Tuesday, September 19, 2006

போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை

சமீபத்தில் போப்பாண்டவர் இஸ்லாம் குறித்து பேசிய சில கருத்துக்கள் உலகம் முழுதும் இஸ்லாமியர்களின் கோபத்தை கிளறி பின்னர் அவரே மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது ."முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்" என்னும் பொருள் பட 14- நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மேற்கோள்காட்டி அவர் பேசியிருக்கிறார் .அது தன்னுடைய கருத்து அல்ல ,வெறும் மேற்கோள் தான் என்று அவர் சொல்வதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் ,இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.

உலகின் வலிமை வாய்ந்த ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இன்னொரு வலிமை வாய்ந்த மதத்தைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்வோடும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் யோசித்து பேசியிருக்க வேண்டும் .அவரவர் மனத்தளவில் சில கருத்துக்களை கொண்டிருக்கலாம் .ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் அறியாதிருந்திருக்க மாட்டார்.அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு போப் இப்போதைக்கு ,அது மேற்கோளேயானாலும் ,அதை சொல்ல வேண்டிய தேவை இல்லை .அதனால் உலகில் இணக்கமின்மை தான் அதிகரிக்குமே தவிர நன்மை விளையப்போவதில்லை .

இவருக்கு முன்னால் இருந்த போப் ஜாண் பால் அவர்களும் பல சர்ச்சைகளுக்கு ஆள்பட்டாலும் ,இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்தவர் .மசூதிக்கு சென்ற முதல் போப் என்று பெயரெடுத்தவர் .போப் பெனடிக்ட் -ம் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் .முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார் .இது வரவேற்கப்பட வேண்டியது .இத்தகைய செயல்களை போப்பாண்டவர் தவிர்ப்பதே நல்லது .முஸ்லீம்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக பயந்து அல்ல .மாறாக ,இத்தகைய பேச்சுக்கள் உலகில் எந்த நன்மையையும் கொண்டுவராது ,நல்லிணக்கத்தை கீழிறுக்கும் என்பதால் ,மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கடமை போப்பாண்டவருக்கு இருக்க வேண்டும் .

இன்னொரு கோணத்தில் ,இஸ்லாமை வன்முறையோடு தொடர்புபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டி பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .இதை கேள்விப்பட்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது . ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது?

இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய எதிர்ப்பு நியாயமானது .ஆனால் சிலர் எதிர்ப்பை காட்டிய முறை நகைப்புக்குரியது.

51 comments:

nagoreismail said...

பொதுவில் பார்த்தால் நன்றாக எ௯ழுதியிருக்கிறீர்கள், ஆனால் பாதிக்கப்பட்ட மதத்தை சார்ந்தவன் எனும் போது ஆத்திரம் தான் வருகிறது. இது, ஒரு ஓவியன் பெருமானாரை ஓவியமாக வரைந்தான் என்பதை விட கொடுமையானது ஏனெனில் அவன் ஒரு ஓவியன், ஆனால் போப் அவர்களோ நீங்கள் எழுதியிருப்பது போல் ஒரு வலிமை மிக்க மதத்தின் அங்கீகாரம் பெற்ற தலைவர். முன்பொரு முறை வாஜ்பாய் அவர்கள் முஸ்லீம்கள் வசிக்கும் இடமெல்லாம் சண்டை தான் என்பது போல் சொல்லி விட்டு மன்னிப்புக் கேட்டது நினைவிருக்கலாம். ஏன் இப்படி? இந்து மத தலைவர் அசோக் சிங்கால் சொல்வது போல் இஸ்லாத்தின் வளர்ச்சியை காண பொறுக்காமல் பொறாமையில் வெடித்த வார்த்தைகளா? இது உண்மையென்றால் இவர்களை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் தங்களது மனதை திடப்படுத்திக் கொள்ளட்டும், வல்ம்புரிஜான் எழுதியது போல் 'இஸ்லாம் எனும் மண்ணுக்கேற்ற மார்க்கம்' மண்ணுள்ள இடத்தில் எல்லாம் ஆட்சி செய்ய இருக்கின்றது. இது காலத்தின் கட்டாயம்.

Anonymous said...

//இன்னொரு கோணத்தில் ,இஸ்லாமை வன்முறையோடு தொடர்புபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டி பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன .இதை கேள்விப்பட்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது . ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது//
சரியான கருத்து.

ஜோ/Joe said...

nagoreismail,அனானி,கீரன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

மனதின் ஓசை said...

சரியான கருத்துக்கள். போப் அவர்களின் அலட்சியத்தினால்/ பொறுப்பில்லாத பேச்சினால் விளைந்த தேவையில்லாத சர்ச்சை இது.

//இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை//
//ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அவர் அறியாதிருந்திருக்க மாட்டார்.அவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி விவாதங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு போப் இப்போதைக்கு ,அது மேற்கோளேயானாலும் ,அதை சொல்ல வேண்டிய தேவை இல்லை .அதனால் உலகில் இணக்கமின்மை தான் அதிகரிக்குமே தவிர நன்மை விளையப்போவதில்லை .
//



//இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய எதிர்ப்பு நியாயமானது .ஆனால் சிலர் எதிர்ப்பை காட்டிய முறை நகைப்புக்குரியது. //

கண்டனத்துக்குரியதும் கூட.

லொடுக்கு said...

//இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மேற்கோளை குறிப்பிட்டு பேச வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை//

இதுவும் இஸ்லாத்தை தனிமைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியோ?

//அவரவர் மனத்தளவில் சில கருத்துக்களை கொண்டிருக்கலாம் .ஆனால் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாக பொதுவில் பேசும் போது அது அவர் பிரதிநிதிக்கும் அமைப்பின் ஒட்டு மொத்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும்//

மிகச் சரியாகச் எழுதியிருக்கிறீர்கள்.

//ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது?//

முட்டாள்கள்.

G.Ragavan said...

ஜோ, நாளிதழில் போப்பின் கருத்தைப் படித்ததுமே நெஞ்சம் துணுக்குற்றது. இத்தனை பெரிய பொறுப்பில் இருப்பவர் தவிர்த்திருக்க வேண்டிய பேச்சு அது. சரி. ஆனது ஆகி விட்டது. அவர் செய்தது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக எதிர்ப்பு அமைதி வழியில் காட்டப்பட்டிருக்க வேண்டும். காட்டினார்கள். எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினார்கள். சரி. ஆனால் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டது சரியன்று என்பது எனது கருத்து.

என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். இதற்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால் நாட்டு நடப்பை வைத்துப் பார்க்கையில் இப்படி நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஜோ/Joe said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். இதற்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால் நாட்டு நடப்பை வைத்துப் பார்க்கையில் இப்படி நடக்கலாம் என்றே தோன்றுகிறது.//

அத்தகைய நிலை வராது தடுப்பது எல்லோருடைய கடமை.அதிலும் பொறுப்பிலுள்ளவர்களுக்கு அந்த கடமை அதிகமாக உள்ளது.

லொடுக்கு said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும்.//

எனக்கும் மனதின் எங்கோ ஒரு மூலையில் அப்படித்தான் தோன்றுகிறது. கொடுமை. எல்லா மனிதர்களுக்கும் அதை தவிர்க்க கடமை இருக்கிறது.

கோவி.கண்ணன் [GK] said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். //

ஜிரா...!
என்ன ஒரு பெரிய அனு குண்டைத் தூக்கி வீசுறிங்க !
:)

Anonymous said...

மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. ஜோ அவர்களே.

ஒரு கொள்கையைக் குறித்து கருத்து கூறும் பொழுது அக்கொள்கையைக் குறித்து நன்றாக அறிந்து கொண்டு கருத்து கூறுவது தான் சரியானது. அதை விடுத்து அக்கொள்கையை பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு சிலர் செய்யும் செயல்களை முன்னிறுத்தி அக்கொள்கையைக் குறித்த கருத்துக்களை கூறுவது எவ்வகையிலும் சரியாக இருக்காது. இதற்கு நேர்மறையான விளைவுகளை விட எதிர்மறையான விளைவுகளே அதிகம் விளையும்.

ஏனெனில் இங்கு அக்கொள்கையை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு கொள்கையைக் குறித்த சரியான ஞானமில்லாத கூட்டமே அதிகம் காணப்படுகிறது.

இதற்கு ஜார்ஜ்புஷையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஜனநாயகத்தை நிலைநாட்ட புறப்பட்ட இந்த அடிமுட்டாள் வீரரின் செயல்பாடுகளை வைத்து ஜனநாயகத்தை குறித்து ஒருவர் கருத்து கூறினால் அது எப்படி இருக்கும். அது போன்றது தான் மரியாதைக்குரிய போப் அவர்களின் இஸ்லாம் குறித்த மேற்கோளிட்டு கூறிய கருத்தும்.

இதற்குரிய நேர்மறையான விளைவுகள் இஸ்லாத்தை தெளிவாக அறிந்து பின்பற்றுபவர்கள் அமைதியான போராட்டத்தின் மூலமும், கருத்துக்கு கருத்து மோதும் விதத்தில் விவாதத்திற்கு அழைத்தும், அக்கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் காண்பித்து விட்டார்கள்.

எதிர்மறையான விளைவுகள் ஒவ்வொரு விஷயத்திற்கும் உண்டு என்பதை இஸ்லாத்தைக் குறித்து தெளிவாக அறியாதவர்கள் சில தேவாலயங்களை தாக்கியும் காண்பித்து விட்டார்கள்.

இஸ்லாம் வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுப்பதை தெளிவாக எதிர்க்கிறது. மட்டுமல்ல அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தவும் செய்கிறது. அவ்வாறிருக்க மாற்றுமத சகோதரர்களின் வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுப்பது எவ்வகையில் இஸ்லாம் ஆகும்.

எனவே இங்கும் மரியாதைக்குரிய போப் அவர்கள் செய்த அதே தவறை மற்றவர்களும் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இஸ்லாத்தை புரியாதவர்கள் செய்யும் தவறுகளை கவனத்தில் கொண்டு இஸ்லாத்தை கணிக்கக் கூடாது.

இப்படிப்பட்டவர்கள் ஒருவிதத்தில் மூட்டிவிட்டு குளிர்காயும் குள்ளநரிகளின் அழுகி நாறிப்போன மனஓட்டங்களுக்கு விலைப்போகின்றார்கள் அவ்வளவே.

மரியாதைக்குரிய போப் அவர்கள் இஸ்லாத்தைக் குறித்து முழுமையாக புரிந்து கொள்ளாமல் யாரோ கூறிய கருத்தைக் கூறியது எவ்வாறு கண்டிக்கப்பட வேண்டியதோ அதே போன்றது தான் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் புரியும் விவரம் கெட்டவர்களின் செயல்பாடுகளும். இதுவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே.

இப்பிரச்சினை ஏற்பட்டதும் இதனைக் குறித்து ஒரு பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். எனினும் இப்பதிவினை நான் போடுவதை விட மற்றவர்கள் போடுவதே நல்லது என நினைத்ததால் போடாமல் இருந்தேன்.

நடுநிலையோடு மிக நல்ல முறையில் இப்பிரச்சினையை அணுகியுள்ளீர்கள்.

பிரச்சினையை பிரச்சினையாக மட்டும் பார்த்து கருத்து கூறும் என் சகோதரர் கடற்புறத்தானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும்.//

நிச்சயமாக சகோ. ராகவன் அவர்களே. மிகச்சரியாகவே கணித்துள்ளீர்கள்.

ஆதிக்க சக்திகள் முக்கியமாக அமெரிக்கா தன் செயல்பாடுகளை இவ்வாறு தான் தொடரும் எனில் நிச்சயம் உலக அளவில் ஒரு யுத்தம் நடக்கத்தான் செய்யும். அதற்கு மதம் காரணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் யுத்தத்தின் ஒரு பக்கம் உள்ளவர்கள் உண்மையின் பக்கமும் மறுபுறத்தில் உள்ளவர்கள் அநியாயத்தின் பக்கமும் நிற்பார்கள்.

அநியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் தாங்கள் நீதியை நிலைநாட்ட(தற்போதைய வார்த்தை விளையாட்டுகளை மனதில் வைத்து கூறினால் தீவிரவாதத்திற்கு எதிராக) களமிறங்கியவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது நடைபெற நிச்சயம் அமெரிக்கா ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

எப்பொழுது இரு நகரங்களின் மீது அணுகுண்டுகளை போட்டு இலட்சக்கணக்கான மக்களை அநியாயமாக கொன்றதோ (இப்பொழுதும் பிறக்கும் குழந்தைகளின் அங்கங்களில் அதன் தாக்கம் நிறைந்து காணப்படுகின்றது)அப்பொழுதே இதற்கான அடித்தளத்தை அமெரிக்கா போட்டு விட்டது.

அதன் பின் உள்ள அதன் வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்கு இவ்விஷயத்தை புரிந்து கொள்வதில் சிரமம் ஒன்றும் ஏற்படபோவதில்லை.

இதனை தவிர்க்க போராடுவது மானிடராய் பிறந்த ஒவ்வொருவரின் மீதும் கட்டாய கடமையாகும்.

அன்புடன்
இறை நேசன்

Anonymous said...

இரு சகோதரர்களுக்கிடையில் மூட்டிவிட்டு குளிர்காய நினைத்து ஏமாந்த குள்ளநரிகள்

மரியாதைக்குரிய போப் அவர்களின் கருத்துக்கு சரியான முறையில் எதிர்வினையாற்றிய இஸ்லாமியர்

அன்புடன்
இறை நேசன்

ஜோ/Joe said...

மனதின் ஓசை,லொடுக்கு பாண்டி,கோவி.கண்ணன் மற்றும் சகோதரர் இறைநேசன் ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

Anonymous said...

Where were these muslims when Talibans destroyed Buddha statues
in Bamiyan.Where were they when Saddam gassed thousands of Kurds.
Did they protest like this on those
occassions.

இளவெண்ணிலா said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். இதற்கு என்னிடம் ஆதாரமில்லை. //

அப்போதாவது உங்களைப் போன்றவர்கள் "இது சரி, இது தவறு" என்று உரத்துக் கூறுவீர்களா அல்லது தவறைத் தவறு என்று கூறுபவர்களிடம் இருந்து ஒதுங்கி ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு "சும்மா அடிச்சுக்காம அமைதியா போங்கப்பா" என்று சொல்லி வழக்கம்போல் எஸ்கேப் ஆவீர்களா?? :) (ஸ்மைலி)

இளவெண்ணிலா said...

//மனதின் ஓசை,லொடுக்கு பாண்டி,கோவி.கண்ணன் மற்றும் சகோதரர் இறைநேசன் ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! //

இஸ்லாம் பதிவுகள்தான் கோவி.கண்ணனுக்கு பிரியாணி டோக்கன் என்று நினைக்கிறேன்..நாக்கை
சப்புக் கொட்டிக்கொண்டு ஆஜராகிவிடுகிறார்..:)(ஸ்மைலி)

Hariharan # 03985177737685368452 said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும்.//

மதம் தான் காரணமாக இருக்கும் கண்டிப்பாக. மீடியாவினால் ஒருநிகழ்வு மீண்டும் மீண்டும் ஒரே நாளில் காட்டப்படும் காட்சிகளால் மனதில் பிடிக்கும் மதம் தான் காரணமாக இருக்கும்.

தனி மனித சகிப்புத்தன்மையை காவு வாங்கி மதம் பிடிக்க வைக்க முழு மூல காரணம் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் சிலரின் பிழைப்புக்காக திரிக்கப்படும் பொறுப்பற்ற மீடியா கவெரேஜ் தான்.

1992ல் நடந்த ஆரோக்கியம் குன்றிய நிகழ்வான பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் 2006ல் கூட பல முறை மீடியாவில் காட்டப்பட்டு இறைவன் மனிதனுக்கு வழங்கிய மிகப்பெரும் கொடையான "மறதியை" மறக்கடித்து மதம் பிடித்தது தொடர பேருதவி புரிகிறது.

கல்லூரியில் என்னுடன் படித்த சதக்கத்துல்லா எனும் நண்பனின் வீட்டிற்குச் விருந்தினனாக இருநாட்கள் இருந்தேன். அவன் தாயார் எனக்காக சைவ உணவு சமைத்து அவன் தமக்கையார் பரிமாற என்று விகல்பமில்லாமல் இருக்க மதமில்லாத மனங்களால் முடிந்தது. 1992 கும்பகோணம் மகாமகத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இஸ்லாமிய நண்பன் சதக்கத்துல்லாவின் வீட்டில் தங்கி உண்டு சென்றதும் மனம் மதம் பிடிக்காமல் இருந்ததால். மகாமகத்தன்று சதக்கத்துல்லாவும் மகாமகக் குளத்தில் இறங்க மதம்பிடிக்காத மனம் தடுக்கவில்லை.

இன்று மீடியாவினால் மக்களுக்கு மீண்டும் மீண்டும் காட்டப்படும், தரப்படும் அவசியமற்ற விஷயங்களால் மதம் பிடிக்கிறது. சிலர் பிழைப்புக்காக அரிய மனித சக்தி மதம் கொண்ட மனங்களால் ஒரு 9/11, 7/11, 3/11 என்று குண்டுவெடிப்புகளுக்கு திருப்பிவிடப்படுகிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் மதம் பிடித்த நிலையினின்று மீண்டு வர முழுமையாக முயற்சிக்க வேண்டும்.

அன்புடன்,

ஹரிஹரன்

சீனு said...

அட! போப்பின் சொற்பொழி என்றவுடன் அதுவும் அதில் இஸ்லாமைப் பற்றின கருத்தும் இருக்கிறது என்றதும் என் மனதில் நான் நினைத்தது, அவர் கட்டாயம் இத சொல்வார் பின் மன்னிப்பு கேட்பார் என்று தான். ஒரு பொருப்புள்ள இடத்தில் இருப்பவர் இப்படி சொல்லக்கூடாது.

ராகவன் சொன்னது போல மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக என்பதை விட மதத்திற்காக என்பது தான் பொருந்தும். ஆனால், அது இரண்டாம் உலகப் போரை விட வீரிஅம் மிகுந்ததாக இருக்கும் என்பது என் கருத்து. அதை தடுக்க அனைவருக்கும் பொருப்புண்டு.

G.Ragavan said...

இறைநேசன் மற்றும் புலிப்பாணி, உங்கள் இருவருக்குமே ஒரே பதிலைச் சொல்லி விடுகிறேன். ஆனால் இதுகுறித்து விவாதம் செய்ய நான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் இதற்கு நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் நான் அதற்குப் பதிலளிக்கப் போவதில்லை. இது என்னுடைய கருத்து அவ்வளவே.

உலகத்தில் பெரும்பாலானோர் தாம்தான் சரி என்று நினைப்பார்கள். நான் உள்பட. அடுத்தவர் தவறு மட்டுமே நமக்குத் தவறாகத் தெரியும். அடுத்தவர் தவறு செய்தால் நாம் அதை விடத் தவறு செய்து...அடுத்தவர் தவறைச் சுட்டிக் காட்டுவோம். இதுதான் வலைப்பூவில் தொடங்கி உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் போன்றவர்கள் என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது. கூட்டிலிருந்து தேந்துளி சிந்துகிற வரையில் குடிக்கத்தான் முடியும். அவ்வளவுதான். ஆனால் ஒன்று. நிலமை மாறும். இன்றைக்கு இருக்கின்ற அத்தனை தத்துவங்களும் மறைந்து போகும். இதுதான் என்னுடைய கருத்து.

என்றைய நிலையிலும் நான் விரும்புவது..."கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே அதுவாய் படுமாறு உளதோ!"

நன்றி.

ஜோ/Joe said...

//..."கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே அதுவாய் படுமாறு உளதோ!"
//
ராகவன்,
கொஞ்சம் இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா?

டிபிஆர்.ஜோசப் said...

போப்பாண்டவரின் இந்த பொறுப்பற்ற பேச்சைக் கேள்விப்பட்டதுமே எனக்கும் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் உடல்நலமில்லாமையால் விட்டுவிட்டேன்.

கத்தோலிக்கர்களிடையே ஏசுவின் பிரதிநிதியாகிய போப்பாண்டவர் தவறிழைக்கமுடியாதவர் (Infallible)என்றதொரு நம்பிக்கை உண்டு. (Infallible என்ற ஆங்கில வார்த்தைக்கு டிக்ஷனரிகள் தரும் விளக்கத்தில் ஒன்று: "the Catholic Church considers the Pope infallible")ஆனால் அது இப்போது வெறும் நம்பிக்கை மட்டுந்தானோ என்று நினைக்க தோன்றுகிறது.

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாதவற்றை மேற்கோள் காட்டி தேவையில்லாத பிரச்சினையையும், கொந்தளிப்பையும் உலகெங்கும் ஏற்படுத்தி தன்னுடைய பெயருக்கு மட்டுமல்லாமல் தன்னுடைய தலைமை பதவிக்கே தேவையில்லாத ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. சரி.. அதை இஸ்லாம் சகோதரர்கள் ஏற்கவில்லை என்று தெரிந்த அடுத்த தினமே பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு அது என் கருத்தல்ல என்றும் பிறமதத்தினரை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறவில்லை என்பதுபோலவும் தன்னுடைய உதவியாளர்களைக் கொண்டு அறிக்கை விடச் செய்தது அதைவிட மோசமாகிப்போனது.

எப்படியோ இதை சாக்காக வைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் விஷமிகள் போராட்டங்களையும், தேவாலயங்களைக் கொளுத்தும் சடங்குகளையும் நடத்தி முடித்துவிட்டனர். நீங்க சொன்னது போல "ஒருவர் சாட்டிய குற்றம் தவறானது என்பதை நிரூபிக்க அதே குற்றத்தை செய்வது ..எங்கே போய் முட்டிக்கொள்வது'' என்று கேட்டால் குற்றம் சாட்டியவர் இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு தலைவர்.. போராடியவர்கள் விஷமிகள் (இதை மற்ற இஸ்லாமிய சகோதரர்களே ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்). இதற்காகவே சமயம் பார்த்து காத்திருப்பவர்கள்..

முன்னவரே அப்படி பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டபோது பின்னவர்களை என்னவென்று சொல்வது?

எப்படியோ, இறுதியில் மன்னிப்பு கேட்டாரே.. இதை மட்டும் உடனே, அடுத்த நாளே செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

Muse (# 01429798200730556938) said...

ஜிராகவன் சரியாகவே கணித்துள்ளார். தற்போதைய அரசியல் அனைத்தும் அதை நோக்கியே நடைபெறுகின்றன. என்னுடைய கணிப்பையே அவரும் கொண்டுள்ளார்.

இந்தியா போன்ற நாடுகள் இந்த போரில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆனால் அது நடப்பதும் நடக்காததும் தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையை பொறுத்ததே.

Muthu said...

//என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். //

இந்தியா யார் பக்கம் இருக்கும்?

Anonymous said...

போப் உண்மையைதானே சொன்னார்.அவர் சொன்ன கருத்துக்களுக்கு ஆதாரமாக இரு சார்ச்களை கொழுத்திவிட்டார்களே இஸ்லாமிய சகோதரர்கள்.

நல்லவேளை பாம் வைக்கவில்லையே,அதுவரைக்கும் சந்தோஷம்.

வசந்தன்(Vasanthan) said...

"பாப்பரசரின் 'வழுவா வரம்' " பற்றிய கோட்பாடு இன்னுமின்னும் நொருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் பொய்த்துப் போகலாம்.

முந்தைய பாப்பரசர்கள் செய்த தவறுக்காக பின்வந்த பாப்பரசர் மன்னிப்புக் கேட்டதில் தொடங்கி, இன்று தனது கூற்றுக்கு தானே, அதுவும் உடனேயே மன்னிப்புக் கேட்கும் நிலைக்குக் கத்தோலிக்கத் தலைமை வந்துவிட்டது.

ஆனாலும் விடாப்பிடியாக நிற்காமல் உடனேயே 'பிராயச்சித்தம்' தேடியது நல்லதொரு முன்மாதிரிதான்.

லொடுக்கு said...

//புலிப்பாண்டி said...

இஸ்லாம் பதிவுகள்தான் கோவி.கண்ணனுக்கு பிரியாணி டோக்கன் என்று நினைக்கிறேன்..நாக்கை
சப்புக் கொட்டிக்கொண்டு ஆஜராகிவிடுகிறார்..:)(ஸ்மைலி)
//

நீங்க மட்டும் என்னவாம்? உங்களையும் இஸ்லாம் தவிர்த்த பதிவுகளில் காண முடிவதில்லையே!! :) (ஸ்மைலி) (சத்தியமா நகைச்சுவைக்காக மட்டும் தான்)

இளவெண்ணிலா said...

//யுத்தத்தின் ஒரு பக்கம் உள்ளவர்கள் உண்மையின் பக்கமும் மறுபுறத்தில் உள்ளவர்கள் அநியாயத்தின் பக்கமும் நிற்பார்கள்.//
ஹி..ஹி..அப்படிப் போடுங்க அருவாள..இறைநேசன்..இஸ்லாமியர்கள் விஸ் காபிர்கள் தானே?

//அநியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் தாங்கள் நீதியை நிலைநாட்ட(தற்போதைய வார்த்தை விளையாட்டுகளை மனதில் வைத்து கூறினால் தீவிரவாதத்திற்கு எதிராக) களமிறங்கியவர்களாக காட்டிக் கொள்வார்கள்.//

புரிந்ததா மக்களே..போர் நடக்கப்போவது இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும்(அமெரிக்கர்,அய்ரோப்பியர் எல்லாம் வேறு யாராம்)..இஸ்லாமியர் உண்மையின் பக்கம் நிற்போரும், மற்றவர்கள் அநியாயத்தின் பக்கம் நிற்போரும் ஆவர்...என்று அய்யா இறைநேசன் கூறுகிறார்..தீவிரவாதம் என்பது வெறும் வார்த்தை விளையாட்டா?அடாடாடாடா...அதனால்தான் இவர்கள் பொழுதுபோக்குக்காக சென்று சேருமிடமெல்லாம் அவ்விளையாட்டை விளையாடித் தீர்க்கின்றனர் போல..

//இதனை தவிர்க்க போராடுவது மானிடராய் பிறந்த ஒவ்வொருவரின் மீதும் கட்டாய கடமையாகும்.//
ஆகா..சரிங்க..அப்படிப் போர் வந்தால் இந்தியா கண்டிப்பாக இஸ்லாமியரின் எதிர்க்கோஷ்டியில்தான் சேரும்..இன்னும் பத்து வருடங்களில் இங்கு நடக்கப்போகும் கூத்துகள் அதற்கான நிர்ப்பந்தங்களை அரசியல்வாதிகளுக்கும்,மக்களுக்கும் ஏற்படுத்தும் என்பது என் கணிப்பு..(எங்களுக்கும் ஓரளவு கணிக்கத் தெரியும்:):))
அப்போ இந்திய முஸ்லிம்கள் யார் பக்கம் சேருவார்கள்? மதமல்ல..நாடே எங்களுக்கு முதலில் என்பார்களா அல்லது பிரிட்டன் முஸ்லிம்கள் போல் மதம் நாட்டைவிட பெரிது என்று "உண்மை" சென்று சேருவார்களா?

போர் என்றவுடன் ஆர்வமாக இங்கு வந்து அணிகள் என்னென்ன, எப்படி அணிகள் சேரும், யார் உண்மையின் பக்கம்,யார் அநியாயக்காரர்கள் என்று உற்சாகமாக விளக்கிய இறைநேசன் இதையும் விளக்குவார் என் நினைக்கிறேன்...

இளவெண்ணிலா said...

லொடுக்கு பாண்டி,
இது மேட்டரே வேற சாமி..கோவி.கண்ணன் அவரது பதிவு ஒன்றில் பலரும் நினைப்பதுபோல் முஸ்லிம்கள் ஒன்றும் இந்துக்களை வெறுப்பதில்லை என்றும்,அவருக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளார்கள்,அவர்கள் அவருக்கு அவ்வப்போது மத இணக்கத்தின் அடையாளமாக பிரியாணி செய்து தருவார்கள் என்றும் விளக்கி இருந்தார்..அதைக் குறிப்பிட்டு போட்ட "சும்மா" காமெடி கமெண்ட்..வேற ஒன்னும் நெனச்சுகிறாதிக...

ஜடாயு said...

//உலகின் வலிமை வாய்ந்த ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இன்னொரு வலிமை வாய்ந்த மதத்தைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்வோடும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் யோசித்து பேசியிருக்க வேண்டும் //

அப்படியானால், போப் ஒரு "மென்மை வாய்ந்த மதத்தைப்" பற்றி (இந்து மதம், பௌத்தம், சமணம்) இப்படிப் பேசியிருந்தால் பரவாயில்லை என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து! ஏனென்றால் இந்த மதத்தவர்கள் எல்லாம் உடனே வெகுண்டெழ மாட்டார்கள், "முட்டாள்கள் சொல்கிறார்கள், சொல்லிவிட்டுப் போகட்டும்" என்று சிறு கண்டனம் தெரிவித்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

இஸ்லாம், கிறிஸ்தவம்- இந்த இரண்டு ஆபிரகாமிய மதங்களுமே அதிகாரப் போட்டியிலும், ஆதிக்கத்திலும், உலகின் பழமையான பிற மதங்களைத் தூஷித்து அழிப்பதிலும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. பக்குவப்பட்ட மேற்குறிப்பிட்ட மதங்களும் இவர்களது தூஷணைகள் எல்லை மீறும் வரை பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றன!

ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று போடும் சண்டை தான் இன்று பெரும் உலகப்போராக வெடிக்கும் நிலையில் இருக்கிறது!

பாமியான் புத்தர்களையும், இந்து மதத்தின் ஏராளமான கோயில்களையும் இடித்து அழித்து மக்களையும் கொன்றூ குவித்த இஸ்லாமிய ஜிஹாதின் மூல கர்த்தா யார்? அது முகமது நபி தான் என்னும்போது போப் சொன்னது முற்றிலும் சரியே. இதைச் சொல்வதற்கு போப்பிற்கு ஓரளவு (ஓரளவு தான்) தார்மீக அதிகாரம் உண்டு என்பேன். கத்தோலிக்க சர்ச் பழங்காலத்தி நடத்திய பல (inquisition போன்ற) பல வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்டு விட்டது. இது போன்ற வழிமுறைகளில் ஈடு படாது என்றும் நம்பலாம்.

ஆனால், இஸ்லாமியர்கள்? ஜிகாதிகள்? தங்கள் நபியைப் பற்றி உலகத்தின் ஏதோ முலையில் யாரோ முணுமுணுத்தால் போதும் -உடனே வன்முறையில் இறங்கி விடுவார்கள் ! இதற்குப் பெயர் தான் வலிமையா? இது அராஜகம்.

போப் சொன்னதை கருத்து ரீதியாக மறுப்பதற்குப் பதில், இப்படு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது போப் கூறியதை உண்மையாக்குவதாகவே உள்ளது!

(இந்தப் பின்னூட்டத்தை கண்டிப்பாக வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்).

ஜோ/Joe said...

//அப்படியானால், போப் ஒரு "மென்மை வாய்ந்த மதத்தைப்" பற்றி (இந்து மதம், பௌத்தம், சமணம்) இப்படிப் பேசியிருந்தால் பரவாயில்லை என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து!//

எழுதி முடித்து பல மணிநேரத்துக்கு பிறகு இத்தகைய ஒரு கருத்து வரும் என எதிர்பார்த்தேன் .விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!

இங்கே 'வலிமை' என்ற வார்த்தையை பெரிது ,சிறிது என்ற கோணத்தில் நான் சொல்லவில்லை .இந்து மதத்தைப் பற்றி போப் சொல்லியிருந்தாலும் நான் அவரை குறை சொல்லியிருப்பேன் .இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்கள் செல்வாக்கு பெற்ற மதங்களாகவும் ,அதிலும் குறிப்பாக இஸ்லாம் குறித்த சர்ச்சைகள் உலகம் முழுவதும் அடிக்கடி நடந்து வருகின்றன .இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ நாடுகளாக பார்க்கப்படும் நாடுகளுக்கும் ,இஸ்லாமிய நாடுகளுக்கும் பனிப்போர் அரசியல் நடந்து வருவதாக கருதப்படும் இந்த கால கட்டத்தில் போப்பின் கருத்து நிலமையை மேலும் சிக்கலாக்கக் கூடாது என்ற ஆதங்கத்திலேயே அவ்வாறு சொன்னேன் .அதற்காக மற்ற மதங்களை போப் அப்படி கூறினால் பரவாயில்லை என்ற கண்ணோட்டம் என்னிடன் இல்லை .என் வார்த்தை பிரயோகம் அத்தகைய தோற்றத்தைத் தந்தால் அது என் எழுத்து நடையின் தோல்வியே.

லொடுக்கு said...

//அதைக் குறிப்பிட்டு போட்ட "சும்மா" காமெடி கமெண்ட்..வேற ஒன்னும் நெனச்சுகிறாதிக//

ஆனா ஒங்கள இந்த மாதிரி (இஸ்லாம்) பதிவுகளில் மடுந்த்தான் பாக்க முடியுது. மத்த பதிவையும் பாருங்க (குறிப்பா என்னோடது) ;).

இளவெண்ணிலா said...

//ஆனால், இஸ்லாமியர்கள்? ஜிகாதிகள்? தங்கள் நபியைப் பற்றி உலகத்தின் ஏதோ முலையில் யாரோ முணுமுணுத்தால் போதும் -உடனே வன்முறையில் இறங்கி விடுவார்கள் !//
ஜடாயு..இதற்கு இஸ்லாமியர்களின் ஒரே பதில்..யாரோ சிலர் செய்வதற்கு மதம் பொறுப்பேற்க இயலாது..டி.பி.ஆர்.ஜோசப் அவர்கள் பாஷையில் சொன்னால் "விஷமிகள்":):)இந்த விஷமிகள் உலகில் ஏதோ ஒரு கடைக்கோடி நாட்டில், கடைக்கோடி ஊரில் மட்டும் இருந்தால் விஷமிகள் என்று விட்டுவிடலாம்..ஆனால் இவ்விஷமிகள் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு ஏரியாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும்போது, செய்யும் எல்லா விஷமங்களுக்கும் மதத்தின் போதனைகளை காரணமாக அவர்களே சொல்லும்போது எப்படி மதத்தை விவாதிக்காமல் விஷமத்தனங்களை மட்டும் விவாதிக்க முடியும்??கேட்டுப் பாருங்க..

கேள்விகள் உண்டு..நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...

லொடுக்கு said...

//இப்படு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது போப் கூறியதை உண்மையாக்குவதாகவே உள்ளது!
//

அய்யா ஜடாயு,
எல்லா மத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் நல்லவர்களும் இருக்கிரார்கள் கெட்டவர்களும் இருக்கிரார்கள். ஒரு சமூகத்தை மட்டும் குறை கூறுவது ஏன்? ஒரு வேளை இஸ்லாத்தில் உள்ள கெட்டவர்களின் செயல்கள் மிகைப்படுத்தப் படுகின்றனவோ?? அதற்காக நீங்களும் உங்கள் நிலையைத் தாழ்த்தி மதத்தின் தலைவரையும் மதக் கோட்பாட்டையும் இகழ்வது, பதிவில் கூறிய இரண்டாவது வகை இஸ்லாமியர்களின் செயலும் ஒன்றே என எனக்குப்படுகின்றது.

Anonymous said...

போப் அளித்த கமெண்ட் தவறானது என்று கேட்டவர் படித்தவர் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பாவம் கிறித்துவ மதத்தலைவரான அவருக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டது.

உலகப்போர் எல்லாம் வந்தால் ஒரு நாளைக்கு மேல் போர் நடக்காது. ஏனென்றால் 24 மணி நேரத்திற்குப் பிறகு பூமிக்கடியில் பதுங்கிக் கொள்ள வசதியுள்ள தலைவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இறந்திருப்பார்கள். உலகமே அழிந்து போகும்போது, நாம் மட்டும் தனியாக இருந்து என்ன தான் செய்யப்போகிறோம். இதுக்குப் போய் பயப்படாதீங்க.

Anonymous said...

கடற்புறத்தான்..நல்ல பதிவு...அனைவரும் சிந்திக்கவேண்டிய விசயம்.

