Sunday, December 19, 2010

குழந்தையும் தெய்வமும்வார இறுதியில் குழந்தைகளோடு கழிக்கும் தருணங்கள் போல மகிழ்ச்சியானது வேறெதுவும் இல்லை . நேற்று முந்தினம் என் 5 வயது மகன் தன் விளையாட்டுத் தோழன் மூலமாக கிடைத்த கிருஷ்ணன் பற்றிய ஒரு கார்ட்டூன் குறுந்தகடு ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தான் ..முழுவதுமாக ஒரு முறை பார்த்து முடித்து விட்டு , தொடர்ச்சியாக இன்னொரு முறை பார்க்க வேண்டுமென கேட்டு இரண்டாம் முறையும் பார்த்து முடித்தான்.

முடித்தவுடன் என்னிடம் வந்த அவனுக்கும் எனக்கும் உரையாடல் இப்படிப் போனது..

மகன் :அப்பா , கிருஷ்ணன் பவர்புல் காட்-ஆ ?

(நான் பதில் சொல்லும் முன்னரே மீண்டும் அவனே)

மகன் :ஜீஸசும் கிருஷ்ணாவும் பவர்புல் காட்-சா?

நான் :ஆமா!

மகன் :எப்படி ரெண்டு பேரும் பவர்புல் காட்ஸ்?

நான் :காட் ஒருத்தர் இருக்கார் .சிலர் அவரை கிருஷ்ணன் என்கிறார்கள் .சிலர் அவரை ஜீஸஸ் என்கிறார்கள். அவ்வளவு தான்.

மகன் :போத் ஆர் சேம் ?

நான் : நாம சர்ச்-க்கு போகும் போது ஜீஸஸ் கிட்ட ப்ரே பண்ணுறோம்ல .அதுபோல சமிக்‌ஷா டெம்பிள்-க்கு போகும் போது கிருஷ்ணா கிட்ட பிரே பண்ணுவா.

சின்ன பையன் கிட்ட இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் ..சொல்லணும் .வெற்றிகரமா இப்போதைக்கு முடிஞ்ச அளவு புரிய வச்சுட்டோம் .அவன் வயசுக்கு இதுவரை அவனுக்கு புரிஞ்சாலே போதும் -ன்னு நான் நினைச்சிட்டிருக்கும் போது , அவன் ’அன்பே சிவம்’ கமல் ரேஞ்சுக்கு அடிச்சான் ஒரு ஷாட்

மகன் : அப்பா , யூ ஆர் ஆல்சோ காட்

என்ன சொல்லுறதுண்ணு தெரியல்ல ..மறுத்தா இப்போதைக்கு முழுமையா விளக்க முடியாது

நான் : யூ டூ மோனே !

குழந்தை இயேசுவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் .


குழந்தையின் உள்ளத்தில் எந்த பிரிவினையும் கபடும் கிடையாது என்பதால் தான் இயேசு கூட இப்படிச் சொன்னார் ...நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... (மத்தேயு 18:3)

15 comments:

தேவன் மாயம் said...

நல்ல சிந்தனை!

கபீஷ் said...

// நான் : யூ டூ மோனே !// அழகா இருக்கு. மோனேன்னு யாராவது கூப்ட்டு கேட்டு :)

கபீஷ் said...

//நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... //

Ignorance is bliss இதுலருந்து தான் வந்திருக்காமியிருக்கும் :)

Unknown said...

அருமையான கருத்து.

முகவை மைந்தன் said...

இருக்கம்ணே!

//நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... //
இங்க இருந்து கிளம்பி, போற வழில தான் மாறணும். இங்கயே மாறுனம், கேணைம்பாய்ங்க:-(

Rakesh Kumar said...

Good post, bro. I shall definitely remember this when I get my own kid one day. Especially useful for mix-marriages, like mine.

ஜோ/Joe said...

//I shall definitely remember this when I get my own kid one day. //
விரைவில் நனவாகட்டும் :)

Paul Johnpeter said...

I love this Post. sometimes kids talks like a great Philosohper.

Sakala said...

Joe,

epdi irukkeenga!! hub pakkam vaanga! new year la irunthu leave mudinga!

Happy Xmas & Happy New Year :)

- sakala / vijay

கிரி said...

குழந்தைகள் என்றாலே அங்கே மகிழ்ச்சி தான்..நீண்ட நாட்களாக என் மகனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.. சரியான நேரம் அமையவில்லை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

dagalti said...

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள் ஜோ.

//நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்.... (மத்தேயு 18:3)//

மிகக் கச்சிதமான வரி. இப்போது தான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன்.

சில மாதங்கள் எனக்குத் தெரிந்த ஓரிரு பாசுரங்கள் வைத்து ஒரு பதிவு எழுதினேன்

//The divinity of children is a motif that springs up across religions. The non-judgemental nature of a child is perhaps a state that the one with a spiritual quest is longing for. Vice-virtue, good-bad, dirty-clean and such classifications clog the way up till the very end. //

அதை நினைவுபடுத்தியது இந்தப் பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

வளர்ந்தபின் குழந்தைகள்தாம் நமக்கு ஆசிரியர்கள்....என்ன சரிதானே மக்கா...

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Anonymous said...

superaa irukku..

arumai karuthu

Ponnappan.A said...

The child is the father of the man

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives