தர்களாலேயே தர இயலுமாம்.

பகவான் அபச்சாரத்தை கூட பொறுக்கலாம்,பாகவத அபச்சாரத்துக்கு மன்னிப்பில்லை என்பார்கள்.

தெய்வ குற்றம் என்பது சொல்வடை மட்டுமே.நிஜமல்ல.

3.மாதவிடாய் என்பது பழங்காலத்திய நடைமுறை.குமரன் பதிவில் இதை பற்றி நீண்ட விளக்கம் தந்திருந்தேன்.அவர் இப்போது தூங்கபோய்விட்டார் என நினைக்கிறேன்.காலையில் அதை வெளியிடுவார்.சுருக்கமாக சொன்னால் மாதவிடாய் உள்ள பெண்கள் பூஜை செய்ய தடை இல்லை.விளக்கம் குமரன் பதிவில்.

4.மீராஜாஸ்மின் விவகாரமும் அந்த மாதிரிதான்.இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என சில கோயில்களில் போர்டு தொங்கும்.அது சாஸ்திர சம்பந்தமில்லாத ஒன்று.ஏன் என்றால் வேதத்தில் இந்துமதம் என்றில்லை,எந்த மதத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.அப்படி இருக்க மாற்று மதத்தார் உள்ளே வரக்கூடாது என எப்படி சொல்லியிருக்க முடியும்?இது சில நூற்றாண்டுகளுக்கு முன் கோயில் பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்ட ஒரு நடைமுறையாக இருக்கலாம்.எந்த சாஸ்திரத்திலும் இம்மாதிரி சொல்லபடவில்லை

ramachandranusha(உஷா) said...

ஜோ,
மதங்கள் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியவை. அந்த அந்த காலக்கட்டத்தில் அந்நாளைய மனிதர்களின் மனவோட்டத்தில் நம்பிக்கைகள் உருவாகின. இவற்றிற்கெல்லாம் இந்த காலத்தில் பொருள் கேட்டால், அதற்கென்ன
வேண்டிய சமாளிப்புகள் வரும்.
கிறிஸ்துவ மதத்தில் ஒயினும், பிரெட்டும் ஆண்டவனின் சதையும் ரத்தமும் என்றுக் கொடுக்கிறார்களே, அந்த ஊரில் திராட்சை விளைந்தது, பிரெட் சாப்பிடுவார்கள். ஏன் அதிரசமும், மோரும் கொடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்ப முடியுமா?
எல்லா மத கோட்பாடுகளைப் படித்தாலும் இத்தகைய கேள்விகள் வரும். கேள்வி வரவர நம்பிக்கை குறையும் :-)
இந்த பதிலை தவறாய் நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
உஷா

ஜோ/Joe said...

செல்வன்,
விளக்கத்திற்கு நன்றி!
மற்ற சிலரின் விளக்கங்களுக்கு சிறிது அவகாசம் கொடுத்துவிட்டு பதிலிறுக்கிறேன்.

Unknown said...

ஜோ,
6 ஆம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த் போது எனது பள்ளி சார்ந்த கத்தோலிக்க ஆலயத்திற்கு சென்றுள்ளேன். எனது நெற்றியில் இருந்த விபூதி அடையாளங்களையும் மீறி எனக்கு அப்பமும் இரசமும் வழங்கப்பட்டது. நாங்கள் அதற்காகவே அடிக்கடி திருப்பலியின் போது செல்வோம்.

யாரும் எங்களை ஒரு கேள்வி கேட்டது இல்லை. :-))

எங்கள் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி இதற்காக எங்களை நக்கல் செய்வார். "..பொங்கல்,புளியோதரையெல்லாம் கிடையாதுடா இங்க அப்ப(ம்)ளம்தான் கிடைக்கும் ..." என்று.

சிறுவர்கள் என்றதால் விட்டிருக்கக்கூடும். அது ஒரு சுகமான காலங்கள்.

ஜோ/Joe said...

உஷா,
பின்னூட்டத்திற்கு நன்றி!
//கிறிஸ்துவ மதத்தில் ஒயினும், பிரெட்டும் ஆண்டவனின் சதையும் ரத்தமும் என்றுக் கொடுக்கிறார்களே, அந்த ஊரில் திராட்சை விளைந்தது, பிரெட் சாப்பிடுவார்கள். ஏன் அதிரசமும், மோரும் கொடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்ப முடியுமா?//
ஏன் முடியாது ? 50-ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பலி உலகம் முழுதும் லத்தீன் மொழியில் தான் நடந்து வந்தது .பின்னர் ஏன் அவரவர் தாய்மொழிகளிகளிலேயே நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது .அதனால் இப்போது எல்லா மொழிகளிலும் அது நடைபெறுகிறது .அது போல அதிரசமும் மோரும் கொடுத்தாலென்ன என்று கேள்வி எழுந்தால் ஒரு வேளை மாறலாம் .இப்போதும் ஆளுக்கொரு லோப் பிரட்(ஹி..ஹி)-எல்லாம் கொடுப்பதில்லை .ஒரு அடையாலமாக வாயில் வைத்தால் கரைந்து விடும் 'ஓஸ்தி' எனப்படும் உணவே கொடுக்கப்படுகிறது.

//இந்த பதிலை தவறாய் நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,//
இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?

ramachandranusha(உஷா) said...

ஜோ,
அந்த சதையும், ரத்தமும் குறித்து கேள்வி எழுப்பிவிட்டு, நீக்கிவிட்டேன். ஆனால் தவாய் நினைக்க மாட்டீர்கள் என்ற வரியை நீக்க மறந்துவிட்டேன் :-)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எல்லா மதங்களும் சொல்ல வந்த தத்துவங்களையும் விட்டு விலகி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் நிகழ்வு ஒரு சாதாரண விஷயம். என் வருத்தம் என்னவெனில் இது போன்ற சாதாரண நிகழ்வுகள் நிகழும் சமயம் இது சரியா தவறா என்று பார்க்கும் நாம் மதங்களின் பெயரால் இன்று நாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள்(இந்தியா - பாகிஸ்தான், இஸ்ரேல் - பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா), தீவிரவாதங்கள், மசூதி இடிப்புகள், கோயில் இடிப்புகள்( இதை சொல்லவில்லை என்றால் நான் திம்மியாக்கபடுவேன் :-)))) ) போன்றவற்றையும் பார்த்து நாம் மதங்களை பின்பற்றுகிறோமே இது சரியா என்ற கேள்விகள் ஏன் கேட்பதில்லை என்றுதான். மதங்களால் மனிதனுக்கு தொல்லையே தவிர நன்மை ஒன்று கூட இல்லை என்பது என் கருத்து. என்ன பண்றது வாழ்க்கையின் அர்த்தத்தை மதத்தில் தேடும் மனிதன் மதம் பிடித்து அழைவதில் ஆச்சர்யமில்லை.

ஜோ/Joe said...

உஷா,
நீங்கள் தயங்காமல் உங்கள் கருத்துக்களை கூறலாம் .என்னை ஏதோ மதவாதியாக நினைத்து நீங்கள் கருத்து கூற தயங்கினால் தான் நான் வருந்துவேன்.

Gurusamy Thangavel said...

ஜோ,
அப்பமும், திராட்சை ரசமும் குடுப்பதன் தத்துவம் அறிந்துகொண்டேன். எங்களுர் (உங்களூர் அருகில் தான் - பணகுடி) கிருத்துவப் பள்ளியில் படிக்கும் போது எல்லோரையும் சர்ச்சுக்கு அழைத்துச் செல்வர். ஆனால், கத்தோலிக்கப் பிள்ளைமார்கள் (சாதியைக் குறிக்கும் பதத்திலல்ல) மட்டும் வந்து அப்பம் வாங்கிச் செல்லவும் என பாதிரிமார்கள் கூறுவதைக் கிண்டல் செய்திருக்கிறேன்.

உங்கள் கேள்விகளுக்கு செல்வன், நான் கூறியிருப்பதைவிடவும் நன்றாகப் பதிலளித்துள்ளார். நன்றி ஜோ.

ஜோ/Joe said...

குமரன் எண்ணம்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .மதம் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியது .இங்கே நான் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் நம்பிக்கைகளையோ ,விளைவுகளையோ கேள்விக்குட்படுத்துவதல்ல .அவற்றிக்கு என்ன அர்த்தம் கற்பிக்கப்படுள்ளது என்று அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே.மற்றபடி யாரும் எந்த மதத்தையும் முழுமையாக பின்பற்றுவதில்லை .நானும் கத்தோலிக்க மதம் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளுபவனல்ல.

ஜோ/Joe said...

தங்கவேல்!
வாங்க .நம்ம ஊர்க்காரர் வேற! உங்கள் கருத்துக்கு நன்றி!

ஜோ/Joe said...

கல்வெட்டு,
ரொம்ப நாளைக்கப்புறம் உங்களை பார்க்க முடிவது குறித்து மகிழ்ச்சி..கருத்துக்கு நன்றி!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னைப் பொறுத்தவரை இது தொடர்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் தவறாகப் பட்டது. பல பதிவுகளில் இது பற்றி விவாதம் நடந்தாலும் மத நம்பிக்கைகள் பற்றி அல்லாமல் அவை வேறு விதமாக இருந்தது. நீங்க மத நம்பிக்கைகள் பற்றி எழுதியவுடன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கருப் பொருளில் இருந்து விலகி எழுதி விட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.

ஜோ/Joe said...

குமரன் எண்ணம்,
ஐயையோ! நீங்கள் எதையும் தவறாக சொல்லவும் இல்லை .நான் தவறாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

G.Ragavan said...

ஜோ எனக்குத் தெரிந்த வகையில் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன்.

1. வைணவர்கள் எனக்குத் தெரிந்து சமயபுரம் கூடப் போவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சைவக் கோயில்களுக்குப் போவது மிகக் குறைவுதான். காலங்காலச் சண்டைதான் காரணம். ஆனாலும் மக்கள் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடிப்படையில் சைவம் வைணவம் என்பவை வெவ்வேறு மதங்கள் என்பதும் அபிரஹாமிய மதங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையது ஆனாலும் தனித்தனியாக இருப்பது போல இவைகளும் கலந்தும் தனியாகவும் இருக்கின்றன. நான் கூட பெருமாள் கோயிலுக்குப் போவேன். கண்ணனைக் கூடத் தொழுவேன். பச்சைமாமலை போல் மேனி என்று உருகுவேன். ஆனால் ராமர் அல்லது ஆஞ்சநேயர் கோயில் என்றால் போவேன்..ஆனால் தொழுவதில்லை. அதற்குக் காரணம் ராமரின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததே. அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.

2. தெய்வ குற்றம் என்பதெல்லாம் பேச்சு வழக்கு. பெரும்பாலும் இந்துக்களால் உண்மையான குற்றங்களுக்குச் சொல்லப்படுவது. தீட்டுகள் எல்லாம் எனக்குத் தெரிந்து தெய்வ குற்றம் அல்ல. அடுத்தவருக்குத் துன்பம் கொடுப்பதும் அதை இறைவனின் கோயிலில் குடுப்பதும்தான் பெரிய தெய்வ குற்றம்.

3. நான் படித்த வகையில் மாதவிடாய் பற்றி எந்த இந்து மத நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. இது அந்தக் காலத்தில் முறையான வசதிகள் இல்லாத பொழுது உண்டானதாகும். இப்பொழுது இதைச் சரியென்று சொல்ல முடியாது.

4. மீரா ஜாஸ்மின் செய்தது தவறு என்று சொல்ல முடியாது. இந்துக் கோயில்களுக்குள் நுழைய இந்து என்று சான்றிதழ்களில் இருக்க வேண்டியதில்லை. நான் சொல்வது நியாயப்படி. கடவுள் இந்துவுக்கு மட்டுந்தான் கிருத்துவனுக்கு மட்டுந்தான் என நினைப்பது மடமை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். அதே நேரத்தில் கோயிலுக்குள்ளோ மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குள்ளோ போகின்றவர்கள் அங்கங்கு உள்ள வழிபாட்டு முறைகளை மதிக்கவும் வழிபடுகிறவர்களுக்கு இடைஞ்சலாகவும் இல்லாமல் இருந்தாலே போதும். பத்தாயிரம் குடுத்ததும் தீட்டுக் கழிந்தது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. மீரா ஜாஸ்மின் கோயிலுக்குச் சென்று வணங்கினார் என்றால் அதை வரவேற்க வேண்டும். அதை விடுத்து இப்படியெல்லாம் பிரச்சனை செய்வது தருமப் படி தவறு என்றுதான் நான் அறிந்தவரையில் தோன்றுகிறது.

ஜோ/Joe said...

ராகவன்,
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்த்தேன் .நீங்கள் ஏமாற்றவில்லை.

உங்கள் கருத்துக்களைப் பற்றி நான் என்ன சொல்லுவது ,ஒன்றைத் தவிர .ராகவன் போல பக்குவம் அனைவருக்கும் வந்து விட்டால் சமூகம் எவ்வளவு நன்றாக இருக்கும்!

வஜ்ரா said...

போப் ஆண்டவர் உங்களைத் தூண்டிவிட்டார் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் முந்திக் கொண்டுவிட்டால் நாங்கள் சொல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையா? ;D

ஆதாரம் இல்லாமல் சொல்வது இல்லை.

சைவ-வைணவ சண்டைகள் பற்றி:
சண்டைகள் என்றுமே இருக்கும். அதை மாற்ற முடியாது. (ஹரியும்-ஹரனும் ஒண்ணு, அறியாதவர் வாயில் மண்ணு!!). இதைப் பயன் படுத்தி சந்தில்-சிந்து பாடுவது சில மத்திய கிழக்கு மத நல்லிணக்கவாதிகள் செய்யும் சேட்டை.

தெய்வக் குற்றம் பற்றி:
Wrath of God என்பதும் அதில் அடங்கும். சமூகத்தில் உள்ள சட்ட திட்டங்கள் மதிக்கப் படவேண்டும் என்பதற்கும், மக்களிடையே Self righteousness வளர்வதற்காக மட்டுமே, அது வந்துவிட்டால் தெய்வக் குற்றம் எல்லாம் மூட நம்பிக்கை.

எல்லா மதங்களிலும் மாதவிடாய் என்பது தீட்டாக பார்க்கப் படுகின்றது. அது இந்து மதத்தின் தனித்துவம் அல்ல. ஆனால் இந்த மாற்றங்களை இந்து மதம் ஏற்றுக் கொண்டு நிச்சயமாக முன்னேறும்.

மீரா ஜாஸ்மின் விஷயம், சம்பந்தப் பட்ட கோவில் நிர்வாகம் செய்த கிறுக்குத் தனம், அதில் மதத்திற்கு சம்பந்தமில்லை. நீங்களே சொல்கிறீர்கள், இந்து நண்பர்களுடன் இந்துக் கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை எல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று...பிறகு இந்த கேள்வி ஏன்? Its a local issue, not a global issue!!

ஜோ/Joe said...

//மேலும் முத்திரை வைத்த வைணவரும்,சைவரும் தம்தம் கடவுளை அன்றி வேறெந்த கடவுளையும் வணங்கார்.அது அவர்கள் மதத்தின் அடிப்படை கோட்பாடு."மறந்தும் புறம் தொழார்" என பெருமையாக சொல்வார்கள//

செல்வன்,
முத்திரை என நீங்கள் குறிப்பது நாமமா? அந்த வகையில் ஐயர் ,ஐயங்காரையா குறிப்பிடுகிறீர்கள்? ஆனால் எனக்கு தெரிந்த மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வர மாட்டேன் என மறுத்தவர் ஐயரோ ,ஐயங்காரோ அல்ல.

G.Ragavan said...

// செல்வன்,
முத்திரை என நீங்கள் குறிப்பது நாமமா? அந்த வகையில் ஐயர் ,ஐயங்காரையா குறிப்பிடுகிறீர்கள்? ஆனால் எனக்கு தெரிந்த மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வர மாட்டேன் என மறுத்தவர் ஐயரோ ,ஐயங்காரோ அல்ல. //

முத்திரை என்பது நாமமோ திருநீறோ அல்ல. சிவச் சின்னங்களையும் வைணவச் சின்னங்களையும் சூட்டுக்கோல் வைத்து மேனியில் சின்னம் தரிப்பதுதான் செல்வன் சொல்லும் முத்திரை. பெரும்பாலும் மடங்களிலும் கோயில் ஒழுக்குகளில் இருப்பவர்களும் செய்வது.

அவர் ஐயரோ ஐயங்காரோ இல்லையா? அப்படியானால் மாதவா-வாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் கர்நாடக-ஆந்திரத்திலிருந்து வந்த வழக்கம் என நினைக்கிறேன்.

ஜோ/Joe said...

வஜ்ரா சங்கர்,
வாங்க ! பின்னூட்டத்திற்கு நன்றி.
//போப் ஆண்டவர் உங்களைத் தூண்டிவிட்டார் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் முந்திக் கொண்டுவிட்டால் நாங்கள் சொல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையா? ;D//

ஹி..ஹி..போப்பாண்டவரிடமிருந்து எதாவது இ-மெயில் வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

//ஹரியும்-ஹரனும் ஒண்ணு, அறியாதவர் வாயில் மண்ணு!//
என்னங்க! சைவ கோவிலுக்கு போகமாட்டேன்னு சொல்லுற வைஷ்னவனையும் ,வைஷ்ணவ கோவிலுக்கு போக மாட்டேன்னு சொல்லுற சைவனையும் இவ்வளவு பகிரங்கமா திட்டுறீங்க!

//எல்லா மதங்களிலும் மாதவிடாய் என்பது தீட்டாக பார்க்கப் படுகின்றது. அது இந்து மதத்தின் தனித்துவம் அல்ல.//
Typical answer as expected from you.
//ஆனால் இந்த மாற்றங்களை இந்து மதம் ஏற்றுக் கொண்டு நிச்சயமாக முன்னேறும்.//
நல்லது .நானும் மகிழ்வேன்.

//நீங்களே சொல்கிறீர்கள், இந்து நண்பர்களுடன் இந்துக் கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை எல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று...பிறகு இந்த கேள்வி ஏன்?//
எந்த கேள்வி .மீரா ஜாஸ்மீன் இந்துக்கள் அல்லாதோர் போகக்கூடாது என்று சொல்லப்பட்ட கோவிலுக்கு போனது தவறு என்ரு தான் நான் சொல்லியிருக்கிறேன் .அப்புறம் நீங்க எந்த கேள்விய சொல்லுறீங்க ? 10000-ரூபாய் பற்றிய கேள்வியா ? திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்ல இந்துக்கள் அல்லாதவர் வரக்கூடாதுண்ணு சொல்லல .என் நண்பர்கள் அர்ச்சனைக்கு என் பெயரையும் சொன்னதற்காக தீட்டு கழிக்க 10000 ரூபாயும் கேக்கல்ல..அப்புறம் எதை சொல்லுறீங்க ..புரியல்ல.

ஜோ/Joe said...

ராகவன்,
//முத்திரை என்பது நாமமோ திருநீறோ அல்ல. சிவச் சின்னங்களையும் வைணவச் சின்னங்களையும் சூட்டுக்கோல் வைத்து மேனியில் சின்னம் தரிப்பதுதான் செல்வன் சொல்லும் முத்திரை. பெரும்பாலும் மடங்களிலும் கோயில் ஒழுக்குகளில் இருப்பவர்களும் செய்வது.//
தகவலுக்கு நன்றி!
//இவர்கள் கர்நாடக-ஆந்திரத்திலிருந்து வந்த வழக்கம் என நினைக்கிறேன்.//
ஆமாம். அவருக்கு தெலுங்கு தான் தாய் மொழி .

ஜோ/Joe said...

தஞ்சை கண்ணன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

குறிப்பாக மாதவிடாய் தீட்டு குறித்த உங்கள் பதில் சிந்திக்க வைத்தது.

//போப் ஆண்டவர் தூண்டி விட்டே நீங்கள் இந்து மதத்தைக் கேள்வி கேட்கிறீர்கள் என்ற அவப்பெயரை சுமக்கத் தயாராக இருங்கள்.//
வஜ்ரா சங்கர் ஆதாரம் கிடைத்ததும் சொல்லுவதாக இருக்கிறார்.

டிபிஆர்.ஜோசப் said...

ஜோ,

ஜாஸ்மின் கொடுத்த 10000 போறாது இன்னும் 5000 கொடுத்தால்தான் சரி என்றொரு டிமாண்ட் வைத்தார்களே:)

அன்று யேசு மதகுருமார்களை கண்டித்து பேசியதை படித்திருப்பீர்களே அதுபோல்தான் இப்போதும் நடக்கின்றன. கோவில்களின் புனிதத்தன்மை கெட்டுபோகிறது என்று கூச்சலிடுவது பெரும்பாலும் மதகுருமார்கள்தான், பக்தர்கள் அல்ல. அதுவும் கேரள் குருமார்கள் இன்னும் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

ஹூம்..

ஜோ/Joe said...

ஜோசப் சார்!
வாங்க .உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

//அதுவும் கேரள் குருமார்கள் இன்னும் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.//
திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வந்த சிவாமி விவேகானந்தர் அங்குள்ள சாதி வெறியையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டு அந்த இடத்தை 'மூடர்களின் கூடாரம்' என்று கடுமையாக சாடியதாக படித்திருக்கிறேன்.

Anonymous said...

பதிவினை கண்ட போது இளமையில் நான் அனுபவித்த சில மறக்க முடியாத விஷயங்களை பகிர வேண்டும் என எண்ணம் துளிர்த்தது.

எதையாவது எழுதப் போக "முஸ்லிம் அடிப்படைவாதிக்கு" இங்கு பேச என்ன அருகதை இருக்கிறது என வசைகள் வந்து விடும் என்பதால் விட்டிருந்தேன்.

எனினும் சகோதரர் ஜோ அவர்களின் சில வரிகள் மனதில் நிறைந்து நிற்கும் சில மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதால் அதனைக் குறித்து மட்டும்.

//நண்பர்கள் பலரோடு பல முறை இந்து கோவில்களுக்கு செல்ல நேரிட்ட போது ,அங்கு விபூதி வைத்துக்கொள்வதிலோ ,அல்லது என் நண்பர்கள் அர்ச்சனை செய்யும் போது என்னுடைய பெயரையும் சேர்த்துச் சொன்ன போதும் எனக்கு சிறு நெருடலோ ஏற்பட்டதில்லை .அங்கிருக்கின்ற ஆச்சார முறைமைகளுக்கு என்னால் (என் அறியாமையால்) எந்த சங்கடமும் நேர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தால் கூடுதல் கவனம் எடுத்து மரியாதையுடன் பணிவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன். //

இதே அனுபவம் அப்படியே எனக்கும் உள்ளது. சிறு வயதிலிருந்தே பல கோவில்களுக்கும் சென்று வந்துள்ளேன். அங்கு கொடுக்கப்படும் பாயாசம் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

மறக்க முடியாதது, பள்ளிப்பருவத்தில் என்ஸிஸி கேம்ப் திருச்செந்தூரில் 10 நாட்கள் அடித்திருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு இடம் விடாமல் சுற்றிப் பார்த்தது - முக்கியமாக நாழிக் கிணறு, வள்ளிக்குகை போன்றவை. அந்நேரம் அங்குள்ள நடைமுறைகளை மீறாமல் மேல்சட்டையை கூச்சத்துடன் கழற்றி கையில் வைத்துக் கொண்டு போனது இப்பொழுதும் மனதில் பசுமையாக உள்ளது.

கல்லூரிப் பருவத்தில் குமாரகோவில் முருகன் கோவிலில் என் உற்ற தோழன் நாராயணனுடன் அடிக்கடி சென்று வந்துள்ளேன். எங்களுடைய இளைப்பாறும் இடம் இக்கோவிலை சுற்றியுள்ள குளமும் இக்கோவிலின் உட்பாகமும்.

இங்கும் மேல்சட்டையை கழற்றிக் கொண்டு ஒரு இடம் விடாமல் என் உயிர் தோழனுடன் சுற்றியிருக்கிறேன். இங்கு சென்று இருக்கும் நேரங்களில் பொழுது போவதே தெரியாமல் அவ்வளவு லயித்து போய் நாங்கள் அமர்ந்திருந்த நாட்கள் அதிகம்.

சகோதரர் ஜோ அவர்களின் மேற்கண்ட வரிகளை வாசித்த போது மனதில் தோன்றிய உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கொட்டி விட்டேன்.

மற்றபடி இப்பதிவில் காணப்படும் கேள்விகளுக்கு நான் அறிந்த விஷயங்களை வைத்து பதிலளித்தால் அது வேறு விதமாக திசை திருப்பப்படும் என்பதால் அதனை தவிர்க்கிறேன்.

சகோதரர் ஜோ அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் குறித்து நல்ல முறையில் வரும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதியுங்கள். அது அவசியமில்லாத திசைதிருப்பல்கள், வேண்டாத விவாதங்கள் எழுவதை விட்டும் தவிர்க்கும்.

ஒருவர் தன்னுடைய மதத்தைக் குறித்து வரும் கேள்வி-விமர்சனத்துக்கு மற்ற மதங்களை தொடர்பு படுத்தாமல் தன்னிலை விளக்கம் மட்டும் அளிப்பது நல்ல கருத்தாடலுக்கு உதவும்.

அதை விடுத்து,
//எல்லா மதங்களிலும் மாதவிடாய் என்பது தீட்டாக பார்க்கப் படுகின்றது. அது இந்து மதத்தின் தனித்துவம் அல்ல.//
என்பது போன்ற நியாயப்படுத்துதல்கள் என்னைப் போன்ற "மத அடிப்படைவாதிகளை" தங்களுடைய மதத்தில் இவ்வாறு இல்லை என விளக்கம் கொடுக்க வைக்கும்.

பின்னர் அதுவே இப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வேறு விவாதமாக திசை மாறிவிடும்.

எனவே சகோதரர்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாக வரும் இது போன்ற அவதூறு(இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை எல்லா மதங்களிலும் மாதவிடாய் தீட்டு தான் எனக் கூறியதால்) பின்னூட்டங்களில் தாங்கள் கவனமாக இருக்கும்படி அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
இறை நேசன்.

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் , அனுபவ பகிர்வுக்கும் மிக்க நன்றி!

இறுதியில் நீங்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளை ஏற்று சுமூகமான,திசைதிருப்பல்கள் அற்ற விவாதத்திற்கு வழிவகுப்பேன் என உறுதி கூறுகிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

இறைநேசனுடைய கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்..

மாதவிடாய் தீட்டு என்பது கிறித்துவ மதத்திலும் இல்லை..

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
முடிந்தால் djmilton at gmail.com க்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா?

Muthu said...

//ஜாஸ்மின் கொடுத்த 10000 போறாது இன்னும் 5000 கொடுத்தால்தான் சரி என்றொரு டிமாண்ட் வைத்தார்களே:)//

குறும்பு சார் உங்களுக்கு?

அவனவன் நவீன இயேசு கிறிஸ்துவாக மாறி அடுத்தவங்க பண்ணாத குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கான்.நீங்க வேற கிண்டல் பண்றீங்க..

Anonymous said...

சகோதரர் ஜோ, சகோதரர் ஜி.ராகவன், சகோதரர் இறைநேசன் ஆகியோரின் எழுத்தை பாராட்டுகிறேன்.
நல்லிணக்க நன்முத்துக்கள் (முத்து தமிழினி, உங்களைத் தனியாகச் சொல்ல தேவையில்லை அல்லவா).
உங்களைப்போன்றோரால் நிரம்பட்டும் இந்த (வலைப்) பூவுலகம்.
-மனிதருள் ஒருவன்

G.Ragavan said...

// கோயில்களில் பூசிக்கப்படும் பெண் தெய்வங்கள் சக்தியுடையவை என்றால் அவற்றிற்கு உயிர் இருக்க வேண்டும். ஜீவனுள்ள எந்தப் பருவப் பெண்ணுக்கும் மாதவிடாய் கற்ப காலங்கள் தவிர வந்தே தீரும். கோவிலுக்குள்ளிருக்கும் பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் வருமா என்று ரிக்-யசூர்-சாம-அதர்வன வேதங்களில் சொல்லப்படவில்லை. வருமெனில் குறைந்தது 3-7 நாட்களாவது அந்த சாமி சிலைகளை கோவிலுக்கு வெளியில் வைக்க வேண்டும். என்ன முட்டாள்தனமான கேள்வி; கற்சிலைகளுக்கு எப்படி தீட்டு வரும் என்று எவரேனும் நகையாடினால், அதே கேள்வியை கற்சிலைகளால் எப்படி மனிதனுக்கு நன்மை செய்ய முடியும் என்றும் கேட்கட்டும். //

முதலில் தீட்டு என்பது அந்தக் காலத்தில் தூய்மையையும் பொது இடங்களில் அது பிரச்சனையாகவும் கூடாது என்பதற்காக வந்தது. இது கோயிலுக்குள் புகுந்ததெல்லாம் பிற்காலத்தில். எனக்குத் தெரிந்த எந்த நூல்களிலும் இந்தத் தீட்டு பற்றிக் குறிப்பிடப் படவேயில்லை.

சிலை கல்லால் ஆனது என்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவனை நம்புகிறவர்கள் எல்லா இடங்களிலும் இறைவன் இருப்பதாக நம்புகிறார்கள். அப்படி எல்லா இடங்களிலும் இருப்பவம் நம்மிலும் மற்றவரிலும் இருப்பதால்தான் பிறர்க்கின்னா செய்யாமை போன்ற கொள்கைகள் ஆத்திகத்தில் விளைந்தன. அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். அப்படியிருக்க எங்குமிருக்கும் இறைவன் அந்தக் கல்லிலா இருக்க மாட்டான்? கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் நிச்சயம் வரும். கல்லில் என்ன...நமது சொல்லிலும் பசும் புல்லிலும் வரும். அன்பே சிவம் என்று சொல்வது இதைத்தான்.

// இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பாடான தத்துவங்களை உள்ளடக்கியதுதான் இந்து மதம். நம்பிக்கையின் பாற்பட்ட சம்பிரதாயங்களை எதிர்த்து எந்த இந்துவும் கருத்துக் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால் இந்துமத விரோதி என்ற பட்டத்தை வாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டும். //

எல்லாச் சம்பிரதாயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்த முடியாது. வற்புறுத்தினால் அதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இதை அனைவரும் உணர வேண்டும். எந்த இந்துவும் கருத்துக் கேட்பதில்லை என்பதெல்லாம் ஆவேசச் சொற்களே. ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ளாத பொழுது அதை ஒதுக்கி வைப்பவர்கள் அதைக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாரும் அப்படித்தான் என்று இல்லை. ஆனால் அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

ஜோ,

தூங்கி எழுந்து வருவதற்குள் நீங்கள் இன்னும் கேள்விகளைக் கேட்டு அதற்குப் பலரும் பலவிதமான பதில்களைச் சொல்லியிருக்கிறார்கள் - எல்லாம் அவரவர் பார்வையில், ஓரிரு திசை திருப்பும் விடைகளும் வந்திருக்கின்றன. என் பார்வையில் என்ன விடைகள் என்பதனையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எண்ணுவதால் இதோ சொல்கிறேன்.

1. சைவர்கள், வைணவர்கள் இருவரும் மற்றவர் கோவில்களுக்குப் பெரும்பான்மையாகப் போகாமல் இருப்பதற்குக் காரணத்தைச் செல்வன் தொட்டுச் சென்றிருக்கிறார். இரு மதத்தவருக்கும் இடையே இருக்கும் வரலாற்றுரீதியான சண்டையே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமயச் சண்டையை மறுக்க முடியாது. ஆனால் அதுவே முதற்காரணம் என்று சொல்லவும் முடியாது. சமயரீதியான 'மறந்தும் புறந்தொழாதத் தன்மையே' முதற்காரணம்.

இந்துக்களில் பெரும்பாலோர் இப்போதும் எப்போதும் எந்தக் கடவுளுக்கும் இடையே வேறுபாடு பார்ப்பதில்லை. தமிழகத்தில் பெரும்பாலோனோர் திருநீறு அணிகின்றனர். அதற்கு வரலாற்று ரீதியான காரணங்களும் உண்டு. மன்னர்களில் பலர் சைவர்களாக இருந்தது, சிவனும் முருகனும் தமிழ்க்கடவுளர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது, நாமம் அணிவது என்பது 'நாமம் போடுவது' என்று இளக்காரமாகப் பேசப்படுவது என்று பலவற்றைக் கூறலாம். எனக்குத் தெரிந்தே முன்னோர்கள் எல்லாம் நாமம் அணிந்தவர்கள் திருநீறு மட்டுமே பூசத் தொடங்கியிருக்கிறார்கள்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால் இப்படி திருநீறு பூசுவதால் அவர்களைச் சைவர்கள் என்று கருதிக்கொள்வது வழக்கமாக விட்டது. இந்துக்களில் பெரும்பாலோனோர் தங்களை சைவர்கள் என்றோ வைணவர்கள் என்றோ சொல்லிக் கொள்வது கிடையாது. அவர்கள் எல்லா சாமிகளையும் வணங்குகிறார்கள். சைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சிவச்சின்னத்தைச் சூட்டுக்கோலால் தங்கள் தோள்களில் முத்திரைக் குத்திக் கொள்பவர்கள் விஷ்ணு கோவில்களுக்குச் செல்ல மாட்டார்கள். அது போல வைணவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், விஷ்ணுச்சின்னத்தைச் தங்கள் தோள்களில் முத்திரைக் குத்திக் கொள்பவர்கள் சிவாலயங்களுக்குச் செல்ல மாட்டார்கள். இந்தக் காலத்தில் சைவர்களுக்கு விஷ்ணுவின் மீதும் வைணவர்களுக்கு சிவபெருமானின் மீதும் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை; அதனால் அவர்கள் மற்றவர்கள் கோவிலுக்குச் செல்வதில்லை என்று சொல்வதும் சரியில்லை; அவர்கள் அப்படி மற்றவர்கள் கோவிலுக்குச் செல்லாததற்குக் காரணம் தங்கள் தங்கள் கடவுளருக்குத் தாங்கள் அடிமை என்று முத்திரைக் குத்திக் கொண்டதால் 'மறந்தும் புறம் தொழ மாட்டோம்' என்ற எண்ணமே அடிப்படை.

முத்திரைக் குத்திக் கொள்பவர்கள் எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள் என்பதனையும் சொல்லிவிடுகிறேன். இல்லையேல் யாராவது வந்து ஐயர், ஐயங்கார், மாத்வர், பார்ப்பனர் என்று திசை திருப்பலாம்; அது வேண்டுமென்றே செய்வதில்லை; தாங்கள் அறிந்தவரை சொல்கிறார்கள் என்று தெரிந்தாலும் அது திசை திருப்பலாகத் தோன்றுவதால் சொல்கிறேன்.

இந்த அடிப்படையில் பார்த்தால் 'நீங்கள் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்கு செல்கிறார்கள்' என்பது தவறு. சிவனைத் தவிர மற்றவரை வணங்காத சைவரை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் பார்த்ததெல்லாம் சிவனுக்கும் பெருமாளுக்கும் வேறுபாடு பார்க்காத ஆனால் திருநீற்றினை எப்போதும் அணிகின்ற பெரும்பாலான இந்துக்களில் சிலரை.

வைணவர்கள் அல்லாதோர் வைணவச் சின்னங்களை அணிவதில்லை - 'நாமம் போடுகிறான்' என்று கிண்டல் செய்வார்கள் என்று. அதனால் வைணவச் சின்னங்களை அணிந்தவர் வைணவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களும் சைவரைப் போல் மறந்தும் புறந்தொழாதவர்கள் என்பதால் அவர்கள் சிவாலயங்களுக்கு வருவதில்லை.

சிலர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு கூட வந்துவிடுகிறார்கள்; ஆனால் சிவாலயத்திற்குள் செல்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இங்கு தான் வரலாற்று ரீதியான காரணம் வருகிறது. பெற்றோர்கள் வைணவர்கள் சிவன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தான் சொல்லிக் கொடுக்கிறார்களே ஒழிய ஏன் போகக் கூடாது; மறந்தும் புறந்தொழாதத் தன்மை என்றால் என்ன என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் அந்த இளைஞர்கள் பெற்றோர் சொற்படி சிவாலயங்களுக்கு வரத் தயங்குகிறார்கள்; ஆனால் பெற்றோர்கள் கிறிஸ்தவ ஆலயங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாததால் அங்கே செல்லத் தயங்குவதில்லை போலும். 'மறந்தும் புறந்தொழாதத் தன்மை'யைப் பற்றி அறிந்து கொண்ட சைவரோ வைணவரோ மற்ற கடவுளர்களைக் குறைவாக எண்ணுவதில்லை; வெறுப்பதில்லை. தன் தாய் மேல் அவர்களுக்கு அளவு கடந்த பாசம்; அதனை மட்டுமே வெளிக்காட்டுகிறார்கள்; மற்றவர் தாய் மேல் பாசத்தைக் காட்டாதது மற்றவர் தாய் மேல் வெறுப்பு என்று பொருள் இல்லையே.

இப்படி மறந்தும் புறந்தொழாத சைவரும் வைணவரும் சிறுபான்மையினரே. அப்படிப்பட்ட சாக்தரும் (சக்தியை மட்டுமே வழிபடுபவர்கள்) இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையோருக்கு 'ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயிலே மண்ணு' என்பது தான் வேத வாக்கு.

இந்த ஒரு கேள்விக்கான விடையே ரொம்பப் பெரிதாகப் போய்விட்டது. அலுவலகம் கிளம்பவேண்டும். மற்ற கேள்விகளுக்கு விடைகள் பின்னர் வந்து சொல்கிறேன்.

பத்மா அர்விந்த் said...

Dear Joe
Women are ill treated in almost all religions. In Jewish religion a woman is considered good only during a week in a month. Th eweek before periods, a week after that an da week during menstrual cyle is considered sinful. I have seen such acts among orthodox christians too. I have written mor e than one articles on women and religion.
Have you heard of men (and their prents)who demand more dowry because the girl's skin color is dark? if more money can hide the skin color or make it better,the same philosophy goes to remove theetu from temple with additional money. The lesson is that Money can do anything and everything.
Rich can get access to temples better than poor. People with power, people with money and people with fame can have an easier access to all temples, churches, mosks and Synagogues.Love is God, all are equal are often repeated like anything else.
I think Selvan and Raghavan are talking about samasranam, and this ceremony has to happen in very orthodx families in order for them to do certain rituals.
All these news are just sensational to create publicity.

வசந்தன்(Vasanthan) said...

ஜோ, நீங்கள் சொன்னது போல் திசைதிரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஜோசப் அவர்கள் இப்படியொரு பின்னூட்டம் போட்டுள்ளார்.

//இறைநேசனுடைய கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்..

மாதவிடாய் தீட்டு என்பது கிறித்துவ மதத்திலும் இல்லை..//

அப்படியானால் பெண் குருத்துவத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளாமலிருக்க ஜோசப் ஐயாவின் மதமும் அதன் தலைவர்களும் கூறும் காரணம் என்ன?
உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்.
இதுபற்றி மாலனின் பதிவில் விவாதம் நடந்த ஞாபகமுள்ளது.

மதமோ விவிலியமோ அப்படிச் சொல்லவில்லையென்று பதில் தரவேண்டாம். இங்கேகூட இந்துமதம் அப்படிச் சொல்லவில்லையென்றுதான் பதில் தரப்படுகிறது.

ramachandranusha(உஷா) said...

ஜோ,
நோன்பின்பொழுது பெண்ணுக்கு மாதவிடாய் வந்தால் நோம்பு முறிந்துவிடும் என்றுக் கேள்விப்பட்டுள்ளேன். ஆக, அந்நாளில் நோம்பு இல்லை, ஆனால் மூன்று அல்லது நான்கு நாள் கழித்து தொடர்வார்களா என்பது எனக்கு தெரியாது. இச்செய்தி சரியா என்று இறைநேசன் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
அவ்விதமே அனைத்து மதங்களிலும் ஏதோ காரணம் சொல்லி ஆணை விட மட்டவளாகவே பெண் நடத்தப்படுகிறாள். இது
அனைவரும் அறிந்த உண்மைதானே?
இது இப்படி என்றால் அனைத்து மதங்களிலும் பல்வேறு உட்பிரிவுகளும், அவர்களுல் தீராத பகையும் சண்டையும் உண்டு.
மதக் கோட்பாடுகள், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் போன்ற பயமுறுத்தல்களும் எல்லாம் மதங்களிலும் உண்டு தானே?

ஜோ/Joe said...

வசந்தன்,
//அப்படியானால் பெண் குருத்துவத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளாமலிருக்க ஜோசப் ஐயாவின் மதமும் அதன் தலைவர்களும் கூறும் காரணம் என்ன?//
முதலில் நான் கத்தோலிக்க மதத்தை நான் இங்கு பிரதிநிதிக்கவோ ,வக்காலத்து வாங்கவோ எண்ணமில்லை .ஆனால் எனக்கு தெரிந்தவரை பெண்களுக்கு குருத்துவம் வழங்கபடாதது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் ,அதற்கு சொல்லப்படும் காரணங்கள் வேறு நடைமுறை சிக்கல்களே தவிர மாதவிடாய் ,தீட்டு போன்றவை காரணிகளே அல்ல என்பதே நான் அறிந்தது .அவை காரணிகளாக இருந்தால் பெண்கள் துறவிகளாக கன்னியாஸ்திரிகளாக குருக்களுக்கு நிகராக மதிக்கப்படுவது இருந்திருக்காது .துவக்க காலத்திலிருந்து குருக்களின் முக்கியமான பணி ,பங்கு பணித்தளங்களில் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவது ,பல இடங்களுக்கு தன்னந்தனியாக சென்று பணியாற்றுவது ,நற்செய்தி அறிவிப்பது இவை தான் .பிற்காலத்தில் தான் கல்வி ,மருத்துவம் என்று விரிவானது .இன்று கன்னியர்களும் அதே பணிகளில் இருக்கிறார்கள் .மற்றபடி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல திருப்பலியில் குருவானவர் இயேசுவை பிரதிநிதிப்பதால் ஆண்கள் மட்டுமே பொருத்தமாக இருக்கலாம் என்று கருதப்பட்டிருக்கலாம் .