"என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும்."

ராகவன்....சரியான கணிப்பு...நடக்கின்ற நடப்புக்களை கவனிக்கிற எல்லோருமே ஒருவித பதட்டத்துடன் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.அடுத்த உலகப் போருக்கு மதம் காரணமாகக் கூட இருக்கலாம்.இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகவில்லை..அனைத்து தரப்பினரும் சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டால் அந்த போரை தவிர்க்கலாம்.அப்படி தவிர்க்க முடியாமல் போய் அந்த போர் நடந்து முடியும் பட்சத்தில்...அதன் கோர தாண்டவத்தை பார்த்து அனைத்து மதங்களும் வெட்கி தலைகுனியும்.

Anonymous said...

Pope's statement and muslim reaction both wrong

Anonymous said...

எதிர்பார்த்தது போல் திசைதிருப்பல் அருமையாக நடந்துள்ளது.

ஒரு உதாரணம்:

//போர் நடக்கப்போவது இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும்(அமெரிக்கர்,அய்ரோப்பியர் எல்லாம் வேறு யாராம்)//

அமெரிக்கர் ஐரோப்பியர் எல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களாம்.

நான் ஏற்கெனவே போட்ட பின்னூட்ட வாசகத்தை திரும்பவும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

//இரு சகோதரர்களுக்கிடையில் மூட்டிவிட்டு குளிர்காய நினைத்து ஏமாந்த குள்ளநரிகள்//

மூட்டி விட்டு குளிர்காய நினைக்கும் இரத்த வெறிபிடித்த அசோக் சிங்கால், தொகாடியா, மோடி கூட்டங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் கோணபுத்தியையும், வக்கிர எண்ணங்களையும் இங்கு வந்து கொட்ட வேண்டாம்.

நல்ல எண்ணத்தில் கருத்து வேறுபாடு கொண்ட இரு சமூகங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்டு மனங்களுக்கிடையில் இணைக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சகோதரர் ஜோ அவர்கள் போட்ட இப்பதிவிலும் வந்து உங்களின் கயமைத்தனத்தை காட்டுவது சரிதானா என யோசித்துப் பாருங்கள்.

//நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...//

உங்களின் நேர்மையான கேள்வி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
எனினும் பதிலளிக்க நான் தயாரே.

ஆனால் இவ்விடம் அதற்கு உகந்ததாக படவில்லை. உங்களின் "நேர்மையான" கேள்விகளுக்கு பதிலளிக்கவும் விவாதிக்கவும் "மலர்கள்" எப்பொழுதும் தயாராகவே உள்ளது. உங்கள் கேள்வியில் நேர்மையிருப்பின் வாருங்கள். விவாதிப்போம்.

அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

நான் இவ்வாறு கூறுவதற்காக என்னை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து இப்பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்க கோருகிறேன். தேவையற்ற திசைதிருப்பல்கள், முடிந்த அளவு மூட்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களின் பின்னூட்டங்களை தவிருங்கள். அது தான் இப்பதிவினை எழுத தூண்டிய உங்கள் நோக்கத்திற்கு நல்லது.

மோடி, அசோக் சிங்கால் கூட்டத்தினரின் மொள்ளமாரித்தனத்தை தோலுரிக்கும் ஒரு சுட்டியை இதற்கு முன்னே நான் தந்திருக்கிறேன். அதனை ஒரு முறை கூட இங்கு தருகிறேன். அப்பதிவினை நன்றாக படிக்கவும். அசோக் சிங்கால் நரிக் கூட்டத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியை தான் இங்கும் நீங்கள் காண்கிறீர்கள்.

அவர்களுக்குத் தேவை எப்படியாவது மற்றவர்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதற்கு நீங்களும் ஒரு தளத்தினை தயவு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

//உலகப்போர் எல்லாம் வந்தால் ஒரு நாளைக்கு மேல் போர் நடக்காது.//

இது எப்படி சாத்தியம் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டால் இந்த மோடி, தொகாடியா கூட்டங்களின் திசைதிருப்பல்கள் அர்த்தமற்று போகும்.
அமெரிக்க அண்ணனின் கையில் இருக்கும் அணுகுண்டுகளில் ஒன்று போதும் இது நடைபெறுவதற்கு. அமெரிக்க அண்ணன் இன்று யாரை நோக்கி தீவிரவாதி என கைநீட்டுகிறானோ அவனுக்கு எதிராக ஒன்றும் யோசிக்காமல் களமிறங்க வளர்ப்பு நாய்கள் இன்று ஆலாய் பறப்பதைப் பார்த்தால் அது நடப்பது வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதனைக் குறித்து நான் கூறியதை தான் அழகாக திசைதிருப்பியுள்ளனர்.

எப்படியாவது இறை நேசன்களை தீவிரவாதிகளாக்கி விடவேண்டும் "அவாள்"களுக்கு. இறை நேசன்கள் மீது "அவாள்"களுக்கு அவ்வளவு அன்பு.

இன்றைய தீவிரவாதத்திற்கு ஊற்று கோலாக இருக்கும் இந்த அமெரிக்க அராஜக போக்கிற்கு எதிராக உண்மை, நீதியின் பக்கம் நிற்கும் ஒரு கூட்டம் இங்கு தயாராகி இருக்கிறது பாருங்கள். இதனைக் குறித்து தொகாடியா கூட்டங்கள் என்ன நினைக்கின்றன. நீதியின் பக்கம் நிற்பதால் இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்றா?

நிச்சயம் இக்கூட்டம் வளரும். இதன் செயல்பாடுகள் எல்லாவகையிலான மக்கள் விரோத தீவிரவாதங்களுக்கு சாவு மணி அடிக்கும். இச்செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்க தீவிரவாதம் வலுக்கும் எனில் அது கடைசியில் ஒரு யுத்தத்தில் தான் போய் நிற்கும். அந்த யுத்தம் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான யுத்தமாக இருக்கும். அப்பொழுதும் அமெரிக்கா தாங்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக நிற்பதாக கூவிக் கொள்ளும். அந்த யுத்தத்தில் அமெரிக்க, இஸ்ரேலிய அராஜகங்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக இந்தியாவிலிருந்து ஒரு பெருங் கூட்டம் அமெரிக்காவிற்கு வாலாட்டும். அது நிச்சயம் இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீரகாவியம் எழுதிய முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள் என என்னால் உத்தரவாதம் தர இயலும்.

தொகாடியாக்களின் மொள்ளமாரித்தனங்களுக்கு எதிராக வெறுப்புடன்

இறை நேசன்

சிறில் அலெக்ஸ் said...

போப்பின் மேற்கோள்கள் தேவையற்றவை என்பதை அவரே மன்னிப்புக்கோரியத்ன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதை கண்டிக்கவேண்டியவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல கிறித்துவர்களும்தான்.

வசந்தன் மற்றும் ஜோசப் சாரின் பின்னூட்டங்களில் போப்பின் தவறிழைக்காத் தன்மை (infallibility) பற்றி சொல்லியிருந்தார்கள். தவறிழைக்காத் தன்மை எல்லா விஷயத்துக்கும் போருந்தாது. அடிப்படை நம்பிக்கை மற்றும் போதனைகள் பற்றிய விஷயங்களுக்கே அது பொருந்தும்.

ஜோ/Joe said...

சிறில்,
வருக! சுட்டிக்கு நன்றி .BBC -யில் இது குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை

http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/5355758.stm

கோவி.கண்ணன் [GK] said...

//இஸ்லாம் பதிவுகள்தான் கோவி.கண்ணனுக்கு பிரியாணி டோக்கன் என்று நினைக்கிறேன்..நாக்கை
சப்புக் கொட்டிக்கொண்டு ஆஜராகிவிடுகிறார்..:)(ஸ்மைலி) //

புலிப்பாண்டி அண்ணே ...!

நான் சைவம் (பெற்றோர்கள் அசைவம்) என்று எத்தனைப் பதிவுகளில் சொல்வது.

இதெல்லாம் விட தமாஸ், நான் சைவம் சாப்பிடுவேன் என்று சொல்வதை வைத்து, நான் சைவ சமயத்தை சேர்ந்த ஒரு ஜாதி வெறியன் என்று சிலர் சொல்வது தான்.

முன்பு சைவ சமயம் இருந்தது தற்போது அது இந்துமதத்துக்கே அற்பணம், தற்பணம் என்று ஆகிவிட்டதே !

:))

Anonymous said...

ஹும்.ஒரு காலத்தில் வாட்டிகன் செய்யாத அநியாயமா? வாட்டின் தலைவர் அமைதியை பற்றி பேசுவதற்க்கு முன்னால் இறக்கி வைக்க வேண்டிய பாவங்கள் நிறைய இருக்கின்றன.

மற்றபடி இஸ்லாமுக்கும் மற்றவர்களுக்கும் Conflict is inevitable.

ஏன்?
டார்பூரில் ஆப்ப்ரிக்க முஸ்லிம்கள் அரேபிய முஸ்லிம்களால் கொல்லபட்ட போது ஏன் எந்த ஈமான் கொண்ட இஸ்லாமியனும் கண்டிக்கவில்லை என்ற கேள்வியின் விடை தான் இதற்க்கும்.

Plain vanilla Hypocrisy.

ஆனால் இனி மேல் தான் சண்டை தொடங்க வேண்டும் என்று நினைத்துகொண்டு இருப்பவர்களே ஹிஹி update yourselves, dudes! :)

//ஒரு ஓவியன் பெருமானாரை ஓவியமாக வரைந்தான் என்பதை விட கொடுமையானது //

எப்போது இந்த அரபு அடிவருடி version of இஸ்லாமை விட்டு சொந்தமாக யோசித்து செயல்படுவீர்கள்?

முகமதுவை பலரும் - இஸ்லாமிய மன்னர்களே ஊக்குவித்து - ஓவியமாக வரைந்துள்ளார்கள்.

Anonymous said...

//இந்தியா யார் பக்கம் இருக்கும்? //

இந்தியாவும் சீனாவும் யார் பக்கமும் இருக்காது.

Read : Third World War, What me worry?

By Chan Akya(Asian Times?)

ஜோ/Joe said...

சகோதரர் இறைநேசன்,
உங்கள் கருத்துக்கு நன்றி .பல பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்திலிருந்து விலகும் கருத்துக்களை கொண்டிருப்பதை நான் அறிவேன் .ஆனால் இம்முறை தனிமனித தாக்குதல் தவிர அனைத்து கருத்துக்களையும் வெளியிடலாம் என எண்ணினேன் .ஏனென்றால் இவ்விடயத்தில் பலரும் கொண்டிருக்கும் கருத்தை நான் மட்டுமல்ல மற்றவரும் அறிய வேண்டும் என நினைக்கிறேன் .மாறுபட்ட அல்லது அறியாமையின் விளைவாக வரும் கருத்துக்கள் கூட ..இப்படியும் கருத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் தானே!

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மோதலை தூண்டிவிட்டு குளிர் காய்வது என்பது குறைந்த பட்சம் தமிழ் வலைப்பதிவுகள் தளத்தில் நடைபெறாது என திடமாக நம்புகிறேன் .நான் உட்பட அனைத்து கிறிஸ்தவ வலைப்பதிவர்களும் போப்பாண்டவரின் செயலை கண்டித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் . இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவர் எந்த மதமாய் இருந்தாலும் நல்லிணக்கத்தை குலைக்க நினைக்கும் ஒரு சிலரின் எண்ணங்கள் நிறைவேறாதிருக்க இறைவன் அருளட்டும் ...இன்ஷா அல்லா!

ஜடாயு said...

புலிப்பாண்டி சொன்னது மிகவும் சரி. இது இஸ்லாமிஸ்டுகளின் தந்திரங்களில் ஒன்று. வேண்டியபோது ஜிகாதிகளை சில "விஷமிகள்" என்பார்கள். ஆனால் அவர்களூக்குள் பேசும்போது இவர்கள் தியாக வீரர்கள் என்பது போலப் பேசுவார்கள். கேட்டால் ஜிகாதுக்காக பொய் பேசுவதும் குரானில் அனுமதிக்கப் பட்டது என்று ஜல்லியடிப்பார்கள்!

// ஒரு சமூகத்தை மட்டும் குறை கூறுவது ஏன்? ஒரு வேளை இஸ்லாத்தில் உள்ள கெட்டவர்களின் செயல்கள் மிகைப்படுத்தப் படுகின்றனவோ?? அதற்காக நீங்களும் உங்கள் நிலையைத் தாழ்த்தி மதத்தின் தலைவரையும் மதக் கோட்பாட்டையும் இகழ்வது, பதிவில் கூறிய இரண்டாவது வகை இஸ்லாமியர்களின் செயலும் ஒன்றே என எனக்குப்படுகின்றது. //

ம்.. போப்பை அடிப்பேன், உதைப்பேன் என்றூ கூறுபவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று இஸ்லாமிஸ்ட் வகையறாக்களிடம் கேட்டால் ஆளுக்கேத்த மாதிரி பதிலளிப்பார்கள்.

ஒரு பிற மதத் தலைவர் (அவர் எப்பேற்பட்ட கேடயாக இருந்தாலும்) அவரை இகழக் கூடாது என்பது இந்து மதமும், பண்பாடும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததனால் சொல்கிறீர்கள். முகமது நபியை முஸ்லீமாக இருந்து அந்தக் கண்ணோட்டத்தில் தான் நீங்கள் பார்க்க வேண்டும், உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல. பதிவர் நேசகுமார் இது வற்றீ விலாவாரியாக எழுதுகிறார் - படித்துப் பார்க்கவும் -
http://nesakumar.blogspot.com

// சகோதரர்களுக்குள் சண்டை மூட்டிவிடும் குள்ளநரித்தனம் //
ஆகா! சகோதரத் துவம் பொங்கி வழிகிறது! ஒரு சமயம் கிறிஸ்தவர்களை people of the book என்று அழைத்து ஒட்டி உறவாடுவது.. ஆனால், ஜிகாத் என்றூ வந்தால் அவர்க்ளையும் kafir ஆக்கி அழித்தொழிப்பது. இதுவும் இஸ்லாமிஸ்டுகளின் standard தந்திரங்களில் ஒன்று.

போப் சொன்னது சரியா தவறா என்று நான் தீர்ப்புச் சொல்ல வரவில்லை. ஆனால் தன் கருத்தைச் சொல்வதற்கு அவருக்கு சுதந்திரம் உள்ளது - அந்த சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும். கருத்து, சுதந்திரம் போன்ற விஷயங்களையே விரோதமாகக் கருதும் இஸ்லாமிஸ்ட் கருத்தியல் இதை எதிர்ப்பது இயற்கையே. இதற்குப் பயந்து அவர் மன்னிப்பெல்லாம் கேட்டது ரொம்ப ஓவர்! ஜிகாதிகளின் அச்சுறுத்தலுக்கு அவர் அடிபணிந்து வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.

ச.சங்கர் said...

எது மொல்ளமாறித்தனம் என பண்ணுகிறவர்களுக்கு அல்லவா தெரியும் இறை நேசன்...வலையுலகில் சில ஹிந்துத்வா ஆதரவாளர்கள் பார்ப்பனர்கள் என்பதால் ஒட்டுமொத்த பார்பனர்களும் ஹிந்துத்வா ஆதரவாளர்கள் போல் "அவாள்" "இவாள்" என்று எகதாளம் பேசும் நீங்களெல்லாம் நடுநிலையாளர்கள் போல் பேசாதீர்கள்...எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்று சொல்வதில் எவ்வளவு கோபம் வருகிறதோ...அதேபோல்தான் அனைத்து பார்ப்பனர்களும் ஹிந்துத்வாவை ஆதரிப்பவர்கள் என்பது போல் எழுதுவதும் நடுநிலையாளர் மனதைப் புண்படுத்தும் என அறிந்து கொள்க....

இளவெண்ணிலா said...

//ஏனென்றால் இவ்விடயத்தில் பலரும் கொண்டிருக்கும் கருத்தை நான் மட்டுமல்ல மற்றவரும் அறிய வேண்டும் என நினைக்கிறேன் .மாறுபட்ட அல்லது அறியாமையின் விளைவாக வரும் கருத்துக்கள் கூட ..//
வலைப்பதிவுகளின் நோக்கம் இது மட்டும்தான் என நினைக்கிறேன்..ஒத்த கருத்துடைய பின்னூட்டங்களை அனுமதித்துவிட்டு மற்றவற்றை விலக்குபவர்கள் வலைப்பதிவு எழுதவேண்டியதில்லை..அவர்களுக்கு நாட்குறிப்பேடு போதுமானது..நான் பின்னூட்டம் இடுவது கூட வலைப்பதிவருக்கு மட்டுமோ,அல்லது இங்கு விவாதிப்பவர்களுக்கு மட்டுமோ அல்ல..இவர்கள் தவிர பலரும் இங்கு மெளனமாக இருந்து கவனிக்கின்றனர்..அவர்களுக்காகவும்தான்.. இங்கு சிலர் எண்ணுவதுபோல் மத நல்லிணக்கத்தையோ, அல்லது மதச்சண்டைகளையோ வலையில் எழுதுவதன் மூலம் ஏற்படுத்தமுடியும் என்பது வெறும் அறியாமை மட்டுமே..

வன்முறையாளர்களை அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு கலைந்து செல்பவர்கள் மதச்சார்பற்றவர்களெனவும், வன்முறையாளனை "வன்முறையாளன்" என்று சொல்லி,அவன் வன்முறைக்கு காரணத்தை ஆராய்பவனை மதவெறியன் எனவும் உலகில் ஒரு கும்பல் சொல்லித்திரிகிறது..மதத்தின் பெயரால் இன்று மிகப்பெரும் வன்முறைகளை உலகில் நிகழ்த்துபவர்களைவிட, இக்கும்பலே மிகவும் கவலையளிப்பதாக உள்ளது..இவர்கள் இருக்கும்வரை வன்முறையாளனும் இருப்பான்..

லொடுக்கு said...

//இங்கு சிலர் எண்ணுவதுபோல் மத நல்லிணக்கத்தையோ, அல்லது மதச்சண்டைகளையோ வலையில் எழுதுவதன் மூலம் ஏற்படுத்தமுடியும் என்பது வெறும் அறியாமை மட்டுமே..//

ஆனால் பலதரப்பு கருத்துக்களை அறிய முடியுமே! இப்போதுள்ள ஊடக கள்ளத்தனத்திலிருந்து விடுபட்டு ஓரளவு உண்மை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

Anonymous said...

Muslims often react and react violently.Their intolerance knows
no limits.Whether it is Pope or
Rushdie or Salma or Taslima they
react violently and refuse to accept that others have freedom
of expression.Such a community
will breed only terrorists.
How many of the muslim bloggers
write objectively.Why they
support Taliban and fatwas
against Sania. If this is
the level of understanding
of educated muslims think
about the uninformed muslims
who get their worldviews from
mullahs and mosques.So irai
nesans,irai adiyans will support
any terrorist as long as he is
a muslim and as long as he does
anything approved by islam.
This is the fact.You can either
see the truth or go on beating
around the bush.

இளவெண்ணிலா said...

//எல்லாமே மதக்கோட்பாட்டின் படி தான் நடக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை விட்டொழிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற மூட நம்பிக்கையையும் விட்டொழிப்பது நல்லது.//

சரியாச் சொன்னீங்க கீரன்...ஜோ..ஒருவழியா அரை சதம் போட்டாச்சு..:)

suvanappiriyan said...

//போப் அளித்த கமெண்ட் தவறானது என்று கேட்டவர் படித்தவர் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பாவம் கிறித்துவ மதத்தலைவரான அவருக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டது. //

Thanks for your post Mr Joe.

Anonymous said...

I see too much of eagerness among Xtians here in this thread to display thier impartiality and this would only add fuel to the intolerance of radical muslims. Though the present Pope is known for his biased and arrogant views, does he not have a right to express it?

If he is wrong, why don't they try and refute him on an intellectual plane? If he had to apologise for his comments and take responsibility for what he said, who would take responsibility for all the crimes committed in the name of Islam? I hate VHP/RSS types too. But i can confidently say that the average Tamil Hindu definetely will not get swayed by them and indulge in violence. What i do not understand is, how come we had coimbatore blasts and Imam Alis in Tamil nadu?

The problem is with people like Nagoreismail. What was the need for him to quote people like "Valampuri John" who can be hired by anyone to write a few good words for a few thousands about anything? Why does he and other radical muslims think that Islam is destined to rule everywhere?

When is Islam going to be just a religion? The saddest part is what is happening to a reasonably 'secular' Hindu like me. I have friends among all regions. I do not mind going to a Church or a Mosque. I hate Hindutva and all wrong things like untouchability, restriction for tamil poosai, etc., I think my religion is my personal domain. I expect similar approach from others.

When i read history, i am perplexed by the tendency of Muslims to wipe out all memories of pre-islamic icons, starting from Iraq to Afganistan to Malaysia to Indonesia. Though the same thing has happened to Christian Converts too, Xtianity has begun to allow public discussion. Otherwise "Da Vinci Code" would not have become a success and Jo would not have put up this thread. In Hindu religion, we any way allow any discussion on any thing, nothing is forbidden. That leaves Islam as the only major religion that does not allow dissent as well as any pre-islamic past. This is quite disturbing.

லொடுக்கு said...

//கீரன் said...
//இஸ்லாத்தில் உள்ள கெட்டவர்களின் செயல்கள் மிகைப்படுத்தப் படுகின்றனவோ??//
இஸ்லாமிய மதப்பெரியவர்கள் அதை நியாயப் படுத்த முயல்கிறார்களே?
//

நான் சொன்னதும், நீங்க சொல்றதும் நடக்கத்தான் செய்கிறது. :(

//எல்லா மதங்களுமே தெய்வீகத்தன்மையை இழந்து வெகு நாட்களாகி விட்டன.//

மிகச் சரி.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives