
நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒன்றான 'கர்ணன்' திரைப்படம் 1964-ம் ஆண்டு வெளியானது .48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலி ,ஒளி அமைப்புகள் மெருகேற்றப்பட்டு நாளை தமிழகமெங்கும் 50-க்கும் மேற்பட்ட திரைகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
நடிகர் திலகம் கர்ணனாக , என்.டி.ராமராவ் கண்ணனாக கலக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி , தேவிகா ,முததுராமன் , அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ..வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்கிய பி.ஆர் .பந்துலு இயக்கியபடம் .வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கனல் வசனம் தீட்டிய சக்தி கிருஷ்ணசாமியே இதற்கும் வசனம் தீட்டியுள்ளார் ..மெல்லிசை மன்னர் இசையில் அற்புதமான பாடல்கள் , காலத்தை கடந்த பிரம்மாண்டமான போர்க்களக் காட்சிகள் என சகல விதத்திலும் நிறைவான படம் .

நல்ல திரைப்படங்கள் காலத்தை கடந்தும் நிலைக்கும் என்பதை இந்த மறு வெளியீட்டூக்கு மக்கள் வழங்கும் ஆதரவு உறுதி செய்யும் .இதனால் இது போல காலத்தை வென்ற திரைப்படங்கள் பல வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்களையும் சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி .
11 comments:
வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நன்றி முரளிக்கண்ணன் ..நீங்கள் தமிழகத்தில் இருந்தால் படத்தை கண்டு களிப்பீர்கள் என நம்புகிறேன்.
:)))
வெற்றி பெறட்டும்....
அனைவரும் பார்க்கவேண்டிய படம்...வெல்லட்டும்.. நடிப்பின் இலக்கணத்தை இந்த படத்தை பார்ப்பதன் மூலம் இன்றைய ஏனோதானோ நடிகர்கள் புரிந்துகொள்ள வழி பிறக்கலாம்...
தமிழகம் முழுவதும் 65-க்கு மேற்பட்ட திரையரங்குகளில்
ஜெகதீசன்,
உங்க சிரிப்புக்கு அர்த்தம் என்ன?
கர்ணன் திரைப்படம் அருமையான நடிப்பு, பாடல்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. தொழில்நுட்பம் குறிப்பாக ஒலி மற்றும் ஒளிப்பதிவு நம் நாட்டில் குறிப்பிட்டு கூறும்படி வளர்ச்சி பெற்றிராத காலத்தில் வந்திருந்தாலும் கர்ணன் இந்தியர்களாலும் உலகளவில் பேசப்படக்கூடிய அளவுக்கு படம் எடுக்க முடியும் என்பதை பறைசாற்றிய படம். நடிகர் திலகத்தின் வாழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இணையாக உலகளவில் பெயர் பெற்று கொடுத்த படம். அதை மேலும் மெருகூட்டி திரையிட முன்வந்துள்ள அவருடைய புதல்வர்களுக்கு பாராட்டுக்கள்.
Watched Karnan in Satyam cinemas today..after 48 years of its release, it is running in packed house...Nadigar Thilagam is outstanding..What a pleasure to watch Nadigar Thilagam in big screen after long time...
Karnan Ever green ...
படத்தை பார்க்கவேண்டும்
Post a Comment