எப்படி இருந்தாலும் பெண்களுக்கும் குருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்தும் .கால மாற்றத்தில் நிறைய நடைமுறைகள் மாறியுள்ளன. திருப்பலியில் மக்களுக்கு நற்கருணை வழங்குவதை இப்போது பல இடங்களிலும் கன்னியர்கள் செய்கிறார்கள்..ஆகவே பெண்களுக்கு குருத்துவம் மறுக்கப்படுவதற்கு மாதவிடாய் ,தீட்டு போன்றவை காரணம் என்று இதுவரை நான் கேள்விப்படவில்லை .அது உண்மையாக இருந்தால் என் கடுமையான கண்டனங்கள்.

ஜோ/Joe said...

//மதமோ விவிலியமோ அப்படிச் சொல்லவில்லையென்று பதில் தரவேண்டாம். இங்கேகூட இந்துமதம் அப்படிச் சொல்லவில்லையென்றுதான் பதில் தரப்படுகிறது.//

வசந்தன்,
என்னுடைய நோக்கமே இந்து மதம் என்ன சொல்லுகறது என்று தெரிந்து கொள்வது தான் .நடைமுறை தான் நமக்கு தெரியுமே?

ஜோ/Joe said...

குமரன்,
உங்கள் நீண்ட விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றி! நேரமிருக்கும் போது மற்ற கேள்விகளுக்கும் விடையிறுங்கள் .நன்றி!

ஜோ/Joe said...

தேன் துளி,
உங்கள் கருத்துக்கு நன்றி!
// if more money can hide the skin color or make it better,the same philosophy goes to remove theetu from temple with additional money.//
இது இரண்டுமே மனிதனுடைய நிலைப்பாடுகள் .நான் கேட்க நினைப்பது இந்து மதக் கோட்பாடு படி கடவுளின் நிலைப்பாடு என்ன என்பதையே அல்லது கடவுள் என்ன நினைப்பதாக இந்து மதம் கூருகிறது என்பதையே!

பத்மா அர்விந்த் said...

Joe
I think I did not explain it clearly. These things are not addressed in the religion (any). But mne made these rules to impose their control behavior. the temple now makes a staement that they are powerful and can impose penalty. all of these actions are to make that statement of power and create inequality. Panjali refused to come to the palace initially because she had her periods that day."ooraadaiyil irukkiReen'Did Kannan leave her? How can any one control thair mind not to think about God on particular days? I am sorry that all computers at home crashed, and in teh process of reinstalling everything. Hence I have not commented in tamil.

ஓகை said...

ஜோ அவர்களே,

உங்கள் கேள்விகளுக்கு நான் புரிந்துவைத்திருக்கும் பதில்களைக் கூறுகிறேன். அதற்கு முன் ஒன்று சொல்லியாகவேண்டும். உங்கள் கேள்விகளின் நோக்கம் அறிவுக்குப் புறம்பானதைப் போல் தோற்றமளிக்கும் இந்த கேள்விகளை கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்று அறிந்து கொள்வதாகுமென்று நான் புரிந்து கொள்கிறேன். இந்த என் புரிதல் சரியானதானால் உங்கள் கேள்விகளுக்கு பகுத்தறிவு வாதிகள் பதில் கூறுவது பொருத்தமற்றதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

1. வைணவர்கள் சைவக் கோயில்களுக்குப் போவதில்லை. சைவக் கடவுளர்களின் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. சைவ வைணவ சண்டைகளின் வரலாற்று பிம்பத்தை கல்கி தனது பொன்னியின் செல்வன் நாவலில் விரிவாகவே குறித்திருப்பார். சிவகவி படத்தில் சிவனை வணங்குபவர் அவர் மகன் முருகனை வணங்க மாட்டார். அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ என்ற பாடல் மிகப் பிரசித்தம். இவ்வாறு தங்கள் இஷ்டத்திற்கு தாம் வணங்கும் தெய்வத்தினை தேர்தெடுத்துக் கொள்வது இந்துக்களின் இயல்புகளில் ஒன்று. வைணவர்கள் தங்கள் கோயிலுக்கு வருவதில்லை என்பதில் சைவர்களுக்கு வருத்தமிருப்பதாகவும் தெரியவில்லை. அவரவர்கள் தெய்வம் அவரவர்களுக்கு.

2. தெய்வ குற்றம் என்பது தெய்வ நிந்தனை செய்யப்படக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். தேசியக் கொடியில் ஏன் சட்டை தைத்து போடக்கூடாது? அப்படி செய்தால் ஏன் தண்டனை? நாம் கண்டிப்பாக மரியாதை தந்தே ஆகவேண்டுமென்பதற்காக எற்படுத்தப் பட்ட கோட்பாடு (protocol) அவ்வளவுதான்.

3. மனித உடம்பின் கழிவுகள் குரும்பை, பீளை, சளி, வாந்தி, எச்சில், வியர்வை, சிறுநீர், மலம், மாதவிடாய் மற்றும் பாலுணர்வு திரவங்கள் இவையனைத்துமே சுத்தம் சார்ந்த வகையில் அருவறுப்பாகக் கொள்ளப் படுகின்றன. ஐரோப்பியர்களின் மலம் சுத்தம் செய்யும் முறை அவர்கள் குளிர்நிலைக்கு தக்கவாறு வைத்துக் கொண்டாலும் அந்தக் குளிரிலும் அதை கூச்சமாகவும் சுத்த்மற்றதாகவும் நம்மவரில் சிலர் இன்றும் கருதுவதை அறிந்திருப்பீர்கள். நான் அப்படித்தான். சாதாரண பொது இடங்களிலேயே இவை அனைத்தையும் களைந்தே நாம் இருக்க வேண்டும் என்னும்போது புனிதமாகக் கருத்ப் படவேண்டிய இடங்களில் இதற்கான கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டிருக்கிறது. இப்போது நவினமாகக் கிடைக்கும் சுகாதாரமுறைகளில் நாம் சுத்தமாக இருக்கும் சாத்தியத்தினால்தான் இன்று பெண்கள் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு மாதவிடாயைப் பொருட்படுத்தாமல் செல்லமுடிகிறது. இது பரவலாக்கப் படுவதற்கு காலமே வகை செய்யும்.

4. இந்து மதத்தில் வெவ்வேறு கோயில்களில் வெவ்வேறு விதமான பழக்கங்கள் பின்பற்றப் படுகின்றன. சிதம்பரம் கோயில் ஒரு சிறந்த உதாரணம். அந்தந்த கோயில்களில் நடைமுறைகளுக்கு பொருப்பாயும் அதிகாரமுள்ளவர்களாகவும் இருப்பவர்களே செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறார்கள். இதில் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் அந்தந்த கோவில் அதிகாரிகளே இருக்கிறார்கள். அபராதமும் பரிகாரமும் அவர்கள் தீர்மானிப்பதுதான். தகுந்த பரிகாரம் செய்துவிட்டோம் என்னும் திருப்தியே தோஷம் என்று நினைக்கப்படுவனவற்றைப் போக்கும் வல்லமை கொண்டது.

அன்புடன்
ஓகை நடராஜன்.

வசந்தன்(Vasanthan) said...

ஜோ,
பெண் குருத்துவ மறுத்தல் சம்பந்தமாக நான் குருவானவரோடும் மறைக்கல்வி ஆசிரியர்களோடும் உரையாடியபோது சுற்றி வளைத்து இறுதியில் வந்து நின்ற இடம் மாதவிடாய்தான்.
'பெண்கள் தங்களுக்குரிய சமூகக் கடமையான குழந்தை பெறுதலை ஒழுங்காகச் செய்ய வேண்டும்' என்று வெளிப்படையாக வத்திக்கான் சொல்லியிருக்கிறது. ஆனால் பெண் குருத்துவ மறுத்தலுக்கான காரணத்தைத் தெளிவாக எங்காவது சொல்லியுள்ளதா என்று தெரியவில்லை. இறையியலில் ஊறியவர்களுக்கும் விளக்கமேதுமில்லை.
குழந்தை பெறும் சமூகக்கடமையை வலியுறுத்தி முதலில் பதிலளித்தபோது 'பெண்களுக்கு திருமணத்தை மறுத்து அவர்களைக் கன்னியாஸ்திரிகளாக்குவது முரண்பாடாக உள்ளதே' என்று கேட்டால் சுற்றிவளைத்து இறுதியில் வந்தநிற்குமிடம் இதுதான். இது எனக்கு நேரடி அனுபவம்தான்.
இதைத்தான் காரணமாகச் சொல்வதாக நான் சொல்லவில்லை. இதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். பெண்களுக்குத் தலைமைப்பண்பில்லை, அவர்களால் ஒரு பங்கை வழிநடத்த முடியாது என்பது தொடங்கி நிறையச் சொல்லி, அவற்றுக்கான எதிர்க்கருத்துக்களின் பின் இறுதியாக வந்து மாதவிடாயில் முடிப்பார்கள்.

ஆனால் நீங்கள் சொல்வது போல் சில இடங்களில் மட்டுமன்றி பொதுவாக எல்லா இடங்களிலும் கன்னியர்கள் நற்கருணை அளிக்கிறார்கள்.

இவற்றைத்தாண்டி சரியான விளக்கமிருந்தால் நான் அறிய ஆவலாயிருக்கிறேன்.

ஜோ/Joe said...

வசந்தன்,
//பெண் குருத்துவ மறுத்தல் சம்பந்தமாக நான் குருவானவரோடும் மறைக்கல்வி ஆசிரியர்களோடும் உரையாடியபோது சுற்றி வளைத்து இறுதியில் வந்து நின்ற இடம் மாதவிடாய்தான்.//
இது எனது அனுபவத்திலிருந்து வேறுபட்டதாகவும் ,அதிர்ச்சி தருவதுமாய் உள்ளது.

//இவற்றைத்தாண்டி சரியான விளக்கமிருந்தால் நான் அறிய ஆவலாயிருக்கிறேன்.//
நானும்! எப்படியிருப்பினும் குருத்துவ மறுப்புக்கு இது ஒரு காரணமாக சொல்லப்படுமெனில் அது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

பொன்ஸ்~~Poorna said...

ஜோ,
உங்களுக்குப் பயங்கர தைரியம் தாங்க.. :)

மத்தபடி என்னத்த சொல்லி என்னத்த பண்ண? நீங்க இறைவன் சன்னிதானத்தில் மாதவிடாய் பத்தி கருத்து கேட்கறீங்க.. ஒரு அஞ்சு வருஷம் முந்தி வரை நானும் வீட்டுக்குள்ளயே தீட்டு பார்த்துகிட்டு இருந்த ஆளு தான்.. தனியாத் தங்கி வேலை செஞ்ச காலத்தில், இந்த மாதிரி மேட்டர்ல அறைத்தோழி ஒருத்திய ஒரு மூணு நாள் போட்டு வாட்டி எடுத்ததை இப்போ நினைச்சாலும் வெட்கமா இருக்கு.. அவ சாதாரணமாத் தான் எடுத்துகிட்டா.. இருந்தாலும்..

அதுக்கு அப்புறம் இந்த சங்கதி எல்லாம் என்ன எதுக்குன்னு புரிஞ்சி, எது முடியுமோ, எது தேவையோ, அதை மட்டும் மத்தவங்க நம்பிக்கையைப் புண்படுத்தாம, செஞ்சாப் போதும்னு "வளர்ந்தாச்சு"..

இப்போவும் வீட்டுல மாசத்துல மூணு நாள் லீவு தாங்க.. "ஒரு நாளாவது சமையலுக்கு உதவக் கூடாதா.. உன் துணியாவது நீயே தோய்க்கக் கூடாதா" கேள்வியெல்லாம் சுலபமா அவாய்ட் பண்ண முடியும் போது, வேண்டாம்னு சொல்வோமா? ;)

இன்னொரு பக்கம், சில விஷயங்களைப் பேசும்போது சில பேரோட நம்பிக்கையை உரசிப் பார்க்கிறதுனால இதுல பேசி என்ன கிழிக்கப் போறோம்னு வீட்ல கப்சிப், இந்த விஷயங்களில் வெளியிலும்..

"எனக்குள்ளும், உனக்குள்ளும் இருப்பது அதே இறைவன் தான் என்னும் போது அந்த மூணு நாட்கள் மட்டும் லீவு எடுத்துகிட்டு போய்டுவாரா என்ன?"ன்னு கேட்டு "எல்லாம் சம்பாதிக்கிற திமிரு"ன்னு பதில் வாங்கியிருக்கேன் ;)

ramachandranusha(உஷா) said...

ஜோ,
நோம்பு என்பதை ரம்ஜான் நோம்பு என்று படிக்கவும்.

பொன்ஸ்~~Poorna said...

முழுமூச்சா இறங்கிட்டீங்களா? சிங்கைல 12 மணியாமே!! :):))

Anonymous said...

ஜோ,
மாதவிடாய் சம்பந்தமான நிலைப்பாட்டின் காரணமாக குருமார்களை குறை சொல்ல முடியாது. அது குருமார்களின் நிலைப்பாடல்ல, பைபிளின் நிலைப்பாடு
உதாரணம்
Leviticus 15:19-30
And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even. And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean. And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even. And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean. And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean. Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation. And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean. And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation. And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.

ஜோ/Joe said...

பொன்ஸ்,
கருத்துக்கு மிக்க நன்றி!
இப்போ தான் தெரியுது .மத்தவங்க ரொம்ப சீரியஸா நினைக்குற ஒரு விஷயத்த நான் என் நடைமுறைக்கு ஏற்ப ரொம்ப சுலபமா எடுத்துட்டு பேசிட்டிருக்கேன் போல .எனக்கும் திருமணமாகி 3 வருடங்கள் ஆகி விட்டது .இந்த விஷயத்தை ஒரு பொருட்டாக கூட கருதியதில்லை .அது ஒரு இயற்கை நிகழ்வு என்பதை தவிர!

ஜோ/Joe said...

உஷா,
நன்றி! சகோதரர் இறைநேசன் பதில் சொல்வாரா பார்ப்போமே!

ஜோ/Joe said...

சரியான வசனங்களை எடுத்துக்கொடுத்த அனானிக்கு நன்றி!

பழைய ஏற்பாட்டில் உள்ள Leviticus ஆகமம் அக்கால யூதர்களின் பழக்க வழக்கங்களை விளக்கும் ஆகமம்.

சீனு said...

//உஷா,
நீங்கள் தயங்காமல் உங்கள் கருத்துக்களை கூறலாம் .என்னை ஏதோ மதவாதியாக நினைத்து நீங்கள் கருத்து கூற தயங்கினால் தான் நான் வருந்துவேன்.//
//அல்லாமல் வஜ்ரா சங்கர் ,Muse ,சீனு ,கால்கரி சிவா போன்றவர்கள் போப்பாண்டவர் தான் என்னை தூண்டிவிட்டார் என்ற ரீதியில் வழக்கமான மட்டையடிகளை பதிலாக தந்தால்//
//போப் ஆண்டவர் உங்களைத் தூண்டிவிட்டார் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் முந்திக் கொண்டுவிட்டால் நாங்கள் சொல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையா?//
ஜோ! அது சரி! என்னை (எங்களை) எப்பொழுது மதவாதியாக்கிணீர்கள்? ஒரு மதத்துக்கு, அதுவும் நான் சார்ந்த மதத்துக்கு சார்பாக பேசினால் எப்படி சார் நான் மதவாதியாக முடியும். "என்னை ஏதோ மதவாதியாக நினைத்து நீங்கள் கருத்து கூற தயங்கினால் தான் நான் வருந்துவேன்". சமீபகாலமாக இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வேண்டாமென்று தான் இருந்தேன். காரணம், நாங்கள் இடும் ஒவ்வொரு பின்னுட்டத்திற்கு தக்கவாறு நாங்கள் ஒவ்வொரு group ஆகிவிடுகிறோம் :(

//மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? //
ஒருவேளை, மாதவிடாய் காலத்தில் தொற்று நோய் பரவும் என்ற காரணமாகவே அந்த காலத்தில் பெண்களை தள்ளிவைத்திருக்க வேண்டும். அந்த பழக்கம் தீட்டாக மாறி, அதை இந்த காலத்திலும் ஃபாலோ பண்றாங்களோ? மற்றபடி, பெண்களை almost அனைத்து மதங்களும் ஒதுக்கி வைப்பதற்கு இதுவே காரணாமா இருக்கலாம் என்பது என் கருத்து. அவை எந்த மதங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. பொதுவாக.

கூத்தாடி said...

நல்லப் பதிவு .மதம் என்ற பேரில் செய்யும் பல அநியாயங்கள் எல்லா மதத்திலும் உண்டு . மீரா ஜாஸ்மின் விவகாரம் கேரள அரசியலில் மார்க்ஸ்டிகள் கூட பெரியதாய் எதிர்ப்பு செய்யவில்லை என்பது அவர்களின் பிற்போக்குத் தனத்திற்கு எடுத்துக்காட்டு..
விவேகான்ந்தர் திருவான்கூர் சமஸ்தானம் பற்றி கூறிய நிலைமையில் தான் இன்றும் கேரள மடங்களும் கோவில்களும் இருக்கிறது..

முகமூடி said...

ஜோ, நல்லதொரு பதிவும் விவாதங்களும்...

// Panjali refused to come to the palace initially because she had her periods that day."ooraadaiyil irukkiReen'Did Kannan leave her? //

தேன்துளி, நான் கேட்ட (திருமுருக. கிருபானந்த வாரியார், பேராசிரியர்கள் சரஸ்வதி ராமநாதன், சத்தியசீலன், அறிவொளி) மகாபாரதத்தில் பாஞ்சாலியை கண்ணன் இழுத்து வரச்சொல்லவில்லை... இழுத்து வரச்சொன்னது துரியோதனன், இழுத்து வந்தது துச்சாதனன்.

குமரன் (Kumaran) said...

முகமூடி. தேன் துளி சொல்லவந்தது 'மாதவிலக்காய் இருந்தாலும் பாஞ்சாலியின் சரணாகதியைக் கண்ணன் ஏற்றுக் கொண்டு அவள் மானத்தைக் காத்தானே. அவளை கைவிட்டானா என்ன?' என்பது தான். அதனைத் தான் 'Did Kannan Leave Her' என்று கேட்டிருக்கிறார்.

பொன்ஸ்~~Poorna said...

ஜோ,
இதையும் சொல்லி முடிச்சிக்கிறேன்..

//மத்தவங்க ரொம்ப சீரியஸா நினைக்குற ஒரு விஷயத்த //
எங்க சொந்தத்துலயே இந்த விஷயத்தைப் பொருட்டாகக் கருதாதவங்களும் இருக்காங்க.. எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூடப் பிறந்தவங்க வீட்டிலயே இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க..
ஒரு சில சமயம் சில பண்டிகைகளின் போது நானே பெரியம்மா, இல்லைன்னா, மாமா வீட்டுக்குப் போய்த் தங்கி இருக்கேன், ஃப்ரீனஸுக்காக... முதல்லயே சொன்ன மாதிரி ஏதோ ஒரு நம்பிக்கை தான்..

Unknown said...

I posted this in kumaran's blog.Am reposting it since it is relevant to the discussion here

---------------------------------
ஜோ

குமரன் சொன்னபடி ஐயப்பன் கோயிலில் பெண்கள் போக தடை இல்லை.எனக்கு இது அந்த பதிவு போட்ட பின் தான் தெரியும்.பலரை போல் நானும் இத்தனை நாளாக பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவதில்லை என்றே எண்ணியிருந்தேன்.எஸ்.கே சொல்லித்தான் விவரமே தெரியும்.

முதல் இரண்டு கேள்விக்கும் குமரன் பதில் சொன்னார்.மூன்றாவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

பூஜைகளில் இருவகை உண்டு என வேதம் சொல்கிறது.(சமஸ்கிருத பெயர்கள் மறந்துவிட்டது.நாளை இடுகிறேன்)ஒன்று முறைப்படி,சாஸ்திரப்படி செய்ய வேண்டிய பூஜை.இதில் பெண்களுக்கு மட்டுமல்ல,ஆண்களுக்கே கட்டுப்பாடுகள் உண்டு.அதாவது திருமண சடங்கு,கும்பாபிஷேகம்,யாகம் போன்றவற்றை நடத்த அனைவருக்கும் உரிமை இல்லை.சில கட்டுப்பாடுகள் உண்டு.

இதை விட சிறப்பான பூஜை முறை ஆத்மஹாரம் என்பது.இதன்படி யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.எந்த கட்டுப்பாடும் கிடையாது.ஆண்,பெண்,மாதவிலக்கான பெண்,குளிக்காத ஆண்,நாள் கிழமை என எதுவும் இதற்கு கிடையாது.ஆற்றங்கரை மரத்தடி பிள்ளையாரை இந்த முறையில் தான் அனைவரும் கும்பிடுகின்றனர்.கல்யாணமே கூட இந்த முறையில் ஐயர் இல்லாமல்,வேதம் ஓதாமல் செய்து கொள்ளலாம்.(காந்தர்வ விவாகம் என்பார்கள்)

ஒவ்வொரு பூஜை முறைக்கும் ஒரு பெயர்.அந்த பூஜை முறைதான் சிறப்பு,இது சிறப்பில்லை என எதுவும் கிடையாது.மாதவிடாய் இருக்கும் பெண் பூஜை செய்தால் அது ஆத்மஹாரம் எனப்படும்.பக்திதான் முக்கியம்.பூஜை முறை அல்ல.

திருப்பாவை பாடிய ஆண்டாள் மார்கழி மாதத்தின் 30 நாளும் வில்லிபுத்தூர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடத்தான் செய்தாள்.30 நாளுக்கும் நாள் ஒன்று விதம் ஒரு பாட்டு இருக்கிறது.தான் சூடிய மாலையை தான் பெருமாளுக்கு போட்டு அழகு பார்த்தாள்.

நல்லடியார் said...

ரமலானில் நோன்பு நோற்றிருக்கும் பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால், நோன்பை விட்டு விடச்சொல்லி இருப்பது உண்மைதான். இதனை இஸ்லாம் தீட்டிற்கான தண்டனையாக பெண்கள் மீது சுமத்தவில்லை.மாறாக உதிரபோக்கால் பலஹீனம் அடைந்திருக்கும் பெண்ணிற்கான சலுகையாகவே வழங்கிறது.

மாதவிடாயின் போது விட்ட நோன்பை மாதவிடாய் நின்ற பிறகு அடுத்த ரமலானுக்குள் மீட்டுக் கொள்ளலாம். அதேகாலத்தில் விடுபட்ட தொழுகைகளை மீட்ட வேண்டியதில்லை என்பதிலிருந்து மாதவிடாய்க் காரணத்தால் இஸ்லாம் பெண்களை தண்டிக்கவில்லை என்பது நிரூபனமாகிறது.

முஹம்மது நபியின் மனைவியரில் எவருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், அதனைப் அசுத்தமாகப் பொருட்படுத்தாது அவர்களின் மடியில் தலை வைத்து குரான் ஓதிவந்தாகள். ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் கஃபாவை வலம் வருவதைத் தவிர மற்ற அனைத்து கிரியைகளும் செய்யலாம். பேறுகாலத்தில் ஏற்படும் உதிரபோக்கின் போது எந்த இஸ்லாமியக் கடமையும் அந்தப் பெண்கள் மீது கட்டாயமில்லை.

மாதவிடாய் வந்த பெண்கள் இறைவனை தியானம் செய்வதற்கும் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கும் இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. எந்த ஒரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப் படாது (குர்ஆன் 2:233)

பி.கு:

1) இறை நேசனிடம் சகோதரி உஷாவும், ஜோவும் கேட்டவற்றிற்கு நானறிந்த பதில்களைச் சொல்லியுள்ளேன். ஜோ விரும்பினால் அனுமதிக்கலாம். அதே சமயம் விவாதக்கரு திசை திரும்பாமலும் கண்காணிக்க வேண்டுகிறேன் 

2) இந்து மதம் பற்றிய சகோதரர் ஜோவின் கேள்விக்கு பதில் சொல்பவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களையும் அனுமானங்களையுமே இதுவரை சொல்லி இருக்கிறார்கள். தங்கள் வேதத்தின் படியான விளக்கத்தைச் சொன்னால் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்கி விமர்சிப்பதில் நியாயம் இருக்கும்.

அன்புடன்,

Boston Bala said...

Aaraamthinai.com - Hindu Pandpaadu Sila Sinthanaigal:
"இந்துப் பண்பாடு சில சிந்தனைகள் :: கா. கைலாசநாதக் குருக்கள்

பத்மா அர்விந்த் said...

Mugamoodi,
I meant that Kannan did not leave her alone without helping just because she had her periods. I know Thuccahanan only brought her to the palace.This is what happens when I leave a comment in a hurry with a slow computer!!

பத்மா அர்விந்த் said...

Thanks Kumaran.

கால்கரி சிவா said...

மதங்களைப் பற்றி கருத்து கூறாத என்னை சதா காலமும் நினைத்திருபதற்கு நன்றி ஜோ

Anonymous said...

ஜோ,
பழைய ஏற்பாட்டை யூத பழக்கவழக்கம் என்று நாம் ஒதுக்கிவிடுவது வசதியானது. ஆனால், பைபிளை பலவருடங்கள் படித்து தேரும் குருமார்கள் அவ்வாறு ஒதுக்க இயலாது. ஏனெனில், இயேசு பழைய ஏற்பாட்டின் அனைத்து பகுதிகளையும் காலமுள்ளமட்டும் கடைபிடிக்கவேண்டுமென்றே இயம்புகிறார். புதிய ஏற்பாடு எந்த விதத்திலும் பழைய ஏற்பாட்டின் சட்டங்களை உதறச்சொல்லவில்லை. மாறாக மேலும் அதிகமான கட்டுப்பாடுகளையே கிறிஸ்துவனுக்கு கொடுக்கிறது என்பது சான்றோர் நிலைப்பாடு.

“For truly, I say to you, till heaven and earth pass away, not an iota, not a dot, will pass the law until all is accomplished. Whoever then relaxes one of the least of these commandments and teaches men so, shall be called least in the kingdom of heaven; but he who does them and teaches them shall be called great in the kingdom of heaven.” (Matthew 5:18-19 RSV)
"It is easier for Heaven and Earth to pass away than for the smallest part of the letter of the law to become invalid." (Luke 16:17 NAB)
"Do not think that I have come to abolish the law or the prophets. I have come not to abolish but to fulfill. Amen, I say to you, until heaven and earth pass away, not the smallest part or the smallest part of a letter will pass from the law, until all things have taken place." (Matthew 5:17 NAB)
"All scripture is inspired by God and is useful for teaching, for refutation, for correction, and for training in righteousness..." (2 Timothy 3:16 NAB)
"Know this first of all, that there is no prophecy of scripture that is a matter of personal interpretation, for no prophecy ever came through human will; but rather human beings moved by the holy Spirit spoke under the influence of God." (2 Peter 20-21 NAB)

-

குமரன் (Kumaran) said...

//.நான் கேட்க நினைப்பது இந்து மதக் கோட்பாடு படி கடவுளின் நிலைப்பாடு என்ன என்பதையே அல்லது கடவுள் என்ன நினைப்பதாக இந்து மதம் கூருகிறது என்பதையே!
//

ஜோ, இந்துமதக் கோட்பாடு என்று எதனைச் சொல்லச் சொல்கிறீர்கள்? ஒரு புனித விவிலியத்தைப் போன்றோ திருக்குரானைப் போன்றோ ஒரே மத நூலாய் இந்துக்களுக்கு எதுவுமே இல்லையே. இருக்கும் பல பிரிவுகளுக்கு பலவிதமான புனித நூல்கள். அதனால் இந்துமதம் இது தான் கூறுகிறது என்று உறுதியாகக் கூறமுடியாது. இங்கு சொல்பவர்கள் எல்லாம் வாழ்க்கை நெறியான இந்துமதத்தின் தங்கள் புரிதலைத் தான் சொல்கிறார்கள்; அதனைத் தான் சொல்லவும் முடியும். அதுவே இந்து மதத்தின் பலவீனமும் பலமும். ஒரே புனித நூல் என்று இல்லாததால் காலத்துக்கேற்றக் கருத்துகளை ஏற்றுக் கொண்டு மாறவும் இந்து மதத்தால் முடிகிறது.

நல்லாடியாருக்கும் இதுவே பதில்.

ஜோ/Joe said...

பாஸ்டன் பாலா,
கலாசநாத குருக்களின் கட்டுரைக்கான சுட்டிக்கு நன்றி!
நிறைய தெரிந்து கொள்ள் வேண்டிய கருத்துக்கள் கிடைத்தன..ஆனால் முதல் பத்தியிலேயே தகவல் பிழை இருப்பது நெருடலாக இருக்கிறது .உலகில் கிறிஸ்தவம் மிகப்பெரிய மதம் என்றும் ,அடுத்ததாக கன்பூசிய மதம் ,அடுத்தது மூன்றாம் நிலையில் இந்து மதம் என்று குறிப்பிடுகிறார் .சீனாவில் இருக்கும் அனைவரும் கன்பூசிய மதத்தை பின்பற்றுவதாக கொள்ள முடியாது .பாதிக்கு அதிகமான பேர் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை ..மேலும் உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாம் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஏனோ தெரியவில்லை

Unknown said...

குமரன் சொன்னதுபோல் புனித நூல் என ஒன்று இந்து மதத்தில் கிடையாது.பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் புனித நூல் என்றால் அது வேதம் என சொல்லலாம்.ஆனால் 4 வேதங்களையும் படித்து தேர்ந்தவர் யாரும் தற்போது கிடையாது.ஆக வேதவழிப்படி நடப்பவன் இந்து என்பதெல்லாம் கிடையாது.

வேதத்தின் சாரம் கீதை என்பார்கள்.கீதையில் சொல்லபட்ட செய்தி சரணாகதி தத்துவம் தான்.கர்மம்,பக்தி,ஞானம் என 3 வழி இருக்கிறது என்பார்கள்.ஆனால் மூன்று வழிகளையும் பிரித்து போட்டு ஆராய்ந்தால் அவை மூன்றும் ஒன்றே.அதாவது "கடவுளை சரணடை.அதை விட்டால் உய்வடைய உனக்கு வேறு எந்த வழியும் கிடையாது.அதை செய்தவனுக்கு வேறு எந்த தர்மமும்,வேதமும் தேவை இல்லை.அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு என்னை சரணடைந்துவிடு.உன்னை காக்கிறேன்."

கீதை,வேதம்,ராமாயணம்,பாரதம் என அத்தனையின் சாரமும் இந்த சரணாகதி தத்துவத்தில் அடங்கிவிடும்.அப்படி சரணாகதி அடைந்த பக்தர்களை பகவான் காக்கும் கதையே பாரதமும்,ராமாயனமும்,புராணங்களும்.கடவுள் புகழை பாடும் சொற்களே வேதங்கள்.

இந்த சரணாகதி அடைய காலம்,நேரம்,ஆண்,பெண் எந்த பேதமும் இல்லை.மாதவிலக்கு,வருடவிலக்கு எந்த எந்த சடங்கும் தடை இல்லை.பன்றிக்கறியை இறைவனுக்கு ஊட்டி,எச்சிலை உமிழ்ந்து சிவலிங்கத்தை சுத்தப்படுத்தினார் கண்ணப்ப நாயனார்.அந்த எச்சில் இறைவனுக்கு அமிர்தத்தை விட இனித்ததாம்.நிலைமை இப்படி இருக்க இறைவன் சுத்தம் பார்ப்பான்,பக்தர்களை தள்ளி வைப்பான் என்பதெல்லாம் மூடர் கூற்று.

"கடவுளை பற்றிக்கொள்.உய்வடைய கதி வேறில்லை.உன் கர்மா உன்னை காக்காது,உன் பாப புண்ணியங்கள் உன்னை காக்காது.அவன் ஒருவனே காப்பான்" வேதத்தின்/கீதையின்/புரானத்தின்/இந்து மதத்தின் சாரம் என நான் நினைப்பது இதுவே.இந்துமதத்தின் அனைத்து நூல்களும் சொல்லும் கருத்து இதுவே.

ஜோ/Joe said...

வருகை புரிந்து கருத்துக்களை பகிரிந்து கொண்ட நண்பர் முகமூடி ,கால்கரி சிவா,முத்து தமிழினி,ஓகை நடராஜன் ,பொன்ஸ்,உஷா,சீனு,கூத்தாடி,பாஸ்டன் பாலா,தேன் துளி மற்றும் அனைவருக்கும் நன்றி!

விளக்கமான கருத்தாக்கங்களை கொண்டு வந்த குமரன் ,ராகவன்,செல்வன் ,நல்லடியார் ஆகியோருக்கு நன்றி!
அனானியாக வந்து விளக்கங்கள் கூறியவர்களுக்கும் நன்றி!

ஜோ/Joe said...

குமரன்,செல்வன்,ராகவன்,
உங்கள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ள விதத்தில் இருந்தன.

இந்து மதம் எளிதில் வரையறுக்க முடியாதது ,பன்முக தன்மை கொண்டது என்பதெல்லாம் புரிந்தது .உங்கள் கருத்துக்களிலிருந்து நான் புரிந்து கொண்டது இந்து மதத்தில் இது தான் அனைவரும் பின்பற்ற வேண்டிய முறை என்று எதுவுமே கிடையாது .இவர்கள் தான் வணக்கத்திற்குரியவர்கள் (அல்லது வணக்கத்திற்குரியது) ,இவர்கள் அல்ல என்ற பொது விதி இல்லை .சரி தானே?

சிறு சந்தேகம்..யாரை எப்படி வணங்கினாலும் அவர்களை இந்துவாக கருதலாமா ? அல்லது இந்துவாக இருப்பதற்கு குறைந்த பட்சம் இவை இவற்றில் நம்பிக்கை கொள்ள வேண்டும் ,இவற்றை வணங்க வேண்டும் என்று எதுவுமே இல்லையா ?எந்த நம்பிக்கையும் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் ,இயேசுவை மட்டும் வணங்கும் நானும் இந்துவா? நான் இயேசுவை மட்டும் வணங்குவது நான் இந்துவாக நீங்கள் கருதுவதற்கு எவ்விதத்தில் குறைவாக இருக்கிறது?

ஜோ/Joe said...

Dreamer,
கருத்துக்களுக்கு நன்றி!

//நமது கல்லூரியின் முன்னாள் (?)முதல்வர் ஜான் பிரிட்டோ சிங்கை வந்தாராமே, சந்தித்தீர்களா??)//

சில வருடங்களுக்கு முன்பு வந்த போது அந்நேரம் நான் சிங்கையில் இல்லை..சமீபத்தில் வந்ததாக கேள்விப்படவில்லை .இப்போது அவர் முன்னாள் தான்.

Unknown said...

ஜோ

இறைவன் "தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான்" என்பது இந்துமத கோட்பாடு.த்வைதம்,அத்வைதம்,விசிசிடாத்வைதம் என மூன்று பெரும் தத்துவங்களும் இந்த ஒன்றில் உறுதியாக உள்ளன.

அனைத்திலும் இறைவன் உள்ளபோது இறைவனை தவிர வேறு யாரையும் நாம் வணங்க முடியாது.கீதையில் கண்னன் சொல்வது கூட இதுதான்.

"யாரை நீ வணங்கினாலும் நீ உண்மையில் வணங்குவது என்னைத்தான்.நீ கடவுளை எந்த உருவத்தில் எந்த பலனை வேண்டி வழிபடுகிறாயோ உனக்கு அந்த பலனை அந்த கடவுள் ரூபத்திலேயே நான் தருவேன்.ஆனால் என் மீது பலன் கொண்ட மெய்யன்பர்கள் என்னையன்றி வேறேதும் கேட்கமாட்டார்கள்" என்கிறார்.

எந்த கடவுளை வனங்குவோரும் இந்துக்களே.இறைநம்பிக்கை அற்ற நாத்திகர்கள் கார்வாகம் எனும் மதமாக கருதப்பட்டு இறைவனை அவர்கள் திட்டுவது துதியாக ஏற்கப்படுமாம்.(நிந்தாஸ்துதி என்பார்கள்)ஆக அவர்களும் இந்துக்களே.

உலகின் எந்த பகுதி மக்களும் இந்து தத்துவரீதியின் அடிப்படையில் இந்துக்களே.அதனால் தான் எந்த பெயரும் இம்மதத்துக்கு கொடுக்கப்படவில்லை.இதுதான் இந்து என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது.

Anonymous said...

அருமை. என் பங்கு இதோ. கண்ணன் கீதையில் கூறுகிறான்:"உன் அறியாமையால் யாரை வணங்கினாலும் உன் வணக்கம் என்னையே வந்து சேரும்.". எனக்கு சில பக்தர்கள் சில சாமியார்களால் நல்லது நடந்த்தது என்றால் நான் நம்ப காரணம் இதுவே. ஆனால் சாமியார் போலியாக கூட இருக்கலாம்.
கீதையின் உட்பொருள் : ஆத்மாவிற்கு ஆண், பெண் என எதுவும் கிடையாது. தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்தால் எல்லாரும் இறைவனே. இந்த வரி சிக்கலானது. நாம் இறையா என கேள்வி எழும். நாம் இறை என உணர்ந்தால் கோபம், பொறாமை, பேராசை என எதுவும் இருக்காது. இந்த பதிவு எனக்கு பிடித்த பதிவு. நிறைய பகிர்ந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் நிறைய வேலை உள்ளது. கீதை கூறுவது : தன் கர்மங்களை தொடர்ந்து புரிபவன் என்னை நினைக்க தேவையில்லை. ஏனெனில் நானே கர்மம்.
-மோகன் - புலிக்குட்டி

G.Ragavan said...

ஜோ, நல்லடியார்,

இந்து மதத்தில் இந்த நூலைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவரவர் இருப்பிடத்திற்குத் தக்க அவரவர் பண்பாட்டிற்குத் தக்க வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்ளலாம். அவரவர் தாய்மொழியிலேயே மறைகளை ஓதிக் கொள்ளலாம். இந்து மதம் என்று போட்டுக் கொள்கிறவர்கள் கண்டிப்பாக நான்கு வேதங்களை ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஓதினாலும் பாதகமில்லை. ஆக பண்பாட்டின் படியே வழிபாடு இருத்தல் என்பது அடிப்படை. காலப்போக்கில் எல்லாம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுதான் உண்மை. என்னை ஒரு கோயிலுக்குள் விடவில்லை என்றால் நானே ஒரு கோயில் கட்டிக்கொண்டு எனக்குப் பிடித்த வகையில் ஆராதனை செய்யலாம். அது கிடா வெட்டுவதோ, மலர் தொடுப்பதோ. அன்போடு செய்யும் முறைமைகள் அனைத்தும் ஆண்டவனுக்குச் சேரும் என்பதே அடிப்படைக் கருத்து. பல மொழிகளிலும் உள்ள நூல்களின் அடிப்படைக் கருத்தாக இருப்பது இதுவென்றே அறிகிறோம். ஆகையால் இன்ன நூல் என்று கேட்டால், நான் திருமுருகாற்றுப்படை, திருக்குறள், சிலப்பதிகாரம், திருப்புகழ், திருப்பாவை என்பேன். இன்னொருவர் தேவாரம் என்பார். மற்றொருவர் சண்முகக் கவசமென்பார். வேறொருவரோ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பார். எல்லாம் சரிதான். வாழும் பொழுது மனிதனாக வாழாவிட்டால் எதுவும் பயனில்லை என்பதே முக்கியக் கருத்து. நூலிலும் வழிமுறைகளிலும் எந்தக் கட்டுப்பாடும் கட்டாயமும் இல்லை. இதை இந்துக்கள் என்று சொல்கின்றவர்களிலேயே பலரும் உணர வேண்டும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் எல்லாரும் இந்துக்கள்தான். இந்து என்ற பெயரை விட அதற்குள் இருக்கும் வழிமுறைகள் சிறப்பானது. அதை அறிந்தவர் குறைவே என்பதே உண்மை.

G.Ragavan said...

நான் ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். ஓலமுறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடரது என்பதுதான் அடிப்படை நம்பிக்கை. அந்த வகையில் எந்த நம்பிக்கையும் மதித்து நடக்க வேண்டும் என்பதும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதும் அதன் தொடர்வுகள்.

ramachandranusha(உஷா) said...

ஜோ, முதல் முறையாக மிக நல்ல முறையில் நடந்த கொஞ்சம் சென்சிட்டிவ்வான பதிவு. இத்துடன்
முடித்துவிடுங்கள். கண்பட்டுவிட போகிறது :-)

ஜோ/Joe said...

//என்னை ஒரு கோயிலுக்குள் விடவில்லை என்றால் நானே ஒரு கோயில் கட்டிக்கொண்டு எனக்குப் பிடித்த வகையில் ஆராதனை செய்யலாம்.//

ராகவன்,
என் கேள்வி அபத்தமாக இருந்தால் மன்னிக்க!

ஒரு இந்து இருக்கிறார்.அவருக்கு இயேசுவை மிகவும் பிடித்து விட்டது (கிறிஸ்துவ மதம் அல்ல) .அவர் தானாகவே இயேசுவை சாமியாக வைத்து ஒரு கோவில் கட்டி வழிபடுகிறார் .தன் வழியில் பூசை செய்கிறார் .அந்த கோவில் இந்து கோவிலாக கருதப்படுமா ?

ஜோ/Joe said...

//ஜோ, முதல் முறையாக மிக நல்ல முறையில் நடந்த கொஞ்சம் சென்சிட்டிவ்வான பதிவு. இத்துடன்
முடித்துவிடுங்கள். கண்பட்டுவிட போகிறது :-)//

உஷா,
அப்படியா சொல்லுறீங்க! சரி சீக்கிரம் முடிச்சிடலாம்.

Unknown said...

ஒரு இந்து இருக்கிறார்.அவருக்கு இயேசுவை மிகவும் பிடித்து விட்டது (கிறிஸ்துவ மதம் அல்ல) .அவர் தானாகவே இயேசுவை சாமியாக வைத்து ஒரு கோவில் கட்டி வழிபடுகிறார் .தன் வழியில் பூசை செய்கிறார் .அந்த கோவில் இந்து கோவிலாக கருதப்படுமா ?//

நடுவே மூக்கை நுழைப்பதற்கு ராகவனும் ஜோவும் மன்னிப்பார்களாக,

உலகில் தற்போதுள்ள எந்த வழிபாட்டு ஸ்தலமும் இந்து கோவிலாக கருதப்படலாம்.ஆக இந்த அன்பரின் கோயிலும் இந்து கோயில் தான்.

நல்லடியார் said...

குமரன் மற்றும் கோ.ராகவன்,

தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

ஆப்ரஹாமிய மதங்களுக்கு தனித்தனி வேதங்கள் இருப்பதாக முறையே அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இம்மூன்றில் எது காலத்திற்கு ஏற்றது என ஒப்பீடு செய்வதில் நியாயமுள்ளது. இவற்றுடன் இந்து மதத் தத்துவங்களைப் போட்டு சிலர் குழப்பிக் கொள்கின்றனர்.

காலமாற்றத்திற்கு ஏற்ப எவரும் தனக்கு தோதாக வளைத்துக் கொள்ளும் வகையிலுள்ள மதத்தை உலகம் அழியும் வரைக்குமான தத்துவங்களை உள்ளடக்கிய மதத்துடன் ஒப்பிடக் கூடாது என்பதற்காவே பின்குறிப்பிட்டேன்.

உஷா மேடம்,

தங்கள் கேள்விக்கு என் பதிலில் திருப்தியுள்ளதா? (அது என் சொந்த பதிலல்ல :-)

இவ்விவாதம் திசை திரும்பும் வாய்ப்புள்ளதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Unknown said...

உங்கள் கருத்துக்களிலிருந்து நான் புரிந்து கொண்டது இந்து மதத்தில் இது தான் அனைவரும் பின்பற்ற வேண்டிய முறை என்று எதுவுமே கிடையாது .//


ஆம்

//
இவர்கள் தான் வணக்கத்திற்குரியவர்கள் (அல்லது வணக்கத்திற்குரியது) ,இவர்கள் அல்ல என்ற பொது விதி இல்லை .சரி தானே?//

ஆம்

//சிறு சந்தேகம்..யாரை எப்படி வணங்கினாலும் அவர்களை இந்துவாக கருதலாமா ?

ஆம்

//அல்லது இந்துவாக இருப்பதற்கு குறைந்த பட்சம் இவை இவற்றில் நம்பிக்கை கொள்ள வேண்டும் ,இவற்றை வணங்க வேண்டும் என்று எதுவுமே இல்லையா ?//

இல்லை.அப்படி எந்த விதியும் இல்லை.

//எந்த நம்பிக்கையும் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் ,இயேசுவை மட்டும் வணங்கும் நானும் இந்துவா? //

இந்துமதக் கொள்கைப்படி ஆம்.

//நான் இயேசுவை மட்டும் வணங்குவது நான் இந்துவாக நீங்கள் கருதுவதற்கு எவ்விதத்தில் குறைவாக இருக்கிறது?//

எந்த விதத்திலும் குறைந்ததல்ல.எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல.நீங்கள் ஏசுவை கும்பிடுவதும் நான் கண்னனை கும்பிடுவதும் இன்னொருவர் இருவரையும் கும்பிடுவதும் இன்னொருவர் இருவரையும் திட்டுவதும்(நிந்தா ஸ்துதி) ஒன்றே.

G.Ragavan said...

// ராகவன்,
என் கேள்வி அபத்தமாக இருந்தால் மன்னிக்க!

ஒரு இந்து இருக்கிறார்.அவருக்கு இயேசுவை மிகவும் பிடித்து விட்டது (கிறிஸ்துவ மதம் அல்ல) .அவர் தானாகவே இயேசுவை சாமியாக வைத்து ஒரு கோவில் கட்டி வழிபடுகிறார் .தன் வழியில் பூசை செய்கிறார் .அந்த கோவில் இந்து கோவிலாக கருதப்படுமா ? //

அபத்தமான கேள்வி என்றெல்லாம் இல்லை. தாராளமாகச் சொல்லலாம்.

நீங்கள் சொல்வது போல நடந்தால் அந்தக் கோயில் இந்துக் கோயிலாகக் கருதப் படலாம். தவறில்லை.

ஓகை said...

யேசுவையும் மாதாவையும் வணங்கும் இந்துக்கள் பலரை நான் அறிவேன். பெரும்பாலான தமிழ்நாட்டு இந்துக்கள் மற்ற மத தெய்வங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்களையும் குறைத்துப் பேசுவதை தெய்வகுற்றமாகவே கருதுவர். நான் கூறுவது சாதாரண மக்களில்தான். என் சிறு வயதில் (1967ல் என் வயது பத்து) கிருத்துவர்களையும் முகமதியர்களையும் வேறு மதங்கள் என்று அறிந்திருந்தாலும் இந்து மதத்தில் மிக வேறுபாடுடைய இரு வேறு ஜாதிகள் என்ற முறையிலேயே உணர்ந்திருந்தேன். அந்நாட்களில் அவ்வாறுதான் பெruம்பாலான இந்து குழந்தைகள் வளrக்கப் பட்டிருந்தார்கள். செல்வன் கூறிய பதில்களுடன் இதையும் இணைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

G.Ragavan said...

// நல்லடியார் said...
குமரன் மற்றும் கோ.ராகவன்,

தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

ஆப்ரஹாமிய மதங்களுக்கு தனித்தனி வேதங்கள் இருப்பதாக முறையே அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இம்மூன்றில் எது காலத்திற்கு ஏற்றது என ஒப்பீடு செய்வதில் நியாயமுள்ளது. இவற்றுடன் இந்து மதத் தத்துவங்களைப் போட்டு சிலர் குழப்பிக் கொள்கின்றனர்.

காலமாற்றத்திற்கு ஏற்ப எவரும் தனக்கு தோதாக வளைத்துக் கொள்ளும் வகையிலுள்ள மதத்தை உலகம் அழியும் வரைக்குமான தத்துவங்களை உள்ளடக்கிய மதத்துடன் ஒப்பிடக் கூடாது என்பதற்காவே பின்குறிப்பிட்டேன். //

விளக்கத்திற்கு நன்றி நல்லடியார். இந்த ஒப்பீடு இரண்டு பக்கங்களிலும் நிற்பது நன்றே. அடுத்தவரை மதித்து அவரவர் வழிப்படி அவரவர் செல்வதே நன்று.

G.Ragavan said...

// ஒரு இந்து இருக்கிறார்.அவருக்கு இயேசுவை மிகவும் பிடித்து விட்டது (கிறிஸ்துவ மதம் அல்ல) .அவர் தானாகவே இயேசுவை சாமியாக வைத்து ஒரு கோவில் கட்டி வழிபடுகிறார் .தன் வழியில் பூசை செய்கிறார் .அந்த கோவில் இந்து கோவிலாக கருதப்படுமா ? //

இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. என்னுடைய நண்பனின் தாத்தா இதைத்தான் செய்தாராம். கோயில் கெட்டவில்லை. வீட்டில் பூஜையறையில் ஏசுவும் மேரியும் வைத்து வணங்கி வந்திருக்கிறார். என்னுடைய இன்னொரு நண்பனின் வீட்டில் நானே பார்த்திருக்கிறேன். முருகன் படமும் ஏசுவின் படமும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததை.

தொடக்கம் என்று உள்ள எதற்கும் முடிவு என்று உண்டு. அது எதுவாயினும். மாற்றம் என்பது மாற்றமில்லாத ஒன்று.

மணியன் said...

ஜோ, உங்களுக்கு அநேக நன்றிகள். மிகவும் பண்பட்ட விதத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்து நேர்த்தியாக மட்டுறுத்தி இந்துமதமாகக் காணப்படுகின்ற இந்திய வாழ்வியலின் பரிமாணங்களை பின்னூட்டங்கள் வழியாக கொணர்ந்திருக்கிறீர்கள். செல்வன், குமரன், இராகவன் ஆகியோர் அருமையானக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். வெகுநாட்களுக்குப் பிறகு மிக ஆரோக்கியமான விவாதச் சூழலைக் கண்டதில் நான் ஏதும் கூறாமல் மெய்மறந்து கவனித்து வந்தேன். பங்கு பெற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஜோ/Joe said...

ராகவன் ,செல்வன்,
இந்துக்கள் சிலரின் வீட்டில் இயேசு படங்களை வைத்திருப்பதை நான் அறியாதவன் அல்ல .மற்ற மத அடையாளங்களை வைத்துக்கொள்ளும் குணம் இந்துக்களுக்கே உள்ளது . கிறிஸ்தவ கோவில்களுக்கு இந்துக்கள் எந்த பேதமும் இல்லாமல் பக்தியோடு வருவார்கள் .அதுவும் புதிதல்ல ..ஆனால் நான் அறிய விரும்புவது அது அல்ல..ஒரு கடவுளுக்கு கோவில் கட்டும் போது அதற்கான வழிபாட்டு விதிகள் யார் வரையறுப்பது ? அவர்களே வரையறுத்துக் கொள்ளலாமா ? அல்லது இந்த சாமிக்கு இது பொது விதி என்றிருக்கிறதா ?

இருக்கிறது என்றால் புதிதாக ஒரு சாமியை ஒருவர் வழிபட ஆரம்பிக்கும் போது(உதாரணம் .இயேசு என்றே வைத்துக்கொள்ளுவோம்) அவர் எந்த விதிகளை பின்பற்றுவார் ? இயேசுவும் இந்துக்கடவுள்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா? அதற்கு ஏதும் குறைந்த பட்ச விதிமுறைகள் உண்டா?

ஜோ/Joe said...

மணியன்,
வாங்க! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .நீங்கள் கூறியது போல இந்த விவாதத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல ராகவன் ,செல்வன் ,குமரன் மற்றும் பலர் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தான் காரணம்.

தருமி said...

no tamil font. so in english. bear with me.

i appreciate all those who contributed since i find after a long time this is a posting on religion where there were no animosities, no mine-alone-good-not-yours philosophies....how nice it would be if we ALL remain like this ...

special thanks to you, joe

Udhayakumar said...

மாதாவிடாய் பற்றி எனக்கு தெரிந்தது...

கோவிலுக்கு மாதாவிடாய் காலங்களில் சென்றால் மனது முழுதாய் இறைவனை நோக்கி திரும்பாது. காரணம், அது தரும் அசௌகரியம் மட்டுமே...

இந்த காலத்திலும் இது தேவையா என்பது அவரவர் மனநிலையை பொருத்தே அன்றி யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
ராகவன் ,செல்வன்,
இந்துக்கள் சிலரின் வீட்டில் இயேசு படங்களை வைத்திருப்பதை நான் அறியாதவன் அல்ல .மற்ற மத அடையாளங்களை வைத்துக்கொள்ளும் குணம் இந்துக்களுக்கே உள்ளது . கிறிஸ்தவ கோவில்களுக்கு இந்துக்கள் எந்த பேதமும் இல்லாமல் பக்தியோடு வருவார்கள் .அதுவும் புதிதல்ல ..ஆனால் நான் அறிய விரும்புவது அது அல்ல..ஒரு கடவுளுக்கு கோவில் கட்டும் போது அதற்கான வழிபாட்டு விதிகள் யார் வரையறுப்பது ? அவர்களே வரையறுத்துக் கொள்ளலாமா ? அல்லது இந்த சாமிக்கு இது பொது விதி என்றிருக்கிறதா ? //

ஆகமங்கள் என்று இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றி எழுந்த கோயில்களும் உண்டு. பின்பற்றாத கோயில்களும் உண்டு. உள்ளபடி சொன்னால் எந்த விதியும் பின்பற்ற அவசியமில்லை. நமக்குப் பிடித்த வகையில் முடிந்த செலவில் விரும்பிய வடிவில் கட்டிக் கொள்ளலாம். தவறேயில்லை. மஞ்சளில் பிடித்து வெற்றிலையில் வைத்தாலும் பிள்ளையார் கோயில்தான். கற்றளி எழுப்பினாலும் கோயில்தான். பூசலார் கதை தெரியும்தானே. காசில்லை என்று உள்ளத்திலேயே கோயில் எழுப்பினார். சோழனோ பெரிய சிவன் கோயிலைக் கட்டினான். ஆனால் சிவனோ சோழனைக் கோயிலை இன்னொரு நாள் திறக்கச் சொல்லி பூசலாரின் உள்ளக் கோயிலை உயர்வு செய்தாரே.

ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால்...நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ள வாராய் பராபரமே. அவ்வளவுதான். இதுல எங்க மதம் வருது?

// இருக்கிறது என்றால் புதிதாக ஒரு சாமியை ஒருவர் வழிபட ஆரம்பிக்கும் போது(உதாரணம் .இயேசு என்றே வைத்துக்கொள்ளுவோம்) அவர் எந்த விதிகளை பின்பற்றுவார் ? இயேசுவும் இந்துக்கடவுள்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா? அதற்கு ஏதும் குறைந்த பட்ச விதிமுறைகள் உண்டா? //

ஒரு விதிமுறையும் இல்லை. விரும்பிய கடவுளை விரும்பிய முறையில் வழிபடலாம். அம்மான்னு நாம பாக்குற பொம்பளைய பொண்டாட்டீன்னு அப்பா பாக்குறாரு. அதே பொம்பளய அக்கான்னு தம்பி பாக்குறான். தம்பீன்னு அண்ணன் பாக்குறான். பாட்டீன்னு பேரன் பாக்குறான். பேத்தீன்னு பாட்டி பாக்குறாங்க. ஆனாலும் எல்லாம் ஒன்னுதான் என்பதே அடிப்படை. இதை எனக்குத் தெரிந்த வகையில் ஞானிகள் அனைவருமே சொல்லியிருக்கிறார்கள்.

ஜோ/Joe said...

தருமி ,உதயகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராகவன்,
எவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க .ஆனா உங்களை மாதிரி பக்குவம் பெரும்பான்மையான பேருக்கு வந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.

குமரன் (Kumaran) said...

ஜோ,

உண்மையைச் சொன்னா இராகவனைப் போல் தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர். ஆனால் சிலர் மற்றவர் நம்பிக்கையைப் பற்றியக் கவலையே இல்லாமல் அடாவடியாகப் பேசும் போது அவர்களுக்கு மறுமொழி கூற வேண்டி அவர்கள் சில நேரம் தங்கள் தரத்தைக் குறைத்துக் கொண்டு பேசவேண்டி வருகிறது. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்மையாக இருக்கும் போது கருத்துகளும் உண்மையாக வந்து விழும் என்பதற்கு இந்தப் பதிவே சான்று. அப்படி இன்றி 'போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும். எல்லாம் பம்மாத்து. நான் சொல்றது தான் சரி. உன் நம்பிக்கையை பத்தி நான் குறை சொல்லி உனக்கு மனசு வருத்தப்பட்டாலும் சரி. ஒன்னும் தப்பில்லை. நான் சொல்றதைச் சொல்லிக்கிட்டே தான் இருப்பேன். ஆனா நீ சொல்லவர்றத நான் புரிஞ்சிக்க மாட்டேன். உன்னை ஏதாவது முத்திரை குத்தித் தள்ளிவைப்பேன்'னு சிலர் கிளம்பும் போது

1. நம் கருத்தினைச் சொல்லிவிட்டுக் குறைந்தது நம் கருத்தினையாவது பதித்தோம் என்று பேசாமல் செல்லலாம். இல்லை
2. கருத்தினைக் கூடக் கூறாமல் 'உங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது' என்று பேசவே பேசாமல் போகலாம். இல்லை
3. வேறு ஏதாவதோ செய்யலாம்

உங்கள் பதிவில் கூட பாருங்கள் ஒரு சிலரை முத்திரைக் குத்தித் தள்ளிவைக்க முயன்றிருக்கிறீர்கள். நான் அவர்கள் சொல்லும் கருத்துகளை எல்லாம் ஏற்றுக் கொள்பவன் இல்லை. ஆனால் அப்படி அவர்கள் கருத்து சொல்கிறார்கள் என்பதாலேயே அவர்களை முத்திரைக் குத்தித் தள்ளி வைப்பது தவறு.

உங்களுக்குப் பெரும்பான்மையோர் இராகவனைப் போன்ற பெரிய மனம் படைத்தவராகத் தெரியாததற்குக் காரணம் அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி உசுப்பிவிடும் பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே. உங்கள் பதிவே கூட சிலருக்கு அந்த மாதிரி பதிவாகத் தெரிந்திருக்கலாம்; அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்களையும் உங்கள் பதிவுகளையும் படித்து உங்களைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயன்றவர்கள் அப்படிப்பட்டப் பதிவாய் இதனை எண்ணாமல் பதில்களைக் கூறியதால் இப்போது இது ஒரு நல்ல பதிவாகப் பலரால் நினைக்கப் படுகிறது. அதுவும் பின்னூட்டம் இட்டவர்களால் தான். இன்னும் பின்னூட்டங்கள் இடாமல் வெறுமே - குத்து மட்டும் இட்டுவிட்டுச் சென்றவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் இந்து மதத்தை விரும்புபவர்களாகவும் இருக்கலாம். விரும்பாதவர்களாகவும் இருக்கலாம். :-)

மற்றவர்கள் வேண்டிய அளவுக்கு உங்கள் மற்றக் கேள்விகளுக்கும் பதில்கள் சொல்லிவிட்டதால் புதிதாக நானும் எதையாவது சொல்லவேண்டுமே என்று சொல்லாமல் விடுகிறேன். :-)

ஜோ/Joe said...

குமரன்,
//உங்கள் பதிவில் கூட பாருங்கள் ஒரு சிலரை முத்திரைக் குத்தித் தள்ளிவைக்க முயன்றிருக்கிறீர்கள். நான் அவர்கள் சொல்லும் கருத்துகளை எல்லாம் ஏற்றுக் கொள்பவன் இல்லை. ஆனால் அப்படி அவர்கள் கருத்து சொல்கிறார்கள் என்பதாலேயே அவர்களை முத்திரைக் குத்தித் தள்ளி வைப்பது தவறு.//
கண்டிப்பாக நான் அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை .ஆனால் அவர்களுடைய பாணியில் வாதங்கள் வைக்கப்பட்டால் இத்தகைய சுமூகமான கருத்தோட்டங்கள் திசை திரும்பத் தான் வாய்ப்பு அதிகம் .அதை நான் தவிர்க்க விரும்பினேன் .என்னை நீங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் .ஆனால் இவர்கள் என்னை அறியாதவர்கள் .கிறிஸ்தவன் ஒருவன் இந்து மதத்தை பற்றி கேள்வி கேட்பதா ? அதைக் கேட்க நீ யார் ?உன் மதம் மட்டும் யோக்கியமா என்ற அவர்களின் வழக்கமான பாணியிலே கிளம்பி விட்டால் உண்மையிலேயே அறிந்து கொள்ளும் பொருட்டு சந்தேகம் கேட்கிற என் நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கலாம் .ஆயினும் அவர்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும்,ஒன்றைத் தவிர அனுமதித்திருக்கிறேன் .அந்த ஒன்றுக்கும் தனிமடலில் விளக்கம் அனுப்பியிருக்கிறேன் .என் இயலாமையை புரிந்து கொண்ட அவருக்கு நன்றி.

எப்படி இருப்பினும் பெயர் குறிப்பிட நேர்ந்ததற்கு வருந்துகிறேன் .இனிமேல் கட்டாயம் இதை தவிர்ப்பேன்.

ஜோ/Joe said...

//உங்களுக்குப் பெரும்பான்மையோர் இராகவனைப் போன்ற பெரிய மனம் படைத்தவராகத் தெரியாததற்குக் காரணம் அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி உசுப்பிவிடும் பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே.//
குமரன்,
பெரும்பாலானவர்கள் பரபரப்பும் ,சண்டையை எதிர்நோக்கிய பதிவுகளில் பங்கேற்கிற அளவுக்கு நல்ல நோக்கத்தோடு வரும் பதிவுகளில் பங்கேற்பதில்லை .குமரன் ,செல்வன்,ராகவன் போல மனம்கோணாமல் விவாதம் செய்ய பலருக்கு ஆர்வமோ அவகாசமோ இருப்பதில்லை .அவசரமாக கோபத்தை கக்கி விட்டு போக வேண்டிய நிலை .தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் அறியாத நாம் இவ்வாறு எளிதில் பிறரை தவறாக எடைபோட நேரிடுகிறது .இதில் நானும் விதிவிலக்கல்ல .இனிமேல் தவிர்க்க முயல வேண்டும்.

ஜோ/Joe said...

கணேஷ் பாண்டியன்,
உங்கள் கருத்துக்கு நன்றி!

Anonymous said...

நல்லதொரு விவாதம்

senthil

Thekkikattan|தெகா said...

எல்லா பின்னூட்டங்களையும் நான் நேற்றுலிருந்தே படித்துதான் வருகிறேன். என்னுடையெ நிலைப்பாடு, ராகவன் கூறுவதை போன்றேதான்.

இது ராகவன் கூறியது:

//சிலை கல்லால் ஆனது என்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவனை நம்புகிறவர்கள் எல்லா இடங்களிலும் இறைவன் இருப்பதாக நம்புகிறார்கள். அப்படி எல்லா இடங்களிலும் இருப்பவம் நம்மிலும் மற்றவரிலும் இருப்பதால்தான் பிறர்க்கின்னா செய்யாமை போன்ற கொள்கைகள் ஆத்திகத்தில் விளைந்தன. அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். அப்படியிருக்க எங்குமிருக்கும் இறைவன் அந்தக் கல்லிலா இருக்க மாட்டான்? கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் நிச்சயம் வரும். கல்லில் என்ன...நமது சொல்லிலும் பசும் புல்லிலும் வரும். அன்பே சிவம் என்று சொல்வது இதைத்தான்.//


இப்பொழுது எனது வேண்டுகோல் என்னவெனில் இங்கு உள்ள சில அன்பர்கள் இந்து மதத்தை அன்றி மற்ற மதங்களில் "தான் இறந்தவுடன் புதைப்பதையே" மதக் கோட்பாட்டின் படி சரி என்று கடைபிடித்து வருகிறார்கள்.

இங்கு நாம் இந்து மதத்தில் இருக்கின்ற குறைகள் நிறைகள் எல்லாம் பேசியாகிவிட்டது, அதற்கான விளக்கக்களும் நிறையெ பேர் பொருப்பாக இங்கு அளித்திருக்கிறார்கள்.

இது இங்கு கலந்து கொண்ட மற்ற அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோலாக கருதி நான் சில மாதங்களுக்கு முன்பு பதிவாக இட்டிருந்த "என்னை எரிக்கிறதா, இல்லை புதைக்கிறதா" பதிவிற்கு யாரும் தலைகாட்டி தன்னுடையெ சிந்தனையை பகிர்ந்து கொள்ளவில்லை.

இத் தருனத்தில் நான் இங்கு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறென், கீழ் காணும் சுட்டியில் பயணித்து அங்கு கேட்கப் பட்டிருக்கும் நியாமான சமூகம் சார்ந்த ஒரு கேள்விக்கு தாங்களின் நிலைப்பாடு என்னெ என்பதனை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறென்.

அந்த பதிவை நான் இன்னும் மூடாமல் வைத்திருப்பதற்கு காரணமே, இதுதான். இது தர்க்கத்திற்காக வைக்கப்படவில்லை. கால மாற்றத்தில் எந்த அளவிற்கு நாம் "அய்யப்பன் சாமீ" சார்ந்த விசயங்களை போல மற்ற விசயங்களிலும் நம்மை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதனை அறிந்து கொள்வோமே என்ற ஆதங்கத்தில்தான்.

மற்ற படி பின்னூட்டம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. கருத்துப் பறிமாற்றம் எதிர்பார்க்கிறேன்.

இதோ அந்த சுட்டி:

http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post.html

நன்றி.

Muthu said...

ஜோ,

இந்து மதம் மட்டும் அல்ல.அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன.இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்கள்.ஆனால் சில நிழல் குத்துக்கள் இருந்ததால் மட்டும்:

தங்கமணியின் இந்து மதத்தை ஒழிக்கலாமா என்ற பதிவில்( அது பெரியார் எழுதியது) முக்கியமாக பேசப்பட்டது இந்து மதத்தில் இருந்த சாதி பாகுபாடு சார்ந்த விசயமே. ஆகவே மற்ற நல்ல கருத்துக்கள் பற்றி எங்குமே அவர் குறிப்பிடவில்லை. ஆகவே சிலர் இங்கே குத்தும் நிழல் குத்துக்கள் சரியான இடத்தில் விழவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய கேள்விக்கு இன்னும் பொருட்படுத்தக்கூடிய பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார் அவர்.இதைப்பற்றி பதில் உள்ளவர் அந்த பதிவில் எழுதலாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


மேலும் இங்கு பேசப்பட்டுள்ள பல கருத்துக்கள் நாகரீக சமுதாயத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு வேறு வழியின்று மதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள்.இதற்கு அறிவியலின் பங்கும் இன்றியமையாதது ஆகின்றது.

நிற்க.வழக்கம் பொல் இராகவன் பக்குவமான கருத்துக்களை வைத்துள்ளார்.அவருக்கு என் பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

நான் மவுனமாக இங்கே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

நம்ம ராகவனோட கருத்துக்கள்தான் என்னோடதும்.

இங்கே தேவாலயத்தில் உட்கார்ந்து என் மனதில் இருக்கும் கடவுளைக் கும்பிட எனக்கு எந்தவிதமான
சங்கடமும் கிடையாது.

அன்பே கடவுள்.

G.Ragavan said...

ஜோ, குமரன் சொல்வது போல, பெரும்பாலானோர் இப்படித்தான். என்ன எல்லாருக்கும் இதெல்லாம் ஒரு விஷயமா இதுக்கு ஒரு வாதமா என்றுதான் போய் விடுவார்கள். தாங்கள்தான் உயர்ந்தவர்கள். தங்கள் மதமே உயர்ந்தது என்று நினைப்பவர்கள் கத்திக் கொண்டிருப்பார்கள். இந்தப் பதிவில் நீங்கள் கேட்டதால்தான் நான் வந்து சொன்னேன். குமரனும் செல்வனும் தெளிவாகச் சொல்லியிருப்பதும் அதனால்தான். இதே வேறு யாராவது தங்கள் மதம் உயர்ந்தது என்ற தொனியில் பேச வந்தார்கள் என்றால் நான் ஒதுங்கிச் சென்றிருப்பேன். சென்றிருக்கிறேன். அதையும் நீங்கள் காணலாம். சாதியின் வழியில் உயர்வு தாழ்வு நோக்கல் எவ்வளவு பிழையோ....அத்தனை பிழையே மதத்தின் வழியிலும் பண்பாட்டின் வழியிலும் உயர்வு தாழ்வு நோக்கல். இதில் எனக்கு ஏற்பில்லை. அருணகிரி சொன்னது போல "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் உளதோ"தான். அதாவது மதப்பெருமை பேசி அதை வாதிட்டு நிலை நிறுத்துவதைக் கூட ஏற்கவில்லை அருணகிரி. அலைக்கடல் போல ஓயாமல் மதம் மதம் என்று சர்ச்சையோலம் செய்தே வீணாகமல்ப் போகாமல் காப்பாய் என்கிறார். கடவுள் வணக்கம் என்பதையும் மதவாதம் என்பதையும் தெளிவாகப் பகுத்திருக்கிறார். இதுதான் பெரும்பாலானோர் நிலை. இத்தனை பேர் இங்கு இருக்கிறார்களே. எத்தனை சதவீதம் என்று கணக்குப் போட்டு அதில் வீண்வாதம் செய்கிறவர்களைப் பாருங்கள். மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். இதைத்தான் குமரனும் சொல்ல வந்தது. சரிதானே குமரன்?

G.Ragavan said...

// முத்து(தமிழினி) said...
ஜோ,

இந்து மதம் மட்டும் அல்ல.அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன.இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்கள்.ஆனால் சில நிழல் குத்துக்கள் இருந்ததால் மட்டும்: //

ஒன்னும் புரியல...நிழலும் தெரியல...குத்தும் தெரியல. ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு சொல்றீங்க. எனக்குப் சரியாப் புரியாததுல இருந்து அது எனக்குச் சம்பந்தமில்லாததுன்னு தெரியுது. :-))))

// தங்கமணியின் இந்து மதத்தை ஒழிக்கலாமா என்ற பதிவில்( அது பெரியார் எழுதியது) முக்கியமாக பேசப்பட்டது இந்து மதத்தில் இருந்த சாதி பாகுபாடு சார்ந்த விசயமே. ஆகவே மற்ற நல்ல கருத்துக்கள் பற்றி எங்குமே அவர் குறிப்பிடவில்லை. ஆகவே சிலர் இங்கே குத்தும் நிழல் குத்துக்கள் சரியான இடத்தில் விழவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய கேள்விக்கு இன்னும் பொருட்படுத்தக்கூடிய பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார் அவர்.இதைப்பற்றி பதில் உள்ளவர் அந்த பதிவில் எழுதலாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். //

இதுவும் புரியலை.

// மேலும் இங்கு பேசப்பட்டுள்ள பல கருத்துக்கள் நாகரீக சமுதாயத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு வேறு வழியின்று மதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள்.இதற்கு அறிவியலின் பங்கும் இன்றியமையாதது ஆகின்றது. //

இல்லை முத்து. இல்லவேயில்லை. இந்தக் கருத்துகள்தான் முதல்ல இருந்தே வந்தது. இளங்கோவடிகள எடுத்துக்கோங்க...அவரோ சைவர். கொற்றவையைப் பற்றியும் முருகனைப் பற்றியும் அத்தன பாட்டு உள்ள வெச்சது சரி. ஆனா மாலைப் பற்றி ஏன் இத்தனை பாட்டு வைக்கனும். அதுவும் மிகச்சிறந்த பாடல்கள். அட...அத விடுங்க. கௌந்தியடிகள் சமணர். அந்தக் கௌந்தியடிகள் உள்ளூர்ப் பழக்கத்தைத் தவறு என்று சொல்வதைக் கூடச் செய்திருக்கிறாரே. அதாவது ஒரு மதத்தார் அடுத்த மதத்தைத் தவறு என்று மறுப்பது. அதுவும் தான் சார்ந்ததை வேறொருவர் வழியாக மறுப்பது.

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். அரவணைப்பதெல்லாம் இயல்பிலேயே உள்ளது. குன்றக் குறவர்கள் முந்து தமிழ்க் குறவர்கள். முருகனைத்தான் வணங்குவார்கள். நடுநிலையானவர்கள். வீண் சண்டைக்குச் செல்ல மாட்டார்கள். அவர்கள் குறவைக் கூத்தில் முருகனை மட்டும் பாடுவார்கள். அவனைப் பெற்ற கொற்றவையைப் பாடுவார்கள். வள்ளியைப் பாடுவார்கள். அவ்வளவுதான். ஆனால் கண்ணகியைக் கண்ட பின்னால் அதுவரை எந்த மாற்றமும் செய்திராத கூத்தில் கண்ணகியைப் பாடும் பாடலையும் இணைக்கிறார்கள். ஆனால் மூலமுருகன் அப்படியே இருக்கிறான். இன்னும் சொல்ல எக்கச்சக்கமாக இருக்கிறது. நான் அறிந்ததும் குறைவே.

Muthu said...

//எனக்குப் சரியாப் புரியாததுல இருந்து அது எனக்குச் சம்பந்தமில்லாததுன்னு தெரியுது. :-))))//

ஹிஹி இது உண்மை...

மற்றவை பேச இது இடம் இல்லை ராகவன்.பேசலாம் பிறகு :))

Muthu said...

ராகவன்,

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. தளங்கள் வேறு.அதைப்பற்றி விரிவாக பேசலாம்.

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லை என்பதால் இத்துடன் என் பின்னூட்டங்களை இந்த பதிவில் முடித்துக்கொள்கிறேன்.நன்றி.

Anonymous said...

excellent Joe. .

thirumbi vERupathaiyil sellaamal intha vivaathaththai kondu senRathaRku migavum nanRi.

unggal kElvigal anaiththaiyum ennudaiya paarvaiyil pathilirukka muyalkiREn.. ( ERkanavE ellaarum sonnathu thaan .. irunthaalum naanum sollalaam illaiyaa :D )

anbudan

ஜோ/Joe said...

காஞ்சி பிலிம்ஸ்,
நீங்கள் சொல்லும் பின்ன்னூட்டம் எதுவும் எனக்கு வரவில்லை .இதுவரை ஒரே ஒரு பின்னூட்டம் தான் நிறுத்தப்பட்டது .அது உங்களுடையது அல்ல .அதை மீண்டும் அனுப்பவும்.பிரசுரிக்கிறேன்.

ஜோ/Joe said...

//1.தேவனுடைய குமாரனாகிய ஏசு கிருஸ்து பூமிக்கு வருவதற்கு ஒரு மனித மேரி தேவைப்படுகிறாள். அதாவது ஒர் பெண் தேவைப்படுகிறாள். ஆனால் அந்தப் பெண் ஒரு போப் ஆண்டவர் ஆக முடியாது. இதற்கான பதிலை உங்களுக்கே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.//

சொல்லிக்கொள்கிறேன் .போப்பாண்டவரை விட புனிதமாக கருதப்படும் புனிதர்களாக பெண்கள் அங்கரீக்கப்படும் போது போப்பாண்டவராக வருவதில் தவறு இல்லை.

//2.பிக்கினி என்று சொல்லக்கூடிய பெண்களுக்கான நீச்சல் உடையை ஏன் இன்று வரை வாட்டிகன் எதிர்கிறது என்று சொல்ல முடியுமா ?//
அப்படியா? என்னைப் பொறுததவரை பிக்கினியோடு கோவிலுக்கு வராமல் இருந்தால் சரி.

//3.ஒரு பெண் அபார்ஷன் செய்து கொள்ளகூடாது என்று வாட்டிகன் எதற்கு புலம்புகிறது. //
அபார்ஷன் என்பது ஒரு உயிரை கொல்லுவது தான் .அதை தவிர்க்க நினைப்பவர்கள் மனக்கட்டுப்பாட்டின் மூலமும் இயற்கை அனுபதித்திருக்கும் வழியிலும் தவிர்ப்பதே இறைவனுக்கு உகந்தது.

பின் குறிப்பு: இது வாடிகன் பதிலாக இல்லாமல் இருக்கலாம் .ஆனால் என் பதில்கள் .நான் ஒன்றும் வாடிகன் அடிமையில்லை.

╬அதி. அழகு╬ said...

இப்பதிவில் உஷா ராமச்சந்திரன் அவர்களின் 'முஸ்லிம் பெண்களின் நோன்பு' குறித்த ஒரு பின்னூட்டமும் அதற்கு நல்லடியார் கொடுத்திருந்த பதிலும் படித்தேன்.

நோன்பு முறிவு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை. காயம் ஏற்பட்டு, களைப்பூட்டும் அளவுக்குக் குருதி வெளிப்படும் ஆண்களின் நோன்பும் முறிந்து விடும் என்பதுதான் சரியான பதில்.

நன்றி!

Anonymous said...

அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

வியாழன் மதியத்திற்குப் பின் சனிக் கிழமை காலை வரை நேரத்தை முழுமையாக குடும்பத்துடன் செலவழிக்க ஒதுக்கி விட்டதால் இத்தினங்களில் வலை பக்கமே வருவதில்லை. எனவே உங்களின் அழைப்பை என்னால் கவனிக்க முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும். விரைவில் இறைவன் நாடினால் உங்களுக்கு தனி மடலிடுகிறேன்.

இரு தினங்களில் தமிழ் வலைப்பூவில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணி விட்டீர்கள். இவ்வளவு அருமையான, நாகரீகமான, அன்பான மனம்திறந்த அணுகுமுறையிலுள்ள பதிவினைக் கண்டு வெகு நாளாகி விட்டது.

மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் இப்பதிவில் அதிகமாக பங்கு பெற முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்.

தமிழ் வலைப்பூவிற்கு மதரீதியான அணுகுமுறையை மற்றவர் மனம் புண்படாதபடி எவ்வாறு கொண்டு செல்வது என்பதற்கு சிறந்த முன்னுதாரணத்தினை காட்டியிருக்கிறீர்கள்.

மனம் நிறைந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

நோன்பின்பொழுது பெண்ணுக்கு மாதவிடாய் வந்தால் நோம்பு முறிந்துவிடும் என்றுக் கேள்விப்பட்டுள்ளேன். ஆக, அந்நாளில் நோம்பு இல்லை, ஆனால் மூன்று அல்லது நான்கு நாள் கழித்து தொடர்வார்களா என்பது எனக்கு தெரியாது. இச்செய்தி சரியா என்று இறைநேசன் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

சகோதரி உஷா அவர்களின் மேற்கண்ட கேள்விக்கான பதிலை எனக்கு முன் நல்லடியார் அவர்கள் முந்திக் கொண்டு கொடுத்து விட்டார். கூடுதலாக கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லையெனினும் ஒரு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.

இஸ்லாம் பெண்களை "இவ்வுலகின் செல்வங்களிலேயே மிகச்சிறந்த செல்வமாக" கருதச் சொல்கிறது.

மாதவிடாயைப் பொறுத்தவரை அத்தினங்களில் பெண்களுக்கு ஏற்படும் மன,உடல் ரீதியிலான கஷ்டங்களை கவனத்தில் எடுத்து எல்லாவித உடல் ரீதியிலான செய்கைகளிலிருந்து விலகி இருக்க சலுகையளிக்கிறது.

சகோதரி உஷா அவர்கள் வளைகுடாவில் இருப்பதால் இஸ்லாமியர்களின் நோன்பு முறையினைக் குறித்து தெளிவாக தெரியும் என நினைக்கிறேன்.

சூரியன் உதயம் ஆன நேரத்திலிருந்து சூரியன் முழுவதும் மறையும் நேரம் வரை உண்பது, குடிப்பதிலிருந்து முழுமையாக விலகி இருப்பது தான் இஸ்லாம் கூறும் நோன்பு.

பெண்கள் மாதவிடாயின் போது அவர்கள் அளவுக்கதிகமாக இழக்கும் இரத்தத்தினால் உடலளவிலும் அது தரும் உளைச்சலினால் மனதளவிலும் மிகுந்த கஷ்டத்தில் இருப்பர். இந்நேரம் ஏறக்குறைய 14 மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி ஒரு பெண்ணால் இருக்க முடியுமா?

இந்நேரத்திலும் பெண்கள் தொழுகையையும் நோன்பையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது மிகப் பெரும் அநியாயமல்லவா?

எனவே தான் இஸ்லாம் அவர்களின் கஷ்டத்தினை கவனத்தில் எடுத்து நோன்பு மற்றும் தொழுகையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது.

மேலும் இந்நேரங்களில் அவர்களிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், இந்நேரங்களில் அவர்கள் படும் கோபம், எரிச்சல் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் அவர்களை கணவர்கள் அன்போடு அரவணைத்து ஆறுதல் கூற வேண்டும் எனவும் பணிக்கிறது.

அல்லாமல் இஸ்லாம் மாதவிடாயை தீட்டு என எங்கும் கூறவே இல்லை.

இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாவிடினும் சகோதரி உஷா அவர்களும் சகோதரர் ஜோ அவர்களும் எதிர்பார்த்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இவ்விளக்கத்தை வைக்கிறேன்.

இன்னும் அதிகமாக கூற விருப்பமே. எனினும் இப்பதிவின் எதார்த்த நோக்கத்தை கருத்தில் கொண்டு இத்துடன் இந்த விளக்கத்தினை முடிக்கிறேன்.

மேலதிகமாக விளக்கம் சகோதரி உஷா அவர்கள் எதிர்பார்க்கிறார் எனில் என் பதிவில் பின்னூட்டலாம்.

மனம் திறந்த கருத்தாடலுக்கு வழிவகுத்த சகோதரர் ஜோ அவர்களுக்கு மீண்டும் நன்றி பகர்ந்தவனாக,

அன்புடன்
இறை நேசன்

Anonymous said...

ஒரு பெண் அபார்ஷன் செய்து கொள்ளகூடாது என்று வாட்டிகன் எதற்கு புலம்புகிறது.

அன்புள்ள காஞ்சி பிலிம்ஸிற்கு,

உங்களின் பல நியாயமான கேள்விகளையும் அணுகுமுறையினையும் அறிந்தவன் நான். இதனாலேயே சமூகத்தை சாக்கடைக்கு இட்டுச்செல்லும் படங்களை நான் வெறுத்த போதிலும் இந்த காஞ்சி பிலிம்ஸின் படங்களை காண்பதில் எனக்கு மிகுந்த விருப்பமுண்டு.

ஆனால் மேற்கண்ட கேள்வியை படித்த போது காஞ்சி பிலிம்ஸின் சிந்தனை என்ன என்பதை புரிவதில் சற்று எனக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது.

முதலில் ஒரு பிஞ்சு உயிர் உருவமடைந்த பின் அதனை இவ்வுலகத்தின் வெளிச்சத்தினையே காண்பதற்கு முன் ஒரு கொலைகார கூலிப்பட்டாளத்தின்(மருத்துவ குழு) துணையுடன் அரசாங்க ஒப்புதலோடு நடத்தப்படும் கருகலைப்பினைக் குறித்து தங்களின் கருத்து என்ன என்பதனை தெரிவியுங்களேன். அதன் பின் இக்கேள்வியினைக் குறித்த விமர்சனத்திற்குப் போகலாம்.

இக்கேள்வி இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாததால்,

சகோதரர் ஜோ அவர்களை இதற்காக ஒரு தனி பதிவிடுமாறு கோரிக்கை வைக்கிறேன். அல்லது காஞ்சி பிலிம்சை இதனைக் குறித்து விவாதிக்க "மலர்களுக்கு" வருமாறு வாசத்துடன் வரவேற்கிறேன்.

அன்புடன்
இறை நேசன்

Hariharan # 03985177737685368452 said...

ஜோ அவர்களே,

தங்களது சந்தேகத்திற்கு எனது பங்களிப்பாக எனக்குப் பட்டதைச் சொல்கிறேன்:

//1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்குசெல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை இது ஏன்?//


நம்மூரில் வைணவர்கள் சிலர் விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படும்
"துளசி"யைக்கூட "திருத்துளை" என்று சொல்வார்கள். துளசியில் வரும் 'சி' சிவனின் முதல் எழுத்து என்பதால் இந்த வார்த்தை 'பகிஷ்கரிப்பு" சிவ,சிவ என்றால் காதைப் பொத்திக்கொள்வர் சிலர்.

ஆனல், இங்கு நான் வசிக்கும் குவைத்தில் நம்மக்களின் வீடுகளில் நடத்தப்படும் "ருத்ரம்" "சமகம்" போன்ற சிவ மந்த்ர ஸ்துதிக்களில் திருமண் நாமமிட்ட வைணவர்களும் மனனமாகச் சொல்வதுடன், சிவனுடைய ப்ரஸாதமாக தரப்படும் "வீபூதி"யை நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள்.


முப்பத்துமுக்கோடி தேவர்கள் இருப்பதாக சராசரி ஹிந்து அவர்களது LKG அளவிலான மத அறிவின்படி சரி, முழுமையாக வேதங்கள், கீதை படிக்கும் போது இருப்பது ஒரே இறைவன் அதுவும் வெளியிலில்லை, அவனுக்குள்ளேதான் என்பது திரிந்துவிடும். உண்மையான எந்த மதப்படிப்பும் துவேஷத்தைத் தூண்டுவதில்லை.

தொலைதூரநாடுகளில்குடும்ப,சமூக,அழுத்தம் நீர்த்துப்போவதாலும், கிடைக்கும் கூடுதல் சேரங்களில், தனித்துச் சிந்திக்க முற்படும்போது அதுநாள்வரை நம்பிய மூடநம்பிக்கைகள் உடைபடுகின்றன.



//2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை.//

இது மென்மையாய்ச் சொன்னால் பயன் விளையாத கடினமான நபர்/சமூகத்தினரிடம் தெய்வம் கண்ணை நோண்டிவிடும் என்று சொல்லித் தேவையான ஒழுக்கத்தை ஏற்படுத்த வந்தது, இன்று சிலரால், சில சமயம் தனிப் பலன்களுக்கென திரிந்து விடுகிறது.


3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ?

இந்த நடைமுறை பெண்கள் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. நானறிந்து 25% பெண்கள் இக்காலகட்டங்களில் நிற்கக்கூடமுடியாத அளவுக்கு வயிற்றுவலியால் துடிக்க வைக்க வல்லதாக உள்ளது.

இதையும் தாண்டி ஹார்மோன் இம்பேலன்ஸால் கடும்கோபம், இயலாமையில் தடித்த சொல்பிரயோகம் என ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி அளவுக்கு பெண்களிடிடையே பெரும் behavioural change ஏற்படுகிறது.

அக்காலங்களில் மதகுருமார்கள் உள்ளூர்ப் பிரச்னைகளையும் தீர்க்கும் நீதிபதிகளாகவும் பணியாற்றவேண்டியிருந்திருக்கிறது. நீதிபதியின் தீர்ப்பு மாதத்தில் 3நாட்கள் அவரது இயற்கை உடற்கூறு காரணமாக ஏற்படும் உணர்வு வேறுபாடுகளால் பிறழ்ந்து போகும் வாய்ப்பும் இருப்பதனால் பெண்களை மதகுருவாக்காமல் தவிர்க்கப்பட்டார்கள்.

இக்காலகட்டங்களில், நடந்து அலைந்து கோவில் சென்று, ப்ரகாரம் சுற்றி என ஆரோக்கியம் கெட வேண்டியதில்லை என்பதால் கோவில் செல்லவேண்டாம் என்று வழிநடத்தப்பட்டனர்.

சுகாதாரம் என்றளவில் சரி. தீட்டு எனும் பதம் தற்போது தேவையற்றது.

ENNAR said...

செல்வன்
சிவபிரானை கிண்டல்செய்து போசயதால் தான் முதலாம் குலோத்துங்கள் அவ்வாறு செய்தான்
// சிவபிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழநாட் டெல்லையில் இராதபடி செய்தும் தில்லை முன்றிலிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்தழித்ததும் அறியாதார் யார்?//
மறைமலையடிகளின் அம்பிகாபதி

Anonymous said...

இந்து மதம் என்ற ஒன்றுக்கு அடிப்படை எதுவுமில்லை என்பதும் 'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்தவர் இல்லையோ அவரெல்லாம் இந்து' என்று விசித்திரமாக வரையறுப்பதும் முறையா? இது சூரியன் என்றால் அதற்கென்று சில பண்புகள் வேண்டும். இது சந்திரன் என்பதற்கும் அப்படியே! (எது சூரியன் இல்லையோ, எது சந்திரன் இல்லையோ அதெல்லாம் பூமி என்றால்...? என்ன நியாயம்?)

"எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்." என்று பகவத் கீதை சொல்வதை நம்புவது ஒரு இந்துவுக்கு கடமை என்றால், இல்லையில்லை அதை நம்பாமல் இருந்தாலும் இந்து தான் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லையே.
"ஏகாம் எவாத்விதியாம்" என்று ஒற்றை கடவுள் கொள்கையைத்தான் இந்துமதமும் வலியுறுத்துகிறது என்றால் குறுக்கே வருகிறவர்களையெல்லாம் கும்பிடுவது இந்த கொள்கையை நிராகரிப்பதாகாதா?

'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்' ('அவனை' பெற்றவரோ, படைத்தவரோ யாருமிருக்க முடியாது)என்று சொல்வதை ஏற்றுக்கொண்டே, இன்னொரு புறம் 'அவனு'க்கு பெற்றோரை, பிள்ளைகளை கற்பனை செய்வது முறையானதா?

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் இந்து மதம் என்றால் "இடஒதுக்கீட்டால் திறமை மறையும்" - என்று குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்ப்பது ஏன்?

எல்லாம் இந்துமதம்; யாவரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் போது 'பெருமை'யாகத் தெரிகிற 'பலம்' நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று இன்னமும் (21ம் நூற்றாண்டிலும்) கூறப்படும்போது?

அதை விடுங்கள், எப்படி வேண்டுமானாலும் இறையை வணங்கலாம் என்றால், சூத்திர சகோதரன் தமிழில் பாடி வணங்கத் தடையாக இருப்பதும் 'இந்து மதம்' தானே?

இங்கு பின்னூட்டியவர்கள் கருத்துப்படி, நிந்திப்பதும் இறைவணக்கம் எனில் பொய்யும் இறை வணக்கம்?.

"எப்படி வேண்டுமானாலும் இரு, நீ இந்து" என்பது தான் இந்து மதம் என்றால் இந்த உலகில் இரண்டு மதங்கள் தான் இருக்கின்றன
1). எப்படியும் இருக்கலாம், வனங்கலாம் என்கிற இந்து மதம்
2). நியதி ஏற்றுக்கொண்ட பிற மதங்கள். சரி தானே!

(பி.கு. தெரிந்துக்கொள்ளவே கேள்விகள், யாரும் தவறாக எண்ண வேண்டாம்)
S.A.S

குமரன் (Kumaran) said...

//நம்மூரில் வைணவர்கள் சிலர் விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படும்
"துளசி"யைக்கூட "திருத்துளை" என்று சொல்வார்கள். துளசியில் வரும் 'சி' சிவனின் முதல் எழுத்து என்பதால் இந்த வார்த்தை 'பகிஷ்கரிப்பு" சிவ,சிவ என்றால் காதைப் பொத்திக்கொள்வர் சிலர்.
//

நண்பர் ஹரிஹரன். சைவர்கள் விஷ்ணு கோவிலுக்கும் வைணவர் சிவபெருமான் கோவிலுக்கும் ஏன் செல்வதில்லை என்பதை தெளிவாகக் கூறிய பிறகும் இந்த மாதிரி அவதூறு ஏன் கூறுகிறீர்கள்?

திருத்துழாய் என்பது துளசியின் மறு பெயர். பழந்தமிழ் நூல்களில் மீண்டும் மீண்டும் துளசியைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டச் சொல். இதற்கும் சிவபெருமானின் மேல் இருக்கும் வெறுப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது விபூதி என்ற சொல்லில் விஷ்ணுவின் பெயரில் இருக்கும் வி என்ற எழுத்து இருப்பதால் அதனை பகிஷ்கரித்து திருநீறு என்று சைவர்கள் சொல்வார்கள்; அவ்வளவு வெறுப்பு அவர்களுக்கு விஷ்ணுவின் மேல் என்று சொல்வது போல் இருக்கிறது. இதெல்லாம் இரு சமயங்களையும் புரிந்து கொள்ளாதவர் ஏற்படுத்திய வெறுப்பினை விதைக்கும் பொய்க்கதைகளே. துளசியில் வரும் சி சிவபெருமானின் முதல் எழுத்து என்பதால் துளசி என்பதைப் பகிஷ்கரித்தனர் என்றால் பெருமாளின் பெயர்களிலேயே பல இடங்களில் சி என்ற எழுத்து வருகிறதே. அவற்றை எல்லாம் ஏன் வைணவர்கள் பகிஷ்கரிக்கவில்லை?

எடுத்துகாட்டு: நரசிம்மன்

விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கூறி வணங்கும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் விஷ்ணுவின் பெயர்கள்: சிவ:, ஸ்தாணு, சம்பு, ஈசான, ஈஸ்வர:, ருத்ர:... இப்படியே எடுத்துகாட்டுகள் காட்டிக் கொண்டே போகலாம்.

சிவ சிவ என்றாலே காதினைப் பொத்திக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது உயர்வு நவிற்சியைத் தவிர வேறில்லை. வைணவர்கள் நரசிம்மன் பெயரைச் சொல்வதில் எந்த தயக்கமும் கொள்வதில்லை. உலக வழக்கில் சிவபெருமானின் பெயர்கள் என்று அறியப்படும் மேலே சொன்ன பெயர்கள் வரும் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களையும் சொல்லி வணங்குவதற்கும் எந்த வைணவரும் தயக்கம் கொள்வதில்லை.

ஜோ/Joe said...

காஞ்சி பிலிம்ஸின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் ,அவருடைய மற்ற கருத்துக்கள் பலரின் மனதை புண்படுத்தவோ ,விவாதத்தை திசை திருப்பவோ வாய்ப்பிருப்பதால் அவருடைய பின்னூட்டம் நீக்கப்படுகிறது.

Thekkikattan|தெகா said...

Dear Joe and other religious Followers please pay attention:

இந்த பதிவுல என்னோட லிங்கெ கொடுத்தற்கு காரணம் ஜோ மற்றும் ஏனையெ அன்பர்கள் மிகவும் பொருப்புடனும் மத நல்லிணக்க முறையிலும் சிறப்பாக அந்த ஃபாரத்தை எடுத்துச் சென்றார்கள். பாரட்டத்தக்கது.

இருப்பினும் பிற மத அன்பர்களும் இந்த "குளோபல்" இடப் பிரட்சினையை எப்படி அனுகப் போகிறோம் என்பதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன், என்னுடையெ "எரிக்கிறதா, இல்லை புதைக்கிறதா'" பதிவு கேள்விகளின் மூலம். அதுவும் ஒரு மத சம்பந்தப்பட்ட நம்பிக்கை என்பதால், அதனைப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள ஆவல்.

விசயங்கள் பேசப்பட பேசப்படத்தானே தீர்வுகளும் வெளிச்சத்திற்கு வருகிறது, பிறகு தெளிவும் பிறக்கிறது.

எனவே நீங்கள் அனைவரும் அங்கு வந்து இந்து மத அன்பர்கள் அல்லாத ஏனையவர்கள் இந்த "எரிப்பு, புதைப்பு" விசயத்தில் ஏன் பண்ணலாம் அல்லது பண்ணமுடியாது என்பதனை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் சுட்டி இங்கே நீங்கள் என் வீட்டிற்கு வருவதற்கு:


http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post.html

SHIVAS said...

//காஞ்சி பிலிம்ஸின் மற்ற கருத்துக்கள் பலரின் மனதை புண்படுத்தவோ ,விவாதத்தை திசை திருப்பவோ வாய்ப்பிருப்பதால் அவருடைய பின்னூட்டம் நீக்கப்படுகிறது//

அப்படின்னா இனிமே பின்னூட்டம் இடும் போது - ஏசுவிற்கு தோத்திரம் சொல்லி பின்னர் பெருமாளுக்கு பஜகோவிந்தம் பாடி அதன் பின்னர் அல்லாவுக்கு அலைக்கும் சலாம் சொல்லி முடிச்சிக்கவேண்டியதுதான். - இந்த பத்தியை வெண்டும் என்றால் edit செய்து கொள்ளவும்

சரி அதுபோகட்டும் நண்பர் இறைநேசன் அவர்களின் கேள்விக்கு மட்டும் என்னுடைய கருத்தை கூறி உங்களிடம் இருந்து உத்திரவு வாங்கிக்கொள்கிறேன்.

சற்றே கோபத்துடன் மருத்துவர்களை சாடியுள்ளீர்கள். நியாயம் தான். முதலில் ஒரு விஷ்யத்தை தெளிவு படுத்திக்கொள்வோம். கருகலைப்பு என்பது ஒரு ஜாலிக்காக யாரும் செய்துகொள்வதில்லை என்பதில் நீங்கள் மாறுபட்ட கருத்துடைபவராக இருக்கமாட்டீர்கள் என் நம்புகிறேன். கருகலைப்புக்கு முன்னும் பின்னும் அந்த தாயின் மனம் படும் வேதனையின் அளவினை கணக்கெடுக்க கருவிகள் இல்லை என்பதை நீங்கள் தயவு செய்து நம்பவேண்டும். கருகலைப்புக்கு எவ்வளவோ கரணங்கள் உள்ளன. அவ்வளவு காரணங்களுக்குள் ஏதாவது ஒன்றாவது அந்த கருவை சுமந்துள்ள தாயிக்கு நியாயம் என்று பாட்டால் ஒழிய அவள் கருகலைப்புக்கு ஒப்புக்கொள்வதில்லை. இயற்கையாகவே பெண்ணின் மனதில் தான் தாய்மை அடையவேண்டும் என்ற உள்ளுணர்வே அதிகம். உருவாகும் கருவையெல்லாம் கலைத்துவிட்டு ஹாய்யாக இருப்பதற்காக எந்த பெண்ணும் ஒருபோதும் ஓடுவதில்லை. திருமணமாகாத சிறு வயது பெண்கள் தாங்கள் காதலர்களால் அல்லது வேறு காரணத்தினாலோ எதிர்பாரத விதமாக கருவுற்றால், அந்த பெண்ணின் எதிர்காலம் வீணாகிவிட கூடாது என்பதற்காக கருகலைப்பு செய்விக்கப்படுவதிலிருந்து, இரெண்டு மூன்று பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள் தாங்கள் தற்காப்பிற்காக பயன் படுத்தும் கருத்தடை மாத்திரைகளை மீரியும் கருவுரும் போது மற்ற பிள்ளைகளின் நலன் கருதி புதிதாக தரித்த கருவை அழிப்பது முதல் அனைத்தும் அந்த அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை என்பதிலும் உங்களுக்கு மாற்று கருத்து இருக்காது என்பதை எதிர்பார்க்கிறேன். இதை போல் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. கருவைகலைப்பதும் வைத்துகொள்வதும் அவரவர் இஷ்டம். இதில் என்னைப் பொருத்தவரை ஒரு பெண்ணின் கணவன் கருகலைப்பை முடிவெடுக்க தற்போது தேவைக்கதிமான சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதே தேவையில்லை என்கிறேன். குடிகார கணவனுடன் தான்னாலேயே வாழமுடியவில்லை எனும் போது தன்னுடன் சேர்ந்து பிறக்கபோகும் பிள்ளையும் வேதனை படதெவையில்லை என்று ஒரு மனைவி முடிவெடுக்கும் பட்சத்தில்,அங்கு கருகலைப்பு அந்த பெண்ணிற்கு நியாயமே. அதுவே அந்த பெண்ணிற்கு தன் குடிகார கணவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மறுமணம் புரியவும் உதவும். ஒரு சேய்யுடன் மறுமணம் என்பதில் எவ்வளவு துன்பம் நிறைந்தது என்பது அனுபவத்தில் பார்த்து உணர்ந்தாலே ஒழிய நமக்கு முழுமையாக விளங்காது.

கன்னிக்கு பிறக்கிறதெல்லாம் கர்த்தர் ஆகுனுமுன்னு சொன்னா எப்படி சாமி ?

மருத்துவத்தின் வளர்ச்சி பெண்களின் இந்த வலிகளை சுலபமாக நீக்கியுள்ளது என்பதை நாம் இங்கு உணரவேண்டும். அதைவிடுத்து மருத்துவர்களை கொலைகார கூலிப்பட்டளம் என்று உங்களை போன்றவர்களே சொன்னால் எப்படி ?
என்னுடைய சுதந்திரம் அடுத்தவன் மூக்கு நுனிவரையில் தான் படிச்சிருக்கிறேன். ஆனால் வாட்டிகன் என்னடான்னா பெண்களின் அடிவயித்துலேயே கைவைக்குதே. இதை எப்படி நீங்கள் ஆதரிகின்றீர்கள் என்று புரியவில்லை.பூமி உருண்டையாக இருக்கின்னு வாட்டிகன் ஒத்துகீச்சான்னு கேட்டுப்பாருங்க.ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னால எழுதின புத்தகங்களை வைச்சிகிட்டு நான் சொன்னதெல்லாம் சரியா தப்பான்னு ரெஃபர் பண்ணமாட்டிங்கன்னு நம்புகிறேன்.

மிக்க நன்றி வணக்கம்

Machi said...

//மாதவிடாயைப் பொறுத்தவரை அத்தினங்களில் பெண்களுக்கு ஏற்படும் மன,உடல் ரீதியிலான கஷ்டங்களை கவனத்தில் எடுத்து எல்லாவித உடல் ரீதியிலான செய்கைகளிலிருந்து விலகி இருக்க சலுகையளிக்கிறது.

சகோதரி உஷா அவர்கள் வளைகுடாவில் இருப்பதால் இஸ்லாமியர்களின் நோன்பு முறையினைக் குறித்து தெளிவாக தெரியும் என நினைக்கிறேன்.
//

இதை தான் எல்லா மதங்களும் சொல்லி பெண்களை தள்ளி வைக்கின்றன. அதாவது பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் அல்ல அவர்களின் இயலாமையால் அவர்களை தள்ளி வைக்கின்றன. என் மத நாலில் சொல்லலையே என்று சொல்லலாம் ஆனால் உண்மையில் நடப்பது தள்ளி வைப்பதே. இது உலக நடப்பு. இக்காலத்தில் இத்தள்ளி வைப்பு தேவையில்லை.


//ஒரு இந்து இருக்கிறார்.அவருக்கு இயேசுவை மிகவும் பிடித்து விட்டது (கிறிஸ்துவ மதம் அல்ல) .அவர் தானாகவே இயேசுவை சாமியாக வைத்து ஒரு கோவில் கட்டி வழிபடுகிறார் .தன் வழியில் பூசை செய்கிறார் .அந்த கோவில் இந்து கோவிலாக கருதப்படுமா //

யேசு இருந்தால் அது கிருத்துவ கோயில் என்று நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளதே? அது இந்து கோயில் என்று யாராவது சொன்னால் கிருத்துவர்கள் தகராறுக்கு வரமாட்டார்களா?. ஆனா கண்டிப்பாக இந்து மதமக்கள் கோயிலுக்கு வருவார்கள், சாமி கும்பிடுவார்கள்.

Unknown said...

//இந்து மதம் என்ற ஒன்றுக்கு அடிப்படை எதுவுமில்லை என்பதும் 'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்தவர் இல்லையோ அவரெல்லாம் இந்து' என்று விசித்திரமாக வரையறுப்பதும் முறையா? இது சூரியன் என்றால் அதற்கென்று சில பண்புகள் வேண்டும். இது சந்திரன் என்பதற்கும் அப்படியே! (எது சூரியன் இல்லையோ, எது சந்திரன் இல்லையோ அதெல்லாம் பூமி என்றால்...? என்ன நியாயம்?)//

இந்து மதம் என்ற பெயரே வேதத்தில் கிடையாது.அப்படி இருக்க எதை வைத்து "இதுதான் இந்துமதம்" என வரையறை செய்வது?இந்துமத தத்துவ அடிப்படையில் இந்து இல்லை என யாரையும் சொல்ல முடியாது.நமது கோர்ட்டுகளை பொறுத்தவரை கெஜட்டில் தான் இந்து என சொல்லி இந்து திருமண,சிவில் சட்டங்களை ஏற்பவர் இந்து.அவ்வளவுதான்.

//எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்." என்று பகவத் கீதை சொல்வதை நம்புவது ஒரு இந்துவுக்கு கடமை என்றால், இல்லையில்லை அதை நம்பாமல் இருந்தாலும் இந்து தான் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லையே.//

இது தாங்கள் கீதையை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

கண்ணன் சொன்னது "போலி தெய்வமில்லை".'அன்ய தேவதா' அதாவது 'அன்னியமான தேவதை'.

'அன்னிய தேவதையை வழிபடுபவன் அறிவிழந்தவன்' என்கிறார் கண்ணன்.

அத்வைதம் இதற்கு தரும் விளக்கம் 'கடவுளை தனக்கு அன்னியமாக கருதி எவன் வழிபடுகிறானோ அவன் உண்மையை அறியாதவன்'

விசிச்டாத்வைதம் இதற்கு தரும் விளக்கம் 'கடவுள் அன்னியரில்லை.உனக்குள் இருக்கிறார்.அதை உணராமல் கடவுள் எங்கோ இருப்பதாக நினைத்து தனக்கு அன்னியமாக நினைத்து வணங்குபவன் அறிவிழந்தவன்'

வீர வைஷ்ணவர்களான இஸ்கான் இதற்கு தரும் விதண்டாவாத விளக்கம் 'சிவன்,முருகன் இவர்கள் எல்லாரும் சக்தி குறைந்த கடவுள்கள்.அவர்களை வனங்குபவர்கள் அறிவிழந்தவர்கள்'(அன்யதேவதையைdemigods என்கின்றனர் அவர்கள்.இது தவறு என குமரன் பதிவு ஒன்றில் பெரிய விவாதமே நடந்தது)

//'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்' ('அவனை' பெற்றவரோ, படைத்தவரோ யாருமிருக்க முடியாது)என்று சொல்வதை ஏற்றுக்கொண்டே, இன்னொரு புறம் 'அவனு'க்கு பெற்றோரை, பிள்ளைகளை கற்பனை செய்வது முறையானதா?//

இதுவும் அவதார கொள்கையை சரிவர புரியாததால் வந்த குழப்பமே.சிறு உதாரணம் மூலம் விளக்குகிறேன்

சக்தியை யாரும் படைக்கவில்லை/படைக்க முடியாது/அழிக்க முடியாது என்பது அறிவியல் அடிப்படை கோட்பாடு.(energy can neither be created nor be destroyed)

ஆனால் அதே சமயம் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதாக படிக்கிறோம்.

எப்படி இது சாத்தியம்?

எங்கும் நிறைந்த பரம்பொருள் மனிதன் உருவெடுத்து தான் வருகிறதே தவிர அது படைக்கப்படுவதில்லை.

//எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் இந்து மதம் என்றால் "இடஒதுக்கீட்டால் திறமை மறையும்" - என்று குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்ப்பது ஏன்?//

இது அரசியல் விவாதம்.தனிமனிதர்கள் செய்யும் தவறுக்கு தத்துவம் பொறுப்பாக முடியாது.இந்து தத்துவங்களை கேளுங்கள்.பதில் சொல்கிறேன்.அரசியலை உள்ளே புகுத்தி கேட்காதீர்கள்.

//"எப்படி வேண்டுமானாலும் இரு, நீ இந்து" என்பது தான் இந்து மதம் என்றால் இந்த உலகில் இரண்டு மதங்கள் தான் இருக்கின்றன
1). எப்படியும் இருக்கலாம், வனங்கலாம் என்கிற இந்து மதம்
2). நியதி ஏற்றுக்கொண்ட பிற மதங்கள். சரி தானே!//

"எப்படியும் இருக்கலாம்" என்பதை தவறாக நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

"இறைவன் படைப்பில் அனைத்து மனிதரும் சமம்.அனைவரும் அவன் குழந்தைகள்.அனைவரும் இறுதியில் அவனடி சேர்வார்கள்" இதுவே இந்து மதக்கோட்பாடு.

இறைவனை சரணாகதி அடைந்து,அவன் மேல் பக்தி செலுத்துபவர்கள் உடனடியாக அவன் அடியை அடைவார்கள்.இது குரங்கு பக்தி எனப்படும்.அதாவது குரங்கு குட்டி தன் தாய்குரங்கை கட்டிபிடித்து நிற்பது போல் பக்தன் பகவானை சரணடைந்து நிற்பான்.தாய்குரங்கு குரங்கு குட்டியை கட்டி பிடிக்காது.குட்டி குரங்கு தான் தாய்க்குரங்கை கட்டி பிடித்து நிற்கும்.அது போல் நம் முயற்சியால் இறைவனை எட்டிப்பிடிப்பது குரங்கு பக்தி.

அப்படி பக்தி செலுத்ததவர்கள் அடுத்த வகையினர்.அவர்கள் பக்தி செலுத்தவிடினும் அவர்கள் மீது கடவுள் காட்டும் கருணை பூனை பக்தி எனப்படும்.அதாவது தாய்ப்பூனை குட்டியின் மேல் உள்ள அன்பால் அதை தன் வாயால் கவ்வி எடுத்து செல்வது போல் தன் மீது அன்பு செலுத்தாதோரையும் காக்க இறைவனே நேரில் வந்து குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வி எடுத்து செல்வதுபோல் தன்னடியில் சேர்த்துக்கொள்வான்.

பூனை பக்தி மிகவும் வலிமிகுந்த வழியாகும்.ராவணன்,இரணியன் ஆகியோர் பூனை பக்தி மூலம் தான் இறைவனடி சேர்ந்தனர்.உலகில் இதை விட பாவிகளே யாரும் கிடையாது,இவர்களை விட மோசமாக இறைநிந்தனை யாரும் செய்யவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு இருந்த ராவணன்,இரணீயன் ஆகியோர் மீதே இறைவன் கருணை கொண்டு இறங்கி வந்து அவர்களை தன் அடியில் சேர்த்துக்கொண்டான்.

"எப்படி இருந்தாலும் அவன் அடியை இறுதியில் அடைவோம்"

ஆனால்

அவனை சரணடைந்தால் உடனடியாக சேர்வோம்.

இல்லாவிட்டால் இரணியன்,ராவணன் வழியில் வலியோடு அவனை அடைவோம்.

எப்படி அடைவது என்பது நம் கையில் தான் இருக்கிறது.

அவன் யாரையும் கைவிடுவதில்லை.எப்பேர்ப்பட்ட அயோக்கியரானாலும் அவன் பிள்ளைகளே.

அவனே கைவிட்டால் அதன்பின் நம்மை காக்க ஒருவரும் இல்லை.

ஜோ/Joe said...

காஞ்சி பிலிம்ஸ்,
கருக்கலைப்பு குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் .உணர்ந்தது தான் .அப்படி செய்பவர்களை யாரும் மதத்திலிருந்து நீக்குவதில்லை .அதிகார பூர்வமாக அவர்களை மதம் தடுக்கவும் முடியாது .ஆனால் மதத்தின் அதிகார நிலைப்பாடு என்று வரும் போது கத்தோலிக்க மதம் கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவதை குறை சொல்லிவதற்கு ஒன்றுமில்லை .உதாரணமாக ஒரு பெண் பாலியல் தொழிலில் இருப்பதற்கு சில நியாயமான காரணங்கள் இருக்கலாம் .அதற்காக ஒரு மதம் அதிகார பூர்வமாக பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

Anonymous said...

ஜோ இந்தப் பதிவில் ஆரோக்கியமாக நடந்து வரும் விவாதங்களிடையே நான் புகுந்து திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம். ஆனால் குமரன் இப்படிக்கூறுகிறார்.

//முத்திரைக் குத்திக் கொள்பவர்கள் எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள் என்பதனையும் சொல்லிவிடுகிறேன். இல்லையேல் யாராவது வந்து ஐயர், ஐயங்கார், மாத்வர், பார்ப்பனர் என்று திசை திருப்பலாம்; அது வேண்டுமென்றே செய்வதில்லை; தாங்கள் அறிந்தவரை சொல்கிறார்கள் என்று தெரிந்தாலும் அது திசை திருப்பலாகத் தோன்றுவதால் சொல்கிறேன்.//

அவர் முன்னெச்சரிக்கையாக இப்படிக்கூறினாலும் ஒரு உண்மையை ஏன் மறுக்க வேண்டும் என்று தெரிய வில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் சைவ வைணவ வேறுபாடு பார்ப்பதில்லை என்பதே உண்மை. பழனியும் ராமேசுவரமும் திருச்செந்தூரும், திருப்பதியும் ஒன்று போலக் கருதுகிறவர்களே அதிகம்.

முத்திரை குத்திக்கொள்பவர்கள் எல்லாச்சாதியிலும் இருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது ஒரு சதவீதம் பேர்கூட இருக்காது. எல்லாச்சாதி என்பது கூட தவறுதான். பல சாதியிலும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவரே கூறியுள்ளபடி சில இனத்தவர்கள் மட்டுமே முத்திரை குத்தினாலும் குத்தாவிட்டாலும் சைவ வைணவ வேறுபாட்டை உறுதியாக கடைபிடிப்பவர்கள். இதை கூறக்கூடாது என்று ஏன் முன்கூட்டி அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை. இதில் எந்த வெறுப்பு,அல்லது திசை திருப்பலும் இல்லை. எனக்குத் தெரிந்த உண்மை என்ற அளவில் சொல்லுகிறேன்.

மதம் குறித்து தெளிவான விளக்கங்களை நியாயமான முறையில் தந்துள்ளவராக $elvan முன்நிற்கிறார். ராகவன், குமரனும் நல்ல விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். பொதுவாகவே நமது மக்களிடத்தில் பிறமதவெறுப்புணர்வு என்பது இருந்ததில்லை. திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கடவுள் மறுப்பு கூட சமத்துவ நோக்கத்தோடு உருவானதுதான். ஆனால் பின்னால் வந்த பிற அரசியல் சக்திகள் பிற மதங்களின் மீது வெறுப்புணர்வை வளர்த்ததால் தான் ஒரு காலத்தில் பண்டிகை தோறும் பரிமாறப்பட்டு வந்த உபசரணைகள் கூட இன்று மறைந்து விட்டது. குறைந்து விட்டது.

இந்நிலையில் உங்கள் பதிவு சமத்துவ உணர்வையும் புரிந்துணர்வையும் குறைந்த பட்சம் வலைப்பதிவிலாவது உருவாக்கியதற்கு நன்றி.

Ganesh Prabu

Anonymous said...

பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரின் சௌகரியங்களுக்காக எந்த பாவமும் அறியாத பச்சிளம் குழந்தையை துண்டு துண்டாக உயிரோடு வெட்டி வீசும் மாபாதகத்தை "கருகலைப்பு" என்ற சொல் கொண்டு நியாயப்படுத்தும் காஞ்சி பிலிம்ஸ் அவர்களுக்கும், பெண்களின் நியாயமான காரணங்களுக்காக சில சட்டதிட்டங்களிலிருந்து மாறி நிற்க சலுகையளிக்கும் செயலை வலிந்து "தீட்டு"டன் சம்பந்தப்படுத்தும் சகோதரர் குறும்பனுக்கும் விரிவாக விளக்கமளிக்க இயலும்.

எனினும் இத்தளம் "பச்சிளம் குழந்தைகளை படுகொலை(கருகலைப்பு)" செய்யும் விஷயத்தை குறித்தோ, இஸ்லாத்தில் "பெண்களின் தீட்டு" குறித்தோ விவாதிக்கும் தளமில்லையாதலால் இதற்கு பதிலளிப்பதை தவிர்க்கிறேன்.

சகோதரர் குறும்பன் மற்றும் காஞ்சி பிலிம்ஸ் அவர்கள் !"மலர்களுக்கு" வந்தாலோ அல்லது சகோதரர் ஜோ அவர்கள் இதற்காக தனி பதிவிட்டாலோ அங்கு அதனைக் குறித்து விவாதிக்கலாம்.

தொடர்ந்து இப்பதிவு தொடர்பாக விவாதியுங்களேன்.

அன்புடன்
இறை நேசன்

Anonymous said...

//இந்து மதம் என்ற ஒன்றுக்கு அடிப்படை எதுவுமில்லை என்பதும் 'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்தவர் இல்லையோ அவரெல்லாம் இந்து' என்று விசித்திரமாக வரையறுப்பதும் முறையா? இது சூரியன் என்றால் அதற்கென்று சில பண்புகள் வேண்டும். இது சந்திரன் என்பதற்கும் அப்படியே! (எது சூரியன் இல்லையோ, எது சந்திரன் இல்லையோ அதெல்லாம் பூமி என்றால்...? என்ன நியாயம்?)//

இந்து மதம் என்ற பெயரே வேதத்தில் கிடையாது.அப்படி இருக்க எதை வைத்து "இதுதான் இந்துமதம்" என வரையறை செய்வது?இந்துமத தத்துவ அடிப்படையில் இந்து இல்லை என யாரையும் சொல்ல முடியாது.நமது கோர்ட்டுகளை பொறுத்தவரை கெஜட்டில் தான் இந்து என சொல்லி இந்து திருமண,சிவில் சட்டங்களை ஏற்பவர் இந்து.அவ்வளவுதான்.//

$செல்வன், விளக்கமளித்தமைக்கு நன்றி
ஆனால் என் கேள்வியை நீங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம், கிறித்துவரல்லாத எல்லோரையும் இந்து என்று 'இந்த மாதிரி சமயங்களில்' நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். 'எல்லா சமயங்களிலும் இல்லை' . இதன் பின்னணியில் இருக்கும் உயரடுக்கு அரசியல் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். நீங்கள் விரும்பாவிட்டாலும்.
தத்துவத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் சமூக அரசியலை பேசாதே என்றால், விவாதிக்க வேண்டாம் என்றால் நானும் விட்டுவிடுகிறேன்-நன்றி கூறி.
S.A.S

Unknown said...

Dear SAS,

//முஸ்லிம், கிறித்துவரல்லாத எல்லோரையும் இந்து என்று 'இந்த மாதிரி சமயங்களில்' நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். 'எல்லா சமயங்களிலும் இல்லை' . இதன் பின்னணியில் இருக்கும் உயரடுக்கு அரசியல் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். நீங்கள் விரும்பாவிட்டாலும்.//

'இந்து இல்லை' என யாரையும் சொல்வது இந்து மத கொள்கைக்கு விரோதமானது என நான் நினைக்கிறேன்.அப்படி சொல்வதன் பிண்ணணியிலுள்ள அரசியல்,மனித தன்மையற்ற போக்கு அனைத்தும் தாராளமாக விவாதிக்கப்பட வேண்டியவையே.

அந்த விவாதங்கள் பல தளங்களில்,பல பதிவுகளில் நடந்து வருகின்றன.என்னை பொறுத்தவரை அவற்றில் கலந்து கொள்வதை நான் தவிர்த்தே வருகிறேன்.அரசியல் விவாதங்களில் வாதம் செய்வது எனக்கு ஏனோ பிடிப்பதில்லை.

நீங்கள் அந்த கேள்விகளை எங்கும் எழுப்பலாம்.ஜோ அனுமதித்தால் இங்கும் எழுப்பலாம்,தடை சொல்ல நான் யார்?

என்னளவில் இந்து இல்லை என யாரையும் எந்த சூழ்நிலையில் சொன்னாலும் அது தப்பு,தப்பு,தப்பு.

ஜோ/Joe said...

விவாதத்தில் கலந்து கொண்டு மேலான கருத்துக்களை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
இப்படி ஒரு விவாதம் அருமையா, அமைதியாக நடந்துகொண்டிருப்பதை கவனிக்கவில்ல்லை.

பதிவில் உங்களின் முதிர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள்.

ஜோ/Joe said...

நன்றி சிறில்!

Anonymous said...

முஸ்லீம்களும்,கிருத்தவர்களும் இந்த நாட்டுக்கு வந்த பின்புதான் இந்துமதமென்றக் கூட்டுக்கும்மி.
அதற்கு முன்பு எல்லாம் தனிக்கும்மிதான்.
இந்துவென்ற பெயர்க் காரணம்கூட அவரவர் வசதிபடிதான்.

இந்தியாவில் சிறு தெய்வ வழிபாடு(முன்னோர்களை வழிபடுவது),இயற்கையை வழிபடுவதுதான்(நெருப்பு,காற்று,நீர்,பாம்பு,சூரியன்,சந்திரன் போன்ற) இருந்திருக்க வேண்டும்.

இதை ஒன்றாக்கியது யார்?
இதை யார் செய்தார்கள்? எப்போது செய்தார்கள்?இதற்கான பதிலும் கூட தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டினையொட்டியே கூறுவார்கள்.

சிலர் எதற்கெடுத்தாலும் வேதத்தை சான்றாகக் காட்டுவார்கள்(வேதம்தான் முதலில் வந்ததென்ற கருத்துடையவர்கள்).

கடவுள் தூணிலுமிருப்பார்,துரும்பிலுமிருப்பார் என்று கூறி இந்துமதம் என்று பொதுக்கும்மி அடிப்பவர்கள் ரசிகன் கட் அவுட்டிற்குப் பாலாபிஷேகம் செய்தால் கேவலமான நையாண்டி செய்வார்கள்.
ஏன் கட் அவுட்டில் கடவுள் இருக்கமாட்டாரா?

மதம் என்பதே நம்பிக்கை சம்மந்தப்பட்டது,இதில் அறிவியல் கோட்பாடுகளோ,கணக்கு சமன்பாடுகளோ எடுபடாது.
மதம் என்பதற்கே எதுவுமில்லை என்னும்போது இந்துமதத்திற்கு எந்தவிதமான கட்டுபாடுகளோ விதிமுறைகளோ கிடையாது.

நீங்களும் இந்துதான்,நானும் இந்துதான்,ஏன் நல்லடியார்,இறைநேசன் அனைவரும் இந்துதான்.
எந்தவித வேறுபாடும் கிடையாது.
புத்த மதம்,சமண மதம்,சீக்கிய மதம் போன்றவற்றயே இந்துமதக் கும்மியில் இணைத்தவர்கள் இஸ்லாம்,கிருத்தவ மதங்களை அடுத்த நூற்றாண்டுக்குள் இணைக்காமலா போய்விடுவார்கள்.

அடுத்து,
வைணவர்களான ஐயங்கார்களில் பெரும்பான்மையோர் சைவக்கோவிலுக்குச் செல்வதுமில்லை,வணங்குவதுமில்லை.
ஐயர், ஐயங்கார்களை சூத்திரனாகப் பார்ப்பதும்,ஐயங்கார் ஐயரை சூத்திரனாகப் பார்ப்பதும் இன்றும் நடந்துகொண்டுதான் உள்ளது(நேரிலே கண்டுள்ளேன்)
அதிலும் இஸ்கான் போன்றவர்கள் இஸ்கானை தனி மதமாகவேக் கொள்வார்கள்.

ஏன் பெண்கள் கருக்கலைப்பு மட்டும்தான் தவறாகப்படுகிறது?மனித உயிர் மட்டும்தான் உயர்வானதா?மற்ற உயிர்களையும் கொல்லுதல் பாவமென்று கூறுங்கள் ஒரு நியதி இருக்கும்.

மதச் சுழலில் மனிதன் சிக்கிக்கொண்ட பின்பு எதைபற்றியும் பேசுவது வெற்று வேலையைத்தவிர வேறென்ன?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives